தமிழ் ஜோதிடம் ஜாதகம்

ஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், வாஸ்துசாஸ்திரம் மூலம் வருங்காலம் அறிய "ஸ்வாதி ஜோதிட ஆய்வகம்" உங்களை அன்புடன் வரவேற்கிறது.

அண்மையில் எழுதியவை

எழுதியவை அனைத்தும்

வாசகர் கருத்து

மகாளய அமாவாசை ஸ்பெஷல் ! முன்னோர்களுக்கு சுவர்க்கம் செல்ல பாதையைக் காட்டும் மணிகர்ணிகா குளம் : மாத அமாவாசைகள் மற்றும் விசேஷமான மஹாளய அமாவாசையில் புனித நீர் நிலைகளில் முன்னோர்களுக்கு திதி மற்றும் வழிபாடுகள் செய்யப்படுகிறது.இதில் காசியில் உள்ள மணிகர்ணிகா காட் என்னும் இடத்திலுள்ள மணிகர்ணிகா குளம் இவையெல்லாவற்றையும்விட சிறந்ததாகப் போற்றப்படுகிறது. இந்தக் குளத்தினையொட்டிய கங்கை நதிக்கரையில் அமாவாசை தினத்தில் மட்டுமின்றி ,எல்லா நாட்களிலும் மறைந்த முன்னோர்களுக்கு வழிபாடுகள் நடைபெறுகின்றன. மிகவும் புனிதமானதாகக் கருதப்படும் இந்த மணிகர்ணிகா குளம் பல தலைமுறைகளைச் சேர்ந்த முன்னோர்களுக்கு சுவர்க்கம் செல்ல பாதையைக் காட்டும் புனிதக் குளமாகும்.நடுப்பகல் வேளையில் மணிகர்ணிகையில் ஸ்நானம் செய்து அதன் துதியையும், அவதார திருக்கதையையும் மகாளய பட்ச தினமாகிய 15 புண்ணிய தினங்களில் கூறுவோர் பெறும் புண்ணியத்தை தேவர்களாலும் கூறிட முடியாது. மகாவிஷ்ணு தங்கை உமையவளை பரமசிவனுக்குத் திருமணம் செய்து கொடுத்து தேவர்கள், மகரிஷிகள், தேவகணங்களால் இடையூறுகள் இல்லாத பூலோகம் வந்த போது, அவர்கள் மூவருக்கும் ஒளி பொருந்திய ஓர் இடம் தென் படவே அங்கு தன் சக்ராயுதத்தால் அழகான தீர்த்தத்தை உருவாக்கினார். தன் தங்கையும், கணவன் பரமசிவனும் அதைக்கண்டு நீராட விரும்பி அழைத்து சென்ற போது தேவி அதில் எட்டிப்பார்த்து விட முகம் பொலிவாகத்தெரிந்தது. தன் நகைகளை சரி செய்த போது அவள் அணிந்திருந்த மணி குளத்தில் விழுந்தது. அதை பரமன் எடுக்க முயன்ற போது காதணிகள் நீரில் விழுந்தன.அம்பிகையின் மணியும், பரமணின் கர்ண குண்டலமும் விழுந்ததால் மணிகர்ணிகா என்ற பெயர் பெற்றது.. தர்ப்பணம் செய்வதற்கு என்று சில தலங்கள் புகழ்பெற்றவை. அங்கு சென்றும் நாம் நம் முன்னோர்களுக்கு நம் பித்ரு கடமைகளை செய்யல்லாம். நாகை மாவட்டம் பூந்தோட்டத்திற்கு அருகில் உள்ள மூக்தீஸ்வரக் கோயில்.