தமிழ் ஜோதிடம் ஜாதகம்

ஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், வாஸ்துசாஸ்திரம் மூலம் வருங்காலம் அறிய "ஸ்வாதி ஜோதிட ஆய்வகம்" உங்களை அன்புடன் வரவேற்கிறது.

எழுதியவை அனைத்தும்ஜோதிடம் உண்மையா-பொய்யா எனப்து குறித்த ஒரு கட்டுரையைக் காண்போமா, இது தி நெல்லை டைம்ஸ் 26 செப்டம்பர் 2008 பதிப்பின் கட்டுரை.

தற்காலத்தில் இயந்திரமயமாகிய வாழ்க்கையின் நடுவில், எதிர்காலத்தினைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் தான் ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கை முறையும் அமைந்து விட்டது. எதிர்காலம் குறித்த ஆய்வில் ஜாதகம் மூலம் அறிய முற்பட்டால், அங்கே தான் அதி அற்புதங்கள் நம் கண்களுக்குத் தெளிவாக புலப்படுகிறது. அந்த நேரம் தான் நாம் சிந்திக்கத் துவங்குகிறோம். நாம் யார்? நம் படைப்பின் ரகசியம் என்ன? நம் வாழ்க்கைப் பாதையில் நமக்குக் கிடைத்துள்ள தாய் - தந்தை, சொந்த பந்தங்கள், உறவுகள், நண்பர்கள், பணிச் சூழலில் கிடைக்கின்ற புதிய புதிய அனுபவங்கள், கசப்புணர்வுகள், சேர்க்கும் புண்ணியம் அல்லது பாபங்கள், சேமிப்புக்கள், சொத்து, சுகம், வாகனம், பூமி ஆகிய அனைத்தும் இந்த சாதாரண ஒரு சிறிய டைரி வடிவிலான ஜாதகம் மூலம் எப்படி கண்டுணரப்பெறுகிறது என அறிய வேண்டாமா?

ஒரு காலத்தில் குடிசை வீட்டிற்குள் மண்ணெண்ணெய் விளக்கின் வெளிச்சத்தில் இருந்த நம் முன்னோர்கள், தற்போது ஒரு மணி நேரம் விளக்கில்லாமால் மின் சாதானங்கள் பயன்படுத்தாமல் இருக்க இயலவில்லையே, ஆனால் நம் தாய் தந்தையர் மற்றும் முன்னோர்கள் எப்படி அத்தகு சாதனங்கள் இல்லாமல் காலத்தினை கழித்தார்கள். என்ன வித்தியாசம் இந்த குறுகிய காலத்திற்குள்.. எல்லாம் மிஞ்சிவிட்டது.. இந்த கம்ப்யூட்டர் தொழில் நுட்பம்.. சராசரி ஒரு மனிதனின் ஒரு மூளையால் செய்யக்கூடிய பணிகளில் பல்லாயிரக்கணக்கான பணிகள் ஒரு நொடியில் செய்து கலக்குகின்றனவே.. ஏன் தொலைக்காட்சிப் பெட்டியின் ஒரு சாதாரண ரிமோட் கண்ரோல் ஒரு நொடியில் சானல் மாற்றுவதன் மூலம் எத்தனை வியப்பான மாற்றங்கள்..

மனிதன் கண்டுபிடித்த பொருட்களையும், விஞ்ஞான சாதனங்களையும் வைத்துக் கொண்டு பெருமூச்சு விடும் நாம் ஒரு கணம் யோசித்தால் தெரியும், இவற்றை எல்லாம் படைப்பதற்கு பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாக இத்தகு அமைப்பினை நாம் காணுவோம் என்ற குறிப்புகள் பல்வேறு ஜாதக நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளனவே. அவற்றுள் ஒரு சில முக்கிய அமைப்புக்களைப் பற்றித் தெரிந்து கொண்டு அவ்வாறு நம் ஜாதகத்தில் உள்ளனவா எனத் தெளிந்து, அதன் அடிப்படையில் தான் நாம் நம் தொழில், குடும்பச் சூழல் மற்றும் எதிர்காலம் குறித்த விழிப்புணர்வுகள் அமைத்துள்ளோமா என ஆய்வு செய்து கொள்ளலாமல்லாவா.

