12 - 09 - 2008 முதல் 18 - 09 - 2008 முடிய
கணிதம்: ஜோதிட கலைமாமணி ஜோதிட தம்பதி உஷா ரெங்கன், பாளை.
அருங்கலைகள் அறுபத்து நான்கில் ஜோதிடக் கலை ஓர் அற்புதக் கலை. தி நெல்லை டைம்ஸ் அக்கலையை தனக்கே உரிய பாணியில் அனைத்து வகை மக்களைக் கவரும் வகையில் வெகு அற்புதமாய் அலசி ஆராய்ந்து அளிக்கவுள்ள, ஆரோக்கிய வழி காட்டும் வார ராசி பலன்கள், ராசி பலன்கள் வரலாற்றில் ஓர் புரட்சியையும், ஒரு அறிய விழிப்பையும் ஏற்படுத்தும் என்பதில் ஒவ்வொருவரும் நம்பிக்கை கொள்ளும் வகையில் வெகுவாய் ஆர்வத்துடன் கணித்துள்ளோம். பலனறிந்து பயன் பெற்றிடுக,
மேஷம்: துணிச்சல் மிகுந்த வாரம். உடல் எடை சற்றே கூடும். ஆகாரங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். வயது 40க்கு மேல் உள்ளவர்களுக்கு, இலேசான தலை சுற்றல் இருக்கும். பித்தம் தரும் வகையில் இரவில் முழிப்பதைத் தவிர்க்கவும். உணவில் எண்ணெய் குறைக்க நன்று. கழுத்து வலி கண்டால் கரு வேலம் பட்டைத் தைலம் நான்கு வேளை தடவ குணமாகும். மாணவர்கள் அரையாண்டுத் தேர்விற்கு அதிகாலையில் எழுந்து படிக்க நன்று.
ரிஷபம்: கால் வலி சற்று கண்டு பின் சரியாகும். அதிகாலையில் சதைப்பிடிப்பு வருமாயின் பிண்டத் தைலம் தடவி வெந்நீர் ஒத்தடம் நன்று. பெண் குழந்தைகளுக்கு, சிறு வயிற்று வலி வந்து பின் குணமாகும். உடல் நன்றாக இருப்பினும் இந்த வாரம் மனதில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் நிறைவேறாததனால், சிறு சிறு கவலைகளும், கண்ணீர் வடிக்கும் நிகழ்வுகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வயது 45 ஐ தாண்டியவர்கள் காலை வாக்கிங் பிராக்டீஸ் நேரத்தை மேலும் சிறிதளவு கூட்டிக் கொள்ள உத்தமம்.
மிதுனம்: வயது 45க்கு மேல் உள்ளவர்கள் ஏதேனும் ஒரு மெடிக்கல் இன்சூரன்ஸ் பாலிஸி எடுக்க நல்லது. அரசு ஊழியர்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி உறுப்பினர் அடடையைப் பெற்று பாதுகாப்பாக வைத்துக் கொள்ள உத்தமம். ஏனெனில் அடுத்த இரு தினங்களில் நான்காமிடத்தில் உள்ள கிரகக் கூட்டு நிமித்தம் உஷ்ணம் சார்ந்த ஓர் பிரச்சனை சந்திக்க நேரலாம். அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். நீர் கடுப்பு அல்லது கல்லடைப்பு போன்று குணங்கள் இருப்பின் நீர் முள்ளி குடிநீர் மற்றும், கண்ணுப்பிள்ளை செடியின் பாகங்கள் வேகவைத்த குடிநீர் அருந்த உத்தமம்.
