தமிழ் ஜோதிடம் ஜாதகம்

ஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், வாஸ்துசாஸ்திரம் மூலம் வருங்காலம் அறிய "ஸ்வாதி ஜோதிட ஆய்வகம்" உங்களை அன்புடன் வரவேற்கிறது.

எழுதியவை அனைத்தும்

அன்புடையீர், வணக்கம்.

அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல் வணக்கங்கள், வாழ்த்துக்கள்.. தமிழ்ப் புத்தாண்டு  விஜய வருட ராசி பலன்கள் அறிவோமா..  The Fortune Prediction for 12 Rasi for Tamil New Year VIJAYA year.

வருகின்ற தமிழ் புத்தாண்டாம் விஜய வருடப் பலன்கள் மேஷம் முதல் மீனம் வரை 12 இராசிக்காரர்களுக்கும் பதில் அளிக்கும் படியாக பல்வேறு பன்னாட்டு வாடிக்கையாளர்கள் கேட்டுக் கொண்டேயிருக்கின்றனர்.  அவர்களின் அன்பான வேண்டுதல்களுக்கிணங்கி, விரைவில் 12 ராசிகளுக்கும், விஜய வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் தரவுள்ளோம் என்ற மகிழ்வான செய்தியைப் பணிவுடன் சமர்ப்பிக்கின்றோம். நன்றி
ஜோதிடத் தம்பதி
நா. ரெங்கன்
உஷா ரெங்கன்.


9443423897

9442586300

அன்புடையீர்,
வணக்கம்.
இம்மாதம் ஜோதிடத்தம்பதி வருகின்ற 15-03-2013 முதல் 21-03-2013 வரையுள்ள நாட்களில் சென்னை வருகை. 
சென்னையில் இருக்கும் நாட்களில் 9443423897 என்ற எண்ணிலும், 9442586300 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு ஆலோசனை பெற வர பணிவுடன் வேண்டுகிறோம். நன்றி.
குறிப்பு.  சென்ற முறை வருகையின்போது, சந்திக்க வேண்டிய வாடிக்கையாளர்கள் வரிசையில் தொடர்ந்து, வரிசையாக தங்கள் பெயர் இடம் பெற இப்போதே, சந்திப்பை உறுதி செய்து கொண்டு நேரில் காண வருமாறு அன்புடன் வேண்டுகிறோம். நன்றி.
ஜோதிட தம்பதி

அன்புடையீர்,
வணக்கம்.
இது கலிகாலம்.. இப்படித் தான் பொய்யும் புரட்டும் நிரம்ப இருக்கும்.. என்று ஒருவர்க்கொருவர் அநீதிகளை நியாப்படுத்தும் காலமாக மாறிவருகின்ற இந்த காலத்தே, நாமும், நம்மைச் சார்ந்த குடும்பம் மற்றும் குழந்தைகளும் 
எப்படி இருப்பது நல்லது என்று நம்மைச் சார்ந்த விவரங்களை நாம் நன்றாக
மெருகேற்றி சிந்தனையில், பதியவைத்துக் கொள்வது தான் சிறந்ததாகக்
கருத முடிகிறது.
அந்த வகையில் வளமான வாழ்க்கைக்கு வளமூட்டும் விந்தைகளாக இனி
ஒவ்வொரு வாரமும், முடிந்த அளவு வார இறுதி நாட்களில் அனுபவங்களை
யும், அந்தக் காலம், இந்தக்காலம் எதிர்காலம் என்று எந்தக் காலத்திற்கும்
பொருந்துவதான விவரங்களை நாம் அலசி ஆராய்ந்து, குடும்பம், கணவன்,
மனைவி, குழந்தைகள் - நமக்குக் கிடைத்துள்ள புதிய உறவுகள் மருமகன்,
மருமகள், பேரன் பேத்தி மற்றும் மிக நெருக்கமான உறவுகளின் மனம்
சார்ந்த கருத்துக்களை நாம் பதிவு செய்து,
எதிர்காலத்தை வளமாக்க வழிவகுப்போமாக..

