வாழ்க்கையை
வளமாக்கும் அற்புத யோசனைகள்..!..
இந்த துணிச்சல் யாருக்கு வரும் என்று எல்லோரும்
பேசிக்கொள்ளும் அளவிற்கு ஒரு சில நிகழ்வுகள் துணிச்சலாக முடிவு எடுக்க்க் கூடிய
சில விஷயங்களை நாம் கவனத்தில் கொண்டால், அன்றாட வாழ்வில் வளங்களை அள்ளிச்
சேர்க்கலாம். இந்த மனித ஜென்மத்தில்
இறைவனின் அற்புதப் படைப்பில், எந்த வித குறைபாடுகளும் இல்லாமல் (நல்ல கண்பார்வை,
திரேக வலிமை, பிணியற்ற சரீரம்) அனைத்தும் சிறப்பாக அமைந்து விட்ட பலர், அந்தந்த
உறுப்புகளில் குறைபாடுகள் வந்த பின்னர் தான் அந்தந்த பாதுகாப்பு முறைகளைக்
கையாளர்கின்றனர். உதாராணமாக
தொலைக்காட்சிப் பெட்டி தொடர்ந்து பார்ப்பதும், காபி, டீ போன்ற போதை வஸ்துக்களை
அதிகமாக்கிக் கொண்டும், உடலுழைப்பு மற்றும் தேகப் பயிற்சி இல்லாமல் உடம்பில்,
கெட்ட கொழுப்பின அளவு மற்றும் உப்பு உபயோகம் கூடியதன் காரணமாக அனைத்து
உறுப்புகளின் பலகீனமும் வரப்பெறும் போது ஆண்டவனின் அற்புதங்களை நினைக்கத்
துவங்குகிறோம். இவற்றோடு பாதுகாப்பு
முறைகள் கையாளாமையும் இன்னல்களின் முகவரிக்கு நம்மை அழைத்துச் செல்கின்றன.
49 வயதில் நல்ல வசதியுடன் வாழ்க்கை வாழ்கின்ற ஒருவர்,
நமக்கு இறைவன் அளித்துள்ள பட்டம், பதவி, திருமண பந்தந்தின் மூலம் கிடைத்துள்ள
மனைவி, மக்கள், உறவுகள் அனைத்தையும் மகிழ்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லும்
மகிழ்வான குடும்பத்தலைவன் தன் பொறுப்புக்களின் காரணமாக, தன் உடலின் இயக்கங்களில்
உள்ள அசௌகரியக் குறைபாடுகளை கவனிக்கத் தவறுகிறான். தன் நல்ல அறிமுகத்தினால், அழைத்தால் உடன்
பதிலளிக்கும் வகையில் மருத்துவ நண்பர்கள், வீட்டருகில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி
மருத்துவ மனை என்றெல்லாம் அமையப் பெற்றவர், நாளை,, அடுத்த வாரம்.. அடுத்த மாதம்
நம் உடலை பரிசோதிக்க வேண்டும் என்று தள்ளிப் போட.. ஒரு நாள் திடீரென்று, மருத்துவ
நண்பரை அழைத்து, நெஞ்சு கரிக்கிறது.. என்ன செய்வது என்று யோசனை கேட்க இது, இதய
அடைப்பின் அறிகுறியாகுமே என்று உடன் கவனித்துக் கொள்ளச் செல்ல வீட்டருகின்
மருத்துவ மனை வாயிலுக்குச் சென்றதும், முடியாமல், கீழே அமர்ந்து உடனே உயிர்
பிரிகிறது. ஊரே அழுகிறது. நல்லவருக்கு இந்த மாதிரியான நேரத்தில் இந்த
உயிர் பிரிதல் உலுக்குகிறது..
(ஜாதக ரீதியில் இத்தகு விளைவுகளை நாம் முன்னரே அறிந்திட
இயலுமா.. ஆமாம். நல்ல கேள்வி தான்..
