தமிழ் ஜோதிடம் ஜாதகம்

ஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், வாஸ்துசாஸ்திரம் மூலம் வருங்காலம் அறிய "ஸ்வாதி ஜோதிட ஆய்வகம்" உங்களை அன்புடன் வரவேற்கிறது.

எழுதியவை அனைத்தும்இல்லறச் சோலைக்கு எல்லையில்லா
வழிகாட்டும் அற்புதங்கள்..

ஆணும் பெண்ணும் சேர்ந்து, மாறாத அன்பு கொண்டு, அறததின் நற் பாதையிலே, வாழ்க்கை நடத்திச் செல்வதே இல்லறமாகும்.

இரண்டு இதயங்களும் கூடி வாழுகின்ற அதி அற்புதமான இடம் தான் வீடு..!.

ஆண் மட்டும் இருக்கின்ற வீட்டினை குடும்பம் என்று சொல்ல முடியதல்லவா!

“ நன் மலர்க்கொடி அமைந்த மனையே சிறந்த மனையாகும் தானே!”

“இல்லறம் என்பது கற்புடைய மனைவியோடு இல்லின்கண் இருந்து செய்யும் அறம்!” இது அடியார்க்கு நல்லார் அருள் வாக்கு.

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது
- குறள்

கற்புடைய மனைவியின் காதலுற்று, அறம் பிறழாமல் வாழ்வதே இவ்வுலகில் சொர்க்க வாழ்க்கைக்குச் சமமாகும். ஒருவனுக்கு தனது வீடே சிறந்த கோவில் ஆகும். வீட்டிலே தெய்வத்தைக் காண திறன் இல்லாத யாரும், மலைச் சிகரத்தை அத்ததொரு மூலையில் உள்ள கடவுளைக் காண் இயலுமா என்ன?!..

குடும்ப அமைப்பு சிதைந்தால், உயிர்கள் உறவுகளற்றுப் போகும் தானே!..
உறவுகள் இல்லாத உலகில் வன்முறையும், பலாத்காரமும், சுயநலமும், வாழ்க்கை முறைகளாக மாறும்.
நாடு முழுவதும் இல்லறம் சிறக்கட்டும்.
கணவனின் கண்களாக மனைவி மாறட்டும். மனைவியின் மனமாக கணவன் சிறக்கட்டும்.
இருவரின் பாசமழையில் பிள்ளைகளின் ஆதரவு நிழலில் பெற்றோர் இளைப்பாறுங்கள்..
இல்லறம் இனிதாகட்டும்..

தளத்தை செய்தியோடை மூலம் வாசிப்பவர்கள்

வாசகர்கள்

எங்களின் முதன்மை வலைத்தளம். Our Main Web Site

விருந்தினர் வருகை

சமீபத்தில் வந்தவர்கள்

இதை படித்தவர்கள் படித்தது

அதிகம் படிக்கப்பட்டவை