தமிழ் ஜோதிடம் ஜாதகம்

ஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், வாஸ்துசாஸ்திரம் மூலம் வருங்காலம் அறிய "ஸ்வாதி ஜோதிட ஆய்வகம்" உங்களை அன்புடன் வரவேற்கிறது.

எழுதியவை அனைத்தும்


அன்பான ஆருயிர் பாசமிகு பண்புசால் நண்பர்களுக்கு வணக்கம்.
இணைய தளம் மூலம் ராசி பலன் பார்த்த பலர் தொடர்பு கொண்டு தத்தம் அனுபவங்களாக, இவ்வாண்டு ராசிபலன் புதிய தெம்பும், மகிழ்வும் தந்ததாகக் கூறி, பரிசு அனுப்ப வழி கேட்டுள்ளதால், இதோ ஒரு சிறு தகவல் - தாங்கள் எங்களது மின்னஞ்சல் மூலம் tamiljoshier@gmail.com என்ற முகவரிக்கு PayPal (www.paypal.com) வழியாக உதவலாம் - தங்கள் உதவிகள் மூலம் தெய்வத் திருத்தொண்டுகள் செய்வதால் தங்களுக்கும் மகிழ்வுடன் கூடிய பரிகார பலன் கிடைக்கும் என்ற பணிவான வேண்டுதலை பணிவுடன் சமர்ப்பிக்கி்னறோம். நன்றி..
விரோதி (தமிழ் புத்தாண்டு) வருட ராசி பலன்கள்
கணிதம் திருமதி
அ. உஷா ரெங்கன் D.A., (Astro.,) B.A. (Astro.,)
சுவாதி ஜோதிட ஆய்வகம், பாளை. கைபேசி 9443423897.
இணையதளம் :
www.tamil-astrology.com
முன்னுரை
தமிழ்ப்புத்தாண்டு தை மாதம் துவங்கும் என்ற பரவலான மாற்றங்கள் ஏற்பட்ட போதும், மேஷ சங்கிரமணம் என்பது, முதல் ராசியாம் மேஷத்தில் சூரியன் நுழையும் அந்த நொடியை விஷூ புண்யகாலம் (அனைத்து கடவுள்களும் ஒன்று சேரும் அயன காலம் ) என்றும் கொண்டாடுவதுண்டு. அந்த வழியில் தமிழ் ஆண்டுகளுக்கு வரிசையாக 60 பெயர்கள் வழங்கி வருவதுண்டு. எனவே பெயர் மாறும் சித்திரை மாத முதல் நாளான்று கோவில்களில் வழிபாடு செய்து, அன்னதானம் மற்றும் விசேஷ பிரார்த்தனைகள் மேற்கொள்வதால் அந்த ஆண்டு முழுவதும், நம் எதிர்கால கல்வி, தொழில், வருவாய், மகிழ்ச்சி போன்ற முன்னேற்றங்கள் நமக்கு கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த ஆண்டு பங்குனி 31ம் நாள் இரவு ஆங்கில தேதிப்படி 14-04-2009 – 00-45க்கு துவங்குகிறது. இப்போது துவங்கும் இந்த தமிழ் புத்தாண்டு 60 ஆண்டுகளில் 23வது ஆண்டாக விரோதி என்னும் நாமத்தில் மலர்கிறது. 23ன் கூட்டு எண் என்பது 5 என்னும் புத பகவானையும், தனித்தனியாக, 2 சந்திர பகவானையும், 3 குரு பகவானையும் குறிப்பிடுவதால், ஆக மூன்றும் சுபக்கிரகங்களில் ஆதிக்க ஆண்டாக மலர்வதால், நல்ல பல முன்னேற்றங்கள் இந்த உலகம் கண்டறியும் என்பதில் ஐயமில்லை. 12 ராசிகளுக்கு ஓராண்டு ராசி பலன் பார்ப்போமா...
மேஷம்

