அன்புடையீர்,
சுவஸ்திஸ்ரீ 1191 துர்முகி வருடம் ஆடி மாதம 18ம் நாள் ஆங்கில வரும் 2016 ஆகஸ்ட் மாதம் 02ம் நாள்... செவ்வாய்க் கிழமை நாழிகை 08-33 க்கு அதாவது காலை மணி 09-30க்கு உத்திரம் நட்சத்திரம் 1ம் பாத - சிமம ராசியிலிருந்து, உத்திர நட்சத்திரம் 2ம் பாதம் கன்னி ராசிக்கு குரு பகவான் பிரவேசம் செய்கிறார்... கன்னியில் குரு பகவானின் பலன்கள் மேஷம் முதல் மீனம் வரை 12 இராசிகளுக்கும், வருகிற 02-08-2016 முதல் 01-09-2017 வரை பலன்கள் அறிவோமா....
முக்கிய குறிப்புகள்
1. குருபகவான் அமர்ந்த ராசியிலிருந்து 2,5,7,9,11 ஆகிய இராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் அள்ளித் தருவார். இந்த யோக பலன்கள் ஓராண்டுக்கு மிக்க சுபிட்சமாக அமையும்.
2. பொதுப் புத்திரக்காரகன் குருவினால், முக்கியமாக சந்ததி விருத்தி என்னும் குழந்தை பாக்கியம், குருகடாட்சம் என்னும் படியான வித்தை அபிவிருத்தி அதாவது உயர்கல்வி யோகம், பணியில் உள்ளோர்க்கு பதவி உயர்வு, பொன், பொருள், ஆடை, ஆபரணம், மனை, பூமி, வாகனம், இன்னபிற யோகங்களும், கலைத்துறையினர்க்கு நிதியுடன் கூடிய வாய்ப்புகள் அதிகம் கிடைத்து முன்னேற்றம் காண்பர். கன்னி இராசியின் குருபகவானால், அயல்நாட்டு உறவில் நல்லவிதமான அனுசரிப்புகள், இயற்கை வளங்கள் சிறப்பாக அமையும்.
தொடர்ந்து பலன்கள் காண்போமா...
குருப்பெயர்ச்சி 2016 ஆகஸ்ட் 02 காலை 09-30
மேஷம்
குரு பகவான் தங்கள் ராசிக்கு ஐந்தாம் பாவத்திலிருந்து ஆறாம் பாவத்திற்குச் 02-08-2016
முதல் 01-09-2017 வரை செல்கிறார். வாக்குவாதம், சலசலப்புகள், எதிர்வாதங்கள்,
நேர்மறையாய்ச் செய்கின்ற பணிகளில் கூட எதிர்மறையாய் விளக்கங்கள் கேட்டு
தொந்தரவுகள் என சற்று போட்டி, பகை, பொறாமை, சூது, லஞ்சம், புரோக்கர், கமிஷன் ஆகிய
எண்ணங்களினால் நம்மை வந்து அணுகும் வாடிக்கையாளர்கள் என ஓராண்டு சின்னச் சின்ன
பிரச்சனைகள் துன்பங்கள் தான் எனினும், மேஷராசிக்கார்ர்கள் என்றுமே யாருக்கும்
பணியும் படியான வாய்ப்பைத் தவிர்க்கும் படியாக ராசிநாதனின் அருள் உண்டென்றபோதும்
அஷ்டமச் சனி ஆனதால், செப்டம்பர் 10ல் செவ்வாய் 9ல் வரும் போது தான் நிம்மதிப்
பெருமூச்சு விடமுடியும். குறிப்பாக குருபகவான் 2, 10, 12, ஆகிய வீடுகளைப்
பார்ப்பதால் முறையே, பணவரவு மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு நிம்மதி
கிடைக்கும். சுப நிகழ்ச்சிகள் வாய்ப்பு
உண்டு. அயல்நாட்டு நட்பு மற்றும் உதவிகள்
கிடைக்கும். திடீர்பயணங்களால் ஆதாயங்கள்
உண்டு. புதிய வாகனம் வாங்கும் யோகமும்
உண்டு. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில்
மனதில் ஏற்படும் சோர்வினைக் குறைத்துக் கொள்ளப் பழகிவிட்டால் ஆரோக்கியம் நார்மலாக
இருக்கும்.
சற்று முன்னெச்சரிக்கை தேவை என்பதை நினைவில் கொள்ளவும்.
பரிகாரம்...மாற்றங்களைத் தரும்.
