தமிழ் ஜோதிடம் ஜாதகம்

ஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், வாஸ்துசாஸ்திரம் மூலம் வருங்காலம் அறிய "ஸ்வாதி ஜோதிட ஆய்வகம்" உங்களை அன்புடன் வரவேற்கிறது.

எழுதியவை அனைத்தும்

 நவராத்திரி ஒன்பது நாட்களும் கோவில்களிலும் வீடுகளிலும் கொலு வைத்து கொண்டாடும் பொழுது முதல் மூன்று நாட்கள்

 ஸ்ரீதுர்க்கை வடிவிலும் 

தொடர்ந்து மூன்று நாட்கள் ஸ்ரீமகாலட்சுமி வடிவிலும் 

மேலும் உள்ள மூன்று நாட்கள் ஸ்ரீசரஸ்வதி வடிவிலும் 

வணங்குவது மரபு..

கல்விக்கு அதிபதி சரஸ்வதி தேவி நம் தொழிலுக்கும் ஜீவனத்திற்கும் உதவி செய்யும் கருவிகளையும் பூஜை செய்து வணங்கும் நாள் இந்த சரஸ்வதிபூஜை நாளாகும் கூத்தனூர் வேதாரணியம் கண்டியூர் உத்திரமேரூர் காஞ்சிபுரம் மதுரை தஞ்சை போன்ற ஊர்களில் உள்ள சரஸ்வதிதேவி ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடப்பதுண்டு

மூலத்தில் பிடித்து அவிட்டத்தில் விடு என்பது அடை மொழி அதாவது நவராத்திரி காலத்தில் மூல நட்சத்திர நாளில் சரஸ்வதி தேவிக்கு உரிய பூஜையை தொடங்க வேண்டும் அப்போது ஆவாகனம் செய்யவேண்டும் அதாவது சரஸ்வதி படங்கள் விக்ரகங்களில் ஆவாகனம் செய்ய வேண்டும் மேலும் நம்முடைய புத்தகங்களை அடுக்கி வைத்து அவற்றின் மேல் சரஸ்வதி படத்தை வைத்து வழிபடலாம்.

கலைவாணி கல்விக்கரசி என பல பெயர்களில் போற்றப்படும் சரஸ்வதி தேவியின் மகிமையை தெரிந்து கொள்வோமா..

பிரம்மனின் துணைவியாக இருப்பவள் சரஸ்வதி!

 சரஸ் என்றால் நீர் மற்றும் ஒளி ஆகியவற்றை தடையின்றி வழங்குபவள் என்று பொருள் கல்வியை மற்றும் அதன் ஊற்றாகவும் ஞான வழியாகவும் அள்ளித் தருபவளே சரஸ்வதி.. சரஸ்வதி தேவியின் கையில் இருக்கும் வீணை பெயர் கச்சபி. சிவபெருமானால் உருவாக்கப்பட்ட வழங்கப்பட்டது வீணா தட்சிணாமூர்த்தியாக இருந்து நாரதர் முதலான அவர்களுக்கு இசை நுணுக்கங்களை உபதேசித்த பிறகு தனது சகோதரியான கலைவாணிக்கு அவர் அளித்ததாக ஐதீகம்

சரஸ்வதி மிக அழகு அமைதி பார்வையுடன் பிரகாசிப்பார் கல்வியின் தெய்வம் பிரம்ம பிரியை ஞானசக்தி என்றும் அழைக்கப்படுகிறாள் சரஸ்வதியை ஆற்றங்கரை சொற்கிழத்தி என்று தமிழ் நூல்கள் குறிப்பிடுகின்றன அறிவே ஞானமே மனிதனின் ஆயுதம் ஞானம் அறிவு இவற்றின் பொது வடிவம் சரஸ்வதி அறிவம் ஞானமும் உறுதியானது நம்முடனே வருவதும் அன்னத்தை வாகனமாகக் கொண்டும் சரஸ்வதியை நாம் பார்க்கிறோம் அன்னம் பாலினையும் நீரினையும் பிரித்து பாலை மட்டும் எடுத்துக் கொள்வது போல நாம் ஞானத்தினை எடுத்துக்கொண்டு அவலத்தை நீக்க வேண்டும் என்பது பொருள்..

முதல்நாள் சரஸ்வதி பூஜை செய்தவர்கள் மறுநாள் காலையில் சரஸ்வதி பூஜை செய்து வழிபட கல்வியும் ஞானமும் கிடைக்கும்..

வெள்ளைக் கலையுடுத்தி வெள்ளைப் பணிபூண்டு வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள் வெள்ளை அரியாசனத்தில் அரசரோடு என்னை சரியாசனம் வைத்த தாயே போற்றி போற்றி..



