தமிழ் ஜோதிடம் ஜாதகம்

ஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், வாஸ்துசாஸ்திரம் மூலம் வருங்காலம் அறிய "ஸ்வாதி ஜோதிட ஆய்வகம்" உங்களை அன்புடன் வரவேற்கிறது.

எழுதியவை அனைத்தும்

அன்புள்ள வாசகர்களுக்கும், வாடிக்கையாளர்கள் மற்றும் புதிய அறிமுகம் தேவையுள்ளோருக்கும் அன்புடன் தெரிவித்துக் கொள்வது. வணக்கம்.
இந்த முறை புதிய வாடிக்கையாளர் சந்திப்பிற்காக வரும் 28-01-2014 முதல் 30-01-2014 வரை 3 தினங்கள் சென்னையில் ஜோதிடதம்பதி வருகை.
இடம்  கே.கே. நகர்.  ஆர்.டி.ஓ. கிரவுண்டு பின்புறம் நியூ பங்காரு நாயுடு காலணி 2வது தெரு. டாக்டர் உதயகங்கா இல்லம்.
நன்றி.
ஜோதிட தம்பதி

இனிய பொங்கல் நன்நாளில் இதமுடன் வாழ்த்துகிறோம். - ஜோதிட தம்பதி..
      சூரிய பகவான் வடக்கு நோக்கி உதிக்கத் தொடங்கும் மாதம் தை மாதம்... உத்ராயண புண்ய காலம்..மகர சங்கராந்தி என்னும் தை முதல் நாள் விழா.. இந்தியருக்கும் முக்கியமாக ஒவ்வொரு தமிழருக்கும் பெருமை சேர்க்கும் - பண்பாட்டை பக்குவப்படுத்தும் தெய்வீகத் திருவிழாவாக - தைப் பொங்கல் என்று, மனமும் வாயும் மகிழும் வண்ணம் இனிப்பான இனிமை சேர்க்கும் ஓர் அற்புதத் தெய்வீகத் திருவிழா..
வண்ணமய இத்திருநாளில் தான் சூரிய பகவான் மகர ராசியில் பிரவேசம் செய்வதுடன், அதனை ஒவ்வோர் வீடடிலுள்ளவர்களும், அவரவர் சிந்தனைக் கேற்ப, மகிழ்ச்சியை மையமாக வைத்து, வீட்டு வாசலில் வண்ணக் கோலங்கள் இட்டு, மாவிலைத் தோரணமும், மஞ்சள் கொத்து சூடி, மண் பானையிலே சூரியஒளியிலே சூரியனார்க்கு நன்றி சொல்லும் பாங்கில், பச்சரிசி, பால், நெய், வெல்லம் மற்றுமுள்ள சுவை சேர்க்கும் இனிமையாக முந்திரி, ஏலம், அண்டிப்பருப்புடனே, பொங்கல் பொங்க வழிபடுவதில் உள்ள அர்த்தமுள்ள சுகம்.. அது ஆரவராமில்லாத அதே உள்ளங்களை உண்மை அன்பிலே உணரச்செய்யும் ஓர் அற்புத சுகானுபவம் தானே!..
தற்காலத்தில், பள்ளி, கல்லூரிகளிலே, பணிபுரியும் அலுவலகம், கம்பெனிகளிலே சமத்துவப் பொங்கல் என்ற அளவில் விழாக்களில் பங்கேற்று, இளம் சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை “ பொங்கலோபொங்கல்” என்று ஒருமித்த கோஷமிட்டு, வாயார ஒருவர்கொருவர் வாழ்த்து, மனதார மகிழ்வுடன் இருக்கும் இந்நாளில் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..!..
ஜோதிட தம்பதி
ரெங்கன் - உஷா.
14-01-2014.

