தமிழ் ஜோதிடம் ஜாதகம்

ஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், வாஸ்துசாஸ்திரம் மூலம் வருங்காலம் அறிய "ஸ்வாதி ஜோதிட ஆய்வகம்" உங்களை அன்புடன் வரவேற்கிறது.

எழுதியவை அனைத்தும்இல்வாழ்க்கையை இல்லற சோலையாக்கும் இரகசியங்கள்
(ஜோதிட கலைமாமணி-ஜோதிட தம்பதி வீரவநல்லூர் உஷா ரெங்கன்)

நாமறிந்த கலைகள் பலவற்றுள் ஜோதிடக்கலை ஒன்று தான் நம் எதிர்காலத்தை இனிதே உணர்த்தும் அற்புதப் பாங்கை நமக்களிக்கின்றன.

இவ்வரிய கலைதனை தாமும் உணர்ந்து மற்றோர்க்கும் எடுத்துரைக்கும் பாங்கை இறையருளால் பெற்ற ஜோதிட விஞ்ஞானிகள், இவ்வரிய கலையை பிரகாசிக்க துணை நிற்கும், வேத ஆகம விற்பன்னர்கள், புரோஹித, பாகவத, தெய்வ கைங்கர்ய ஆச்சார்யர்கள் ஆகியோர் ஒத்துழைப்போடு நாளும் பொழுதும் கலைவளர்க்க தொண்டு புரிந்திட வேண்டுமே. அந்த வரிசையில், ஜோதிட தம்பதியாய், பரம்பரையாகவும், பல்கலைக்கழக பட்டய, பட்ட ஜோதிடவியல் பயின்று, பல்வேறு வார, மாத, செய்தி இதழ்களில், ஜோதிடக்கட்டுரை எழுதி வருவதுடன், இணைய தளம் (www.tamil-astrology.com) மூலமும் 25 ஆண்டுகளாக ஜோதிட சேவையாற்றும் திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் ஜோதிட கலைமாமணி ஜோதிட தம்பதி திரு நா. ரெங்கன் எம்.ஏ.,டி.டி.எட்., டி.அஸ்ட்ரோ., தமிழாசிரியர், திருமதி அ. உஷா ரெங்கன் பி.ஏ., (அஸ்ட்ரோ)., டி.அஸ்ட்ரோ ஆகியோரின் திருமண பொருத்த நிர்ணயக் குறிப்பைக் காண்போமா..

விவாஹ பொருத்த விவரங்கள்

தினப் பொருத்தம்

வதூ நட்சத்திரத்திலிருத்து, வரன் நட்சத்திரம் வரை எண்ணி, 9 ஆல் வகுக்க மீதி 3,5,7 நல்லதல்ல. மற்றவை சுபம் எனக் கொள்க. வதூ வரன் (நௌரொ – நௌரி) நட்சத்திரம் ஏக நட்சத்திரமாக வரும் எனில், ரோகிணி, திருவாதிரை, மகம், ஹஸ்தம், விசாகம், திருவோணம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் உத்தமம். அசுபதி, காரத்திகை, மிருகசீர்ஷம், புனர்பூசம், பூசம், உத்திரம், சித்திரை, அனுஷம், பூராடம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்கள் மத்திமம். மற்றவை கூடாது. (குறிப்பாக ஏக நட்சத்திரம் எனும் போது, கோள்சார கெடுபலன்களான – ஏழரைச் சனி, அஷ்டமச்சனி, ஏகதிசை காலம், திசா சந்தி ஆகியவை ஒன்றாக வரும் வாய்ப்பு உள்ளதால் மிக கவனம் கொள்ள வேண்டும்)
கணப்பொருத்தம்