குரு பதினொன்றில் உள்ளதால் லாப ஆதாயம் உண்டு. வரும் டிசம்பர் மாதத்திற்குப் பின் எதிர்பாராத செலவுகள் உண்டு. பணியில் உள்ளவர்களுக்கு, எதிர் பார்த்த மாற்றங்கள் ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதத்திற்குள் கிடைத்து மகிழ்வடைவர். உடன் பணியாற்றுபவர்களிடம் ஆதரவு கூடும். புதிய வியாபார யுக்திகள் இந்த ஆண்டு கை கொடுக்கும். விவசாயிகளுக்கு பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். உற்சாத்துடன் மட்டுமின்றி திட்டமிட்டு செயல்படும் அனைத்து செயல்களிலும் விரைவான முன்னேற்றம் கிடைக்கும். கட்சியில் தொண்டர்கள் தலைவர்களுக்காக, எல்லா வகையிலும் உடனிருந்து உதவி செய்வார்கள்
ரிஷபம்

டிசம்பர் வரை சனி பகவான் ஐந்தாமிடத்தில் உள்ளார். மதிப்பு மரியாதை கூடும். குரு பகவானின் பார்வை மேலும் நன்மை செய்யும். தங்களுக்கு மன வேதனையைக் கொடுத்தவர்கள் திருந்தி தங்களிடம் மன்னிப்பு கோருவார்கள். வரும் மே மாதம் அதிகார அந்தஸ்து உள்ள பதவிகள் கிடைக்கும். மேடைப் பேச்சிலும், சரி உதவி கோரி பொது மக்களை அனுசரிப்பவர்களும் சரி சற்று அகலக் கால் வைக்காமல், நிதானமாக நன்று ஆலோசித்து, அழைத்துப் பேசுவதைவிட, நெருங்கிச் சென்று உதவி கேட்பது சிறந்தது. முக்கியமாக தங்களுக்கு அடுத்த இருக்கையில் எப்போதும், ஓர் அடிமட்டத் தொண்டரை அமர வைத்து மகிழ்வது, அரசியல்வாதிகளுக்கு மேலும் நன்மை தரும். மாணவர்களுக்கு புதிய படிப்பில் ஆர்வம் கூடும். கணிணியை விட கணக்கும் அறிவியலும் தேவை என்ற எண்ணம் மேலோங்கும்
மிதுனம்

ஆகஸ்ட் வரை பரவாயில்லை. தொடரும் காலம் டிசம்பர் வரை நிதானம் தேவை. வெளிநாடு பயணம் மேற்கொள்பவர்கள் சற்று பரிகாரம் செய்து கொள்ள உத்தமம். 7மிடத்தில் உள்ள ராகு குடும்பத்தில் சுகக்கேடுகள் தர வாய்ப்பு உள்ளது. இந்த ஆண்டு தொழில் முன்னேற்றம் உண்டு. மேற்கொண்ட பணிகளில் கச்சிதமாக முடிக்கும் வாய்ப்பு இந்த ஆண்டு சிறப்பாக உள்ளது. டிசம்பர் முதல் மார்ச்ச வரை கேது 12மிடத்தில் உள்ளதால் ஆனமீக ஈடுபாடுகளுடன் ஆன்மீகத் தலைவர்களுடன் சந்திப்பு ஏற்படும். கடினமாக உழைக்கும் பணியாளர்களுக்கு விருது காத்திருக்கிறது. கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். அரசியல் அன்பர்கள் பணிகளை திட்டமிட்டுக் கொள்வது நல்லது.
கடகம்

இந்த ஆண்டு மிக் கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது. பல வழிகளிலும் முன்னேற்றம் காணலாம். குடும்பத்தில் இருந்து வந்த ஐந்தாண்டுகால பிரச்சனை இந்த ஆண்டு முடிவுக்கு வரும். உடல்நலத்தில் சிறிது ஏற்ற இறக்கம் தவிர்க்க முடியாததாகி விடும். ஆனால், அதைக்கண்டு அச்சப்படத் தேவையில்லை. தனுசுவில் உள்ள ராகுவால், இந்த ஆண்டு இழந்த பல வாய்ப்புக்கள் தானே வந்து சேரும். நீண்ட நாட்களாக குறைபட்ட வருவாய் இழப்பு சரிசெய்யப்பட்டு விடும். வாங்கும் வருவாய் இரண்டு மடங்காக பெருகும் வாய்ப்பு உள்ளது. டிசம்பர் மாதம் ஏழரைச் சனி முழுமையாக விலகிவிடும்..
சிம்மம்

