தமிழ் ஜோதிடம் ஜாதகம்

ஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், வாஸ்துசாஸ்திரம் மூலம் வருங்காலம் அறிய "ஸ்வாதி ஜோதிட ஆய்வகம்" உங்களை அன்புடன் வரவேற்கிறது.

எழுதியவை அனைத்தும்

 மகாலட்சுமி பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறாள். அந்த ஒவ்வொரு பெயருக்கும் ஒரு அர்த்தம் உள்ளது. அதன் விவரம் வருமாறு:-


ஹரிணி:பசுமையான மேனி அழகைப் பெற்றவள்.


சூர்யா:கதிரவனுக்கு நிகரான ஒளிமயமானவள்.


ஹிரண்மயி:பொன்னி.


ஈஸ்வரி:எல்லா உயிரிலும் உறைபவள்.


ஹிரண்ச வர்ணா:பொன்னிற மேனியாள்.


சந்திரா:நிலவுக்கு நிகரான முகமுடையாள்.


அனபகா முனிம்:நிலை தவறாதவள்.


ஆர்த்திரா: நீரில் தோன்றியவள்.


பத்மஸ்திதா:தாமரையில் வாசம் செய்பவள்.


பத்ம வர்ணா: தாமரை வர்ணத்தாள்.


ஆதித்ய வர்ணா:சூரியகாந்தி உடையவள்.


வருஷோபில்வ: கூவளத்தில் தோன்றியவள்.


கரிஷிணி:பெருகும் பசுச்செல்வமுடையவள்.


புஷ்ஷிணி:யானைகளால்வணங்கப்படுகிறவள்.


பிங்கள: செம்மை நிறம் கொண்டவள்.


யக்கரிணி: தர்ம தேவதை


===16 வகை லட்சுமி===


1. ஸ்ரீதனலட்சுமி:-நாம் எல்லா உயிர்களிடத்திலும் அன்புடன் இருக்க வேண்டும், போதும் என்ற மனதோடு நேர்மையுடன் வாழ்ந்தால் தனலட்சுமியின் அருளை பரிபூரணமாகப் பெறலாம்.


2. ஸ்ரீவித்யாலட்சுமி:-எல்லா உயிரினங்களிலும் தேவியானவள் புத்தி உருவில் இருப்பதால் நாம் நம் புத்தியை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். அன்பாகவும், இனிமையாகவும் பேச வேண்டும். யார் மனதையும் புண்படுத்தாமல் நடந்து கொண்டால் ஸ்ரீவித்யாலட்சுமியின் அருளைப் பெறலாம்.


3. ஸ்ரீதான்யலட்சுமி:- ஸ்ரீதேவியானவள் பசி நீக்கும் தான்ய உருவில் இருப்பதால் பசியோடு, நம் வீட்டிற்கு வருபவர்களுக்கு உணவளித்து உபசரித்தல் வேண்டும். தானத்தில் சிறந்த அன்னதானத்தைச் செய்து ஸ்ரீ தான்ய லட்சுமியின் அருளை நிச்சயம் பெறலாம்.


4. ஸ்ரீவரலட்சுமி:- உடல் பலம் மட்டும் வீரமாகாது மனதில் உறுதி வேண்டும், ஒவ்வொருவரும் தாங்கள் செய்த தவறுகளையும் பாவங்களையும் தைரியமாக ஒப்புக் கொள்ள வேண்டும், நம்மால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், செய்த பாவங்களுக்காக மனம் வருந்தி, இனி தவறு செய்ய மாட்டேன் என்ற மன உறுதியுடன் ஸ்ரீவரலட்சுமியை வேண்டினால் நன்மை உண்டாகும்.


5. ஸ்ரீசவுபாக்யலட்சுமி:- ஸ்ரீதேவி எங்கும் எதிலும் மகிழ்ச்சி உருவில் இருக்கின்றாள். நாம் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருந்து கொண்டு மறற்றவர்களின் மகிழ்ச்சிக்கும் காரணமாக இருக்க வேண்டும். பிறர் மனது நோகாமல் நடந்தால் சவுபாக்கிய லட்சுமியின் அருளைப் பெற்று மகிழலாம்.


6. ஸ்ரீசந்தானலட்சுமி:- எல்லா குழந்தைகளையும் தன் குழந்தையாக பாவிக்கும் தாய்மை உணர்வு எல்லோருக்கும் வேண் டும். தாயன்புடன் ஸ்ரீசந்தான லட்சுமியை துதித்தால் நிச்சயம் பலன் உண்டு.


7. ஸ்ரீகாருண்யலட்சுமி:- எல்லா உயிர்களிடமும் கருணையோடு பழக வேண்டும், உயிர்வதை கூடாது, உயிர்களை அழிக்க நமக்கு உரிமை இல்லை, ஜீவ காருண்ய ஒழுக்கத்தை கடை பிடித்தால் ஸ்ரீ காருண்ய லட்சுமியின் அருளைப் பெறலாம்.


8. ஸ்ரீமகாலட்சுமி:- நாம் நம்மால் முடிந்ததை மற்றவர் களுக்கு கொடுக்க வேண்டும் என்றுமே நம் உள்ளத் தில் உதவ வேண்டும் என்ற எண்ணம் உறுதியாக இருந்தால் நமக்கு ஒரு குறையும் வராது. மேலும் ஸ்ரீ மகாலட்சுமி நம்மை பிறருக்கு கொடுத்து உதவும் படியாக நிறைந்த செல்வங்களை வழங்குவாள்.


9. ஸ்ரீசக்திலட்சுமி:- எந்த வேலையும் என்னால் முடி யாது என்ற சொல்லாமல் எதையும் சிந்தித்து நம்மால் முடியும் என்ற நம்பிக்கையுடன் செய்தால் ஸ்ரீசக்தி லட்சுமி நமக்கு என்றும் சக்தியைக் கொடுப்பாள்.


10. ஸ்ரீசாந்திலட்சுமி:- நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் வரும் இன்ப துன்பங்களை சமமாக பாவித்து வாழ பழக வேண்டும். நிம்மதி என்பது வெளியில் இல்லை. நம் மனதை இருக்குமிடத்திலேயே நாம் சாந்தப்படுத்த முடியும். ஸ்ரீசாந்தி லட்சுமியை நினைத்து பக்தி seidhaale எப்பொழுதும் நிம்மதியாக வாழலாம்.


11. ஸ்ரீசாயாலட்சுமி:- நாம் சம்சார பந்தத்திலிருந்தாலும் தாமரை இலை தண்ணீர் போல கடமையை செய்து பலனை எதிர்பாராமல் மனதை பக்தி மார்க்கத்தில் சாய்ந்து ஸ்ரீசாயாலட்சுமியை பக்தி செலுத்தி அருளைப் பெற வேண்டும்.