தில தர்ப்பணபுரி என்று அழைக்கப்படுகிறது. சந்திர தீர்த்தமும் அரசலாறும் ஓடுகிற இந்த தலத்தில் மஹாளய பட்ச தர்ப்பணம் செய்யலாம். ராமேஸ்வரம், கன்னியாகுமரி, கோடியக்ரை, திருப்புல்லானி, தேவிபட்டினம், நவபாஷானை கடற்கரை தலம், கும்பகோணம் மகா மகக்குளம், ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறை, மூன்று நதிகள் சங்கமிக்கிற பவானி கூடுதுறை, திருச்சி அருகில் உள்ள முக்கொம்பு, மயிலாடுதுறை, காவிரிக்ரை மன்னார்குடி-திருத்துறைப்பூண்டி சாலையில் உள்ள திருராமேஸ்வரம் ஆகிய தலங்களிலும் தர்ப்பணம் செய்யலாம். அவ்வாறு புனித தலங்களுக்கு சென்று தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள், வீட்டில் உயிர் நீத்த பெரியவர்களின் படத்தை சுத்தம் செய்து மலர்களால் அலங்கரித்து பொட்டு வைக்க வேண்டும். முன்னோர் பெயரைச் சொல்லி எள்ளும் தண்ணீரும் விட வேண்டும். பிறகு யாருக்கு தர்ப்பணம் செய்தோமோ அவக்குப் பிடித்தமான பண்டத்துடன், தேங்காய்,வாழைப்பழம் வைத்து மலர் துளசி போட்டு நெய் தீபம் காட்ட வேண்டும். தர்ப்பண நீரை அருகில் உள்ள நீர் நிலைகளில் அல்லது செடிகளில் விட்டுவிட வேண்டும். பித்ருக்களும் தேவர்களும் காக்கை வடிவில் உணவு எடுக்க வருவதாக சாஸ்திரம் கூறுவதால் காக்கைக்கு அன்னமிட்டு கயாவில் சிரார்த்தம் செய்தது போல இந்த தர்ப்பணம் செய்தேன் என்று கூறவேண்டும். இப்படி நம்மால் எந்த வகையில் செய்ய முடியுமோ ,அந்த வகையில் நம் முன்னோர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகளை தாம் தவறாமல் செய்ய வேண்டும். இவ்வுலக வாழ்க்கைக்கு பொருள் மட்டும் போதாது, நம் முன்னோர்களின் அருளும் ஆசியும் வேண்டும். அந்த ஆசியை நாம் அனைவரும் பெறுவோம். மணிகர்ணிகா ஸ்துதி ! 1.த்வத்தீரே மணிகார்ணிகே ஹரிஹரௌ ஸாயுஜ்ய முக்திப்ரதௌ வாதம் தௌ குருத:பரஸ்பரமுபௌ ஜந்தோ:ப்ரயாணோத்ஸவே! மத்ரூபோ மனுஜோsயமஸ்து ஹரிணா ப்ரோக்த:சிவஸ்தத்க்ஷணாத்! தன்மத்யாத் ப்ருகுலாஞ்சனோ கருடக:பீதாம்பரோநிர்கத:!! ஹே மணிகர்ணிகே!உனது கரையில் ஸாயுஜ்ய முக்தி வழங்கும் ஹரியும் ஹானும் ஒருவருக்கொருவர், ஒரு பிராணிமரிக்கும் தருவாயில் வாதம் செய்வார்கள். ஹரி சிவனிடம் கூறினார். இந்த மனிதன் என்னைப் போன்றிருக்கட்டுமே என்று. உடனேயே அந்த மனிதன் சரீரத்திலிருந்து, பிருகு மஹர்ஷியின் அடையாளத்துடனும், கருட வாஹனத்துடனும், பீதாம் பரத்துடனுமாக வெளியேறினான். 2.