கனவுகளின் பலன்கள் என்ன!
DREMS PREDICTIONS

மனிதனின் வேகமான கால ஓட்டத்தில் தத்தளிக்கும் சிறியவர் முதல் பெரியவர் வரையிலான உள்ளங்களின் உணர்வுகள் புரிந்து கொள்ளத்தக்க வகையில் அவர்களுக்கு தன்னந்தனியாக கொடுக்கின்ற ஆலோசனையின் ஒரு பகுதி கனவாகக் கொள்ளலாம் என்பதில் உடன்பாடு உள்ளதா என்றால் ஆம் என்றே சொல்ல வேண்டும்.

வாழ்க்கையில் ஒரு தடவை உணர்ந்திராத, பார்த்திராத, கேட்டிராத பல்வேறு நிகழ்வுகள் கனவில் மட்டும் எப்படித் தோன்றுகின்றன என வியந்து கூறுவோர் பலர் உளதாயினும், கனவைக் கண்டு பயந்து அஞ்சி அப்படி நடந்து விடுமோ.. இப்படி நடந்துவிடுமோ!.. என அதிர்ச்சியுடன் நடுஇரவில் கூட கைபேசியில் அழைத்து கேட்கும் வாடிக்கயாளர்கள் பலரின் அனுபவம் எங்களுக்கு உள்ளது.. சொன்னது போலவே, கேட்டது போலவே இந்த கனவுக்கு இந்த பலன் என்று சொல்லும் படியாக அமைந்துள்ள முன்மாதிரிகள் ஏராளம்..

(முக்கியமாக கனவுகளில் வந்த செயல்கள் அப்படியே வாழ்க்கையில் நடந்த அனுபவங்கள் அவ்வளவாக இல்லை.. பின் எப்படி கனவுகள் – எந்த மாதிரியான விளைவுகளைத் தந்துள்ளன என காலம் காலமாக கணித்த விவரங்கள் கீழே காண்போம்..!..)

தங்களுக்கு நிகழ்ந்த கனவுகளின் பலன்கள் அறிய வேண்டுமா.. 9443423897 க்கு அழையுங்களேன்..நன்றி.!.

கனவுகளில் கீழ்க்கண்ட விதத்தில் வந்தால் நல்லது நடக்கும் என அறிவோம்!.

வானில் சஞ்சாரம் செய்வது போன்ற நிகழ்வு
நதியின் அருகில் அல்லது நதியில் உள்ளது போல நிகழ்வு
கடலின் அருகில் அல்லது கடலில் உள்ளது போல நிகழ்வு
சூரியனைப் பார்ப்பது, சூரிய நமஸ்காரம் ஆகிய நிகழ்வு
அக்னி ஜூவாலையில் ஒளிர்வது போன்ற நிகழ்வு
கிரகங்கள், நட்சத்திரங்கள் பார்ப்பது போன்ற நிகழ்வு
உணவு வழங்குவது போன்ற நிகழ்வுகள் கனவில் கண்டால் நிச்சயமாக நல்ல பலன்கள் கிட்டும்.

ஆனால், இதையும் தாண்டி, மது அருந்துதல், மாமிசம் சாப்பிடுதல், இரத்த அபிஷேகம் செய்தல், தயிர் சாப்பிடுதல், வெள்ளை உடை உடுத்துதல், ஆபரணங்கள் முக்கியமாக வைர ரத்தின ஆபரணங்கள் அணிதல் போன்ற நிகழ்வுகளைக் கனவில் கண்டால் மிகுந்த புகழ் கீர்த்தி வந்து சேரும்.

உயர்குடி மக்கள், தேவதைகள், பட்சிகள், குடை, உமி, தாமரைப்பூ, ரோஜா, வெள்ளைப் பூக்கள், ஆபரணங்கள் உடலெங்கும் அணிந்த பெண், காளை, மலை, பால், பழமுள்ள மரங்கள், கண்ணாடி, மாமிசம், நீர்நிலைத் தொட்டி ஆகியவை கனவில் கண்டால் வியாதியால் பலஹீனமாவார்கள். 
தாய்,தந்தை பெண், கொக்கு, கோழி, மான் இவைகளைக் கண்டால் சுப பலன்கள் வந்தடையும்,,

