தமிழ் ஜோதிடம் ஜாதகம்

ஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், வாஸ்துசாஸ்திரம் மூலம் வருங்காலம் அறிய "ஸ்வாதி ஜோதிட ஆய்வகம்" உங்களை அன்புடன் வரவேற்கிறது.

எழுதியவை அனைத்தும்

பூவையும் நாரையும் ஒன்றாக இணைத்து பல பல வடிவங்களில் கண்கவர் பூமாலையாக தொடுத்து சுவாமிக்கு அணிவித்து அதனால் மகிழ்ந்து இறை அருளை பெறுவது போல

அற்புதமான பிதுருஸ்தானம் மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தாமான ஒன்பதாம் இடம்  பற்றியும் அந்த இடத்தில் நன்மை தருவதற்கு பதிலாக தீமை தரும் அமைப்பு இருந்தால் அதனை வெல்லும் ரகசியத்தையும் தெளிவாக குறிப்பிடப் பட்டுள்ளது.

 *வெரி கிரேட் ஸ்மால் சல்யூட்*...

 எல்லோரும் தெரிந்து 

 வேண்டிய 

*குதப காலம்* பற்றிய 

அரிய ஜோதிட ரகசியம்!

ஜனன ஜாதகத்தில் பித்ருஸ்தானம்,தந்தை-

அதிர்ஷ்டம், பொன், பொருள், என்பதற்கான 

9 ம் பாவகத்தை எப்படி 

நல்ல முறையில் பயன்படுத்தி கொள்வது?

ஒரு மனிதன் இந்த பூமியிலே பிறப்பதற்கு காரணம் என்னவென்றால், 

அவன் முற்பிறவியிலே செய்த "பாவமும், புண்ணியமும்" ஆகும். 

அவனின் பாவ, புண்ணியங்களை அனுபவிப்பதற்காகவே இப்பூமிக்கு வருகிறான். 

அதனால் நாம் வாழும் பூமிக்கு "தர்ம, கர்ம" பூமி என்று பெயர்.

ஒரு சிலர் அவர்கள் நினைத்ததை நினைத்தபடியே 

செய்து விடுகிறார்கள். 

ஒரு சிலர் நினைத்ததை திட்டமிட்டு செய்கிறார்கள். 

ஒரு சிலரோ செய்ய நினைத்தவற்றை நினைத்த மாத்திரத்திலேயே 

செய்து விடுகிறார்கள். 

வேறு சிலர் எவ்வளவு திட்டமிட்டாலும், எவ்வளவு ஆவலுடன் செய்தாலும் நினைத்த விஷயத்தை அடைய முடிவதே இல்லை. 

இது ஏன்....? இதற்க்கு "பிறந்த நேரம்தான்" காரணமா..?

நடைமுறையிலே 

சிலர் பேச நாம் கேட்டிருக்கின்றோம். 

அவருக்கென்ன குறை? அவர்பிறந்த நேரம். 

அவர் ராஜாவைப் 

போல் வாழ்ந்து கொண்டிருக்கின்றார், பலவித நன்மைகளை அடைகிறார், 

அவர் நினைத்ததை சாதித்து விடுகிறார். 

ஜனன ஜாதகத்திலே லக்னம் என்று குறிப்பிடபட்டுள்ள ராசியிலிருந்து எண்ணிவரும் 9வது

இடம்தான்(ராசிதான்) 

"உயர்வானதை அடைவது" அதாவது நாம் இந்த உலகத்திற்கு பிறந்து

வந்து நம் ஆசைகளை அடைகின்ற பகுதியை காட்டும் இடமாகும். 

ஒருவரது ஜாதகத்தில் இந்த 9வது இடம்

நல்ல அமைப்புடன் இருந்தால், அவர் அதிர்ஷ்டசாலியாக மாறுகிறார், எண்ணியதையும் அடைந்து விடுகிறார்.

ஒருவரது ஜாதகத்தில் இந்த ஒன்பதாவது இடத்திலே மோசமான கிரகங்கள் அல்லது பாவ கிரகங்களின் பார்வை இவைகளெல்லாம் இருக்கப் பிறந்தவர் தடுமாறுகிறார், போராடுகிறார், 

அந்த இலக்கை அடைவதற்கு அதிகமாக கஷ்டப்படுகிறார். 