நட்சத்திரங்களில் தேவகணம். மனுஷ கணம், ராட்சஸ கணம் என மூன்று பிரிவுகள் உள்ளன. தேவ கணம் உயர்ந்த குணம், மனுஷ கணம் வளைந்து செல்லும் சராசரி குணம், ராட்சஸ குணம் கோப குணங்களுடன் வளையாத குணமும் கொண்டவர்களாக இருப்பர். வதூ, வரர் ஏக கணத்தில் அமைவது விசேஷம். தேவ, மனுஷ கணம் கொண்ட வதூ எந்த கணம் கொண்ட வரனுடனும் ஒத்துப் போவார். ராட்சஸ கணத்தில் பிறந்த வதூ மனுஷ கணத்தில் பிறந்த வரனுடன் ஒத்துப் போக வழியில்லை. (குறிப்பு எந்தெந்த நட்சத்திரங்கள் எந்தெந்த கணம் என பஞ்சாங்கத்தில் காணலாம்)
மாஹேந்திர பொருத்தம்

வதூ நட்சத்திரத்திலிருந்து வண்ணி வரும் வரன் நட்சத்திரம் 4, 7, 10, 13, 16, 19, 22, 25 ஆக வந்தால் உத்தமம். மற்றவை உத்தமமல்ல. இது குழந்தைப்பேறு தடையின்றி கிடைக்கவும் – சுகப்பிரசவத்திற்கும் துணை நிற்கிறது.
ஸ்திரி தீர்க்கப் பொருத்தம்

வதூ நட்தசதிரத்திலிருந்து, எண்ணும் போது வரன் நட்சத்திரம் 13க்கு மேல் வந்தால் உத்தமம். ரக்கு மேல் மத்திமம். 7க்குள் வந்தால் அதமம்.
யோனிப் பொருத்தம்

இல்வாழ்க்கையில், இல்லற – தாம்பத்திய ஒற்றுமைக்குரிய பொருத்தம். வரன் நட்சத்திரம் ஆண் மிருகமாகவும், வதூ நட்சத்திரம் பெண் மிருகமாகவும் வருவது விசேஷம். மாறி இருந்தால் மத்திமம். மிருகங்கள் ஒன்றுக்கொன்று பகையாக இருக்கக் கூடாது. சிங்கம், புலிக்கு - குதிரை, யானை, ஆடு, எருது, பசு, மான் ஆகியன பகையாகும், குதிரைக்கு – எருமையும், குரங்குக்கு – ஆடும், மானுக்கு – நாயும், பாம்பு, பூனைக்கு – எலியும், நாய்க்கு – பூனையும் பகையாகும். (குறிப்பு எந்தெந்த நட்சத்தரம் எந்தெந்த மிருகம் என்பதை பஞ்சாங்கத்தில் காண்க)
ராசிப் பொருத்தம்

வதூ ராசியிலிருந்து – வரன் ராசி எண்ணும் போது, 6க்கு மேல் இருந்தால் உத்தமம். 8 வது ராசி கூடாது. (சஷ்ட அஷ்டகம் என்னும் 6வது 8வது ராசிகள் இல்லாமல் இருப்பது விசேஷம்)
ராசி அதிபதி பொருத்தம்

வதூ ராசிக்குரிய அதிபதியும், வரன் ராசிக்குரிய அதிபதியும் நட்பாகவோ, அல்லது சமமாகவோ இருத்தல் நன்று. பகையாக இருத்தல் கூடாது. ஒவ்வொரு கிரகத்திற்குமுரிய நட்பு, சம, பகைக்கிரகங்களின் விவரம்
கிரகம்
நட்பு
சமம்
பகை
சூரியன்
சந்திரன், செவ்வாய், குரு
புதன்
சுக்கிரன், பகை
சந்திரன்
சுக்கிரன், புதன்
செவ், குரு, சுக், சனி
சத்ரு இல்லை
செவ்வாய்
சூரியன், சந்திரன், குரு
சுக்கிரன், சனி
புதன்
புதன்
சூரியன், சுக்கிரன், சனி
செவ்வாய், குரு
சந்திரன்
வியாழன்
சூரியன், சந்திரன், செவ்வாய்
சனி
புதன், சுக்கிரன்
சுக்கிரன்
புதன், சனி
செவ்வாய், குரு
சூரியன், சந்திரன்
சனி
புதன், சுக்கிரன்
வியாழன்
சூரியன், சந்திரன்,செவ்