அன்பு தரும் அருமைச் சிந்தனைகள்
1.
திருமணமென்றாகி விட்டது. குழந்தைகள் கிடைத்து விட்டது.  இனி நமது சிந்தனை என்  கணவர்  அல்லது என் மனைவி - குழந்தைகள் அவர்தம் 
எதிர்காலம் சிறக்க நாம் எப்படியெல்லாம் நாம் மனதை வளப்படுத்தலாம்
எப்படியெல்லாம் மனதை விஷ அலைகளிலிருந்து தப்பாமல், காக்கலாம என்ற சிந்தனைகள் வளர்த்துக் கொள்வது தான் மிகச் சிறந்த வழி யென்று
ஆன்றோர்களின் அனுபவங்கள் நமக்கு உணர்த்துகின்றன.
அந்த வகையில் தொடரும் சிந்தனைகளாக...

இந்த வகையில் தான் நமது சிந்தனைகள் சிறகடித்துப் பறந்து, நமக்கென என்னென்ன, வாழ்க்கை விதிமுறைகள் உள்ளன.. அவைகளை எப்படி அறிந்து கொள்வது என தீர்க்கமான தம்பதியர் சிந்திக்கத் தொடங்க வேண்டும்.

வாழ்க்கையில் நமக்கு மிகமுக்கியமான அர்த்தங்கள் பல நேரம் புரிவதில்லை. உடன் பணியாற்றும், பழகுகின்ற நண்பர்கள், சொந்த பந்தங்கள் பலர் வீடு வாங்குகின்றனர்.. பலர் நிலம் வாங்குகின்றனர்... ஒரு சிலர் தங்க நகைகளாக வாங்கி குவிக்கின்றனர்.. நமக்கு பணமா இல்லை... வருகிறது.. ஆனால் நாம் ஏன் அந்த வழியில் முதலீடு செய்ய இயலாமல் உள்ளோம்.. என்ற சிந்தனை அடிக்கடி வந்து அந்த சிந்தனைகளே கவலைகளாக மாறி மனதை இன்னலுக்காக்கி, வாழ்க்கையில் புரியாத பல சோகங்களை விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை பலரது வாழ்க்கையில் நடக்கத் தான் செய்கின்றன.  நல்ல திடகாத்திரமான திரேகம், தெளிவான சிந்தனை, பிறரைப் போற்றும் பண்பு என எல்லாவற்றிலும் முழுமைபெருகின்ற ஒருவர் தான் திருப்தி அடையத்தக்கவாறு, மனைகள், வீடுகள், நிலபுலன்கள், வாகனங்கள் மற்றும இத்தியாதி இத்தியாதிகள் வாங்கிக் குவிக்க இயலவில்லேயே.. அனைவரும் கடன் வாங்கியாவது வாங்கிக் குவிக்கின்றனரே.. என பலநேரம் மனம் அசை போடுவது உண்டு தானே..
இது போன்ற விவரங்களுக்கு, நாம் முதலில் நமது பிறந்த நேரம் பிறந்த நாள் பிறந்த இடம் ஆகியவை துல்லியமாக அறிந்து கொண்டு, உரிய ஜாதகம் பெற வேண்டும்.
அந்த ஜாதக அடிப்படையில், பன்னிரண்டு பாவங்களால், அறிய வேண்டுவனவாகிய, உரிய,  கோள், பாவம், காரகக்கோள், ஆகியவை ஆட்சி, உச்சம், கேந்திரம், திரிகோணம்,  பெற்று இருந்தும். நற்கோள் சேர்க்கை பெற்றும், பார்த்தாலும் நற்பலன்கள் உண்டாகும்.   இப்பாவத்து அதிபதியும், காரகக்கோளும், இணைந்து மேற்படி, இலக்கினத்தில் இருந்தாலும், இணைந்து அப்பாவத்திலேயே இருந்தாலும் நற்பலன்கள் உண்டு. ஆனால், நற்பலனுக்கு நேர் மாறாக, விதி வசப்படி, கெடுபலன்களையே அனுபவிக்க வேண்டும் என்றிருந்தால், அந்த உரிய பாவத்திற்குரிய கோள், மற்றும் பாவம், காரகக்கோள் ஆகியவை, பகை, நீசம், மூடம் பெற்றாலம், 6-8-12 களில் நின்றாலும், தீய கோள்கள் சேர்ந்தாலும், பார்த்தாலும், தீய பலன்கள் என்றறிக.
தொடரும்.....

