*18/07/2020* முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் விளக்கத்தை மேலும் தொடர்கிறார்.
தர்ம சாஸ்திரம் சொல்கின்ற வழியிலே அபர கர்மாவினை எந்தவிதமான குறைபாடுகளும்
இல்லாமல் இந்த இக்கட்டான சூழ்நிலையில் எவ்வாறு செய்வது என்பதைப் பற்றி
பார்த்துக்கொண்டு வருகிறோம்.
*அதிலே முக்கியமான ஒன்று சபிண்டிகரணம் என்கின்ற ஸ்ராத்தம். ஒரு வருடம்
முடிவில் அவர்கள் காலமான அதே மாதம் திதி பக்ஷம் வருகின்ற பொழுது செய்ய
வேண்டும்.*
அதுதான் முக்கியமான காலம் சபிண்டீகரணம் செய்வதற்கு. அதுவரையிலும் மாதாமாதம்
மாசிகம் அதே திதியில்/பக்ஷம் ஸ்ராத்தம் செய்ய வேண்டும். 16 மாசிகம் வரும்.
இந்த பதினாறும் செய்து முடித்து முடிவில் சபிண்டிகரணம் செய்யப்படும்.
*இந்த சபிண்டீகரணம் செய்யப்படுகின்ற போது தான் நம் முன்னோர்கள் உடன் இந்த
ஜீவனும் சேர்க்கப்படுகிறார்கள். எப்படி ஆண் குழந்தைகளுக்கு உபநயனம் என்று
ஆனவுடன் கோத்திரத்தில் சேர்கிறார்கள் எப்படி பெண் குழந்தைகளுக்கு திருமணம்
ஆனவுடன் ஒரு கோத்திரத்தில் சேர்கிறார்களோ அதேபோல்.*
அதாவது பெண் குழந்தைகளுக்கு கோத்திரம் இல்லை என்றால் கல்யாணம் ஆகின்ற
வரையிலும் அவள் ஒரு கோத்திரத்தை சேர மாட்டாள், *ஆகையினாலே தான் கல்யாணத்தில்
பிரவரம் என்ற ஒரு அனுஷ்டானம் இருக்கிறது. பாரத்வாஜ கோத்ரோத்பவா அதியாம்
கன்னியாம் என்று சொல்லுவார்கள் அதாவது பாரத்வாஜ கோத்திரத்தில் பிறந்தவள் என்று
சொல்கிறோம். இவள் பாரத்வாஜ கோத்திரத்தில் சேர்ந்தவள் என்று சொல்வதில்லை, ஏன்,
அவளுக்கென்று ஒரு கோத்திரம் இல்லாததினால் பாரத்வாஜ கோத்திரத்தில் பிறந்த இந்த
பெண்ணை வேறு ஒரு கோத்திரத்தில் கொடுக்கிறேன் என்று சொல்வார்கள். அங்கேயும்
தானம் என்று சொல்லாமல் பிரதிபாதயாமி என்று சொல்கிறோம். அப்படி கொடுத்து
விட்டால் அந்தப் பெண் அந்த கோத்திரத்தை சேர்ந்தவள் ஆகிறாள். அதுவரையிலும் இந்த
பாரத்வாஜ கோத்திரத்தில் பிறந்தவள் என்று தான் கணக்கு. அதேபோல்தான் இந்த
ஜீவனும் சபிண்டீகரணம் ஆகின்ற வரையிலே இந்த கோத்திரத்தில் தனியாக இருப்பாள்.
சபிண்டிகரணம் ஆனவுடன் நம்முடைய பிதுர்க்களோடு இவர்கள்
சேர்க்கப்படுகிறார்கள்.* கோத்திரம் என்றால் நம்முடைய முன் தலைமுறை என்று
அர்த்தம். அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது இந்த சபிண்டீகரணம் என்கின்ற
சிராத்தம்.
ஒரு வருடம் கழித்து இதை செய்யவில்லை என்றால் மீண்டும் முதலில் இருந்து அந்த
கர்மாவை ஆரம்பித்து செய்ய வேண்டும். *இதைப்பற்றி தர்மசாஸ்திரம் சொல்கின்ற
பொழுது குலதர்மம் அதாவது குடும்பங்களில் நடக்கக்கூடிய சுப காரியங்கள்
செய்வதற்கு அதிகாரம் இல்லாமல் போய்விடும்.* ஆயுஷ் ஆனது அவனால் ஒரு வருடகாலம்
தீர்மானிக்க முடியாது என்பது நாளையும், தேகம் என்பது அந்த சமயத்திலே
ஆரோக்கியமாக இருக்கும் என்பதை தீர்மானிக்க முடியாத காரணத்தினாலும், முன்னரே
செய்துவிட வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. பன்னிரண்டாவது நாளில்
செய்துவிடு என்று சொல்லப்பட்டிருக்கிறது.
*அதை ஏன் பன்னிரண்டாவது நாள் என்று தர்மசாஸ்திரம் தீர்மானிக்கிறது என்றால்
அங்கு ஒரு தத்துவம் இருக்கிறது. தாயாருக்கு தகப்பனாருக்கு கர்மா செய்து கொண்டு
வருகின்ற பொழுது, கர்மா செய்கின்றவன் அக்னிஹோத்ரி ஆக இருந்தால், பன்னிரண்டாவது
நாள் அமாவாசையாக இருந்தால், அன்றைய தினமே இந்த சபிண்டிகரணம் செய்து, உடனேயே
அந்த தினத்தில் பிண்ட பித்ரு யக்ஞம் என்ற ஒரு அனுஷ்டானத்தை செய்ய வேண்டும்.
