வைகுண்ட ஏகாதசி மகிமை.
நாராயண ஐயர்
ரெங்கன் – உஷா ரெங்கன் ஜோதிட தம்பதி, பாளை. 9443423897
18-12-2018
செவ்வாய்க்
கிழமை விளம்பி வருடம் மார்கழி மாதம் 03 ம்நாள் வைகுண்ட ஏகாதசி!!
இனிய நந்நாளம்
ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி அன்று பெருமாள் அனந்த சயனத்தில் காட்சியளிக்கும் நந்நாள். “ ஏகாதசியை விஞ்சிய வேறு விரதம் இல்லை ”என்பது பழமொழி. வடமொழியில் ஏகாதசி என்பதை
தமிழாக்கம் செய்தால் அதன் அர்த்தம் பதினொன்று ஆகும். அதாவது வளர்பிறை ஆரம்பித்த
நாள் முதல் (பிரதமை திதி) 11வது நாளாகும். ஆன்மீக விதிமுறைகள் அனைத்திலும் 11வது நாள் அல்லது 11வது முறை என்பது முக்கிய குறிக்கோளாகக்
கொள்ளப்பட்ட எத்தனையோ உதாரணங்கள் உண்டு.
ஏகாதசி
விரதத்தில் கைக் கொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகள் வருமாறு
கர்ம
இந்திரியங்கள் - 5 ஞானேந்திரியங்கள் -5இதனுடன் மனம்கூடினால் - 11 ஆக இந்த 11இந்திரியங்களால் தெரிந்தோ தெரியாமலோ செய்யப்படும்
தீவினைகள் எல்லாம் இந்த 11வது திதி நாளில் விரதம் இருந்தால், அழிந்து விடுவது உறுதி என்பது நம்பிக்கை.
ஏகாதசியன்று பகல் உறக்கமோ, இருவேளையும் சாப்பிடுதல், தாம்பத்ய சேர்க்கை ஆகியவை அறவே ஆகாது. எனவே
ஏகாதசியன்று இந்து சமயத்தவர் திருமண நிகழ்வுகளை தவிர்த்து வருவதும் உண்டு.
ஏகாதசி விரத
விவரங்கள்
1. முதல் நாள் தசமி அன்று பகலில் ஒரு வேணை
மட்டும் உணவு சாப்பிடுதல்.
2. ஏகாதசியன்று அதிகாலையில் எழுந்து, குளித்து விட்டு, பூஜை செய்து விரதம் துவங்க வேண்டும்.
3. ஏகாதசி திதி முழுவதும் உணவு உட்கொள்ளாமல்
இருத்தல் நல்லது. ( தேங்காய், பால், தயிர் போன்றவற்றை பிரசாதமாக அருந்துவதில்
தவறில்லை. மேலும் பழங்கள் சாப்பிடுவதில் தவறில்லை.
4.இரவு முழுவதும் கண் விழித்து, புராண புத்தகங்களைப் படிக்கலாம். பஜனை மூலம்
பகவான் நாமங்கள் உச்சரிக்கலாம்.
5. ஏகாதசிக்கு மறுதினம் துவாதசி நாளாகும். அன்று
உணவு அருந்துவதற்குப் பெயர் பரணை என்பர்.
6. துவாதசியன்று, அதிகாலையில் உப்பு, புளிப்பு முதலிய சுவையற்ற உணவாக சுண்டைக்காய்,நெல்லிக்கனி, அகத்திக் கீரை, இவைகளைச் செர்த்து பல்லில் படாமல் “ கோவிந்தா! கோவிந்தா!!” என்று மூன்று முறை உச்சரித்து, ஆல இலையில் உணவு பரிமாறிச் சாப்பிட்டு
விரதத்தை நிறைவு செய்யலாம்.
7. துவாதசி அன்று உரிய திதி நேரத்தினைக்
கணக்கிட்டு, ஏகாதசி விரதத்தினை நிறைவு செய்ய வேண்டும்.