12. ஸ்ரீத்ருஷ்ணாலட்சுமி:- எப்போதும் நாம் பக்தி வேட்கையுடன் இருக்க வேண்டும், பிறருக்கு உதவ வேண்டும், ஞானம் பெற வேண்டும், பிறவிப் பிணித் தீர வேண்டும் என்ற வேட்கையுடன் ஸ்ரீத்ருஷ்ணாலட்சுமியைத் துதித்து நலம் அடையலாம்.


13. ஸ்ரீசாந்தலட்சுமி:- பொறுமை கடலினும் பெரிது. பொறுத்தார் பூமியை ஆள்வார். பொறுமையுடனிருந்தால் சாந்தலட்சுமியின் அருள் கிடைக்கும்.


14. ஸ்ரீகிருத்திலட்சுமி:- நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும், மனதை ஒரு நிலைப்படுத்தி நேர்த்தியுடன் செய்தால், புகழ் தானாக வரும். மேலும் ஸ்ரீகீர்த்தி லட்சுமியின் அருள் நிச்சயம் கிடைக்கும்.


15. ஸ்ரீவிஜயலட்சுமி:- விடாத முயற்சியும் உழைப்பும், நம்பிக்கையும் இருந்தால் நமக்கு எல்லா காரியங்களிலும் வெற்றி தான். ஸ்ரீவிஜயலட்சுமி எப்பொழுதும் நம்முடன் இருப்பாள்.


16. ஸ்ரீஆரோக்கிய லட்சுமி:- நாம் நம் உடல் ஆரோக்கியத்தை கவனித்தால் மட்டும் போதாது, உள்ளமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும், கோபம், பொறுமை, காமம், பேராசை போன்ற நோய்க் கிருமிகள் நம் மனதில் புகுந்து விடாமல் இருக்க ஸ்ரீஆரோக்கிய லட்சுமியை வணங்க வேண்டும்!


ஸ்ரீ மகாலக்ஷ்மி தாயார் திருவடிகளே சரணம்

 *🌷🌷திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி ஸ்வாமி ஆலயம் சிறப்பம்சங்கள்*


சென்னையில் உள்ள வைணவத் தலங்களில் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய மிகப் பழமையான தலம் திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிஸ்வாமி  ஆலயம். 


லக்ஷக்கணக்கான திவ்யதேசங்களில் ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக சென்னை நகருக்குள் முக்கியத் தலம் இந்த ப்ருந்தாரண்ய க்ஷேத்ரம்.


பிருந்தாரண்ய க்ஷேத்ரம் எனப்படும் இத்தலம் ஏராளமான சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது.


ஸ்ரீ வேத வியாசரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இத்தலத்தில் பெருமாளைச் சுற்றி உள்ள ஆலயத்தை திருப்பணி செய்து  பல்லவ மன்னன் முதலாம் நரசிம்மவர்மன் அழகான ஆலயத்தை 8-ம் நூற்றாண்டில் புனரமைத்தார்.


இத்தல வரலாறு சுமதி மன்னன் என்பவருடன் தொடர்புடையது. இவர் திருப்பதி ஏழுமலையானின் தீவிர பக்தர்.


இவருக்கு ஒரு தடவை மஹாபாரதப் போரின்போது கிருஷ்ணர் எடுத்த வடிவத்தைக் காண வேண்டும் என்ற நல்விருப்பம் ஏற்பட்டது.

அதாவது மகாபாரதப் போர் நடந்த போது பாண்டவர்களுக்கு ஆதரவாக கிருஷ்ணர் களம் இறங்கினார். போரில் கிருஷ்ணர் எந்த ஆயுதமும் ஏந்தக் கூடாது என்று கௌரவர்கள் கேட்டுக் கொண்டதால் அவர் தேரோட்டியாக மாறினார்.

பார்த்தனுக்கு (அர்ஜுனன்), கிருஷ்ணர் தேரோட்டி (சாரதி)யாக இருந்தார். 

இதனால்தான் நாம் கிருஷ்ண பரமாத்மாவை பார்த்த சாரதி'' என்கிறோம்.

இந்த தேரோட்டி வடிவை காணவே சுமதி மன்னன் ஆசை கொண்டார். அவர் விருப்பத்தை பூர்த்தி செய்ய திருப்பதி பெருமாள் இங்கே  திருவல்லிக்கேணியில்  பார்த்தசாரதியாகக் காட்சி அளிப்பதாக அருளினார். . அதன் அடிப்படையில் இங்கு மூலவரான ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி வேங்கடகிருஷ்ணனாக ஸேவிக்கப்படுகிறார். 


இந்த பெருமாளை இமயமலையில் இருந்த வ்யாஸரிடம் பெற்று இங்கே  ஆத்ரேய மாமுனிவர் பிரதிஷ்டை செய்ததாக அறியப்படுகிறது.


உத்ஸவராக பார்த்தஸாரதி ஸ்வாமி தன் திருமுகம் எல்லாம் மஹாபாரத யுத்தத்தில் பீஷ்மாசார்யரின் அம்பு பட்ட வடுக்களுடன் உள்ளார். 


கோபுரங்களும், மண்டபங்களும் நுட்பமான திராவிட சிற்பக் கலை சிறப்பை வெளிப்படுத்துகின்றன. கருவறையில் மூலவர் ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி எனும் ஸ்ரீவேங்கட கிருஷ்ணன்,  தாயார் ருக்மிணித்தாயார், அண்ணன் பலராமர், தம்பி ஸாத்யகி, புத்திரன் பிரத்யும்னன், பேரன் அநிருத்தன், என குடும்ப ஸஹிதமாக உள்ளார். பலராமர் வரதமுத்திரை காட்டி கலப்பை ஏந்தியுள்ளார்.  தம்பி ஸாத்யகி அவருக்கே உரிய கத்தி ஏந்தியும் பிள்ளையும் பேரனும் உலக்கை எனும் தோமரங்கள் ஏந்தியும் பக்தர்களுக்கு காக்ஷி அளிக்கின்றனர்.


கிருஷ்ணர் தம் மூன்று தலைமுறையுடன் வீற்றிருக்கும் ஒரே தலம் இதுதான்.


அதுபோல கிருஷ்ணர் உலகில் வேறு எங்கும் இல்லாதபடி இங்கு மட்டுமே முறுக்கு மீசையுடன் காணப்படுகிறார்

. 9 அடி உயரத்தில் திருமுகத்தில் புன்னகை ததும்ப அருள்பாலிக்கும் அவரை நாளெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம். 


