தமிழ் ஜோதிடம் ஜாதகம்

ஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், வாஸ்துசாஸ்திரம் மூலம் வருங்காலம் அறிய "ஸ்வாதி ஜோதிட ஆய்வகம்" உங்களை அன்புடன் வரவேற்கிறது.

எழுதியவை அனைத்தும்

அன்புடையீர்,
வணக்கம்.
இது கலிகாலம்.. இப்படித் தான் பொய்யும் புரட்டும் நிரம்ப இருக்கும்.. என்று ஒருவர்க்கொருவர் அநீதிகளை நியாப்படுத்தும் காலமாக மாறிவருகின்ற இந்த காலத்தே, நாமும், நம்மைச் சார்ந்த குடும்பம் மற்றும் குழந்தைகளும் 
எப்படி இருப்பது நல்லது என்று நம்மைச் சார்ந்த விவரங்களை நாம் நன்றாக
மெருகேற்றி சிந்தனையில், பதியவைத்துக் கொள்வது தான் சிறந்ததாகக்
கருத முடிகிறது.
அந்த வகையில் வளமான வாழ்க்கைக்கு வளமூட்டும் விந்தைகளாக இனி
ஒவ்வொரு வாரமும், முடிந்த அளவு வார இறுதி நாட்களில் அனுபவங்களை
யும், அந்தக் காலம், இந்தக்காலம் எதிர்காலம் என்று எந்தக் காலத்திற்கும்
பொருந்துவதான விவரங்களை நாம் அலசி ஆராய்ந்து, குடும்பம், கணவன்,
மனைவி, குழந்தைகள் - நமக்குக் கிடைத்துள்ள புதிய உறவுகள் மருமகன்,
மருமகள், பேரன் பேத்தி மற்றும் மிக நெருக்கமான உறவுகளின் மனம்
சார்ந்த கருத்துக்களை நாம் பதிவு செய்து,
எதிர்காலத்தை வளமாக்க வழிவகுப்போமாக..

அன்பு தரும் அருமைச் சிந்தனைகள்
1.
திருமணமென்றாகி விட்டது. குழந்தைகள் கிடைத்து விட்டது.  இனி நமது சிந்தனை என்  கணவர்  அல்லது என் மனைவி - குழந்தைகள் அவர்தம் 
எதிர்காலம் சிறக்க நாம் எப்படியெல்லாம் நாம் மனதை வளப்படுத்தலாம்
எப்படியெல்லாம் மனதை விஷ அலைகளிலிருந்து தப்பாமல், காக்கலாம என்ற சிந்தனைகள் வளர்த்துக் கொள்வது தான் மிகச் சிறந்த வழி யென்று
ஆன்றோர்களின் அனுபவங்கள் நமக்கு உணர்த்துகின்றன.
அந்த வகையில் தொடரும் சிந்தனைகளாக...

இந்த வகையில் தான் நமது சிந்தனைகள் சிறகடித்துப் பறந்து, நமக்கென என்னென்ன, வாழ்க்கை விதிமுறைகள் உள்ளன.. அவைகளை எப்படி அறிந்து கொள்வது என தீர்க்கமான தம்பதியர் சிந்திக்கத் தொடங்க வேண்டும்.

வாழ்க்கையில் நமக்கு மிகமுக்கியமான அர்த்தங்கள் பல நேரம் புரிவதில்லை. உடன் பணியாற்றும், பழகுகின்ற நண்பர்கள், சொந்த பந்தங்கள் பலர் வீடு வாங்குகின்றனர்.. பலர் நிலம் வாங்குகின்றனர்... ஒரு சிலர் தங்க நகைகளாக வாங்கி குவிக்கின்றனர்.. நமக்கு பணமா இல்லை... வருகிறது.. ஆனால் நாம் ஏன் அந்த வழியில் முதலீடு செய்ய இயலாமல் உள்ளோம்.. என்ற சிந்தனை அடிக்கடி வந்து அந்த சிந்தனைகளே கவலைகளாக மாறி மனதை இன்னலுக்காக்கி, வாழ்க்கையில் புரியாத பல சோகங்களை விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை பலரது வாழ்க்கையில் நடக்கத் தான் செய்கின்றன.  நல்ல திடகாத்திரமான திரேகம், தெளிவான சிந்தனை, பிறரைப் போற்றும் பண்பு என எல்லாவற்றிலும் முழுமைபெருகின்ற ஒருவர் தான் திருப்தி அடையத்தக்கவாறு, மனைகள், வீடுகள், நிலபுலன்கள், வாகனங்கள் மற்றும இத்தியாதி இத்தியாதிகள் வாங்கிக் குவிக்க இயலவில்லேயே.. அனைவரும் கடன் வாங்கியாவது வாங்கிக் குவிக்கின்றனரே.. என பலநேரம் மனம் அசை போடுவது உண்டு தானே..
இது போன்ற விவரங்களுக்கு, நாம் முதலில் நமது பிறந்த நேரம் பிறந்த நாள் பிறந்த இடம் ஆகியவை துல்லியமாக அறிந்து கொண்டு, உரிய ஜாதகம் பெற வேண்டும்.
அந்த ஜாதக அடிப்படையில், பன்னிரண்டு பாவங்களால், அறிய வேண்டுவனவாகிய, உரிய,  கோள், பாவம், காரகக்கோள், ஆகியவை ஆட்சி, உச்சம், கேந்திரம், திரிகோணம்,  பெற்று இருந்தும். நற்கோள் சேர்க்கை பெற்றும், பார்த்தாலும் நற்பலன்கள் உண்டாகும்.   இப்பாவத்து அதிபதியும், காரகக்கோளும், இணைந்து மேற்படி, இலக்கினத்தில் இருந்தாலும், இணைந்து அப்பாவத்திலேயே இருந்தாலும் நற்பலன்கள் உண்டு. ஆனால், நற்பலனுக்கு நேர் மாறாக, விதி வசப்படி, கெடுபலன்களையே அனுபவிக்க வேண்டும் என்றிருந்தால், அந்த உரிய பாவத்திற்குரிய கோள், மற்றும் பாவம், காரகக்கோள் ஆகியவை, பகை, நீசம், மூடம் பெற்றாலம், 6-8-12 களில் நின்றாலும், தீய கோள்கள் சேர்ந்தாலும், பார்த்தாலும், தீய பலன்கள் என்றறிக.
தொடரும்.....

தளத்தை செய்தியோடை மூலம் வாசிப்பவர்கள்

வாசகர்கள்

எங்களின் முதன்மை வலைத்தளம். Our Main Web Site

விருந்தினர் வருகை

சமீபத்தில் வந்தவர்கள்

இதை படித்தவர்கள் படித்தது

அதிகம் படிக்கப்பட்டவை