இதுதான் "ஜோதிட ரகசியம்" 

இதற்க்கு நாம் என்ன செய்ய வேண்டும்? 

அதாவது, ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும், "குதபகாலம்" என்று கூறுவார்கள்.

குதப காலம் என்றால் என்ன என்பதை விரிவாக தெரிந்து கொள்வோமா?

ஒரு நாளின் பகல் பொழுதை பதினைந்து பகுதிகளாகப் பிரித்துக்கொள்ள வேண்டும். 

அதாவது, காலை சூர்யோதயம் முதல் மாலை சூரியன் மறையும் வரையுள்ள பன்னிரண்டு மணி நேரத்தை பதினைந்து பகுதிகளாக, அதாவது தலா நாற்பத்து எட்டு நிமிஷங்கள் வீதம் (48×15= 720 நிமிஷங்கள்) பிரித்துக் கொள்ள வேண்டும்.

அவ்வாறு பிரிக்கப்பட்ட பதினைந்து பகுதிகளுக்குள் 

எட்டாவது பகுதிக்கு 

குதப காலம் எனப் பெயர். 

அதாவது, காலை சரியாக ஆறு மணிக்கு சூர்யோதயமும் மாலை சரியாக ஆறு மணிக்கு சூர்யாஸ்தமனமும் நிகழ்வதாக வைத்துக் கொண்டால், 

எட்டாவது பகுதியின் 

48 நிமிஷங்களான 336 முதல் 384ஆவது நிமிஷம் வரையுள்ள, அதாவது மதியம் 11.36 மணி முதல் 12.24 மணி வரையுள்ள நேரத்துக்கு குதப காலம் எனப்பெயர்,

இந்த குதப கால  நேரத்தில்தான் "பித்ருக்கள்" நாம் படைக்கும் "அமாவாசை பிண்டத்தை" ஏற்க தயாராக இருக்கிறார்கள்

அதாவது இந்த குதப காலத்தில் (நேரத்தில்) செய்யப்படும் செயல்கள் அனைத்தும், மறைந்த முன்னோர்களுக்கு. பித்ருக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தரும் நேரமாகும்.

ஆகவேதான், நமது சாஸ்திரங்கள் 

அமாவாசை போன்ற நாட்களில் செய்யப்படும் (பித்ரு) தர்ப்பணத்தையும் வருஷா வருஷம் பெற்றோருக்குச் செய்யும் சிராத்தத்தையும் (திதியையும்),அமாவாசைதர்ப்பண நாள் அன்று அல்லது வருஷா வருஷம் முன்னோர்களுக்கு செய்யும் சிரார்த்த நாளன்று காலை முதல் எதுவும் சாப்பிடாமல் விரதம் இருந்து, 

குதபகால நேரத்தில் காலை 11.36 மணி வந்தவுடன் பித்ரு தர்ப்பண/சிரார்த்த காரியங்களைச் செய்ய வேண்டும் என்றும், இதனால் முன்னோர்களின் 

அருளும் புண்ணியமும் அதிகமாகவும் விரைவாகவும் கிடைக்கும் என்றும் கூறுகின்றன.

இந்த குதப் கால 

நேரத்தில் நமது முன்னோர்கள் 

தர்ப்பணம்/சிரார்த்தம் நடக்கும் இடத்திற்கு  காற்று வடிவில் வந்து

தர்ப்பணம்/சிரார்த்தம் செய்யும் ப்ராஹ்மணர்கள் உடலில் புகுந்துகொண்டு தர்ப்பணத்தில்/சிரார்த்தத்தில் தரப்படும் அனைத்தையும் ஏற்றுக் கொள்கிறார்கள் !!

இந்த குதப கால நேரத்திலே, உங்கள் ஊரில் உள்ள "அரச மரங்களைச்" சுற்றி வாருங்கள்.


ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் 'குதபகாலம்" என்று சொல்லப்படுகின்ற இந்த காலக் கட்டத்திலே, நீங்கள் அரச மரத்தைச்சுற்றி வலம் வரும்போது, ஒரு குறிப்பிட்ட அமாவசை நாளிலிருந்து உங்களுடைய ஆசைகள் நிறைவேறத்துவங்கும். 


