தமிழ் ஜோதிடம் ஜாதகம்

ஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், வாஸ்துசாஸ்திரம் மூலம் வருங்காலம் அறிய "ஸ்வாதி ஜோதிட ஆய்வகம்" உங்களை அன்புடன் வரவேற்கிறது.

எழுதியவை அனைத்தும்

 *18/07/2020* முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் விளக்கத்தை மேலும் தொடர்கிறார்.

 
தர்ம சாஸ்திரம் சொல்கின்ற வழியிலே அபர கர்மாவினை எந்தவிதமான குறைபாடுகளும்
இல்லாமல் இந்த இக்கட்டான சூழ்நிலையில் எவ்வாறு செய்வது என்பதைப் பற்றி
பார்த்துக்கொண்டு வருகிறோம்.
 
*அதிலே முக்கியமான ஒன்று சபிண்டிகரணம் என்கின்ற ஸ்ராத்தம். ஒரு வருடம்
முடிவில் அவர்கள் காலமான அதே மாதம் திதி பக்ஷம் வருகின்ற பொழுது செய்ய
வேண்டும்.*
 
அதுதான் முக்கியமான காலம் சபிண்டீகரணம் செய்வதற்கு. அதுவரையிலும் மாதாமாதம்
மாசிகம் அதே திதியில்/பக்ஷம் ஸ்ராத்தம் செய்ய வேண்டும். 16 மாசிகம் வரும்.
இந்த பதினாறும் செய்து முடித்து முடிவில் சபிண்டிகரணம் செய்யப்படும்.
 
*இந்த சபிண்டீகரணம் செய்யப்படுகின்ற போது தான் நம் முன்னோர்கள் உடன் இந்த
ஜீவனும் சேர்க்கப்படுகிறார்கள். எப்படி ஆண் குழந்தைகளுக்கு உபநயனம் என்று
ஆனவுடன் கோத்திரத்தில் சேர்கிறார்கள் எப்படி பெண் குழந்தைகளுக்கு திருமணம்
ஆனவுடன் ஒரு கோத்திரத்தில் சேர்கிறார்களோ அதேபோல்.*
 
அதாவது பெண் குழந்தைகளுக்கு கோத்திரம் இல்லை என்றால் கல்யாணம் ஆகின்ற
வரையிலும் அவள் ஒரு கோத்திரத்தை சேர மாட்டாள், *ஆகையினாலே தான் கல்யாணத்தில்
பிரவரம் என்ற ஒரு அனுஷ்டானம் இருக்கிறது. பாரத்வாஜ கோத்ரோத்பவா அதியாம்
கன்னியாம் என்று சொல்லுவார்கள் அதாவது பாரத்வாஜ கோத்திரத்தில் பிறந்தவள் என்று
சொல்கிறோம். இவள் பாரத்வாஜ கோத்திரத்தில் சேர்ந்தவள் என்று சொல்வதில்லை, ஏன்,
அவளுக்கென்று ஒரு கோத்திரம் இல்லாததினால் பாரத்வாஜ கோத்திரத்தில் பிறந்த இந்த
பெண்ணை வேறு ஒரு கோத்திரத்தில் கொடுக்கிறேன் என்று சொல்வார்கள். அங்கேயும்
தானம் என்று சொல்லாமல் பிரதிபாதயாமி என்று சொல்கிறோம். அப்படி கொடுத்து
விட்டால் அந்தப் பெண் அந்த கோத்திரத்தை சேர்ந்தவள் ஆகிறாள். அதுவரையிலும் இந்த
பாரத்வாஜ கோத்திரத்தில் பிறந்தவள் என்று தான் கணக்கு. அதேபோல்தான் இந்த
ஜீவனும் சபிண்டீகரணம் ஆகின்ற வரையிலே இந்த கோத்திரத்தில் தனியாக இருப்பாள்.
சபிண்டிகரணம் ஆனவுடன் நம்முடைய பிதுர்க்களோடு இவர்கள்
சேர்க்கப்படுகிறார்கள்.* கோத்திரம் என்றால் நம்முடைய முன் தலைமுறை என்று
அர்த்தம். அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது இந்த சபிண்டீகரணம் என்கின்ற
சிராத்தம்.
 
ஒரு வருடம் கழித்து இதை செய்யவில்லை என்றால் மீண்டும் முதலில் இருந்து அந்த
கர்மாவை ஆரம்பித்து செய்ய வேண்டும். *இதைப்பற்றி தர்மசாஸ்திரம் சொல்கின்ற
பொழுது குலதர்மம் அதாவது குடும்பங்களில் நடக்கக்கூடிய சுப காரியங்கள்
செய்வதற்கு அதிகாரம் இல்லாமல் போய்விடும்.* ஆயுஷ் ஆனது அவனால் ஒரு வருடகாலம்
தீர்மானிக்க முடியாது என்பது நாளையும், தேகம் என்பது அந்த சமயத்திலே
ஆரோக்கியமாக இருக்கும் என்பதை தீர்மானிக்க முடியாத காரணத்தினாலும், முன்னரே
செய்துவிட வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. பன்னிரண்டாவது நாளில்
செய்துவிடு என்று சொல்லப்பட்டிருக்கிறது.
 
