தமிழ் ஜோதிடம் ஜாதகம்

ஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், வாஸ்துசாஸ்திரம் மூலம் வருங்காலம் அறிய "ஸ்வாதி ஜோதிட ஆய்வகம்" உங்களை அன்புடன் வரவேற்கிறது.

எழுதியவை அனைத்தும்

 #கார்த்திகை_தீபம்_ஸ்பெஷல்


1196 சார்வரி வருடம் கார்த்திகை மாதம் 14ஆம் நாள் 29 11 2020 ஞாயிற்றுக்கிழமை திருக்கார்த்திகை

தீபத்திருநாளம் கார்த்திகைத் திருநாள் வாழ்த்துக்கள்..

திருக்கார்த்திகை தீபத் திருநாள் 29-11-2020. ஞாயிற்றுக்கிழமை..

ஒவ்வொரு வருடமும், கார்த்திகை மாதத்தில், பரணி நட்சத்திர நாளில்  பகலில் மட்டும் ஒருபொழுது சைவம் உண்டு கார்த்திகையன்று அதிகாலையில் நீராடி இறைவனை வழிபட்டு நீர் மட்டும் அருந்தி இரவு கோயிலுக்குச் சென்று தரிசனம் பெறுவர். மறுநாட்காலையில் காலைக்கடன்களை முடித்து  நீராடி பாரணை அருந்தி விரதத்தை நிறைவு செய்வர். பன்னிரண்டு ஆண்டுகள் இவ்விரதம் இருப்பவர்கள் வேண்டும் வரங்களைப் பெறலாம் என்பது ஐதீகம்.

பௌர்ணமி நிலவு கிழக்கு வானில் தென்படும் வேளையில் வீட்டு வாசலில்  வாழைக்  குற்றி   நாட்டி  வைத்து  அதன் மேல் தீப பந்தம் ஏற்றியும் வீடுகளுக்குள்ளும் வெளியிலும்  சிட்டி விளக்குகளில்  தீபமேற்றி நேர்த்தியாக அலங்கரித்து வீடுகளை தீபங்களால் அழகுபடுத்தி வழிபடுவர்.

கார்த்திகை நட்சத்திரத்தன்று பூரணை கூடுகின்ற மாதம் கார்த்திகை ஆகும்.இதனால் இக்கார்த்திகை நாள் திருக்கார்த்திகை எனப்படுகிறது. கார்த்திகை நட்சத்திரம் ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களைக் கொண்டிருந்த போதிலும் அதிலுள்ள ஏழு நட்சத்திரங்கள் பிரகாசமானவை. இதிலுள்ள மிகப்பிரகாசமான ஆறு நட்சத்திரங்களே கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் (Pleiades) எனப்படுகிறது.  

திருவண்ணாமலையில், காலையில் பரணி தீபம் ஏற்றியவுடன், மாலை மலையில் இத்தீபம் ஏற்றப்படும். இத்தீபம் சிவன் அக்னி பிழம்பாக,நெருப்பு மலையாகநின்றார் என்ற ஐதிகப்படி மலையில் தீபம் ஏற்றப்படுகிறது. இத்தீபம் ஏற்றும் மலையானது 2668 அடி உயரம் கொண்டது. இம்மலை மீது தீபம் ஏற்ற செம்பு,இரும்பு கொப்பரை கொண்டு தயாரிக்கப்பட்ட கொப்பரையில் தீபம் ஏற்றுவர்.

இக்கொப்பரையை 1668-ல் பிரதானிவேங்கடபதி ஐயர் என்பவர் வெண்கல கொப்பரை செய்து கொடுத்தார்.பின்பு 1991-ல் இரும்பினால் உருவாக்கப்பட்ட கொப்பரை தற்போது உள்ளது. இது பக்தர்களின் உபயம் ஆகும். இக்கொப்பரையை மலை மீது வைக்கும் உரிமை பெற்றவர் பர்வத ராஜகுலத்தினர் ஆவர். இத்தீபம் ஏற்ற சுமார் 3000 கிலோ மேற்பட்ட நெய்யும்,10O0 மீட்டர் காட துணியும் கொண்டு ஏற்றப்படுகிறது. 2020 இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தொடர்ந்து கொரோனவைரஸ் தாண்டவமாடியது. எனவே அனைத்து வழிபாடு தலங்களும் சுமார் 7 மாதங்களுக்கு பின்பு தற்போது தான் வழிபாடுகள் பொதுமக்கள் இன்றி நடத்தப்பட்டு வருகிறது. இறையருளால் நவம்பர் 25 பின்பு வரும் தெய்வீகம் ராக்கர்ஸ் முன்புபோல் சிறப்பாக நடைபெற நாம் பிரார்த்திப்போம்

நல்லதோர் நாளில் நாமும் விரதம் அனுஷ்டித்து, கைமேல் பலன் கிடைத்திட ஆர்வத்துடன் பிரார்த்தனைகள் மேற்கொள்வோம்.. இவற்றுள், முக்கியமாக, ஒரு இல்லத்தில் ஐந்து அல்லது நான்கு பேர் அதாவது தாய், தந்தை, மகன் மகள் என இருப்பினும் அன்னை மட்டுமே ஆன்மீக வழிபாடுகளில் சிரத்தை கொள்வதும், ஏனையோர் வழிபாடு பிரார்த்தனைகளில் சிரத்தையின்றி இருப்பதும் காண முடிகிறது.  

அவ்வாறின்றி எந்த நட்சத்திரம், எந்த ராசி மற்றும் லக்னம் என்ற அமைப்பில் ஜாதகத்தில் இருந்தாலும்,  பொதுவாக ஆன்மீக ஈடுபாடுகளைத் தூண்டக்கூடிய குருபகவான், புத பகவான், வளர்பிறை சந்திரபகவான் மற்றும் கேது பகவான் ஆகியோரது ஜாதகத்தில் அமர்வு அடிப்படையில், இன்னாருக்கு பிரார்த்தனையில் அக்கரை இருக்கும், இன்னாருக்கு இருக்காது என அறிதல் உண்டு.  அப்படி அறிந்து கொண்டபின் ஆன்மீக ஈடுபாடு குறைவாகவோ, அறவே இன்றி உள்ளவர்களுக்கும் ஆன்மீக ஈடுபாடு தூண்டவும், அதன் பயனை உணர்ந்து எதிர்காலத்தில் நமக்கு பிரார்த்தனையுடன் கூடிய வழிபாடுகளினால் தோஷங்களாக உள்ளவற்றையும், யோகங்களாக மாற்றிட இயலும் என்ற நம்பிக்கை ஏற்பட வேண்டும். 

மேலும் விசேஷ காரிய சித்தி வழிபாடுகளினால், தொழில், வியாபாரம், கல்வி, ஆரோக்கியம், வெளிநாடு பயணம் ஆகிய அனைத்து வகை உயர்வினையும் ஜாதக அமைப்பில் உள்ள கட்டங்களின் மூலம் எதிர்கால பலனை அறியவும், கெடுதல்களை முன்கூட்டியே அறிந்து கொண்டு, தவிர்ப்பதற்குரிய எளிய வழிபாடுகளையும் மேற்கொள்ள வேண்டும். சுபம்.

ஜோதிட தம்பதி நாராயணஐயர் ரெங்கன் உஷா. கைபேசி. 9443423897

7904779435

04622906300

மேலும் திருக்கார்த்திகை தகவல்கள் அறிவோமா!


மட்டைத் தேங்காயைத் தானமாகக் கொடுங்கள் கார்த்திகை தீபம் அன்று.