அசுப பலன்கள் தரும் கனவுகளில் வருகின்ற ஒருசில நிகழ்வுகள் பின்வருமாறு

 எட்டிமரம், புத்து, மொட்டை மரமேறுவது போல, எண்ணை, பருத்தி, இரும்பு,கழுகு, குரங்கு, நல்லபாம்பு, கழுதை, குறையுள்ள தலை, இரத்த ஆடை அணிதல், விளையாடுதல் இவைகளைக்கண்டால் துன்பங்கள் வந்து சேரும்.
வெள்ளைப் பொருட்களில், பருத்தி,சாம்பல், அன்னம், மோர் இவைகளைத் தவிர மற்றது நல்லது. கறுப்பு பொருட்களில், பிராமணர், தேவர்கள், குதிரை, பசு, யானை இவைகளைத் தவிர அசுப பலன்கள் தரும் எனவும் கூறப்பட்டுள்ளது, 

இக்கனவுகள், முதல் சாமத்தில் கண்டால், ஒருவருடத்திற்குள்ளாகவும், இரண்டாவது சாமத்தில் கண்டால், எட்டு மாத்த்திற்குள்ளகாவும், 3வது சாம்மாயிருந்தால், 3 மாத்த்திற்குள்ளகாவும், 4வது சாமத்தில் கண்டால் ஒரு மாத்த்திற்குளாகவும், அருணோதயமாயிருந்தால், பத்து தினங்களுக்குள்ளகாவும், சூரிய உதய காலமாயிருந்தால், அந்த கணத்திலும் பலன் அடைவர்.
 
இவற்றும் தோஷமுண்டான பலன்களுக்கு பரிகாரங்கள் பார்த்து செய்தால் தோஷம் நீங்கும். சுபிட்சம் கிட்டும். சுபம்.
ஜோதிட தம்பதி

ரெங்கன் – உஷா.

மூக்குத்தி அணிவது, காது குத்துவது ஏன்?

மூக்கு குத்துவது, காது குத்துவது துளையிடுவது உடலில் உள்ள வாயுவை ,காற்றை வெளியேற்றுவதற்கு. கைரேகை, ஜோசியம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது... கையும் பெண்களுக்கு இடதுகையும் பார்த்து பலன் கூறுவது வழக்கம். ஆண்களுக்கு வலப் புறமும் பெண்களுக்கு இடப் புறமும் பலமான, வலுவான பகுதிகளாகும். ஞானிகளும் ரிஷிகளும் தியானம் செய்துபோது வலது காலை மடக்கி இடது தொடை மீது போட்டு தியானம் செய்வார்கள். இதற்கு காரணம் இடது காலை மடக்கி தியானம் செய்யும் போது வலது பக்கமாக சுவாசம் போகும். வலது என்றால் தமிழில் வெற்றி என்று பொருள். வலது பக்கமாக சுவாசம் செல்லும்போது தியானம், பிராத்தனை எல்லாம் கண்டிப்பாக பலன் தரும். அதனால் இந்த நாடியை அடக்குவதாக இருந்தால் வலது பக்க சுவாசத்திற்கு மாற்றவேண்டும். அதே மாதிரி ஒரு அமைப்புத்தான் மூக்குத்தி. நமது மூளைப் பக்கத்தில் ஹிப்போதலாமஸ் என்ற பகுதி இருக்கிறது.