*அதை ஏன் பன்னிரண்டாவது நாள் என்று தர்மசாஸ்திரம் தீர்மானிக்கிறது என்றால்
அங்கு ஒரு தத்துவம் இருக்கிறது. தாயாருக்கு தகப்பனாருக்கு கர்மா செய்து கொண்டு
வருகின்ற பொழுது, கர்மா செய்கின்றவன் அக்னிஹோத்ரி ஆக இருந்தால், பன்னிரண்டாவது
நாள் அமாவாசையாக இருந்தால், அன்றைய தினமே இந்த சபிண்டிகரணம் செய்து, உடனேயே
அந்த தினத்தில் பிண்ட பித்ரு யக்ஞம் என்ற ஒரு அனுஷ்டானத்தை செய்ய வேண்டும்.
அதை செய்து அம்மாவாசை செய்யவேண்டியதான தர்பணத்தையும் செய்துவிடவேண்டும் அவன்
அக்னிஹோத்ரி ஆக இருந்தால். ஏனென்றால் அக்னிஹோத்ரம் செய்பவர், தாயாரோ
தகப்பனாரோ, தகப்பனார் இல்லாவிடில், பிண்ட பிதுர் யஞ்யம் என்பதை அம்மாவாசையில்
செய்ய வேண்டும் என்று வேதம் சொல்லி இருக்கிறது. அது ரொம்ப முக்கியம்
என்பதினாலேயே பன்னிரண்டாவது நாள் செய்து விடவேண்டும். இன்னும் உன்னிப்பாக நாம்
பார்த்தோமேயானால் பதினோராவது நாள் அமாவாசை வந்தால், பதினோராவது நாள்
செய்யவேண்டிய விர்ஷோத்சர்ஜனம், ஆத்திய மாசிகம், ஆவிர்தாத்திய மாசிகம்
இவைகளையெல்லாம் செய்து, உடனேயே இந்த ஒரு வருடம் செய்ய வேண்டியதுதானே
மாசிங்களையும் ஆக்கரிஷ்த்து செய்து, சபிண்டீகரணம் அன்றே செய்து, அம்மாவாசை
அன்று செய்யவேண்டியதான பிண்ட பித்ரு யக்ஞம் செய்து, தர்பணத்தையும் செய்ய
வேண்டும்.* அக்னிகோத்ரிகளுக்கு பதினோராவது நாள் அமாவாசை வந்தால் சபிண்டீகரணம்
அன்றே செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அந்த அளவுக்கு
முக்கியத்துவம் வாய்ந்தது இந்த அமாவாசை என்ற புண்ணிய காலமும் சபிண்டீகரணம்.
 
*ஸ்பண்டிகரணத்தை*
*ஒரு வருஷம் கழித்து செய்யாமல் முன்னரே செய்வதற்கு ஆகர்ஷம் என்று பெயர்.*
*பின்னாடி அந்தந்த காலங்களில் வரக்கூடிய மாசிகத்தை முன்பே செய்வது. இழுத்து
செய்வது என்பது இந்த ஒரு இடத்தில்தான் வேறு எங்கும் கிடையாது.*
 
சந்தியா வந்தனத்தில் ஆரம்பித்து வேறு எந்த காரியத்திற்குமே முன்னாடி
ஆரம்பித்து இழுத்து செய்வது என்பது கிடையாது. விட்டதை செய்யலாம் அதாவது காலம்
தாண்டி செய்யலாம் வரப்போவதை செய்ய முடியாது. காலையில் சந்தியாவந்தனம் விட்டுப்
போய்விட்டால் மாத்தியான்னிகத்தில் சேர்த்து செய்யலாம். அபர கர்மாவில்லே இந்த
சபிண்டிகரணம் மாசிகம் ஆக்கர்ஷித்து செய்யலாம் என்று தர்ம சாஸ்திரம் சொல்கிறது.
பின்பு அந்தந்த மாசம் வரக்கூடிய தான மாசிகங்களையும் செய்ய வேண்டும். ஒருமுறை
நாம் இழுத்து செய்து விடுகிறோம் ஏதற்கு சபிண்டீகரணம் செய்ய வேண்டும்
என்பதற்காக. ஆனால் ஒரு வருடம் தொடர்ந்து செய்ய வேண்டியது தான மாசிகங்களை
செய்து கொண்டு வரவேண்டும். அப்படி செய்கின்ற போது *அனுமாசிகம்* என்ற பெயர்.
 
*அனு மாசிகம் அதாவது அனு என்றால், செய்வதை மீண்டும் செய்வதற்கு அனு என்று
பெயர். பின் தொடர்ந்து செய்வது. அந்தந்த காலங்களில் அதை கட்டாயம் செய்ய
வேண்டும் அப்படி செய்தால் தான் ஆப்திகத்தை செய்ய முடியும். ஆப்திகம் வரையிலும்
மாசிகங்கள் எல்லாம் செய்யாமல் விடக்கூடாது. மேலும் ஊன மாசிகம் என்று வரும்
அதையும்கூட, ஊன மாசிகத்திற்கு மாற்று காலம் கிடையாது. 16 மாசிகத்திற்க்கு
பிறகு ஆப்திகம் செய்ய வேண்டும் என்று தர்ம சாஸ்திரம் காண்பிக்கிறது. இந்த ஊன
மாசிகம் எல்லாவற்றையும் சேர்த்து செய்தால்தான் 16 என்ற எண்ணிக்கை வரும். அந்த
ஒரு வருட முடிவில் அன்ன ரூபமாக ஆப்திகத்தை செய்ய வேண்டும். உலகத்தில் இது
பலவிதமாக நடக்கிறது தர்ப்பணம் ஆக செய்வது, வருடாவருடம் செய்யக்கூடிய ஸ்ராத்தம்
கூட தர்ப்பணம் ஆக செய்வது என்று பலமுறைகள் சொல்லப்பட்டு இருந்தாலும் கூட, தர்ம
சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்று பல பேர் கேட்கிறார்கள்.*