அதை செய்து அம்மாவாசை செய்யவேண்டியதான தர்பணத்தையும் செய்துவிடவேண்டும் அவன்
அக்னிஹோத்ரி ஆக இருந்தால். ஏனென்றால் அக்னிஹோத்ரம் செய்பவர், தாயாரோ
தகப்பனாரோ, தகப்பனார் இல்லாவிடில், பிண்ட பிதுர் யஞ்யம் என்பதை அம்மாவாசையில்
செய்ய வேண்டும் என்று வேதம் சொல்லி இருக்கிறது. அது ரொம்ப முக்கியம்
என்பதினாலேயே பன்னிரண்டாவது நாள் செய்து விடவேண்டும். இன்னும் உன்னிப்பாக நாம்
பார்த்தோமேயானால் பதினோராவது நாள் அமாவாசை வந்தால், பதினோராவது நாள்
செய்யவேண்டிய விர்ஷோத்சர்ஜனம், ஆத்திய மாசிகம், ஆவிர்தாத்திய மாசிகம்
இவைகளையெல்லாம் செய்து, உடனேயே இந்த ஒரு வருடம் செய்ய வேண்டியதுதானே
மாசிங்களையும் ஆக்கரிஷ்த்து செய்து, சபிண்டீகரணம் அன்றே செய்து, அம்மாவாசை
அன்று செய்யவேண்டியதான பிண்ட பித்ரு யக்ஞம் செய்து, தர்பணத்தையும் செய்ய
வேண்டும்.* அக்னிகோத்ரிகளுக்கு பதினோராவது நாள் அமாவாசை வந்தால் சபிண்டீகரணம்
அன்றே செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அந்த அளவுக்கு
முக்கியத்துவம் வாய்ந்தது இந்த அமாவாசை என்ற புண்ணிய காலமும் சபிண்டீகரணம்.
*ஸ்பண்டிகரணத்தை*
*ஒரு வருஷம் கழித்து செய்யாமல் முன்னரே செய்வதற்கு ஆகர்ஷம் என்று பெயர்.*
*பின்னாடி அந்தந்த காலங்களில் வரக்கூடிய மாசிகத்தை முன்பே செய்வது. இழுத்து
செய்வது என்பது இந்த ஒரு இடத்தில்தான் வேறு எங்கும் கிடையாது.*
சந்தியா வந்தனத்தில் ஆரம்பித்து வேறு எந்த காரியத்திற்குமே முன்னாடி
ஆரம்பித்து இழுத்து செய்வது என்பது கிடையாது. விட்டதை செய்யலாம் அதாவது காலம்
தாண்டி செய்யலாம் வரப்போவதை செய்ய முடியாது. காலையில் சந்தியாவந்தனம் விட்டுப்
போய்விட்டால் மாத்தியான்னிகத்தில் சேர்த்து செய்யலாம். அபர கர்மாவில்லே இந்த
சபிண்டிகரணம் மாசிகம் ஆக்கர்ஷித்து செய்யலாம் என்று தர்ம சாஸ்திரம் சொல்கிறது.
பின்பு அந்தந்த மாசம் வரக்கூடிய தான மாசிகங்களையும் செய்ய வேண்டும். ஒருமுறை
நாம் இழுத்து செய்து விடுகிறோம் ஏதற்கு சபிண்டீகரணம் செய்ய வேண்டும்
என்பதற்காக. ஆனால் ஒரு வருடம் தொடர்ந்து செய்ய வேண்டியது தான மாசிகங்களை
செய்து கொண்டு வரவேண்டும். அப்படி செய்கின்ற போது *அனுமாசிகம்* என்ற பெயர்.
*அனு மாசிகம் அதாவது அனு என்றால், செய்வதை மீண்டும் செய்வதற்கு அனு என்று
பெயர். பின் தொடர்ந்து செய்வது. அந்தந்த காலங்களில் அதை கட்டாயம் செய்ய
வேண்டும் அப்படி செய்தால் தான் ஆப்திகத்தை செய்ய முடியும். ஆப்திகம் வரையிலும்
மாசிகங்கள் எல்லாம் செய்யாமல் விடக்கூடாது. மேலும் ஊன மாசிகம் என்று வரும்
அதையும்கூட, ஊன மாசிகத்திற்கு மாற்று காலம் கிடையாது. 16 மாசிகத்திற்க்கு
பிறகு ஆப்திகம் செய்ய வேண்டும் என்று தர்ம சாஸ்திரம் காண்பிக்கிறது. இந்த ஊன
மாசிகம் எல்லாவற்றையும் சேர்த்து செய்தால்தான் 16 என்ற எண்ணிக்கை வரும். அந்த
ஒரு வருட முடிவில் அன்ன ரூபமாக ஆப்திகத்தை செய்ய வேண்டும். உலகத்தில் இது
பலவிதமாக நடக்கிறது தர்ப்பணம் ஆக செய்வது, வருடாவருடம் செய்யக்கூடிய ஸ்ராத்தம்
கூட தர்ப்பணம் ஆக செய்வது என்று பலமுறைகள் சொல்லப்பட்டு இருந்தாலும் கூட, தர்ம
சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்று பல பேர் கேட்கிறார்கள்.*