ஜென்மச்சனி நடைபெறுவதால், டிசம்பர் வரை வீடு வாகனம் வாங்க எண்ணியிருந்தால், பிறந்த ஜாதகத்தைப் பார்த்துக் கொள்ள உத்தமம். தனக்குத் துணை தன் பழைய நண்பர்களே என்பதை அறிவுறுத்திடும் காலமாகும். புதிய நண்பர்கள் தனக்கு ஆதாயம் தேடி தான் தன்னிடம் அணுகுவார்கள். இந்த ஆண்டு 40 சதவிகிதம் சாதகமான முன்னேற்றம் ஏற்படும். ஆனால், பெரிய சாதனை என்று அதிக ஆரவாரம் கொள்ளாமல் இருந்து, நிதானமாக சூட்சமாக யோசித்து படிப்படியாக முன்னேற்றம் காண்பது சிறந்தது. ஊதிய உயர்வுக்கு வழி காணலாம். இதர வருவாய் எண்ணம் தற்காலிகமாக நிறுத்துக் கொள்வது நல்லது. உடல் நலத்தில் அக்கரை காட்டுவது சிறந்தது. பல நாள் தள்ளிப் போன வழக்குகள் ஒரு நல்ல முடிவுக்கு வரும்.
கன்னி

ஏழரைச் சனியின் ஜெனமச் சனி துவக்கம் இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் என்றும் பயமுறுத்த வாய்ப்பு உள்ளது. சனி கன்னி ராசிக்கு நட்புக் கிரகம் என்பதால், அவ்வளவு பயப்படத் தேவையில்லை.
ஆனால் சில கலகங்கள் குடும்பத்தில் வந்து மறையும். தீயோருடன் தெரியாத வகையில் நட்பு வைத்துக் கொண்டு ஒரு சில இழப்புக்கள் சந்திக்க வாய்ப்பு உள்ளதால், நிதானமாக ஆலோசித்து நட்பு கொள்ள உத்தமம். போட்டிகளுக்குத் தகுந்தவாறு செயல்பட்டு, சீசன் அறிந்து தொழிலில் அதிக லாபம் பெறுவோர் சிறப்பான முன்னேற்றம் காணுவர். விவசாயிகள் மனமகிழ்ச்சி அடைவர். அது போன்று உடலுழைப்பில் உள்ளவர்களுக்கு சனி தன் பங்குக்கு வருவாயை அள்ளித் தருவார். நடு இரவுப் பிரயாணம் இந்த ஆண்டு முழுவதும் உகந்ததல்ல. தவிர்க்க இயலாத பிரயாணத்தின் போது, சட்டைப்பையில் இஷ்ட தெய்வ படங்கள் வைத்துக் கொள்வது நல்லது.
துலாம்

சனி சிம்மத்தில் இருக்கும் வரை நல்ல முன்னேற்றம் தொரும். சனி பகவான் கன்னிக்கு பெயர்ச்சி ஆனதும், ஏழரைச் சனியாக உருவெடுக்கிறார். 25-09-2009க்கு பின் நிதானம் தேவை. முதலீடுகளில், ஒழுங்கு படுத்திக் கொள்வது நல்லது. சில வீடுகளில் சுபச் செலவுகள் கூடிவரும். ஆனால் ஏழரைச் சனிக்காக இந்த ஆண்டு அதிக கவலை கொள்ளத் தேவையில்லை. 5மிடத்தில் உள்ள குரு சனியைப் பார்ப்பதால், உயர்நதவர்களின் ஆதரவு கிட்டி மேலும் முன்னேற்றம் காணலாம். பதவி உயர்வு, வேலைச்சுமை என்றெல்லாம் ஒரிரு நன்மையும், தீமையும் கலந்து இந்த ஆண்டு ஆரம்பத்தில் முன்னேற்றம் கிடைக்கும். பதவி ஓய்வு பெறுபவர்கள் இடமாற்றம் செய்து புதிய யுக்திகளில் கவனம் செலுத்துவது சிறந்தது. குழந்தைகளைப் பற்றிய கவலைகள் சற்று தலை தூக்கும். எனினுமு் பிரார்த்தனை வழிபாடுகளில் அதற்கு மகிழ்ச்சி காணலாம்.
விருச்சிகம்