அறிந்திட இயலும்.. ஆனால் தவிரத்திட இயலுமா.. இயலுமே.. எப்படி?.. ஜாதகத்தில் நாம்
உணரும் படியாக அமைந்துள்ள, சுகஸ்தானம், ரோகஸ்தானம், ஆயுள் ஸ்தானம் மற்றும் அயன
சயன, பூர்வ புண்ணிய ஸ்தானங்களுடன் நடப்பு திசா புக்திகளுடன், கோள்சார கிரகநிலை
ஆய்வு செய்து, இந்த வருடத்தில் இந்த மாதங்களுக்கு இடையில், வரும் சுக்க்கேடு இந்த
உறுப்பை பாதிக்கலாம் எனவே இப்படி முன்யோசனையுடன் இருக்கலாம் என்று முன்னரே நம்மைத்
தற்காத்துக் கொள்ளலாமே..)
ஆனால், பக்கத்து வீட்டின் நிலைமை வேறு,,
தன் தாய் தந்தையர்கள் இருவரும் வயது முதிர்வின் காரணமாக,
மறைந்த பின்னர் தாய் தந்தையரைப் போன்று, அவ்வப்போது, ஆலோசனை கூற உகந்தவர் யாரும்
இல்லையே என்ற நினைப்பில், ஆமாம்.. இருக்கிறார்களே, மாமனார் மாமியார் என்றவாறு அவர்களிருவரையும்
அழைத்து, வீட்டுடன் இருக்கச் சொல்லி அன்பான உபசரிப்புடன் அரவணைத்து பராமரித்து
வந்தவருக்கு, எத்தனை எத்தனை அனுபவ ஆலோசனைகள்.. அதே 49 வயது,. வாரம் ஒரு முறை
அழைத்து, அருகில் அமரவைத்து, உங்கள் வயதில், இந்நேரம் நீங்கள் எவ்வளவு தான்
உழைத்தாலும், உடலுக்கும், மனதிற்கும் மகிழ்வான நிம்மதியான உடலுக்கு ஏற்ற
மாற்றங்கள் தேவை என்ற அனுபவங்களைக் கூறி அவ்வப்போது, உடல்நிலையை சரிபார்க்க ஆலோசனை
கூறி சிறு சிறு மாற்றங்கள் தென்பட்டாலும், உங்களிடம், நடையில், செயலில், உடல் நிறத்தில், முகப் பொலிவில் மாற்றங்கள்
காண்கிறோம்,. நீங்கள் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்ற ஆலோசனைகள்..
ஆமாம் அவரைப்போலவே, இவருக்கும் இதயத்தில் குறைபாடு வந்த போது, முன்னதாக்க்
கவனிக்க, தற்போது சுகமுடன் மகிழ்வுடன் வாழ்ந்து வருகிறார்.. இங்கு தான் துணிச்சலான முடிவுகளை நாம்
எடுப்பதில் கிடைக்கின்ற நன்மைகளைப் பார்ப்போமா..
யார் செய்வார் மாமனார் மாமியரை வீட்டோடு அழைத்து உபசரிக்க முற்படுவர்..
வயதானவர்க்கு பராமரிக்க சற்று சிரம்ம் என்னும், அவர்கள் நல்ல வீட்டுக்
காவலாளியாகவும், நேரத்திற்கு அன்பைப் பொழிகின்ற அற்புத உறவாக்கவும், நம் எதிர்கால
வளர்ச்சிக்கு எல்லாவழிகளிலும் நல்லாலோசனைகள் நல்கிடும் தரமான கைடு ஆகவும்
இருப்பதுடன், மனைவி மற்றும் மனைவி வழி மக்கள் அனைவருமே, போற்றுவதுடன் குழந்தைகளுமே
நம்மை பாராட்டும் விதம் உன்னதமாகிறதே..
முடிந்தால், வயதான உறவுகளை உபசரிக்க கற்றுக் கொள்வோம்.
அதுவே நம்மை எதிர்கால விடியலுக்கு அழைத்துச் செல்லும் கலங்கரை விளக்காகட்டும்.
நன்றி.
தொடரும்.
அன்புடன்,
ஜோதிட தம்பதி நா. ரெங்கன் – அ. உஷா ரெங்கன்
புதிய முகவரி 41 A, மாடி.
சிவன் கோவில் மேலரதவீதி,
பாளையங்கோட்டை – 627 002
0462 2586300, 2582300, 9443423897, 9442586300