காஞ்சி மகாபெரியவர் காலத்தில், காஞ்சிபுரம் திருமடத்தில் கார்த்திகை திருவிழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படும். இரண்டு நாட்கள் முன்னதாகவே மடத்தைச் சுத்தப்படுத்தும் பணி துவங்கி விடும். வாழை மரங்கள், தோரணங்கள் கட்டி அலங்காரம் செய்வார்கள். 


திருக்கார்த்திகையன்று அதிகாலை மகாபெரியவர் ஆத்ம ஸ்நானம் செய்து, பூஜைகள் செய்வார். மடத்திலுள்ள சந்திர மவுலீஸ்வரருக்கு அன்று சிறப்பு பூஜை நடத்தப்படும். பெரிய, சிறிய அகல் விளக்குகள் ஏராளமாக மடத்துக்கு கொண்டு வரப்படும். விளக்கேற்றும் நேரத்துக்கு முன்னதாகவே, அதில் திரியிட்டு இலுப்ப எண்ணெய் ஊற்றி தயார் நிலையில் வைக்கப்படும்.


மாலையில், பெரியவர் ஸ்நானம் செய்வார். பின் ஆத்மபூஜை செய்வார். அதன் பின் ஒரு தீப்பந்தத்தில் "குங்குளயம்' என்னும் தீபம் ஏற்றப்படும். அவ்வாறு ஏற்றும் போது மந்திரங்கள் ஒலிக்கும். சிவ சகஸ்ரநாமம், லிங்காஷ்டகம், சிவ அஷ்டோத்ர பாராயணம் ஆகியவை செய்யப்பட்டவுடன், அவல், நெல் பொரி போன்றவற்றுடன் வெல்லம் கலந்து உருண்டைகளாகச் செய்து சுவாமிக்கு நைவேத்யம் செய்வார்கள். பிறகு தீபங்கள் வரிசையாக ஏற்றப்படும். 


அப்போது ஏராளமான பெண்கள் மடத்திற்கு வருவார்கள். அவர்கள் அனைவருக்கும் மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, மட்டைத் தேங்காய் ஆகியவற்றைப் பலரும் தானமாகக் கொடுக்கும் படி மகாசுவாமிகள் சொல்வார். 


பலரும் அவ்வாறு தானம் செய்வர். அப்போது பக்தர்களிடம் பெரியவர், ""மட்டைத் தேங்காயைத் தானமாகக் கொடுப்பதால் பூர்ண பலன் ஏற்படும். தேக ஆரோக்கியம் நிலைக்கும். நீண்டநாள் கோரிக்கை நிறைவேறும் (இஷ்ட காம்யாத்த பூர்த்தி)'' என்று அறிவுரை சொல்வார். 


அது மட்டுமல்ல, "உங்கள் உடன்பிறந்த சகோதரிகளுக்கு பூ, பழம், வெற்றிலை பாக்கு, மட்டைத் தேங்காய் ஆகியவற்றை கார்த்திகை அன்று அவசியம் கொடுங்கள். இதைக் கொடுத்த சகோதரர்களும், பெற்றுக் கொண்ட சகோதரிகளும் ஆயுள்விருத்தியுடன் திகழ்வர். அவர்களிடையே உறவு பலப்படும். கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் எல்லாரும் மடத்தின் அருகிலுள்ள ஸ்ரீகச்சபேஸ்வரர் கோயிலுக்குச் செல்லுங்கள். அங்கு கொடி மரம் அருகிலுள்ள சூரியனை வணங்குங்கள். அத்துடன், கார்த்திகை பவுர்ணமிஅன்று தோன்றும் சந்திரனையும் வணங்க வேண்டும். இதனால் வாழ்வே பிரகாசிக்கும்,'' என்றும் பெரியவர் சொல்வார்.


கார்த்திகை விளக்கேற்றுவதற்கு மடத்தில் இலுப்ப எண்ணெய் பயன்படுத்துவதற்குரிய காரணத்தையும் பெரியவர் சொல்லியுள்ளார். வீடுகளிலும் கார்த்திகையன்று இலுப்ப எண்ணெய் ஊற்றி விளக்கேற்றுங்கள். காரணம், இந்த எண்ணெய் முருகப்பெருமானுக்கு விருப்பமானது. மேலும், எதிரிகளின் தொல்லை, கடன் தீர்தல், ஆயுள்விருத்தி, சகோதர உறவு வலுப்படுதல் ஆகிய நற்பலன்கள் கிடைக்கும் என்று அருளாசி வழங்குவார். மொத்தத்தில், கார்த்திகை தீபம் என்பதே சகோதர பாசத்தை வளர்க்கும் திருவிழா என்பார் பெரியவர். 


எல்லாருக்கும் கார்த்திகை அப்பம் உள்ளிட்ட பிரசாதம் வழங்கப்படும். ஆனால், பெரியவர் மட்டும் அரை பழம், சிறிது பால் பிட்சையாக ஏற்றுஉண்பார். சகோதர பாசத்தை வளர்க்கும் கார்த்திகைத் திருவிழாவில் மகாபெரியவரின் அருளாசி நம் எல்லாருக்கும் கிடைக்கட்டும்.


ஹர ஹர சங்கர ! ஜெய ஜெய சங்கர !

 1196 சார்வரி வருடம் கார்த்திகை மாதம் பதினோராம் நாள் 26 11 2020 வியாழக்கிழமை அதாவது நாளை  கைசிக_ஏகாதசி 

இந்தபதிவை_படிப்பது 

மகா_பாக்கியம்

புண்ணியம்

தவறாமல்_படிக்கவும்

நான் இந்த கதையை_வருட_தோறும் 

கோவிலில்_கேட்பதும் 

படிப்பதும்_வழக்கம்


கார்த்திகை மாதம் "சுக்லபக்ஷ ஏகாதசி" மற்றும்  "துவாதசி" அன்று இந்த கைசிக மஹாத்மியத்தை படிப்போர்க்கு சுவர்க்கம் நிச்சயம். 


அப்பேர்ப்பட்ட மகத்துவமான "கைசிக ஏகாதசி" வரும்  நாளை வருகிறது....


இரண்டு ஏகாதசியின் சிறப்பு :-


மாதம் தோறும் இருமுறை ஏகாதசி வந்தாலும், இரண்டு ஏகாதசிகளுக்கு மிக்க ஏற்றம். ஒன்று மார்கழி சுக்லபக்ஷ ஏகாதசியான "வைகுண்ட ஏகாதசி". 


மற்றது கார்த்திகை மாதம் சுக்லபக்ஷ ஏகாதசியான "கைசிக ஏகாதசி".  மேலும், கைசிக ஏகாதசி விரதம் இருந்தால், ஓராண்டில் எல்லா ஏகாதசி விரதங்களும் இருந்த பலன் என்றும் சொல்வர்.


 கைசிக ஏகாதசி மஹாத்மியம் :-


கைசிக ஏகாதசி பற்றி வராக புராணத்தில் "ஸ்ரீ வராக மூர்த்தியே" கூறுவதாக உள்ளது. இதற்கு "ஸ்ரீ பராசர பட்டர் வியாக்யானம்" அருளியுள்ளார்.


ஒரு முறை பூமியானது பிரளய ஜலத்தில் மூழ்கி விட, பகவான் வராக உருவம் கொண்டு, பூமிப்பிராட்டியைக் காத்து, அவள் ஆயாசம் தீர தன் மடியில் அமர்த்தினார். 


மகிழ்ந்த பூமித்தாய், இவ்வுலக மக்களின் துயர் தீர, பகவானிடம் ஓர் உபாயம் வேண்டினார். பகவானும் தன் பக்தர்கள் தன் மீது வைத்திருக்கும் பக்தியே உபாயம் எனக் காட்ட, இந்த "கைசிக புராணத்தை பூமித் தாயாருக்கு" உரைத்தார்.