8. விரதத்தினை நிறைவு செய்வது என்பது, நீர் கூட அருந்தாதவர்கள் துளசி தீர்த்தத்யும், மற்றவர்கள் பகவான் கிருஷ்ணருக்கு தானிய உணவை படைத்து
(பிரசாதமாக) உண்ணலாம். ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பது போலவே விரதத்தை முடிப்பது மிக
மிக முக்கியம். இல்லை எனில், விரதத்தின் முழுப் பயனும் கிடைக்காமல்
போ்ய்விடும்.
9. உணவு சாப்பிடுமுன் பெரியோர்கள் சாப்பிட்டச்
சொல்லி உடன் சாப்பிட வேண்டும். அன்று பகலில் தூங்குவது நல்லதல்ல.
10. குழந்தைகளும், வயது முதிர்ந்தவர்களும் இயலாமையில்
உள்ளவர்களும் விரதம் அனுஷ்டிக்கத் தேவையில்லை.
11. சாஸ்த்திர நூல்களில் கூறப்பட்டுள்ள மேற்காண்
விரத முறைகள் அனுசரிப்பது உடலுக்கும் உள்ளத்திற்கும் நல்லது, சுபம்.
குறிப்பு.. ஆண்டிற்கொருமுறை த்த்தம் உடல், உள்ளம்,
சுற்றுப்புறம் சுத்தம் செய்யும் மார்கழி மாத்த்தினைத் தொடர்ந்து தை மாத்த்தில்
தவறாமல் அவரவர் ஜாதகங்கள் மூலம் எதிர்காலம் எப்படி உள்ளது அறிந்து கொள்ள உகந்த
காலமாக்க் கருதி தை மாத்த்தில் ஜாதக பலன் அறிந்து கொள்ள் உத்தமம்.
மேலும்
விபரங்களுக்கு.. 38 ஆண்டுகளாக ஜோதிடத்துறையில் பல்கலைக்கழகப் பட்டங்களுடன் பாராட்டுகளும்
பெற்றுள்ள - ஜோதிடத் தம்பதியாக இணைய தளம் மூலம் பல்வேறு வெளிநாட்டு வாழ்
மக்களுக்கும் ஆலோசனை வழங்கிவரும் பாளையங்கோட்டை சிவன் மேலத்தெரு எண்.20 ல் உள்ள
ஜோதிடத்தம்பதி நாராயண ஐயர் ரெங்கன், உஷா ரெங்கன் ஆகியோரை அணுகுக. கைபேசி.
9443423897, 9442586300. 0462 2586300 நன்றி.
Post a Comment
You can contact us for consultation உங்களுக்கு ஆலோசனைகள் தேவைப்பட்டால் எங்களை தொடர்பு கொள்ளவும்.
எங்கள் முகவரி Address
ஜோதிட கலைமாமணி - ஜோதிட தம்பதி உஷா ரங்கன்
27 A (மேல்மாடி) சிவன் மேற்கு ரத வீதி
பாளையம்கோட்டை - 627002
திருநெல்வேலி மாவட்டம்.
தமிழ்நாடு. இந்தியா
Tmt. A. UshaRengan D.Astro.,
Consultant Astrologer,
Swathi Jothidha Aivagam,
27 A, Sivan Koil West Car Street,
Palayamkottai - 627 002
Tirunelveli District.
Tamil Nadu India.
தொலைபேசி: 94434 23897, 94425 86300, 0462 2586300
மின்னஞ்சல்:
tamiljoshier@gmail.com
joshier_urrao@yahoo.com
usharengan@hotmail.com
joshier_usharengan@dataone.in
For Consultation, please visit us or contact us through letter, phone or e mail only. Do not post your questions in the comment.
ஜாதக ஆலோசனை பெற எங்களை நேரில் சந்திக்கலாம். அல்லது கடிதம், தொலைபேசி, மின்னஞ்சலை மூலம் தொடர்பு கொள்ளவும். உங்கள் கேள்விகளை மறுமொழியில் அனுப்ப வேண்டாம் என்று கேட்டு கொள்கிறோம்