அதாவது, ஒவ்வொருவருக்கும் தனது ஆயுட் காலத்தில் ஒரு 12 ஆண்டுகள் வியாழவட்டம் என்னும் காலம் நடைபெறும். அக்கால கட்டத்தில் தோல்வி என்பதே இருக்காது, மாறாக நமது உயர்விற்கு எல்லா வழிகாட்டுதல்களும் தானாக நடைபெறும். எனவே பொருளாதாரம் ஆரோக்கியம், நிம்மதி, திருப்தியான வாழ்க்கை முறை என அடுக்கிக் கொண்டே மகிழ்வுகளை வெளிப்படுத்தக் கூடிய அக்கால கட்டம், நம்மில் பலர் உணராமல், சிறிய சந்தோஷம் மட்டுமே உணர்ந்து, அதற்குள் திருப்தி பெற்று, தொடரும் மகிழ்ச்சியை கூட்டக் கூடிய வியாபார, தொழில், வருவாய் முன்னேற்ங்களை ஆராயாமல், மிகச் சிறிய அளவிலேயே முன்னேற்றத்துடன் தொடர் முயற்சி எடுக்காமல் நிறுத்திக் கொள்கிறார்கள். எனவே அவ்வாறின்றி தொடரும் மகிழ்ச்சி முழுமையையும் பெற்று பயனடைய கீழ்க்காண்பன போன்ற ஜாதக வழி விதிகளை ஆய்வு செய்து முன்னேற வேண்டுகிறோம்.

ஜாதகத்தில் ஒன்பதாம் வீடு மிக முக்கியமானதாகும். லக்னம் மற்றும் ஒன்பதாமிடம் வைத்து, குருவையும் இணைத்து பார்த்தால், அரசு மற்றும் பொது மக்களால் எந்நேரமும் மதிக்கப்படுபவராகவும், மேலும் நான்காம் வீட்டுடன் அத்தகு அமைப்பு பெற்றால் நீண்ட ஆயுளுடனும் வாழ இயலும் என அறியலாம். மேலும் தத்தம் ஜாதக வழியில், ஞாபக சக்தியும், எதையும் தீர்மானத்துடன் செய்யும் துணிவும் உள்ளனவா எனவும் , பலருக்கு உதவி செய்யும் தியாக உள்ளமும், உயர்ந்த பதவிகளில் தன்னை ஈடுபடுத்தி முன்னேறத் துடிப்பவர்களுக்கும் ஜாதக அமைப்பில், லக்ன - சந்திர அமைவிடத்திலிருந்து, கேந்திர 1,4,7,10 மற்றும் 5,9 ஆகிய கேந்திர மூலத் திரிகோண அளவிலும், திக் பலம், திருக் பலம் மற்றும் நைசர்சிக பலம் ஆகியவற்றின் மூலமும் தெளிவாக அறிந்து, வாய்ப்பும், நேரமும் இருக்கும் போதே தன் குடும்ப வாழ்க்கைய முறையினை முன்னேற்றப்படுத்திக் கொள்வீர்களாக. 

மேலும் விவரங்களுக்கு, பாளை மார்க்கெட் ஆயிரத்தம்மன் கோவில் தென்வடல் ரோட்டில், 27 சிவன் மேலரத வீதியில், உள்ள சுவாதி ஜோதிட ஆய்வக ஜோதிடத் தம்பதி திருமதி உஷா ரெங்கன் ஆகியயோரை அணுகலாம். தொலைபேசி: 2586300, 9443423997, 9442586300.