பகவான் கூறியது 


தென் பாரத தேசத்தில், மகேந்திர பர்வதத்தைக் கொண்ட திவ்யதேசம் "திருக்குறுங்குடி". இங்கு தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்த ஒருவன், பூர்வ ஜென்ம பலத்தால் "திருக்குறுங்குடி நம்பியான அழகிய நம்பி" மீது அளவில்லா பக்தியுடன் இருந்தான்.   பத்து ஆண்டுகள், ஒவ்வொரு இரவும் கையில் வீணையுடன், மலை ஏறி, பிரம்ம முகூர்த்தத்தில், பகவான் அழகிய நம்பியை "திருப்பள்ளியெழுச்சி" செய்து வந்தான்.   இந்த புண்ணியவானே "நம்பாடுவான்".


நம் பாடுவான் என்பவன் நல்ல கவிதிறன் கொண்டவன். திருகுறுங்குடி நம்பி பெருமாளை பற்றியே பாடுவான். நம்பி பெருமாளை பாடுவதையே மூச்சாக கொண்டவன். அவன் தாழ்த்த பட்ட குலத்தில் பிறந்ததால் அன்றைய காலக்கட்டத்தில் அவனுக்கு கோயிலுக்கு செல்ல அனுமதியில்லாமல் இருந்தது. ஆனால், அவனுக்கு அதைப் பற்றி துளியும் வருத்தமில்லை. கோயிலின் வாசலில் நின்று அன்றாடம் பெருமாளை போற்றி பாடுவான். வாசல் வரை வந்து நிற்பதற்கு மட்டுமே நம்பாடுவானுக்கு அனுமதி உண்டு.


 கைசிகப்பண் :


கோயிலின் வாசலிலிருந்து பகவானைப் பார்க்க முடிய வில்லை. கொடிமரமும் தடுக்கிறது. என்னால் பெருமாளை பார்க்கமுடியவில்லை என்றாலும், அழகிய நம்பியான பெருமாள் என்னைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். என் பாடல்களை எல்லாம் அவர் கேட்டு கொண்டிருக்கிறார், அதுவே போதும்!!! அதிலே எனக்குப் பரமதிருப்தி! என்ற திருப்தியுடன் வாழ்க்கையை நடத்திவந்தான் நம்பாடுவான்.


"கைசிகம்" என்ற பண்ணில் நம்பியின் புகழைப் பாடி மகிழ்வான். 

நம்பாடுவான் தினமும் விடியற் காலையில் ஸ்நானம் செய்து பிரம்ம முஹுர்த்தத்தில் கோயிலின் வாயிலுக்குச் சென்று பெருமாள் பேரில் பண் இசைத்து அவரது பெருமைகளைப் பாடுவான். 


இவனது பெருமையையும் பிரதிபலன் கருதாத பக்தியையும் "ஸ்ரீ வராஹ பெருமான் பூமிபிராட்டியாரிடம் ஸ்லாகித்து சொல்கிறார் என்றால் அந்த நம் பாடுவான்" எப்பேர்பட்ட பக்தனாக இருந்திருப்பான்.


இந்த மஹாத்மியம் "கைசிக புராணம்" என்ற நாமம் தாங்கி வாராஹ புராணத்தில் உள்ளது. 


பிரம்மராட்சசன் வழிமறித்தல் :


ஒரு கார்த்திகை மாதம் சுக்ல பக்ஷ ஏகாதசி துவாதசி இரவில், ஒரு யாமத்திற்கு மேல் வீணையும், கையுமாய் எம்பெருமானைத் துயிலெழுப்ப மலையேறினான். 


அந்த இரவு நேரத்தில் நடு வழியில், பூர்வத்தில் "சோமசர்மா" என்பவன் அந்தணணாய் இருந்து, யாகம் ஒன்றில் செய்த பெரும் பிழையால் பிரம்மராக்ஷஸனாய் திரிந்தான். 


அந்த பிரம்மராக்ஷஸன் நம்பாடுவானை வழி மறித்து அவனை பிடித்துக் கொள்கிறான். தான் பத்து தினங்கள் பட்டினியாய் அலைவதாயும், அவனே தனக்கு தெய்வம் தந்த உணவு என்றான் நம்பாடுவானிடம்.


பிரம்மராக்ஷஸன் தேகமோ கொழுத்து பெருத்த தேகம். நம்பாடுவானோ மிகவும் இளைத்து மெலிந்த தேகம் உடையவன். அதனால் பிரம்மராக்ஷஸன் பிடியிலிருந்து தப்ப இயலாதவனாக இருந்தான். ஆனால், பயப்படவில்லை. 


பிரம்மராக்ஷஸனை பார்த்து, "நான் ஏகாதசி விரதமிருந்து நம்பெருமாளை பிரம்ம முகூர்த்தத்தில் துயில் எழுப்பித், துதிக்க சென்று கொண்டிருக்கிறேன் என்னை விட்டு விடு என் விரதத்திற்கு பங்கம் செய்து விடாதே என்று கெஞ்சினான்.


ஆனால், பிரம்மராக்ஷஸன் நம்பாடுவானை நோக்கி நான் பத்து நாட்களாக கொலை பட்டினியாக இருக்கிறேன். ஆகவே ,எனக்கு இப்போது தெய்வாதீனமாக கிடைத்த உன்னை நான் விடுவதாக இல்லை. உன்னை கண்டிப்பாக புசிக்கப் போகிறேன் என்று கூறியது. 


கடும் வாக்குவாதம் :


நம்பாடுவானோ தான் இறைவனை திருப்பள்ளியெழுச்சி செல்ல மலையேற வழிவிடுமாறு மன்றாடினான்.  பிரம்மராக்ஷஸனோ காது கொடுத்து கேட்கவே இல்லை.  எவ்வளவு சொல்லியும் கேட்காத பிரம்மராக்ஷஸனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டான் நம்பாடுவான்.   


இதற்கு மேல் என்ன சொன்னாலும், பிரம்மராக்ஷஸன் கேட்கப் போவது இல்லை என்று உண்மைச் சூழ்நிலையான தனது நிலையை உணர்ந்தான். ஆம் தன்னை மரணம் சூழ இருப்பதை புரிந்துக் கொண்டான் நம்பாடுவான். 


உடனே, பிரம்மராக்ஷஸனைப் பார்த்து நடக்க இருப்பதை தவிர்க்க முடியாது. நான் உனக்கு உணவாகப் போவதை பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால் எனது இந்த அற்புதமான விரதத்தை அதாவது கோயிலின் வாசலில் வீணையை மீட்டி எனது நம்பி பெருமாளை பண்ணிசைத்து "திருப்பள்ளியெழுச்சி" பாடி எனது விரதத்தை முடித்து விட்டு வருகிறேன் பிறகு நீ உன் இஷ்டம் போல் என்னை புசித்துக் கொள் என்று வேண்டினான். 


 பிரம்மராக்ஷஸனின் மனம் மாறுதல் :-


அதற்கு பிரம்மராக்ஷஸன் பலமாக சிரித்து, "சண்டாளனே!!! பிறவிக்கு ஏற்ப அதத்யம் செய்கிறாய். இந்த பிரம்மராக்ஷஸன் கையில் மீண்ட எவன் மறுபடியும் திரும்பி வருவான்.??? என்றதோடு மட்டுமல்லாமல்,,, 


 உன்னால் கொடுத்த வார்த்தையை காப்பாற்ற முடியாது. நீ என்னிடமிருந்து தப்ப பொய்சொல்கிறாய்; மேலும் நீ திரும்பி இந்த வழியே வராமல் வேறு வழியில் சென்று தப்பி விடுவாய்"" என்றது.


