தமிழ் ஜோதிடம் ஜாதகம்

ஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், வாஸ்துசாஸ்திரம் மூலம் வருங்காலம் அறிய "ஸ்வாதி ஜோதிட ஆய்வகம்" உங்களை அன்புடன் வரவேற்கிறது.

எழுதியவை அனைத்தும்


அன்புடையீர்,வணக்கம்.

05-01-2012 வியாழன் ஸ்ரீ கர வருடம் மார்கழி மாதம்

20 ம்நாள் வைகுண்ட ஏகாதசி!!


இனிய நந்நாளம் ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி அன்று பெருமாள் அனந்த சயனத்தில் காட்சியளிக்கும் நந்நாள்.

ஏகாதசியை விஞ்சிய வேறு விரதம் இல்லை என்பது பழமொழி. வடமொழியில் ஏகாதசி என்பதை தமிழாக்கம் செய்தால் அதன் அர்த்தம் பதினொன்று ஆகும். அதாவது வளர்பிறை ஆரம்பித்த நாள் முதல் (பிரதமை திதி) 11வது நாளாகும்.

ஆன்மீக விதிமுறைகள் அனைத்திலும் 11வது நாள் அல்லது 11வது முறை என்பது முக்கிய குறிக்கோளாகக் கொள்ளப்பட்ட எத்தனையோ உதாரணங்கள் உண்டு.

ஏகாதசி விரதத்தில் கைக் கொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகள் வருமாறு

கர்ம இந்திரியங்கள் - 5 ஞானேந்திரியங்கள் -5 இதனுடன் மனம்கூடினால் - 11 ஆக இந்த 11 இந்திரியங்களால் தெரிந்தோ தெரியாமலோ செய்யப்படும் தீவினைகள் எல்லாம் இந்த 11வது திதி நாளில் விரதம் இருந்தால், அழிந்து விடுவது உறுதி என்பது நம்பிக்கை. ஏகாதசியன்று பகல் உறக்கமோ, இருவேளையும் சாப்பிடுதல், தாம்பத்ய சேர்க்கை ஆகியவை அறவே ஆகாது. எனவே ஏகாதசியன்று இந்து சமயத்தவர் திருமண நிகழ்வுகளை தவிர்த்து வருவதும் உண்டு.

ஏகாதசி விரத விவரங்கள்

1. முதல் நாள் தசமி அன்று பகலில் ஒரு வேணை மட்டும் உணவு சாப்பிடுதல்.

2. ஏகாதசியன்று அதிகாலையில் எழுந்து, குளித்து விட்டு, பூஜை செய்து விரதம் துவங்க வேண்டும்.

3. ஏகாதசி திதி முழுவதும் உணவு உட்கொள்ளாமல் இருத்தல் நல்லது. ( தேங்காய், பால், தயிர் போன்றவற்றை பிரசாதமாக அருந்துவதில் தவறில்லை. மேலும் பழங்கள் சாப்பிடுவதில் தவறில்லை.

4.இரவு முழுவதும் கண் விழித்து, புராண புத்தகங்களைப் படிக்கலாம். பஜனை மூலம் பகவான் நாமங்கள் உச்சரிக்கலாம்.

5. ஏகாதசிக்கு மறுதினம் துவாதசி நாளாகும். அன்று உணவு அருந்துவதற்குப் பெயர் பரணை என்பர்.

6. துவாதசியன்று, அதிகாலையில் உப், புளிப்பு முதலிய சுவையற்ற உணவாக சுண்டைக்காய், நெல்லிக்கனி, அகத்திக் கீரை, இவைகளைச் செர்த்து பல்லில் படாமல் கோவிந்தா! கோவிந்தா!!என்று மூன்று முறை உச்சரித்து, ஆல இலையில் உணவு பரிமாறிச் சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.

7. துவாதசி அன்று உரிய திதி நேரத்தினைக் கணக்கிட்டு, ஏகாதசி விரதத்தினை நிறைவு செய்ய வேண்டும்.

8. விரதத்தினை நிறைவு செய்வது என்பது, நீர் கூட அருந்தாதவர்கள் துளசி தீர்த்தத்யும், மற்றவர்கள் பகவான் கிருஷ்ணருக்கு தானிய உணவை படைத்து (பிரசாதமாக) உண்ணலாம். ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பது போலவே விரதத்தை முடிப்பது மிக மிக முக்கியம். இல்லை எனில், விரதத்தின் முழுப் பயனும் கிடைக்காமல் போ்ய்விடும்.

9. உணவு சாப்பிடுமுன் பெரியோர்கள் சாப்பிட்டச் சொல்லி உடன் சாப்பிட வேண்டும். அன்று பகலில் தூங்குவது நல்லதல்ல.

10. குழந்தைகளும், வயது முதிர்ந்தவர்களும் இயலாமையில் உள்ளவர்களும் விரதம் அனுஷ்டிக்கத் தேவையில்லை.

11. சாஸ்த்திர நூல்களில் கூறப்பட்டுள்ள மேற்காண் விரத முறைகள் அனுசரிப்பது உடலுக்கும் உள்ளத்திற்கும் நல்லது,

சுபம்.

தளத்தை செய்தியோடை மூலம் வாசிப்பவர்கள்

வாசகர்கள்

எங்களின் முதன்மை வலைத்தளம். Our Main Web Site

விருந்தினர் வருகை

சமீபத்தில் வந்தவர்கள்

இதை படித்தவர்கள் படித்தது

அதிகம் படிக்கப்பட்டவை