நரம்பு மண்டலங்களை கட்டுப்படுத்தக் கூடிய, செயல்படக் கூடிய அளவு சில பகுதிகள் உள்ளன. அந்தப் பகுதியில் சில உணர்ச்சி பிரவாகங்கள் உள்ளன. இதனைச் செயல்படுத்துவதற்கு அந்தப் பகுதி துணையாக இருக்கிறது. இப்படி இந்தப் பகுதியை அதிகமாக செயல் படுத்துவதற்கும் பெண்ணின் மூக்கில் இடது பக்கத்தில் குத்தக்கூடிய முக்குத்தி வலது பக்க மூளையை நன்றாக செயல் படவைக்கும். இடது பக்கத்தில் முளை அடைப்பு என்றால் வலது பக்கத்தில் நன்கு வேலை செய்யும். வலது பக்கம் அடைத்தால் இடது பக்கம் உள்ள மூளை அதிகமாக இயங்கும். இன்றைய நம்முடைய மனித வாழ்க்கைக்கு அதிகமாக இந்த இடது பக்க மூளையை அடைத்துவலது பக்கமாக வேலை செய்ய வைக்கிறோம். அதனால் வலது கை, வலது கால் எல்லாமே பலமாக உள்ளது.

பெண்கள் முக்குத்தி அணியும்போது, முன் நெற்றிப் பகுதியில் இருந்து ஆலம் விழுதுகள் போல்சில நரம்புகள் நாசி துவாரத்தில் இறங்கி கீழே வரும். இப்படி விழுதுகள் மூக்குப் பகுதியிலும், ஜவ்வு போல மெல்லிய துவாரங்களாக இருக்கும். ஆலம் விழுதுகள் போல உள்ள மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க முக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலில் உள்ள வெட்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும். அதுமட்டுமல்ல, மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும்.

சிறுமிகளுக்கு மூக்குத்தி அணிவிப்பது கிடையாது. பருவப் பெண்களுகே முக்குத்தி அணிவிக்கப்ப்டுகிறது. பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது, தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும்.இந்த வாயுக்களை வெளிக்கொண்ருவதற்கு ஏற்படுத்தட்டதுதான் இந்த மூக்கு குத்துவது. மூக்கு குத்துவதால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறு சரி செய்யப்படுகின்றன. இன்றைக்கு நாகரிகம் வளர்ந்து விட்டதால் சில பெண்கள் வலதுப் பக்கம் மூக்குத்தி அணிகிறார்கள். ஆனால், சாஸ்திர ரீதியாக இடப்பக்கம்தான் பெண்கள் மூக்குத்தி அணியவேண்டும். இடது பக்கம் குத்துவதால் சில மாற்றங்கள் ஏற்படும். சிந்தனா சக்தியை ஒரு நிலைப்படுத்துகிறது. மனதை அமைதிப்படுத்துகிறது. தியானம், பிராத்தனையில் ஈடுபட உதவுகிறது.

ஒற்றைத்தலைவலி, நரம்பு சம்பந்தமான நோய்கள், மனத்தடுமாற்றம் ஏற்படாமல் இருக்க முக்குத்தி உதவுகிறது என்று ஞானிகளும் ரிஷிகளும் கூறியிருக்கின்றனர். உடலிலுள்ள வெப்பத்தைக் கிரகித்து நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கூடிய ஆற்றல் தங்கத்துக்கு இருக்கிறது. தங்க நகைகளைப் பெண்கள் அணிவதன் மூலம் உடலில் ஏற்படும் அதிக வெப்பம் உணர்ச்சியாக மாறுவதிலிருந்து தடைப்பட்டுபோகும். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, ஆகிய நால்வகைப் பண்புகள் உடையவர்களாகத் திகழ முடியும். தங்க நகைகள் அணிவதால் உணர்ச்சிப் பிரவாகம் தடைப்பட்டு பெண்களின் உடல் வெப்பம் சம நிலையடைகிறது. இதனால் அவர்களது வாழ்க்கை தர்ம நெறிகளுக்கு உட்பட்டு சீராக அமையும்.
....பகிருங்கள்....