ரிஷபம்
தங்கள் ராசிக்கு 4ம் இடத்திலிருந்து 5ம் இடத்திற்கு வருவதால், பலசாலி என்று
பெயர்எடுக்கும் வகையில் ஆரோக்கியம், அழகு அதிகரிக்க, கல்வியால், பதவியால், மேன்மை
அடைய வாய்ப்பு உண்டு. தந்தை வழிச் சொத்துக்கள்
கிடைக்கவும், தந்தை வழியால் மேன்மை அடையவும் வாய்ப்பு உள்ளது. தங்களின் ராசிக்கு 9 மற்றும் 11 வீடை
குருபகவான் பார்ப்பாதால், இந்த குருப் பெயர்ச்சி தங்கள் இல்லத்தில் இல்லை
என்றுரைக்கும்படியாக இருக்கின்ற, அத்தியாவசியப் பொருட்கள் அனைத்து வாங்கிட வழிவகை
செய்யும். தங்கத்தின் விலையேற்றம் கூட
தங்களை தைரியமாக நகைக் கடைக்கு அழைத்துச் சென்று மகிழ்வினையே தரும். அரசாங்க
ஆதரவு கிடைக்காமல் தவித்து வந்தவர்களுக்கு, உரிய ஆணை மற்றும் ஆவணங்கள்
தங்களுக்கு கிடைத்து பரிபூரண சந்தோஷம் கிடைக்கும். ஐந்தில் குரு என்பது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை
தங்கள் குடும்பத்திற்கு சலுகைகளையும், மகிழ்ச்சியையும், குறிப்பாக வேலையின்மையை
போக்கவும், வருவாயைக் கூட்டவும், மதலீடுகளில் லாபங்கள் ஈட்டவும், பணியிடத்தில்
நிம்மதியையும் தருவதற்கு வருகின்ற குருவை கைநீட்டி வரவேற்கலாம். பதவி உயர்வும் உண்டு. ஜனவரி 17 மற்றும் பிப்ரவரி மாத்த்தில்
வருமானவரி மற்றும் அலுவலகம் சார்ந்த பணிகளில் மிக்க கவனம் தேவை.
பரிகாரம்... குருபகவானை தினம் தினம் தியானித்தால் மகிழ்ச்சி இரட்டிப்பாக்கும்.
மிதுனம்
குரு பகவான் 4ம் வீட்டை வருவதால், பொன், பொருள், ஆடை, ஆபரணச் சேர்க்கை, பூமி, மனை ஆகிய யோகங்கள் முறையே
ஓரிரண்டு பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தில்
அதுவும் தாய் வழியில் தாய் மாமன் வழியில் இருந்து வந்த மனக்கசப்பு தீர வாய்ப்பு
உள்ளது. எட்டாமிடத்தை குரு பார்ப்பதால்,
கணவர் அல்லது மனைவியிடம் ஏற்பட்ட பிணக்குகள் சரியாகும். விட்டுக் கொடுத்துப் போவது மிதுன
ராசிக்க்கார்களாக இருக்கட்டுமே. வீடு
சரிசெய்யவும், பழுதான வாகனங்களைச் சீர்செய்யவும் வாய்ப்புகள் தேடிவரும். குடும்பத்தில் திருமண வயதில் உள்ள மகளுக்கு
திருமண நிச்சயமாகும். ஆரோக்கியத்தைப்
பொறுத்தவரையில் நன்று எனச் சொல்வதற்கில்லை.
குடும்பத்தில் யாரேனும் ஒருவருக்கு மூட்டுவலி, முதுகுவலி பிரச்சனைகள் வந்து
போகும். அலுவலகப் பணியில் உள்ளோர் தனது
முந்தைய கருத்துவேறுபாடுகளைக் களைய பக்குவம் அடைவீர்கள். அதே நேரம் யாரையும் கண்டு அஞ்சவேண்டியதில்லை
என்ற உணர்வு வர மன நிம்மதி மேற்கொள்வீர்கள்.
குல தெய்வ பிரார்த்தனைகள் இவ்வாண்டு கண்டிப்பாக உள்ளது. வரும் பங்குனி உத்திரத்தில், 09-04-2017 ல்
சிறப்பாக சுவாமி தரிசனம் உண்டு. எண்ணிய
காரியங்கள் கைகூட நமக்கு குலதெய்வ வழிபாடு அவசியம் தானே..
பரிகாரம். வியாழக்கிழமைகளில் அசைவ
உணவைத் தவிர்த்து, குரு பகவானின் சிந்தனையை மேற்கொள்ளவும், வயது முதிர்ந்த கல்வி தேர்ச்சி யில்லாதாருக்கு
கல்வி புகட்ட நன்மை கிட்டும்.