 புரட்டாசி அமாவாசை

இந்த வருடம் (06/10/2021) புதன்கிழமை புரட்டாசி மகாளய அமாவாசையன்று நீங்கள் தர்ப்பணம் கொடுத்துப்பாருங்கள். அடுத்த ஆண்டுக்குள் உங்கள் வாழ்க்கைத்தரத்தை நிச்சயம் உங்கள் முன்னோர்களான பித்ருக்கள் தெய்வீக சக்தி கொடுத்து உயர்த்தி இருப்பார்கள்....


மறைந்த நம் முன்னோர்களான பித்ருக்களை நினைத்து அவர்களுக்குரிய நன்றியுணர்வாக வழிபட வேண்டிய மிக முக்கியமான திருநாள். அதாவது அன்று நாம் அவர்கள் தாகத்தை தீர்த்து அமைதிப்படுத்த வேண்டும்.


அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.


தர்ப்பை புல்லை வைத்து, அதில் பித்ருக்களை ஆவாஹனம் செய்து எள்ளும் நீரும் தருவதை தர்ப்பணம் என்பார்கள். தர்ப்பணம் கொடுக்கும் போது காய்கறிகள் 5 வகை (பூசணி, வாழைத்தண்டு தவிர்க்கவும்) 

யை தானமாக கொடுக்க வேண்டும். பித்ருக்களுக்கு தர்ப்பணம், சிரார்த்தம் கொடுக்க வேண்டும் என்றதும், பெரும்பாலானவர்கள் அது என்னவோ, ஏதோ என்று நினைக்கிறார்கள். 


சிலருக்குத்தான்  அது சரிபட்டு வரும். நமக்கு இதெல்லாம் செய்வது வழக்கம் இல்லை என்கிறார்கள். சிலர் பித்ரு வழிபாட்டை எப்படி செய்வது என்ற குழப்பத்துடனே இன்னும் இருக்கிறார்கள். திதி, தர்ப்பணம், சிரார்த்தம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தும், அதை முறைப்படி செய்வதற்கு ஐதீகம் தெரிந்து இருக்க வேண்டுமே என்று நினைக்கிறார்கள். ஆனால் இதுபற்றியெல்லாம் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை.


தர்ப்பணம் செய்வது ரொம்ப, ரொம்ப எளிதானது. தர்ப்பணம் கொடுப்பதற்கு வேறு எதுவும் வேண்டாம். உங்கள் அப்பா, அம்மா பெயர், தாத்தா-பாட்டி பெயர் (தந்தை வழி) பூட்டன்-பூட்டி பெயர் (தந்தை வழி) அப்புறம் அம்மாவின் அப்பா அம்மாவின் தாத்தா, அம்மாவின் தாத்தாவுக்கு அப்பா, அம்மாவின் அம்மா, அம்மாவின் பாட்டி, அம்மாவின் பாட்டிக்கு அம்மா ஆகிய  பேர் மட்டும் தெரிந்தால் போதும்.


சிலருக்கு தாத்தாவின் பெற்றோர் பெயர் தெரியாமல் இருக்கலாம். அதற்கும் கவலைப்பட வேண்டாம். என் மூதாதையர்களுக்கு இந்த தர்ப்பணம் போய் சேரட்டும் என்று மனதார நினைத்து கையில் உள்ள எள் மீது தண்ணீர் ஊற்றி, அந்த நீரை தர்ப்பைகளின் மீது ஊற்றினால் போதும். அவ்வளவுதான். தர்ப்பண வழிபாடு முடிந்தது.


தை அமாவாசை தினத்தன்று கோவில் குளங்களிலும், பித்ரு வழிபாட்டுக்குரிய புனிதநீர் நிலைகளிலும், காவிரி கரையிலும் இந்த எளிய வழிபாட்டை செய்யலாம். மூதாதையர்களின் பெயரைச் சொல்லி எள் கலந்த நீரை தர்ப்பை புல்களின் மீது ஊற்றுவதில் என்ன கஷ்டம்? இதை கூட பெரும்பாலானவர்கள் மனப்பூர்வமாக செய்வதில்லை.


குறைந்தபட்சம் அது நம் கடமை என்று நினைத்தாவது செய்யக்கூடாதா? இந்த வருடம் நீங்கள் தர்ப்பணம் கொடுத்துப்பாருங்கள். அடுத்த ஆண்டுக்குள் உங்கள் வாழ்க்கைத்தரத்தை நிச்சயம் பித்ருக்கள் தெய்வீக சக்தி கொடுத்து உயர்த்தி இருப்பார்கள். இது பலரும் அனுபவித்து வரும் உண்மை. ஈடு, இணையற்ற அந்த பலன்களை பெற நீங்களும் நாளை தை அமாவாசையன்று பித்ரு வழிபாட்டை மறக்காமல் செய்யுங்கள்.