பிரிந்த குடும்பங்கள், உறவுகள், நட்புகள், பாசத்துடனும் அன்புடனும் ஒன்று சேர்க்கவும், பல்லாண்டு பகையை எளிதில் மறக்கவும், என பல சாதனைகளை படைத்து வரும் பாளை மார்க்கெட் ஜோதிடத் தம்பதி உஷா ரெங்கன் அவர்கள் மேலும் இது பற்றி கூறும் போது, சமீப காலமாக உறவுகளிடையே பலர் வாழ்க்கையில் முக்கியமாக கணவன், மனைவி, பெற்றோர் குழந்தைகள், அண்டை அயலார், நெருங்கிய மற்றும் தூரத்து உறவினர் ஆகியோர்களிடையே மனக்கசப்பு ஏற்பட்டு அதன் நிமித்தம் பனிப்போர் தொடர்ந்து இனிக்க - இனிக்க வழிநடக்க வேண்டிய வாழ்க்கையில் இனம் புரியாத கசப்பு உணர்வுகள் ஆரம்பித்து காலப் போக்கில் அது வெறுப்பாகவும், பகையாகவும் மாறி அர்த்தமில்லாத வாழ்க்கையாக்கி, பிறப்பின் ரகசியமாம் வாழ்க்கையை அனுபவிக்கும் நிலைமாறி, ஏனோ பிறந்தோம் - வளர்ந்தோம் - என எதையும் சாதிக்க இயலாமல் ஆகி விடுகிறது.

இம்மாதிரியான மகிழ்ச்சியைச் சீர்குலைக்கும் மனக்கசப்பு எதனால் ஏற்படுகிறது என அறிய முற்பட்டோமானால் அதற்குரிய பல காரணங்களில் முக்கியமானதாக மற்றவரைப் பார்த்து, ‘நாமும் அவரைப்போல் இல்லையே” என்ற ஆதங்கம் தான் முதல் காரணமாகி விடுகிறது. (ஜாதக ரீதியில் குரு, கேது, புதன், சந்திரன் ஆகிய கிரகங்களின் ஆதிபத்திய நிலை)

