நெல்லை சீமைக்குப் பெருமை சேர்க்கும் முதன்மைத் திருவிழா – ஆனித் தேர் திருவிழா
நாராயணஐயர் ரெங்கன் எம்.ஏ.,பி.எட்., தமிழாசிரியர் (பணிநிறைவு)
நிகழும் விஸ்வாவஸு வருடம் ஆனி மாதம் 16-ம் நாள் 30-06-2025 திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆனித் தேர் திருவிழா திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர் - காந்திமதி திருத்தலத்தில் ஆரம்பமாகி, மேற்படி மாதம் 24 ம் நாள் 08-07-2025 அன்று ஸ்ரீ நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் திருக்கோவில் திருத்தேர் நான்கு மாட வீதிகளிலும் வீதி வலம் வந்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாக அருள் பாலிப்பார்.
ஆனிப் பெருந்திருவிழா 10 நாட்கள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவில் தேரோட்டம் மிகச் சிறப்பான ஒன்றாக உள்ளது.
ஆடிப்பூர உற்சவம், நவராத்திரி திருவிழா, ஐப்பசித் திருக்கல்யாண விழா போன்றவை இக்கோயிலில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் திருவிழாக்களாகும்.
’தாருகாவனத்து வாழுந் தாபர் முன்னோர் காலஞ் சேருமெய்த்
தருமந்தானே தெய்வமென்றிருந்தேன் கோனைக் கோரமாய்
நிந்தை செய்த கொடியதோர் பாவந் தீர வாரமாய் தொழுது
போற்றி மகிழ திருமூல லிங்கம்”