அதற்கு நம் பாடுவான் பதினெட்டு விதமான பாவங்களைச் சொல்லி, நான் மீண்டும் வராவிடில் இந்தப் பாவங்கள் என்னை வந்தடையும் என்றான் நம்பாடுவான்.   (ஒரு பாவத்தை விட அடுத்த பாவம் கொடியது என்ற வரிசையில் சொல்லி சபதம் இட்டான் நம்பாடுவான்).   


17 வது சபதம் வரை சற்றும் மசியாத பிரம்மராக்ஷஸன் 18 வதாக நம்பாடுவான் செய்த சபதம் "மிகக் கொடிய பாவம்" என்று அறிந்து, நம்பாடுவானை மலையேறிச் செல்ல வழிவிட்டது.


சபதங்கள் :


அப்படி என்ன சபதங்கள் செய்தார் நம்பாடுவான்?????


மலையேறி எம்பெருமான் அழகியநம்பியைத் தரிசித்து நான் திரும்ப வரவில்லை என்றால் : 


1. சத்தியம் தவறியவர்களுக்கு என்ன தண்டனையோ அந்த தண்டனை எனக்கு கிடைக்கட்டும். 


2. பிறன் மனைவியை அடைவதால் ஏற்படும் பாவம் என்னை அடையட்டும்.


3. எவன் ஒருவன் சாப்பிடும் போது தன்னுடன் சாப்பிடுகிறவனுக்கு பந்தி வஞ்சனம் செய்கின்றானோ அந்த மாதிரியான பாவம் என்னை அடையட்டும்.


4. எவன் ஒருவன் பிராமணனுக்கு பூமி தானம் செய்துவிட்டு அதை திரும்பவும் அபஹரிக்கிறானோ அவன் அடையும் பாவத்தை நான் அடைவேன். 


5. எவன் ஒரு பெண்ணை யவன காலத்தில் அவளை அனுபவித்து விட்டு பின்பு ஏதாவது ஒரு தோஷத்தை சொல்லிவிட்டு அவளை கைவிடுவானாகில் அவன் அடையும் பாவத்தை நான் அடைய கடவேன். 


6. எவன் அமாவாசை பௌர்ணமி நாட்களில் தன் பத்தினியுடன் சேருகிரானோ அதனால் என்ன பாவம் வருமோ அந்த மாதிரியான பாவம் என்னை வந்தடையட்டும். 


7. எவன் ஒருவன் பிறருடைய அன்னத்தை நன்றாக புசித்துவிட்டு அவனையே தூஷிக்கின்றானோ அவனது பாவம் என்னை அடையட்டும். 


8. எவன் ஒருவன் பெண்ணை திருமணம் செய்து கொடுப்பதாக வாக்களித்துவிட்டு பிறகு எதோ சாக்கு போக்கு சொல்லிவிட்டு அவனுக்கு கொடுக்காமல் இருக்கிறானோ அவனது பாவத்தை நான் அடைவேன். 


9. எவன் சஷ்டி, அஷ்டமி, சதுர்த்தசி அமாவாசை திதிகளில் ஸ்நானம் பண்ணாமல் புசிக்கிறானோ அவனது பாவத்தை அடைவேன். 


10.ஒரு பொருளை தானமாக கொடுப்பதாகக் கூறி, பின்பு  மறுக்கிறானோ அந்த பாவத்தை நான் அடையக்கடவேன். 


11. எவன் ஒருவன் நண்பனின் மனைவியை அபஹரிக்கின்றானோ அதனால் வரும் பாவத்தை அடையக்கடவேன். 


12.எவன் ஒருவன் குருவின் பத்தினி அல்லது அரசனின் பத்தினியை அபஹரிக்கின்றானோ அதனால் வரும் பாவத்தை அடையக்கடவேன். 


13. எவன் ஒருவன் இரண்டு பெண்களை மணம் செய்து பின் ஒருத்தியை மட்டும் அலட்சியம் செய்வதால் ஏற்படும் பாவம் என்னை அடையட்டும். 


14. எவன் ஒருவன் கதியற்ற தனது பதிவிரதையான பத்தினியை யௌவன வயதில் (வயதான காலத்தில் தனியே) விட்டுவிடுகிறானோ அவன் அடையும் பாவம் என்னை சூழட்டும். 


15. தாகத்துடன் தண்ணீர் குடிக்க வரும் பசுவை குடிக்கவிடாமல் செய்வதால் வரும் "மகா பாவம்" என்னை வந்தடையட்டும். 


16. எவன் பிரம்மஹத்தி தோஷம் செய்கிறானோ, கள்ளை குடிக்கிறானோ, விரதத்திற்கு பங்கம் பண்ணுகிறானோ இப்படிப்பட்ட மஹாபாவிகளின் பாவத்தை அடைய கடவேன். 


17. எவன் ஸர்வவ்யாபியாய் (எங்கும் நிறைந்திருக்கும்) எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ வாசுதேவனை ஆராதனை பண்ணாமல் இதர தேவதைகளை உபாசிக்கிறானோ அவனது பாவத்தை அடைவேன். 


இந்த "17 சபதங்கள்" நம்பாடுவான் சொல்லியும் கூட பிரம்மராக்ஷஸன் அசைந்து கொடுக்கவில்லை. 


18. சர்வ ஜனங்களையும் காப்பவனும், எல்லோர் இதயத்திலும் அந்தர்யாமியாய் இருப்பவனும், எல்லா உயிரினங்களையும் இயக்குபவனும், முப்பத்து முக்கோடி தேவர்களாலும், முனிவர்களாலும் ஆராதிக்கப்படுபவனுமான சர்வேஸ்வரனான அந்த "ஸ்ரீமன் நாராயணனையும்" மற்றவர்களையும் சமமாக பாவிப்பதால் வரும் பாவம் என்னை அடையட்டும். 


இந்த பதினெட்டாவது சபதத்தைக் கேட்டதும் பிரம்மராக்ஷஸன் திகைத்து நின்றது. அது மிகக் கொடிய பாவம் என்று அறிந்து கொண்டது பிரம்மராக்ஷஸன். 


 மலையேற வழி விடுதல் :-


நம்பாடுவான் மேலே சொன்ன சபதங்களைக் கேட்டதும் நம்பாடுவானது அபார ஞானத்தைப் புரிந்து கொண்டது. இவன் சாதாரணமான ஆள் இல்லை என்று உணர்ந்தது.


இவனை விடாவிட்டால் இன்னும் துயரமே வரும் என்று நம்பாடுவானை விடுவித்து சீக்கிரமே விரதத்தை முடித்துவிட்டு வா என்று சந்தேகத்துடன் அனுப்பியது.   பிரம்மராக்ஷஸன் வழிவிடவும் நம்பாடுவான் அழகிய நம்பியைக் காணும் ஆவலில் ஓடோடி மலையேறினான்.


இதோ நம்பியைக் கண்டார் :-


பிரம்மராக்ஷஸனால் விடப்பட்ட நம்பாடுவான் திருக்குறுங்குடி கோவிலை நோக்கி ஓடினான்! நம்பியின் கோயிலுக்கு முன் வந்த நம்பாடுவானின் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வந்தது. 


பெருமாளே! எங்கே என் ஆயுள் உன்னை பாடாமலேயே முடிந்து விடுமோ என்று பயந்து கொண்டிருந்தேன். நல்ல வேளை உன்னைப் பாட வந்து விட்டேன். இதுவே, எனது இறுதி பாடலாக இருக்கும் என்று மனம் நெகிழ்ந்து பண்ணிசைத்து உருக்கமாகப் பாடினான். ஏனெனில், பிரம்மராக்ஷஸன் நம்பாடுவானை உண்டு விட்டால், அவரது உயிர் பிரிந்து விடும் அல்லவா!!!! இறைவனை இனிமேல் காண முடியாது என்று மிகவும் உருக்கமாகப் பண் இசைத்து பாடினார் நம்பாடுவான்.