ஓரே வீட்டில், தம்பியைப் போல், தங்கையைப் போல் நம்மிடம் பெற்றோர் பாசம் காண்பிக்கவில்லையே என்ற தேவையில்லா சந்தேகம் கொள்ளும் மூத்த குழந்தைகளும், அக்காவைப் போல் தனக்கு திருமணம் நடத்தவில்லை, சீர்கள் செய்ய வில்லை ஆகியவை போன்று குறைபடும் மற்ற சகோதரிகளும், தன்னை மற்றவர்கள் மதிக்கவில்லையோ என தனக்குத் தானே குறைபட்டுக் கொள்ளும் தாழ்வு மனப்பான்மைகளும், கணவன் மனைவிகளுக்குள் தேவையற்ற தாம்பத்திய சந்தேகங்களும், குறிப்பாக கல்வியில் ஒன்றாகப் பயின்ற மாணவ மாணவியருக்குள், அவருக்கு நிகராகத் தனக்குப் பணி, திருமண வாய்ப்புகள், இல்லையே என்றும், இந்நாளில் ஏதோ ஒரு நேரத்தில், ஒரு சிறிய சந்தர்ப்பத்தில் கிடைத்த சிறு உதாரணங்களைக் காரண காரியமாகக் காட்டி இப்படித் தான் நடக்கிறது, என்னைத் தான் எவரும் போற்றுவதில்லை, என்னை தாழ்த்தத் தான் உறவுகள், சொந்தங்கள், அக்கம் பக்கத்தார் உள்ளனர் எனத் தனக்குத் தானே நாள்தோறும் தூக்கமில்லாமல், அதையே எண்ணி, நாளடைவில், நரம்புத் தளர்ச்சி ஏற்பட்டு, கடைசியில், சைக்கோஜெனிக் சிம்ப்டம்ப்ஸ் எனப்படும் மனச்சோர்வு நோய்க்கு ஆளாகி, கல்வியில், பணியில், பிறரிடம் பேசி மகிழ்வதில், நட்பு பாராட்டுவதில், மங்கல குதூகல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில், சகஜமாக வெளியில் சென்று அன்றாட வாழ்க்கையில் சராசரியாக கலந்து கொள்வதில் இருந்து விலகி, தனிமையாக தனக்குத் தானே ஒரு சோக வளையத்தை ஏற்படுத்தி கடைசியில் வாழ்க்கையில் வெறுப்பைச் சந்திக்கின்ற அளவில் சோகமாகிவிடும் ஒரு மிகப் பெரிய ஏமாற்றம் என்னும் மாயை நமக்கோ அல்லது நம் உறவுகளுக்கோ ஏற்பட்டு, டிப்ரசன் எனும் மனச்சோர்வு நிலைக்குத் தள்ளப்பட்டு நாம் அதை சந்திக்க வேண்டிய சூழ்நிலை நம்மில் பலருக்கு வந்து விடுகிறது. இதிலிருந்து விடுபட மிகச் சிறந்த வழியாக தியானம் , யோகா இவற்றுடன் மனச்சோர்வை நீக்கும் தகுந்த இசைப் பாடல்களும் நல்ல பலன் தருகின்றன. உதாரணமாக, திருமண வீடுகள் மற்றும் மங்கல நிகழ்ச்சிகளில் அல்லது திருவிழாக்களில் கலந்து கொண்டு வீட்டிற்கு வந்தவுடன் நமக்குக் கிடைக்கின்ற தனி உற்சாகமும் தான். எப்படி? நம் உறவுகளையும், சொந்த பந்தங்களையும் பார்க்கிறோம், அது மட்டுமா.. .. இசையை நுகர்கிறோம்.. .. யாரோ யாருக்கோ செய்கின்ற திருமணம், சடங்கு என்றில்லாமல் நாமும் கலந்து கொண்டோம், நம்மாலும் சர்வ சாதராணமாக ஜன ரஞ்சகமான இடங்களில் தெளிவாக நடந்து கொள்ளமுடிகிறது என்ற தன்னம்பிக்கை கிடைக்கின்றதல்லவா.. இப்படியே சொல்லிக் கொண்டே செல்லலாம். மொத்தத்தில் நமக்கு வேண்டிய மூல மந்திரம் “ மனோதிடமும் முகமலர்ச்சியும்” இருந்து விட்டால் எல்லோரும் இந்நாட்டில் உயர்வுதனைப் பெற்றிடலாம். ஜாதக ரீதியில் வரும் பங்குனி உத்திரத்தன்று குல தெய்வமாம் சாஸ்தாவை வழிபடுதலாலும் இத்தகு மனோ பலமும், முகமலர்ச்சியும் நாம் அடைய முடியம் என்பது சான்றோர்களின் நம்பிக்கை. சுபம்.
மேலும் விவரமறிய: 9442586300

12 - 09 - 2008 முதல் 18 - 09 - 2008 முடிய

கணிதம்: ஜோதிட கலைமாமணி ஜோதிட தம்பதி உஷா ரெங்கன், பாளை.

அருங்கலைகள் அறுபத்து நான்கில் ஜோதிடக் கலை ஓர் அற்புதக் கலை. தி நெல்லை டைம்ஸ் அக்கலையை தனக்கே உரிய பாணியில் அனைத்து வகை மக்களைக் கவரும் வகையில் வெகு அற்புதமாய் அலசி ஆராய்ந்து அளிக்கவுள்ள, ஆரோக்கிய வழி காட்டும் வார ராசி பலன்கள், ராசி பலன்கள் வரலாற்றில் ஓர் புரட்சியையும், ஒரு அறிய விழிப்பையும் ஏற்படுத்தும் என்பதில் ஒவ்வொருவரும் நம்பிக்கை கொள்ளும் வகையில் வெகுவாய் ஆர்வத்துடன் கணித்துள்ளோம். பலனறிந்து பயன் பெற்றிடுக,