மகாலட்சுமி அருள் வேண்டுமா

ஸ்ரீ மஹாலட்சுமி அருள் மூலம் குபேரன் ஆவது உறுதி!..
மஹாலட்சுமி தம் இல்லத்திற்கு வருகை தந்து, நிலைத்த செல்வம் தர வேண்டுமா..
முதலில் மஹாலட்சுமி எந்தெந்த இடங்களில் எந்தெந்த அம்சங்களில் குடிகொண்டிருக்கிறாள் என்பதை அறிய வேண்டுமல்லவா!..
இதோ பட்டியலிடுகிறோம்..
அவரவர் வலது உள்ளங்கை
கண்ணாடி
தீபம்
பசு
யானை
விளக்கு
மாவிலை
தோரணம்
வெற்றிலை
சந்தனம்
கோலங்கள்
திருமண் மற்றும் சூர்ணம்
குங்குமம்
மஞ்கள்
பூரண கும்பம்
வில்வ மரம்
நெல்லி மரம்
மஞ்சள் செடி
துளசி ஆகிய பல்வேறு சுப மங்கலப் பொருள்களில் எல்லாம் திருமகள் என்னும் மஹாலட்சுமியாரின் வாசம் நிறைந்து இருக்கின்றது
வில்வத்தாலும், சாமந்தி, தாழம்பூ ஆகியவற்றால் அர்ச்சித்து வழிபடுவது மகிமையாகும்.
வில்வ மரத்தினை சுற்றி வந்து வழிபட்டால் இறையருள் மஹாலட்சுமியை வழிபட்டதாகவே பொருள்.  ஏன் வில்வ விருட்சம் என்னும் ஸ்தல மரம் மஹாலட்சுமியின் திருக்கரங்களாலேயே உருவானதாக, வாமன புராணம் கூறுகிறது.
நெல்லி மரமும் திருமாலின் பேரருளும் பெற்றுள்ளதை நாம் அறிந்திருப்போம்.  நெல்லிக்கனி இருக்கும் வீட்டில் மஹாலட்சுமி நிரந்தரமாக வாசம் செய்வதாக நம்பப்படுகிறது. துளசி செடியிலும், மஞ்சள்  செடியிலும் மஹாலட்சுமி வாசம் செய்வதால் அனைவரும் இல்லங்களில் இச்செடிகள் வளர்ப்பது மிகவும் நல்லது.
இன்று 27-07-2012  வரலட்சுமி விரதம். 
எப்படி விரதமிருந்து ஸ்ரீ மஹாலட்சுமியின் அருளைப் பெறுவது
காலையில் (அதிகாலையில்) எழுந்து நீராடி சூரியன் உதயத்திற்கும் முன்பாக வீட்டு வாசலை பசுஞ்சாணத்தால் துப்புரவு செய்து, அரிசிமாக் கோலம் இடவேண்டும்.  பூஜை அறையில் தீபம் ஏற்றி ஸ்ரீ மஹாலட்சுமி தாயாருக்கு அதிக விருப்பமான, இனிப்பு வகைகள் (திரட்டுப்பால், லட்டு, பாயாசம், எள்ளுருண்டை, கொழுக்கட்டை, மைசூர்பாகு மற்றும் இட்லி போனற உணவுவகைகளை நைவேத்தியம் செய்து இல்லாத ஏழைமக்களுடன் இணைந்து உணவருந்த வேண்டும். பின் காலையிலும், மாலையிலும், வரலட்சுமியை பூஜித்து தூப தீபம் காட்டி, வணங்கிய பின்பு ஆராத்தி எடுக்க வேண்டும்.  குறிப்பாக மாலையில் சுமங்கலிகளுக்கு, வெற்றிலைப் பாக்கு, தாம்பூலம், உடை மற்றும் மஞ்கள் கயிறு மற்றும் நிவேதனம் செய்த பலகாரங்கள் கொடுத்து அனுப்புதல் வேண்டும்.
வீட்டில் ஒற்றுமை மேலோங்க …
மாங்கல்ய பாக்கியம் நிலைக்க…
எண்ணிய எண்ணங்கள் நிறைவேற..
செல்வ வளம் பெருக..
திருமணத்திற்காக இருக்கின்ற பெண்களுக்கு திருமணம் அமைய
சகல ஐசுவரியங்களுக்கும்
மகளிருக்கு வரலட்சுமி விரதம் பக்க பலமாக இருக்கின்றது.
நாமும் தொழுவோம்.. நாளும் பயனடைவோம்.
ஜோதிட தம்பதி
உஷா ரெங்கன். 