இந்த்ராத்யாஸ்த்ரிதசா:பதந்தி நியதம் போகக்ஷயே யே புன: ஜாயந்தே மனுஜாஸ்ததோsபி பவச:கீடா:பதங்காதய:! யே மாத:மணிகர்ணிகே தவ ஜலே மஜ்ஜந்தி நிஷ்கல்மஷா: ஸாயுஜ்யேsபி கிரீடகௌஸ்து பதரா நாராயணா:ஸ்யுரநரா:!! தேவராகியிருப்பவர்கூட ஒரு சமயம்-புண்ய பலமாக கோகக் காலம் முடிந்தவுடன் மனிதராகவோ, பசுக்களாகவோ, பறவை பூச்சிகளாகவோ தான் பிறக்கிறார்கள். ஆனால், ஹேதாயே!மணிகர்ணிகே!உனது ஜலத்தில் ஸ்னாநம், செய்தவர்கள் பாபம் நீங்கி ஸாயுஜ்ய நிலையிலும் கிரீடம், கௌஸ்துபம் தாங்கிய நாராயணர்களாக ஆகிவிடுகிறார்களே! 3.காசீ தன்யதமா விமுக்திநகரீ ஸாலங்க்ருதா கங்கயா தத்ரேயம் மணிகர்ணிகா ஸுககரீ முக்திர்ஹி தத்கிங்கரீ! ஸ்வர்லோக ஸ்துலித:ஸஹைவ விபுதை:காச்யா ஸமம் ப்ரஹ்மணா காசீ க்ஷே£ணிதலே ஸ்திதா குருதரா ஸ்வர்கோ லகுத்வம் கத:! புண்ணியமான காசீ க்ஷேத்ரம் மோக்ஷத்தை கொடுக்கவல்லது. அதிலும் கங்கையுடன் சேர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், சாச்வத சுகத்தை (மோக்ஷத்தை) கொடுப்பதான மணிகர்ணிகையும் அங்குள்ளது. ஆகவே, பிரம்மதேவன், காசீ க்ஷேத்திரத்தையும் ஸ்வர்கத்தையும் எடைபோட்டதில், காசீ மிககனம் கொண்டதால் பூமியில் தட்டியது. ஸ்வர்கம் எடை குறைவால் லகுவாகிறது. 4.கங்காதீரமெனுத்தமம் U ஸகலம்;தத்ராபி காச்யுத்தமா தஸ்யாம் ஸா மணிகர்ணிகோத்தமதமா யத்ரேச்வரோ முக்தித: I தேவானாமபி துர்லபம் ஸ்தலமிதம் பாபௌக நாசக்ஷமம் பூர்வோபார்ஜிதபுண்ய புஞ்ஜகமகம் புண்ணயைர்ஜனை:ப்ராப்யதே!! கங்கைக்கரைப்பிரதேசம் முழுதுமே புண்யமானது. அதிலும் காசீ மிக உத்தமக்ஷேத்ரம், அதிலும், ஈச்வரன் முக்தி வழக்குமிடமான மணிகர்ணிகை மிக மிக உத்தமமானது. பாபத்தைப் போக்கும் இந்த மணிகர்ணிகைஸ்தலம் தேவருக்கும் கிடைத்தற்கரியது. முன்பிறவியில் செய்த புண்யக் குவியலால் ஆன்றோர்க்கு மட்டுமே கிடைக்கக் கூடியது. 5.து:காம்போதி கதோ ஜந்து நிவஹஸ்தேஷாம் கதம் நிஷ்க்ருதி: ஜ்ஞாத்வா தத்ஹி விரிஞ்சிநா விரசிதா வாராணஸீ சர்மதா! லோகா:ஸ்வர்க முகாஸ்ததோsபி லகவோ போகாந்தபாதப்ரதா: காசீமுக்தி புரீ ஸதாசிவகரீ தர்மார்த்த மோக்ஷப்ரதா!! உலகத்தில் பிறந்த உயிரினங்கள் துன்பக்கடலில் விழ, அவர்களுக்கு விடிவுதான் எப்படி?என்றெண்ணி பிரம்மன் மங்கலம் பயக்கும் காசியை தோற்றுவித்துள்ளார். உலக மக்கள் சுவர்கத்தை நாடுகின்றனர். ஆனால் சுகானுபவத்தின் பின் வீழ்ச்சியைத்தான் அவை தருகின்றன. காசியோதர்மம், அர்த்தம், மோக்ஷம் இவற்றை பயக்கும் முக்திபுரியாகும். 