கடகம்: தனக்கு உடல்நிலை மன நிலை சிறப்பாக உள்ளதாக கருத வேண்டாம். சந்திர அஷ்டம தினங்கள் முதல் மூன்று நாட்கள் உள்ளது. வீட்டில் பிறர் ஒருவருக்கு வருகின்ற காய்ச்சல் அல்லது கண்ணீர் வடிதல் போன்ற குணங்கள் காணப்படலாம். ஒரு முறை இஞ்சி சாறு தேனுடன் கலந்து இந்த வாரம் அருந்த உத்தமம். அதன் காரணமாக வயிற்று உப்பிசம் மற்றும் தேவையல்லாத தொந்தியைக் குறைக்க தற்போதே நடவடிக்கை மேற்கொண்டு, ஆறு மாதத்தில் மாற்றம் காணலாம். ஒபிசிடி என்னும் தேவையற்ற வயிற்றுச் சதையைக் குறைக்கும் வழியைப் பெண்கள் யோகா மூலம் கடைபிடிக்க உத்தமம்
சிம்மம்: சூப்பர் வாரம் கழிந்து சுமார் வாரம். ஆவணி மாதம் !ஞாயிற்றுக் கிழமை என்பதால், அசைவ உணவு தவிர்த்து, அன்று எளிமையான உணவுகளுடன், மாலையில் சிவன் கோவில் தரிசனம் மேற்கொண்டால், எத்தகைய விதத்தில் தேர்வு பயத்தில் உள்ள மாணவ- மாணவியர்களும் தக்க நம்பிக்கை கொள்வர். அரசியல் வாதிகள் தனது எதிர்காலத்தை நிர்ணயிக்க தக்க தருணம் என அறிந்தால், அத்தகு உயர்விற்கு உடல் நலமும் தேவை என அறிந்து தக்க உணவு வகைகைளை மேற் கொள்ள உத்தமம்.
கன்னி: நான்காமிடத்தில் உள்ள குரு நாற்திசையும் புகழ் பரப்பு என்பதில் ஐயமி;லலை. ஆரோக்கியம் கூட நல்ல முன்னேற்றம் தான். ஆனால் ஏழரைச் சனி தன் பங்குக்கு, ஒரே ஒரு முறை அரை நாளுக்கு தலைவலி கொடுத்து விட்டுத் தான் செல்லும். வயது 50க்கு மேல் உள்ளவர்களுக்கு, தனிப்பட்ட குறிப்பு என்ன வென்றால், இரத்த சிவப்பணுக்கள் சராசரி அளவிற்கு உள்ளவனவா என் அறிந்து கொள்ளவதுடன், பழைய முறையில் உள்ளவாறு அடிக்கடி வெற்றிலை; போடுதல் மற்றும் இரவில் கண் விழத்தல் குறைக்க உத்தமம்;. பாசிப்பயறு வாரம் இருமுறை உணவில் சேர்த்தால் நினைவாற்றல் கூடும். பள்ளிக் குழந்தைகளின் தேர்வுக்கு இது நல்ல பலன் தரும்
துலாம்: தங்கம் வாங்கிய சந்தோஷம் இந்த வாரம் ஒரு சிலருக்கு இருக்கலாம். ஆனால் சந்தோஷம் வரும் பலருக்கு திடீரென கால்களில் சுளுக்கு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ராசிநாதன் சுக்கிரன் நிலையைப் பார்த்தால் பணம் கரையும் வாரம் என்று சொல்லலாம். எனவே அடுத்த வாரத்துவக்கம் வரை மனதளவில் தனக்குத் தானே தைர்யத்தை கூட்டிக் கொள்ள உத்ததமம். 18ம் தேதி சங்கடஹர சதுர்த்தி விநாயகப் பெருமானை வழிபாடு மேற்கொள்ள உத்தமம்.
விருச்சிகம்: செவ்வாயின் தன்மை இந்த வாரம் நன்மையாக உள்ளது. உடல்நிலையில் முன்னேற்றம் காணும். விருச்சிக ராசி மகளிர் மகப்பேறு எனில் சிறப்பாக சுகப்பிரசவம் காணுவர். விக்கல் ஒரு சிலருக்கு பிரச்சனையாகும் அளவிற்கு அடிக்கடி தோன்றலாம். மயிலிறகாதி சூரணம் நல்ல பலன் தரும். வாக்கில் குரு உள்ளதால், பெற்றோர்களின் வாழ்த்தும் குரு வின் தரிசனமும் கிடைக்கும் வாய்ப்பைப் பெருக்கிக் கொள்ள நல்லது.