 இந்தக் கலியில், நாம் செய்யக்கூடிய கர்மாக்களில், எப்படி எப்படி எல்லாம்

அபராதங்கள் ஏற்படும், மந்திரங்களை சொல்வதிலும் அல்லது மனதிலோ, நம்முடைய
தேகத்திலே எந்த விதமான தோஷங்கள் எல்லாம் சம்பவிக்கும், அதையும் தாண்டி ஒரு
கர்மாவினுடைய முழு பலனை நாம் எப்படி அடைவது என்கின்ற உபாயத்தை தர்மசாஸ்திரம்
காண்பிக்கிறது.
 
*இந்தக் கலியின் உடைய ஒரு பிரபாவத்தினாலே, திரவியங்களில் சுத்தம் இருக்காது.
நாம் உபயோகிக்கக் கூடிய வஸ்துக்களில்/மனதிலும் என்ன என்னவோ குப்பைகளை போட்டு
குழப்பிக் கொண்டு எந்த ஒரு விஷயத்திலும் நம்பிக்கை இல்லாமல் அவன்
நம்பிக்கையோடு கூட, எதை எதையோ நம்பி, தேகத்திலும் சுத்தி இல்லாமல்
சாப்பிடக்கூடாத வஸ்துக்களை சாப்பிட்டு, போகக்கூடாத இடங்களுக்கெல்லாம்
போய்க்கொண்டு, பேசக்கூடாத வார்த்தைகளை எல்லாம் பேசிக்கொண்டு, சுத்தம் குறைவாக
இருக்கும்.*
 
இப்படி ஒரு அசுத்தங்கள் உடன் மந்திரங்களை நாம் சொல்லி நம்முடைய கர்மாக்களை,
செய்தால் அது எப்படி பலனை கொடுக்கும்? ஆகையினாலே நமக்கு மிகவும் குறைவான
பலன்கள் தான் அதில் கிடைக்கும். *ஆகையினாலே தான் இந்தக் கலியில்
ஒவ்வொருவருக்கும் எது துணையாக இருக்கும், இவ்வளவு கஷ்டங்களில் இருந்தும் எது
நம்மை மீட்டெடுக்கும், என்றால் சத்தியம்.* வாக்கில் பேசக்கூடிய தான ஒவ்வொரு
வார்த்தையும், சாத்தியமானதாக இருக்க வேண்டும். சத்தியம் என்பது தான்
ஒவ்வொருவருக்கும் பெரிய உபகாரமாக இருக்கும் இந்தக் கலியில்.
 
*எப்போதும் உண்மையையே நினைக்க வேண்டும். உண்மையே பேச வேண்டும். உண்மையாக
நடந்து கொள்ள வேண்டும். அப்படி சத்தியத்தை வைத்துக்கொள்ள வேண்டும்
என்பதினால்தான் வேதமே, சத்தியம் வதா என்று ஆரம்பிக்கின்றது. உண்மையையே பேச
வேண்டும் என்று முதலில் ஆரம்பித்து காண்பிக்கின்றது. அதை நாளை அனைவரும்
சத்தியத்தை கடைபிடிக்க வேண்டும்.*
 
உண்மையாக வாழ வேண்டும் பேச வேண்டும் நடத்தையிலும் இருக்க வேண்டும். *எந்த
விஷயத்திலும் பொய் சொல்வது, பொய்யாக வாழ்வதோ கூடாது என்பதை தர்மசாஸ்திரம்
காண்பித்து, எந்த கர்மாவையும் நாம் விடுவதற்கு / மாற்றுவதற்கு அதிகாரம்
கிடையாது. அந்தந்த கர்மாக்களை எப்போ எப்போ, எப்படி எப்படி சொல்லி இருக்கிறதோ,
அப்படித்தான் நாம் நம்முடைய கர்மாக்களை செய்தாக வேண்டும். அதிலே குறைபாடுகள்
வருவதற்கு அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றன என்பதினால், மந்திரங்களிலும்,
கிரியைகளிலும், நமக்கு பகவான் நாம உடன் வைத்திருக்கிறார்கள். பகவன் நாமா
என்பது ஒரு அங்கம் நாம் செய்யக்கூடிய கர்மாக்களில். எந்த ஒரு மந்திரத்தை நாம்
சொன்னாலும் அதில் பிரணவம் முதற்கொண்டு, ஒவ்வொரு மந்திரத்தையும் நாம்
ஆரம்பித்து சொல்கிறோம்.* அந்தப் பிரணவம் என்பதே ஒரு பகவான் நாமாவாக உபநிஷத்
காண்பிக்கின்றது.
 