வாழ்க்கையை வளமாக்கும் அற்புத யோசனைகள்..!..
இந்த துணிச்சல் யாருக்கு வரும் என்று எல்லோரும் பேசிக்கொள்ளும் அளவிற்கு ஒரு சில நிகழ்வுகள் துணிச்சலாக முடிவு எடுக்க்க் கூடிய சில விஷயங்களை நாம் கவனத்தில் கொண்டால், அன்றாட வாழ்வில் வளங்களை அள்ளிச் சேர்க்கலாம்.  இந்த மனித ஜென்மத்தில் இறைவனின் அற்புதப் படைப்பில், எந்த வித குறைபாடுகளும் இல்லாமல் (நல்ல கண்பார்வை, திரேக வலிமை, பிணியற்ற சரீரம்) அனைத்தும் சிறப்பாக அமைந்து விட்ட பலர், அந்தந்த உறுப்புகளில் குறைபாடுகள் வந்த பின்னர் தான் அந்தந்த பாதுகாப்பு முறைகளைக் கையாளர்கின்றனர்.   உதாராணமாக தொலைக்காட்சிப் பெட்டி தொடர்ந்து பார்ப்பதும், காபி, டீ போன்ற போதை வஸ்துக்களை அதிகமாக்கிக் கொண்டும், உடலுழைப்பு மற்றும் தேகப் பயிற்சி இல்லாமல் உடம்பில், கெட்ட கொழுப்பின அளவு மற்றும் உப்பு உபயோகம் கூடியதன் காரணமாக அனைத்து உறுப்புகளின் பலகீனமும் வரப்பெறும் போது ஆண்டவனின் அற்புதங்களை நினைக்கத் துவங்குகிறோம்.  இவற்றோடு பாதுகாப்பு முறைகள் கையாளாமையும் இன்னல்களின் முகவரிக்கு நம்மை அழைத்துச் செல்கின்றன.
49 வயதில் நல்ல வசதியுடன் வாழ்க்கை வாழ்கின்ற ஒருவர், நமக்கு இறைவன் அளித்துள்ள பட்டம், பதவி, திருமண பந்தந்தின் மூலம் கிடைத்துள்ள மனைவி, மக்கள், உறவுகள் அனைத்தையும் மகிழ்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லும் மகிழ்வான குடும்பத்தலைவன் தன் பொறுப்புக்களின் காரணமாக, தன் உடலின் இயக்கங்களில் உள்ள அசௌகரியக் குறைபாடுகளை கவனிக்கத் தவறுகிறான்.  தன் நல்ல அறிமுகத்தினால், அழைத்தால் உடன் பதிலளிக்கும் வகையில் மருத்துவ நண்பர்கள், வீட்டருகில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனை என்றெல்லாம் அமையப் பெற்றவர், நாளை,, அடுத்த வாரம்.. அடுத்த மாதம் நம் உடலை பரிசோதிக்க வேண்டும் என்று தள்ளிப் போட.. ஒரு நாள் திடீரென்று, மருத்துவ நண்பரை அழைத்து, நெஞ்சு கரிக்கிறது.. என்ன செய்வது என்று யோசனை கேட்க இது, இதய அடைப்பின் அறிகுறியாகுமே என்று உடன் கவனித்துக் கொள்ளச் செல்ல வீட்டருகின் மருத்துவ மனை வாயிலுக்குச் சென்றதும், முடியாமல், கீழே அமர்ந்து உடனே உயிர் பிரிகிறது.  ஊரே அழுகிறது.  நல்லவருக்கு இந்த மாதிரியான நேரத்தில் இந்த உயிர் பிரிதல் உலுக்குகிறது.. 
