தமிழ் ஜோதிடம் ஜாதகம்

ஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், வாஸ்துசாஸ்திரம் மூலம் வருங்காலம் அறிய "ஸ்வாதி ஜோதிட ஆய்வகம்" உங்களை அன்புடன் வரவேற்கிறது.

எழுதியவை அனைத்தும்

அன்புடையீர்,
வணக்கம்.  வருகிற 5,6, மற்றும் 7 ஜூலை 2013 நாட்களில், வீரவநல்லூர் (திருநெல்வேலி மாவட்டம்) வரலாற்றில் முக்கியத்துவம் பதிக்கும் சிறப்பம்சமாக நடைபெறவுள்ள பஜன் மேளாவில் கலந்து கொண்டு, ஸ்ரீ ரெங்கநாதர் திருவருளைப் பெற அன்போடு அழைக்கிறோம்.
நிகழ்ச்சி மற்றும் விழா குறித்த சிறப்பம்சங்களை இணைத்துள்ள விழா மடலில் கண்டு கொள்ளவும்.. வருக.. வருக.. வளம் பெற வருகை தருக!!.. நன்றி.
ஜோதிடதம்பதி
ரெங்கன் உஷா.
விழாமலர் கட்டுரையில் ஒன்று!.

பாவங்களைக் களைய பகவானின் நாமமே கதி!
வீரவநல்லூர் மரீசி ரிஷி கோத்திரம் ஸ்ரீ நாராயணய்யர்-ஸ்ரீமதி விசாலட்சி புத்திரன்
ஜோதிடத் தம்பதி ரெங்கன், MA.B.ED., D.ASTRO., தமிழாசிரியர் - உஷா ரெங்கன் B.A. ASTRO.,

பஜன் சம்பிரதாயம் உலகத்தில் எப்படி தோன்றியது!?.. எதற்காகத் தோன்றியது!.. என்று ஆராய முற்படுவோமா!!.  பகவானைத் துதித்து நிற்பதிலே முதன்மை பெறுவது ஏன் பகவானை விட பெரியது அவன் நாமம் உச்சரிப்பது தானே.  எந்த நாமத்தை எந்த அடியார்கள் உச்சரிக்கிறார்களோ அவர்கள் அந்த பகவானை விடப் பன்மடங்கு பெரியவர்கள் என்று பகவானே ஒப்புக்கொண்டுள்ள வரலாறுகள் எத்தனை, எத்தனை!.

       ஞான மார்க்கத்தை விட உயர்ந்த்தும் பல படிகள் எளியதுமாக இருப்பது பகவானின் நாமத்தை சதா உச்சரித்துக் கொண்டிருக்கும் பக்தி மார்க்கம் தான்! இதன்கண் பஜன் சம்பிரதாயம் ஏற்பட்டிருக்கிறதாக ஆன்றோர்கள் சுட்டிக் காட்டி பஜன் தொடர மார்க்கங்கள் பல தந்துள்ளனர்.
       துகாராம், நாமதேவர், மீரா பாய், சக்குபாய், புண்டரீகன், புரந்தரதாஸர் என பகவானின் நாமத்தைப் பாடிப் பாடி ஆனந்தமயமாய் திகழந்தவர்கள் பலராவார்.  நாம சங்கீர்த்தன மகிமையை பக்தர்கள் பெருமையைக் கூறும் சம்பவங்கள் பலவுண்டு!.

       புண்டலிகன் எனும் பக்தன் தன் தாய் தந்தையருக்குச் சேவை செய்வதில் சிறந்த விளங்குகிறான்.  அதன் சிறப்பைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவனுக்கு ஆதரவளித்து வருகிறார் ஸ்ரீ கிருஷ்ணர்.  அச்சமயம் தனது தாயின் பாதங்களை மெல்லப் பிடித்து விட்டு சேவை செய்கிறான் புண்டலிகன்.  ஆகவே தன்னைக் காண வந்தவர் சுவாமி ஷ ஸ்ரீ பாண்டுரங்கனே என்பதையும் அறியாது, செங்கலின் மீது சற்று நேரம் நிற்குமாறு பணிக்கிறான்.  இறைவனும் அதை ஏற்று, அவ்வாறே செங்கலின் மீது ஏறி, நின்று “விட்டலன்ஆன பெருமை விவரிக்க வார்த்தைகளே இல்லையே!..

       இப்போது பக்தன் பெருமைக்குரியவனா? அல்லது அந்த பக்தனுக்காக அவன் வரும் வரை தனது மனைவியோடு இடுப்பில் கைவைத்துக் காத்துக் கொண்டிருக்கும் பண்டரிபுர நாயகன் பெருமைக்குரியவரா?
       உண்மையான ஒரு பக்தனைப் பெருமைப் படுத்த இறைவன் தான் எந்த அளவிற்கு இறங்கி வரத் தயாராக இருக்கிறார் என்பதைத் தான் இச் சம்பவம் நமக்கு உணர்த்துகின்றது. மேலும் இன்னொன்று...

திரௌபதை மீது  கிருஷ்ணனுக்கு, அதிகமான அன்பு எப்படி என்பதை அறிய ருக்மணியும், சத்யபாமாவும், ஆவல் கொள்கின்ற நேரம். ஒரு சமயம் ஸ்ரீ கிருஷ்ணர் அவர்கள் அஸ்தினாபுரத்திற்கு அழைத்துச் செல்கிறார்.  அந்நேரம், அங்கே அரண்மனையில், திரௌபதி தலைவராமல், கலைந்த கூந்தலுடன் அமர்ந்திருக்கிறாள்.  விருந்தினரை வரவேற்று உபசரித்த அவள், பின் தன் தலையை வாரிவிடும்படி, ருக்மணியிடம் வேண்டிக் கொள்கிறாள். ருக்மணியும், அன்புடனே திரௌபதையின் தலையை வார முற்படுகிறாள்.  அவள் வார வார சீப்பானது துடிக்கின்றது.  ஏன் என அறிய முற்பட்டால், திரௌபதியின் ஒவ்வொரு தலைமுடியும் கிருஷ்ணரின் நாமத்தை சொல்லிக் கொண்டிருக்கிறது.  அதைக் க்ணட இருவருக்கும், கிருஷ்ணருக்கு திரௌபதையின் மீது இருக்கும் அன்பிற்கான உண்மைக் காரணம் புரிகிறது.  பாலகிருஷ்ணன் நாம மகிமையால் முடியாத்தேது?  ராம நாம மகிமையால் அன்றோ ஆஞ்சநேயர் பெரும் கடலைத் தாண்ட முடிந்த்தே!..

பகவானின் நாமங்களைச் சொல்வோம்!.. பாவங்களை அம்மட்டும் களைவோம்!!. சுபம்.

தளத்தை செய்தியோடை மூலம் வாசிப்பவர்கள்

வாசகர்கள்

எங்களின் முதன்மை வலைத்தளம். Our Main Web Site

விருந்தினர் வருகை

சமீபத்தில் வந்தவர்கள்

இதை படித்தவர்கள் படித்தது

அதிகம் படிக்கப்பட்டவை