இதை சுமார் ஒரு வருட காலம் நாம் முயற்சித்துப் பார்க்க வேண்டும்.


அதனால் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள அரிய ஜோதிட ரகசியத்தை நீங்கள் பயன்படுத்தி உங்களின் வறுமை நிலையிலிருந்து,

 செழுமை நிலைக்கு உங்களை உயர்த்தி கொள்ளுங்கள்.

 புத்தம் புது கோடை விடுமுறை 

ஒவ்வொரு பெற்றோரும் தாய் தந்தை என்று இருவராக இருந்தாலும் இரண்டு கண்களும் ஒரே பார்வையை தருவது போல் இருவரின் எண்ணங்களும் தன் குழந்தைகள் மீது அல்லவா இருக்கும் அப்படித்தானே...

பின் இந்த கட்டுரை பலன்கள் அள்ளித் தருமே...

ஆண்டுதோறும் கோடை விடுமுறை வருகிறது சுற்றுலா என்ற பெயரில் வேகாத வெயிலில் கூட்டத்துடன் செல்வது வருவது ஒருபுறம் இருந்தாலும் கோடை விடுமுறையில் குடும்பத்துடன் வீட்டில் எவ்வாறு நம் எதிர்காலத்தை படிப்படியாக முன்னேற்றம் யுக்திகளை கையாளலாம் என்று எண்ணிகையில்....

உங்கள் குழந்தைகளுடன் குறைந்தது இரண்டு முறையாவது உணவு உண்ணுங்கள். 


விவசாயிகளின் முக்கியத்துவம் மற்றும் அவர்களின் உழைப்பு பற்றி அவர்களிடம் சொல்லுங்கள்.  அவர்களிடம் உணவை வீணாக்காதீர்கள் என்று சொல்லுங்கள்.


அவர்கள் சாப்பிட்ட தட்டுகளை அவர்களே கழுவட்டும். இதன் மூலம், குழந்தைகள் உழைப்பின் மதிப்பை புரிந்துகொள்வார்கள்.


அவர்கள் உங்களோடு சமைக்க உதவட்டும். அவர்களுக்காக அவர்களே காய்கறிகள் அல்லது சாலட் தயாரிக்கட்டும்.


மூன்று அண்டை வீடுகளுக்கு கூட்டிச் செல்லுங்கள். அவர்களைப் பற்றி மேலும் அறிய, நெருங்கி பழக...


தாத்தா பாட்டி வீட்டிற்குச் சென்று வாருங்கள். அவர்களின் அன்பும் உணர்ச்சிபூர்வமான ஆதரவும் உங்கள் குழந்தைகளின் நெடிய வாழ்வுக்கு ஒளி காட்டவில்லை.


குடும்பத்திற்காக நீங்கள் எவ்வளவு கடினமாக உழைக்கிறீர்கள் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள அவர்களை உங்கள் பணியிடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்...


உள்ளூர் திருவிழாவையும்  உள்ளூர் சந்தையையும் தவறவிடாதீர்கள்...


சமையலறை தோட்டத்தை உருவாக்க,விதைக்க உங்கள் குழந்தைகளை ஊக்குவிக்க.

உங்கள் குழந்தையின் வளர்ச்சிக்கு மரங்கள் மற்றும் தாவரங்களைப் பற்றி அறிவு பேருதவி செய்யும்.


உங்கள் குழந்தைப் பருவம் மற்றும் உங்கள் குடும்ப வரலாறு பற்றி குழந்தைகளோடு அளவளாவுங்கள்.


உங்கள் குழந்தைகளை வெளியே சென்று விளையாட அனுமதியுங்கள். காயப்படட்டும்,அழுக்காகட்டும்.

எப்போதாவது விழுந்து வலியைத் தாங்கிக் கொள்வது அவர்களுக்கு நல்லது. சோபா மெத்தைகள் போன்ற சொகுசுகள் சோம்பேறியாக்க வல்லவை.


நாய், பூனை, பறவை,மீன் போன்ற எந்த செல்லப் பிராணியையும் அவர்கள் வைத்திருக்கலாமே!


