ஒவ்வொருவரும் தாம் கலையில் எழுந்த வுடன் தத்தம் உள்ளங்கைகளை நன்றாக விரித்துப் பார்த்து,கீழ்க்கண்டவர்களை நினைத்துச் சொல்லி தரிசனம் செய்தல் வேண்டும்.
இல்லறச் சோலையிலே.. இல்லறம் இனிதாகட்டும்..

வைகுண்ட ஏகாதசி மகிமையும், ஜாதகம் ஏன் பார்க்க வேண்டும் என்ற விளக்கமும் அறிவோமா!?
அன்புடையீர்,வணக்கம்.
05-01-2012 வியாழன் ஸ்ரீ கர வருடம் மார்கழி மாதம்
20 ம்நாள் வைகுண்ட ஏகாதசி!!
இனிய நந்நாளம் ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி அன்று பெருமாள் அனந்த சயனத்தில் காட்சியளிக்கும் நந்நாள்.
“ ஏகாதசியை விஞ்சிய வேறு விரதம் இல்லை ” என்பது பழமொழி. வடமொழியில் ஏகாதசி என்பதை தமிழாக்கம் செய்தால் அதன் அர்த்தம் பதினொன்று ஆகும். அதாவது வளர்பிறை ஆரம்பித்த நாள் முதல் (பிரதமை திதி) 11வது நாளாகும்.
ஆன்மீக விதிமுறைகள் அனைத்திலும் 11வது நாள் அல்லது 11வது முறை என்பது முக்கிய குறிக்கோளாகக் கொள்ளப்பட்ட எத்தனையோ உதாரணங்கள் உண்டு.
ஏகாதசி விரதத்தில் கைக் கொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகள் வருமாறு
கர்ம இந்திரியங்கள் - 5 ஞானேந்திரியங்கள் -5 இதனுடன் மனம்கூடினால் - 11 ஆக இந்த 11 இந்திரியங்களால் தெரிந்தோ தெரியாமலோ செய்யப்படும் தீவினைகள் எல்லாம் இந்த 11வது திதி நாளில் விரதம் இருந்தால், அழிந்து விடுவது உறுதி என்பது நம்பிக்கை. ஏகாதசியன்று பகல் உறக்கமோ, இருவேளையும் சாப்பிடுதல், தாம்பத்ய சேர்க்கை ஆகியவை அறவே ஆகாது. எனவே ஏகாதசியன்று இந்து சமயத்தவர் திருமண நிகழ்வுகளை தவிர்த்து வருவதும் உண்டு.
ஏகாதசி விரத விவரங்கள்
1. முதல் நாள் தசமி அன்று பகலில் ஒரு வேணை மட்டும் உணவு சாப்பிடுதல்.
2. ஏகாதசியன்று அதிகாலையில் எழுந்து, குளித்து விட்டு, பூஜை செய்து விரதம் துவங்க வேண்டும்.
3. ஏகாதசி திதி முழுவதும் உணவு உட்கொள்ளாமல் இருத்தல் நல்லது. ( தேங்காய், பால், தயிர் போன்றவற்றை பிரசாதமாக அருந்துவதில் தவறில்லை. மேலும் பழங்கள் சாப்பிடுவதில் தவறில்லை.
4.இரவு முழுவதும் கண் விழித்து, புராண புத்தகங்களைப் படிக்கலாம். பஜனை மூலம் பகவான் நாமங்கள் உச்சரிக்கலாம்.
5. ஏகாதசிக்கு மறுதினம் துவாதசி நாளாகும். அன்று உணவு அருந்துவதற்குப் பெயர் பரணை என்பர்.
6. துவாதசியன்று, அதிகாலையில் உப், புளிப்பு முதலிய சுவையற்ற உணவாக சுண்டைக்காய், நெல்லிக்கனி, அகத்திக் கீரை, இவைகளைச் செர்த்து பல்லில் படாமல் “ கோவிந்தா! கோவிந்தா!!” என்று மூன்று முறை உச்சரித்து, ஆல இலையில் உணவு பரிமாறிச் சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.