உள்ளிருந்த "அழகிய நம்பி பெருமாள்" நம்பாடுவானின் குரலிலிருந்த சோகத்தை உணர்ந்தார். எதிரே நோக்கினார். 


ஆம்!!! தான் ஆட்கொள்ளவேண்டிய தனது பக்தனின் திருமுகத்தைத் தானே பார்க்காவிட்டால், பிறகு அவனுடைய பக்திக்குத், தான் அளிக்கும் மதிப்புதான் என்ன???? என்று யோசித்தார். 


எம்மை நம்பாடுவானான அவன் காண இயலாதிருந்தும், அவனை நாம் பார்த்து அருள்புரிவோம் என்று எதிரே பார்த்தார். கொடி மரம் தடுத்தது. 


"விலகி நில் கொடிமரமே என் பக்தன் என்னைக் காணவேண்டும்!!! அதை விட நான் அவனைக் காண வேண்டும் !!!  விலகு" என்று தனது பார்வையைச் சற்றே கொடிமரத்தை நோக்கி பார்வையாலேயே சற்று விலக்கினார்.


எம்பெருமான் அழகியநம்பிக்குத் தான் தன் பக்தர்களின் மேல் எப்பேர்ப்பட்ட அன்பு! கருணை! பாசம் எல்லாம். தன் பக்தன் என்னைக் காணாவிடிலும், நான் அவனைக் கண்டு அவனுக்கு என் தரிசனத்தைக் கொடுப்பேன் என்று பார்வையாலேயே கொடிமரத்தை விலக்குகிறார் எம்பெருமான்!!!! 


கொடிமரம் விலகிய அடுத்த நொடியே ""பளிச்சென்று ஓர் ஒளி உள்ளே இருந்து வெளியே வந்து நம்பாடுவானை ஆரத் தழுவியது. கொடிமரம் விலகிய கோணத்தில் நேர் எதிரே தன் கண் முன்னே, தான் பார்ப்பது நம்பிதானா"" என்று உள்ளம் குதூகலித்தான் நம்பாடுவான். 


 நம்பாடுவான் அடைந்த பேரானந்தம் :-


ஆஹா!!! பெருமாளை நேரில் தரிசிக்கும் பேறு பெற்ற பின் வேறு என்ன பாக்கியம் வேண்டும். அர்ச்சாவதார மூர்த்தியை நேரில் தரிசனம் கண்டாயிற்று. இந்த ஜன்மம் சாபல்யம் அடைந்துவிட்டது. இனி பிரம்ம ராட்சசனுக்கு மகிழ்வுடன் உணவாகலாம். 


நம்பாடுவான் என்ற அந்த அற்புத பக்தன் தொடர்ந்து இறைவனைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. அந்த சில கண தரிசனத்திலே முழு நிறைவடைந்தான். பேராசையற்ற பக்தி. இறைவனை காண முடியாமல் தன் ஆயுள் முடிந்து விடுமோ என்ற ஏக்கத்தில் இருந்தவனுக்கு இந்த தரிசனமே போதுமானதாக இருந்தது.  அதைவிடத் தான் வாக்கு கொடுத்ததால் பெரும் பசியுடன் இருந்த பிரம்மராட்சசனை நோக்கி விரைந்தான். 


இப்படியாக தனது விரதத்தை முடித்துவிட்டு பிரம்மராக்ஷஸனிடம் செல்ல முற்பட்டான். வந்த வேகத்தை விட செல்லும் வேகம் அதிகமாகக் காணப்பட்டது. 


 வராஹமூர்த்தி காட்சி கொடுத்தல் :-


நம்பாடுவான் பிரம்மராக்ஷஸனை நோக்கி வேகமாகச் செல்லும் பொழுது, ஒரு சுந்தர புருஷன் அவன் முன் தோன்றி, "யாரப்பா நீ! எங்கு செல்கிறாய்???.  நீ செல்லும் திசையில் ஒரு பிரம்மராட்க்ஷஸன் இருக்கிறான்! அங்கே போகாதே"" என்று கூறினான். 


நம்பாடுவானும், "சுவாமி அடியேனுக்கு அந்த பிரம்மராட்க்ஷஸனைப் பற்றித் தெரியும்; நான் அவனுக்கு என் விரதத்தை முடித்துவிட்டு வருவதாக வாக்களித்துள்ளேன். ஆகவே அங்கு செல்கிறேன் என்று கூறினான். 


அதற்கு அந்த சுந்தரபுருஷன், நீ நினைப்பது போல் அந்த பிரம்மராக்ஷஸன் நல்லவன் இல்லை. அவன் உன்னை தின்று விடுவான் வேறு வழியில் சென்று விடு என்று சொன்னார்.


நம்பாடுவான் "சுவாமி சத்தியத்தை துறந்து உயிர் வாழ விரும்பவில்லை, ஆகவே என்னைச் செல்ல அனுமதியுங்கள்" என்று வேண்டினான். 


தன் உயிரான பிராணனை விட்டாவது சத்தியத்தைக் காப்பாற்றுவேன் என்று சொன்ன நம்பாடுவானின் வார்த்தைகளை கேட்டுச் சந்தோசம் அடைந்த "சுந்தரபுருஷன்" உனக்கு மங்களம் உண்டாகட்டும் என்று ஆசிர்வதித்துவிட்டு சென்றான். 


அந்த சுந்தர புருஷன் வேறு யாருமில்லை!! எம்பெருமான் பூமிபிராட்டிக்கு உபதேசித்துக் கொண்டிருக்கும் ரூபமான சாக்ஷாத் வராஹ மூர்த்தியே! நம்பாடுவானையும் நம்பாடுவனால் அந்த பிரம்மராட்க்ஷஸனையும் ஒருங்கே கடாட்ஷித்து அருள்புரிய எண்ணினார் வராஹமூர்த்தி... 


 பிரம்மராக்ஷஸன் பேசுவது :-


நம்பாடுவானும் பிரம்மராட்க்ஷஸன் இருப்பிடம் வந்து சேர்ந்தான். இதோ உன் அனுமதியுடன் அழகிய நம்பி பெருமாளை வாயாறப் பாடி நான் புனிதனாகி வந்துள்ளேன். எனது சரீரத்திலுள்ள ரத்த மாமிசங்களை புசித்து உன் பசியைப் போக்கிக் கொள் என்று கூறி நின்றான். 


பசியுடன் மிக பயங்கரமாய் இருந்த பிரம்மராட்க்ஷஸனுக்கு, நம்பாடுவான் வந்த பின்பு பசியே இல்லாமல் இருந்தது. நம்பாடுவானைப் புசிக்க வேண்டும் என்ற எண்ணம் பிரம்மராக்ஷஸனுக்கு வரவில்லை. அதற்குப் பதிலாக மற்றொன்றை நம்பாடுவானிடம் பிரம்மராக்ஷஸன் கேட்டது!!!! ... அது என்ன கேட்டது தெரியுமா?????? 


"ஏ நரனே! நீ நேற்றிரவு சர்வேஸ்வரனான, ஸ்ரீமந்நாராயணரான

அழகியநம்பியை போற்றிப் பாடிய பாட்டின் பலனை எனக்குக் கொடுத்தால் நான்உன்னை விட்டு விடுகிறேன்" என்றது.