பகல் பத்து, கடைசி 5  நாட்களில் மட்டும்  மீசை இல்லாத மூலவரை தரிசிக்கலாம்.


மகாபாரதப் போர் நடந்த போது பீஷ்மர் விட்ட அம்புகள் பட்ட காயத்தால் கிருஷ்ணர் முகத்தில் வடுக்கள் ஏற்பட்டன. உத்ஸவரின் முகத்தில் அந்த வடுக்களை இன்றும் காணலாம். உத்ஸவர் கதாயுதம் ஏந்தாமல் செங்கோலுடன் உள்ளார். 


இது பகவான் கிருஷ்ணர் ஆயர் குலத்தில் பிறந்ததை பிரதிபலிக்க தரித்ததாகச் சொல்கிறார்கள். 


மூலவர் மற்ற தலங்களில் உள்ளது போல இங்கு சக்கராயுதம் ஏந்தவில்லை. இடையில் வாள் தாங்கி . திருக்கையில் பாஞ்சஜன்யம் எனும் சங்கை ஏந்தியுள்ளார்.


இந்த கிருஷ்ணரை ஏன் வேங்கட கிருஷ்ணர் என்று செல்கிறார்கள் தெரியுமா? சுமதி மன்னன் திருப்பதி ஏழுமலையானின் தீவிர பக்தன் என்பதை படித்து இருப்பீர்கள். அந்த வேங்கடவனே இங்கு வந்து சேவை சாதித்ததால்  காட்சியுடன் சேர்த்து வேங்கட கிருஷ்ணர் என்றழைக்கப்படுகிறார்.


பேயாழ்வார் ஒரு பாசுரம், திருமழிசை ஆழ்வார் ஒரு பாசுரம், திருமங்கை ஆழ்வார் 10 பாசுரம் பாடி மங்களாசனம் செய்துள்ளனர். இத்தலத்தில் ஸ்ரீரங்கம், திருப்பதி, காஞ்சீபுரம், அஹோபிலம், அயோத்தி ஆகிய 5 திவ்ய சேதப் பெருமாள்களை தனித்தனி சன்னதிகளில் தரிசனம் செய்யலாம். 

இதன் காரணமாக இத்தலம் 5 மூலவர்கள் கொண்ட தலமாகவும், பஞ்ச வீரத் தலமாகவும் அழைக்கப்படுகிறது.


முதல் சன்னிதியில் மூலவர் வேங்கடகிருஷ்ணன் இருப்பது போல இரண்டாவது ஸன்னிதியில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஶயனக் கோலத்தில் உள்ளார். இவரை மன்னாதன் - தமிழில் என்னையாளுடையப்பன் என்றும் அழைக்கிறார்கள்.


தாயார் பெயர் வேதவல்லித்தாயார். வைகுண்டத்தில் இருந்து பூலோகம் வந்த திருமகள், இத்தலம் துளசிச் செடி வனமாக இருப்பது கண்டு, அங்குள்ள ஒரு மரத்தடியில் குழந்தை வடிவமாக தோன்றினார்.

அவரை பிருகு முனிவர் எடுத்து வளர்த்தார். 

திருமால் இளவரசன் வேடத்தில் வந்து தாயார் வேதவல்லியை திருமணம் செய்து, இத்தலத்திலேயே தங்கி விட்டதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. 


மூன்றாவது ஸன்னிதியில் கருடன் மீது அமர்ந்தபடி காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கிழக்கு நோக்கியபடி உள்ளார். இவரை பக்தர்கள் தேவப் பெருமாள் என்றும் அழைக்கிறார்கள். 

இவர் ஸப்தரோமா முனிவருக்கு கஜேந்திர வரதராக கருட வாகனத்தில் காட்சியளித்தார்.


நான்காவது சன்னிதியில் மேற்கு நோக்கியப்படி அஹோபிலம் நரசிம்மர் திருமார்பில் லட்சுமியுடன் யோகாஸநத்தில் வீற்றிருக்கிறார். நோய்கள் தீர இவர் ஸந்நிதி பின்புறம்  உப்பு, மிளகை காணிக்கையாக சமர்ப்பிக்கிறார்கள். அத்ரி முனிவருக்கு  தெள்ளிய சிங்கராக இவர் காட்சியளித்தார். 

இவரை வழிபட, கல்வியில் மேன்மை பெறலாம். இவர் சன்னதியில் மணிஓசை கூட எழுப்பப்படுவதில்லை.


ஐந்தாவது சன்னிதியில் அயோத்தி ராமர் தெற்கு நோக்கி உள்ளார். அவருடன் சீதாப்பிராட்டி, பரதன், லக்ஷ்மணன், சத்ருக்னன், மற்றும் எதிரே அனுமனும் சேவை சாதிக்கிறார்கள். 


மதுமான் முனிவருக்கு ராமர் தன் பட்டாபிஷேக கோலத்தை இத்தலத்தில் காட்சி அருளியதாக வரலாறு உள்ளது.


ஸ்ரீபார்த்தசாரதிஸ்வாமிக்கும், ஸ்ரீநரசிம்ம ஸ்வாமிக்கும் தனி, தனி கொடி மரம், வாசல்கள் உள்ளன.


இப்படி 5 சன்னிதிகளிலும் பெருமாள் அளவு கடந்த திரு அருள் ஆற்றலுடன் எழுந்தளும் உள்ளார். 

5 சன்னிதிகளிலும் மூலவர்கள் மங்களாசாஸனம் செய்யப்பட்டுள்ளதால், திருவல்லிக்கேணியை பஞ்சமூர்த்தி தலம்'' என்கிறார்கள்.


இத்தலத்தின் குளமான கைரவிணியில் ஒரு காலத்தில் அல்லி மலர்கள் அதிகமாக இருந்தன. இதனால்தான் அல்லிக்கேணி என்பது திரு சேர்த்து திருவல்லிக்கேணி என்ற பெயர் உண்டாயிற்று.


இந்த குளத்தில் இந்திர, கோம, மீன, அக்னி, விஷ்ணு ஆகிய 5 புண்ணிய தீர்த்தங்களும் கலந்து இருப்பதாக கூறப்படுகிறது. மீன் வசிக்காத இக்குளக்கரையில் நடக்கும் கஜேந்திர மோக்ஷம் கருடசேவை நிகழ்வு மிகவும் பிரசித்தம்.


திருவல்லிக்கேணி கோவிலில் முதலில் முன் மண்டபம் உள்ளது. அடுத்து மகா மண்டப நுழைவாயில் உள்ளது. 

அதன் மீதுதான் 5 நிலைகளும், 7 கலசங்களும் கொண்ட ராஜகோபுரம் கட்டப்பட்டுள்ளது.