கடகம்
குருபகவான் தங்கள் ராசிக்கு 3ஆம் வீட்டிற்குச் செல்வதால், நல்ல முன்னேற்றம் கிடைக்க என்னவெல்லாம் வேண்டும் என்கின்ற அனுபவங்கள் இவ்வாண்டு தங்க்ளுக்கு உண்டு. 3ம் வீடு சற்று மறைவு வீடு என்பதால், தங்களுக்கு, பொருளாதரம் மற்றும் வருவாய் விஷயத்தில் பயமும், பதட்டமும் தொற்றிக் கொள்ளத் தான் செய்யும். தினமும் கணவர் அல்லது மனைவி கடகராசிக்கார்ர்களுக்கு இந்த ஓராண்டு இல்லாத வம்பை விலை கொடுத்து வாங்கிய கதையாக, உறவுகள் வருவார்கள், கலந்துரையாடுவார்கள், இருவருக்கிடையில் குழப்பத்தைத் தந்து விட்டுச் செல்வார்கள்... அது தீர ஒரு மாதமோ ஒரு வாரமோ கூட நீடிக்கும் என்பதால், உறவுகளைப் பாராட்டவும் வேண்டும், குறை கூறவும் வேண்டும்.. வந்த உறவினரை, நீங்கள் எங்கள் விருந்தாளிகள் – உங்களுக்கு மனம் நிறைந்த உபசாரங்கள் என்ற வித்த்தில் கனவனிப்பதுன், உங்கள் முகத்தில் தெய்வ களை உள்ளது என்று பேசி வையுங்கள்.. முதியோர்களுக்கு உணவு தந்து பசியைப் போக்க தங்கள் பிரச்சனைகள் விலகிக் கொண்டேயிருக்கும். முன்கோபம், தடுமாற்றம் இக்காலத்தில் தலை தூக்கும். ரத்த அழுத்தம் பார்த்துக் கொள்வதும், நிறைய தண்ணீர் அருந்துவதும் மிக நல்லது. அலுவலக ரகசிங்களைப் பாதுகாக்கத் தவறினால், அபகீர்த்தி வந்து சேரும். அடுத்தவருக்கு சம்பள உயர்வு வந்தபோதும், தங்களுக்கென்னவோ, 2017 செப்டம்பரில் தான் எதிர்பார்த்த சம்பள உயர்வு என நிம்மதி கொள்க.. பரிகாரம்... தேவை..
குருபகவான் தங்கள் ராசிக்கு 3ஆம் வீட்டிற்குச் செல்வதால், நல்ல முன்னேற்றம் கிடைக்க என்னவெல்லாம் வேண்டும் என்கின்ற அனுபவங்கள் இவ்வாண்டு தங்க்ளுக்கு உண்டு. 3ம் வீடு சற்று மறைவு வீடு என்பதால், தங்களுக்கு, பொருளாதரம் மற்றும் வருவாய் விஷயத்தில் பயமும், பதட்டமும் தொற்றிக் கொள்ளத் தான் செய்யும். தினமும் கணவர் அல்லது மனைவி கடகராசிக்கார்ர்களுக்கு இந்த ஓராண்டு இல்லாத வம்பை விலை கொடுத்து வாங்கிய கதையாக, உறவுகள் வருவார்கள், கலந்துரையாடுவார்கள், இருவருக்கிடையில் குழப்பத்தைத் தந்து விட்டுச் செல்வார்கள்... அது தீர ஒரு மாதமோ ஒரு வாரமோ கூட நீடிக்கும் என்பதால், உறவுகளைப் பாராட்டவும் வேண்டும், குறை கூறவும் வேண்டும்.. வந்த உறவினரை, நீங்கள் எங்கள் விருந்தாளிகள் – உங்களுக்கு மனம் நிறைந்த உபசாரங்கள் என்ற வித்த்தில் கனவனிப்பதுன், உங்கள் முகத்தில் தெய்வ களை உள்ளது என்று பேசி வையுங்கள்.. முதியோர்களுக்கு உணவு தந்து பசியைப் போக்க தங்கள் பிரச்சனைகள் விலகிக் கொண்டேயிருக்கும். முன்கோபம், தடுமாற்றம் இக்காலத்தில் தலை தூக்கும். ரத்த அழுத்தம் பார்த்துக் கொள்வதும், நிறைய தண்ணீர் அருந்துவதும் மிக நல்லது. அலுவலக ரகசிங்களைப் பாதுகாக்கத் தவறினால், அபகீர்த்தி வந்து சேரும். அடுத்தவருக்கு சம்பள உயர்வு வந்தபோதும், தங்களுக்கென்னவோ, 2017 செப்டம்பரில் தான் எதிர்பார்த்த சம்பள உயர்வு என நிம்மதி கொள்க.. பரிகாரம்... தேவை..
சிம்மம்
தங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்திற்கு வருகின்ற குருபகவான் சென்ற ஓராண்டாக
தூக்க மாத்திரை கூட தூக்கம் தராது என்ற நிலையில் மனப்பாரம் சுமக்கும் அளவிற்கு பன்மடங்காக
மன அழுத்தம் தந்து வந்த்து, தற்போது, மனமகிழ்ச்சி என்றாகும் என நம்பிக்கைக்
கொள்ளலாம். இனிதான் ஓராண்டிற்குப் பிறகு
மனமும் உடலும் ஒத்துழைக்கும்... யாரால் அபகீர்த்திக்கு உள்ளானீர்களோ, அவர்களே
வந்து நடந்த்து நடந்தாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என
ஆறுதல் தரும் நேரமிது. பிரிந்து சென்ற உறவுகளை
எண்ணி வருத்தமடைந்தோர்க்கு, இதோ நான் உறவாய் இருக்க தங்கள் கவலைகளை மறந்திடுங்கள்
என நட்பும் உறவாகும் நேரமிது. அழகு கூடும்
நேரமிது. கற்பனை நோய்கள்
எண்ணங்களிலிருந்து விடுபட, உண்மையில் உடல் ஆரோக்கியம் நிறைவாக உணர்வீர்கள். பிள்ளைகளில் பிடிவாதம் மறைந்து போகும். மனக்கசப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த
உறவினர்கள், புதுத் தெம்பை அளிக்கும் விதமான, தங்கள் இல்லத்திற்கு வந்திட வேண்டும்
அன்புக் கட்டளை மூலம் அழைப்பு விடுப்பார்கள்.