அவர்களுக்கு சில நாட்டுப்புற பாடல்களை பாட இசைக்க உதவுங்கள்...


உங்கள் குழந்தைகளுக்கு வண்ணமயமான படங்களுடன் 

சில கதைப் புத்தகங்களை படிக்கக் கொடுங்கள்.


உங்கள் குழந்தைகளை டிவி, மொபைல் போன்கள், கணினிகள் மற்றும் எலக்ட்ரானிக் கேஜெட்களிலிருந்து இப்போதாவது விலகி இருக்கலாமே!


குழந்தைகளுக்கு சாக்லேட், ஜெல்லி, கிரீம் கேக், சிப்ஸ்,பானங்கள், பேக்கரி பொருட்கள், பஃப்ஸ் மற்றும் சமோசா போன்ற வறுத்த உணவுகள்... வழங்குவதைத் தவிர்க்க!


உங்கள் குழந்தைகளின் கண்களைப் பார்த்து இவர்களைப் போன்ற அற்புதமான பரிசை வழங்கியதற்காக கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்...


ஒரு பெற்றோராக, உங்கள் குழந்தைகளுக்கு உங்கள் நேரத்தைக் கொடுக்க இப்போது இன்னும் முனையுங்கள்...


 அன்புடையீர் வணக்கம் நம்முடைய பாரத நாட்டின் பழம்பெறும் பெருமையை உலகெங்கும் அறிய செய்யும் அற்புதம் புராணங்களும் இதிகாசங்களும் ஆகும் அல்லவா 

அதன் அடிப்படையில் பகவத் கீதையை தமிழில் வெகு நேர்த்தியாக இணையதளவழியில் ஆன்லைன் வகுப்புகளாக இஸ்கான் தமிழ் கீதா மூலம் நாம் பயின்று தேர்ச்சி பெற்று நம்முடைய பாரத வாழ்வின் உன்னதன் நிலையை பெறலாம்

அதற்குரிய லிங்க் கீழே உள்ளது வரும் மார்ச் மாதம் 26 ஆம் தேதி துவங்க உள்ளது தொடர்ச்சியாக 18 நாட்களில் நாம் பகவத் கீதையின் அடிப்படை வகுப்பில் தேர்ச்சி பெறலாம் லிங்கில் சொடுக்கி வகுப்பில் சேர ஆர்வம் உள்ளவர்கள் சேர பணிந்து வேண்டுகிறோம்

*ரெஜிஸ்ட்ரேஷன் லின்க்:*



https://iskcontamilgita.com/registration


   🌈


🌈 *18 நாட்களில் பகவத்கீதை தமிழில்.* - *கட்டணம் இல்லை*


🗓 *துவக்கம்  மார்ச்-26, 2024.*

*செவ்வாய்க்கிழமை*


🤔 *வாழும் கலையை அறிந்து கொள்ளுங்கள்*

🤔 *மனித பிறவியின் நோக்கம் என்ன* ? 

அறிந்துகொள்ள பகவத் கீதையின் சாராம்சம் தமிழில்.



⏰ *வகுப்பு நேரம்:  மதியம் 3 மணி, இரவு 9 மணி*


🌈 உங்களுடைய அனைத்து *சமூக வலைத்தளங்களில்* பகிர்ந்துகொண்டு பகவத் கீதை பற்றிய ஞானம் அனைவரையும் சென்றடையவும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அருளைப் பெற்றிடவும் வேண்டுகிறோம். 

*நன்றி.  ஹரே கிருஷ்ணா.*🙏

 கோயம்புத்தூர் காமாட்சிபுரி ஆதீனம் சாக்த ஸ்ரீ சிவலிங்கேஸ்வர ஸ்வாமிகள் 12-03-2024-ல் பரிபூரணமடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தோம் 

