பூவையும் நாரையும் ஒன்றாக இணைத்து பல பல வடிவங்களில் கண்கவர் பூமாலையாக தொடுத்து சுவாமிக்கு அணிவித்து அதனால் மகிழ்ந்து இறை அருளை பெறுவது போல
அற்புதமான பிதுருஸ்தானம் மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தாமான ஒன்பதாம் இடம் பற்றியும் அந்த இடத்தில் நன்மை தருவதற்கு பதிலாக தீமை தரும் அமைப்பு இருந்தால் அதனை வெல்லும் ரகசியத்தையும் தெளிவாக குறிப்பிடப் பட்டுள்ளது.
*வெரி கிரேட் ஸ்மால் சல்யூட்*...
எல்லோரும் தெரிந்து
வேண்டிய
*குதப காலம்* பற்றிய
அரிய ஜோதிட ரகசியம்!
ஜனன ஜாதகத்தில் பித்ருஸ்தானம்,தந்தை-
அதிர்ஷ்டம், பொன், பொருள், என்பதற்கான
9 ம் பாவகத்தை எப்படி
நல்ல முறையில் பயன்படுத்தி கொள்வது?
ஒரு மனிதன் இந்த பூமியிலே பிறப்பதற்கு காரணம் என்னவென்றால்,
அவன் முற்பிறவியிலே செய்த "பாவமும், புண்ணியமும்" ஆகும்.
அவனின் பாவ, புண்ணியங்களை அனுபவிப்பதற்காகவே இப்பூமிக்கு வருகிறான்.
அதனால் நாம் வாழும் பூமிக்கு "தர்ம, கர்ம" பூமி என்று பெயர்.
ஒரு சிலர் அவர்கள் நினைத்ததை நினைத்தபடியே
செய்து விடுகிறார்கள்.
ஒரு சிலர் நினைத்ததை திட்டமிட்டு செய்கிறார்கள்.
ஒரு சிலரோ செய்ய நினைத்தவற்றை நினைத்த மாத்திரத்திலேயே
செய்து விடுகிறார்கள்.
வேறு சிலர் எவ்வளவு திட்டமிட்டாலும், எவ்வளவு ஆவலுடன் செய்தாலும் நினைத்த விஷயத்தை அடைய முடிவதே இல்லை.
இது ஏன்....? இதற்க்கு "பிறந்த நேரம்தான்" காரணமா..?
நடைமுறையிலே
சிலர் பேச நாம் கேட்டிருக்கின்றோம்.
அவருக்கென்ன குறை? அவர்பிறந்த நேரம்.
அவர் ராஜாவைப்
போல் வாழ்ந்து கொண்டிருக்கின்றார், பலவித நன்மைகளை அடைகிறார்,
அவர் நினைத்ததை சாதித்து விடுகிறார்.
ஜனன ஜாதகத்திலே லக்னம் என்று குறிப்பிடபட்டுள்ள ராசியிலிருந்து எண்ணிவரும் 9வது
இடம்தான்(ராசிதான்)
"உயர்வானதை அடைவது" அதாவது நாம் இந்த உலகத்திற்கு பிறந்து
வந்து நம் ஆசைகளை அடைகின்ற பகுதியை காட்டும் இடமாகும்.
ஒருவரது ஜாதகத்தில் இந்த 9வது இடம்
நல்ல அமைப்புடன் இருந்தால், அவர் அதிர்ஷ்டசாலியாக மாறுகிறார், எண்ணியதையும் அடைந்து விடுகிறார்.
ஒருவரது ஜாதகத்தில் இந்த ஒன்பதாவது இடத்திலே மோசமான கிரகங்கள் அல்லது பாவ கிரகங்களின் பார்வை இவைகளெல்லாம் இருக்கப் பிறந்தவர் தடுமாறுகிறார், போராடுகிறார்,
அந்த இலக்கை அடைவதற்கு அதிகமாக கஷ்டப்படுகிறார்.
இதுதான் "ஜோதிட ரகசியம்"
இதற்க்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
அதாவது, ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும், "குதபகாலம்" என்று கூறுவார்கள்.
குதப காலம் என்றால் என்ன என்பதை விரிவாக தெரிந்து கொள்வோமா?