எதிர்காலம் என்னவாகுமோ என்றிறிருந்த சிம்ம ராசிக்கார்ர்களுக்கு, இதோ இது
தான் எதிர்காலம் என வளங்கள் அள்ளித் தந்திடும் குருப் பெயர்ச்சி இது. மூத்த அதிகாரிகளே முன்வந்து, கலந்தாலோசித்து,
தங்கள் உயர்வுக்கு இப்படிச் சிந்திக்கலாமே என இமலாய ஆலோசனைகள் நல்குவார்கள்.. இந்த
குருப் பெயர்ச்சி காலம் முழுவதும், தங்கள் கீழ் ஆளுகைக்குட்பட்டதாக உள்ள
உறவினர்கள், விசுவாசிகள், பணியாளர்கள், ஏன் அண்டை அயலார் மற்றும் எதிரான கொள்கைகள்
உடையவர்களுக்குக் கூட அனுசரித்துச் செல்லும் பக்குவம் கடந்த 12 ஆண்டிற்குப் பிறகு
இப்போது தான் வந்துள்ளது. தன் வாழ்நாளில்
பொத்தி பொத்தி காத்து வந்த பல்வேறு ரகசியங்கள் சாதுர்யமாக வெளியிடுவீர்கள். அதனால் நிம்மதி பெருகும். அப்போது பல்வேறு விமர்சனங்கள் வரத்தான்
செய்யும். அதையும் தாண்டி, மேல்மட்ட
பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்கள்... எண்ணம் போல் உயர்வு என்பது பன்மடங்கு உயர்வு
எனக் கொள்ளவும்.
கன்னி
குருபகவான் ராசியிலேயே வருவது சிறந்தது என சான்று பகரவியலாது, எனினும் பார்வை
பலம், கடந்த ஓராண்டு 12மிடத்தில் இருந்த போது பிறர் கண்முன்னே நம்மை நாமே தாழ்த்திக்
கொள்ள காரணமான பல்வேறு செயல்களிலிருந்து விடுதலை கிடைத்து, சீரான செம்மையான
வாழ்க்கை பாதையை வந்தடைவீர்கள். பணியிலும்
சரி, உடல் உள்ள ஆரோக்கியத்திலும் சரி உங்களுக்கு பிணக்குகள் தருவதற்கு உரியதான
பிரச்சனைகளை புதிது புதிதாக துவக்கப்படத் தான் செய்யும். வீடா, அலுவலகமா அல்லது எங்கோ கண்காணத
இடத்திற்குச் சென்று வரலாமா எனப் பல்வேறு குழப்பங்கள் வரத்தான் செய்யும். ஆனால் குரு 9ம் வீட்டைப் பார்க்கிறார்
இல்லையா.. தந்தையார் தன் பிள்ளைக்காக கண்ட கனவுகள் நிறைவேறும். கர்பிணிப்
பெண்கள் பயணங்களை பாதுகாப்புடன் மேற்கொள்ள வேண்டும். இளைய சகோதர சகோதரிகளிடம் இஷ்டப்படி பேசி
வந்த்தை இந்த ஓராண்டு சுருக்கிக் கொள்ளலாமே.... என்னால் முடியும் என்றவாறு உள்ள
பல்வேறு ஆரோக்கியப் பிரச்சனைகள் மருத்துவராலும் முடியாது என்றாகி அலைச்சல்களைத்
தரத்தான் செய்யும். ஆனால் தெய்வத்தால்
முடியும்.. ஆம் பிரார்த்தனையுடன் கூடிய வழிபாடுகள் வருமுன் காக்க வாய்ப்பு
தந்திடும்... உதாரணமாக, தலைசுற்றல், வாந்தி, மயக்கம். மஞ்சட்காமாலை, இரத்த
சிவப்பணு குறைபாடு என பல்வேறு உடல்நலக் குறைபாடுகள் வந்தபோதும், தன் மனோதிடம்
மற்றும் பிரார்த்தனையுடன் கூடிய மருத்துவரின் ஆலோசனை மகத்தான முன்னேற்றம் தரும்...
துலாம்
குருபகவான் 12மிடத்திற்கு வருகிறார்..