7. துவாதசி அன்று உரிய திதி நேரத்தினைக் கணக்கிட்டு, ஏகாதசி விரதத்தினை நிறைவு செய்ய வேண்டும்.
8. விரதத்தினை நிறைவு செய்வது என்பது, நீர் கூட அருந்தாதவர்கள் துளசி தீர்த்தத்யும், மற்றவர்கள் பகவான் கிருஷ்ணருக்கு தானிய உணவை படைத்து (பிரசாதமாக) உண்ணலாம். ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பது போலவே விரதத்தை முடிப்பது மிக மிக முக்கியம். இல்லை எனில், விரதத்தின் முழுப் பயனும் கிடைக்காமல் போ்ய்விடும்.
9. உணவு சாப்பிடுமுன் பெரியோர்கள் சாப்பிட்டச் சொல்லி உடன் சாப்பிட வேண்டும். அன்று பகலில் தூங்குவது நல்லதல்ல.
10. குழந்தைகளும், வயது முதிர்ந்தவர்களும் இயலாமையில் உள்ளவர்களும் விரதம் அனுஷ்டிக்கத் தேவையில்லை.
11. சாஸ்த்திர நூல்களில் கூறப்பட்டுள்ள மேற்காண் விரத முறைகள் அனுசரிப்பது உடலுக்கும் உள்ளத்திற்கும் நல்லது,
சுபம்.
வணக்கங்கள்... நாம் நம்முடைய எதிர்காலம் தெரிந்து கொள்வோமா..!..
S W A A T H I O N L I N E A S T R O S E R V I C E S ,
Run by the Award Winner of Jothida Kalaimamani
24a, SIVAN KOIL
PALAYAMKOTTAI – 627002 –
www.tamil-astrology.com – Ph: 9443423897
அன்புடையீர்,
வணக்கம். தாங்கள் தொடர்பு கொண்டமைக்கு மிக்க நன்றி.
காலம் காலமாக நம்முடைய, எதிர்காலம் அறிய பயன்படுகின்ற இந்த அற்புதமான ஜோதிடக்கலைக்கு ஆதரவு தந்திடும் வகையில் அணுகியுள்ளீர்கள். விளக்கங்களை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் தற்போது தாங்கள் கேட்டுள்ள விவரங்களுக்கு திருப்தியான பலன்கள் தந்து உங்கள் குடும்ப ஜோதிடராகி, வருங்காலத்தில் ஜோதிட ரீதியான முறையில், ஆரோக்கியம், கல்வி, வேலை வாய்ப்பு, திருமணம், குழந்தைப் பேறு, பதவி அந்தஸ்து, தொழில் முன்னேற்றம், வீடு. மனை, வாகனம் மற்றும் பொன், பொருள், ஆபரண சேர்க்கை ஆகியவற்றில் உள்ள முன்னேற்றங்கள் குறித்து, அவ்வப்போது ஆலோசனைகள் இறையருள் பிரார்த்தனையால் தந்துதவ நாம் காத்திருக்கிறோம். எனினும், தாங்கள் தயவு செய்து, எங்களுக்கு உரிய காணிக்கை கட்டணங்கள் தந்துதவ வேண்டுகிறோம்.