அதற்கு நம்பாடுவான் நான் கொடுத்த சத்தியத்தைக் காக்க வேண்டும்... ஆகவே என்னை புசித்துக்கொள்... நான் பாடிய "கைசிகப் பண்" ஆகிய இந்த பாட்டின் பலனைக் கொடுக்க மாட்டேன் என்றான். 


அதற்கு பிரம்மராட்க்ஷஸன் பாட்டின் பாதி பலனையாவது கொடு உன்னை விட்டுவிடுகிறேன் என்று மன்றாடியது. அதற்கும் மசியாத நம்பாடுவான் நான் உனக்கு கொடுத்த வாக்கின் படி வந்து விட்டேன் நீ செய்த ப்ரதிக்ஞை படி என்னைப் புசித்து விடு என்று கூறினான். 


பிரம்மராக்ஷஸனின் பூர்வ ஜென்ம ஞாபகம்  :-


பிரம்மராட்க்ஷஸனும், "அப்பா! ஒரு யாமத்தின் பலனையாவது கொடுத்து என்னை இந்த பிறவியான பிரம்மராட்க்ஷஸன்  ஜன்மத்திலிருந்து காப்பாற்று" என்று மன்றாடியது. 


"நீ பிரம்மராட்க்ஷஸனாகப் பிறக்கக் காரணம் என்ன?" என்று கேட்டான் நம்பாடுவான். 


அப்பொழுது பிரம்மராட்க்ஷஸனுக்குத் தன்னுடைய பூர்வ ஜென்ம ஞாபகம் வந்தது. பூர்வ ஜென்மத்தில் நான் பிராமண குலத்தில் பிறந்து எந்த அனுஷ்டானங்களும் இன்றி திரிந்தேன். 


பண ஆசையால் யாகம் பண்ண எண்ணினேன். அப்பொழுது எனது பாவத்தின் காரணமாய் யாகத்தின் இடையில் மரணமடைந்தேன். இப்பொழுது பிரம்மராட்க்ஷஸனாக அலைந்துக் கொண்டிருக்கிறேன். 


தயை கூர்ந்து என்னைக் காப்பாற்று என்று நம்பாடுவானைச் சரண் அடைந்தது. 


 நம்பாடுவான் உதவுதல் :-


தன்னை அண்டிய அந்த பிரம்மராட்க்ஷஸனிற்கு உதவ முடிவு செய்தான் நம்பாடுவான். 


அதன்படியே, "நேற்றிரவு கைசிகம் என்ற பண்" பாடினேன். அதனால் வரும் பலனை அப்படியே உனக்குக் கொடுக்கின்றேன் அதன் காரணமாய் நீ ராக்ஷச ஜென்மத்திலிருந்து விடுபட்டு மோட்சத்தை அடைவாய் என்று கூறினான் நம்பாடுவான். 


நம்பாடுவானின் வரத்தை பெற்ற பிரம்மராட்க்ஷஸன் ராட்க்ஷஸ ஜென்மத்திலிருந்து விடுபட்டு நல்ல குலத்தில் பிறந்து பகவத் பக்தனாக இருந்து மோட்சத்தை அடைந்தது. 


மகிமைகள் :-


நம்பாடுவானும் நெடுங்காலம் அழகியநம்பி பெருமாளைப் போற்றிப் பாடி, கால முடிவில் திருநாடு (பரமபதம்) அடைந்தான். 


ஸ்ரீரங்கத்தில் அரங்கனை அன்றாடம் ஆராதித்து வந்த "பராசர பட்டர்" என்பவர் இந்த புராணத்தை தெளிவாக விளக்கியதைக் கேட்டு சந்தோசமடைந்த அரங்கன், பராசர பட்டருக்கும் பரமபதத்தைத் தந்து தன்னுடன் சேர்த்துக் கொண்டார். 


ஒவ்வொரு கார்த்திகை மாதம் "சுக்லபக்ஷ ஏகாதசி" அன்று எல்லா வைஷ்ணவ கோயில்களிலும் இந்த மகாத்மியம் இன்றும் வாசிக்கபடுகிறது. 


அப்பேற்பட்ட இந்த "கைசிக மகாத்மியத்தை" கோயிலுக்குச் சென்று பெருமாள் முன்னோ அல்லது வீட்டில் பூஜை அறையில் பெருமாள் முன் சொல்கின்றவனும் அதை கேட்கின்றவர்கள் யாவரும் இந்த லோகத்து ஐஸ்வர்யங்கள் அனைத்தையும் அனுபவித்து பின் வைகுந்தத்தையும் அடைவார்கள் என்று பூமி பிராட்டிக்கு "வராஹ பெருமாளே சொன்ன சத்தியம்" இந்த மஹாத்மியம். 


வராஹமூர்த்தி கூறுவது :-


நம்பாடுவானும் கால முடிவில் "திருநாடு பெற்றான்" என்ற வராஹமூர்த்தி, மேலும் பூமிதேவியிடம் உரைப்பது :-


எவனொருவன் கார்த்திகை சுக்லபட்சத்து துவாதசி அன்று நம் சன்னிதியில் இந்த கைசிக மஹாத்மியத்தை வாசிக்கின்றானோ!!!! அல்லது செவி மடுக்கிறானோ (கேட்கிறானோ)!!! அவன் நமக்குப் பல்லாண்டு பாடிக்கொண்டு ஆத்மானுபாவம் பண்ணிக் கொண்டிருப்பான்!!!!


என்று பூமிதேவி தாயாரிடம் இந்த "கைசிக ஏகாதசி மஹாத்மியம்" பற்றி எடுத்துரைத்தார். பூமிதேவி தாயாரும் பகவான் சொன்னதைக் கேட்டு ஆனந்தமடைந்தார்.   


விசேஷம் :-


பாவங்களை அறிவாளிகள் உணர்ந்து விலக வேண்டும் என்பதே இந்த வராஹ புராணத்தின் உள்ளீடான "கைசிக ஏகாதசி மஹாத்மியம்" என்பதன் சாரமாகும்.


இந்த கைசிக ஏகாதசியன்று எம்பெருமானின் அனைத்து திவ்யதேசங்களிலும், திருக்கோவில்களிலும் விசேஷமாக நடைபெறும். 


 ஸ்ரீரங்கம் கைசிக ஏகாதசி விழா:-


ஸ்ரீரங்கம் கோவிலில்  "கைசிக ஏகாதசி" நடைபெறுகிறது. அதோடு 365 வஸ்திரங்கள் எம்பெருமானுக்கு அன்று இரவு முழுவதும் சாற்றப்படும். 


இரவு 9.30 மணி முதல் 11 மணி வரை வஸ்திரங்கள் சாற்றி, அரையர் சேவையும் நடைபெறும். ஸ்ரீபட்டர் சுவாமிகளால் "கைசிக புராணம்" விடிய விடிய வாசிக்கப்படும்.  மறுநாள் அதிகாலை 5.45 மணிக்கு கற்பூர படியேற்ற சேவை நடைபெறும். இந்த காணக்கிடைக்காத காட்சியை "ஸ்ரீரங்கம்" சென்று தரிசித்திடுங்கள்.


திருக்குறுங்குடி திவ்யதேசத்தில் கைசிக ஏகாதசி சேவிக்கப்படுவதுடன், அன்று இரவு நாடகமாகவும் நடிக்கப்படுகிறது.  திருக்குறுங்குடியில் வருடந்தோறும் இந்த நம்பாடுவானின் "கைசிகப்பண்" மற்றும் வராஹ மூர்த்தி காட்சி கொடுத்தல் போன்றவை மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.


