தமிழ் ஜோதிடம் ஜாதகம்

ஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், வாஸ்துசாஸ்திரம் மூலம் வருங்காலம் அறிய "ஸ்வாதி ஜோதிட ஆய்வகம்" உங்களை அன்புடன் வரவேற்கிறது.

எழுதியவை அனைத்தும்

        

 ஜய வருடத்திய மகர சங்கராந்தி பலன்கள் அறிவோமா.. 

தை திருநாளாம் முதல்நாளில், அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்... இதோ... தை மாதம் முதல்நாள் மற்றும் இவ்வாண்டு 
26-01-2015 ரத சப்தமி ஆகிய தினங்கள் வரும் ஓராண்டு பலன்களை நிச்சயிக்கும் நாளாக அமைகிறது...  மகர மாத துவக்கத்தில், சங்கராந்தி அம்மன் தோற்றம் மற்றும் தொழில், அணியும் அணிகலன்கள் மற்றும் செயல்கள் அறிந்து அடுத்த ஓராண்டு பலன்களைத் தெரிந்து கொள்வது அக்காலம் தொட்டே அனுசரிக்கப்பட்டு வருகிறது.  அந்த வகையில்,, இதோ.

ஜய வருடத்திய மகர சங்கராந்தி பலன்கள் அறிவோமா..
எண்
பொருள்
விளக்கம்
1
ஸங்கிரமா தேவியின் பெயர் மந்தா
அரசர், அமைச்சர்களுக்குப் பீடை
2
வாகனம்  யானை
வளங்கள் பல மதிப்பிழ்ந்து நாசமாகும்
3
வஸ்திரம் நீலம்
நீசர்களுக்கு, துஷ்டர்களுக்கு பீடை
4
ஆபரணம் பவளம்
தோல் கட்டிகள் பிளவைகள் பயம்
5
விபூதி பூசிய தன்மையால்
வேளாளர்களுக்குப் பீடை
6
புஷ்பம் – பூ – நீலோத்பல பூ
வியாதி, பீடை
7
கையில் வில் ஏந்தி உள்ளதால்
மக்களிடையே கலகம்
8
சஸ்திர தாரணம்
மஹத்தான பயம்
9
ஸ்நாநம் – அபிஷேகம் – வில்வச் சாறு
சுரம் (காய்ச்சல்)
10
குடை – கருப்பு -  சாமரம் – கருப்பு
வியாதிகளும் பீடைகளும்
11
வாத்யம் – டிண்டிம
அரசர், அமைச்சர்களுக்கு பயம்
12
பாத்திரம் -  சிலா
சுகப் பிரசவங்கள் அதிகம நிகழும்
13
உட்கொள்வது – பால்
மழை குறையும
14
பிரயாண திசை – ஆக்கினேயம் தென்கிழக்கு
அத்திசையில் உள்ளவர்களுக்குப் பீடை
15
முகம் பார்த்து அமர்ந்திருப்பது வடக்கு
உலகத்திற்கும் மிக செள்க்கியம்
16
திருஷ்டி – பார்ச்சுவ
சுகம்
17
ஜாதி – ராட்சஸ
நீசர்களுக்குப் பீடை
18
நேரம் – நித்திரை செய்யும் நேரம்
வியாதிகள் விட்டுப் போகும்
19
பட்சம் – கிருஷ்ண பட்சம்
துர்பிஷம்
20
கிழமை  - புதன்
சௌக்கியம்
21
சித்திரை, சுவாதி, விசாகம் நட்சத்திரக்கார்ர்க்கு
தன்னாசம்
22
அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம் ஆகியோருக்கு
தன லாபம்.   மற்றும் முன்னேற்றப் படிகட்டுக்ள் ஏறி வெற்றி கனி பெறலாம்
23
அவிட்டம், சதயம், பூரட்டாதி
ஸ்தானநாசம்
24
உத்திரட்டாதி, ரேவதி, அசுபதி, பரணி, கார்த்திகை, ரோகிணி
ஸ்தான பலம்
25
மிருகசீர்ஷம், திருவாதிரை. புனர்பூசம்
இராஜயோகம்
26
பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம் மற்றும் ஹஸ்தம்
இராஜ வெகுமானம்.


நல்லொழுக்கப் பிரார்த்தனைகள் நமக்கு அள்ளித் தந்திடுமே!.. 

பொலிவுடனே பொங்கட்டும் இவ்வாண்டுப் பொங்கல்!
நிரந்தரமாய் தங்கட்டும் நிம்மதி நம் வீட்டில்!
பொல்லாத குணத்தை எல்லாம் போகியிலே தீ வைப்போம்!
இல்லாத நற்குணங்கள் இரவல் வாங்கி சேமிப்போம்!
உழவு இன்றி உலகம் இல்லை என்ற உண்மை உணருவோம்!
உழவர் வாழ்வு உயர்ந்திடவே உறுதியேற்று உதவுவோம்!
கதிரவனின் கருணைக்கு நன்றி கூறும் நாளிது!
கரும்பு மென்று கவலை துப்பும் களிப்புமிகு நாளிது!
குறைந்த செலவில் சிறந்த உணவு பொங்கல் தவிர வேறில்லை!
வெங்காயமும் வெள்ளைபூண்டும் இதற்குமட்டும் தேவையில்லை!
தைமகளின் பிறந்தநாளை தமிழ் மணக்க போற்றுங்கள்!
குதுகலமாய் கொண்டாட பொங்கல் வாழ்த்துகள்!
பொங்கலோ பொங்கல்...!!
தை பிறந்தால் புது வழி பிறக்கும்
இது சத்தியமாகட்டும்;
குனிபவர் நிமிர்ந்தால் கூரை கோபுரமாகும்
இது சடுதியில் நிகழட்டும்;
உழுவதே தொழிலென கொண்டவர் வாழ்வு
அழுவதே என்ற நிலை மாறட்டும்;
இமைகளை மூடிக் கொண்டே பிறக்கும் குழந்தைகள்
இனி, விழித்துக் கொண்டே வெளியே வரட்டும்;
காற்று தொட்டதும் கரையும் கற்பூரமாய்
எழும் தோல்விகள் தோற்கட்டும்;
துளிநீர் பட்டதும் உருகும் உப்புக்கல்லாய்
நம் துன்பங்கள் மூழ்கட்டும்;
மண்ணை முட்டி துளைக்கும் விதையாய்
நாளும் முயற்சிகள் முளைக்கட்டும்;
வானம் எட்டி கிழியும் அளவு
கைகளில் வெற்றிகள் குவியட்டும்;
பசும் பாலில் நீரை கலக்கும் எண்ணம்
இன்றைய தினத்திலாவது மறக்கட்டும்;
எங்கும் ஏழை சாதி எரிந்ததென்று
இந்த சர்க்கரை பொங்கல் பொங்கட்டும்...!!
பொங்கலோ பொங்கல்...!!
உறவுகளுக்கும்
உங்களது குடும்பத்தினருக்கும்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
www.tamil-astrology.com
Jothida Thambathi
Rengan Usha &  Family

தளத்தை செய்தியோடை மூலம் வாசிப்பவர்கள்

வாசகர்கள்

எங்களின் முதன்மை வலைத்தளம். Our Main Web Site

விருந்தினர் வருகை

சமீபத்தில் வந்தவர்கள்

இதை படித்தவர்கள் படித்தது

அதிகம் படிக்கப்பட்டவை