தோல்வி மீது தோல்வி வந்து தொட்டுச் செல்லும், அதையும் தாண்டித் தாண்டி
திறமையால் தன்மையை நிலைநாட்டுவோம் என்ற மனதிடம் வேண்டும். செலவுகளை எண்ணிப் பார்க்க வேண்டாம். சேர்த்த பொருளில், (11ல் குரு இருந்த்தால்)
செலவழியும் எனவே உறுதி கொள்க. சிக்கனமாக
இருக்க வேண்டும் என்ற எண்ணம் மனச்சோர்வைத் தந்து, நரம்பு மண்டலப் பாதிப்பைத்
தந்து, சோர்வு மேலும் சோர்வு தந்திட வழி செய்திட வேண்டாமே... உங்கள் பெயரால் எழுப்ப்ப்படும்
வதந்திகளில் ஒரு சதம் கூட உண்மை யில்லாத போது, நீங்கள் அதன் மூலம் அடையவிருக்கும்
அபகீர்த்தியை ஓரளவு புரிந்து வைத்துக் கொண்டால் அதற்குரிய கவலையிலிருந்து
வில்லாம். தாய் வீடு மற்றும் மறைமுக
எதிரிகளின் போக்கு தற்போது தங்களிடமிருந்து விலகிச் செல்வதால், ஓரளவு நிம்மதி
கிடைக்கும். பலமும், பலஹீனமும் அறிந்து
செயல்பட வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். குறிப்பாக
நமக்கு வேண்டாத எதிரிகளை வா வா என்று அழைக்கும் படியான வாய்ப்புகள்
வருமெனில், அதனைத் தவிர்க்க வழிபாடுகள் தான் உகந்த்தாகச் சொல்ல வேண்டியுள்ளது. குறிப்பாக, உத்தியோகத்தில், உடல்
ஆரோக்கியத்தில், உறவினர்களின் பழகுதலில் நம்பிக்கை கொள்ளுங்கள்.. தான் கொள்ளும்
நம்பிக்கை தம்மை பெற்றெடுத்து, வளர்த்து ஆளாக்கும் அம்மா அருகில் இருந்து நம்மை
பாதுகாப்பதான நம்பிக்கையாக அமையப் பார்த்துக் கொள்ளுங்கள். வாழ்க்கையில், குடும்பத்தில்,
நண்பர்களிடத்தில், தங்களின் நடிப்பாற்றலையும், வசீகரப் பேச்சாற்றலையும்
ஓராண்டிற்கு திரையிட்டு மறைத்திடுக...உரிமைகள் கிடைக்கப் போராடி வந்த்தவர்க்ளுக்கு
உரிமை கிடைக்கும். ஏற்கனவே திட்டமிட்ட
பணிகள் சற்று மாறுபாடான வெளிப்பாட்டுடன் முடிவுக்கு வந்தடையும். பரிகாரம்.. தேவை. தேவை..
விருச்சிகம்
குரு பகவான் 11ல்வருகிறார். வந்தது
யோகம். பத்தாமிடத்தில் கடந்த ஓராண்டாக நம் செயலையும், முயற்சிகளையும் வாழ்க்கைத்
துணை கூட நம்பத்தயாராக இன்றி, மனக் கவலையையே தந்த வாழ்க்கை நிலை மாறும். தொட்டதெல்லாம் துலங்குவதால், தாம்பத்திய உறவு
தொடக்கம் அனைத்து வாழ்க்கை நிலைகளிலும் புதுத் தெம்புஉருவாகும். தயக்கமின்றி தருணம் பார்த்து பேசுகின்ற
பேச்சுக்கள் எல்லாம் சக்ஸஸ் ஆகும். ஓராண்டாய் எடுத்த காரியம் கரியாகிப்போனது
மறைந்து, சுபமே உமக்குத்தானே.. என ஆடிப்பாடி மகிழத்தக்க முன்னேற்றம் காணுவர். அரசாங்க அலுவல்களிலே எடுக்கின்ற முடிவுகள்
தீர்க்கமாகவும், அர்த்தமுள்ளதாகவும் அமையும்.
செவ்வாயின் ஆதிக்க கிரகமான விருச்சிக ராசி அன்பர்கள் பலர் ஆளுகின்ற
வல்லமையையும், அரசின் அதிகார, அரசியல் முற்போக்காளர்களாக வலம் வருகின்ற
காரணத்தால், தங்களின் அரிய பணிகளால் தாங்கள் ஆளுகைக்குட்பட்ட பகுதிகள்
சுபிட்சமடையும். தங்கள் பேச்சுக்கு வசீகர சகதியும்,
அண்டை அயலாரின் நன்மதிப்பும் கிட்டும்.
சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் தலைதூக்கும். ஐந்தாவது ஆறாவது முறை என எழுதிவரும் கணக்காயர்
தேர்வுக்கு பயமின்றி சென்று பதக்கங்களை வாங்கும் அளவிற்கு மதிப்பெண்ணுடன் தேர்ச்சி
பெறுவீர்கள். நேர்மையும், திறமையையும்
முதலீடாக்க் கொண்டு இந்த குருப் பெயர்ச்சி காலத்தில் பல்வேறு நல் வழிகள் புரிதலால்,
வரும் 12 ஆண்டுகளுக்குரிய ஒரு வியாழ வட்டத்தின் தொழில் மேன்மையை
திட்டமிடுவீர்கள்.. திருஷ்டி தோஷத்தால் சரும வியாதிகள் மற்றும் முடி கொட்டுதல்
இன்றி மகிழ்வான வாழ்க்கை வாழ முன்யோசனையுடன் நடந்து கொள்ள உத்தமம்.
தனுசு
குருபகவான் 10ம் வீட்டிற்கு வருகிறார்.. ஒரு வேலை என்றே இருந்த அலுவலர்களுக்கு
அடுத்த்து, அடுத்த்து என மூன்று நான்கு வேலைகள் தங்கள் பணிச்சுமையைக் கூட்ட
வந்துசேரும். ஏன் உங்களைச் சோதிக்கத்
தான். அருமை நண்பர் அல்லது தோழியாகட்டும் விடுப்பில் சென்று விட்டு அவர்களின் பணிகளை
தங்கள் பணியையும் பொருட்படுத்தமால் செய்திட உங்களிடம் கருணையுடன் நடிப்பார்கள்...
ஏற்கத் தான் வேண்டிவரும். பின் உங்கள் பணி
கிடப்பில் கிடந்து, இரு இரு உன்னை எங்கே எப்படி காலை வாரவேண்டுமோ அப்படி
வச்சுகிறேன் என்று மனக்கண்ணில் கோமாளியாக்கி வேடிக்கை பார்க்கும். நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைக்கும்
எண்ணங்களை உருவகப்படுத்திக் கொள்வது தான் ஓரே வழி, 2ம் வீட்டைக் குரு பார்ப்பதால் தங்கள் கஷ்டம்
தங்களோடு இருக்கும். வீட்டில் கலகலப்புக்கு குறையொன்றுமில்லை. பழைய நண்பர்கள் உதவியது இனி ஓராண்டுக்கு
உபத்திரவம் தான். புதிய நண்பர்கள் உதவ
வருவார்கள் நம்ப மாட்டோம். பின்,
பணியிடத்தில் பலவாறு குமுறல்லகள் வரத்தான்
செய்யும். தாழ்வு மனப்பான்மை
தலைதூக்கினால் தங்களுக்குத் தலையில் மிளகாய் அரைக்கும் படியாக இன்னல்களை வா வா
என்றழைத்த்து போலாகும். எனவே தைரியமுடன்
விவேகமான நடந்து கொள்வது சாலச்சிறந்த்து. குரு பார்வை பெறும் இடங்களான, மகரம்,
மீனம் மற்றும் ரிசபம் ஆகியவை முறையே தங்கள் ராசிக்கு குடும்ப, ஆரோக்கிய மற்றும்
ரோகஸ்தானங்களாகி வருவதால், குரு பார்த்தல் நன்மை என்ற அமைப்பில் அனுகூலங்கள்
குடும்பத்தினருக்கும், ஆரோக்கிய விஷயத்திலும் நன்மையும் நிம்மதியும் பெறலாம்.
மகரம்
கடந்த ஓராண்டு, குரு பகவான் 8மிடத்தில் அமர்ந்து, சோதனைகளைத் தந்து,
மனச்சோர்வையும், தாழ்வு மனப்பான்மையையும் அதிகரித்த்தால், வாழ்க்கை என்ன முறையில்
முன்னேற்றம் காணலாம் எனத் துடிக்க வைத்தமைக்கு, இந்த குருப் பெயர்ச்சி அதாவது
9மிடத்திற்கு வருவதால், வாழ்க்கைத் தரம் நிச்சயமாக உயரும்படியாக அமையும். அறிவிற்சிறந்த சான்றோரின் நட்பு மற்றும்
ஆசிகளால் இந்த குருப் பெயர்ச்சி துவக்கத்திலேயே மாற்றங்கள் தெளிவாக புரியும். அனுபவ அறிவு கூடும் நேரமிது, உறவினர்கள், சகோதர்ர்களில் வழியில் மதிப்பும்,
பணவரவும் உண்டு. முன்பு நல்ல வாய்ப்பு
தேடிவந்தும் பயன்தராதது போய், தற்போது
சின்ன வாய்ப்பு கூட பெரிய முன்னேற்றம் தந்திடும்.
குரு பகவான் ராசியைப் பார்ப்பதால், புது பதவி, கீர்த்தி, வாக்கு சாதுர்யம்,
விலை உயர்ந்த ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.
ஆரோக்கியம், அழகு கூடும். பொருளாதார நிலை உயரும். குரு 5மிடத்தைப் பார்ப்பதால், குழந்தைகளின்
முன்னேற்றம் மெச்சும் படியாக அமையும்.