குறிப்பு மேஷ, விருச்சிக ராசிகளுக்கு அதிபதி செவ்வாய்,
ரிஷப, துலா ராசிகளுக்கு அதிபதி சுக்கிரன்,
மிதுனம், கன்னி ராசிகளுக்கு அதிபதி புதன்,
கடக ராசிக்கு அதிபதி சந்திரன்
சிம்ம ராசிக்கு அதிபதி சூரியன்
தனுசு மீனம் ராசிக்கு அதிபதி குரு
மகரம் கும்ப ராசிக்கு அதிபதி சனி என்று அறிக.
8 வசிய பொருத்தம் வதூ ராசியும், வரன் ராசியும் ஒன்றுக்கொன்று வசியமுடையதாக இருத்தல் வேண்டும்.
மேஷம் பெண் ராசி எனில் ஆண் ராசி சிம்மம், விருச்சிகம்
ரிஷபம் பெண் ராசி எனில் ஆண் ராசி கடகம், துலாம்
மிதுனம் பெண் ராசி எனில் ஆண் ராசி கன்னி
கடகம் பெண் ராசி எனில் ஆண் ராசி விருச்சிகம், தனுசு
சிம்மம் பெண் ராசி எனில் ஆண் ராசி துலாம்
கன்னி பெண் ராசி எனில் மிதுனம், மீனம்
துலாம் பெண் ராசி எனில் கன்னி, மகரம்
விருச்சிகம் பெண் ராசி எனில் கடகம்
தனுசு பெண் ராசி எனில் மீனம்
மகரம் பெண் ராசி எனில் மேஷம், கும்பம்
கும்பம் பெண் ராசி எனில் மேஷம்
மீனம் பெண் ராசி எனில் மகரம் வசியம் என்று அறியவும்.
ரஜ்ஜூ பொருத்தம் ரஜ்ஜூ என்னும் மாங்கல் பொருத்தம் வதூ, வரர்க்கு ஓரே ரஜ்ஜூவாக வரக்கூடாது. மாறி வந்தால் நல்லது.
மிருகசீர்ஷம், சித்திரை, அவிட்டம் - சிரசு ரஜ்ஜூ
ரோகிணி, ஹஸ்தம், திருவோணம் மற்றும்
திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய வை – கண்ட ரஜ்ஜூ
கார்த்திகை, உத்திரம், உத்திராடம் மற்றும்
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகியவை – வயிறு ரஜ்ஜூ
பரணி, பூரம், பூராடம் மற்றும்
பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகியவை – துடை ரஜ்ஜூ
அசுபதி, மகம், மூலம் மற்றும்
ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகியவை – பாத ரஜ்ஜூ
குறிப்பு விவாஹ பொருத்தத்தில் மிக முக்கியமான இந்த ரஜ்ஜூப் பொருத்தம் சரியான முறையில் அனுசரிக்கப்பட வேண்டும். இதில் தவறும் பட்சத்தில், வதூ-வரர் நட்சத்திரங்கள் சிரசு ரஜ்ஜூவில் இருந்து இணைந்தால் – கணவர் மரணத்திற்குச் சமமான பிரச்சனைகளும், கண்ட ரஜ்ஜூவில் வந்தால் மனைவி மரணத்திற்குச் சமமான பிரச்சனைகளும், வயிறு ரஜ்ஜூவில் வந்தால் புத்திர தோஷத்திற்கு சமமான பிரச்சனைகளும், துடை ரஜ்ஜூவில் வந்தால் ஒற்றுமைக் குறைவுகளும், பாத ரஜ்ஜூவில் வந்ததால், நோய் நொடிகளும் ஏற்பட்டு பல்வேறு இன்னல்களை எதிர்கொள்ள வேண்டிவரும் என்பது ஜோதிட நூல்களின் அற்புத கருத்தாகும்.
வேதைப் பொருத்தம் வதூ நட்சத்திரமும், வரன் நட்சத்திரமும் ஒன்றுக்கொன்று வேதையாக இருத்தல் கூடாது. வேதையாக இல்லாவிட்டால் பொருத்தம் உத்தமம்.
அசுபதி – கேட்டை, பரணி – அனுஷம், கார்த்திகை – விசாகம்,
ரோகிணி - சுவாதி, திருவாதிரை – திருவோணம் புனர்பூசம் – உத்திராடம்
பூசம் – பூராடம், ஆயில்யம் – மூலம், மகம் – ரேவதி
பூரம் – உத்திரட்டாதி உத்திரம் – பூரட்டாதி, ஹஸ்தம் – சதயம் ஆகிய நட்சத்திரங்கள் ஒன்றுக் கொன்று வேதை என அறியவும்.