மேஷம்: துணிச்சல் மிகுந்த வாரம். உடல் எடை சற்றே கூடும். ஆகாரங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். வயது 40க்கு மேல் உள்ளவர்களுக்கு, இலேசான தலை சுற்றல் இருக்கும். பித்தம் தரும் வகையில் இரவில் முழிப்பதைத் தவிர்க்கவும். உணவில் எண்ணெய் குறைக்க நன்று. கழுத்து வலி கண்டால் கரு வேலம் பட்டைத் தைலம் நான்கு வேளை தடவ குணமாகும். மாணவர்கள் அரையாண்டுத் தேர்விற்கு அதிகாலையில் எழுந்து படிக்க நன்று.

ரிஷபம்: கால் வலி சற்று கண்டு பின் சரியாகும். அதிகாலையில் சதைப்பிடிப்பு வருமாயின் பிண்டத் தைலம் தடவி வெந்நீர் ஒத்தடம் நன்று. பெண் குழந்தைகளுக்கு, சிறு வயிற்று வலி வந்து பின் குணமாகும். உடல் நன்றாக இருப்பினும் இந்த வாரம் மனதில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் நிறைவேறாததனால், சிறு சிறு கவலைகளும், கண்ணீர் வடிக்கும் நிகழ்வுகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வயது 45 ஐ தாண்டியவர்கள் காலை வாக்கிங் பிராக்டீஸ் நேரத்தை மேலும் சிறிதளவு கூட்டிக் கொள்ள உத்தமம்.

மிதுனம்: வயது 45க்கு மேல் உள்ளவர்கள் ஏதேனும் ஒரு மெடிக்கல் இன்சூரன்ஸ் பாலிஸி எடுக்க நல்லது. அரசு ஊழியர்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி உறுப்பினர் அடடையைப் பெற்று பாதுகாப்பாக வைத்துக் கொள்ள உத்தமம். ஏனெனில் அடுத்த இரு தினங்களில் நான்காமிடத்தில் உள்ள கிரகக் கூட்டு நிமித்தம் உஷ்ணம் சார்ந்த ஓர் பிரச்சனை சந்திக்க நேரலாம். அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். நீர் கடுப்பு அல்லது கல்லடைப்பு போன்று குணங்கள் இருப்பின் நீர் முள்ளி குடிநீர் மற்றும், கண்ணுப்பிள்ளை செடியின் பாகங்கள் வேகவைத்த குடிநீர் அருந்த உத்தமம்.

கடகம்: தனக்கு உடல்நிலை மன நிலை சிறப்பாக உள்ளதாக கருத வேண்டாம். சந்திர அஷ்டம தினங்கள் முதல் மூன்று நாட்கள் உள்ளது. வீட்டில் பிறர் ஒருவருக்கு வருகின்ற காய்ச்சல் அல்லது கண்ணீர் வடிதல் போன்ற குணங்கள் காணப்படலாம். ஒரு முறை இஞ்சி சாறு தேனுடன் கலந்து இந்த வாரம் அருந்த உத்தமம். அதன் காரணமாக வயிற்று உப்பிசம் மற்றும் தேவையல்லாத தொந்தியைக் குறைக்க தற்போதே நடவடிக்கை மேற்கொண்டு, ஆறு மாதத்தில் மாற்றம் காணலாம். ஒபிசிடி என்னும் தேவையற்ற வயிற்றுச் சதையைக் குறைக்கும் வழியைப் பெண்கள் யோகா மூலம் கடைபிடிக்க உத்தமம்

சிம்மம்: சூப்பர் வாரம் கழிந்து சுமார் வாரம். ஆவணி மாதம் !ஞாயிற்றுக் கிழமை என்பதால், அசைவ உணவு தவிர்த்து, அன்று எளிமையான உணவுகளுடன், மாலையில் சிவன் கோவில் தரிசனம் மேற்கொண்டால், எத்தகைய விதத்தில் தேர்வு பயத்தில் உள்ள மாணவ- மாணவியர்களும் தக்க நம்பிக்கை கொள்வர். அரசியல் வாதிகள் தனது எதிர்காலத்தை நிர்ணயிக்க தக்க தருணம் என அறிந்தால், அத்தகு உயர்விற்கு உடல் நலமும் தேவை என அறிந்து தக்க உணவு வகைகைளை மேற் கொள்ள உத்தமம்.

