வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.
திருமால் வழிபாடு
திங்கள் செவ்வாயிலுன் திருவமு தருந்தினால்
தீராத வினை தீருமே
பொங்கு புதன் வியாழனில பூஜை செய்தால்
பூர்வ பாவம் நீங்குமே
மங்கலம் வெள்ளி சனி ஞாயிறில் உன்னையே
மனது வைத்தால் இன்பமே
மங்காத மாதமே வருஷம் சகாப்தமே
மகராஜ திருமால் சுகமே
ஆஞ்சநேயர் வழிபாடு
அஞ்சிலெ ஒன்று பெற்றான் அஞசிலே
ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியற் காக ஏகி
அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் நமை
அளித்துக் காப்பான்.
இராமன் வழிபாடு
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராம வென்றிரண்டெழுத்தினால்
ஸ்ரீ ரெங்கநாதர் வழிபாடு
ஒன்றும் மறந்தறியேன் ஓதநீர் வண்ணனை நான்
இன்று மறப்பேனோ? ஏழை நான்! - அன்று
கருவரங்கத்தும் கிளந்து கை கொழுதேன் கண்டேன்
திருவரங்க மேயான் திசை.
கண்ணன் வழிபாடு
பச்சை மலைபோல் மேனி பவளவாய்க்
கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே ஆயர் தம்
கொழுந்தே என்னும்
இச்சுவை தவிரயான்போய்
இந்திரலோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகருளானே
சக்தி வழிபாடு
நாயகி. நான்முகி, நாராயணி கைநளினபஞ்ச
சாயகி, சாம்பவி, சங்கரி சாமளை சாதிநச்சு
வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று
ஆய, கியாதியுடையாள் சரணம் அரண் நமக்கே. --
August 1, 2014 at 9:47 AM
பச்சை மலைபோல் மேனி...........
கொழுந்தே என்னும்
இச்சுவை தவிரயான்போய் - என திருத்துக