6.ஏகோ வோணுதரோ தராததரதர:ஸ்ரீவத்ஸ பூஷாதார யோsப்யோக:கில சங்கரோ விஷதரோ கங்காதரோ மாதவ: ! யே மாதர்மணிகர்ணிகே தவ ஜலே மஜ்ஜந்தி தே மானவா: ருத்ரா வா ஹரயோ பவந்தி பஹவஸ்தேஷாம் பஹ§த்வம் கதம் !! புல்லாங்குழல், கோவர்தனமாலை, ஸ்ரீவத்ஸம் என்ற அலங்காரம் இவற்றை தரிப்பவர் ஒரு கிருஷ்ணர்தானே!சங்கரர் என்பவரும் விஷம் உண்டவர், கங்கையை தலையில் கொண்டவர், உமையின் பர்த்தாவாகியவரும் ஒருவர்தான். ஆனால் தாயே மணிகர்னே. இனது பிரவாஹத்தில் பலர் மூழ்கி, பல ருத்ரர்களாகவும், பல விஷ்ணுவாகவும் ஆவதுதான் எப்படியோ!ஆச்சர்யம் இது. 7.த்வத்தீரே மரணம்து மங்கல கரம் தேவை ரபி ச்லாக்யதே சக்ரஸ்தம் மனுஜம் ஸஹஸ்ரநயநை:த்ரஷ்டும் ஸதா தத்பர: ! ஆயாந்தம் ஸவிதா ஸஹஸ்ரகிரணை:ப்ரத்யுத்கதோsபூத் ஸதா புண்யோsஸெள வ்ருஷகோsதவா கருடக:கிம் மந்திரம் யாஸ்யதி!! ஹேமணிகர்ணிகே!உனது தீரத்தில் மரணமெய்துவது தேவர்களே போற்றும் படி மங்கலகரமானது. இந்திரன் அப்படி மரித்த ஒருவரை ஆயிரம் கண்களாலும் காண விழைகிறான்:சூர்யன் தன் பக்கம் வந்து கொண்டிருக்கிற அவனை எதிர் கொண்டு அழைக்கிறார். ஆகவே, அவர் வ்ருஷபத்தின் மீதோ, கருடன் மீதோ ஏறி ஏதோ ஒரு கோயிலை அடையப் போகிறேன். 8.மத்யாஹ்னே மணிகர்ணிகாஸ்நபனஜம் புண்யம் வ வக்தும் க்ஷம: ஸ்வீயை ரப்தசதை:சதுர்முகதரோ வேதார்த்த தீக்ஷ£ குரு: ! யோகாப்யாஸ பலேந சந்த்ர சிகரஸ்தத்புண்யபாரங்கத: த்வத்தீரே ப்ரகரோதி ஸுப்தபுருஷம் நாராயணம் வா சிவம் !! மத்யான வேளையில் மணிகர்ணிகையில் ஸ்நானம் செய்வதன் பயனாக புண்யம் உண்டைவதை சொல்ல இயலாது. சதுர்முக பிரம்மா அதாவது வேதார்த்தத்தை விளக்கியவர் அல்லது சந்த்ரசேகரர் யோகாப்யாஸபலத்தால் அந்த புண்யத்தின் எல்லைக்கே போய் உனது தீரத்தில் மரித்தவளை நாராயணனாகவோ சிவானகவோ செய்து விடுகிறார். 9.க்ருச்ரை:கோடிசதை:ஸ்வபாபநிதனம் யாச்சாச்வமதை:பலம் தத்ஸர்வம் மணிகர்ணிகாஸ்நபனஜே புண்யே ப்ரவிஷ்டம்பவேத்! ஸ்நாத்வா ஸ்தோத்ரமிதம் நர:படதி சேத் ஸம்ஸாரபாதோநிதிம் தீர்த்வா பல்வலவத் ப்ரயாதிஸதனம் தேஜோமயம் ப்ரஹ்மண:!! கோடிக்கணக்கில் செய்த க்ருச்சாசரணம் மூலமாக தத்தம் பாபங்களை போக்கிக் கொள்வதோ அல்லது பல அச்வமேதங்களால் உண்டாகும் பயனையோ மணிகர்ணிகையில் ஒரு முறை ஸ்நானம் செய்து இந்தஸ்லோகத்தை படிப்பவர். ஸம்ஸாரக்கடலை ஒரு குட்டையைக் கடப்பது போல் கடந்து பிரம்மலோகம் எய்துவர்.  