கன்னி: நான்காமிடத்தில் உள்ள குரு நாற்திசையும் புகழ் பரப்பு என்பதில் ஐயமி;லலை. ஆரோக்கியம் கூட நல்ல முன்னேற்றம் தான். ஆனால் ஏழரைச் சனி தன் பங்குக்கு, ஒரே ஒரு முறை அரை நாளுக்கு தலைவலி கொடுத்து விட்டுத் தான் செல்லும். வயது 50க்கு மேல் உள்ளவர்களுக்கு, தனிப்பட்ட குறிப்பு என்ன வென்றால், இரத்த சிவப்பணுக்கள் சராசரி அளவிற்கு உள்ளவனவா என் அறிந்து கொள்ளவதுடன், பழைய முறையில் உள்ளவாறு அடிக்கடி வெற்றிலை; போடுதல் மற்றும் இரவில் கண் விழத்தல் குறைக்க உத்தமம்;. பாசிப்பயறு வாரம் இருமுறை உணவில் சேர்த்தால் நினைவாற்றல் கூடும். பள்ளிக் குழந்தைகளின் தேர்வுக்கு இது நல்ல பலன் தரும்

துலாம்: தங்கம் வாங்கிய சந்தோஷம் இந்த வாரம் ஒரு சிலருக்கு இருக்கலாம். ஆனால் சந்தோஷம் வரும் பலருக்கு திடீரென கால்களில் சுளுக்கு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ராசிநாதன் சுக்கிரன் நிலையைப் பார்த்தால் பணம் கரையும் வாரம் என்று சொல்லலாம். எனவே அடுத்த வாரத்துவக்கம் வரை மனதளவில் தனக்குத் தானே தைர்யத்தை கூட்டிக் கொள்ள உத்ததமம். 18ம் தேதி சங்கடஹர சதுர்த்தி விநாயகப் பெருமானை வழிபாடு மேற்கொள்ள உத்தமம்.

விருச்சிகம்: செவ்வாயின் தன்மை இந்த வாரம் நன்மையாக உள்ளது. உடல்நிலையில் முன்னேற்றம் காணும். விருச்சிக ராசி மகளிர் மகப்பேறு எனில் சிறப்பாக சுகப்பிரசவம் காணுவர். விக்கல் ஒரு சிலருக்கு பிரச்சனையாகும் அளவிற்கு அடிக்கடி தோன்றலாம். மயிலிறகாதி சூரணம் நல்ல பலன் தரும். வாக்கில் குரு உள்ளதால், பெற்றோர்களின் வாழ்த்தும் குரு வின் தரிசனமும் கிடைக்கும் வாய்ப்பைப் பெருக்கிக் கொள்ள நல்லது.

தனுசு: சென்;ற வாரப் பயணக் களைப்பு உடல் அசதி மட்டுமல்ல, ஒரு சில அல்ர்ஜி ஒரு சிலருக்கு ஏற்படலாம். சளி சம்பந்தமான அலர்ஜி எனில் முதலில் கஸ்தூரி மாத்திரை அல்லது தரளி;சாதி வடகம் பயன்படுத்த நல்லது. ஈசினோபிலைக் குறைக்கும் சுண்டவற்றல் ஒரு உணவில் சிறிதளவு ஒரு வாரத்திற்கு சேர்க்க நல்ல பலன் கிடைக்கும். தன்னிலும் வயதில் குறைந்த தம்பி தங்கைகளுக்கு தேர்வுக்குரிய எழுது பொருட்களை வழங்கி மகிழ்ச்சி கொள்ள நல்லது. தன்னை நாடி வீட்டிற்கு வரும் பெரியோர்களுக்கு உணவளித்து உபசரித்தால் அதன் மூலம் பெரியதொரு ஆலோசனையும் தன் குடும்பத்திற்கு மேனமையும் எதிர்பார்க்கலாம்.