மேற்காண் தசவித பொருத்தங்களுடன், பாபசாமீயம் என்னும், அசுபக்கிரகங்களான, சூரியன், சனி, செவ்வாய், ராகு, கேது ஆகியவை 2,4,7,8,12 ஆகிய ஸ்தானங்களின் நின்றவாறு, அரைக்கால், கால், அரை, முக்கால், முழு பாபம் என்ற அளவில் சூட்சம கணக்கின் பிரகாரம் கணக்கெடுத்து பார்ப்பதுடன், செவ்வாய் கிரகமானது, லக்னத்திலிருந்து, சந்திரனிலிருந்து, சுக்கிரனிலிருந்து 2,4,7,8,12 ஆகிய ஸ்தானங்களில் இருந்ததால் ஏற்படும் செவ்வாய் தோஷ பாபசாமீயமும் இணைத்துப் பார்த்து, திசா சந்தி, ஏக திசை காலம் இல்லாமல் பொருத்தும் பொருத்தங்களின் அடிப்படையில் அமையும் திருமணங்கள் வாழையடி வாழையாய் வாழ்வாங்கு இப்புவியில் தம்பதியாய் வாழ்ந்து, அதன் வெளிப்பாடாக நற்புத்திரப்பேறு பெற்று, வரலாற்றுச் சாதனை செம்மல்களாக வாழ்ந்தும், எந்நாளும் புகழ் பெற்று நித்திய ஜீவன் பெறுவார்கள் என்பது திண்ணம். சுபம்.

Important note :
If you want to know the marriage matching to bride and bride groom – please contact with fees – we will send the horo matching remarks and charts through your mail id on that day without delay. thank you. (contact: +919443423897 or email:
tamiljoshier@gmail.com or joshier_urrao@yahoo.com or usharengan@hotmail.com

விவரமான திருமணபொருத்தம் அறிய வேண்டுமா?.. உடனடியாகத் தொடர்பு கொள்ளுங்கள்... ஒரு முறை தொடர்பு கொண்டுவிட்டால் வாடிக்கையாளராகி பின்னர் வாடிக்கையாளர் எண்ணைக் குறிப்பிட்டு தொடர்ந்து தொடர்பு கொண்டு பலன் அறியலாம் தானே..
தங்களுக்கு சிரமம் ஏதுமின்றி, ஒரே நாளில் தாங்கள் தொடர்பு கொண்டு மணமகன் மற்றும் மணமகள் ஆகியோரது பிறந்த நாள், நேரம், இடம் ஆகியவற்றை மட்டுமே மொபைல் போனில் சொல்லி விட்டு தங்கள் இமெயில் முகவரி கொடுத்து வி்ட்டால் தங்களுக்கு பதிலாக வந்தடையும் விதத்தில் துரிதமாகச் செயல்பட்டு வருகிறோம் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

தளத்தை செய்தியோடை மூலம் வாசிப்பவர்கள்

வாசகர்கள்

எங்களின் முதன்மை வலைத்தளம். Our Main Web Site

விருந்தினர் வருகை

சமீபத்தில் வந்தவர்கள்

இதை படித்தவர்கள் படித்தது

அதிகம் படிக்கப்பட்டவை