*பகவான் நாமா என்றால் உடனே இராமநாம அல்லது நாமசங்கீர்த்தனம் என்று எடுத்துக்
கொள்ளக்கூடாது. நாம சங்கீர்த்தனம் ஒருபகவான் நாமதான். ஆனால் நாம் சொல்லக்கூடிய
தான மந்திரங்களில் நாமசங்கீர்த்தனம் நடுவிலே சேர்ப்பதற்கு நமக்கு அதிகாரம்
கிடையாது. மந்திரங்களுக்கு நடுவில் வேற நாமாக்களையோ, நாம் சொல்லக்கூடிய தான
சோஸ்திரங்களுக்கு நடுவிலேயே, அதிகப்படியாக நாமாக்களை சேர்க்கக்கூடாது.*
 
ஆகையினாலே தான் நம் பெரியோர்களே, நமக்கு அதை அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள்.
*ஆசமனம் செய்யும்பொழுது, அச்யுதாய நமஹ, அனந்தாய நமஹ, கோவிந்தாய நமஹ, இதுதான்
வேத மந்திரம்.* அந்த வேத மந்திரத்திலேயே பகவான் நாமாவை நமக்கு அமைத்துக்
கொடுத்திருக்கிறார்கள். அப்படி அந்த மந்திரங்களை சரியான முறையில் நாம்
சொல்வதினால் நடுவிலேயே பகவான் நாமம் வந்துவிடுகிறது.
 
*மேலும் இந்த பகவான் நாமாவை சொல்லியை நாம் செய்யலாம், என்று ஆரம்பித்தாலும்
கூட, உடனே நமக்கு இந்த கலியின் தோஷத்தினால், பத்து விதமான அபராதங்கள்
சம்பவித்துவிடும். பகவன் நாம தானே நாம் சொல்லி விடலாம் என்ற எண்ணம் வரும்.
அதுவும் சுலபமாக நம்மால் சொல்ல முடியாது, பகவான் நாமாவை அவ்வளவு சுலபமாக
சொல்லி பலனை அடைந்து விட முடியுமா? கண்டிப்பாக முடியாது என்பதை
காண்பிக்கிறார். இந்த நாமாவை சொல்லி பகவான் நாமாவையே சொல்லுவோம், பகவான்
நாமாவே நம்மை காப்பாற்றும், அதுவும் அவ்வளவு சுலபமில்லை அப்பா. பகவன் நாமாவை
நாம் சொல்ல ஆரம்பித்தவுடன், மனதிலேயே நமக்கு நிறைய மாறுதல்கள் உண்டாகும்
எப்படிப்பட்டது என்றால், அபராதம் ஆன மாறுதல்கள்.*
 
சாதுக்கள் என்றால் யார். தன்னுடைய கர்மாக்களை விடாது செய்கின்ற ஒருவருக்கு
சாதுக்கள் என்று பெயர். அவர்களை நிந்தனை செய்யக்கூடாது. அவரவர்கள் கர்மாக்களை
அவர்களுடைய நம்பிக்கையிலே செய்கிறார்கள். அதை நாம் குறைவாகப் பேசக்கூடாது.
அந்த விஷயத்திலே ஒரு குறைபாடு ஏற்படும், நாமாவை சொல்கின்ற பொழுது. அந்தக்
குறைபாடு ஏற்பட்டால் அது ஒரு அபராதம்.
 
*பகவன் நாமாவை நாம் நமக்காக சொல்லிக் கொள்ள வேண்டுமே தவிர, ஊருக்காகவோ,
மற்றவர்களுக்காக நாம், நாமாவை சொல்லவேண்டிய அவசியமில்லை. அந்த எண்ணம்
இருந்தால், அதாவது பகவான் இல்லை என்று சொல்லக்கூடிய நாஸ்திகர் இடத்திலே, நாம்
போய் பகவான் நாமாவை சொல்வது, பகவான் நாமாவை உபதேசிப்பது என்பது, ஒரு அபராதம்.*
 
விஷ்ணு சிவ பக்தர்களை, நிந்திக்கும் படியான, நாமாக்களை சொல்லக்கூடாது. அது ஒரு
அபராதம். அசிரத்தை வரக்கூடாது எந்த ஒரு விஷயத்திலும் சுருதி, வேதம் நமக்கு
காட்டக்கூடிய தான தர்மங்களிலே, அசிரத்தை வந்தால் அதுவும் ஒரு அபராதம்.
 
நம்முடைய தர்ம சாஸ்திரங்களில், அசிரத்தை வரக்கூடாது. அவநம்பிக்கை வந்தால்
அதுவும் ஒரு அபராதம்.
 
*நம் குரு ஆச்சாரியன், அவர்கள் ஒரு வழியை நமக்கு சொல்லிக் கொடுத்தால், அந்த
வழியை நம்பி நாம் செய்ய வேண்டும். ஆச்சாரியன் இடத்திலோ அல்லது குருவின்
இடத்தில் நமக்கு பக்தி குறைகிறது அவர் சொல்லி கொடுக்கின்ற வழியிலே நாம்
ஈடுபடவில்லை என்றால், அதுவும் ஒரு அபராதம்.*
 
வேதம் சரித்திரங்கள்/புராணங்கள் மூலமாக நமக்கு தர்மத்தை காண்பிக்கின்றது
என்றால் அர்த்த வாதம் என்று தோன்றும், *அது எல்லாம் ஒரு கற்பனையாக சொல்கிறது,
என்கின்ற ஒரு எண்ணம் வரும் இந்த கலியின் தோஷத்தினால்.* இராமாயணத்தை பார்த்தால்
இராமன், என்கின்ற ஒரு சத்ரியன் இருந்தார் அவர் இராஜ பரிபாலனம் செய்தார் அவர்
பத்தினியை, ஒருவன் அபகரித்துக் கொண்டு போனான், அவளை மீட்டுக்கொண்டு வந்தார்,
இதுதான் இராமாயணம். வழியிலேயே நிறைய நடந்தது வனவாசம் செய்தார், இது எல்லாம்
கற்பனை என்று, சொல்லத் தோன்றும் இந்தக் கலியினுடைய தோஷத்தினால். ஆனால் அது ஒரு
நாமபராதம். எந்த ஒரு புராணத்தையும் கற்பனை என்று சொல்லி தள்ளக்கூடாது.
 