வீடு மாற்றம் ஊர் மாற்றம் செய்ய விரும்புபவர்களுக்கு இந்த ஆண்டு கைகொடுக்கும்.. சனி லாபஸ்தானத்தில் வருவதால், எளிதில் வீடு வாங்கலாம், வெளி நாட்டில் உள்ளவர்களுடன் தொடர்பு கொள்ளலாம். மேலும் ஒவ்வொரு ஆண்டின் துவக்கத்திலும் ஒரு சில உறுதி மொழிகளை எடுத்து அதனை பயன்படுத்துகிறீர்களோ இல்லையோ, இந்த ஆண்டு எடுக்கும் உறுதி மற்றும் எதிர்பார்ப்புகள் அனைத்தும். தங்களுக்கு சாதக அமைப்பினை தந்து சிறப்படையச் செய்யும். கலவி, உடல்நலம், பொன், பொருள் சேர்க்கை சிறப்பாக உள்ளது. கணவருடன் சுமூகமாக செயல்பாடுகள் வழக்கமாகிக் கொண்ட மகளிர்களுக்கு இந்த ஆண்டு தித்திக்கும் பல திருப்பங்கள் ஏற்படும். அரசியல் வாதிகளுக்கு, பதவிகள் தேடி வரும். அவர்களின் பேச்சில் வசீகரம் கூடும். கலைத்துறை சார்ந்த கலைஞர்களுக்கு இந்த ஆண்டு முழுவதும் முன்னேற்றம் தான்.
தனுசு

நினைத்த காரியம் வெற்றி உண்டு. பல மாதங்கள் தள்ளிப் போட்ட பணிகள் இந்த மாதத்தவக்கத்திலேயே நிம்மதியாய் நலம் காணலாம். பணியாளர்களுக்கு ஏற்பட்ட பல்வேறு குறைபாடுகள் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் ஒரு முடிவுக்கு வரும். புதிய ஏஜென்ட், தரசு முறையிலான வியாபாரங்கள் தங்களைத் தேடி வரும் வாய்ப்பு உள்ளது. பிறரை பகை சம்பாதிக்கின்ற அளவில் பேச்சுக்கள் இல்லாமல் விழிப்புடன் இருப்பது நல்லது. காவல் பணிகளில் நேர்மையான முன்னேற்றம் காணலாம். மாணவர்களுக்கு சகல உதவிகளும் தேடி வரும். இந்த ஆண்டு எதிர்பார்த்ததை விட மதிப்பெண்கள் கூட கிடைக்கும். உயர்கல்வியில் அரசின் ஆதரவு கிடைக்கும். ஆசிரியப் பணி முடித்த தனுசு ராசிக்காரர்களுக்கு பணி வாய்ப்பு சிறப்பாக உள்ளது. வயது வரம்பு எல்லையில் பணி வாய்ப்பு இழக்கும் படி உள்ளவர்களுக்கு பணி வாய்ப்பு தேடிக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது.
மகரம்

துணிச்சல்கள் வரும் ஆகஸ்ட் முதல் பெருகும். அந்நேரம் அஷ்டமச் சனி விலகும். கடந்த இரண்டரை ஆண்டுகள் பல்வேறு இன்னல்கள் அனுபவித்தது மறைந்து மகிழ்ச்சி கூடும். காலத்திற்கேற்றவாறு உழைக்க ஆரம்பித்தால், நல்ல முன்னேற்றம் காணலாம். வாரம் 35 மணிநேரம் உழைப்பேன் என்று கூறாமல், வருவாய் வருமென்றால் உழைக்கத் தயாராகிக் கொள்ளுங்கள். இனி பிஸினஸ் பார்ட்னர் மூலம் முன்னேற்றம் காணலாம். வேண்டாத குற்ற உணர்வுகள் அல்லது எதிர்மறை பேச்சுக்கள் இனி இல்லாமல், மாறாக மகிழ்ச்சி தரும் அம்சங்களாக இந்த வருடம் அமையப் போகிறது. உங்கள் வரவு செலவு கணக்குகளை ஒழுங்கு படுத்திக் கொள்வது நல்லது. மேலதிகாரிகளிடம் இணக்கமாக நடந்து கொள்வது நல்லது. பழைய கடன்கள் வசூலாகும் வாய்ப்பு திருப்தியாக உள்ளது. குல தெய்வ வழிபாடு மிகவும் முன்னேற்றம் தரும்.
கும்பம்