அன்புள்ளம் கொண்ட வாடிக்கையாளர்களுக்கும்,  வருகைக்காகப் பதிவு செய்து காத்திருக்கிற ஆன்மீகப் பற்றுள்ள அன்பர்களுக்கும் அன்பு வணக்கங்கள்..
வருகிற 26-07-2013 வெள்ளி முதல் 28-07-2013 ஞாயிறு வரை 3 தினங்கள் ஜோதிடத் தம்பதி சென்னை வருகை..
சந்திக்க வேண்டுமெனில் தயவு செய்து கீழ்க்கண்ட தொலைபேசிகளில் தங்கள் வருகையை உறுதி செய்து சந்திக்க அன்புடன் வேண்டுகிறோம். நன்றி.
ஜோதிடத் தம்பதி
ரங்கன் நாராயணய்யர்
உஷா ரங்கன்
MOBILE NO.9443423897
9442586300

அன்புடையீர்,
வணக்கம்.  வருகிற 5,6, மற்றும் 7 ஜூலை 2013 நாட்களில், வீரவநல்லூர் (திருநெல்வேலி மாவட்டம்) வரலாற்றில் முக்கியத்துவம் பதிக்கும் சிறப்பம்சமாக நடைபெறவுள்ள பஜன் மேளாவில் கலந்து கொண்டு, ஸ்ரீ ரெங்கநாதர் திருவருளைப் பெற அன்போடு அழைக்கிறோம்.
நிகழ்ச்சி மற்றும் விழா குறித்த சிறப்பம்சங்களை இணைத்துள்ள விழா மடலில் கண்டு கொள்ளவும்.. வருக.. வருக.. வளம் பெற வருகை தருக!!.. நன்றி.
ஜோதிடதம்பதி
ரெங்கன் உஷா.
விழாமலர் கட்டுரையில் ஒன்று!.

பாவங்களைக் களைய பகவானின் நாமமே கதி!
வீரவநல்லூர் மரீசி ரிஷி கோத்திரம் ஸ்ரீ நாராயணய்யர்-ஸ்ரீமதி விசாலட்சி புத்திரன்
ஜோதிடத் தம்பதி ரெங்கன், MA.B.ED., D.ASTRO., தமிழாசிரியர் - உஷா ரெங்கன் B.A. ASTRO.,

பஜன் சம்பிரதாயம் உலகத்தில் எப்படி தோன்றியது!?.. எதற்காகத் தோன்றியது!.. என்று ஆராய முற்படுவோமா!!.  பகவானைத் துதித்து நிற்பதிலே முதன்மை பெறுவது ஏன் பகவானை விட பெரியது அவன் நாமம் உச்சரிப்பது தானே.  எந்த நாமத்தை எந்த அடியார்கள் உச்சரிக்கிறார்களோ அவர்கள் அந்த பகவானை விடப் பன்மடங்கு பெரியவர்கள் என்று பகவானே ஒப்புக்கொண்டுள்ள வரலாறுகள் எத்தனை, எத்தனை!.

       ஞான மார்க்கத்தை விட உயர்ந்த்தும் பல படிகள் எளியதுமாக இருப்பது பகவானின் நாமத்தை சதா உச்சரித்துக் கொண்டிருக்கும் பக்தி மார்க்கம் தான்! இதன்கண் பஜன் சம்பிரதாயம் ஏற்பட்டிருக்கிறதாக ஆன்றோர்கள் சுட்டிக் காட்டி பஜன் தொடர மார்க்கங்கள் பல தந்துள்ளனர்.
       துகாராம், நாமதேவர், மீரா பாய், சக்குபாய், புண்டரீகன், புரந்தரதாஸர் என பகவானின் நாமத்தைப் பாடிப் பாடி ஆனந்தமயமாய் திகழந்தவர்கள் பலராவார்.  நாம சங்கீர்த்தன மகிமையை பக்தர்கள் பெருமையைக் கூறும் சம்பவங்கள் பலவுண்டு!.