தனுசு: சென்;ற வாரப் பயணக் களைப்பு உடல் அசதி மட்டுமல்ல, ஒரு சில அல்ர்ஜி ஒரு சிலருக்கு ஏற்படலாம். சளி சம்பந்தமான அலர்ஜி எனில் முதலில் கஸ்தூரி மாத்திரை அல்லது தரளி;சாதி வடகம் பயன்படுத்த நல்லது. ஈசினோபிலைக் குறைக்கும் சுண்டவற்றல் ஒரு உணவில் சிறிதளவு ஒரு வாரத்திற்கு சேர்க்க நல்ல பலன் கிடைக்கும். தன்னிலும் வயதில் குறைந்த தம்பி தங்கைகளுக்கு தேர்வுக்குரிய எழுது பொருட்களை வழங்கி மகிழ்ச்சி கொள்ள நல்லது. தன்னை நாடி வீட்டிற்கு வரும் பெரியோர்களுக்கு உணவளித்து உபசரித்தால் அதன் மூலம் பெரியதொரு ஆலோசனையும் தன் குடும்பத்திற்கு மேனமையும் எதிர்பார்க்கலாம்.
மகரம்: கால் வலி என்று கதறுகின்ற வயதான மகர ராசி அன்பர்களுக்கு, தான்வந்தர குழம்பும், காயத்திருமேனி தைலமும் தான் மருந்தாகும். குழந்தைகள் மகர ராசி எனில் காலையில் எழுந்து கல்வி பயில இந்த வாரம் மிகச் சிறந்தது. கடந்த காலாண்டுகாலம் பயின்ற கல்விக்குரிய தேர்வு வருகிறது என்பதால் உற்சாகம் கூடும். மிதிவண்டியில் பிரயாணம் செய்யும் மகர ராசிக்காரர்கள் பொறுப்பாகச் சென்று வர நல்லது.
கும்பம்: சோம்பல் குணம் கூடிக் கொண்டே செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நாளை நாளை என அனைத்தையுமே தள்ளிப் போட்டு விட்டு, செலவுகள் மற்றும் உணவுகளை விரும்பி உண்ணும் செலவுகள் மட்டும் உடனுக்குடன் மேற்கொள்ளும் படியாக ஒரு சிலருக்கு பணம் காலியாகலாம். கவலை வேண்டாம். இந்த வாரத்தில், ஒரு புதிய உத்தரவு மூலம் சிறப்பான எதிர்காலம் கிடைக்கும் என்ற மகிழ்ச்சி கிடைக்கும். தினமும் காலையில் வாக்கிங் பயிற்சி நல்லது.
மீனம்: நண்பர்களால் மகிழ்ச்சி தான் என்றிருந்தது மாறி வருத்தம் வரும் வாய்ப்பு உள்ளது. வாயை அடக்கிக் கொள்வது நல்லது. பார்க்கும் பணியில் வந்துள்ள குழப்பத்தால், தூக்கம் கெட்டு அவஸ்தைப் பட்டால், இரவில் தூங்கும் முன்பாக ஒரு கால் மணி நேரம் நன்றாக தியானம் செய்து விட்டு, இளம் சூட்டுடன் கூடிய நீரில் தேன் கலந்து உண்பது நல்லது. உடல், நடை சோர்வு காணப்பட்டால் சியவனப்பிரசா லேகியம் பயன்படுத்தலாம். வரும் வாரத்தில் ஒரு மகிழ்ச்சி காத்திருக்கிறது.
குறிப்பு: சித்த வைத்திய குறிப்புக்களை ஜாதக பலனுடன் இணைத்துள்ள இந்த புதுமைக்கு தங்களின் வரவேற்பு மற்றும் ஆலோசனைகள் குறித்து தெரிவிக்க வேண்டுகிறோம். அக்கருத்துக்களின் அடிப்படையில் வரும் வாரங்களில், மேம்பட்ட பலன் தரத்தக்க வகையில் கருத்துப் பெட்டமாக இப்பகுதி அமைத்துத் தர உதவிட வேண்டுகிறோம். தொடர்புக்கு: சித்த மருத்துவம் இறுதி ஆண்டு மாணவி: ரெ. உதயகங்கா பி.எஸ்.எம்.எஸ் சுவாதி சித்த மருத்துவ ஜோதிட ஆலோசனைக் குழு,
27 சிவன் மேலரத வீதி, பாளை: 9442586300, 2586300 சுபம்.
Showing posts with label வார_பலன். Show all posts