JOTHIDA KALAIMAMANI USHA RENGAN Add comments

 மகாளய அமாவாசை ஸ்பெஷல் ! 


முன்னோர்களுக்கு சுவர்க்கம் செல்ல பாதையைக் காட்டும் மணிகர்ணிகா குளம் :


மாத அமாவாசைகள் மற்றும் விசேஷமான மஹாளய அமாவாசையில் புனித நீர் நிலைகளில் முன்னோர்களுக்கு திதி மற்றும் வழிபாடுகள் செய்யப்படுகிறது.இதில் காசியில் உள்ள மணிகர்ணிகா காட் என்னும் இடத்திலுள்ள மணிகர்ணிகா குளம் இவையெல்லாவற்றையும்விட சிறந்ததாகப் போற்றப்படுகிறது.


இந்தக் குளத்தினையொட்டிய கங்கை நதிக்கரையில் அமாவாசை தினத்தில் மட்டுமின்றி ,எல்லா நாட்களிலும் மறைந்த முன்னோர்களுக்கு வழிபாடுகள் நடைபெறுகின்றன. மிகவும் புனிதமானதாகக் கருதப்படும் இந்த மணிகர்ணிகா குளம் பல தலைமுறைகளைச் சேர்ந்த முன்னோர்களுக்கு சுவர்க்கம் செல்ல பாதையைக் காட்டும் புனிதக் குளமாகும்.நடுப்பகல் வேளையில் மணிகர்ணிகையில் ஸ்நானம் செய்து அதன் துதியையும், அவதார திருக்கதையையும் மகாளய பட்ச தினமாகிய 15 புண்ணிய தினங்களில் கூறுவோர் பெறும் புண்ணியத்தை தேவர்களாலும் கூறிட முடியாது.


மகாவிஷ்ணு  தங்கை உமையவளை பரமசிவனுக்குத் திருமணம் செய்து கொடுத்து தேவர்கள், மகரிஷிகள், தேவகணங்களால் இடையூறுகள் இல்லாத பூலோகம் வந்த போது, அவர்கள் மூவருக்கும் ஒளி பொருந்திய ஓர் இடம் தென் படவே அங்கு தன் சக்ராயுதத்தால் அழகான தீர்த்தத்தை உருவாக்கினார். தன் தங்கையும், கணவன் பரமசிவனும் அதைக்கண்டு நீராட விரும்பி அழைத்து சென்ற போது தேவி அதில் எட்டிப்பார்த்து விட முகம் பொலிவாகத்தெரிந்தது. தன் நகைகளை சரி செய்த போது அவள் அணிந்திருந்த மணி குளத்தில் விழுந்தது. அதை பரமன் எடுக்க முயன்ற போது காதணிகள் நீரில் விழுந்தன.அம்பிகையின் மணியும்,

பரமணின் கர்ண குண்டலமும் விழுந்ததால் மணிகர்ணிகா என்ற பெயர் பெற்றது..


தர்ப்பணம் செய்வதற்கு என்று சில தலங்கள் புகழ்பெற்றவை. அங்கு சென்றும் நாம் நம் முன்னோர்களுக்கு நம் பித்ரு கடமைகளை செய்யல்லாம்.


நாகை மாவட்டம் பூந்தோட்டத்திற்கு அருகில் உள்ள மூக்தீஸ்வரக் கோயில்.தில தர்ப்பணபுரி என்று அழைக்கப்படுகிறது. சந்திர தீர்த்தமும் அரசலாறும் ஓடுகிற இந்த தலத்தில் மஹாளய பட்ச தர்ப்பணம் செய்யலாம். ராமேஸ்வரம், கன்னியாகுமரி, கோடியக்ரை, திருப்புல்லானி, தேவிபட்டினம், நவபாஷானை கடற்கரை தலம், கும்பகோணம் மகா மகக்குளம், ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறை, மூன்று நதிகள் சங்கமிக்கிற பவானி கூடுதுறை, திருச்சி அருகில் உள்ள முக்கொம்பு, மயிலாடுதுறை, காவிரிக்ரை மன்னார்குடி-திருத்துறைப்பூண்டி சாலையில் உள்ள திருராமேஸ்வரம் ஆகிய தலங்களிலும் தர்ப்பணம் செய்யலாம்.


அவ்வாறு புனித தலங்களுக்கு சென்று தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள்,

வீட்டில் உயிர் நீத்த பெரியவர்களின் படத்தை சுத்தம் செய்து மலர்களால் அலங்கரித்து பொட்டு வைக்க வேண்டும். முன்னோர் பெயரைச் சொல்லி எள்ளும் தண்ணீரும் விட வேண்டும். பிறகு யாருக்கு தர்ப்பணம் செய்தோமோ அவக்குப் பிடித்தமான பண்டத்துடன், தேங்காய்,வாழைப்பழம் வைத்து மலர் துளசி போட்டு நெய் தீபம் காட்ட வேண்டும். தர்ப்பண நீரை அருகில் உள்ள நீர் நிலைகளில் அல்லது செடிகளில் விட்டுவிட

வேண்டும்.


