மகாலட்சுமி அருள் வேண்டுமா
ஸ்ரீ மஹாலட்சுமி அருள் மூலம் குபேரன் ஆவது உறுதி!..
மஹாலட்சுமி தம் இல்லத்திற்கு வருகை தந்து, நிலைத்த செல்வம் தர வேண்டுமா..
முதலில் மஹாலட்சுமி எந்தெந்த இடங்களில் எந்தெந்த அம்சங்களில் குடிகொண்டிருக்கிறாள் என்பதை அறிய வேண்டுமல்லவா!..
இதோ பட்டியலிடுகிறோம்..
அவரவர் வலது உள்ளங்கை
கண்ணாடி
தீபம்
பசு
யானை
விளக்கு
மாவிலை
தோரணம்
வெற்றிலை
சந்தனம்
கோலங்கள்
திருமண் மற்றும் சூர்ணம்
குங்குமம்
மஞ்கள்
பூரண கும்பம்
வில்வ மரம்
நெல்லி மரம்
மஞ்சள் செடி
துளசி ஆகிய பல்வேறு சுப மங்கலப் பொருள்களில் எல்லாம் திருமகள் என்னும் மஹாலட்சுமியாரின் வாசம் நிறைந்து இருக்கின்றது
வில்வத்தாலும், சாமந்தி, தாழம்பூ ஆகியவற்றால் அர்ச்சித்து வழிபடுவது மகிமையாகும்.
வில்வ மரத்தினை சுற்றி வந்து வழிபட்டால் இறையருள் மஹாலட்சுமியை வழிபட்டதாகவே பொருள். ஏன் வில்வ விருட்சம் என்னும் ஸ்தல மரம் மஹாலட்சுமியின் திருக்கரங்களாலேயே உருவானதாக, வாமன புராணம் கூறுகிறது.
நெல்லி மரமும் திருமாலின் பேரருளும் பெற்றுள்ளதை நாம் அறிந்திருப்போம். நெல்லிக்கனி இருக்கும் வீட்டில் மஹாலட்சுமி நிரந்தரமாக வாசம் செய்வதாக நம்பப்படுகிறது. துளசி செடியிலும், மஞ்சள் செடியிலும் மஹாலட்சுமி வாசம் செய்வதால் அனைவரும் இல்லங்களில் இச்செடிகள் வளர்ப்பது மிகவும் நல்லது.
இன்று 27-07-2012 வரலட்சுமி விரதம்.
எப்படி விரதமிருந்து ஸ்ரீ மஹாலட்சுமியின் அருளைப் பெறுவது
காலையில் (அதிகாலையில்) எழுந்து நீராடி சூரியன் உதயத்திற்கும் முன்பாக வீட்டு வாசலை பசுஞ்சாணத்தால் துப்புரவு செய்து, அரிசிமாக் கோலம் இடவேண்டும். பூஜை அறையில் தீபம் ஏற்றி ஸ்ரீ மஹாலட்சுமி தாயாருக்கு அதிக விருப்பமான, இனிப்பு வகைகள் (திரட்டுப்பால், லட்டு, பாயாசம், எள்ளுருண்டை, கொழுக்கட்டை, மைசூர்பாகு மற்றும் இட்லி போனற உணவுவகைகளை நைவேத்தியம் செய்து இல்லாத ஏழைமக்களுடன் இணைந்து உணவருந்த வேண்டும். பின் காலையிலும், மாலையிலும், வரலட்சுமியை பூஜித்து தூப தீபம் காட்டி, வணங்கிய பின்பு ஆராத்தி எடுக்க வேண்டும். குறிப்பாக மாலையில் சுமங்கலிகளுக்கு, வெற்றிலைப் பாக்கு, தாம்பூலம், உடை மற்றும் மஞ்கள் கயிறு மற்றும் நிவேதனம் செய்த பலகாரங்கள் கொடுத்து அனுப்புதல் வேண்டும்.
வீட்டில் ஒற்றுமை மேலோங்க …
மாங்கல்ய பாக்கியம் நிலைக்க…
எண்ணிய எண்ணங்கள் நிறைவேற..
செல்வ வளம் பெருக..
திருமணத்திற்காக இருக்கின்ற பெண்களுக்கு திருமணம் அமைய
சகல ஐசுவரியங்களுக்கும்
மகளிருக்கு வரலட்சுமி விரதம் பக்க பலமாக இருக்கின்றது.
நாமும் தொழுவோம்.. நாளும் பயனடைவோம்.
ஜோதிட தம்பதி
உஷா ரெங்கன்.