இந்த கைசிக ஏகாதசி மஹாத்மியத்தின் மகிமைகளைப் படிக்கும் அன்பர்கள் அனைவரும் கொடுத்து வைத்தவர்கள் என்று மட்டுமா சொல்ல வேண்டுயம்???? நாம் அனைவரும் "பாக்கியசாலிகள்" "புண்ணியவான்கள்" என்று கூட சொல்லலாம்!.


அறிவாளிகள் தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்களில் இருந்து இனிமேலாவது விலகிக் கொள்ள வேண்டும்.  மறுபடியும் பல பாவங்களைச் செய்யாமல் இருக்க வேண்டும் என்பதே இதன் சாரம்சம். 


இன்று படிக்க இயலாதவர்களும், நாளை கைசிக ஏகாதசி மற்றும் துவாதசி அன்று எம்பெருமானின் சன்னிதியிலோ, வீட்டின் பூஜை அறையிலோ வைத்து பக்தியோடு படித்து, எம்பெருமானின் கருணையைப் பெறுங்கள்.


உங்களுக்கு எம்பெருமானின் பரிபூர்ண அனுக்ரஹம் உண்டாகட்டும்.


இப்பிறவியில் எல்லா கஷ்டங்களும் நீங்கி, மகிழ்ச்சியாகிய சந்தோசத்தை அனுபவித்து, அனைத்து செல்வங்களையும் பெற்று, எம்பெருமானின் கருணையைப் பெற்று ஆனந்த வாழ்வு நம் அனைவரும் வாழ அவர் அருள் நம் அனைவரையும் வழி நடத்தட்டும்.


ஓம் நமோ நாராயணாய நமஹ!!!!!

ஓம் வராஹ மூர்த்தியே நமஹ!!! 


திருக்குறுங்குடி அழகிய நம்பி திருவடிகளே சரணம்!!!!! எம்பெருமானின் திருப்பாதங்களே சரணம்!!! 


ஓம் நமோ நாராயணாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

 1195 சார்வரி வருடம் ஆடி மாதம் 9ம் நாள் 24-07-2020 வெள்ளிகிழமை நாகசதுர்த்தி விரதம் இவ்வாண்டு கொண்டாடும் நாள் ஆகும் ஆனால் அந்நேரம் கோரோனோ தாண்டவமாடிய தான் அநேகருக்கு சரியான முறையில் விரதம் அனுஷ்டிக்க வாய்ப்பில்லாமல் இருந்தது எனவே இன்று நடப்பு 1196 சார்வரி வருடம் கார்த்திகை மாதம் மூன்றாம் நாள் 18 11 2020 புதன்கிழமை சதுர்த்தி திதியில் விரதம் அனுஷ்டிக்கலாம்

இந்நாளில் அந்த விரத மகிமை பற்றி அறிவோமா!

 கருடபஞ்சமிக்கு முன்பு சதுர்த்தி திதி அமையும் நாள் நாக சதுர்த்தி நாளாகும். இதன் வரலாற்று நிகழ்வு அறிவோமா! 

பாற்கடலிருந்து வெளிவந்த ஆலகாலத்தினை சிவபெருமான் உண்ட தினமாக இந்நாள் கருதப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் இந்நாளில் தம்பிட்டு என்னும் உணவுப்பொருளை தயார் செய்து இறைவனுக்குப் படைக்கின்றார்கள்.

அஷ்ட நாகங்களான வாசுகி, ரட்சகன், காளிங்கன், மணிபத்ரன், ஜராவதன், திருதராஷ்டிரன், கார்க்கோடகன், தனஞ்சயன் ஆகியவர்களை வணங்க வேண்டும். நாக தேசத்திற்காக இந்த நாளில் நாக கற்களை வழிபடுதல், புற்றுக்கு பால் ஊற்றுதல் போன்ற சடங்குகளை செய்கின்றனர்.

ராகு கேது தோஷங்களால் திருமணம் நடக்காதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த நாகங்களை வழிபடுகின்றனர். நாகப்பிரதிகளுக்கு புது துணி கட்டி பாலால் அபிஷேகம் செய்கின்றனர். சிலர் அருகிலுள்ள நீர் நிலைகளிலிருந்து நீரெடுத்துவந்து அவைகளுக்கு அபிஷேகம் செய்கின்றார்கள்.

நாக சதுர்த்தி அனுஷ்டித்தல் எப்படி?

ஆடி அல்லது ஆவணி மாதம் வளர்பிறை நான்காம் நாளாகிய சதுர்த்தியிலும் ஐந்தாம் நாளாகிய பஞ்சமியிலும் நாக சதுர்த்தி வருகின்றன.

பகவான், அனந்தன் என்னும் நாகமாக இருந்து பூமியைக் காத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு உதவியாக தட்சகன், வாசுகி, கார்க்கோடகன் முதலான நாகங்களும் பாதாள லோகத்தில் வசிக்கின்றனர்.

கஸ்யபருக்கு கத்ரு என்பவளிடம் தோன்றியவர் நாகர். தாய் சொல்லைக் கேளாததால், நெருப்பில் வீழ்ந்து இறந்து போகும்படி தாயே சபித்து விட்டாள். அந்தச் சாபத்தால் பல சர்ப்பங்கள் நெருப்பில் மாண்டு போயின.

அஸ்தீகர் ஜனமேஜயனது சர்ப்பயாகத்தை நிறுத்தி, சாபத்தை அகற்றினார். அதுவே இந்த பஞ்சமி. அப்பொழுது நாகங்களை வழிபட்டால் நலம் உண்டாகும்.

புத்திரப்பேறு உண்டாக நாக பிரதிஷ்டை செய்யும்படி சாஸ்திரம் கூறுகிறது. அவ்வாறு பிறந்தவர்களுக்கு நாகராஜன், நாகசுவாமி, நாகப்பன், நாகலட்சுமி எனப் பெயர் சூட்டப்படுவதைக் காணலாம்.

ஒரு பெண்ணுக்கு இரண்டு சகோதரர்கள் இருந்தனர். அவர்கள் வயலில் வேலை செய்து கொண்டிருக்கும்போது நாகப்பாம்பு கடித்து இறந்து விட்டனர். அவர்களை உயிர்ப்பித்துத் தரும்படி அந்தப் பெண், நாகராஜனை வேண்டி நோன்பு செய்தாள். அவரது வேண்டுகோளுக்காக அவளது சகோதர்களை நாகராஜன் உயிர்ப்பித்த நிகழ்வினை தொன்மமாக கருதுகிறார்கள். அதுவே நாக சதுர்த்தி. பாம்பு கடித்து இறந்தவருக்கு உயிர்ப்பிச்சை அளிக்கும்படி கருடனை நோக்கிச் செய்த நோன்பு கருட பஞ்சமி. தங்கள் விருப்பம் போல் நாக சதுர்த்தி, நாக பஞ்சமி, கருட பஞ்சமி விரதங்களை மேற்கொள்வார்கள்.

❂ விரதம் எதுவானாலும் சரி அன்றைய தினம், பாம்புப் புற்றில் பால் வார்த்து, புஷ்பங்களைச் சாத்தி, பழம் முதலியவற்றை வைத்து பூஜை செய்வார்கள். புற்று மண்ணை எடுத்து வந்து நெற்றியில் இட்டுக் கொள்வார்கள். குறிப்பாக சகோதரர்களின் நெற்றியில் இடுவார்கள்.

