தமிழ் ஜோதிடம் ஜாதகம்

ஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், வாஸ்துசாஸ்திரம் மூலம் வருங்காலம் அறிய "ஸ்வாதி ஜோதிட ஆய்வகம்" உங்களை அன்புடன் வரவேற்கிறது.

எழுதியவை அனைத்தும்

அன்புடையீர்,
வணக்கம்.  இன்று 15-12-2014  நாளை... 16-12-2014
ஆர்வமாக காத்திருந்த ஆன்மீக ஜோதிட ஆர்வலர் வாடிக்கையாளர்களுக்கு மிக்க நன்றி.
இதோ!.. எதிர்பார்த்த சனிப் பெயர்ச்சி பலன்கள்


கேது


இராசி
16-12-2014


செவ்வாய்


வியாழன்
சூரியன்
புதன்
சுக்கிரன்

சனி

ராகு
சந்திரன்
பலன்களுக்குச் செல்லும் முன்பாக கிரகப் பெயர்ச்சிகளின் தினங்கள் சற்றே அறிந்து கொள்ளலாமே..
16-12-2014
விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சி

14-03-2015
விருச்சிக ராசியில்
வக்ர ஆரம்பம்
12-06-2015
துலாசிக்குப் பெயர்ச்சி

11-07-2015
துலா ராசியில்
வக்ர நிவர்த்தி
05-09-2015
விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சி

27-03-2015
விருச்சிக ராசியில்
வக்ர ஆரம்பம்
23-07-2016
விருச்சிக ராசியில்
வக்ர நிவர்த்தி
09-04-2017
விருச்சிக ராசியில்
வக்ர ஆரம்பம்
05-08-2017
விருச்சிக ராசியில்
வக்ர நிவர்த்தி
15-12-2017
தனுசு ராசிக்குப் பெயர்ச்சி

மேஷராசிக்காரர்களுக்கு உளமார்ந்த வணக்கம்
தற்போது அஷ்டமசனி ஆரம்பம். வாழ்க்கையில் ஒரு இறுக்கிப் பிடிக்கும் உணர்வுகள் அண்டவே செய்யும்.  எல்லோரும் சோதனைகளையும், வேதனைகளையும் தாங்கிக் கொள்ளவே வேண்டும்.  மனோதிடமும, தன்னம்பிக்கையும் தங்களுக்கு அதிகம் தேவைப்படும்.  இறை பக்தியாலும், இதயத் துணிச்சலாலும், பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டிய கால கட்டமாகும். 
1.       எதிர்பாராச் செலவினங்கள்.
2.       கால தாமதம். (பணியில், குடும்ப உறவுகளில், நண்பர்களில், அருகாமை அன்பர்களிடம்)
3.       கருத்து மோதல்கள் (முக்கியமாக கணவர் எனில் மனைவியிடம்)
4.       நண்பர்களின், உறவினர்களின் உறவுகளில் ஏமாற்றங்கள்
5.       காதலில் ஒரு அமைதியற்ற பிரச்சனை
6.       கூட்டுக் குடும்பத்தில் பிரச்சனைகள்
7.       மருத்துவச் செலவுகள்.. முக்கியமாக.. ஆஸ்த்மா, மூலம், தலைவலி, கால்வலி..
8.       விபத்துக்கள்.. சிறு சிறு விபத்துக்கள்.. சுளுக்குகள்..
9.       தொழிலில் சிக்கல்கள்.. சக பணியாளர்களுடன் அன்பு மறந்த நிலை
10.   இந்த அனுபவங்கள் பிற்கால வளர்ச்சிக்குரிய தூண்கள்.

மேற்காண் விவரங்கள் சுருக்கமாக இருப்பினும் தாங்கள் விரிவாக்கிக் கொள்ள வேண்டுகிறோம்.  இத்தனை சூழலிருந்து தப்பிக்க இயலாதா.. ஆம்.. முடியாது என்பது எதுவும் கிடையாதே....பிரார்த்தனை.. வழிபாடு.. சுறுசுறுப்பாய் இருத்தல்.. எளியோருக்கு உதவுதல்.. இறையருள் கிடைக்கப் பெற்றால் எதுவும் எளிதாகுமே...
மாதந்தோறும் உங்கள் நட்சத்திரதினத்தன்று, சனீஸ்வர்ரை வழிபட்டு பிரார்த்தனை மேற்கொள்வதோடு, பெருமாளின் பாதக் கமலங்களுக்கு சரணாகதி அடைவதே சிறந்த்து.
மேலும், தங்கள் ஜாதகம் அல்லது பிறந்த நாள் நேரம் இடம் ஆகியவை கொடுத்து பலன்கள் தெரிந்து கொள்ளலாம்.
அடுத்து...
சிம்மராசி...(ஏன் ரிசபம், மிதுனம், கடகம் பலன் எழுதவில்லையே என்ற ஆதங்கமா.. தாங்கள் தற்போது தப்பித்து விட்டீர்கள்.. – இரண்டரை ஆண்டு காலம் சொர்க்கபுரியில்... வாழ்க்கை... கிடைத்த சந்தர்ப்பத்தில் வாழ்க்கையை வளப்படுத்துங்கள்... காற்றுள்ள போதே தூற்றிக் கொள்.. என்போமே... நல்லன நடக்கும் காலம்... கூடவே அதனை அளவீடு செய்ய..அதாவது, வீடு வாங்கலாமா,, ஷேர் மார்க்கட்டா... எதில் முதலீடு நன்மை தரும் ஜாதக ரீதியில் என அவரவர் த்த்தம் ஜாதக வழியில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாமே.. தொடர்புக்கு 9443423897..