*பகவான் நாம இருக்கின்றது அது நம்மை காப்பாற்றி விடும், என்று செய்யவேண்டிய
காரியங்களை விட்டுவிடுவதோ, செய்யக்கூடாத காரியங்களை செய்வதோ, அதுவும் ஒரு
நாமபராதம். இப்படி எல்லாம் யார் செய்கிறாரோ, அவரை எந்த பகவான் நாமம்
காப்பாற்றாது/கை கொடுக்காது. இப்படியாக இந்த பத்துவிதமான அபராதங்கள்
சம்பவிக்கும் பகவான் நாமாவை சொல்கின்றனவனுக்கு, பகவான் நாமாவை சொல்கின்றவன்
இந்த பத்து விதமான அபராதங்களையும் செய்யக்கூடாது என்று புராணங்கள்

 ருக் வேதிகளின் அமாவாஸ்யை தர்பபணம்


17.09.2020 - வியாழக்கிழமை        


ஆசமனம். 


அச்சுதாய நம: அனந்தாய நம: கோவிந்தாய நம: 


கேசவா + தாமோதரா


வலது கை மோதிர விரலில் பவித்ரம் போட்டுக் கொண்டு சில கட்டை தர்ப்பங்களை காலுக்கு அடியில் போட்டுக் கொண்டு கையை ஜலம் தொட்டு அலம்பி விட்டு சில கட்டை தர்ப்பங்களை பவித்ரத்துடன் மடித்து வைத்துக்கொள்ளவும்.


ஶுக்லாம் + ஶாந்தயே, 


ஓம் பூ: + பூர்புவஸ்ஸுவரோம் 


மமோபாத்த + ப்ரீத்யர்த்தம், அபவித்ர: பவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபிவா, யஸ்மரேத் புண்டரீகாக்ஷம், ஸபாஹ்ய, அப்யந்தர: ஶுசி: மானஸம் வாசிகம், பாபம், கர்மணா, ஸமுபார்ஜிதம், ஶ்ரீராம, ஸ்மரணேனைவ, வ்யபோஹதி நஸம்ஶய: ஶ்ரீராம ராம ராம திதிர்விஷ்ணு: ததாவார: நக்ஷத்ரம், விஷ்ணுரேவச யோகஶ்ச கரணஞ்சைவ ஸர்வம் விஷ்ணுமயம், ஜகத், ஶ்ரீகோவிந்த கோவிந்த, கோவிந்த அத்யஶ்ரீ பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோராக்ஞயா ப்ரவர்த்தமானஸ்ய, அத்யப்ரும்மண: த்விதீய பரார்த்தே ஶ்வேத, வராஹகல்பே, வைவஸ்வத, மன்வந்தரே, அஷ்டாவிம்ஶதி, தமே, கலியுகே, ப்ரதமேபாதே, ஜம்பூத்வீபே, பாரதவருஷே பரத கண்டே மேரோ: தக்ஷிணே பார்ஶ்வே ஶகாப்தே, அஸ்மின்வர்த்தமானே, வ்யாவஹாரிகே, ப்ரபவாதி, ஷஷ்டி, ஸம்வத்ஸராணாம், மத்யே


*ஶார்வரீ* நாம ஸம்வத்ஸரே *தக்ஷிணாயனே* வர்ஷ* ருதௌ *கன்யா* மாஸே *க்ருஷ்ண* பக்ஷே *அமாவாஸ்யாயாம்* புண்யதிதௌ *கு௫* வாஸர யுக்தாயாம் *பூர்வ பல்குநீ நக்ஷத்ர உபரி உத்தர பல்குநீ* நக்ஷத்ர யுக்தாயாம், *விஷ்ணு* யோக, *விஷ்ணு* கரண, ஏவங்குண விஷேஶன விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் *அமாவாஸ்யாயாம்* புண்யதிதௌ


ப்ராசீனாவீதி


தந்தையார் பிறந்த கோத்ரத்தை சொல்லிக் கொள்ளவும்


........கோத்ரானாம் வஸுருத்ராதித்ய ஸ்வரூபானாம், அஸ்மத், பித்ரு, பிதாமஹ, ப்ரபிதாமஹானாம்


கீழ்வரும் மந்த்ரத்தை தாயார் இல்லாதவர்கள் மட்டும் சொல்ல வேண்டும்


மாத்ரு பிதாமஹி, ப்ரபிதாமஹீனாம்


கீழ்வரும் மந்த்ரத்தை தாயார் இருப்பவர்கள் மட்டும் சொல்ல வேண்டும்


பிதாமஹி, பிது: பிதாமஹி, பிது: ப்ரபிதா, மஹீனாம்


தாயார் பிறந்த கோத்ரத்தை சொல்லிக் கொள்ளவும்


…............கோத்ரானாம் வஸூருத்ராதித்ய, ஸ்வரூபானாம், அஸ்மது, ஸபத்னீக, மாதாமஹ, மாது: பிதாமஹ, மாது: ப்ரபிதா மஹானாம் உபய வம்ஶ பித்ரூணாம் அக்ஷய்ய த்ருப்த்யர்த்தம்


அமாவாஸ்ய  புண்யகாலே மம வா்கத்வய பித்ரூன் உத்திஶ்ய தில தர்பணம் அத்ய கரிஷ்யே


கையில் பவித்ரத்துடன் இருக்கும் கட்டை தர்பங்களை மட்டும் கீழே போடவும். 


