தமிழ் ஜோதிடம் ஜாதகம்

ஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், வாஸ்துசாஸ்திரம் மூலம் வருங்காலம் அறிய "ஸ்வாதி ஜோதிட ஆய்வகம்" உங்களை அன்புடன் வரவேற்கிறது.

எழுதியவை அனைத்தும்

தை 2 கணு உற்சவ மகிமை..

அன்பர்களே
குடும்ப ஒற்றுமை
குடும்ப குதூகலம்
குடும்ப ஷேமம்
குடும்ப உறவுமுறை
பிணியிலா பேரூவகை
எப்படி நடைமுறையில்.. இதோ..
 ஒவ்வொருவருடமும் வானமாமலை தாயார் தைமாதம் இரண்டாம் நாள் தன் பிறந்தவீட்டிற்க்கு மாப்பிள்ளையுடன் வந்து கனு உற்சவம் கொண்டாடுவார் அவ்வமயம் பெருமாள்தாயாருக்கு சகலமரியாதையுடன் விசேஷதிருமஞ்சனமும் சாற்றுமுறையும் ஶ்ரீவைஸ்ணவ கோஷ்டியுடன் மகரகண்டிசேவை வைபமும் நடக்கும்.

ஒவ்வொரு வருடம் மூன்றுமுறை நடக்கும் மகரகண்டிசேவையில் இந்த "தை" கனு உற்சவமும் ஒன்று.

இவ்வருடம் இன்று 16/ 01/2019 புதன் கிழமை கனுப்பொங்கல் கனுப்பொடி உற்சவம் நடைபெறுகிறது

கனுப்பொடி என்பது யாருக்காக

பெண்கள் தங்கள் உடன்பிறந்தவர்களை தங்களது பிறந்த இல்லத்திற்க்கு வந்து கண்டு பேசி ஆனந்தித்து அவர்கள் இன்னும் சிறப்பாக வாழ வேண்டி இறைவனிடம் பிரார்த்தனைகள் செய்து அவர்களின் ஆசிகளை பெற்று மகிழும் நாள்

பொதுவாக சுமங்கலிப் மற்றும் கன்னிப் பெண்கள் கன்யா பெண்கள் தைமாதம் இரண்டாம் நாள் கனுப்பொங்கல் அன்று  வீட்டில் தெருவில் உள்ள தம்மை விடவயதில் மூத்த சுமங்கலிகள் மற்றும் கன்யா பெண்களை நமஸ்கரித்து அவர்களிடம் நெற்றியில் மஞ்சள்  கீறி விடச்சொல்லி தங்கள் கையில்  கொண்டு போகும் பசு மஞ்சளை  அவர்களிடம் கொடுப்பர் அவர்களிடம் மஞ்சள் கீறிக்கொண்டு

பின்னர் சகோதரர்களிடம் மஞ்சள் கீறிக்கொள்வர் அவ்வமயம் கனுப்பொடி என தங்கைகள் அக்காக்கள் ஆகியோருக்கு தங்களால் இயன்ற கனுபொடியை(பணம் நகை என ஏதோ ஒரு பொருளை எதா சௌகரியமாக) தனக்காக தன்குடும்பத்திற்காக வேண்டிக் கொள்ளும் சகோதரிகளுக்குக் கொடுப்பர்.

கனு அன்று தங்களிடம் மஞ்சள் கீறிக்கொள்ள வரும் பெண்களுக்கு பெரிய சுமங்களிகள் நல்ல வார்த்தைகளை ஆசீர்வாதமாக கூறிக்கொண்டே பசு மஞ்சளை நெற்றில் கீற்றி விடுவார்கள்

அந்த ஆசிர்வாத வார்ததைகள் என்ன தெரியுமா?