கோவில் உள்ளே 5 மூலவர் சன்னிதி மீதுள்ள விமானங்கள், ஆனந்த விமானம், பிரணவ விமானம், புஷ்பக விமானம், சேஷ விமானம், தைவிக விமானம் என்று அழைக்கப்படுகிறது.


இத்தலம் இரண்டு பிராகாரங்களைக் கொண்டது. 


கிழக்கு கோபுரம் சுமதி தொண்டைமான் மன்னனால் கட்டப் பட்டது.


பிருகு, அத்ரி, மாரீஷி, மார்க்கண்டேயர், சுமதி, ஜபாலி, சப்தரோமா ஆகிய 7 ரிஷிகளும் இங்கு தவம் இருந்துள்ளனர். இதனால் சப்த ரிஷி ஸ்தலம் என்ற சிறப்புப் பெயரும் இத்தலத்துக்கு உண்டு.


ராமானுஜரின் பெற்றோர் குழந்தை செல்வம் வேண்டி இத்தலத்து பெருமாளிடம் மனம் உருக வழிபட்டார்களாம். இதனால் ஸ்ரீ பார்த்தசாரதியே அவர்கள் புத்ரனாக  ராமானுஜராக அவதரித்ததாக சொல்கிறார்கள்.


இங்கு 5 மூலவர் சன்னிதி தவிர ஸ்ரீவேதவல்லி தாயார் சன்னிதி தனியாக உள்ளது. இவருக்கு வெள்ளி தோறும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.


மேலும் ஸ்ரீ ஆண்டாள்,  ஸ்ரீராமானுஜர், ஆழ்வார்கள், ஆசார்யர்கள் , ஸ்ரீ ஆஞ்ஜநேயர்,ஆகியோரும் உள்ளனர்.


இக்கோவிலில் தொன்றுதொட்டு  ஸ்ரீவைகாநஸ பகவத் சாஸ்த்ர ஆகம முறையும் தென்கலை வைணவ பாரம்பரியமும் கடை பிடிக்கப்படுகிறது. சித்திரை மாதம் ஸ்ரீபார்த்தசாரதிக்கும், ஆனி மாதம் ஸ்ரீ அழகிய சிங்கருக்கும் பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது. 


இவை தவிர ஏராளமான உற்சவங்கள் நடக்கின்றன. ஐப்பசி மாதம் கைத்தல சேவை, ஆவணி மாதம்  உரியடி திருவிழா மற்றும் புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு உத்ஸவம்  நடக்கிறது. எப்போதும் தினமும் இத்தலம் திருவிழா கோலமாக காட்சியளிக்கிறது.


விவேகானந்தர், தியாகராஜ சுவாமிகள், முத்துசாமி தீட்சிதர், ராமானுஜர், பாரதியார் ஆகியோர் பார்த்தசாரதியை வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.


துலாபாரம் கொடுக்க இங்கு வசதி உள்ளது. 

அன்னதான திட்டமும் சிறப்பாக நடந்து வருகிறது.


இத்தலத்தில் திரு அத்யயநோத்ஸவம் அதன் அங்கமாக ஸ்ரீவைகுண்ட ஏகாதசி திருவிழா மிகச்சிறப்பாக நடத்தப்படுகிறது. அந்த சமயத்தில் பகல் பந்து, ராப்பத்து ஆழ்வார் அருளிச்செயல் சேவை பெருமாள் சிறந்த அலங்கார சாத்துபடி சேவை, மார்கழி மாத திருப்பாவை  கதா காலக்ஷேபங்கள் என்று கோவில் திருவிழாக் கோலமாக காட்சி அளிக்கும்.


வைகுண்ட ஏகாதசியின் 20 நாட்களில்  ஒரு நாள் இத்தல பெருமாள், திருப்பதி ஏழுமலையான் போல் முழுமையான அலங்காரம் கண்டருள்வார். 


ஸ்ரீபார்த்தசாரதிக்கு சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர் சாதம்,போன்றவை சிறந்த  பிரசாதமாக  செய்யப்படுகிறது. வெள்ளிக்கிழமை அல்லது திங்கட்கிழமை  தோறும் நடக்கும் திருமஞ்சனத்தின்போது, சர்க்கரை பொங்கல் அளித்து வழிபட்டால் நினைத்தது நடக்கும். 

குழந்தை பாக்கியமும், குடும்பத்தில் செல்வ செழிப்பும் உண்டாகும்.


பொதுவாக கிருஷ்ண பரமாத்மா, ஆபத்து காலங்களில் ஓடோடி வந்து நமக்கு உதவுபவர் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் உண்டு. அந்த பாக்கியத்தைப் பெற நாம் கிருஷ்ணனிடம் மனதை பறி கொடுக்க வேண்டும். பக்தி நெறியால் வழிபட வேண்டும். அந்த வழிபாட்டுக்கு ஏற்ற தலம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ஆலயம்தான்.  


லக்ஷ்மீ கடாக்ஷம் பெற்று வாழ்வில் செய்தற்கரியன சாதிப்பவர்களும்  மன அமைதி பெற விழைவோரும்,  பொதுவாழ்வில் சாதிக்கும் எண்ணம் உடையவர்களும் அவசியம் இத்தல பெருமாளை வழிபட வேண்டும். 


🌷🌷.

 நவராத்திரி ஒன்பது நாட்களும் கோவில்களிலும் வீடுகளிலும் கொலு வைத்து கொண்டாடும் பொழுது முதல் மூன்று நாட்கள்

 ஸ்ரீதுர்க்கை வடிவிலும் 

தொடர்ந்து மூன்று நாட்கள் ஸ்ரீமகாலட்சுமி வடிவிலும் 

மேலும் உள்ள மூன்று நாட்கள் ஸ்ரீசரஸ்வதி வடிவிலும் 

வணங்குவது மரபு..

கல்விக்கு அதிபதி சரஸ்வதி தேவி நம் தொழிலுக்கும் ஜீவனத்திற்கும் உதவி செய்யும் கருவிகளையும் பூஜை செய்து வணங்கும் நாள் இந்த சரஸ்வதிபூஜை நாளாகும் கூத்தனூர் வேதாரணியம் கண்டியூர் உத்திரமேரூர் காஞ்சிபுரம் மதுரை தஞ்சை போன்ற ஊர்களில் உள்ள சரஸ்வதிதேவி ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடப்பதுண்டு

மூலத்தில் பிடித்து அவிட்டத்தில் விடு என்பது அடை மொழி அதாவது நவராத்திரி காலத்தில் மூல நட்சத்திர நாளில் சரஸ்வதி தேவிக்கு உரிய பூஜையை தொடங்க வேண்டும் அப்போது ஆவாகனம் செய்யவேண்டும் அதாவது சரஸ்வதி படங்கள் விக்ரகங்களில் ஆவாகனம் செய்ய வேண்டும் மேலும் நம்முடைய புத்தகங்களை அடுக்கி வைத்து அவற்றின் மேல் சரஸ்வதி படத்தை வைத்து வழிபடலாம்.