பித்ருக்களும் தேவர்களும் காக்கை வடிவில் உணவு எடுக்க வருவதாக சாஸ்திரம் கூறுவதால் காக்கைக்கு அன்னமிட்டு கயாவில் சிரார்த்தம் செய்தது போல இந்த தர்ப்பணம் செய்தேன் என்று கூறவேண்டும்.


இப்படி நம்மால் எந்த வகையில் செய்ய முடியுமோ ,அந்த வகையில் நம் முன்னோர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகளை தாம் தவறாமல் செய்ய வேண்டும். இவ்வுலக வாழ்க்கைக்கு பொருள் மட்டும் போதாது, நம் முன்னோர்களின் அருளும் ஆசியும் வேண்டும். அந்த ஆசியை நாம் அனைவரும் பெறுவோம்.


மணிகர்ணிகா ஸ்துதி !


1.த்வத்தீரே மணிகார்ணிகே ஹரிஹரௌ ஸாயுஜ்ய முக்திப்ரதௌ

வாதம் தௌ குருத:பரஸ்பரமுபௌ ஜந்தோ:ப்ரயாணோத்ஸவே!

மத்ரூபோ மனுஜோsயமஸ்து ஹரிணா ப்ரோக்த:சிவஸ்தத்க்ஷணாத்!

தன்மத்யாத் ப்ருகுலாஞ்சனோ கருடக:பீதாம்பரோநிர்கத:!!


ஹே மணிகர்ணிகே!உனது கரையில் ஸாயுஜ்ய முக்தி வழங்கும் ஹரியும் ஹானும் ஒருவருக்கொருவர், ஒரு பிராணிமரிக்கும் தருவாயில் வாதம் செய்வார்கள். ஹரி சிவனிடம் கூறினார். இந்த மனிதன் என்னைப் போன்றிருக்கட்டுமே என்று. உடனேயே அந்த மனிதன் சரீரத்திலிருந்து, பிருகு மஹர்ஷியின் அடையாளத்துடனும், கருட வாஹனத்துடனும், பீதாம் பரத்துடனுமாக வெளியேறினான்.


2.இந்த்ராத்யாஸ்த்ரிதசா:பதந்தி நியதம் போகக்ஷயே யே புன:

ஜாயந்தே மனுஜாஸ்ததோsபி பவச:கீடா:பதங்காதய:!

யே மாத:மணிகர்ணிகே தவ ஜலே மஜ்ஜந்தி நிஷ்கல்மஷா:

ஸாயுஜ்யேsபி கிரீடகௌஸ்து பதரா நாராயணா:ஸ்யுரநரா:!!


தேவராகியிருப்பவர்கூட ஒரு சமயம்-புண்ய பலமாக கோகக் காலம் முடிந்தவுடன் மனிதராகவோ, பசுக்களாகவோ, பறவை பூச்சிகளாகவோ தான் பிறக்கிறார்கள். ஆனால், ஹேதாயே!மணிகர்ணிகே!உனது ஜலத்தில் ஸ்னாநம், செய்தவர்கள் பாபம் நீங்கி ஸாயுஜ்ய நிலையிலும் கிரீடம், கௌஸ்துபம் தாங்கிய நாராயணர்களாக ஆகிவிடுகிறார்களே!


3.காசீ தன்யதமா விமுக்திநகரீ ஸாலங்க்ருதா கங்கயா

தத்ரேயம் மணிகர்ணிகா ஸுககரீ முக்திர்ஹி தத்கிங்கரீ!

ஸ்வர்லோக ஸ்துலித:ஸஹைவ விபுதை:காச்யா ஸமம் ப்ரஹ்மணா

காசீ க்ஷே£ணிதலே ஸ்திதா குருதரா ஸ்வர்கோ லகுத்வம் கத:!


புண்ணியமான காசீ க்ஷேத்ரம் மோக்ஷத்தை கொடுக்கவல்லது. அதிலும் கங்கையுடன் சேர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், சாச்வத சுகத்தை (மோக்ஷத்தை) கொடுப்பதான மணிகர்ணிகையும் அங்குள்ளது. ஆகவே, பிரம்மதேவன், காசீ க்ஷேத்திரத்தையும் ஸ்வர்கத்தையும் எடைபோட்டதில், காசீ மிககனம் கொண்டதால் பூமியில் தட்டியது. ஸ்வர்கம் எடை குறைவால் லகுவாகிறது.