(ஜாதக ரீதியில் இத்தகு விளைவுகளை நாம் முன்னரே அறிந்திட இயலுமா.. ஆமாம்.  நல்ல கேள்வி தான்.. அறிந்திட இயலும்.. ஆனால் தவிரத்திட இயலுமா.. இயலுமே.. எப்படி?.. ஜாதகத்தில் நாம் உணரும் படியாக அமைந்துள்ள, சுகஸ்தானம், ரோகஸ்தானம், ஆயுள் ஸ்தானம் மற்றும் அயன சயன, பூர்வ புண்ணிய ஸ்தானங்களுடன் நடப்பு திசா புக்திகளுடன், கோள்சார கிரகநிலை ஆய்வு செய்து, இந்த வருடத்தில் இந்த மாதங்களுக்கு இடையில், வரும் சுக்க்கேடு இந்த உறுப்பை பாதிக்கலாம் எனவே இப்படி முன்யோசனையுடன் இருக்கலாம் என்று முன்னரே நம்மைத் தற்காத்துக் கொள்ளலாமே..)
ஆனால், பக்கத்து வீட்டின் நிலைமை வேறு,,
தன் தாய் தந்தையர்கள் இருவரும் வயது முதிர்வின் காரணமாக, மறைந்த பின்னர் தாய் தந்தையரைப் போன்று, அவ்வப்போது, ஆலோசனை கூற உகந்தவர் யாரும் இல்லையே என்ற நினைப்பில், ஆமாம்.. இருக்கிறார்களே,  மாமனார் மாமியார் என்றவாறு அவர்களிருவரையும் அழைத்து, வீட்டுடன் இருக்கச் சொல்லி அன்பான உபசரிப்புடன் அரவணைத்து பராமரித்து வந்தவருக்கு, எத்தனை எத்தனை அனுபவ ஆலோசனைகள்.. அதே 49 வயது,. வாரம் ஒரு முறை அழைத்து, அருகில் அமரவைத்து, உங்கள் வயதில், இந்நேரம் நீங்கள் எவ்வளவு தான் உழைத்தாலும், உடலுக்கும், மனதிற்கும் மகிழ்வான நிம்மதியான உடலுக்கு ஏற்ற மாற்றங்கள் தேவை என்ற அனுபவங்களைக் கூறி அவ்வப்போது, உடல்நிலையை சரிபார்க்க ஆலோசனை கூறி சிறு சிறு மாற்றங்கள் தென்பட்டாலும், உங்களிடம், நடையில், செயலில்,  உடல் நிறத்தில், முகப் பொலிவில் மாற்றங்கள் காண்கிறோம்,. நீங்கள் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்ற ஆலோசனைகள்.. ஆமாம் அவரைப்போலவே, இவருக்கும் இதயத்தில் குறைபாடு வந்த போது, முன்னதாக்க் கவனிக்க, தற்போது சுகமுடன் மகிழ்வுடன் வாழ்ந்து வருகிறார்..  இங்கு தான் துணிச்சலான முடிவுகளை நாம் எடுப்பதில் கிடைக்கின்ற நன்மைகளைப் பார்ப்போமா..
யார் செய்வார் மாமனார் மாமியரை வீட்டோடு அழைத்து உபசரிக்க முற்படுவர்.. வயதானவர்க்கு பராமரிக்க சற்று சிரம்ம் என்னும், அவர்கள் நல்ல வீட்டுக் காவலாளியாகவும், நேரத்திற்கு அன்பைப் பொழிகின்ற அற்புத உறவாக்கவும், நம் எதிர்கால வளர்ச்சிக்கு எல்லாவழிகளிலும் நல்லாலோசனைகள் நல்கிடும் தரமான கைடு ஆகவும் இருப்பதுடன், மனைவி மற்றும் மனைவி வழி மக்கள் அனைவருமே, போற்றுவதுடன் குழந்தைகளுமே நம்மை பாராட்டும் விதம் உன்னதமாகிறதே..
முடிந்தால், வயதான உறவுகளை உபசரிக்க கற்றுக் கொள்வோம். அதுவே நம்மை எதிர்கால விடியலுக்கு அழைத்துச் செல்லும் கலங்கரை விளக்காகட்டும். நன்றி.
தொடரும்.
அன்புடன்,
ஜோதிட தம்பதி நா. ரெங்கன் – அ. உஷா ரெங்கன்
புதிய முகவரி 41 A,  மாடி. சிவன் கோவில் மேலரதவீதி,
பாளையங்கோட்டை – 627 002
0462 2586300, 2582300,  9443423897,  9442586300  