       புண்டலிகன் எனும் பக்தன் தன் தாய் தந்தையருக்குச் சேவை செய்வதில் சிறந்த விளங்குகிறான்.  அதன் சிறப்பைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவனுக்கு ஆதரவளித்து வருகிறார் ஸ்ரீ கிருஷ்ணர்.  அச்சமயம் தனது தாயின் பாதங்களை மெல்லப் பிடித்து விட்டு சேவை செய்கிறான் புண்டலிகன்.  ஆகவே தன்னைக் காண வந்தவர் சுவாமி ஷ ஸ்ரீ பாண்டுரங்கனே என்பதையும் அறியாது, செங்கலின் மீது சற்று நேரம் நிற்குமாறு பணிக்கிறான்.  இறைவனும் அதை ஏற்று, அவ்வாறே செங்கலின் மீது ஏறி, நின்று “விட்டலன்ஆன பெருமை விவரிக்க வார்த்தைகளே இல்லையே!..

       இப்போது பக்தன் பெருமைக்குரியவனா? அல்லது அந்த பக்தனுக்காக அவன் வரும் வரை தனது மனைவியோடு இடுப்பில் கைவைத்துக் காத்துக் கொண்டிருக்கும் பண்டரிபுர நாயகன் பெருமைக்குரியவரா?
       உண்மையான ஒரு பக்தனைப் பெருமைப் படுத்த இறைவன் தான் எந்த அளவிற்கு இறங்கி வரத் தயாராக இருக்கிறார் என்பதைத் தான் இச் சம்பவம் நமக்கு உணர்த்துகின்றது. மேலும் இன்னொன்று...

திரௌபதை மீது  கிருஷ்ணனுக்கு, அதிகமான அன்பு எப்படி என்பதை அறிய ருக்மணியும், சத்யபாமாவும், ஆவல் கொள்கின்ற நேரம். ஒரு சமயம் ஸ்ரீ கிருஷ்ணர் அவர்கள் அஸ்தினாபுரத்திற்கு அழைத்துச் செல்கிறார்.  அந்நேரம், அங்கே அரண்மனையில், திரௌபதி தலைவராமல், கலைந்த கூந்தலுடன் அமர்ந்திருக்கிறாள்.  விருந்தினரை வரவேற்று உபசரித்த அவள், பின் தன் தலையை வாரிவிடும்படி, ருக்மணியிடம் வேண்டிக் கொள்கிறாள். ருக்மணியும், அன்புடனே திரௌபதையின் தலையை வார முற்படுகிறாள்.  அவள் வார வார சீப்பானது துடிக்கின்றது.  ஏன் என அறிய முற்பட்டால், திரௌபதியின் ஒவ்வொரு தலைமுடியும் கிருஷ்ணரின் நாமத்தை சொல்லிக் கொண்டிருக்கிறது.  அதைக் க்ணட இருவருக்கும், கிருஷ்ணருக்கு திரௌபதையின் மீது இருக்கும் அன்பிற்கான உண்மைக் காரணம் புரிகிறது.  பாலகிருஷ்ணன் நாம மகிமையால் முடியாத்தேது?  ராம நாம மகிமையால் அன்றோ ஆஞ்சநேயர் பெரும் கடலைத் தாண்ட முடிந்த்தே!..





பகவானின் நாமங்களைச் சொல்வோம்!.. பாவங்களை அம்மட்டும் களைவோம்!!. சுபம்.

அன்புடையீர்,

வணக்கம்.   சென்னை முகாம்  

இம்மாதம் ஜோதிடத்தம்பதி இன்றும் நாளையும்

அதாவது  20-05-2013 முதல் 21-05-2013 

திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய   நாட்களில் 

சென்னையில் இருக்கும் நாட்களில் 9443423897

என்ற எண்ணிலும், தொடர்பு கொண்டு ஆலோசனை பெற வர பணிவுடன் வேண்டுகிறோம். நன்றி.
ஜோதிட தம்பதி

தளத்தை செய்தியோடை மூலம் வாசிப்பவர்கள்

வாசகர்கள்

எங்களின் முதன்மை வலைத்தளம். Our Main Web Site

விருந்தினர் வருகை

சமீபத்தில் வந்தவர்கள்

இதை படித்தவர்கள் படித்தது

அதிகம் படிக்கப்பட்டவை