புரட்டாசி அமாவாசை
நல்ல தருணம் எது! நம் வாழ்க்கை சிறக்க கைக்கொள்ளும் மேன்மையான காரியம் எது!
நமக்கு எத்தனை முறை சொல்வதனாலும் – அப்படி சொல்லிக் கொடுத்த பெற்றோர்களுக்கே நாம்
உணவளிக்க தக்க வாய்ப்பாம் அமாவாசை திதி நாளாகும். அதுவும் புரட்டாசி மாதம் வரும்
திதி மகாளய அமாவாசை நாளாகும்.
என்ன செய்ய வேண்டும்..
பித்ரு லோகம் – பூமியில் அவதரித்து, ஆயுள் முடிந்து மேலுலகம் செல்வதாக
சொல்வோமே.. அந்த பித்ரு லோகத்திலிருந்து நம் முன்னோர்கள் நம்மைக் காண வருகின்ற (அந்த
15 தினங்கள் அதாவது புரட்டாசி மாதம் பௌவுர்ணமி தொடங்கி 15 தினங்கள் அமாவாசை வரை
மஹாளய பட்சமெனும் நாட்களில்), பெற்றோர்கள் இல்லம் நாடி வந்து நம்மை மகிழ்ச்சிப்
படுத்தவும், அவர்கள் மகிழ்ச்சியுறவும் தக்க தருணம் தான் அக்காலம். எனவே நம்மை நாடி வரும் பெற்றோரை சிறப்பாக
உபசரிக்க வேண்டியது நம் தலையாய கடமையாகும்.
எனவே நாம் தானம் செய்வதும், எள்ளும் தண்ணீரும் கலந்த தர்ப்பணம் செய்வதும்
மிகவும் முக்கியமானதாகும். இதனால்
திருப்தியடைந்து பெற்றோர் நமக்கு அருளாசி வழங்குவார்கள். நோயற்ற வாழ்க்கையும்,
வளங்கள் நிறைந்த மகிழ்ச்சியான வாழ்க்கையும் அவர்களின் ஆசியினாலாயே தான் நமக்கு
வழங்க முடியும். குறிப்பாக வருடந்தோறும் தாய் தந்தையர் இறந்த பகுள, சுத்த மாத
திதிநாளில் சிரார்த்தம் கொடுக்க இயலாவிட்டாலும் இந்த மஹாளய அமாவாசையில் தர்ப்பணம்
செய்து மகிழ்வுற வேண்டும். இவ்வாண்டு
சனிக்கிழமை அமாவாசை கடந்த 20 வருடங்களுக்குப் பிறகு அமைந்துள்ளது. ஏழை மக்களுக்கு உதவிட்டால் சனி பகவானின்
அருட்காட்சம் அளவிலாமால் நாம் கிடைக்கப பெறுவோம். முன்னோர்களுக்கு படையல் – அதாவது
சைவ உணவுகளை ஆக்கிப் படைத்து மகிழ்வித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவோமாக.