தமிழ் ஜோதிடம் ஜாதகம்

ஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், வாஸ்துசாஸ்திரம் மூலம் வருங்காலம் அறிய "ஸ்வாதி ஜோதிட ஆய்வகம்" உங்களை அன்புடன் வரவேற்கிறது.

அண்மையில் எழுதியவை

எழுதியவை அனைத்தும்

வாசகர் கருத்து
 அனைவருக்கும் எங்கள் இதயம் கனிந்த தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்கள்  


நந்தன ஆண்டின் இந்த தனித்துவ தமிழ்ப் பொங்கல் அதிகாலையில் சூரியபகவானை வழிபட்டு பொங்கலிட்டு பெரும் மகிழ்வலைகளை குடும்பத்துள் உருவாக்கி எதிர்காலம் சிறக்க வாழ்த்தி மகிழ்வோம்..
தவளாம்போருஹாரூடம்
தாடிமீகுஸூமப்ரபம்
ஸ்புரத்ரக்தமஹாதேஜோ
வ்ருத்தமண்டலமத்யகம்
அம்ஸாஸக்தஸ்புடச்வேத
ஸநாளாப்ஜகரத்வயம்
ஏகாஸ்யம் சிநதயேத்பானும்
த்விநேத்ரம் ரக்தவாஸாஸம்..

வெள்ளைத் தாமரையின் மேல் வீற்றிருப்பவரும்,
மாதுளை மலரை ஒத்த சிவந்த மேனியை உடையவரும்,
வட்ட வடிவமான மண்டலத்தின் நடுவில் மலர்களை 
வைத்திருப்பவரும், ஒரு முகத்துடனும், இரு கண்களுடனும்
சிவந்த ஆடை அணிந்திருப்பவருமான ஸூர்ய பகவானை
த்யானிப்போமாக..

மன்மத வருஷ மகரஸங்க்ராந்தி பலன்கள்
மன்மத வருஷம் மகர ஸங்க்ராந்தி தேவதை “மந்தாகினி
என்ற பெயருடன் ஸ்தீரி புருஷரூபமாய் மன்மத வருஷம்
மார்கழி மாதம் 29 ம் தேதி 14-01-2016 வியாழக்கிழமை
சுக்ல பட்சம், சஷ்டி திதி, பூரட்டாதி நட்சத்திரம், மீனராசி,
பரிகம் யோகம், கௌலவம் கரணம், தனுசு லக்னம் கூடிய
தினம் நாழிகை 55.24 மறுநாள்அதிகாலை 04-49மணிக்கு
மகர ராசியில் பிரவேசிக்கிறார்.

மன்மத வருடம் மகர ஸங்க்ராந்தி தேவை பிரவேசிக்கும்
காலத்தில் கொண்டிருக்கும் பெயர், வாகனம், வஸ்த்ரம்,
ஆபரணம், ஸ்நானம், ஆயுதம், கந்தம், புஷ்பம், குடை,
சாமரம், வாத்யம், போஜனம், முகபாவம் முதலியவற்றை
அனுசரித்து பலன் தெரிந்து கொள்ளலாம்.

அவற்றுள் நன்மையான ஒரு சிலவற்றை அறிந்து மகிழ்வோமா,
வஸ்த்ரம் – சித்ரம் -  சௌக்கியம்
ஆயுதம்  -  கலப்பை – போஜனசுகம்
கந்தம்    -  சந்தனம் -  மக்கள் சுக வாழ்வு
புஷ்பம்   - மகிழம்பூ  - சௌக்கியம்
போஜனம் – மாவுபண்டம் – ஜனங்கள் ஆரோக்கியம்
முகம்  -  லஜ்ஜை    -  தான்ய விருத்தி
பட்சம்  -  சுக்ல பட்சம்  -  சுபிட்சம்
வாரம் -   குரு வாரம்  -  நல்ல மழை
லக்னம் -  உபய லக்னம்  -  மிதமான தான்ய விருத்தி.

நவ நாயகர்கள் பலன் அறிவோமா!

விந்தையான மழை,அரசாங்க பணி
மேற்கு நாட்டில் பயிர் செழிக்கும்
மழை குறைவாகப் பெய்யும்
நல்ல மழை பெய்து பூமி செழிக்கும்
நல்ல மழை பெய்து பயிர் செழிக்கும்
அதகி மழை பெய்து வளம் பெருகும்
நெய், எண்ணெய் வித்துக்கள் அதிகம்
நல்ல மழை பொழிவால் நன்மை
தேவையான நேரம் மழை உண்டு
திடப் பொருள்கள் உற்பத்தி 

அனைவருக்கும் இனிய தைத் திங்கள் பொங்கல் திருநாள் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.
இவண்.
ஜோதிட தம்பதி
ரெங்கன்
உஷா.
ராஜா

மந்திரி
அர்காதிபதி
ஸவ்யாதிபதி
ஸேனாதிபதி
ரஸாதிபதி
தானயாதிபதி
மேகாதிபதி
நீரஸாதிபதி

 சனி பலன்

அங்காரகன் பலன்
சந்த்ரன் பலன்
சுக்கிரன் பலன்
சந்த்ரன் பலன்
ஸூர்யன் பலன்
புதன் பலன்
சந்த்ரன் பலன்
சுக்ரன் பலன்
 

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

நிகழும் மன்மத வருடம் மார்கழி மாதம் 23ஆம நாள் (08-01-2016 முதல் முதல்  (26-07-2017 வரை)வெள்ளிக்கிழமை கன்னி ராசியிலிருந்து (தன்னுடைய பின்னங்கால்முறை) சிம்ம ராசிக்கு ராகு பெயர்ச்சி ஆகிறார்.

அதே நேரம்  கேது பகவான் மீன ராசியிலிரந்து கும்ப ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்...  இனி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் பார்ப்போமா.. தொடரும்...
புத்தாண்டு மினி பலன்கள்..நவகோட்களும் நாளும் சஞ்சாரம் செய்யுமே.. 
இனிய புத்தாண்டு 2016.. துவக்கமே கோலாகலமாக அமையட்டும்..ஆம்.
மேஷ ராசிக்கரார்களுக்கு  வாழ்த்துக்கள்.. பலன் அறிவோமா..

பண வரவுகள் சிறப்பு உண்டு.. பணியில் உற்சாகம் ஏற்படும். எது தந்தாலும் சமாளிப்போம் என்ற எண்ணம் 2015 ல் தங்களுக்கு கிடைத்த அனுபவத்தின் மிகப்பெரிய அஸ்திவாரம்.
குறிப்பு உடல் ஆரோக்கியம்...
வயது 10க்குள் பாதகமில்லை
வயது 20க்குள் சிறிதாய் தலைவலி..
வயது 30க்குள் மகளிரானால் கவனம்.. சிறந்த ஓய்வு ஒன்றே தாய்மை சிறப்பாகும். ஆ்டவரெனில் குதிங்கால் வலி மற்றும் வயிற்று உபத்திரவம்.
வயது 40க்கு மேல் நோயின்றி இருப்பினும் மனதால் அச்சம்.. முதுகின் அடிப்பகுதியில் வலி உபாதை... தருவது யார்.. விருச்சிக சனி எட்டாமிடத்தில் உள்ளதால்.. கவலைப்படத் தேவையில்லை.. நிச்சயம் குணமாகும்.. பிரார்த்தனை மிகச் சிறந்த நிவாரணம்

ரிசப ராசிக்காரர்களுக்கு வாழத்துக்கள்.. பலன் அறிவோமா...

ஆகஸ்ட் முதல் மிக நல்ல மகிழ்வான ஆரம்பம். குடும்பத்தில் குதூகலம்.. கணவன் மனைவி உறவில் குறை எதுவெனினும் மாறி நிறைவாய் மகிழ்ச்சி பெற்றிடலாம்.  ஆபரணம் வாங்குதல் பூமி மனை வாங்குதல் உண்டு.  ஆரோ்ககியம் நன்றாக இருக்கும். மருத்துவ மனை பக்கம் சென்றால் அங்குள்ள நோயாளி உறவினர்களுக்கு உதவி செய்யலாம். உங்களது இம்முன்னேற்றம் முதலில் அதாவது ஜூலை வரை எதிர்ப்பார்ப்பதில் பலனில்லை.
எனவே ஜனவரி முதல் ஜூலை வரை ஏழு மாதங்களும் அதிகாலைத் துயிலெழுத்து, இறையருளைப் பெற்றிட ஆலயம் தொழுதல் நன்று

மிதுன ராசிக்காரர்களுக்கு  வாழ்த்துக்கள்.. பலன் அறிவோமா!

அனைத்திலும் ஓகே.. பணவரவு, கணவன் மனைவி உறவு, உறவினர்களின் பாராட்டு எனப் பலப்பல மகிழ்வுகளுககு மத்தியில், ஆகஸ்ட் 2 க்கு முன்பாக குழந்தைகளின் முன்னேற்றத்திற்கும், படிப்பிற்கு தமது ஆலோசனைகள் கேட்காமல் உதாசீனப்படுத்துகின்றனரே என்ற ஓரே கவலை கொள்ளும் அளவிற்கு உரையாட்ல்கள் குழந்தைகளிடம் அமையும்.  இக்கால பெற்றோர் களுக்கு சொல்லித் தர வேண்டியதில்லை.. குழந்தைகள் எவ்வழி அவ்வழி நம் வழி என்றாக்குவது போல் சிறிது தூரம் சென்று நம் வழிக்கு அவர்களை அழைத்திடுக.. அப்போது புரியும் ஒவ்வொரு குழந்தைக்கும் பெற்றோரின் மகிமை..
குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு குரு மற்றும் சனி வழிபாடு அவசியம்.

கடக ராசிக்காரர்களுக்கு வாழ்த்துக்கள்.. பலன் அறிவோமா...

நன்மை பாதி.. கெடுதல் பாதி என்பார்களே.. அது உங்களுக்கு.. 2016 ல் குரு இரண்டாமிடத்தில் ஆகஸ்ட் வரை பலன்கள் ஓரளவுக்குத் தரத்தான் செய்யும்.  அதே நேரம் அரசியலில் உள்ள பலருக்கு இது இருக்கமான மனநிலை தந்தாலும் எதிர்காலம் நம்பும் படியாக முன்னேற்றங்களும் வரும்.  குருப் பெயர்ச்சிக்குப் பின் பயம், பதட்டம் சோர்வு தவிக்கும் நிலைகள் ஆகியவை தவிர்த்திட திடமனது கொள்ளும் முயற்சியில் இறங்கிடுக.  மனோதிடமும் முகமலர்ச்சியும் நமதாகில் நம்மை எவர் வெல்வர்.
ஆரோக்கியம் குறையும்.. சரியாகும்.  வயது 50க்கு மேல் உள்ளவர்கள் சிறுநீரக மற்றும் மூல நோய்கள் பயம் உள்ளவர்கள் உரிய மருத்துவம் செய்து கொள்வது நல்லது,
வருமுன் காத்திடும் குணம் பெற்றிடுக..

சிம்ம ராசிக்காரர்களுக்கு வாழ்த்துக்கள்.  பலன் அறிவோமா..

துணிந்து போராடும் நேரமிது,  சனி 4மிடத்தில் அர்த்தாஷ்டசனி என்றாகிறதல்லவா.. ஜென்மராசியில் குரு யாரைத் தூங்கவிட்டது.  தொழிலில் முகம் தெரியாதவர்கள் உதவி செய்தலும்,  நமக்கே உரியர்கள் சற்று தொந்தரவு தருவதுமாக ஆகஸ்ட் வரை இருந்து பின்னர் நம்மைக் கேட்டு நன்மை பெற்றவர் மனம் திறந்த பாராட்டுவர் என்பதில் ஐயமில்லை.  ஒரு குறிப்பு.. சோகம் பல வந்தாலும், நேசம் நட்பு பாசம் என்ற பந்தத்தில் அனைவரையு்ம் ஒன்று சேர்க்கும் முக்கியத்துவமும் இந்த ஆண்டிற்கு உண்டு.
தனக்கென்று இத்திறன் இருந்ததே இம்மேன்மைக்குக் காரணம் என்று சொல்லிக் கொள்ளும் படியான தனித் திறனை வெளிப்படுத்தும் நேரமிது.
ஆரோக்கியம் உடலுக்கு பாதிப்பில்லை.  மனச் சோர்வுக்கு உரமூட்ட பிரார்த்தனைகள் வேண்டும்.

கன்னி ராசிக்காரர்களுக்கு வாழத்துக்கள்.  பலன் அறிவோமா..

தன் குழந்தைகளின் முன்னேற்றமே தனக்கு முக்கியம் என்று சொல்லி வந்த அனைத்து கன்னி ராசிக்காரர்களுக்கு இது நல்ல நேரமாகும்.  ஆனால் அவர்களைப் பொறுத்தவரை நார்மலான நேரம்.  ராசியில் வருகின்ற குரு பகவான் நன்மைகள் தரத் தயக்கம் காட்டுவார். ஆனால் அனுபங்களை அள்ளி வழங்குவார்.  எங்கோ ஒரு மூலையிலிருந்து வருகின்ற தகவல் கூட குழந்தைகளுக்கு நல்ல வாய்ப்பைத் தந்திடும்...
தொழில் சொந்தமாக செய்வபவர்கள் வரும் ஆகஸ்ட்க்கு மேலாக பலன்கள் இரட்டிப்பாகும். அதே நேரம் கூட்டாளிகளுடனும் சமூகமான முன்னேற்றம் கிடைக்கும். புது தொழில் மற்றும் யுக்திகள் வந்து சேரும்.
ஆரோக்கியம்... உடலில் ஒன்றுமில்லை. மனதில் ஒன்றுமில்லை.. எல்லாம் சுகமே... பின் என்ன.. அந்த ஒன்று தானே.. ஆமாம்,. பேச்சுகளில் சரவ கவனமாக இருப்பது... இவ்வாண்டு நாம் ஒன்றை யதார்த்தமாக சொல்ல அது மற்றவர்கள் காதில் வேறுவிதமாக போய் சேர வந்தது வினை என்றாகி விடக்கூடாதே... தினமும் ஹயக்கீரிவர் மற்றும் சரஸ்வதி ஸ்லோகம் பாராயணம் முக்கியம்.

துலாம் ராசிக்காரார்களுக்கு வாழ்த்துக்கள். பலன் அறிவோமா..

ஜூலை 2016 வரை யோகம்.  பின்னர்... அதை ஏன் இப்போதே சொல்ல வேண்டும் என்று நினைக்கிறோம்.  ஏழரைச் சனியில் கடைசி பகுதி.. குரு மறைவு.. ராகு வேறு லாபஸ்தானத்தை பிடித்துக் கொள்வது...ஆக மொத்தம் ஆகஸ்ட் 2016 முதல் ஒரு ஐந்து மாத காலம் எதிர் நீச்சல் தான்.
வயது வித்தியாசமின்றி, ஆகஸ்ட் முதல் ஐந்தாறு மாத காலத்திற்கு, சர்வ ரோக நிவாரணி ஏதேனும், பயன்படுத்திவர உத்தமம்.  சித்த வைத்திய முறையில் சொன்னால் கடுக்காய் உள் விதையை எடுத்து விட்டு, மற்றதை உரியமுறையில் மருந்தாக்கி அருந்திவரலாம்.
வீட்டில் சுக்கு மிளகு திப்பில் இந்துப்பு காயம் சீரகம் கருஞ்சீரகம் என்ற அஷ்ட சூரணம் உரிய முறையில் தயாரித்து வைத்து பயன்படுத்திட சிறப்பு.
குறிப்பு உங்களுக்கு இது பற்றி இலவசமாக அறிந்து கொள்ள வேண்டுமெனில் சென்னை கே.கே.நகரில் உள்ள சித்த மருத்துவரை Dr. R. Uthayaganga Hari BSMS., MD.,(S) Peadiatric..  (குழந்தைத் திறன் வளர்ப்பு நிபுணர்)அணுகலாமே.. கைபேசி.. 9486786300தொடரும்...
வரும் ஞாயிற்றுக்கிழமை..
விருச்சிக ராசிக்காரர்களுக்கு,
இந்த புத்தாண்டு முக்கியமாக தொழிலைப் ப்ற்றி குறிப்பிட வேண்டும்.  எந்தத் தொழிலில் இருந்தாலும், ஒரு சிறு அபகீர்த்தி - அதாவது தொழிலில் நாட்டமில்லை என்று குறையை வைத்து, செய்கின்ற தொழிலில் உள்ள பக்தியைக் குறைத்து விடுவார்கள். இது நல்லதா என்றால் நல்லது என்று நினைத்துக் கொள்ள வேண்டியது தான்.  ஏனெனில் கடந்த வருட உழைப்பு, இந்த ஆண்டு பாராட்டப்பட வேண்டிய நிலையில் இந்த பின்னடைவு உள்ளதே என்று கவலைப்பட்ட பின்பு ஆகஸ்ட் 3ம் நாள் முதல் அழைத்து, புகழப்படுவீர்கள் என்பதில் ஐயமில்லை.  அதே போல் விருச்சிக ராசியில் பிறந்தால் திருமணமே இல்லையே என்ற நிலைக்கு தள்ளப்பட்டு, சராசரி திருமண வயதைத் தாண்டியவர்களுக்கு வரும் ஆகஸ்ட் மாதம் கதவைத் தட்டி திருமண யோகத்தைத்தரும் என்பதில் மாற்றமில்லை
குறிப்பு.. இடது கால் வலி, கழுத்துப் பகுதி வலி, சிறிதாக தலைவலி என்பதெல்லாம் ஜென்மச் சனியின் குற்றம்... வழிபாடு மற்றும் தியானப் பிரார்த்தனைகள் நல்ல பலன் தரும்.
தொழிலதிபர்கள் ஒரு ஆறு மாத காலத்திற்கு, தொழிலில் பின்தங்கியுள்ளவர்களை அழைத்து, ஓய்வு கொடுத்து, ஆகஸ்ட் மாதத்தில் திரும்ப அழைத்துக் கொள்ளும் படியான நிலைமை வரும்.   அதற்காக சோர்வடைய வேண்டாம்.  விசுவாசமுள்ள தொழிலார்கள் தக்க மாற்றங்களைக் கடைபிடித்து உதவுவார்கள் என்பதில் கொஞ்சம் தைரியம் கொள்ளலாம்.

தனுசு ராசிக்காரர்களுக்கு,
2016 ஆரம்பமே கோலாகலம் தான் என்று திருப்தி அடைந்து விடுவீர்கள்... எனினும் 30 வயதிற்குக் குறைாக உள்ளவர்களின் நிலை சற்று சிரமம்.  வேலை கிடைக்கும்.  திருப்தியாக இருக்கும். வீட்டாரின் புகழ் அண்டை அயலாரின் பாராட்டு எல்லாம் கிடைத்துவிடும்.  ஆனால் நம்மை போற்ற வேண்டிய மிக நெருக்கத்தில் உள்ளவர்கள் ந்ம்மை ஏளனம் செய்து பரிகசிப்பார்கள்.. ஏன்.. ஏழரைச் சனி மட்டுமில்லாது. அதிசார குரு பத்தாமிடத்தில் உள்ளதால் தான்.  சொத்து வாங்குதல் பழையதை விற்றல் என்பதில் உள்ளுரில் பிரச்சனையில்லை. தொலைவில் மற்றும் வெளிநாடுகளில் சொத்து வாங்குதல் விற்றலில் சற்று கவனம் தேவை.  பெண்கள் தம் வீட்டின் மூத்த குழந்தைகளின் மேல் சற்று அதிக அக்கறை செலுத்துதல் வேண்டும்.  தனுசு ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதத்திற்கு பின்பாக பணியில் மாற்றங்கள் தவிர்க்க முடியாததாக உள்ளது.
குறிப்பு ஆரோக்கியம் சிறு குழந்களுக்கு, மத்திய வயதை உடையவர்களுக்கும் நரம்பு சம்பந்தமான பிணிகள் வந்து மறையும்.  நேர்மறையாக எண்ணங்கள் உயர்வு காணலாம்.
மகர ராசிக்காரர்களுக்கு,
தூக்கம் என்பது தன்மை உற்சாகப்படுத்தி அடுத்த நாளுக்கு உரிய சக்தியை ஈட்டத்தான் என்பதைநன்றாக தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.  வரும் சூலை மாதம் வரை தூக்கம் ஒரு நாளைக்கு ஐந்து மணிநேரம் கூட இல்லையே என சற்று அங்கலாய்க்க வேண்டியது வரும்.  ஆகஸ்ட்லிருந்து, எதற்கும் தலையாட்டி வைக்கலாம்.  வருபவர் எல்லாம் தங்களுக்கு நன்மை செய்யவே வருவார்கள்.  எல்லா வழிகளிலும் மேன்மை கிடைக்கும் இந்த 2016ஐ பொறுமையாக காத்திருந்து ஆகஸ்ட் முதல் மலர்ந்த முகத்தோடு, மகிழ்வான வாழ்க்கைக்கு வித்திடலாம்.
குறிப்பு  மன ரீதியில் டென்சன், பணிப்பளுவின் காரணமாக நிம்மதியின்மை, மன நல பிரச்சனைகள் சூலை வரை அதிகரித்து பின்னர் சரியாகும்.

கும்ப ராசிக்காரர்களுக்கு
ராகு கேது பெயர்ச்சி இந்த மாதம் அதாவது துவக்கத்தில் ஜனவரி மாதத்திலேயே உள்ளது.  கணவன் மனைவியரிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் இருந்திடினும், அதனை அதிகாலை வேளையில் மாதம் நான்கு முறை அமர்ந்து, ஒரு தீர்மானத்தை எடுத்து அதன்படி இருவரும் கட்டுப்பாடுடன் கடைபிடிக்க வேண்டிய வருடம்.  வயிறு வலி என்று சொல்லும் படியாக வந்து மறையும்.  உணவைச் சாப்பிடும் நேரத்தில் தொந்தரவுகள் வந்து, ஜீரண சக்தியை முழுவதும் மாற்றிவிடும்.  சூலை மாதத்திற்குள் சுப காரியங்கள் உண்டு.
குறிபபு  பிள்ளையார் முருகன் துர்க்கா வழிபாடு தேவை.  முதுகு வலி மற்றும் இடது கை வலிகள் இருப்பின் உரிய நிவாரணம் தேடிக் கொள்வது நல்லது.

மீன ராசிக்காரர்க்கு,

வீடு, மனை,வாகனம், வீடடில் அத்தியாவசியப் பொருட்கள்வாங்க கடன் வாங்கலாம்.  ஆகஸ்ட்டில் அத்தனை கடனும் சரியாகும்.  உங்களுக்கு நன்மை செய்ய வேண்டிய பொறுப்புக்களை உள்ளவர்களை ஆகஸ்ட் முதல் மாதம் ஒரு முறையாகச் சந்தித்து உங்கள் முறையீடுகளைத் தக்க முறையில் சமர்ப்பித்தால், ஒருஆறு மாதத்திற்கு ஆறு முறை உயர்வை சந்திக்கலாம்.  மீனராசிக்காரர்களுக்கு ராகு கேதுப் பெயர்ச்சி முறையே 6லும் 12ம் வருவதால், இன்னல்கள் என்பதில் மிகக் குறைவாகவே வரும்.  ஆனால் குரு பகவான் 7மிடத்தில் வரும் போது வந்த போதும் உங்களை இந்த உலகத்திற்கு நல்ல விதமான வழிகாட்டுதல்களுடன் முன்னேற்றமே தந்திடும். இந்த 2016ல் தாங்கள் எண்ணி எண்ணங்கள் நிறைவேறும்.  சுபம்.
  

எல்லாம் வல்ல இறையோனைத் தொழுதலே சாலவும் நன்று.. 

   வருகின்ற தீபாவளியன்று கீழ்க்கண்ட நிகழ்வுகளைச் செவ்வனேச் செய்வதனால் நம் பழம் பெரும் பக்குவமான நாட்டுப் புற நம்பிக்கைகள் மட்டுமல்லாமல் அநேக விஷயங்கள் அடங்கிய பொதுக்குடும்ப பாசப் பிணைப்பினை மேன்மைப் படுத்தும் பக்குவமான பல்சுவை நிகழ்வுகளை ஒருங்கே அனுசரிப்போமா..
09-11-2015 திங்கள் இரவு 10-11-2015 செவ்வாய் அதிகாலை... நரக சதுர்த்தி ஸ்நானம்...
அதிகாலை 4-00மணிக்கு கங்கா ஸ்நானம்
       முன்னதாக முதல்நாள் நீர்நிரப்பிடலாமே... எப்படி?   வீட்டிலுள்ளவற்றில் பெரிதாக உள்ள அண்டா... தூய்மையாக்கி, சந்தனம் குங்குமம் பொட்டு வைத்து, நீர் நிரப்பி ஐந்து மரப்பட்டைகள் (மாவிலங்கை. பலா. அரசு. அத்தி, ஆல்) ஊறவைக்கலாமே... (குறிப்பு அப்படியே அதிகாலை குளிக்கக் கூடாது.  முன்னதாக குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக சூடேற்றி வெந்நீராக்கி விடவேண்டும்...)
    புழுங்கல் அரிசி, வெற்றிலை போட்டு காய்ச்சிய நல்லெண்ணெயைத்தான் தேய்த்து குளித்தல் வேண்டும்.  இப்போது நமது வீட்டு நீரிலும், கங்கை கலந்ததாக ஐதீகம்.  அன்று தினம் அதிகாலை எல்லா நீர் நிலைகளிலும் கங்கைக்குச் சமமான நீராகத் தான் கருதுதல் சான்றோம் வழக்கம்.

தீபாவளித் திருநாளில் ஸ்ரீ மஹாலட்சுமி பூஜை!..

    பூஜை அறையில் விளக்கேற்றி, மஹாலட்சுமி படத்தினை அலங்கரித்து, இனிப்புப் பண்டங்களை வைத்து.அர்ச்சித்து வழிபடுதல் வேண்டும்.  

குல தெய்வ வழிபாடு..

நம்வீட்டு குல தெய்வத்தை - பெண் தெய்வங்களை நினைத்து அவர்களுக்கு பிடித்த உடை மற்றும் நிவேதனங்களுடன் வணங்குதல் வேண்டும்.  
லட்சுமி குபேர பூஜை..
       ஸ்ரீ கணபதி, லட்சுமி, துர்க்கை. சரஸ்வதி ஆகிய தெய்வங்களுக்கு குங்குமத்தால்அர்ச்சித்து, ஓம் குபேராய.. ஓம் மஹாலட்சுமியே.. நம என அர்ச்சித்து வழிபடுதல் வேண்டும்.  
       இது புதிதாய் கொண்டாடும் மணமக்களின் தலைத் தீபாவளிக்கு மிக உன்னதமான வழிபாடாகும்.  சில வீடுகளில் லட்சுமி குபேர பூஜை மறுநாளில் செய்வதும் உண்டு.  
      தீபாவளித் திருநாளைக் கொண்டாடுவோம்.. இன்னல்கள் களைந்து இனியவை கூட்டுகின்ற நந்நாளகவும்... தொடரும் மகிழ்வுகளைப் பகிரவும் வாவென்றழைப்போம்..
வருகின்ற தீபாவளித் திருநாளை...
இனிய வணக்கங்களுடன்..
நா. ரெங்கன்
அ. உஷா ரெங்கன் 

ஜோதிடத் தம்பதி.
தீபாவளித் திருநாளில்!. ON DIWALI FESTIVAL 2015!..

அன்புடையீர்,
வணக்கம்.

இன்று முதல் (06-05-2015) சுமார் ஒரு வார காலத்திற்கு ஜோதிடத் தம்பதி சென்னை விஜயம்.
முகாம் விவரம்    

06-06-2015 சனி முதல் 07-06-2015  கே.கே. நகர் மேற்கு
08-06-2015  திங்கள்  வில்லிவாக்கம்
09-06-2015 மற்றும் 10-06-2015 கே.கே. நகர் மேற்கு
11-06-2015 மற்றும் 12-06-2015 பெரம்பூர்
13-06-2015 தாம்பரம் மற்றும் பள்ளிக்கரணை
நன்றி

தகவல் அன்புடன் சமர்ப்பிக்கின்றோம். 
லோ.ரெ.விமலா
உதவியாளர்.

சென்னை வருகை
ஜோதிடத்தம்பதி  சென்னை வருகை..
22-05-2015 முதல் 25-05-2015 வரை 


ஆசிரியத் தம்பதி மாணவச் செல்வங்களுக்குக் கென்றே

“ எக்கல்வி - எத்துறை சார்ந்த கல்வி - தொழிற்கல்வி எனும்
   மருத்துவமா - பொறியியலா - வங்கி சார் வணிகக் கல்வியா
  இலக்கியமா - ஆசிரியப் பணக்கென பாடப்பகுதிகளா
 அவ்வாறாயின் எப்பாடம் எதிர் காலத்தில் வளம்சேர்க்கும்”

என்பன போன்ற எதிர்கால வினாக்களுக்கென்றே
“ ஜோதிட வழியில் - பிறந்த நாள், நேரம், இடம் ஆகியவற்றின்
மூலம் துல்லியமாகக் கணிக்கும் ஜாதக அடிப்படையில்
“ என் எதிர்காலம் - எக்கல்வி ” என இறையருளால் விளக்கம்
பெற்றிட வருகை தருக...

தொடர்புக்கு9443423897
சுவாதி ஜோதிடாலயம்
பாளையங்கோடடை...

இல்வாழ்க்கையை இல்லற சோலையாக்கும் இரகசியங்கள்
(ஜோதிட கலைமாமணி-ஜோதிட தம்பதி வீரவநல்லூர் உஷா ரெங்கன்) 

அனைவருக்கும் வணக்கம்..!..
இன்றைய நாளில், பல்வேறு அமைப்புகளில் அடிமைத் தொழில் என்னும் அரசுப் பணி, கம்பெனி நிர்வாக பணிகள், கணிணி துறை சார்ந்த பணிகள் எனப் பலப்பல பணிகளில் இருப்பவர்களுக்கும் சரி, சொந்தமாக வியாபாரம் மற்றும் முதலீகளின் மூலம் பலருக்கும் வாழ்க்கை தருகின்ற நிறுவனர், நிர்வாகி, மேற்பார்வையாளர் என்ற பல்வேறு நிலையில், பணிகள் மூலம் கடமையாற்றும் தருணத்தில், தக்க துணை இன்றி யாரும் எளிதில் முன்னேற்றம் காணுதல் என்பது கிடையாது.  அதே துணை பொருத்தமாக அமைந்து விட்டால் அவர்தம் இருவரின் இல்லற வாழ்க்கை பூஞ்சோலை தான் என்பதில் ஐயமில்லை..!.. தற்போது சிறிது காலமாக அனுபவ ரீதியில் ஆராயும் போது, நல்ல பொருத்த அமைப்பில் துணை சேர்ந்த தம்பதிகள் தம் வாழ்நாளில் குறுகிய காலத்தில், முன்னே்றறம் கண்டு வளமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள்...அந்த அடிப்படையில்... வாழ்க்கைத் துணை என்னும் வரனுக்கு ஏற்ற வதூ, வதூவுக்கு ஏற்ற வரன் (அதாவது மணமகனுக்கு ஏற்ற மணமகள், மணமகளுக்கு ஏற்ற மணமகன்) என்ற இணக்கமாக துணையை ஏற்படுத்தித் தருவதில் பெரியோர்களும், சான்றோர்களும் தத்தம் பங்குபணி பொறுப்பு அறிந்து தெய்வீகமாகச் செயல்படுத்திட தயார்படுத்திக் கொள்வோமாக..


2006 ல் ஜோதிடத் தம்பதி திரு நாராயண அய்யர் ரெங்கன், திருமதி உஷா ரெங்கன் ஆகியோருக்கு 25 ஆண்டுகால சிறப்பான ஜோதிடச் சேவைக்கு வழங்கப்பட்ட விருது.. முன்னாள் நீதிபதி அவர்கள், கலையுலக பின்னணிபாடகி அவர்கள், இயக்குநர் அவர்கள், நடிகை அவர்கள், மற்றும் தொழிலதிபர் இணைந்து வழங்கிய பாராட்டு கேடயம்..

 நாமறிந்த கலைகள் பலவற்றுள் ஜோதிடக்கலை ஒன்று தான் நம் எதிர்காலத்தை இனிதே உணர்த்தும் அற்புதப் பாங்கை நமக்களிக்கின்றன. இவ்வரிய கலைதனை தாமும் உணர்ந்து மற்றோர்க்கும் எடுத்துரைக்கும் பாங்கை இறையருளால் பெற்ற ஜோதிட விஞ்ஞானிகள், இவ்வரிய கலையை பிரகாசிக்க துணை நிற்கும், வேத ஆகம விற்பன்னர்கள், புரோஹித, பாகவத, தெய்வ கைங்கர்ய ஆச்சார்யர்கள் ஆகியோர் ஒத்துழைப்போடு நாளும் பொழுதும் கலைவளர்க்க தொண்டு புரிந்திட வேண்டுமே.  அந்த வரிசையில், ஜோதிட தம்பதியாய், பரம்பரையாகவும், பல்கலைக்கழக பட்டய, பட்ட ஜோதிடவியல் பயின்று, பல்வேறு வார, மாத, செய்தி இதழ்களில், ஜோதிடக்கட்டுரை எழுதி வருவதுடன், இணைய தளம் (www.tamil-astrology.com) மூலமும் 25 ஆண்டுகளாக ஜோதிட சேவையாற்றும் திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் ஜோதிட கலைமாமணி ஜோதிட தம்பதி திரு நா. ரெங்கன் எம்.ஏ.,டி.டி.எட்., டி.அஸ்ட்ரோ., தமிழாசிரியர், திருமதி அ. உஷா ரெங்கன் பி.ஏ., (அஸ்ட்ரோ)., டி.அஸ்ட்ரோ தொகுத்துள்ள திருமண பொருத்த நிர்ணயக் குறிப்பைக் காண்போமா..