உங்கள் திறமைக்கு 12 ஆண்டுகள் கழித்து இந்த சமயம் நல்ல பட்டங்கள் கொடுத்து
கௌரவிக்கப்படுவீர்கள். சில் புதிதாகத்
தொழில் தொழில் தொடங்கவும் வாய்ப்பு உள்ளது.
வியாபரம் மற்றும் தொழில் நிறுவனத்தில் பணியாட்களின் ஒத்துழைப்பு முழுமையாகக்
கிடைக்கும்.
கும்பம்
அட்டம ஸ்தானத்தில் குரு பிரவேசம்... மனதை தைர்யப்படுத்திக் கொள்ள வேண்டியது
தான். வேலையில் முழுக் கவனம் செலுத்திட
வேண்டும். டயரி எழுதிக் குறிப்பெடுத்து,
காலம் தவறாமை மற்றும் உரிய நேரத்தில் உரிய பணிகள் செய்வதில் கவனமாக இருக்க
வேண்டும்.. ஜாமீன் கையெழுத்து, மற்றும்
உரிமைக்கு குரல் கொடுப்போம் என்றவாறு பிரச்சனைகளுக்கு தலைமை தாங்கும் பண்பை
ஓராண்டுக்கு ஒதுக்கி விட வேண்டியது தான்.
முக்கியமாக கைபேசியை பயன்படுத்தும் போது நிதானமாக பயன்படுத்த வேண்டியது
வரும். பிரச்சனைகளை உருவாக்கவே கைபேசி
அலறும்... நிதானம் தேவை. உறவினர்கள் மற்றும் நண்பர்களின் போக்கு நமது கஷ்டங்களை
எதிர்பார்த்து, வேடிக்கை பார்க்கத் தகுந்த செயல்களாகவே அமையும் என்பதால்
முடிவெடுக்கும் திறன் இருப்பினும் இருமுறை யோசனை செய்து கொள்ள வேண்டியது
தான். திடீர் பிரயாணங்கள் தேவையானாலும்,
தள்ளிப் போடுவது நல்லது. வீடு பூட்டிச்
செல்கிறோம், பிறகென்ன பாதுகாப்பு என
அலட்சியப் போக்கு வேண்டாம். நகரமைப்புக்கு
வெளி வீடு அமைந்துள்ளவர்கள் உரிய பாதுகாப்பு அம்சங்களைக் கூட்டிக் கொள்ளவும். குறிப்பாக உடல், மன ஆரோக்கிய பராமரிப்புக்கு
உரிய நேரம் செலவிட வேண்டும்... அதிலும்
உடற்பயிற்சி மற்றும் யோகா அனுஷ்டிப்பது மிக நல்லது. பழைய மருந்து பக்குவப்பட்டது தானே என்று
உங்களுக்கு நீங்களே மருத்துவம் பார்க்க வேண்டாம்.. மறைமுகமான போட்டிகளை சமாளிக்க யுக்திகளை கையில்
வைத்துக் கொள்ளுங்கள். எல்லா நிலையிலும் தன் பாதுகாப்பு முக்கியம் என்பதை மறந்திட
வேண்டாம். தூக்கம் குறைவதனால், நரம்புத்
தளர்ச்சி ஏற்படுமானால் உரிய சத்துக்களை ஆகாராத்தில் சேர்த்துக் கொள்வது
நல்லது. வாரம் இருதினம் வழிபாடு தரமாக
அமைத்துக் கொள்ளவும். ஒரு முறை ஜாதக
கிரகங்கள் அமர்ந்த நிலையில் உள்ளவாறு, ஜன்ன கால கிரகநிலையை ஆய்வு செய்து
கொள்ளவும். மேற்கூறிய விபரங்கள்
தங்களுக்கு எதிர்மறையாகப் பட்டாலும், குரு பார்க்கும் இடங்களால் தங்களுக்கு
ஓரளவுக்கு சமாளிக்கும் திறன் கிட்டும்.
குறிப்பாக விரயங்கள் தடுக்கப்படும்.
குடும்பத்தில் உறுப்பினர்களின் மத்தியில் தன் செல்வாக்கை தொடர்ந்து பேண
முடியும். சிறு சிறு ஆதாயங்கள் வந்து
மகிழ்ச்சி கொள்வீர்கள். அடுத்த
குருப்பெயர்ச்சி அபார நன்மை தரும். பரிகாரம் தேவை.
மீனம்
உங்கள் ராசிக்கு 7ல் குரு பகவான் வருகிறார்.