கலைவாணி கல்விக்கரசி என பல பெயர்களில் போற்றப்படும் சரஸ்வதி தேவியின் மகிமையை தெரிந்து கொள்வோமா..

பிரம்மனின் துணைவியாக இருப்பவள் சரஸ்வதி!

 சரஸ் என்றால் நீர் மற்றும் ஒளி ஆகியவற்றை தடையின்றி வழங்குபவள் என்று பொருள் கல்வியை மற்றும் அதன் ஊற்றாகவும் ஞான வழியாகவும் அள்ளித் தருபவளே சரஸ்வதி.. சரஸ்வதி தேவியின் கையில் இருக்கும் வீணை பெயர் கச்சபி. சிவபெருமானால் உருவாக்கப்பட்ட வழங்கப்பட்டது வீணா தட்சிணாமூர்த்தியாக இருந்து நாரதர் முதலான அவர்களுக்கு இசை நுணுக்கங்களை உபதேசித்த பிறகு தனது சகோதரியான கலைவாணிக்கு அவர் அளித்ததாக ஐதீகம்

சரஸ்வதி மிக அழகு அமைதி பார்வையுடன் பிரகாசிப்பார் கல்வியின் தெய்வம் பிரம்ம பிரியை ஞானசக்தி என்றும் அழைக்கப்படுகிறாள் சரஸ்வதியை ஆற்றங்கரை சொற்கிழத்தி என்று தமிழ் நூல்கள் குறிப்பிடுகின்றன அறிவே ஞானமே மனிதனின் ஆயுதம் ஞானம் அறிவு இவற்றின் பொது வடிவம் சரஸ்வதி அறிவம் ஞானமும் உறுதியானது நம்முடனே வருவதும் அன்னத்தை வாகனமாகக் கொண்டும் சரஸ்வதியை நாம் பார்க்கிறோம் அன்னம் பாலினையும் நீரினையும் பிரித்து பாலை மட்டும் எடுத்துக் கொள்வது போல நாம் ஞானத்தினை எடுத்துக்கொண்டு அவலத்தை நீக்க வேண்டும் என்பது பொருள்..

முதல்நாள் சரஸ்வதி பூஜை செய்தவர்கள் மறுநாள் காலையில் சரஸ்வதி பூஜை செய்து வழிபட கல்வியும் ஞானமும் கிடைக்கும்..

வெள்ளைக் கலையுடுத்தி வெள்ளைப் பணிபூண்டு வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள் வெள்ளை அரியாசனத்தில் அரசரோடு என்னை சரியாசனம் வைத்த தாயே போற்றி போற்றி.. புரட்டாசி அமாவாசை

இந்த வருடம் (06/10/2021) புதன்கிழமை புரட்டாசி மகாளய அமாவாசையன்று நீங்கள் தர்ப்பணம் கொடுத்துப்பாருங்கள். அடுத்த ஆண்டுக்குள் உங்கள் வாழ்க்கைத்தரத்தை நிச்சயம் உங்கள் முன்னோர்களான பித்ருக்கள் தெய்வீக சக்தி கொடுத்து உயர்த்தி இருப்பார்கள்....


மறைந்த நம் முன்னோர்களான பித்ருக்களை நினைத்து அவர்களுக்குரிய நன்றியுணர்வாக வழிபட வேண்டிய மிக முக்கியமான திருநாள். அதாவது அன்று நாம் அவர்கள் தாகத்தை தீர்த்து அமைதிப்படுத்த வேண்டும்.


அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.


தர்ப்பை புல்லை வைத்து, அதில் பித்ருக்களை ஆவாஹனம் செய்து எள்ளும் நீரும் தருவதை தர்ப்பணம் என்பார்கள். தர்ப்பணம் கொடுக்கும் போது காய்கறிகள் 5 வகை (பூசணி, வாழைத்தண்டு தவிர்க்கவும்) 

யை தானமாக கொடுக்க வேண்டும். பித்ருக்களுக்கு தர்ப்பணம், சிரார்த்தம் கொடுக்க வேண்டும் என்றதும், பெரும்பாலானவர்கள் அது என்னவோ, ஏதோ என்று நினைக்கிறார்கள். 


சிலருக்குத்தான்  அது சரிபட்டு வரும். நமக்கு இதெல்லாம் செய்வது வழக்கம் இல்லை என்கிறார்கள். சிலர் பித்ரு வழிபாட்டை எப்படி செய்வது என்ற குழப்பத்துடனே இன்னும் இருக்கிறார்கள். திதி, தர்ப்பணம், சிரார்த்தம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தும், அதை முறைப்படி செய்வதற்கு ஐதீகம் தெரிந்து இருக்க வேண்டுமே என்று நினைக்கிறார்கள். ஆனால் இதுபற்றியெல்லாம் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை.


தர்ப்பணம் செய்வது ரொம்ப, ரொம்ப எளிதானது. தர்ப்பணம் கொடுப்பதற்கு வேறு எதுவும் வேண்டாம். உங்கள் அப்பா, அம்மா பெயர், தாத்தா-பாட்டி பெயர் (தந்தை வழி) பூட்டன்-பூட்டி பெயர் (தந்தை வழி) அப்புறம் அம்மாவின் அப்பா அம்மாவின் தாத்தா, அம்மாவின் தாத்தாவுக்கு அப்பா, அம்மாவின் அம்மா, அம்மாவின் பாட்டி, அம்மாவின் பாட்டிக்கு அம்மா ஆகிய  பேர் மட்டும் தெரிந்தால் போதும்.


சிலருக்கு தாத்தாவின் பெற்றோர் பெயர் தெரியாமல் இருக்கலாம். அதற்கும் கவலைப்பட வேண்டாம். என் மூதாதையர்களுக்கு இந்த தர்ப்பணம் போய் சேரட்டும் என்று மனதார நினைத்து கையில் உள்ள எள் மீது தண்ணீர் ஊற்றி, அந்த நீரை தர்ப்பைகளின் மீது ஊற்றினால் போதும். அவ்வளவுதான். தர்ப்பண வழிபாடு முடிந்தது.


தை அமாவாசை தினத்தன்று கோவில் குளங்களிலும், பித்ரு வழிபாட்டுக்குரிய புனிதநீர் நிலைகளிலும், காவிரி கரையிலும் இந்த எளிய வழிபாட்டை செய்யலாம். மூதாதையர்களின் பெயரைச் சொல்லி எள் கலந்த நீரை தர்ப்பை புல்களின் மீது ஊற்றுவதில் என்ன கஷ்டம்? இதை கூட பெரும்பாலானவர்கள் மனப்பூர்வமாக செய்வதில்லை.