பூணலை வலம் போட்டுக்கொள்ளவும் கையில் ஜலத்தால் துடைத்துக்கொள்ளவும்.


பூணலைஇடம் போட்டுக்கொள்ளவும். 


கீழ்க்கண்ட மந்திரங்களை சொல்லி தாம்பாளத்தின் நடுவில் தெற்கு நுனியாக உள்ள கூர்ச்சத்தின் நுனியில் மறித்து எள்ளை போடவும்


ஆவாஹந மந்த்ரம்


உஶந்தஸ்த்வா நிதீமஹி உஶந்த : ஸமிதீமஹி உஶந்நுஶத ஆவஹ பித்ரூன் ஹவிஷே அத்தவே அஸ்மின் கூர்ச்சே வர்கத்வய பித்ரூன் ஆவாஹயாமி


கீழ்க்கண்ட மந்த்ரத்தைச் சொல்லி கட்டை தர்ப்பங்களை கூர்ச்சத்தின்மேல் வைக்கவும்.


ஆஸன மந்த்ரம்


ஆயாந்துந: பிதர: ஸோம்யாஸ: அக்னிஷ்வாத்தா: பதிபி: தேவயானை: அஸ்மின் யக்ஞே ஸ்வதயாமதந்து அதிப்ருவந்து தே அவந்து அஸ்மான் வர்கத்வய பித்ரூனாம் இதமாஸனம்.


கீழ்க்கண்ட மந்த்ரத்தைச் சொல்லி எள்ளை கூர்ச்சத்தில் மறித்துப் போடவும்.


ஸகலாராதனை: ஸ்வர்ச்சிதம் //


பித்ருவர்க்கம்


......கோத்ரான் ........ஶர்மன: வஸுரூபான் பித்ரூன் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)


......கோத்ரான் ........ஶர்மன: ருத்ரரூபான் பிதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)


......கோத்ரான் ........ஶர்மன: ஆதித்யரூபான் பிரபிதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)


கீழ்வரும் தர்ப்பணங்களை தாயார் இல்லாதவர்கள் மட்டும் செய்ய வேண்டியது


........கோத்ரா: ............நாம்நீ; வஸுரூபா: மாத்ரூஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)


........கோத்ரா: ............நாம்நீ; ருத்ரரூபா: பிதாமஹீஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)


........கோத்ரா: ............நாம்நீ; ஆதித்யரூபா: ப்ரபிதாமஹீ ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)


கீழ்வரும் தர்ப்பணங்களை தாயார் உள்ளவர்கள் மட்டும் செய்ய வேண்டியது


........கோத்ரா: ............நாம்நீ; வஸுரூபா: பிதாமஹீஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)


........கோத்ரா: ............நாம்நீ; ருத்ரரூபா: பிது: பிதாமஹீஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)


........கோத்ரா: ............நாம்நீ; ஆதித்யரூபா: பிது: ப்ரபிதாமஹீ ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)


மாதாமஹவர்க்கம்


.....கோத்ர ன். .......ஶர்மன: வஸுரூபான் மாதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)


.....கோத்ரான்........ஶர்மன: ருத்ரரூபான் மாது: பிதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)


.....கோத்ரான்........ஶர்மன: ஆதித்யரூபான் மாது: ப்ரபிதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)


........கோத்ரா: ............நாம்நீ; வஸுரூபா: மாதாமஹீஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)


........கோத்ரா: ............நாம்நீ; ருத்ரரூபா: மாது: பிதாமஹீஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)


........கோத்ரா: ............நாம்நீ; ஆதித்யரூபா: மாது: ப்ரபிதாமஹீ ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)


ஞாதாக்ஞாத, வர்க்கத்வய, பித்ரூன், ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி (3தடவை)


கீழ்வரும் மந்த்ரங்களைச் சொல்லி எள்ளும் ஜலமுமாக தாம்பாளத்திற்குள் அப்ரதிஷிணமாக சுற்றிவிடவும்


மந்த்ரம்


ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம்பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே வா்கத்வய பித்ரூன் த்ருப்யத, த்ருப்யத, த்ருப்யத


உபவீதி


ப்ரதக்ஷிண மந்த்ரம்


தேவதாப்ய: பித்ருப்யஶ்ச மஹாயோகிப்ய: ஏவச, நமஸ்வதாயை, ஸ்வாஹாயை, நித்யமேவ, நமோநம: யாநிகாச பாபானி ஜன்மாந்த்ர க்ருதானிச விநஶ்யந்தி ப்ரதக்ஷிண பதே பதே // நமஸ்கார://

ப்ராசீனாவீதி


யதாஸ்தான மந்த்ரம்


உஶந்தஸ்த்வா நிதீமஹி உஶந்த : ஸ்மிதீமஹி உஶந்நுஶத ஆவஹ பித்ருந் ஹவிஷே அத்தவே// அஸ்மாத், கூர்ச்சாத், ஆவாஹித வர்க்த்வய, பித்ரூன், யதாஸ்தானம், ப்ரதிஷ்டாபயாமி