விவாஹ பொருத்த விவரங்கள்
  1. தினப் பொருத்தம்  வதூ நட்சத்திரத்திலிருத்து, வரன் நட்சத்திரம் வரை எண்ணி, 9 ஆல் வகுக்க மீதி 3,5,7 நல்லதல்ல.  மற்றவை சுபம் எனக் கொள்க.  வதூ வரன் (நௌரொ நௌரி) நட்சத்திரம் ஏக நட்சத்திரமாக வரும் எனில், ரோகிணி, திருவாதிரை, மகம், ஹஸ்தம், விசாகம்,  திருவோணம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் உத்தமம்.  அசுபதி, காரத்திகை, மிருகசீர்ஷம், புனர்பூசம், பூசம், உத்திரம், சித்திரை, அனுஷம், பூராடம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்கள் மத்திமம்.  மற்றவை கூடாது.  (குறிப்பாக ஏக நட்சத்திரம் எனும் போது, கோள்சார கெடுபலன்களான ஏழரைச் சனி, அஷ்டமச்சனி,  ஏகதிசை காலம், திசா சந்தி ஆகியவை ஒன்றாக வரும் வாய்ப்பு உள்ளதால் மிக கவனம் கொள்ள வேண்டும்)
  2. கணப்பொருத்தம் நட்சத்திரங்களில் தேவகணம். மனுஷ கணம், ராட்சஸ கணம் என மூன்று பிரிவுகள் உள்ளன.  தேவ கணம் உயர்ந்த குணம், மனுஷ கணம் வளைந்து செல்லும் சராசரி குணம், ராட்சஸ குணம் கோப குணங்களுடன் வளையாத குணமும் கொண்டவர்களாக இருப்பர்.  வதூ, வரர் ஏக கணத்தில் அமைவது விசேஷம்.  தேவ, மனுஷ கணம் கொண்ட வதூ எந்த கணம் கொண்ட வரனுடனும் ஒத்துப் போவார்.  ராட்சஸ கணத்தில் பிறந்த வதூ  மனுஷ கணத்தில் பிறந்த வரனுடன் ஒத்துப் போக வழியில்லை. (குறிப்பு எந்தெந்த நட்சத்திரங்கள் எந்தெந்த கணம் என பஞ்சாங்கத்தில் காணலாம்)
  3. மாஹேந்திர பொருத்தம் வதூ நட்சத்திரத்திலிருந்து வண்ணி வரும் வரன் நட்சத்திரம் 4, 7, 10, 13, 16, 19, 22, 25 ஆக வந்தால் உத்தமம்.  மற்றவை உத்தமமல்ல.  இது குழந்தைப்பேறு தடையின்றி கிடைக்கவும் சுகப்பிரசவத்திற்கும் துணை நிற்கிறது.
  4. ஸ்திரி தீர்க்கப் பொருத்தம் வதூ நட்தசதிரத்திலிருந்து, எண்ணும் போது வரன் நட்சத்திரம் 13க்கு மேல் வந்தால் உத்தமம்.  ரக்கு மேல் மத்திமம். 7க்குள் வந்தால் அதமம்.
  5. யோனிப் பொருத்தம் இல்வாழ்க்கையில், இல்லற தாம்பத்திய ஒற்றுமைக்குரிய பொருத்தம்.  வரன் நட்சத்திரம் ஆண் மிருகமாகவும்,  வதூ நட்சத்திரம் பெண் மிருகமாகவும் வருவது விசேஷம்.  மாறி இருந்தால் மத்திமம்.  மிருகங்கள் ஒன்றுக்கொன்று பகையாக இருக்கக் கூடாது.  சிங்கம், புலிக்கு -  குதிரை, யானை, ஆடு, எருது, பசு, மான் ஆகியன பகையாகும், குதிரைக்கு எருமையும், குரங்குக்கு ஆடும், மானுக்கு நாயும், பாம்பு, பூனைக்கு எலியும்,  நாய்க்கு பூனையும் பகையாகும்.  (குறிப்பு எந்தெந்த நட்சத்தரம் எந்தெந்த மிருகம் என்பதை பஞ்சாங்கத்தில் காண்க)
  6. ராசிப் பொருத்தம் வதூ ராசியிலிருந்து வரன் ராசி எண்ணும் போது, 6க்கு மேல் இருந்தால் உத்தமம்.  8 வது ராசி கூடாது.  (சஷ்ட அஷ்டகம் என்னும் 6வது 8வது ராசிகள் இல்லாமல் இருப்பது விசேஷம்)
  7. ராசி அதிபதி பொருத்தம் வதூ ராசிக்குரிய அதிபதியும், வரன் ராசிக்குரிய அதிபதியும் நட்பாகவோ, அல்லது சமமாகவோ இருத்தல் நன்று.  பகையாக இருத்தல் கூடாது.  ஒவ்வொரு கிரகத்திற்குமுரிய நட்பு, சம, பகைக்கிரகங்களின் விவரம்
கிரகம்
நட்பு
சமம்
பகை
சூரியன்
சந்திரன், செவ்வாய், குரு
புதன்
சுக்கிரன், பகை
சந்திரன்
சுக்கிரன், புதன்
செவ், குரு, சுக், சனி
சத்ரு இல்லை
செவ்வாய்
சூரியன், சந்திரன், குரு
சுக்கிரன், சனி
புதன்
புதன்
சூரியன், சுக்கிரன், சனி
செவ்வாய், குரு
சந்திரன்
வியாழன்
சூரியன், சந்திரன், செவ்வாய்
சனி
புதன், சுக்கிரன்
சுக்கிரன்
புதன், சனி
செவ்வாய், குரு
சூரியன், சந்திரன்
சனி
புதன், சுக்கிரன்
வியாழன்
சூரியன், சந்திரன்,செவ்