இந்த நாக சதுர்த்தி நாளில் நாகர் கோவில் நாகராஜா கோவில், பரமக்குடி நயினார் கோவில், நாகப்பட்டினம் நாகநாதர் கோவில் மற்றும் கும்பகோணம் நாகநாதர் கோவில் போன்றவற்றில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன

நாகசதுர்த்தி

நாக வழிபாடு என்பது வேத காலத்தில் இருந்தே இருக்கிறது. மனிதரின் ஜாதக அமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்துவது நவகிரகங்கள். இதில் ராகு, கேது கிரகங்கள் நாக வடிவுடையவை. நாக தோஷம் இருந்தால் குழந்தை பாக்கியம் இல்லாமலும், பிறந்த குழந்தைகள் ஊனமுற்றதாகவும், நோயால் அவதிப்படுவதும் குடும்பத்தினர் பிரிந்தும் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருவர். நாக தேவதைகள் துன்பங்களிருந்து மீளவும், நல்ல பலன்களை பெறவும் நாக தேவதைகளை மனம் உருகி வழிபட வேண்டும். நாக தேவதைகளின் அருளால் தோஷங்கள் விலகி நல்ல பலன்கள் பெறலாம் என்பது ஐதீகம். பாம்புகளின் தலைவனாக விளங்கிய ‘தட்சகன்’ என்ற கொடிய நாகத்தால் பரிசட்த் என்ற மன்னன் கடிக்கப்பட்டு இறந்தான்.

தந்தையின் இறப்புக்கு காரணமான பாம்பு இனத்தையே அழிக்க உறுதி செய்து, ‘சர்ப்பயக்ஞம்’என்ற வேள்வியை நடத்தினான். பல பாம்புகள் அவன் நடத்திய யாகத்தில் இருந்த வேள்வித்தீயில் விழுந்து மாண்டன. அஸ்தீகர் என்ற முனிவர் ஜனமேஜயனது யாகத்தை நிறுத்தி நாகர்களுக்கு சாப நிவர்த்தி கொடுத்தார். அவ்வாறு சாபநிவர்த்தி கொடுத்த நாள் நாக சதுர்த்தி தினமாகும். எனவே நாக விரதம் ஆடி மாத சதுர்த்தியில் கொண்டாடும் வழக்கம் தோன்றியது. முதல் முதலில் இந்த விரதத்தை தொடங்குபவர்கள் ஆடி மாதத்தில் நாகசதுர்த்தி விரதத்தை தொடங்க வேண்டும். இந்த நாக சதுர்த்தி விரதத்தால் குழந்தை பாக்கியம் ஏற்படும். குழந்தை பாக்கியம் உள்ளவர்கள் இந்த விரதத்தை கடைப்பிடித்தால் புத்திரர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள்.

நாகர் சிலைக்கு நீரால் அபிஷேகம் செய்வார்கள். பின்னர் பால் அபிஷேகம் செய்வார்கள். பின் மஞ்சள் பூசிக் குங்குமம் வைப்பார்கள். நாக சதுர்த்தி வழிபாட்டைச் செய்தால், ராகு கேது தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். அதில் உள்ள ராகு மற்றும் கேது பகவான்களுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவது மிகுந்த பலனைத் தரும். ஆடி மாதம், வளர்பிறை சதுர்த்தியில் நாகசதுர்த்தியும், மறுநாள் பஞ்சமியில் கருட பஞ்சமியும் கொண்டாடப்படுகின்றது. நாக சதுர்த்தியன்று நாக தேவதைக்குப் பூஜை செய்து, புற்றுக்குப் பால் ஊற்றி, புற்றுமண்ணைப் பிரசாதமாக இட்டுக் கொள்வார்கள். அன்றைய தினம் ஒன்பது நாக தேவதைகளான அனந்தன், வாசுகி, கிஷகாலன், அப்ஜன், மகரி அப்ஜன், கங்குபாலன், கார்க்கோடன், குளிஜன், பத்மன் ஆகியோர்களின் நாமத்தைச் சொல்லிக் கொண்டே புற்றுக்குப் பால் ஊற்றிப் பூஜிப்பது நல்லது. அருகில் உள்ள புற்றுக் கோயிலுக்குச் சென்று, பால் மற்றும் முட்டைகள் வழங்கி வழிபட்டால், சர்ப்ப தோஷங்கள் யாவும் நீங்கும்…

நாக சதுர்த்தி அனுஷ்டிக்கப்படுவதற்கு காரணம்:

ஆடி அல்லது ஆவணி மாதம் வளர்பிறை நான்காம் நாளாகிய சதுர்த்தியிலும் ஐந்தாம் நாளாகிய பஞ்சமியிலும் நாக சதுர்த்தி வருகின்றன.

பகவான், அனந்தன் என்னும் நாகமாக இருந்து பூமியைக் காத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு உதவியாக தட்சகன், வாசுகி, கார்க்கோடகன் முதலான நாகங்களும் பாதாள லோகத்தில் வசிக்கின்றனர்.

கஸ்யபருக்கு கத்ரு என்பவளிடம் தோன்றியவர் நாகர். தாய் சொல்லைக் கேளாததால், நெருப்பில் வீழ்ந்து இறந்து போகும்படி தாயே சபித்து விட்டாள். அந்தச் சாபத்தால் பல சர்ப்பங்கள் நெருப்பில் மாண்டு போயின.

அஸ்தீகர் ஜனமேஜயனது சர்ப்பயாகத்தை நிறுத்தி, சாபத்தை அகற்றினார். அதுவே இந்த பஞ்சமி. அப்பொழுது நாகங்களை வழிபட்டால் நலம் உண்டாகும்.

 புத்திரப்பேறு உண்டாக நாக பிரதிஷ்டை செய்யும்படி சாஸ்திரம் கூறுகிறது. அவ்வாறு பிறந்தவர்களுக்கு நாகராஜன், நாகசுவாமி, நாகப்பன், நாகலட்சுமி எனப் பெயர் சூட்டப்படுவதைக் காணலாம்.

ஒரு பெண்ணுக்கு இரண்டு சகோதரர்கள் இருந்தனர். அவர்கள் வயலில் வேலை செய்து கொண்டிருக்கும்போது நாகப்பாம்பு கடித்து இறந்து விட்டனர். அவர்களை உயிர்ப்பித்துத் தரும்படி அந்தப் பெண், நாகராஜனை வேண்டி நோன்பு செய்தாள். அவரது வேண்டுகோளுக்காக அவளது சகோதர்களை நாகராஜன் உயிர்ப்பித்த நிகழ்வினை தொன்மமாக கருதுகிறார்கள். அதுவே நாக சதுர்த்தி. பாம்பு கடித்து இறந்தவருக்கு உயிர்ப்பிச்சை அளிக்கும்படி கருடனை நோக்கிச் செய்த நோன்பு கருட பஞ்சமி. தங்கள் விருப்பம் போல் நாக சதுர்த்தி, நாக பஞ்சமி, கருட பஞ்சமி விரதங்களை மேற்கொள்வார்கள்.

விரதம் எதுவானாலும் சரி அன்றைய தினம், பாம்புப் புற்றில் பால் வார்த்து, புஷ்பங்களைச் சாத்தி, பழம் முதலியவற்றை வைத்து பூஜை செய்வார்கள். புற்று மண்ணை எடுத்து வந்து நெற்றியில் இட்டுக் கொள்வார்கள். குறிப்பாக சகோதரர்களின் நெற்றியில் இடுவார்கள். 

இந்த நாட்களில் நாகர் வழிபடும் கோவில்களில் மற்றும் அம்மன் கோவில்கள் விநாயகர் கோவில்கள் பல்வேறு கோவில்களில் நாகர் அமைப்பு உள்ள இடத்தில்சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன…

தளத்தை செய்தியோடை மூலம் வாசிப்பவர்கள்

வாசகர்கள்

எங்களின் முதன்மை வலைத்தளம். Our Main Web Site

விருந்தினர் வருகை

சமீபத்தில் வந்தவர்கள்

இதை படித்தவர்கள் படித்தது

அதிகம் படிக்கப்பட்டவை