மஞ்சள் கீறிக்கொள்ளும் பெண்னே நீ தாயோடும் தந்தையோடும் சீரோடும் சிறப்போடும் பேரோடும் புகழோடும் பெருமையோடும் கீர்த்தியோடும் உரிய வயதில் தாலிகட்டி மணப்பெண்ணாக பெரியவளாகி பிள்ளைகள் பெற்று உன்னை கொண்டவன் மனம் மகிழத் தையல்நாயகி  போலத்தொங்க தொங்க தாலி கட்டித் தொட்டிலும் பிள்ளையுமாக மாமியார் மாமனார்  மெச்ச நாத்தியும் மாமியும்  போற்ற பிறந்தகத்தோர் பெருமை விளங்கப் பெற்ற பிள்ளைகள் ஆயுள் ஓங்க உற்றார் உறவினரோட புத்தாடை புது மலர் சூடி புது மாப்பிள்ளை மருமகளோடு புது புது  சந்தோஷம் பெருகி ஆல்போல் தழைத்து அருகு போல் ஏரோடி என்றென்றும் இனிமையாக வாழனும் எப்போதும் சிரித்த முகத்தோடு இருக்கனும்

என்று சொல்லி வாழ்த்துவர்

பின்பு வீட்டிற்கு வந்து காக்காய்க்கு மஞ்சள்செடி இலையில் பலவகை சாத்ததை கலந்துபரிமாரி அத்துடன் வெற்றிலை பாக்கு பழம் கரும்பு துண்டு என காக்காபொடி வைத்து அதை ஜலம் தெளித்து சுத்தி செய்து எறும்புகள் வராவண்ணம் நீர் சுற்றி கற்பூர ஹாரத்தி காண்பித்து உடன்பிறந்த சகோதரர்கள் அவர்கள் குடும்பம் தனது கணவன் அவரது சுற்றங்கள் தன்குடும்பம் குழந்தைகள் நலனுக்காக மனமுறுகி பிரார்த்திப்பர்

எப்படி

காக்காய் பொடி வைத்தேன் கனுப்பொடி வைத்தேன் எங்கள் குடும்ப நன்மைக்காக காக்காய்க்கு எல்லாம் கல்யாணம் காக்காய் கூட்டம் பிரிந்தாலும் எங்கள் கூட்டம் பிரியாது இருக்கணும் என்று கூறி நமஸ்காரம் பண்ணிவிட்டு

பின்பு தலைகுளித்து அன்று புதிதாக பலவித கலந்த சாதங்கள் (சிதராண்ணம்) செய்து வீட்டில் திருவாராதன ஸவாமிக்கு கண்டருளபண்னி அதையும் காக்காய்க்கு வைத்தபின்  தான் ஸ்வீகரிப்பர்

காக்காய்க்கு ஏன் சாதம் வைக்கிறோம் என்றால்

காக்காய் கூட்டம் அவ்வளவு சீக்கிரம் தனியாக பிரியவே பிரியாது அதுபோல் நம் குடும்பமும் பிரியாது  வளரனும் என்பதை அந்த பெண்கள் விரும்புவார்களாம் அதனாலதான்  காகத்தை நம் முன்னோர்களாக  பிதுர்களாக எண்ணிப் தினமும் பாவிக்கிறோம் ஆகாரமிடுகிறோம்

இந்த கனுப்பொடி உற்சவத்திற்காக வானமாமலை தாயார் இந்த மாதம் 16/01/2018 அன்று  தன் தகப்பனாரான ஜீயர் மடத்திற்க்கு எழுந்தருளி கனுவைப்பதுடன் மகரகண்டி சேவையும் நடக்கும்

நாம் வானமாமலை திவ்யதேசம் செல்ல முடியவில்லை என்றாலும் வீட்டில் இருந்தவாறே கனுவைத்து வானமாமலை தாயாரையும் தெய்வநாயக பெருமாளையும் நமக்காக நம் சகோதரர் மற்றும் நம் கணவன் அவர்களது உற்றார் உறவினர்களுக்காகவும் நலம் வேண்டி அந்த திவ்ய தம்பதிகளை பிரார்ததிப்போம்

ஜெய் ஶ்ரீராமா!

தளத்தை செய்தியோடை மூலம் வாசிப்பவர்கள்

வாசகர்கள்

எங்களின் முதன்மை வலைத்தளம். Our Main Web Site

விருந்தினர் வருகை

சமீபத்தில் வந்தவர்கள்

இதை படித்தவர்கள் படித்தது

அதிகம் படிக்கப்பட்டவை