அரசு உதவிகள் கிட்டும். புது வாகனம், புதுவீடு ஆகிய பாக்யங்கள் கிடைக்கும். புதிய நண்பர்களிடம் எதிர்பாராத உதவி தானாக கிட்டும். வம்பு பேசி மாட்டிக் கொள்ளாதிருக்க வேண்டும். சுப காரியங்கள் ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிப்பது நல்லது. பின்னர் வரும் அஷ்டமச்சனி தன்பங்குங்கு ஆட்டிப் படைக்கும். மேற்படிப்புச் செலவுகள் சற்று பதம் பார்க்கும். வெற்றி கிடைக்க வேண்டுமெனில் இரண்டு மடங்கு உழைப்பு தேவையாகலாம். இந்த ஆண்டின் பொருளாதார நிலைமை இரண்டுமுறை ஏறும் ஆனால் ஆகஸ்ட் பின்னர் ஒரிரு முறை இறக்கம் காணும். கணவர் மனைவி மற்றும் கூட்டு வியாபாரம் செய்பவர்கள் ஒருவர் மேல் மற்றவர் மிகுந்த நம்பிக்கை வைக்க வேண்டும், மாறாக தேவையற்ற சந்தேகம் கொள்ளக்கூடாது. பெண்கள் ஆடை அணிகலன்கள் விருப்பம் தெரிவித்து அதை அடைவதில் குழப்பங்கள் சந்திக்க வாய்ப்பு உள்ளதால், நேரம் காலம் அறிந்து தக்க சமயத்தில், அதைப் பற்றிப் பேசுவது நல்லது. பிரயாணங்களின் போது, முன்னதாக திட்டமிடுவது சிறந்த பலனைத் தரும். வடக்கு மற்றும் கிழக்கு திசை பயணம் அல்லது, வியாபாரம் சிறப்பாக இருக்கும். முன்னதாக தெற்கு மேற்கு பிரயாணங்கள் பலன் தந்திருக்க வாயப்பு உள்ளது. மாணவ மாணவிகள் தேர்வுககு முன்னதாகவே படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.

மீனம்

வீட்டில் உங்கள் கூட்டணி வெற்றி பெறும். முடிந்த வரை கலகலப்பாக இருக்க பார்ப்பது நல்லது. மீன ராசிக்காரர்களின் தனிக்குணம் தன்னைச் சார்ந்தவர்களை தனக்கு ஏற்றார் போல் மாற்றி விடுவது தான். எனவே தான் மகிழ்ச்சியாக இருந்தால் மற்றவர்களிடமும் அம்மகிழ்ச்சி காணலாம். இந்த ஆண்டு குரு பகவான் 11மிடத்தில் நீசமாகி வருட ஆரம்பத்தில் இருந்து, பின்னர் விரய ஸ்தானத்திற்குச் செல்வது சுமாரான யோகம் தான். சற்று மகிழ்ச்சி குறைந்தால் சுற்றுலா சென்று வந்து சரிகட்டலாம். சொத்து ஒன்று சேர்க்க வழி உண்டு. பெற்றோர்களின் ஆதரவு இந்த ஆண்டின் தனிச்சிறப்பாகும். மாணவ மாணவியர்கள் கல்விக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. புதிய கல்வி முறைகளில் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டலாம்.

தளத்தை செய்தியோடை மூலம் வாசிப்பவர்கள்

வாசகர்கள்

எங்களின் முதன்மை வலைத்தளம். Our Main Web Site

விருந்தினர் வருகை

சமீபத்தில் வந்தவர்கள்

இதை படித்தவர்கள் படித்தது

அதிகம் படிக்கப்பட்டவை