தாம்பாளத்தில் உள்ள கூர்ச்சத்தை எடுத்து பிரித்து வலது கை கட்டைவிரல் ஆள்காட்டி விரலுக்கும் நடுவில் வைத்துக் கொண்டு கீழ்க்கண்ட மந்த்ரத்தை சொல்லி ஜலம் விடவும்


மந்த்ரம்


ஏஷாம் ந மாதா, ந பிதா, ந  பாந்து: நாந்ய கோத்ரிந: தேஸர்வே த்ருப்தி மாயாந்து மயா உத்ஸ்ருஷ்டை: குஶோதகை: த்ருப்யத, த்ருப்யத, த்ருப்யத


உபவீதி


மந்த்ரம்


ஹிரண்ய கர்ப, கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவஸோ: அனந்த புண்ய பலதம் அத: ஶாந்திம் ப்ரயச்சமே அனுஷ்டித திலதர்ப்பண மந்த்ர - ஸாத்குண்யம் காமயமான: யதாஶக்தி இதம் ஹிரண்யம் ஆசார்யாய ஸம்ப்ரததே நம: நமம


கையில் ஜலத்தை விட்டுக்கொண்டு கீழ்கண்ட மந்த்ரங்களைச் சொல்லி மந்த்ரம் முடிந்தவுடன் கீழே விடவும்


காயேநவாசா மனஸேந்த்ரியைர்வா புத்யாத்ம நாவா ப்ருக்ருதே: ஸ்வபாவாத், கரோமி, யத்யது ஸகலம் பரஸ்மை ஸ்ரீமந்நாராயணாயேதி ஸமர்ப்பயாமி மயா க்௫தமிதம் வா்கத்வய பித்ரூன் உத்திஶ்ய, திலதர்பணாக்யம் கர்ம ஓம் தத்ஸத் ப்ரம்மார்பணமஸ்து


பவித்ரத்தை பிரித்துபோட்டுவிட்டு ஆசமனம் செய்யவும்


ஶுபம்

 06/09/2020* *முசிறி அண்ணா மஹாளயம் என்கின்ற தலைப்பில் நம் முன்னோர்களை

உத்தேசித்து செய்யக்கூடிய இந்த மஹாளய சிராத்தத்தை எப்படி செய்வது என்பதைப்

பற்றி பார்த்துக்கொண்டு வருகிறோம்.*

 

*இந்த மாஹாளய ஸ்ராத்தத்தில் யார் யாரெல்லாம் நாம் பூஜிக்கிறோம் என்பதை தர்ம

சாஸ்திரம் சொல்கிறது. பொதுவாகவே பித்ருக்களை உத்தேசித்து நாம் செய்யக்கூடிய

சிராத்தம் தர்ப்பணம் அது நம்மை சுற்றியுள்ள ஏழு கோத்திர காரர்களுக்கும் பங்கு

போகிறது, என்று தர்ம சாஸ்திரம் சொல்கிறது.*

 

*சிராத்தம் முடிகின்ற பொழுது பிண்ட பிரதானம் நடக்கின்ற சமயத்திலே, ஒரு ஸ்லோகம்

சொல்கின்றோம் அங்கே, இதற்கு என்ன அர்த்தம் என்றால் நம்முடைய பித்ருக்களை

உத்தேசித்து, கயா ஷேத்திரத்திலேயோ அல்லது அதற்கு சமமான ஒரு ஷேத்திரத்திலேயோ

ஒரு வன்னி இலை அளவு ஒரு பிண்டத்தை நாம் வைத்துவிட்டால், நம்மை சுற்றியுள்ள ஏழு

கோத்திர காரர்களுக்கும் அது போய் சேர்கிறது. 101 தலைமுறைகள் கரை சேர்கிறார்கள்

என்று இந்த சுலோகம் சொல்கிறது.*

 

*இதை வருடாவருடம் நாம் செய்யக்கூடிய ஸ்ராத்தத்தில் சொல்கிறோம். அங்கே ஏன் இந்த

சுலோகத்தை நாம் சொல்கிறோம் என்றால், ஏழு கோத்திர காரர்களுக்கும் பங்கு

இருக்கிறது. ஸ்ராத்தத்தில் பிரதானம் என்று மூன்று இருக்கின்றது.*

 

*அக்நோகரணம் என்று சொல்லக்கூடிய தான ஹோமம், பிராம்மண போஜனம், பிண்ட பிரதானம்.

இது மூன்றும் பிரதானம். இதில் தான் நாம் நம்முடைய தாயார் தகப்பனார் வர்க்கத்தை

பூஜிக்கிறோம்.*

 

*இது இல்லாமல் நிறைய அங்கங்கள் செய்கின்றோம் ஸ்ராத்தத்திலே. ஹோமம் ஆனபிறகு

ஆரம்பத்திலிருந்து பார்த்தோமேயானால், அன்ன அபிமர்ஷனம் என்று 1 செய்கிறோம்.

பிறகு தத்தம் செய்கிறோம். போஜனம் ஆனபிறகு விக்கிரம் என்று ஒன்று செய்கிறோம்.