4.கங்காதீரமெனுத்தமம் U ஸகலம்;தத்ராபி காச்யுத்தமா

தஸ்யாம் ஸா மணிகர்ணிகோத்தமதமா யத்ரேச்வரோ முக்தித: I

தேவானாமபி துர்லபம் ஸ்தலமிதம் பாபௌக நாசக்ஷமம்

பூர்வோபார்ஜிதபுண்ய புஞ்ஜகமகம் புண்ணயைர்ஜனை:ப்ராப்யதே!!


கங்கைக்கரைப்பிரதேசம் முழுதுமே புண்யமானது. அதிலும் காசீ மிக உத்தமக்ஷேத்ரம், அதிலும், ஈச்வரன் முக்தி வழக்குமிடமான மணிகர்ணிகை மிக மிக உத்தமமானது. பாபத்தைப் போக்கும் இந்த மணிகர்ணிகைஸ்தலம் தேவருக்கும் கிடைத்தற்கரியது. முன்பிறவியில் செய்த புண்யக் குவியலால் ஆன்றோர்க்கு மட்டுமே கிடைக்கக் கூடியது.


5.து:காம்போதி கதோ  ஜந்து நிவஹஸ்தேஷாம் கதம் நிஷ்க்ருதி:

ஜ்ஞாத்வா தத்ஹி விரிஞ்சிநா விரசிதா வாராணஸீ சர்மதா!

லோகா:ஸ்வர்க முகாஸ்ததோsபி லகவோ போகாந்தபாதப்ரதா:

காசீமுக்தி புரீ ஸதாசிவகரீ தர்மார்த்த மோக்ஷப்ரதா!!


உலகத்தில் பிறந்த உயிரினங்கள் துன்பக்கடலில் விழ, அவர்களுக்கு விடிவுதான் எப்படி?என்றெண்ணி பிரம்மன் மங்கலம் பயக்கும் காசியை தோற்றுவித்துள்ளார். உலக மக்கள் சுவர்கத்தை நாடுகின்றனர். ஆனால் சுகானுபவத்தின் பின் வீழ்ச்சியைத்தான் அவை தருகின்றன. காசியோதர்மம், அர்த்தம், மோக்ஷம் இவற்றை பயக்கும் முக்திபுரியாகும்.


6.ஏகோ வோணுதரோ தராததரதர:ஸ்ரீவத்ஸ பூஷாதார

யோsப்யோக:கில சங்கரோ விஷதரோ கங்காதரோ மாதவ: !

யே மாதர்மணிகர்ணிகே தவ ஜலே மஜ்ஜந்தி தே மானவா:

ருத்ரா வா ஹரயோ பவந்தி பஹவஸ்தேஷாம் பஹ§த்வம் கதம் !!


புல்லாங்குழல், கோவர்தனமாலை, ஸ்ரீவத்ஸம் என்ற அலங்காரம் இவற்றை தரிப்பவர் ஒரு கிருஷ்ணர்தானே!சங்கரர் என்பவரும் விஷம் உண்டவர், கங்கையை தலையில் கொண்டவர், உமையின் பர்த்தாவாகியவரும் ஒருவர்தான். ஆனால் தாயே மணிகர்னே. இனது பிரவாஹத்தில் பலர் மூழ்கி, பல ருத்ரர்களாகவும், பல விஷ்ணுவாகவும் ஆவதுதான் எப்படியோ!ஆச்சர்யம் இது.


7.த்வத்தீரே மரணம்து மங்கல கரம் தேவை ரபி ச்லாக்யதே

சக்ரஸ்தம் மனுஜம் ஸஹஸ்ரநயநை:த்ரஷ்டும் ஸதா தத்பர: !

ஆயாந்தம் ஸவிதா ஸஹஸ்ரகிரணை:ப்ரத்யுத்கதோsபூத் ஸதா

புண்யோsஸெள வ்ருஷகோsதவா கருடக:கிம் மந்திரம் யாஸ்யதி!!


ஹேமணிகர்ணிகே!உனது தீரத்தில் மரணமெய்துவது தேவர்களே போற்றும் படி மங்கலகரமானது. இந்திரன் அப்படி மரித்த ஒருவரை ஆயிரம் கண்களாலும் காண விழைகிறான்:சூர்யன் தன் பக்கம் வந்து கொண்டிருக்கிற அவனை எதிர் கொண்டு அழைக்கிறார். ஆகவே, அவர் வ்ருஷபத்தின் மீதோ, கருடன் மீதோ ஏறி ஏதோ ஒரு கோயிலை அடையப் போகிறேன்.