ஒரு நாளின் பகல் பொழுதை பதினைந்து பகுதிகளாகப் பிரித்துக்கொள்ள வேண்டும்.
அதாவது, காலை சூர்யோதயம் முதல் மாலை சூரியன் மறையும் வரையுள்ள பன்னிரண்டு மணி நேரத்தை பதினைந்து பகுதிகளாக, அதாவது தலா நாற்பத்து எட்டு நிமிஷங்கள் வீதம் (48×15= 720 நிமிஷங்கள்) பிரித்துக் கொள்ள வேண்டும்.
அவ்வாறு பிரிக்கப்பட்ட பதினைந்து பகுதிகளுக்குள்
எட்டாவது பகுதிக்கு
குதப காலம் எனப் பெயர்.
அதாவது, காலை சரியாக ஆறு மணிக்கு சூர்யோதயமும் மாலை சரியாக ஆறு மணிக்கு சூர்யாஸ்தமனமும் நிகழ்வதாக வைத்துக் கொண்டால்,
எட்டாவது பகுதியின்
48 நிமிஷங்களான 336 முதல் 384ஆவது நிமிஷம் வரையுள்ள, அதாவது மதியம் 11.36 மணி முதல் 12.24 மணி வரையுள்ள நேரத்துக்கு குதப காலம் எனப்பெயர்,
இந்த குதப கால நேரத்தில்தான் "பித்ருக்கள்" நாம் படைக்கும் "அமாவாசை பிண்டத்தை" ஏற்க தயாராக இருக்கிறார்கள்
அதாவது இந்த குதப காலத்தில் (நேரத்தில்) செய்யப்படும் செயல்கள் அனைத்தும், மறைந்த முன்னோர்களுக்கு. பித்ருக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தரும் நேரமாகும்.
ஆகவேதான், நமது சாஸ்திரங்கள்
அமாவாசை போன்ற நாட்களில் செய்யப்படும் (பித்ரு) தர்ப்பணத்தையும் வருஷா வருஷம் பெற்றோருக்குச் செய்யும் சிராத்தத்தையும் (திதியையும்),அமாவாசைதர்ப்பண நாள் அன்று அல்லது வருஷா வருஷம் முன்னோர்களுக்கு செய்யும் சிரார்த்த நாளன்று காலை முதல் எதுவும் சாப்பிடாமல் விரதம் இருந்து,
குதபகால நேரத்தில் காலை 11.36 மணி வந்தவுடன் பித்ரு தர்ப்பண/சிரார்த்த காரியங்களைச் செய்ய வேண்டும் என்றும், இதனால் முன்னோர்களின்
அருளும் புண்ணியமும் அதிகமாகவும் விரைவாகவும் கிடைக்கும் என்றும் கூறுகின்றன.
இந்த குதப் கால
நேரத்தில் நமது முன்னோர்கள்
தர்ப்பணம்/சிரார்த்தம் நடக்கும் இடத்திற்கு காற்று வடிவில் வந்து
தர்ப்பணம்/சிரார்த்தம் செய்யும் ப்ராஹ்மணர்கள் உடலில் புகுந்துகொண்டு தர்ப்பணத்தில்/சிரார்த்தத்தில் தரப்படும் அனைத்தையும் ஏற்றுக் கொள்கிறார்கள் !!
இந்த குதப கால நேரத்திலே, உங்கள் ஊரில் உள்ள "அரச மரங்களைச்" சுற்றி வாருங்கள்.
ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் 'குதபகாலம்" என்று சொல்லப்படுகின்ற இந்த காலக் கட்டத்திலே, நீங்கள் அரச மரத்தைச்சுற்றி வலம் வரும்போது, ஒரு குறிப்பிட்ட அமாவசை நாளிலிருந்து உங்களுடைய ஆசைகள் நிறைவேறத்துவங்கும்.
இதை சுமார் ஒரு வருட காலம் நாம் முயற்சித்துப் பார்க்க வேண்டும்.
அதனால் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள அரிய ஜோதிட ரகசியத்தை நீங்கள் பயன்படுத்தி உங்களின் வறுமை நிலையிலிருந்து,
செழுமை நிலைக்கு உங்களை உயர்த்தி கொள்ளுங்கள்.