 

JOTHIDA KALAIMAMANI USHA RENGAN 0 மறுமொழிகள்

அன்புள்ள இணையதள வாடிக்கையாளர்களே! புதிய வருகை தரும் அன்பர்களே! உங்கள் அனைவருக்கும் இனிய வணக்கங்கள்.

வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ள அற்புத யோசனைகள்


வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளும் அற்புதங்களை நாம் நன்றாக அறிந்திருக்க வேண்டும். ஒவ்வொருவரும் தத்தம் வாழ்க்கையை மிக மிக நன்றாக புரிந்து கொண்டு செயல்பட தேவையானது பொறுப்புணர்வுகள் தாம்.  தான் இருக்கும் சூழ்நிலை தனது எதிர்காலத்திட்டங்களோடு பொருத்திப் பார்த்து நன்றாக யோசித்து முடிவுகள் எடுக்க வேண்டிய பல்வேறு தருணங்களில் அவசரகதியில் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவுகள் எடுத்து பின்னர் வாழ்க்கையில் தேனும் பாலும் இணைந்தது போல் இருந்த லட்சியத் தம்பதிகள், பாலும் எலுமிச்சையும் சேர்ந்தது போல் மனதால் திரிந்து, எதிரும் புதிருமாகி இல்லறச் சோலையில் இயல்புக்கு மாறாக புயலாய் சுனாமியாய் பகைமை வேரூன்றிட காரணமாகிவிடுகிறது. நிகழ்வுகளுக்குப் பின்னர் ஒருவரை யொருவர் ஜாதக அளவில் புரியவைத்து, (சிலரது ஜாதகத்தில் உள்ள அபகீர்த்தி யோகத்தின் காரணமாக) சில நேரங்களில் சில வேறுபட்ட நல்ல குடும்பச் சூழலுக்கு ஒவ்வாத செயல்களில் இறங்க வைத்து வேடிக்கைப் பார்த்த செயல்கள் நமக்குப் புரியும் போது, தான் கடந்த காலத்தில் எந்த அளவுக்குப் பொறுப்பின்றி இருந்தோம் என்பது புரியவரும்.
உதாரணமாக, ஒரு பெண்மணியை அவசர நிமித்தம் தனது இருசக்கர வாகனத்தில் இடமளித்து, உதவி செய்த நல்ல மனமுள்ள வாழ்க்கைத் துணைவருக்கு ஏற்பட்ட நிலையை இங்கு விவரிக்க வேண்டும்.  
தனது அலுவலகம் முடிந்து, வீட்டிற்கு வந்து கொண்டிருந்த வேளையில், தனது அவசர நிலையைக் கூறி, பெண்ணொருத்தி உதவி கேட்டு, தனக்கு ஒரு இரண்டு கி.மீ. தூரத்திலுள்ள தன் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் ஏற்றிச் செல்ல, அடுத்த ஐந்து நிமிடத்தில், அவர் மனைவியின் உறவுக்காரர் செல்லிலே படம்பிடித்து, ரகசியமாக்கி, கணவரைக் கண்காணிக்க புத்திமதி கூற அன்றுமுதல் ஆரம்பித்தது அலங்கோல எண்ணங்கள்...
யதார்த்தமாய் கேட்டு, தெளிவு பெற்றிருந்தால், உரிய விவரங்கள் அறிந்திருக்கலாம்.. ஆனால், நேரம்.. அபகீர்த்தி யோகம் அதன் பணியைக் காண்பித்து விட்டது.
எனவே, லட்சிய தம்பதிகள் ஒருவர்க்கொருவர் கருத்து வேறுபாடுகள் வருமானால்அவரவர் ஜாதகங்ளை அந்நேரமே எடுத்துப் புரட்டிப் பார்த்து, நல்ல அனுபமுள்ள ஜோதிடர் அல்லது ஜோதிட தம்பதியராய் உள்ளவர்களை அணுகி மனதில் எழுகின்ற நேர்மறைக்கு மாறான எதிர்மறை எண்ணங்களை எடுத்தியம்பி, தற்கால கிரகநிலை, (கோள்சார கிரகநிலை) ஜனனகால கிரகநிலை, நடப்பு திசா புக்தி பலன்கள் ஆராய்ந்து, எதிர்காலம் வளமாக்கிக் கொள்ள ஆலோசனை பெற்றிட அன்புடன் வேண்டுகிறோம்.
இது போலவே, தந்தை மகன், தாய் மகன், தந்தை மகள், தாய் மகள் முக்கியமாக மாமியார் மருமகள், மாமனார் மருமகன், ஆகியோர்கள் தத்தம் ஜாதகநிலைகளில் உள்ள கிரக அமைப்பு மற்றும் நட்சத்திர அமைப்புகளின் மூலம் தமக்கு இன்னாரிடம் இந்த அளவில் நம்பிக்கை மட்டுமே பெற முடியும் என்ற ஜாதக விதிகளில் உள்ள விவரங்களின் இலக்கண விதிகளின் அடிப்படையில், இந்த நபர் இந்த நபரிடம் இந்த அளவில் தான் நெருக்கமாக இருக்கலாம் அல்லது தாமரை இலை தண்ணீர் போல் பட்டும் படாமல் இருக்க வேண்டும், அல்லது குளிருக்கு நெருப்பு காய்வது போல் வேண்டும் போது நெருங்கியும், வேண்டாத போது விலகியும் இருக்க வேண்டும் என்ற பகுப்பாய்வுகள் செயல்படுத்த தெரிந்து கொள்வோமானால், இல்லறம் சோலையாகி, சோலை வனமாகி வளங்களை அள்ளித் தந்திடுமே..
மீண்டும்.. சந்திப்போம்.. நன்றி.