குறைந்தபட்சம் அது நம் கடமை என்று நினைத்தாவது செய்யக்கூடாதா? இந்த வருடம் நீங்கள் தர்ப்பணம் கொடுத்துப்பாருங்கள். அடுத்த ஆண்டுக்குள் உங்கள் வாழ்க்கைத்தரத்தை நிச்சயம் பித்ருக்கள் தெய்வீக சக்தி கொடுத்து உயர்த்தி இருப்பார்கள். இது பலரும் அனுபவித்து வரும் உண்மை. ஈடு, இணையற்ற அந்த பலன்களை பெற நீங்களும் நாளை தை அமாவாசையன்று பித்ரு வழிபாட்டை மறக்காமல் செய்யுங்கள்.


12 ஆண்டுகள் பலன் கிடைக்கும்.


மஹாளய அமாவாசை.  இந்த அமாவாசையன்று செய்யப்படும் பிதுர்தர்ப்பணம் பன்னிரெண்டு ஆண்டுகள் பிதுர்திருப்தி ஏற்படுத்தும்.


என்ன செய்ய வேண்டும்?


அமாவாசை தினத்தன்று 4 முக்கிய செயல்களை செய்தல் வேண்டும்.


(1) புனித நதிகளில் நீராட வேண்டும்.

(2) பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும்.

(3) மந்திர ஜெபம் ஜெபிக்க வேண்டும்.

(4) தானங்கள் கொடுக்க வேண்டும்.


தர்ப்பணம் என்ற வடமொழி சொல்லுக்கு சந்தோஷமடைதல் என்று பொருள்.


தர்ப்பயாமி என்று சொல்லும்பொழுது சந்தோஷமடையுங்கள் என்று பொருள் கொள்ளலாம்.


ஜப்பான் நாட்டை சேர்ந்த இமொட்டோ என்ற ஆராய்ச்சியாளர் நீரில் நேர்மறை சொற்களை பிரயோகித்தபொழுது நீரில் உள்ள மூலக்கூறுகள் ஒரு முறைமையுடனும் ஒழுங்குடனும் வரிசைப்படுத்தப்படுவதை கண்டார்.


அதேசமயம், எதிர்மறைசொற்களை அந்த நீரில் பயன்படுத்தியபொழுது அந்த மூலக்கூறுகள் தாறுமாறாக அமைந்ததைகண்டார்.


இந்த ஆராய்ச்சிதான் இந்த கட்டுரையின் அடித்தளம்.....


தர்ப்பணம் செய்யும்பொழுது நீரை அதிகமாக விட்டு தர்ப்பணம் செய்யவேண்டும் என்று கூறுவார்கள்.


அவ்வாறு தர்ப்பயாமி என்று நமது முன்னோர்களை முன்னிட்டு கூறும்பொழுது அந்த சொற்கள் நீரின் மூலக்கூறுகளை சென்று அடைகின்றது.


நீர் ஆவியாக மாறி அந்த மூலக்கூறுகள் வளிமண்டலத்தில் கலக்கின்றன.


அதாவது, சந்தோஷமடையுங்கள் என்று நாம் கூறிய எண்ண அலைகள் ஆவியாக மாறிய நீரின் மூலக்கூறுகளுடன் வளி மண்டலத்தில் சஞ்சரிக்கின்றன.


அதீத உளவியல் (Para psychology) என்ற பிரிவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் மரணத்தின் பின் மனிதனின் நிலை பற்றி ஆராய்ந்து வருகிறார்கள்.


அந்த ஆராய்ச்சியில் மரணத்திற்கு பின் ஆழ்மன எண்ண அலைகள் அதிர்வுகளாக நிலை பெறுகின்றன என்று நம்புகிறார்கள்.


மேலே கூறிய இந்த நிகழ்வை மகாபாரதத்தில் அம்பை பீஷ்மரை கொல்வேன் என்று சபதம் செய்து நெருப்பில் வீழ்ந்து மடிந்து மீண்டும் சிகண்டியாக பிறந்து பீஷ்மரை கொன்றாள் என்று கூறும் நிகழ்விலிருந்து புரிந்து கொள்ளலாம்.


அதாவது மனம் மற்றும் எண்ண அலைகள் மறைவதில்லை என்று புரிந்துகொள்ளலாம்.


ஆத்மா சாவதில்லை என்ற கருத்து இந்த இடத்தில் நினைவு கூறத்தக்கது.


நாம் கொள்ளுகின்ற எண்ண அலைகளை பொறுத்து மறுபிறவி வாய்க்கின்றது என்பது நமது கோட்பாடு.


ஜடாபரதர் என்ற முனிவர் சித்தி அடையும் தருவாயில் ஒரு மான் படும் வேதனையை நினைத்தார் என்பதினால் அவர் ஒரு மானாக பிறந்தார் என்று யோகவாசிஷ்டம் கூறுகின்றது.


இதனால்தான் மனமிறக்க வாயேன் பராபரமே என்று பாடினார் தாயுமான சுவாமிகள்.


உடல் உகுத்தவர்கள் ஆழ்மன எண்ணங்கள் மறைவதில்லை என்றும் அவைகள் அதிர்வுகளாக சஞ்சரிக்கின்றன என்றும் அதீத உளவியல் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.


சில மகான்களின் சமாதி அருகிலோ அல்லது அவர்களின் ஆசிரமத்திற்கோ நாம் செல்லும்பொழுது நமது மனதில் ஏற்படும் ஒரு அமைதி மற்றும் பரவச உணர்சி அவர்களின் ஆன்மீக எண்ணங்கள் தரும் அதிர்வுகள் காரணமாக இருக்குமென்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.


தர்ப்பயாமி என்று கூறி நீரை விட்டு தர்ப்பணம் செய்யும்பொழுது சந்தோஷமடையுங்கள் என்று நாம் திரும்ப திரும்ப சொல்லும் எண்ண அலைகள் நீரின் மூலக்கூறுகளில் சென்றடைந்து நமது முன்னோர்களின் எண்ண அதிர்வுகளை சென்றடைகின்றது என்று நம்புவதற்கு இமொட்டோவின் ஆராய்ச்சி வழிவகுக்கின்றது.


சிரார்த்த காரியங்கள் செவ்வனே செய்தால் வம்ச விருத்தி அதாவது குலம் தழைக்கும் என்று தர்ம சாஸ்திரம் கூறுகின்றது.