8.மத்யாஹ்னே மணிகர்ணிகாஸ்நபனஜம் புண்யம் வ வக்தும் க்ஷம:

ஸ்வீயை ரப்தசதை:சதுர்முகதரோ வேதார்த்த தீக்ஷ£ குரு: !

யோகாப்யாஸ பலேந சந்த்ர சிகரஸ்தத்புண்யபாரங்கத:

த்வத்தீரே ப்ரகரோதி ஸுப்தபுருஷம் நாராயணம் வா சிவம் !!


மத்யான வேளையில் மணிகர்ணிகையில் ஸ்நானம் செய்வதன் பயனாக புண்யம் உண்டைவதை சொல்ல இயலாது. சதுர்முக பிரம்மா அதாவது வேதார்த்தத்தை விளக்கியவர் அல்லது சந்த்ரசேகரர் யோகாப்யாஸபலத்தால் அந்த புண்யத்தின் எல்லைக்கே போய் உனது தீரத்தில் மரித்தவளை நாராயணனாகவோ சிவானகவோ செய்து விடுகிறார்.


9.க்ருச்ரை:கோடிசதை:ஸ்வபாபநிதனம் யாச்சாச்வமதை:பலம்

தத்ஸர்வம் மணிகர்ணிகாஸ்நபனஜே புண்யே ப்ரவிஷ்டம்பவேத்!

ஸ்நாத்வா ஸ்தோத்ரமிதம் நர:படதி சேத் ஸம்ஸாரபாதோநிதிம்

தீர்த்வா பல்வலவத் ப்ரயாதிஸதனம் தேஜோமயம் ப்ரஹ்மண:!!


கோடிக்கணக்கில் செய்த க்ருச்சாசரணம் மூலமாக தத்தம் பாபங்களை போக்கிக் கொள்வதோ அல்லது பல அச்வமேதங்களால் உண்டாகும் பயனையோ மணிகர்ணிகையில் ஒரு முறை ஸ்நானம் செய்து இந்தஸ்லோகத்தை படிப்பவர். ஸம்ஸாரக்கடலை ஒரு குட்டையைக் கடப்பது போல் கடந்து பிரம்மலோகம் எய்துவர

0 மறுமொழிகள்

Post a Comment

You can contact us for consultation உங்களுக்கு ஆலோசனைகள் தேவைப்பட்டால் எங்களை தொடர்பு கொள்ளவும்.
எங்கள் முகவரி Address
ஜோதிட கலைமாமணி - ஜோதிட தம்பதி உஷா ரங்கன்
27 A (மேல்மாடி) சிவன் மேற்கு ரத வீதி
பாளையம்கோட்டை - 627002
திருநெல்வேலி மாவட்டம்.
தமிழ்நாடு. இந்தியா
Tmt. A. UshaRengan D.Astro.,
Consultant Astrologer,
Swathi Jothidha Aivagam,
27 A, Sivan Koil West Car Street,
Palayamkottai - 627 002
Tirunelveli District.
Tamil Nadu India.
தொலைபேசி: 94434 23897, 94425 86300, 0462 2586300
மின்னஞ்சல்:
tamiljoshier@gmail.com
joshier_urrao@yahoo.com
usharengan@hotmail.com
joshier_usharengan@dataone.in

For Consultation, please visit us or contact us through letter, phone or e mail only. Do not post your questions in the comment.

ஜாதக ஆலோசனை பெற எங்களை நேரில் சந்திக்கலாம். அல்லது கடிதம், தொலைபேசி, மின்னஞ்சலை மூலம் தொடர்பு கொள்ளவும். உங்கள் கேள்விகளை மறுமொழியில் அனுப்ப வேண்டாம் என்று கேட்டு கொள்கிறோம்

தளத்தை செய்தியோடை மூலம் வாசிப்பவர்கள்

வாசகர்கள்

எங்களின் முதன்மை வலைத்தளம். Our Main Web Site

மறுமொழிகள்

விருந்தினர் வருகை

சமீபத்தில் வந்தவர்கள்

இதை படித்தவர்கள் படித்தது

அதிகம் படிக்கப்பட்டவை