சிம்மராசி அன்பர்களுக்கு உளமார்ந்த வணக்கம்.
சிம்ம ராசி க்கு 2014 சனிப் பெயர்ச்சி பலன்கள். (அர்த்தாஷ்டமச் சனி)
பெரியோரிடம் மதிப்பும் மரியாதையும் செலுத்தி வந்த தங்களுக்கு முதல் படியாக பெரியோரை அவமதிக்கும் சிறு சிறு அனுபவங்கள் வந்த விதம் அறிந்தாலே அர்த்தாஷ்டமச் சனியில் பிடியில் வந்துள்ளோம் என்பது நன்றாகப் புரியும்.  பிறருக்கு அடங்கவும், அடிமையாகவும் வாய்ப்பே இல்லை என்றாகிப் பழகிப் போன உங்களுக்கு, தற்போது தலைகீழ் பலனாகத் தெரிகிறதா.. அது தான் இந்த சனிப்பெயர்ச்சியின் பலன். சிங்கத்தினைச் சின்னமாக்க் கொண்டவர்கள் வீட்டில் ராஜாவாக இருந்தீர்களா.. தற்போது என்னவாகி வருகிறது.. சற்றே மாற்றம்..  ஒன்றுக்கும் வகையில்லாதவரிடம் கை கட்டி நிற்கின்ற நிலையா...  உங்களிடம் உள்ள நல்லொழுக்கம், நேர்வழி, நாணயம், செயலில் மும்மரமான ஈடுபாடு, எல்லோருக்கும் எல்லாம் கிடைத்திட உழைப்பேன்... என்பதான ஒரு கொள்கைக்கு வந்தது ஆப்பு.. பிறர் போற்றத் தக்க வாழ்க்கை அமைந்து சந்தோஷப் பட்டது.. தற்போது பிறர் இகழத்தக்க அமைப்பா.. சற்றே காரணம் பார்ப்போமா!..
     அஷ்டமச் சனிக்கு எழுதிய பத்து வரிகளில் ஐந்து வரிகள் தங்களுக்குப் பொருந்தும்... அதாவது,
1.       எதிர்பாராச் செலவினங்கள்.
2.       கால தாமதம். (பணியில், குடும்ப உறவுகளில், நண்பர்களில், அருகாமை அன்பர்களிடம்)
3.       கருத்து மோதல்கள் (முக்கியமாக கணவர் எனில் மனைவியிடம்)
4.       நண்பர்களின், உறவினர்களின் உறவுகளில் ஏமாற்றங்கள்
5.       காதலில் ஒரு அமைதியற்ற பிரச்சனை
முக்கியமான கெடுதல்கள் என்னென்ன.. எனத் தெரிந்து கொண்டால், நாம் முன்னெச்சரிக்கையாக நடவடிக்கைகள் மேற்கொள்ளலாமல்லவா.. ஆம்
இதோ..1. தைரியம் குறைந்து சோர்ந்து காண்ப்பட வாய்ப்பு உள்ளது.
2. தன்னம்பிக்கை இல்லாமல், சரியாகச் சொல்ல வேண்டுமானால் வைரமாய் இருந்த திட மனசு, வைக்கோல் போல் தளர்ந்து விடும்
3. சற்றும் எதிர்பாராத வழக்குகள், வம்புகள் வரட்டுமா என்று வாசலில் காத்திருக்கும்.
4. தேனாகப் பேசியவர்களே தேளாக்க் கொட்டிடுவார்கள்.
5. மங்கையரால் அவமானம் தலைதூக்கலாம்.
6. தன் கையெழுத்து தான்.. தனக்கு எதிராக வாதிடலாம்.
7. கொடுத்த வாக்குறுதிக்காக நாணிக்குறுக வைத்திடலாம்.
.8. பணியில் உள்ளவர்களுக்கு வேண்டாத இடமாற்றங்கள் இம்சை தரலாம்
9. தோல்வியென்பதே என்னென்று தெரியாமலிருந்தவர்க்கு, தோல்வி பயம்..
10விரக்தியால் தொழிலில் நேர்மை குறையலாம்.
11. சோர்வுற்று இருப்பதால், பிற செயல்களில் எண்ணம் செல்லாது..
12. வெட்கத்தில் தலைகுனிந்து திகைக்கின்ற நிலை வரலாம்.
இவையெல்லாம் தங்களின் வருங்கால வாழ்க்கைக்கு வளமூட்ட வருகின்ற பிரச்சினைகளின் பகுதிகள்.. அனுபவங்களை புதிதாகத் தருகின்ற சின்னச் சின்ன எதிர் விளைவுகள்.. என்ற நிலையில் நன்றாகப் புரிந்து செயல்படலாம்.
குறிப்பாக சிம்மராசிக்கார்ர்கள் நினைத்தால் துன்பத்தையும், இன்பமாக மாற்றி விடும் பக்வும் உள்ளவர்கள் தானே.. பிரச்சனைகளைக் கண்டு அஞ்சுவது பெருந்துன்பம்... துன்பங்களை ஏற்று, அதனின்று மீட்டு வாருங்கள்..
வரும் காலங்களில் வக்ர சனி காலமான 2015 மார்ச்சு 15 முதல், ஜீலை 11 வரையிலும், மேலும் 2016 மாச்சு 27 முதல் ஜீலை 23 வரையிலும் கடைசியாக 2017 ஏப்ரல் 9 முதல் ஆகஸ்ட் 5 வரையிலும் உள்ள இந்த கால கட்டத்தில் திருப்பு முனைகள் ஏற்படும்.