சந்தோஷமடையுங்கள் என்று கூறி தர்ப்பணம் செய்வதால் நமது முன்னோர்கள் சந்தோஷமடைந்து நம்மை வாழ்த்துவதோடு மட்டுமல்லாமல் மீண்டும் நமது குடும்பத்தில் பிறக்கின்றார்கள் என்று நம்புவதற்கு இடமுண்டு.


நீரில் உள்ள மூலக்கூறுகள் நாம் சொல்லுகின்ற வார்த்தையினை உள்வாங்கிக்கொள்கின்றது என்பதினால்தான் நமது சடங்குகளில் நீர் ஒரு முக்கியமானதாக உள்ளது.


குறிப்பாக கும்பாபிஷேகம், சஷ்டி அப்த பூர்த்தி போன்றவை உதாரணமாக கொள்ளலாம்.


இந்த ஆராய்ச்சியின் முடிவை அன்றே நமது முனிவர்கள் தமது தவவலிமையினால்கண்டு தெளிந்து நமக்கு கூறியுள்ளார்கள் என்பதை கண்டு நாம் மெய்சிலிர்த்து போகின்றோம்.


சொல்லுக சொல்லைப் பிரிதோர்ச்சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் இன்மை யறிந்து. இந்தியாவில் தசரா திருவிழா..... 

(ஜோதிட தம்பதி  நா. ரெங்கன், உஷா 

சுவாதி ஜோதிட ஆலயம், வீரவநல்லூர் மற்றும்  பாளையங்கோட்டை - 9443423897).

அனைவருக்கும் 2021 தசரா நல்வாழ்த்துக்கள்..

இந்த 2021 ஆம் ஆண்டு, பிலவ வருட புரட்டாசி மாதம் 20ம் நாள் (06-10-2021) புதன் கிழமை துவங்குகிறது.  நவராத்திரி விழா மிகச் சிறப்பு வாய்ந்த பக்திநெறி கூட்டும் அம்மன் அருள் பெறும் அற்புத விழாவாகும்.  தென் இந்தியாவில் துர்கா, லட்சுமி, ரஸ்வதியின் பூஜை நடக்க, பொம்மைகள் கொலுப்படிகளில் அலங்கரிக்க, சுமங்கலிகளுக்கு மஞ்சள் குங்குமம் வழங்க விழா விஜய தசமியுடன் முடிகிறது. இப்போது வட நாட்டில் இதை எப்படிக் கொண்டாடுகிறார்கள் என்று பார்ப்போம். 
மராட்டியர்கள் சின்ன மண் கிண்ணங்களில் பாலிகை தெளித்து அதாவது மண் நிரப்பி, நவதான்யங்களை அதில் விதைத்துப் பின் தினமும் தண்ணீர் விடுகிறார்கள். அதன் பசுமையான வளர்ச்சியைப் பார்த்து தம் வாழ்க்கையையும் கணிக்க்கிறார்கள். பின் விஜயதசமி அன்று கடலில் கலக்கிறார்கள். அவர்களும் மும்பாதேவி கோவிலுக்கும், ஸ்ரீ மஹாலட்சுமி கோவிலுக்கும் தவறாது செல்கின்றனர். 
புரட்டாசி மாத வளர்பிறையில் நவராத்திரி விழா தொடங்குகிறது. இமயம் முதல் குமரிவரை நாடு முழுவதும் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இது தமிழ்நாட்டில் நவராத்திரி என்றும், கர்நாடகாவில் தசரா பண்டிகை என்றும், மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை என்றும் கொண்டாடப்படுகிறது. நவராத்திரி விழாவி்ல் 10 ஆவது நாள் விஜயதசமி என்று கொண்டாடப்படுகிறது. அம்பாளை ஆராதிக்கும் நவராத்திரியில் அம்பாளுக்கு 10 திருநாமங்கள். இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு சக்தியைத் தரக்கூடியவை.அன்னை பராசக்தி, நவராத்திரி தினங்களில் முறையே மகேஸ்வரி, கவுமாரி, வாராகி, சாமுண்டி என்ற நவஸ்வரூபங்களாக விளங்கி பக்தர்களுக்கு அருள் தருகிறாள்.மகிஷாசுரன் என்ற அசுரனை அழித்து, தேவர்களைக் காப்பாற்ற சக்தி அவதரித்து அவனை அழித்தாள். அதன் நினைவாகவே தேவியின் பாதங்களை வணங்கி வரம் கோருவதையே நவராத்திரி தினங்கள் குறிக்கின்றன.இந்த 9 நாட்களில் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என, தேவியை முதல் 3 நாட்கள் வெற்றியை வேண்டி அம்பாளை மகா துர்காவாகவும், அடுத்த 3 நாட்கள் செல்வம் வேண்டி மகாலட்சுமியாகவும், கடைசி 3 நாட்கள் கல்வியை வேண்டி மகா சரஸ்வதியாகவும் அம்பாளுக்கு அலங்காரம் செய்து  நவராத்திரி கொலு கொண்டாடப்படுகிறது .நவராத்திரி விழாவை யொட்டி வீடுகளில் பெண்கள் விதவிதமான பொம்மைகளை அடுக்கி வைத்து கொலு வைப்பார்கள். கொலு வைப்பது  என்பது இறைவியின் விசுவரூபத்தைக் குறிப்பதாகும்.நவராத்திரி கொண்டாடுமிடத்தில், கொலுவைக்கும் இடத்தில் கும்ப பூஜையும் நடத்தப்படுகிறது...  தற்போதைய காலகட்டத்தில் கோவிட்-19ன் தாக்கம் முழுவதும் இந்த உலகத்தை விட்டு ஒழிய இந்தவருட நவராத்திரி பூஜாபலன் கிடைத்திட அனைவரும் பிரார்த்திப்போம்.

 

குறிப்பு.. ஒவ்வொரு மாணவ மாணவியரின் பிறந்த ஜாதகத்திலும், கல்வி, உயர்கல்வி, சிறப்புக்கல்வி எனும் நவக்கிர ராசி சக்கரத்தில், முறையே 2.-4.- 9 மற்றும் வித்தைக்கு அதிபதி புதன், குரு, பணிவாய்ப்புக்கு அதிபதி சனி, செவ்வாய் மற்றும் நல்ல ஒழுக்கத்திற்கு அதிபதி குரு பகவான் ஆகிய அமைப்பின் இரகசியத்தை வீரவநல்லூர் – கஜேந்திர மோட்சம் அருளித்தந்த அத்தாளநல்லூர் ஸ்ரீஆதிமூலப் பெருமாள் ஆலயம் செல்லும் வழி துவக்கமாம் - மோர்மடம் ஊராட்சிப் பள்ளிக்கு அருகில் -   பல்கலைக்கழகத்தில் ஜோதிடம் பயின்று பட்டம் பெற்றுள்ள, 40 ஆண்டு அனுபவ ஜோதிடத் தம்பதி ரெங்கன் உஷா ஆகியோர் மிகச் சிறந்த முறையில் கணித்து, அவரவர் எதிர்கால கல்வி, ஆரோக்கியம், பணி, பதவி, திருமணம், வெளிநாடு பயணம் மற்றும் வியாபார லாப ஆதாய வழிவகைகள் செவ்வனே வழிகாட்டி வருகிறார்கள்.. வருக.. பயன் பெறுக.. சுபம்.