குறிப்பு மேஷ, விருச்சிக ராசிகளுக்கு அதிபதி செவ்வாய்,
        ரிஷப, துலா ராசிகளுக்கு அதிபதி சுக்கிரன்,
        மிதுனம், கன்னி ராசிகளுக்கு அதிபதி புதன்,
        கடக ராசிக்கு அதிபதி சந்திரன்
        சிம்ம ராசிக்கு அதிபதி சூரியன்
        தனுசு மீனம் ராசிக்கு அதிபதி குரு
        மகரம் கும்ப ராசிக்கு அதிபதி சனி என்று அறிக.
8 வசிய பொருத்தம் வதூ ராசியும், வரன் ராசியும் ஒன்றுக்கொன்று வசியமுடையதாக இருத்தல் வேண்டும்.
மேஷம்       பெண் ராசி எனில்      ஆண் ராசி சிம்மம், விருச்சிகம்
ரிஷபம்       பெண் ராசி எனில்      ஆண் ராசி  கடகம், துலாம்
மிதுனம்      பெண் ராசி எனில்      ஆண் ராசி கன்னி
கடகம்        பெண் ராசி எனில்      ஆண் ராசி  விருச்சிகம், தனுசு
சிம்மம்       பெண் ராசி எனில்      ஆண் ராசி       துலாம்
கன்னி        பெண் ராசி எனில்      மிதுனம், மீனம்
துலாம்       பெண் ராசி எனில்      கன்னி, மகரம்
விருச்சிகம்    பெண் ராசி எனில்      கடகம்
தனுசு        பெண் ராசி எனில்      மீனம்
மகரம்        பெண் ராசி எனில்      மேஷம், கும்பம்
கும்பம்       பெண் ராசி எனில்      மேஷம்
மீனம்        பெண் ராசி எனில்      மகரம் வசியம் என்று அறியவும்.
  1. ரஜ்ஜூ  பொருத்தம்  ரஜ்ஜூ என்னும் மாங்கல் பொருத்தம் வதூ, வரர்க்கு ஓரே ரஜ்ஜூவாக வரக்கூடாது.  மாறி வந்தால் நல்லது. 
மிருகசீர்ஷம், சித்திரை,  அவிட்டம்  -  சிரசு ரஜ்ஜூ
ரோகிணி, ஹஸ்தம், திருவோணம் மற்றும்
திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய வை கண்ட ரஜ்ஜூ
கார்த்திகை, உத்திரம்,  உத்திராடம் மற்றும்
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகியவை வயிறு ரஜ்ஜூ
பரணி, பூரம், பூராடம் மற்றும்
பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகியவை துடை ரஜ்ஜூ
அசுபதி, மகம், மூலம் மற்றும்
ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகியவை பாத ரஜ்ஜூ
குறிப்பு  விவாஹ பொருத்தத்தில் மிக முக்கியமான இந்த ரஜ்ஜூப் பொருத்தம் சரியான முறையில் அனுசரிக்கப்பட வேண்டும்.  இதில் தவறும் பட்சத்தில், வதூ-வரர் நட்சத்திரங்கள் சிரசு ரஜ்ஜூவில் இருந்து இணைந்தால் கணவர் மரணத்திற்குச் சமமான பிரச்சனைகளும், கண்ட ரஜ்ஜூவில் வந்தால் மனைவி மரணத்திற்குச் சமமான பிரச்சனைகளும், வயிறு ரஜ்ஜூவில் வந்தால் புத்திர தோஷத்திற்கு சமமான பிரச்சனைகளும், துடை ரஜ்ஜூவில் வந்தால் ஒற்றுமைக் குறைவுகளும், பாத ரஜ்ஜூவில் வந்ததால், நோய் நொடிகளும் ஏற்பட்டு பல்வேறு இன்னல்களை எதிர்கொள்ள வேண்டிவரும் என்பது ஜோதிட நூல்களின் அற்புத கருத்தாகும்.
  1. வேதைப் பொருத்தம் வதூ நட்சத்திரமும், வரன் நட்சத்திரமும் ஒன்றுக்கொன்று வேதையாக இருத்தல் கூடாது. வேதையாக இல்லாவிட்டால் பொருத்தம் உத்தமம்.
அசுபதி கேட்டை,  பரணி அனுஷம்,  கார்த்திகை விசாகம்,
ரோகிணி  - சுவாதி,  திருவாதிரை திருவோணம் புனர்பூசம் உத்திராடம்
பூசம் பூராடம்,       ஆயில்யம் மூலம்,  மகம் ரேவதி
பூரம் உத்திரட்டாதி  உத்திரம் பூரட்டாதி,  ஹஸ்தம் சதயம் ஆகிய நட்சத்திரங்கள் ஒன்றுக் கொன்று வேதை என அறியவும்.

மேற்காண் தசவித பொருத்தங்களுடன், பாபசாமீயம் என்னும், அசுபக்கிரகங்களான, சூரியன், சனி, செவ்வாய், ராகு, கேது ஆகியவை 2,4,7,8,12 ஆகிய ஸ்தானங்களின் நின்றவாறு, அரைக்கால், கால், அரை, முக்கால், முழு பாபம் என்ற அளவில் சூட்சம கணக்கின் பிரகாரம் கணக்கெடுத்து பார்ப்பதுடன், செவ்வாய் கிரகமானது, லக்னத்திலிருந்து, சந்திரனிலிருந்து, சுக்கிரனிலிருந்து 2,4,7,8,12 ஆகிய ஸ்தானங்களில் இருந்ததால் ஏற்படும் செவ்வாய் தோஷ பாபசாமீயமும் இணைத்துப் பார்த்து, திசா சந்தி, ஏக திசை காலம் இல்லாமல் பொருத்தும் பொருத்தங்களின் அடிப்படையில் அமையும் திருமணங்கள் வாழையடி வாழையாய் வாழ்வாங்கு இப்புவியில் தம்பதியாய்  வாழ்ந்து, அதன் வெளிப்பாடாக நற்புத்திரப்பேறு பெற்று, வரலாற்றுச் சாதனை செம்மல்களாக வாழ்ந்தும், எந்நாளும் புகழ் பெற்று நித்திய ஜீவன் பெறுவார்கள் என்பது திண்ணம். சுபம்.

important note : (KANIKKAI FEES ACCEPTED)
If you want to know the marriage matching to bride and bride groom – please contact with fees – we will send the horoscope  matching remarks and charts through your mail id on that day without delay. thank you.  (contact: +919443423897 ALSO WATTSAPP or email: tamiljoshier@gmail.com  or joshier_urrao@yahoo.com  or usharengan@hotmail.com

விவரமான திருமணபொருத்தம் அறிய வேண்டுமா?.. உடனடியாகத் தொடர்பு கொள்ளுங்கள்... ஒரு முறை தொடர்பு கொண்டுவிட்டால் வாடிக்கையாளராகி பின்னர் வாடிக்கையாளர் எண்ணைக் குறிப்பிட்டு தொடர்ந்து தொடர்பு கொண்டு பலன் அறியலாம் தானே..   (காணிக்கையுடன்  வரவேற்க்கப்படுகிறது)

  தங்களுக்கு சிரமம் ஏதுமின்றி, ஒரே நாளில் தாங்கள் தொடர்பு கொண்டு மணமகன் மற்றும் மணமகள் ஆகியோரது பிறந்த நாள், நேரம், இடம் ஆகியவற்றை மட்டுமே மொபைல் போனில் சொல்லி விட்டு தங்கள் இமெயில் முகவரி கொடுத்து வி்ட்டால் தங்களுக்கு பதிலாக வந்தடையும் விதத்தில் துரிதமாகச் செயல்பட்டு வருகிறோம் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.  வாழ்க பல்லாண்டு... வளர்க வளங்கள் நிறைந்து..
ஜோதிட தம்பதி.

தளத்தை செய்தியோடை மூலம் வாசிப்பவர்கள்

வாசகர்கள்

எங்களின் முதன்மை வலைத்தளம். Our Main Web Site

மறுமொழிகள்

விருந்தினர் வருகை

சமீபத்தில் வந்தவர்கள்

இதை படித்தவர்கள் படித்தது

அதிகம் படிக்கப்பட்டவை