அன்புள்ள இணையதள வாடிக்கையாளர்களே! புதிய வருகை தரும் அன்பர்களே! உங்கள் அனைவருக்கும் இனிய வணக்கங்கள்.
வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ள அற்புத யோசனைகள்
வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளும் அற்புதங்களை நாம் நன்றாக அறிந்திருக்க வேண்டும். ஒவ்வொருவரும் தத்தம் வாழ்க்கையை மிக மிக நன்றாக புரிந்து கொண்டு செயல்பட தேவையானது பொறுப்புணர்வுகள் தாம். தான் இருக்கும் சூழ்நிலை தனது எதிர்காலத்திட்டங்களோடு பொருத்திப் பார்த்து நன்றாக யோசித்து முடிவுகள் எடுக்க வேண்டிய பல்வேறு தருணங்களில் அவசரகதியில் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவுகள் எடுத்து பின்னர் வாழ்க்கையில் தேனும் பாலும் இணைந்தது போல் இருந்த லட்சியத் தம்பதிகள், பாலும் எலுமிச்சையும் சேர்ந்தது போல் மனதால் திரிந்து, எதிரும் புதிருமாகி இல்லறச் சோலையில் இயல்புக்கு மாறாக புயலாய் சுனாமியாய் பகைமை வேரூன்றிட காரணமாகிவிடுகிறது. நிகழ்வுகளுக்குப் பின்னர் ஒருவரை யொருவர் ஜாதக அளவில் புரியவைத்து, (சிலரது ஜாதகத்தில் உள்ள அபகீர்த்தி யோகத்தின் காரணமாக) சில நேரங்களில் சில வேறுபட்ட நல்ல குடும்பச் சூழலுக்கு ஒவ்வாத செயல்களில் இறங்க வைத்து வேடிக்கைப் பார்த்த செயல்கள் நமக்குப் புரியும் போது, தான் கடந்த காலத்தில் எந்த அளவுக்குப் பொறுப்பின்றி இருந்தோம் என்பது புரியவரும்.
உதாரணமாக, ஒரு பெண்மணியை அவசர நிமித்தம் தனது இருசக்கர வாகனத்தில் இடமளித்து, உதவி செய்த நல்ல மனமுள்ள வாழ்க்கைத் துணைவருக்கு ஏற்பட்ட நிலையை இங்கு விவரிக்க வேண்டும்.
தனது அலுவலகம் முடிந்து, வீட்டிற்கு வந்து கொண்டிருந்த வேளையில், தனது அவசர நிலையைக் கூறி, பெண்ணொருத்தி உதவி கேட்டு, தனக்கு ஒரு இரண்டு கி.மீ. தூரத்திலுள்ள தன் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் ஏற்றிச் செல்ல, அடுத்த ஐந்து நிமிடத்தில், அவர் மனைவியின் உறவுக்காரர் செல்லிலே படம்பிடித்து, ரகசியமாக்கி, கணவரைக் கண்காணிக்க புத்திமதி கூற அன்றுமுதல் ஆரம்பித்தது அலங்கோல எண்ணங்கள்...
யதார்த்தமாய் கேட்டு, தெளிவு பெற்றிருந்தால், உரிய விவரங்கள் அறிந்திருக்கலாம்.. ஆனால், நேரம்.. அபகீர்த்தி யோகம் அதன் பணியைக் காண்பித்து விட்டது.
எனவே, லட்சிய தம்பதிகள் ஒருவர்க்கொருவர் கருத்து வேறுபாடுகள் வருமானால்அவரவர் ஜாதகங்ளை அந்நேரமே எடுத்துப் புரட்டிப் பார்த்து, நல்ல அனுபமுள்ள ஜோதிடர் அல்லது ஜோதிட தம்பதியராய் உள்ளவர்களை அணுகி மனதில் எழுகின்ற நேர்மறைக்கு மாறான எதிர்மறை எண்ணங்களை எடுத்தியம்பி, தற்கால கிரகநிலை, (கோள்சார கிரகநிலை) ஜனனகால கிரகநிலை, நடப்பு திசா புக்தி பலன்கள் ஆராய்ந்து, எதிர்காலம் வளமாக்கிக் கொள்ள ஆலோசனை பெற்றிட அன்புடன் வேண்டுகிறோம்.
இது போலவே, தந்தை மகன், தாய் மகன், தந்தை மகள், தாய் மகள் முக்கியமாக மாமியார் மருமகள், மாமனார் மருமகன், ஆகியோர்கள் தத்தம் ஜாதகநிலைகளில் உள்ள கிரக அமைப்பு மற்றும் நட்சத்திர அமைப்புகளின் மூலம் தமக்கு இன்னாரிடம் இந்த அளவில் நம்பிக்கை மட்டுமே பெற முடியும் என்ற ஜாதக விதிகளில் உள்ள விவரங்களின் இலக்கண விதிகளின் அடிப்படையில், இந்த நபர் இந்த நபரிடம் இந்த அளவில் தான் நெருக்கமாக இருக்கலாம் அல்லது தாமரை இலை தண்ணீர் போல் பட்டும் படாமல் இருக்க வேண்டும், அல்லது குளிருக்கு நெருப்பு காய்வது போல் வேண்டும் போது நெருங்கியும், வேண்டாத போது விலகியும் இருக்க வேண்டும் என்ற பகுப்பாய்வுகள் செயல்படுத்த தெரிந்து கொள்வோமானால், இல்லறம் சோலையாகி, சோலை வனமாகி வளங்களை அள்ளித் தந்திடுமே..
மீண்டும்.. சந்திப்போம்.. நன்றி.