நவக்கிரஹ ஸ்தோத்திரம்
ஸூர்ய நமஸ்காரம் சூரிய வணக்கம்
ஜபா குஸூம ஸங்காசம் சீலமாய் வாழச் சீரருள் புரியும்
காச்யபேயம் மஹாத்யுதிம்! ஞாலம் புகழும், ஞாயிறே போற்றி
தமோரிம் ஸ்ர்வ பாபக்னம் சூரியா போற்றி, சுதந்திரா போற்றி
ப்ரணதோ (அ) ஸ்மி திவாகரம் !! வீரியா போற்றி, வினைகள் களைவாய்
சந்த்ர நமஸ்காரம் சந்திரன் வணக்கம்
ததி சங்க துஷாராபம் எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும்
ஷீரோதார்ணவஸம்பவம்! திங்களே போற்றி, திருவருள் தருவாய்
நமாமி சசினம் ஸோமம் சந்திரா போற்றி, சத்குரு போற்றி
சம்போர் மகுடபூஷணம்!! சங்கடந் தீர்ப்பாய் சதுர போற்றி
அங்காரக நமஸ்காரம் செவ்வாய் வணக்கம்
தரணீ கர்ப்ப ஸம்பூதம் சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே
வித்யுத்காந்தி ஸப்ரபம் ! குறையிலா தருள்வாய் குணமுடன் வாழ
குமாரம் சக்தி ஹஸ்தம் ச மங்கள் செவ்வாய் மலரடி போற்றி
மங்களம் ப்ரணமாம் யஹம்!! அங்காரகனே அவதிகள் நீக்கு
புத நமஸ்காரம் புதன் வணக்கம்
ப்ரிங்கு கலிகா ச்யாம் இதமுற வாழ இன்னல்கள் நீக்கு
ருபேணா ப்ரதிமம் புதம்! புத பகவானே பொன்னடி போற்றி
ஸௌம்யம் ஸௌம்ய குணோபேதம் பதந்தந் தாள்வாய் பண்ணொலியானே
தம் புதம் ப்ரணமாம் யஹம்!! உதவியே யருளும் உத்தமா போற்றி
குரு நமஸ்காரம் குரு வணக்கம்
தேவானாம் ச ரிஷஷீணாம் ச குணமிகு வியாழக் குருபகவானே
குரும் காஞ்சன ஸந்நிபம்! மணமுடன் வாழ மகிழ்வுடனருள்வாய்
புத்தி பூதம் த்ரிலோகேசம் ருகஸ்பதி வியாழப் பரதகுரு நேசா
தம் நமமாமி ப்ருஹஸ்பதிம்!! க்ரக தோஷமின்றிக் கடாஷித் தருள்வாய்
சுக்ர நமஸ்காரம் சுக்கிர வணக்கம்
ஹிமகுந்த ம்ருணாளாபம் சுக்கிரமூர்த்தி சுபமிக யீவாய்
தைத்யானாம் பரமம் குரும்! வக்கிரமின்றி வரமிகத் தருள்வாய்
ஸர்வாசாஸ்த்ர ப்ரவக்தாரம் வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே
பார்கவம் ப்ரணமாம் யஹம்!! அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே
சனி நமஸ்காரம் சனி வணக்கம்
நீலாஞ்ஜன ஸமாபாஸம் சங்கடந் தீர்க்கும் சனி பகவானே
ரவிபுத்ரம் யமாக்ரஜம்! மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்
ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் சச்சரவின்றிச் சாகா நெறியில்
தம் நமாமி சனைச்சரம்!! இச்சகம் வாழ இன்னருள் தா தா.
ராகு நமஸ்காரம் ராகு வணக்கம்
அர்த்தகாயம் மஹாவீர்யம் அரவெனும் ராகு அய்யனே போற்றி
சந்தராதித்ய விமர்தனம்! கரவா தருள்வாய் கஷ்டங்கள் நீக்கி
ஸிம்ஹிகா கர்ப்ப ஸம்பூதம் ஆகவருள் புரி அனைத்திலும் வெற்றி
தம் ராஹீம் ப்ரணமாம் யஹம்!! ராகுக்கனியே ரம்மியா போற்றி
கேது நமஸ்காரம் கேது வணக்கம்
பலாச புஸ்பஸ்ஙகாசம் கேதுத் தேவே கீர்த்தித் திருவே
தாராகாக்ரஹ மஸ்தகம்! பாதம் போற்றி பாபம் தீர்ப்பாய்
ரௌத்ரம் ரௌத்ராத்மகம் கோரம் வாதம், வம்பு வழக்கு களின்றி
தம் கேதும் ப்ரணமாம் யஹம்!! கேதுத் தேவே கேண்மையாய் ரட்சி.