  அன்னார் அண்மையில் டெல்லியில் புதிதாக கட்டப்பட்ட பாராளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து சென்று பிரதமரிடம் செங்கோல் வழங்கி இந்தியாவுக்கே ஆசி வழங்கினார் தன்னுடைய பணி நிறைவுற்றதாக எண்ணி தற்போது இறைவன் திருவடி நிழலை அடைந்தார் சாமிகளின் பணிகளை என்றும் மறக்க முடியாது இந்து சமயத்தில் உள்ள ஜாதி கட்டமைப்புகளை உடைத்து எறியும் வண்ணம் அனைத்து கோயில்களுக்கும் கோவில்களுக்கு சென்று ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக கும்பாபிஷேகங்களை நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது 

🌹💐🙏🙏🙏🌹💐 ஓம் சாந்தி🌹💐

இந்து சமயத்திற்கு ஆதரவாக போராடக்கூடிய துணிச்சல் மிக்கவர் 

வாழ்நாள் முழுமைக்கும் சிவ பக்தி தழைக்க பல்வேறு குடமுழுக்குகளும் ஆலய நிர்மாணங்களும் அமைய துணை நின்றவர்கள்..

 நவக்கிரக கோட்டை கோவிலை புதிதாக நிர்மாணித்து குடமுழுக்கு செய்தார்கள் 

அவர்கள் பரிபூரணமடைந்தது இந்து மதத்திற்கு பேரிழப்பாகும்


2006 இல் கோயம்புத்தூரில் ஒண்டிப்புதூரில் வெகு விமரிசையாக பல்வேறு மடங்கள் மற்றும் அரசு துறை பணி சார்ந்த வல்லுநர்கள் சார்பாக ஸ்ரீ ஸ்ரீ சாக்த  சிவலிங்கேஸ்வர சுவாமி  தலைமையில் அவர் தம் திருக்கரங்களால் 

ஜோதிட கலைமாமணி விருது அடியோங்கள் பெற்றோம்.. அண்ணாரின் சிவப்ராப்த செய்தி அறிந்து மிக துயருற்றோம்.  இறையாய் நிலைத்து அருள் புரிய பிரார்த்திப்போம்...

தமிழ் ஜோதிட தம்பதி JOTHIDA THAMBATHI USHA RENGAN



 திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர்

ஸ்ரீ ஸ்ரீ ராமபிரம்மேய குலசேகர ராமானுஜ ஜீயர் மடம் சார்பாக திரு நட்சத்திர விழாவின்போது வைஷ்ணவ சம்பிரதாய சான்றோர்கள் ஜோதிட சிகாமணிகள் பாகவத கைங்கரிய தரார்கள் மற்றும் மடத்து சேவையாளர்களுக்கு பாராட்டு விருது வழங்கும் விழாவும் சீதா கல்யாண அகண்ட நாமம் ஆகிய மூன்று நாள் உற்சவங்கள் நடைபெற்றது. 16 7 2023 மாலை நடைபெற்ற விழாவில் அடியேனுக்கும்

கால ஞான வித்யாபூஷணம் என்ற விருது







ஜோதிட தம்பதியாகிய எங்களுக்கு வழங்கிய கௌரவித்த மகிழ்ச்சி பதிவு செய்து மகிழ்கிறோம்..

 ஆடி அமாவாசை..

ஆகஸ்ட் 16ம் தேதி காலை ஸ்நானம், தானம் செய்வதற்கான நேரம் தொடங்குகிறது. காலை 5.51 முதல் 9.08 வரை நீராடி தானம் செய்யலாம். அதிகாலை 4.24 முதல் 5.07 வரை பிரம்ம முஹூர்த்தம் இருக்கும். காலை நீராடிவிட்டு, பூணூல் அணிந்து முன்னோர்களை வணங்கி கருப்பு எள், நீர் வைத்து வழிபட வேண்டும். ஆடி அமாவாசை தினத்தில் பிண்ட தானம், அன்னதானம், பஞ்சபலி கர்மா போன்றவை செய்தால் பித்ரு தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். எனவே இந்த பித்ரு தோஷ பரிகாரங்களை ஆடி அமாவாசை அன்று காலை 11.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை செய்ய வேண்டும்.