வாயச பிண்டம் என்று ஒன்று செய்கிறோம்.*

 

*இப்படி நிறைய பித்ருக்களை உத்தேசித்து நாம் செய்கிறோம். இவைகள் யாவும் நம்மை

சுற்றியுள்ள ஏழு கோத்திர காரர்களுக்கு போய் சேர்கிறது. யார் அந்த ஏழு கோத்திர

காரர்கள் என்றால், தன் கோத்திரம், தன் மனைவி கோத்திரம், அத்தை கோத்திரம்,

தாய்மாமா கோத்திரம், சகோதரி கோத்திரம், பெண்ணுடைய கோத்திரம், நாட்டுப்பெண்

கோத்திரம்.*

 

*இப்படி இந்த ஏழு கோத்திர காரர்களுக்கும் போய் சேருகிறது, நாம் செய்யக்கூடியது

ஆன ஸ்ராத்தம். இப்படி அது பொதுவாகச் சொல்லப்பட்டாலும், இந்த மஹாளய பட்சத்தில்

நாம் நாம் செய்யக்கூடிய இந்த சிராத்தத்தில் இவர்கள் அத்தனை பேரையும்

தனித்தனியாகவே நாம் வரணம் செய்து பண்ணுகிறோம்.*

 

*இவர்களுக்குத்தான் காருண்ய பித்ருக்கள் என்று பெயர். தாயார் வழியில்

தகப்பனார் வழி மாதா மஹ வர்க்கம், இவைகள் இல்லாமல், பாக்கி அனைவருக்கும்

காருண்யர்கள் என்று பெயர். நாம் செய்யக்கூடிய மஹாளய சிராத்தத்தில் யாரை யாரை

எல்லாம் வரிக்க வேண்டும் என்றால், அதாவது விஷ்வே தேவர், தகப்பனார் வர்க்கம்,

தாயார் வர்கம், ஸபத்தீனி மாதா, தகப்பனார் இரண்டு கல்யாணம் செய்து கொண்டு

இருந்தால் இன்னொரு தாயாருக்கு பெயர் ஸபத்தீனி மாதா. பத்தினிகளோடு சேர்ந்து

மாதாமகர்கள், பித்துருவியன் தகப்பனாரோடு கூட பிறந்தவர்கள், சித்தப்பா

சகோதரர்கள், தன் புத்திரர்கள், பிதுர் பகினி, தகப்பனாருடன் கூட பிறந்த சகோதரி

அத்தை, தாய் மாமா, தாயாருடன் கூடப் பிறந்த சகோதரிகள், தாயார் வழியில்

பெரியம்மா, சித்தி, வளர்ப்பு தாயார் ஜாமயஹா, தாத்திரி என்று பெயர். பிறகு

சகோதரிகள், தன் பெண், மனைவி, மாமனார், பாவுகன் அதாவது சகோதரியின் கணவர்,

நாட்டுப் பெண், மச்சினன், குரு, ஆச்சாரியன், சுவாமி- அதாவது நம்முடைய

வாழ்க்கைக்கு துணை புரிந்தவர்கள், சகா- தோழன், இவர்களுக்கு எல்லாம்

காருண்யர்கள் என்ற பெயர்.*

 

*இவர்கள் அனைவரையும் வரித்து நாம் செய்ய வேண்டியது இந்த மஹாளய ஸ்ராத்தம்.

மிகவும் முக்கியம். ஆகையினாலே தனித்தனியாக இவர்களை வரித்து நாம் பூஜை செய்ய

வேண்டும். ஐந்து அல்லது ஆறு பிராமணர்களை, வைத்துக்கொண்டு செய்ய வேண்டும் இந்த

மஹாளய சிராத்தம்.*

 

*விஷ்வே தேவர்க்காக ஒருவர், பிதுர் வர்க்கம் ஒருவர், மாத்ரு வர்க்கத்திற்கு

ஒருவர், ஸபத்தீனி மாதா இளைய தாயார் ஒருவர் இருந்தால், மாதாமஹர் ஒருவர்

காருணிகளுக்கு ஒருத்தர். இப்படி வைத்துக் கொண்டு இந்த மஹாளய சிராத்தம் செய்ய

வேண்டும்.*

 

*இவர்கள் அத்தனை பேருக்கும் பாகம் போய் சேர்கிறது இந்த மகாளய சிராத்தத்தில்.

இந்த மஹாளய பட்சத்திலேயே நாம் செய்யவேண்டிய தாயார் தகப்பனார் ஸ்ரார்தம் வந்தது

ஆனால், ஸ்ரார்த்தம் செய்தபிறகு மஹாளய சிராத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு

தர்மசாஸ்திரம் காண்பிக்கிறது.‌*

 

*தாயார் தகப்பனார் ஸ்ரார்தம் முன்பாக மஹாளயம் செய்யக்கூடாது. அப்படி செய்தால்

அது செய்யாதது மாதிரிதான். இதை தர்ம சாஸ்திரம் சொல்கிறது.*

 

*அப்படி இவ்வளவு பெயர்களை உத்தேசித்து நாம் இந்த மஹாளய சிராத்தம் செய்கிறோம்.

சுபம்

தளத்தை செய்தியோடை மூலம் வாசிப்பவர்கள்

வாசகர்கள்

எங்களின் முதன்மை வலைத்தளம். Our Main Web Site

விருந்தினர் வருகை

சமீபத்தில் வந்தவர்கள்

இதை படித்தவர்கள் படித்தது

அதிகம் படிக்கப்பட்டவை