கர தரிசனம்
தினந்தோறும் நாம் காலையில் எழுந்த உடன் முக்கியமாக அதிகாலையில், “கர தரிசனம்” செய்ய வேண்டும் என்பது நாம் தெரிந்து வைத்துக் கொண்டு நமக்கு அடுத்த இளைய சந்ததியினருக்கும் தெரிவிக்க வேண்டிய ஒன்றாகும்.
நாட்டுப் புற நம்பிக்கைகளில் பொதிந்துள்ள அர்த்தங்களை நாம் ஒவ்வொன்றாக நன்றாக அலசி ஆராய்ந்தால் அவற்றின் பின்னால் ஒரு விஞ்ஞானப் பூர்வமான ஒரு செயல் இருக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை என தெளிவாக அறியலாம்.
ஒவ்வொருவரும் தாம் கலையில் எழுந்த வுடன் தத்தம் உள்ளங்கைகளை நன்றாக விரித்துப் பார்த்து,கீழ்க்கண்டவர்களை நினைத்துச் சொல்லி தரிசனம் செய்தல் வேண்டும்.
ஒவ்வொருவரும் தாம் கலையில் எழுந்த வுடன் தத்தம் உள்ளங்கைகளை நன்றாக விரித்துப் பார்த்து,கீழ்க்கண்டவர்களை நினைத்துச் சொல்லி தரிசனம் செய்தல் வேண்டும்.
கராக்கரே வஸதே லட்சுமி.
கரமத்யே சரஸ்வதி, கரமூலேச கௌரி
ஸ்யாத் ப்ரபாதே கர தர்சனம்
மங்ளம் பகவான் விஷ்ணு
மங்களம் மது ஸூதனா
மங்களம் புண்டரீ காட்ச
மங்களம் கருடத்வஜா
இவ்வாறு ஒவ்வொரு நாளும் சொல்வதன் மூலம் அன்றைய காரிங்கள் அனைத்தும் சித்திக்கும்.. என்பது தெய்வ வாக்கு.