 

JOTHIDA KALAIMAMANI USHA RENGAN 0 மறுமொழிகள்

கர தரிசனம்

தினந்தோறும் நாம் காலையில் எழுந்த உடன் முக்கியமாக அதிகாலையில், “கர தரிசனம்” செய்ய வேண்டும் என்பது நாம் தெரிந்து வைத்துக் கொண்டு நமக்கு அடுத்த இளைய சந்ததியினருக்கும் தெரிவிக்க வேண்டிய ஒன்றாகும்.  
நாட்டுப் புற நம்பிக்கைகளில் பொதிந்துள்ள அர்த்தங்களை நாம் ஒவ்வொன்றாக நன்றாக அலசி ஆராய்ந்தால் அவற்றின் பின்னால் ஒரு விஞ்ஞானப் பூர்வமான ஒரு செயல் இருக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை என தெளிவாக அறியலாம்.
  ஒவ்வொருவரும் தாம் கலையில் எழுந்த வுடன் தத்தம் உள்ளங்கைகளை நன்றாக விரித்துப் பார்த்து,கீழ்க்கண்டவர்களை நினைத்துச் சொல்லி தரிசனம் செய்தல் வேண்டும்.
கராக்கரே வஸதே லட்சுமி.
கரமத்யே சரஸ்வதி, கரமூலேச கௌரி
ஸ்யாத் ப்ரபாதே கர தர்சனம்
மங்ளம் பகவான் விஷ்ணு
மங்களம் மது ஸூதனா
மங்களம் புண்டரீ காட்ச
மங்களம் கருடத்வஜா
இவ்வாறு ஒவ்வொரு நாளும் சொல்வதன் மூலம் அன்றைய காரிங்கள் அனைத்தும் சித்திக்கும்.. என்பது தெய்வ வாக்கு.

தளத்தை செய்தியோடை மூலம் வாசிப்பவர்கள்

வாசகர்கள்

எங்களின் முதன்மை வலைத்தளம். Our Main Web Site

விருந்தினர் வருகை

சமீபத்தில் வந்தவர்கள்

இதை படித்தவர்கள் படித்தது

அதிகம் படிக்கப்பட்டவை