12 ஆண்டுகள் பலன் கிடைக்கும்.


மஹாளய அமாவாசை.  இந்த அமாவாசையன்று செய்யப்படும் பிதுர்தர்ப்பணம் பன்னிரெண்டு ஆண்டுகள் பிதுர்திருப்தி ஏற்படுத்தும்.


என்ன செய்ய வேண்டும்?


அமாவாசை தினத்தன்று 4 முக்கிய செயல்களை செய்தல் வேண்டும்.


(1) புனித நதிகளில் நீராட வேண்டும்.

(2) பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும்.

(3) மந்திர ஜெபம் ஜெபிக்க வேண்டும்.

(4) தானங்கள் கொடுக்க வேண்டும்.


தர்ப்பணம் என்ற வடமொழி சொல்லுக்கு சந்தோஷமடைதல் என்று பொருள்.


தர்ப்பயாமி என்று சொல்லும்பொழுது சந்தோஷமடையுங்கள் என்று பொருள் கொள்ளலாம்.


ஜப்பான் நாட்டை சேர்ந்த இமொட்டோ என்ற ஆராய்ச்சியாளர் நீரில் நேர்மறை சொற்களை பிரயோகித்தபொழுது நீரில் உள்ள மூலக்கூறுகள் ஒரு முறைமையுடனும் ஒழுங்குடனும் வரிசைப்படுத்தப்படுவதை கண்டார்.


அதேசமயம், எதிர்மறைசொற்களை அந்த நீரில் பயன்படுத்தியபொழுது அந்த மூலக்கூறுகள் தாறுமாறாக அமைந்ததைகண்டார்.


இந்த ஆராய்ச்சிதான் இந்த கட்டுரையின் அடித்தளம்.....


தர்ப்பணம் செய்யும்பொழுது நீரை அதிகமாக விட்டு தர்ப்பணம் செய்யவேண்டும் என்று கூறுவார்கள்.


அவ்வாறு தர்ப்பயாமி என்று நமது முன்னோர்களை முன்னிட்டு கூறும்பொழுது அந்த சொற்கள் நீரின் மூலக்கூறுகளை சென்று அடைகின்றது.


நீர் ஆவியாக மாறி அந்த மூலக்கூறுகள் வளிமண்டலத்தில் கலக்கின்றன.


அதாவது, சந்தோஷமடையுங்கள் என்று நாம் கூறிய எண்ண அலைகள் ஆவியாக மாறிய நீரின் மூலக்கூறுகளுடன் வளி மண்டலத்தில் சஞ்சரிக்கின்றன.


அதீத உளவியல் (Para psychology) என்ற பிரிவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் மரணத்தின் பின் மனிதனின் நிலை பற்றி ஆராய்ந்து வருகிறார்கள்.


அந்த ஆராய்ச்சியில் மரணத்திற்கு பின் ஆழ்மன எண்ண அலைகள் அதிர்வுகளாக நிலை பெறுகின்றன என்று நம்புகிறார்கள்.


மேலே கூறிய இந்த நிகழ்வை மகாபாரதத்தில் அம்பை பீஷ்மரை கொல்வேன் என்று சபதம் செய்து நெருப்பில் வீழ்ந்து மடிந்து மீண்டும் சிகண்டியாக பிறந்து பீஷ்மரை கொன்றாள் என்று கூறும் நிகழ்விலிருந்து புரிந்து கொள்ளலாம்.


அதாவது மனம் மற்றும் எண்ண அலைகள் மறைவதில்லை என்று புரிந்துகொள்ளலாம்.


ஆத்மா சாவதில்லை என்ற கருத்து இந்த இடத்தில் நினைவு கூறத்தக்கது.


நாம் கொள்ளுகின்ற எண்ண அலைகளை பொறுத்து மறுபிறவி வாய்க்கின்றது என்பது நமது கோட்பாடு.


ஜடாபரதர் என்ற முனிவர் சித்தி அடையும் தருவாயில் ஒரு மான் படும் வேதனையை நினைத்தார் என்பதினால் அவர் ஒரு மானாக பிறந்தார் என்று யோகவாசிஷ்டம் கூறுகின்றது.


இதனால்தான் மனமிறக்க வாயேன் பராபரமே என்று பாடினார் தாயுமான சுவாமிகள்.