மகரம்: கால் வலி என்று கதறுகின்ற வயதான மகர ராசி அன்பர்களுக்கு, தான்வந்தர குழம்பும், காயத்திருமேனி தைலமும் தான் மருந்தாகும். குழந்தைகள் மகர ராசி எனில் காலையில் எழுந்து கல்வி பயில இந்த வாரம் மிகச் சிறந்தது. கடந்த காலாண்டுகாலம் பயின்ற கல்விக்குரிய தேர்வு வருகிறது என்பதால் உற்சாகம் கூடும். மிதிவண்டியில் பிரயாணம் செய்யும் மகர ராசிக்காரர்கள் பொறுப்பாகச் சென்று வர நல்லது.

கும்பம்: சோம்பல் குணம் கூடிக் கொண்டே செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நாளை நாளை என அனைத்தையுமே தள்ளிப் போட்டு விட்டு, செலவுகள் மற்றும் உணவுகளை விரும்பி உண்ணும் செலவுகள் மட்டும் உடனுக்குடன் மேற்கொள்ளும் படியாக ஒரு சிலருக்கு பணம் காலியாகலாம். கவலை வேண்டாம். இந்த வாரத்தில், ஒரு புதிய உத்தரவு மூலம் சிறப்பான எதிர்காலம் கிடைக்கும் என்ற மகிழ்ச்சி கிடைக்கும். தினமும் காலையில் வாக்கிங் பயிற்சி நல்லது.

மீனம்: நண்பர்களால் மகிழ்ச்சி தான் என்றிருந்தது மாறி வருத்தம் வரும் வாய்ப்பு உள்ளது. வாயை அடக்கிக் கொள்வது நல்லது. பார்க்கும் பணியில் வந்துள்ள குழப்பத்தால், தூக்கம் கெட்டு அவஸ்தைப் பட்டால், இரவில் தூங்கும் முன்பாக ஒரு கால் மணி நேரம் நன்றாக தியானம் செய்து விட்டு, இளம் சூட்டுடன் கூடிய நீரில் தேன் கலந்து உண்பது நல்லது. உடல், நடை சோர்வு காணப்பட்டால் சியவனப்பிரசா லேகியம் பயன்படுத்தலாம். வரும் வாரத்தில் ஒரு மகிழ்ச்சி காத்திருக்கிறது.

குறிப்பு: சித்த வைத்திய குறிப்புக்களை ஜாதக பலனுடன் இணைத்துள்ள இந்த புதுமைக்கு தங்களின் வரவேற்பு மற்றும் ஆலோசனைகள் குறித்து தெரிவிக்க வேண்டுகிறோம். அக்கருத்துக்களின் அடிப்படையில் வரும் வாரங்களில், மேம்பட்ட பலன் தரத்தக்க வகையில் கருத்துப் பெட்டமாக இப்பகுதி  அமைத்துத் தர உதவிட வேண்டுகிறோம். தொடர்புக்கு: சித்த மருத்துவம் இறுதி ஆண்டு மாணவி: ரெ. உதயகங்கா பி.எஸ்.எம்.எஸ் சுவாதி சித்த மருத்துவ ஜோதிட ஆலோசனைக் குழு,
27 சிவன் மேலரத வீதி, பாளை: 9442586300, 2586300 சுபம்.

தளத்தை செய்தியோடை மூலம் வாசிப்பவர்கள்

வாசகர்கள்

எங்களின் முதன்மை வலைத்தளம். Our Main Web Site

விருந்தினர் வருகை

சமீபத்தில் வந்தவர்கள்

இதை படித்தவர்கள் படித்தது

அதிகம் படிக்கப்பட்டவை