அமாவாசை அன்று சூரிய உதயத்திற்கு முன்பே கடற்கரை, மகாநதிகள், ஆறுகள், குளங்களில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் தர வேண்டும். பித்ருக்களுக்கு பூஜை செய்து, அந்தணர்களுக்கு பூசணிக்காய், வாழைக்காய், போன்ற காய்கறிகள் தானம் கொடுக்க வேண்டும். பின்னர் வீட்டில் இருக்கும் முன்னோர் படங்களுக்கு துளசி மாலை அணிவித்து, முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை படைத்து வணங்கி அதை காக்கைக்கு வைத்து பிறகே சாப்பிட வேண்டும். அமாவாசை தினத்தன்று ஏழைகளுக்கு ஆடைகளை தானமாக வழங்கலாம்.

 ஆடி அமாவாசை தினம் கோடி சூரிய கிரகணத்திற்கு சமம். எனவே நீர் நிலைகளுக்கு சென்று பித்ரு தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கி, வீட்டிலோ அல்லது சிவன் கோயிலிலோ வழிபாடு செய்தால் பலன் கிடைக்கும். வருடத்தில் வரும் மற்ற அமாவாசை தினங்களில் விரதம் இருந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க முடியாவிட்டாலும், ஆடி அமாவாசை அன்று முன்னோர் வழிபாடு செய்து பித்ரு தர்ப்பணம் கொடுத்தால் பித்ரு தோஷம் நீங்கி முன்னோர்களின் ஆசி நமக்கு கிடைக்கும். நம் இல்லங்களில் சகல நன்மைகளும் நடக்கும்.

 சிவன் கோயிலுக்கு சென்று இதை செய்தால் போதும்.. தீராத நோய்கள் கூட குணமாகும்..

தவிர்க்க வேண்டியவை

வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தால் எப்படி சுத்தம் செய்து வைத்திருப்போமோ, அப்படி அமாவாசை தினத்தில் வீட்டைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

அமாவாசை நாளில் தெரியாமல் கூட வாசலில் கோலம் போடக்கூடாது.

காகத்திற்கு அமாவாசை தினத்தில் கட்டாயம் உணவு கொடுக்க வேண்டும். அது முன்னோர்கள் நேரடியாக வந்து உண்பதற்குச் சமம் எனச் சாஸ்திரம் கூறுகிறது.

ஆடி அமாவாசை யாருக்கு திதி கொடுப்பது எப்படி?

தாயை அல்லது தந்தையை அல்லது இருவரையும் இழந்த ஆண்கள் ஆடி அமாவாசை நாளில் விரதம் இருந்து, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். கணவனை இழந்த மனைவி, மனைவியை இழந்த கணவன் ஆகியோர் ஆடி அமாவாசையில் விரதம் இருக்கலாம்


 வணக்கம் 

வாருங்கள் வாருங்கள்

 வீரவநல்லூருக்கு வாருங்கள்...

 வரவேற்பதில் முதல் மகிழ்ச்சி வெள்ளையடித்து வண்ணங்கள் தீட்டி வீடுகள் தோறும் அழகு மலர செய்து வாசலிலே அற்புதமாய் கோலங்கள் இட்டு கோலங்கள் மூலம் மகிழ்ச்சி வெளிப்படுத்தி உத்திராயண புண்ணிய காலம் துவங்குவதால் ஒவ்வொரு வீட்டிலும் சுப காரியங்கள் மகாலட்சுமி கடாட்சத்துடன் இன்று முதல் நாளும் தொடர்ந்து உள்ளம் மகிழ உறவுகள் கொண்டாட வரவிருக்கும் மகர சங்கராந்தி தேவியை வருக வருக என வரவேற்று பொங்கலோ பொங்கல் என்று சர்க்கரை பொங்கலுக்கு சூரிய பகவான் முதல் குலதெய்வ வழிபாடு வரை மானசீகப் பிரார்த்தனைகளுடன் வணங்கி மகிழ்கிறோம் வாழ்த்தி மகிழ்கிறோம். www.tamil-astrology.in

தளத்தை செய்தியோடை மூலம் வாசிப்பவர்கள்

வாசகர்கள்

எங்களின் முதன்மை வலைத்தளம். Our Main Web Site

விருந்தினர் வருகை

சமீபத்தில் வந்தவர்கள்

இதை படித்தவர்கள் படித்தது

அதிகம் படிக்கப்பட்டவை