உடல் உகுத்தவர்கள் ஆழ்மன எண்ணங்கள் மறைவதில்லை என்றும் அவைகள் அதிர்வுகளாக சஞ்சரிக்கின்றன என்றும் அதீத உளவியல் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.


சில மகான்களின் சமாதி அருகிலோ அல்லது அவர்களின் ஆசிரமத்திற்கோ நாம் செல்லும்பொழுது நமது மனதில் ஏற்படும் ஒரு அமைதி மற்றும் பரவச உணர்சி அவர்களின் ஆன்மீக எண்ணங்கள் தரும் அதிர்வுகள் காரணமாக இருக்குமென்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.


தர்ப்பயாமி என்று கூறி நீரை விட்டு தர்ப்பணம் செய்யும்பொழுது சந்தோஷமடையுங்கள் என்று நாம் திரும்ப திரும்ப சொல்லும் எண்ண அலைகள் நீரின் மூலக்கூறுகளில் சென்றடைந்து நமது முன்னோர்களின் எண்ண அதிர்வுகளை சென்றடைகின்றது என்று நம்புவதற்கு இமொட்டோவின் ஆராய்ச்சி வழிவகுக்கின்றது.


சிரார்த்த காரியங்கள் செவ்வனே செய்தால் வம்ச விருத்தி அதாவது குலம் தழைக்கும் என்று தர்ம சாஸ்திரம் கூறுகின்றது.


சந்தோஷமடையுங்கள் என்று கூறி தர்ப்பணம் செய்வதால் நமது முன்னோர்கள் சந்தோஷமடைந்து நம்மை வாழ்த்துவதோடு மட்டுமல்லாமல் மீண்டும் நமது குடும்பத்தில் பிறக்கின்றார்கள் என்று நம்புவதற்கு இடமுண்டு.


நீரில் உள்ள மூலக்கூறுகள் நாம் சொல்லுகின்ற வார்த்தையினை உள்வாங்கிக்கொள்கின்றது என்பதினால்தான் நமது சடங்குகளில் நீர் ஒரு முக்கியமானதாக உள்ளது.


குறிப்பாக கும்பாபிஷேகம், சஷ்டி அப்த பூர்த்தி போன்றவை உதாரணமாக கொள்ளலாம்.


இந்த ஆராய்ச்சியின் முடிவை அன்றே நமது முனிவர்கள் தமது தவவலிமையினால்கண்டு தெளிந்து நமக்கு கூறியுள்ளார்கள் என்பதை கண்டு நாம் மெய்சிலிர்த்து போகின்றோம்.


சொல்லுக சொல்லைப் பிரிதோர்ச்சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் இன்மை யறிந்து.











 இந்தியாவில் தசரா திருவிழா..... 

(ஜோதிட தம்பதி  நா. ரெங்கன், உஷா 

சுவாதி ஜோதிட ஆலயம், வீரவநல்லூர் மற்றும்  பாளையங்கோட்டை - 9443423897).

அனைவருக்கும் 2021 தசரா நல்வாழ்த்துக்கள்..

