தமிழ் ஜோதிடம் ஜாதகம்

ஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், வாஸ்துசாஸ்திரம் மூலம் வருங்காலம் அறிய "ஸ்வாதி ஜோதிட ஆய்வகம்" உங்களை அன்புடன் வரவேற்கிறது.

எழுதியவை அனைத்தும்


அமைதி குறைந்திருக்கும் நேரம் தெய்வ வழிபாட்டுத் துதிகள் நமக்கு நல்வினைக்கு வழிகாட்டும் என்பது அனுபவித்த சான்றோர்களின் கருத்து. அதன் அடிப்படையில் தினமும் நாம் அமைதி குறைந்திருக்கும் நேரம் என்று கருதாம்ல் இரவில் படுக்கைக்குச் செல்லும் முன்பாக அல்லது முடிந்தவர்கள் தினமும் காலை பிரார்த்தனை மாலைப் பிரார்த்னை வேளையில் அவரவர் விருப்ப தெய்வ துதிகள் மனம் லயித்து உச்சரிக்க நம் மன பாரம் குறைந்து, மகிழ்ச்சி பெருக்கெடுக்கும். அந்த வகையில் ஒருசில வழிபாட்டு துதிகள் கீழே கொடுக்கிறோம்.
தென்னாடு உடைய சிவனே போற்றி
என்னாட்டவர்க்கும் இறைவாஓம் நம சிவாய!
ஓம் நம சிவாய!நம பார்வதி பத யே
ஹர ஹர மஹாதேவா
திருச்சிற்றம்பலம்
நமச்சிவாய திருப்பதிகம்
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருநதக் கைதொழக்
கற்றுணைப் பூட்டி ஓர் கடலில் பாய்ச்சினும்
ந்றறுணை ஆவது நமச்சிவாயவே. ...1
பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக்கு அருங்கலம் அரன் அஞ்சு ஆடுதல்
கோவினுக்கு அருங்கலம் கோட்டம் இல்லது
நாவினுக்கு அருங்கலம் நமச்சிவாயவே ...2
விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகில் அவை ஒன்றும் இல்லையாம்
பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை
நண்ணி நின்று அறுப்பது நமச்சிவாயவே. ...3
இடுக்கண் பட்டு இருக்கினும் இரந்தி யாரையும்
விடுக்கில் பிரான் என்று வ வினவுவோம் அல்லோம்
அடுக்கில் கீழ் கிடக்கினும் அருளின் நாம் உற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சிவயாவே. ....4
வெந்த நீறு அருங்கலம் விதகட்கு எலாம்
அந்தணர்க்கு அருங்கலம் அருமறை ஆரங்கம்
திங்களுக்கு அருங்கலம் திகழும் நீள் முடி
நகங்களுக்கு அருங்கலம் நமச்சிவாயவே. ....5
சலம் இவன் சங்கரன் சார்ந்தவர்க்கு அலால்
நலம் இலன் நாடொறும் நல்குவான் நலன்
குலம் இலராகினும் குலத்திற்கு ஏற்பதோர்
நலம் மிக்க கொடுப்பது நமச்சிவாயவே. ...6
வீடினார் உலகினில் விடுமிய தொண்டர்கள்
கூடினார் அந்நெறி கூடிச் சென்றாலும்
ஓடினேன் ஓடிச் சென்று உருவம் காண்டலும்
நாடினேன் நாடிற்று நமச்சிவாயவே. ....7
இல்லக விளக்கது, இருள் கெடுப்பது-
சொல்லக வளிக்கது, சோதி உள்ளது-
பல்லக விளக்கது, பலரும் காண்பது-
நல்லக விளக்கது, நமச்சிவாயவே. ....8
முன்னெறி ஆகிய முதல்வன் முக்கணன்
தன்னெறியே சரணாதல் திண்ணமே
அந்நெறியே சென்று அங்கு அடைந்தவர்க்கு எலாம்
நன்னெறி ஆவது நமச்சிவாயவே. ....9
மாப்பிணை தழுவிய மாது ஓர் பாகத்தான்
பூப்பிணை திருந்தடி பொருந்தக் கை தொழ
நாப்பிணை தழுவிய நமச்சிவாயப் பத்தும்
ஏத்த வல்லார் தமக்கு இடுக்கண் இல்லையே ..10
தொடரும் சுலோகங்களாக..
ஸ்ரீ தட்சணாமூர்த்தி
ஸ்ரீ அம்பாள்
ஸ்ரீ லட்சுமி
ஸ்ரீ மஹாலட்சுமி
ஸ்ரீ வரலட்சுமி
ஸ்ரீ லலிதா பஞ்சரத்னம்
ஸ்ரீ மீனாட்சி
ஸ்ரீ புவனேஸ்வரி
ஸ்ரீ ராஜேராஜேஸ்வரி
ஸ்ரீ அன்னபூர்ணா
ஸ்ரீ மூகாம்பிகா
ஸ்ரீ துர்க்கா
ஸ்ரீ சாரதா
ஸ்ரீ தேவி
ஸ்ரீ துர்க்கா
ஸ்ரீ திரிபுர சுந்தரி
ஸ்ரீ மீனாட்சி
ஸ்ரீ மூகாம்பிகா
ஸ்ரீ நவமங்களி
ஸ்ரீ காமாட்சி
ஸ்ரீ மகிசாசுரமர்தனி
ஸ்ரீ கனகாதாரா
ஸ்ரீ சியாமளா
ஸ்ரீ சௌந்தர்ய லஹரி
ஸ்ரீ அபிராமி அந்தாதி
ஸ்ரீ சரஸ்வதி
ஸ்ரீ ஜய துர்க்கா
ஸ்ரீ சக்ரநாயகி
ஸ்ரீ லலிதா நவரத்னம்
ஸ்ரீ தேவி கருமாரியம்மன்
ஸ்ரீ தேவியர் காயத்ரீ
மற்றும் ஸ்ரீ விஷ்ணு ஸ்தோத்திரங்கள் (41)
என தொடரும் .. ... வாழ்க நலமுடன்..
ஜோதிட தம்பதி

எங்கள் அன்பெனும் பாச வலைக்குள் ஒருங்கே - ஒருமித்த கருத்தோடு மகிழ்வுடனே மனமெனும் மானசீக இல்லத்துள் ஒரு முகமாக மனதைக் குவிய வைத்து, வருகின்ற புத்தாண்டை சிறப்பாக வரவேற்போமா.. .. .. ..பிறக்கின்ற புத்தாண்டு 2009 நமக்கெல்லாம் மட்டுமல்லாமல் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் இந்த இணைய தளத்தைக் காண்கின்ற அனைத்து மக்களுக்கும், நிஜமாக, வாழ்க்கையின் எல்லா கட்டத்திலும் துணை நின்று காத்தருள இறையோனை பிராரத்த்ப்போம். அனைவருக்கும் இனிய அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள், சுபம்

தளத்தை செய்தியோடை மூலம் வாசிப்பவர்கள்

வாசகர்கள்

எங்களின் முதன்மை வலைத்தளம். Our Main Web Site

விருந்தினர் வருகை

சமீபத்தில் வந்தவர்கள்

இதை படித்தவர்கள் படித்தது

அதிகம் படிக்கப்பட்டவை