 வீரவநல்லூரில் பிறந்த ஊரில் 

ஜோதிட தம்பதி இல்லம்

RENGAN USHA ASTROLOGER COUPLE HOUSE

https://maps.app.goo.gl/cFbi84dEW84ehjuJ9


என்ற புதிய இல்லத்தை நிர்மாணித்து தற்போது அங்கு குடியேறி பிறந்த ஊர் காற்றை சுவாசித்து மகிழ்வு பெற வாய்ப்பளித்த இறைவனுக்கு நன்றி தெரிவித்து கிரகப்பிரவேசம் செய்துள்ளோம்


 2021 ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 


2021 ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

ஜோதிட தம்பதி நாராயண அய்யர் ரெங்கன் உஷா ரெங்கன்..

நிகழும் மங்களகரமான 1196 ஸ்வஸ்திஸ்ரீ சார்வரி வருஷம் தக்ஷிணாயம் ஹேமந்த ரிது மார்கழி மாதம் 16ம் நாள் பின்னிரவு 17-ம் நாள் முன்னிரவு அன்றைய தினம் தினசுத்தி அறிவது கிருஷ்ணபக்ஷ த்விதீயை - வியாழக்கிழமை பின்னிரவு வெள்ளிக்கிழமை முன்னிரவு - பூசம் நக்ஷத்ரம் - அமிர்தயோகம் - கன்னியா லக்னம் -  கடக சந்திரா லக்னம் - மகர திரிகோணம் - ரிஷப நவாம்சம் - சிம்ம சந்திர நவாம்சமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நள்ளிரவு 12.00 மணிக்கு 2021ம்  ஆண்டு பிறக்கிறது!..


நியுமராலஜிப்படி சென்ற 2020 கூட்டு எண் 4 ராகுவைக் குறிக்கும். 


வரும் 2021 கூட்டு எண் 5 புதனை குறிக்கும்.


பொதுவாக ஒவ்வொரு புத்தாண்டு பிறக்கும்போதும் அவரவருக்கு ஏற்றார் போல் ஒரு நம்பிக்கை ஒளிவட்டம் தெரியும் ஆனால் இந்த 2021 அப்படி ஒளிவட்டம் இந்தியாவிற்கு கண்டிப்பாக தெரியும் தமிழ்நாட்டுக்கு அதைவிட தெளிவாக தெரியும் நான் இங்கு குறிப்பிடுவது கிரகணத்தைப் போல வானத்தில் பார்க்கும் ஒளி வட்டம் கிடையாது அவரவர் மனதில் தோன்றும் எண்ண உயர்வை ஒளிவட்டம் என்று குறிப்பிட வேண்டியது உள்ளது.. 


உலக அரங்கில் இந்தியாவும் அதன் ஆன்மீக மாநில முதன்மை பெறும் தமிழ்நாடும் தெய்வ நம்பிக்கையில் தனித்துவமாக திகழ்கிறது எனவே ஜோதிட ரீதியில் பலன் அறிவது நம்பிக்கையின் எதிர்பார்ப்பு அன்றோ!..


2021 கன்னி லக்னம் மற்றும் கடக ராசியில் துவங்குகிறது. லக்னாதிபதி புதன் சூரிய சேர்க்கையுடன் குரு சம்பந்தம் பெற்று தனுசில் அமர்ந்திருப்பது குரு - புத ஆதித்யா யோகம்.  இது விஞ்ஞானிகளையும் அறிஞர்களையும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களையும் மேன்மையையும் அறிவாற்றல் மற்றும் மனிதநேயம் உள்ளவர்களையும் சரியான நேரத்தில் அடையாளம் காட்டும் ஆண்டாக அமைய இருக்கிறது வருடத் துவக்கத்தில் சனி ஆட்சி மற்றும் செவ்வாய் ஆட்சி பெறுவதால் பூமி எங்கும் மழை வளம் விவசாய வளம் நன்றாக இருக்கும் பருவகால மாற்றங்கள் சிறுசிறு இன்னல்கள் தந்தபோதும் திருப்தியாக அமையும் கல்வியில் ஆர்வம் இல்லாமல் பின்தங்கிப் போன பலருக்கும் இந்த புத ஆதித்யா யோகம் சிறப்பு பலனை இந்த ஆண்டு கொடுக்கும் அதாவது தேர்ச்சி பெறமுடங்கிப் போனவர்களுக்கு இந்த ஆண்டு மேன்மை தரும்


அதேநேரம் சுப கிரகம் குரு நீசம் பெற்று உள்ளதாலும் நீசம் பெற்ற இடத்தில் ராசிநாதன் சனி ஆட்சி பெறுவதாலும் மிகவும் நலிவுற்றும் பயம் பதட்டத்துடனும் உள்ளவர்களுக்கு ஒரு தனி திருப்பமாக உடல்நலத்திலும் பொருளாதாரத்திலும் மேன்மை கிடைக்கும் எந்த ராசியாகவும் இருந்தாலும் இந்த ஆண்டு பூராவும் புதனை மையமாக வைத்து பெருமாள் கோவில்களில் வழிபாடு செய்வது மிக்க மேன்மை தரும் அதேநேரம் பெருமாளுக்கு படைக்கும் அனைத்து பிரசாதங்களும் இல்லத்தில் பயன்படுத்த நமக்கு அக்கணமே கைமேல் பலன் தரும்.


வரும் காலங்களில் முன்னேற்றம் எதிர்பார்த்து உள்ளவர்களுக்கு ஏதாவது சிறு சிறு தடைகள் வருமானால் அவர்கள் அவரவர் ஜாதகத்தை ஒருமுறை கையில் எடுத்து பலன் பார்த்துக் கொள்வது நல்லது அனைவருக்கும் மீண்டும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!..

தளத்தை செய்தியோடை மூலம் வாசிப்பவர்கள்

வாசகர்கள்

எங்களின் முதன்மை வலைத்தளம். Our Main Web Site

விருந்தினர் வருகை

சமீபத்தில் வந்தவர்கள்

இதை படித்தவர்கள் படித்தது

அதிகம் படிக்கப்பட்டவை