இந்த 2021 ஆம் ஆண்டு, பிலவ வருட புரட்டாசி மாதம் 20ம் நாள் (06-10-2021) புதன் கிழமை துவங்குகிறது.  நவராத்திரி விழா மிகச் சிறப்பு வாய்ந்த பக்திநெறி கூட்டும் அம்மன் அருள் பெறும் அற்புத விழாவாகும்.  தென் இந்தியாவில் துர்கா, லட்சுமி, ரஸ்வதியின் பூஜை நடக்க, பொம்மைகள் கொலுப்படிகளில் அலங்கரிக்க, சுமங்கலிகளுக்கு மஞ்சள் குங்குமம் வழங்க விழா விஜய தசமியுடன் முடிகிறது. இப்போது வட நாட்டில் இதை எப்படிக் கொண்டாடுகிறார்கள் என்று பார்ப்போம். 
மராட்டியர்கள் சின்ன மண் கிண்ணங்களில் பாலிகை தெளித்து அதாவது மண் நிரப்பி, நவதான்யங்களை அதில் விதைத்துப் பின் தினமும் தண்ணீர் விடுகிறார்கள். அதன் பசுமையான வளர்ச்சியைப் பார்த்து தம் வாழ்க்கையையும் கணிக்க்கிறார்கள். பின் விஜயதசமி அன்று கடலில் கலக்கிறார்கள். அவர்களும் மும்பாதேவி கோவிலுக்கும், ஸ்ரீ மஹாலட்சுமி கோவிலுக்கும் தவறாது செல்கின்றனர். 
புரட்டாசி மாத வளர்பிறையில் நவராத்திரி விழா தொடங்குகிறது. இமயம் முதல் குமரிவரை நாடு முழுவதும் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இது தமிழ்நாட்டில் நவராத்திரி என்றும், கர்நாடகாவில் தசரா பண்டிகை என்றும், மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை என்றும் கொண்டாடப்படுகிறது. நவராத்திரி விழாவி்ல் 10 ஆவது நாள் விஜயதசமி என்று கொண்டாடப்படுகிறது. அம்பாளை ஆராதிக்கும் நவராத்திரியில் அம்பாளுக்கு 10 திருநாமங்கள். இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு சக்தியைத் தரக்கூடியவை.அன்னை பராசக்தி, நவராத்திரி தினங்களில் முறையே மகேஸ்வரி, கவுமாரி, வாராகி, சாமுண்டி என்ற நவஸ்வரூபங்களாக விளங்கி பக்தர்களுக்கு அருள் தருகிறாள்.மகிஷாசுரன் என்ற அசுரனை அழித்து, தேவர்களைக் காப்பாற்ற சக்தி அவதரித்து அவனை அழித்தாள். அதன் நினைவாகவே தேவியின் பாதங்களை வணங்கி வரம் கோருவதையே நவராத்திரி தினங்கள் குறிக்கின்றன.இந்த 9 நாட்களில் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என, தேவியை முதல் 3 நாட்கள் வெற்றியை வேண்டி அம்பாளை மகா துர்காவாகவும், அடுத்த 3 நாட்கள் செல்வம் வேண்டி மகாலட்சுமியாகவும், கடைசி 3 நாட்கள் கல்வியை வேண்டி மகா சரஸ்வதியாகவும் அம்பாளுக்கு அலங்காரம் செய்து  நவராத்திரி கொலு கொண்டாடப்படுகிறது .நவராத்திரி விழாவை யொட்டி வீடுகளில் பெண்கள் விதவிதமான பொம்மைகளை அடுக்கி வைத்து கொலு வைப்பார்கள். கொலு வைப்பது  என்பது இறைவியின் விசுவரூபத்தைக் குறிப்பதாகும்.நவராத்திரி கொண்டாடுமிடத்தில், கொலுவைக்கும் இடத்தில் கும்ப பூஜையும் நடத்தப்படுகிறது...  தற்போதைய காலகட்டத்தில் கோவிட்-19ன் தாக்கம் முழுவதும் இந்த உலகத்தை விட்டு ஒழிய இந்தவருட நவராத்திரி பூஜாபலன் கிடைத்திட அனைவரும் பிரார்த்திப்போம்.

 

குறிப்பு.. ஒவ்வொரு மாணவ மாணவியரின் பிறந்த ஜாதகத்திலும், கல்வி, உயர்கல்வி, சிறப்புக்கல்வி எனும் நவக்கிர ராசி சக்கரத்தில், முறையே 2.-4.- 9 மற்றும் வித்தைக்கு அதிபதி புதன், குரு, பணிவாய்ப்புக்கு அதிபதி சனி, செவ்வாய் மற்றும் நல்ல ஒழுக்கத்திற்கு அதிபதி குரு பகவான் ஆகிய அமைப்பின் இரகசியத்தை வீரவநல்லூர் – கஜேந்திர மோட்சம் அருளித்தந்த அத்தாளநல்லூர் ஸ்ரீஆதிமூலப் பெருமாள் ஆலயம் செல்லும் வழி துவக்கமாம் - மோர்மடம் ஊராட்சிப் பள்ளிக்கு அருகில் -   பல்கலைக்கழகத்தில் ஜோதிடம் பயின்று பட்டம் பெற்றுள்ள, 40 ஆண்டு அனுபவ ஜோதிடத் தம்பதி ரெங்கன் உஷா ஆகியோர் மிகச் சிறந்த முறையில் கணித்து, அவரவர் எதிர்கால கல்வி, ஆரோக்கியம், பணி, பதவி, திருமணம், வெளிநாடு பயணம் மற்றும் வியாபார லாப ஆதாய வழிவகைகள் செவ்வனே வழிகாட்டி வருகிறார்கள்.. வருக.. பயன் பெறுக.. சுபம்.


தளத்தை செய்தியோடை மூலம் வாசிப்பவர்கள்

வாசகர்கள்

எங்களின் முதன்மை வலைத்தளம். Our Main Web Site

விருந்தினர் வருகை

சமீபத்தில் வந்தவர்கள்

இதை படித்தவர்கள் படித்தது

அதிகம் படிக்கப்பட்டவை