வெற்றி மீது வெற்றி வந்து சேரும்... அதை வாங்கித் தந்த பெரும் 7மிட
குருவுக்குச் சேரும். முன்னதாக கிடைத்த
அனுபங்களான, அவமானங்கள், நெருக்கடிகள் வெளியில் சொல்ல இயலாத பிரச்சனைகள்
ஓடிப்போகும் நேரம்... அதே போல், நல்ல வாய்ப்புகள், அறிவாற்றல் நிறைந்த அணுகுமுறைகள்
தங்களை நோக்கி பறந்து வரும் காலம் தான். முக்கியஸ்தர்களின் தொடர்புகள்
கிடைக்கும். உற்சாகம்
ஓடிவந்தடையும்.. சோம்பல் தலைதெறிக்க
தங்களை விட்டு ஓடிவிடும். குழந்தை பாக்கியம்
குடும்பத்தில் குதூகலம் சேர்க்கும்.
திருமணம் தள்ளிப் போனவர்களின் முகத்தில் பிரகாசம் தந்து நல்ல வரன் வதூ
வருகையும் திருமணமும் கைகூடும். கணவன் மனைவி கருத்துகள் தேன்போல் தித்திக்கும்.. வாழ்க்கையில் பக்குவப்பட
அனைத்து முறையிலும் ஆதரவுகள் மற்றும் மகிழ்ச்சியான சம்பவங்கள் கோகோர்த்து தங்கள்
இல்லம் தேடி வந்தடையும். சற்று
ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்..
7மிடம் எவ்வளவு சிறப்பாக இருப்பினும் உபய ராசிக்கு பாதக ஸ்தானம் தானே. மறைமுகமாக தனக்குத்தானே, பழைய கவலைகளை எண்ணி
வருந்துவீர்கள்.. பழைய பாடல்கள் சிலவற்றை அடிக்கடி கேட்டு அதில் காணும்
அர்த்தமுள்ள வரிகளை பாடக் கற்றுக் கொள்ளுங்கள். மனபாரம் குறையும்..ஆனமட்டும்
திருஷ்டியிலிருந்து தற்காத்துக் கொள்ள உத்தமம்.
அன்பு நேயர்களே,
முடிந்தவரை கிரகங்களின் சஞ்சாரம் ராசிகளின் அமைப்புகள் மற்றும் எதிர்கால
கிரகமாற்றங்களை கவனத்தில் கொண்டு பலன் தந்துள்ளோம். நிதானமாகப் படித்துப் பொருள் கொள்ளவும்...
நிறைவான முன்னேற்றம் தந்திடும் எங்கள் இறைபிரார்த்தனைகளுடன் ஆசிகளையும் பணிவுடன்
சமர்ப்பிக்கின்றோம்...
குறிப்பாக, குடும்பத்தில் தனிப்பட்ட முறையில், தங்களுக்கு நேர்மறையான
மகிழ்ச்சி வெற்றிகள் குறைந்து, எதிர்மறையான இன்னல்களுடன் சோர்வுகள்
இருக்குமேயானால், பிணிகளை நீக்க மருத்துவரை நாடுவது போல், உள்ளத்து எண்ணங்களால்
வாழ்க்கையில் இடையூறுகள் தராத வண்ணம் உள்ள வலிமையை மேன்மைப்படுத்திக் கொள்ளவும்,
எதிர்காலம் எப்படி எனச் சரியாக கணித்து அறியவும் தொடர்பு கொள்ள அன்புடன்
வேண்டுகிறோம்...
அன்புள்ள,
நா. ரெங்கன் எம்ஏ,பி.எட்., டி.அஸ்ட்ரோ (ஜோதிடவியல்)
அ. உஷா ரெங்கன் பிஏ., (ஜோதிடவியல்) டி.அஸ்ட்ரோ ஜோதிடவியல்.
ஜோதிட தம்பதி...
Post a Comment
You can contact us for consultation உங்களுக்கு ஆலோசனைகள் தேவைப்பட்டால் எங்களை தொடர்பு கொள்ளவும்.
எங்கள் முகவரி Address
ஜோதிட கலைமாமணி - ஜோதிட தம்பதி உஷா ரங்கன்
27 A (மேல்மாடி) சிவன் மேற்கு ரத வீதி
பாளையம்கோட்டை - 627002
திருநெல்வேலி மாவட்டம்.
தமிழ்நாடு. இந்தியா
Tmt. A. UshaRengan D.Astro.,
Consultant Astrologer,
Swathi Jothidha Aivagam,
27 A, Sivan Koil West Car Street,
Palayamkottai - 627 002
Tirunelveli District.
Tamil Nadu India.
தொலைபேசி: 94434 23897, 94425 86300, 0462 2586300
மின்னஞ்சல்:
tamiljoshier@gmail.com
joshier_urrao@yahoo.com
usharengan@hotmail.com
joshier_usharengan@dataone.in
For Consultation, please visit us or contact us through letter, phone or e mail only. Do not post your questions in the comment.
ஜாதக ஆலோசனை பெற எங்களை நேரில் சந்திக்கலாம். அல்லது கடிதம், தொலைபேசி, மின்னஞ்சலை மூலம் தொடர்பு கொள்ளவும். உங்கள் கேள்விகளை மறுமொழியில் அனுப்ப வேண்டாம் என்று கேட்டு கொள்கிறோம்