ஆடி அமாவாசை..
ஆகஸ்ட்
16ம் தேதி காலை ஸ்நானம், தானம் செய்வதற்கான நேரம் தொடங்குகிறது. காலை 5.51 முதல் 9.08 வரை நீராடி தானம் செய்யலாம். அதிகாலை 4.24 முதல் 5.07 வரை பிரம்ம முஹூர்த்தம் இருக்கும். காலை நீராடிவிட்டு, பூணூல் அணிந்து முன்னோர்களை வணங்கி கருப்பு எள், நீர் வைத்து வழிபட வேண்டும். ஆடி அமாவாசை தினத்தில் பிண்ட தானம், அன்னதானம், பஞ்சபலி கர்மா போன்றவை செய்தால் பித்ரு தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். எனவே இந்த பித்ரு தோஷ பரிகாரங்களை ஆடி அமாவாசை அன்று காலை 11.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை செய்ய வேண்டும்.
அமாவாசை அன்று சூரிய உதயத்திற்கு முன்பே கடற்கரை, மகாநதிகள், ஆறுகள், குளங்களில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் தர வேண்டும். பித்ருக்களுக்கு
பூஜை செய்து, அந்தணர்களுக்கு பூசணிக்காய், வாழைக்காய், போன்ற காய்கறிகள் தானம் கொடுக்க வேண்டும். பின்னர் வீட்டில் இருக்கும் முன்னோர் படங்களுக்கு துளசி மாலை அணிவித்து, முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை படைத்து வணங்கி அதை காக்கைக்கு வைத்து பிறகே சாப்பிட வேண்டும். அமாவாசை தினத்தன்று ஏழைகளுக்கு ஆடைகளை தானமாக வழங்கலாம்.
ஆடி
அமாவாசை தினம் கோடி சூரிய கிரகணத்திற்கு சமம். எனவே நீர் நிலைகளுக்கு சென்று பித்ரு தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கி, வீட்டிலோ அல்லது சிவன் கோயிலிலோ வழிபாடு செய்தால் பலன் கிடைக்கும். வருடத்தில் வரும் மற்ற அமாவாசை தினங்களில் விரதம் இருந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க முடியாவிட்டாலும், ஆடி அமாவாசை அன்று முன்னோர் வழிபாடு செய்து பித்ரு தர்ப்பணம் கொடுத்தால் பித்ரு தோஷம் நீங்கி முன்னோர்களின் ஆசி நமக்கு கிடைக்கும். நம் இல்லங்களில் சகல நன்மைகளும் நடக்கும்.
சிவன்
கோயிலுக்கு சென்று இதை செய்தால் போதும்.. தீராத நோய்கள் கூட குணமாகும்..
தவிர்க்க வேண்டியவை
வீட்டிற்கு
விருந்தினர்கள் வந்தால் எப்படி சுத்தம் செய்து வைத்திருப்போமோ, அப்படி அமாவாசை தினத்தில் வீட்டைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
அமாவாசை
நாளில் தெரியாமல் கூட வாசலில் கோலம் போடக்கூடாது.
காகத்திற்கு
அமாவாசை தினத்தில் கட்டாயம் உணவு கொடுக்க வேண்டும். அது முன்னோர்கள் நேரடியாக வந்து உண்பதற்குச் சமம் எனச் சாஸ்திரம் கூறுகிறது.
ஆடி
அமாவாசை யாருக்கு திதி கொடுப்பது எப்படி?
தாயை
அல்லது தந்தையை அல்லது இருவரையும் இழந்த ஆண்கள் ஆடி அமாவாசை நாளில் விரதம் இருந்து, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். கணவனை இழந்த மனைவி, மனைவியை இழந்த கணவன் ஆகியோர் ஆடி அமாவாசையில் விரதம் இருக்கலாம்