தமிழ் ஜோதிடம் ஜாதகம்

ஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், வாஸ்துசாஸ்திரம் மூலம் வருங்காலம் அறிய "ஸ்வாதி ஜோதிட ஆய்வகம்" உங்களை அன்புடன் வரவேற்கிறது.

எழுதியவை அனைத்தும்

    
புயல் , மழை வெள்ளம், சூறாவளி, சுனாமி போன்றவை அறிய விஞஞான விளக்கங்களுடன் பஞ்சாங்கம் பயன்படுத்துதல் பாருக்கு நலமே!
ஜோதிட பஞ்சாங்க கணித சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறதான கோள்களின் தன்மைகளின் அடிப்படையில் இயற்கையை நிர்ணயிக்கும் முறை காலம் காலமாக அனுசரிக்கப்பட்டு, அதன் விளக்கங்கள் பஞ்சாங்க குறிப்புகளில் ஆண்டுதோறும் குறிக்கப்பட்டு வருகின்றன.  நாம் அனைவரும் தினமும் காலையில் எழுந்தவுடன் அன்றைய தினத்தின் பஞ்சாங்க வாசகமெனும், ஐந்து அங்கங்களான, திதி, வாரம், நட்சத்திரம், யோகம் மற்றும் கரணம் ஆகியவற்றினை அறிந்து கொள்வதும் அதன் அமைப்பின் பலன்களைத் தெரிந்து அதன்படி, எந்தெந்த வாரம், திதி மற்றும் நட்சத்திரங்கள் எந்தெந்த காரியங்களுக்கு உகந்தது என்றும் அன்றைய நாளில் நாம் மேற்கொள்ளவுள்ள பணிகளின் முக்கியத்துவத்தையும் உணர்ந்து, இணைத்துப் பார்த்து, ஒரு ஒழுங்கான முடிவுக்கு வருவது சிறந்தது என்பதை எல்லோரும் உணர்ந்து கொள்வது நல்லது.  நம்முடைய வீடுகளில் பஞ்சாங்கம் இல்லையெனினும், எல்லா தினசரி காலண்டர்களிலும், அத்தகைய விளக்கங்கள் தரப்படுகின்றன... இது போக, தற்போதைய சூழலில் வானிலையில் ஏற்படும் மாற்றங்களும் நாம் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லதே..  உதாரணமாக வரும் 20-11-2017 முதல் 
1) அந்தமான் காற்றழுத்த தாழ்வு மண்டலம் 1510 கிமீ. எனவும், 
2) புயல் வீசும், குண்டாறு அணை பாதிப்பு எனவும் குறிக்கப்பட்டுள்ளது.
மேலும்,
நவம்பர் 28ல், (2017) கடல் கொந்தளிப்பு, காற்றழுத்த தாழ்வு கடலூர் 1550 கிமீ. எனவும், ராமேஸ்வரம் பாதிப்பு எனவும் குறிக்கப்பட்டுள்ளது.
அதே போல், டிசம்பர் 4, 2017 வடநாடு பாதி, மஹாராஷ்ட்ரா பாதிப்பு கடும் குளிர் எனவும், சென்னை மிதக்கும் எனவும் குறிக்கப்பட்டுள்து. 
மேலும் டிசம்பர் 15ல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் எனவும், பாண்டி 1625 கிமீ எனவும், திரிகோணமலை பாதிப்பு எனவும் குறிக்கப்பட்டுள்ளது.. இவ்வாறான தகவல்கள் அவ்வப்போது நாம் அறிந்து கொள்வதும், அதன் நிலைமைகளை நன்றாக ஆய்வு செய்து, நினைவில் நிறுத்தி நமக்கும் பொதுவாக அந்தந்த பகுதி மக்களுக்கும் எடுத்தியம்பி, உரிய முன்னெச்சரிக்கை குறிப்புகளை தயார் நிலையில் வைத்துக் கொள்வதும் சாலச் சிறந்ததாகும்..
குறிப்பாக, நாம் அவ்வப்போது அனுபவிக்கும், பல்வேறு செயல்பாடுகளைச் சரியான பின் கோப்பு என்னும் பேக் பைல் மூலம் சரிபார்க்கப்படுதலும், ஆராய்ச்சி முறையில் குறிப்பெடுத்துக் கொள்வதும் வருங்கால சந்ததியர்க்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் தானே..! நன்றி...

தளத்தை செய்தியோடை மூலம் வாசிப்பவர்கள்

வாசகர்கள்

எங்களின் முதன்மை வலைத்தளம். Our Main Web Site

விருந்தினர் வருகை

சமீபத்தில் வந்தவர்கள்

இதை படித்தவர்கள் படித்தது

அதிகம் படிக்கப்பட்டவை