மேலும் குருப் பெயர்சிச 2016 ஆகஸ்ட் 2ம் நாளில் தொடங்கி 13 மாதங்கள் இழந்த பெருமைகளை மீண்டும் கொண்டுவந்து சேர்க்கும் என்பதில் ஐயமில்லை.
இனி ஏழரைச் சனி கெடு பலன்கள் தருகின்ற துலாம், விருச்சிகம் மற்றும் தனுசு ராசிகளைப் பார்க்கலாம்...
மற்றபடி, ரிசபம், மிதுனம், கடகம், கன்னி, மகரம், கும்பம், மீன ராசிக்காரர்களுக்கு முன்னேற்ற திருப்பு முனையாக அமையுமாதலால் அவரவர் ஜனன நேரப்படி, உள்ள ஜாதகங்களின் மூலம் முன்னேற்றங்களை அறிந்து செயல்பட உத்தமம்.
இவிடம் தாங்கள் ஜாதக விவரவங்கள் அளித்து பலன்கள்பெற்றுக் கொள்ளலாம். நன்றி.
ஜோதிட தம்பதி
ரெங்கன் உஷா

0 மறுமொழிகள்

Post a Comment

You can contact us for consultation உங்களுக்கு ஆலோசனைகள் தேவைப்பட்டால் எங்களை தொடர்பு கொள்ளவும்.
எங்கள் முகவரி Address
ஜோதிட கலைமாமணி - ஜோதிட தம்பதி உஷா ரங்கன்
27 A (மேல்மாடி) சிவன் மேற்கு ரத வீதி
பாளையம்கோட்டை - 627002
திருநெல்வேலி மாவட்டம்.
தமிழ்நாடு. இந்தியா
Tmt. A. UshaRengan D.Astro.,
Consultant Astrologer,
Swathi Jothidha Aivagam,
27 A, Sivan Koil West Car Street,
Palayamkottai - 627 002
Tirunelveli District.
Tamil Nadu India.
தொலைபேசி: 94434 23897, 94425 86300, 0462 2586300
மின்னஞ்சல்:
tamiljoshier@gmail.com
joshier_urrao@yahoo.com
usharengan@hotmail.com
joshier_usharengan@dataone.in

For Consultation, please visit us or contact us through letter, phone or e mail only. Do not post your questions in the comment.

ஜாதக ஆலோசனை பெற எங்களை நேரில் சந்திக்கலாம். அல்லது கடிதம், தொலைபேசி, மின்னஞ்சலை மூலம் தொடர்பு கொள்ளவும். உங்கள் கேள்விகளை மறுமொழியில் அனுப்ப வேண்டாம் என்று கேட்டு கொள்கிறோம்

தளத்தை செய்தியோடை மூலம் வாசிப்பவர்கள்

வாசகர்கள்

எங்களின் முதன்மை வலைத்தளம். Our Main Web Site

விருந்தினர் வருகை

சமீபத்தில் வந்தவர்கள்

இதை படித்தவர்கள் படித்தது

அதிகம் படிக்கப்பட்டவை