நவராத்திரியில்.. கல்வி சிறக்க .. ஜோதிட - டாக்டர் அட்வைஸ்.!.
பள்ளி, கல்லூரி செல்லும் குழந்தைகளை தங்களின் அதிக பட்ச ஆசைகளை நிறைவேற்றும் ரோபாக்களாக பார்க்காமல், வளரும் பருவத்தில் தனக்கே உரிய, ஓடி, ஆடி விளையாடுத்ல், சுதந்திரமாக பேச, சிந்தித்து செயல்பட அனுமதி அளிக்கலாமல்லவா..
குழந்தைகள் ஆரோக்கியமாக இருந்தால் தான் வெற்றிக் கனிகளை அள்ளிக் குவிக்க முடியும். உடலும் மனமும் நல்ல நிலையில் இருப்பதே முழுமையாக ஆரோக்கியத்தைக் குறிக்கும். மனதி்னை பலப்படுத்த ”உன்னால் முடியும்” ”நீ சாதிப்பாய்” போன்ற நேர்மறையான சொற்களைக் கூறிக்கொண்டே இருக்க வேண்டும். நம்பிக்கையான பெற்றோர்களின் பேச்சு, தெளிவான சிந்தனை, குறிக்கோளுடன் கூடிய திட்டமும் – செயல்படுத்துதலும் சரியான வழிமுறை இருந்தால் மட்டும் சாதிக்க முடியும். ” வாழ்ந்து பார்க்கத் தான் வாழ்க்கை ” என்பதை மற்நது விடக்கூடாது. வாழ்க்கை ஜெயித்துக் காட்டதான் எனவும், தேர்வு போ்னறவை நியாயமான போராட்டங்கள் என்பதையும் உணர வைக்க வேண்டும்.
தற்காலத்தில் குழந்தைகளுக்கு கேட்டது கேட்ட மாத்திரத்தில் பெற்றோர்களின் சக்திக்கு மிஞ்சியதாக இருந்தாலும், கிடைக்கச் செய்கிறார்கள். இதனால், தாங்கள் நினைத்தவைகள் அனைத்துமே கிடைத்தே தீர வேண்டும் என பிடிவாதத்துடன் இருக்கப் பழகிக் கொள்கின்றன குழந்தைகள்!. நினைத்ததற்கு மாறாக சிறு தோல்வி ஏற்பட்டாலும், மனச் சோர்வு தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்டு தவறான முடிவுகளுக்கு முயற்சி செய்து இன்னல்களைத் தானே உருவாக்கிக் கொள்கின்றனர்.
ஆலமரம் இருக்கிறது.. நன்றாக வேரூன்றி பக்கக் கிளைகளுடன் பார்ப்பதற்கு பெரிதாக இருந்த போதும், பெரும புயலில் அம்மரம் முழுவதுமாக சரிவதில்லையா.. ஆனால் நாணல் இருக்கிறது.. எத்தகைய புயல், மழை மற்றும் இயற்கை சீற்றங்களையும் வளைந்து கொடுத்து சமாளிப்பதில்லையா..
இவற்றிற்குள்ள தன்மைகளை குழந்தைகளுக்கு விளக்குவதோடு, நாம் எடுக்கின்ற முடிவுகளும். திடமாகவும் இருக்க வேண்டும், அதே நேரம் வளைந்து கொடுத்து தனக்கு கேடு தராமலும் இருக்க வேண்டும் என்ற எண்ணஙக்ளையும் அறிவுரை மூலம் உருவாக்க வேண்டும்.
உடலை வன்மைப் படுத்தவும், நினைவுத்திறனை மேம்படுத்தவும சித்தர்கள் அருளிய அறிவுரைகள்
சூரிய உதயத்திற்கு முன் படுக்கையிலிருந்து எழுந்து நல்ல காற்றோட்டமுள்ள இடத்தில் யோகாசனம் செய்து குறிப்பாக, ஏக பாத ஆசனம், பத்மாசனம், சிரசாசனம், யோகமுத்ரா போன்ற ஆசனங்களுககு கூடுதல் கவனம் செலுத்தி, வலிமை பெறலாம்.
ஞான முத்திரையை தினமும், காலை மாலை 20 நிமிடம், செய்ய வேண்டும். ஞான முத்திரை என்பது, நன்கு அமர்ந்து கொண்டு, குரு விரலை (ஆள்காட்டி விரல் ) கட்டை விரலின் நுனிப் பகுதியைத் தொடுமாறு வைத்து விட்டு விட்டு அழுத்தம் தர வேண்டும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். வல்லாரை, பிரமி ஆகிய மூலிகை மருந்துகளை அளவறந்து கொடுக்கலாம். அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை மறக்கலாகாது.
இப்படிச் செய்வதால், நினைவாற்றல் – மனதை ஒருமுகப் படுத்தும் திறன் – டென்ஷன் நீங்கி அதிசயிக்கத்தக்க முன்னேற்றம் கிடைப்பதோடு முதன்மை மாணவ மாணவியாக திகழ்ந்து, பெற்றோரையும், பயிற்றுவிக்கும் ஆசிரிய ஆசிரியைகளையும் மகிழ்விக்கச் செய்லாம் என்பதில் ஐயமில்லை.. மாலை நேரங்களில் ”சினாக்ஸ்” என்ற வகையில், உணவாக மநதத் தன்மையை ஏற்படுத்தும் எண்ணெயப் பதார்த்தங்களை விலக்கி, குழந்தைகளின் ஜாதகத்தின் கிரகநிலைக்கேற்ப, அவர்தம் ஜாதகத்தில் கண்டுள்ள கல்வி, உயர்கல்வி, சிறப்புக்கல்வி ஆகிய இடங்களில் உள்ள ஆதிபத்தியம் காரகத்துவத்திற்கேற்ப, உரிய தெய்வத்தை பூஜிப்பதோடு, நைவேத்யமாக, சத்துள்ள தானியங்களை (முக்கியமாக தன் ஜாதகத்திற்கு ஏற்ற) உட்கொள்ள தெயவ பலம் கிட்டுவதோடு, உடலுக்குத் தேவையான புரதமும் கிடைக்கிறது. கலைவாணி கருணை அருள் கிடைத்தால் எல்லா வகையிலும் காரியசித்தி பெற்று வளமுடன் வாழலாம்.
மேலும் விவரமறிய – டாக்டர் ரெ. உதயகங்கா BSMS., மற்றும் ஜோதிட தம்பதி உஷாரெங்ன், சுவாதி சித்த மருத்துவ ஜோதிட ஆலோசனை இயக்கம், 24A சிவன் கோவில் மேல ரத வீதி, பாளை. தொ.பேசி. 2586300, கைபேசி 9442586300, 9443423897.