தமிழ் ஜோதிடம் ஜாதகம்

ஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், வாஸ்துசாஸ்திரம் மூலம் வருங்காலம் அறிய "ஸ்வாதி ஜோதிட ஆய்வகம்" உங்களை அன்புடன் வரவேற்கிறது.

எழுதியவை அனைத்தும்

 

















மஹாளய / பித்ரு பக்ஷம் என்னும் 16 நாட்களிலும் (11-09,2022 - 25.09.2022)
  இறந்து போன அப்பா தாத்தா அவரது அப்பா அம்மா பாட்டி முதலான நமது குடும்பத்தில் நம்முடன் பல காலம் வாழ்ந்து, இறந்த பின்னால், பித்ருக்களாக வாழும் நமது முன்னோர்கள், அனைவரும்  யமதர்மராஜாவால் ஏவப்பட்டு, நம்மைப் பார்த்து ஆசி வழங்க, நம் இருக்கும் பூ லோகம் தேடி வரும் காலமே மஹாளய பக்ஷம் எனப்படும்.


மஹாளய பக்ஷத்தில் பித்ருக்களை பூஜித்து தர்ப்பணம் ஹிரண்யசிராத்தம் செய்து அவர்களுக்கு அன்ன ஆஹாரம் ஜலம் அளித்து அவர்களை ஸந்தோஷப்படுத்த வேண்டும், அப்படி இல்லாமல் எப்போதும்போல் நமது சொந்த வேலையை செய்து கொண்டு இருந்தால் விருந்தாளியை கவனிக்காமல் நமது வேலையை கவனித்துக் கொண்டிருந்தால் விருந்தாளிக்கு எப்படி கோபம் வருமோ அவ்வாறே பித்ருக்களும் நம்மிடம் கோபிப்பார்கள். பித்ரு தாபம் / கோபம் நல்லதல்ல. ஆகவே ஒவ்வொருவரும் தனது சக்திக்குத் தக்கவாறு சிறிய அளவிளாவது மஹாளயத்தைச் செய்ய முயற்சிக்க வேண்டும்.


அத்துடன் பித்ருபக்ஷமான மஹாளய பக்ஷத்தில் சில ஆகார ஆசார நியமங்களையும் கடைப்பிடிக்க வேண்டும். அப்போதுதான் நாம் செய்யும் பார்வண / ஹிரண்ய சிராத்தம் / பித்ருதர்ப்பணம் போன்ற பித்ருக்களுக்கான கர்மாக்கள் முழுப் பலனைத்தரும், அதாவது ஸாதாரண நாட்களில் பற்பல இடங்களிலும் பலதரப்பட்ட உணவை சாப்பிட்டாலும் கூட, மஹாளய பக்ஷம் என்னும் 16 நாட்களிலாவது ஹோட்டல் திருமணமண்டபம் போன்ற வெளி இடங்களில் சாப்பிடாமல் வீட்டில் தாயார் மனைவி ஸஹோதரி ஆகியோர் தயார்செய்த உணவையே சாப்பிட முயற்சிக்க வேண்டும். அதிலும் வெங்காயம், பூண்டு, முள்ளங்கி, முருங்கைக்காய், சுரைக்காய், முட்டைக்கோஸ், கேரட், பீன்ஸ், கத்தரிக்காய், கோவக்காய், நாய்குடை, அரைக்கீரை, முருங்கைக்கீரை போன்ற நிஷித்தமான காய்கறி  கீரை வகைகளையும் சாப்பாட்டில் சேர்ப்பதை  தவிர்க்க வேண்டும்.


பித்ருக்களுக்கு பார்வண / ஹிரண்ய சிராத்தம் / பித்ருதர்ப்பணம் செய்பவரின் மனைவிக்கும் இந்த நியமங்கள் உண்டு, தனது கணவன்தானே தர்ப்பணம் செய்கின்றார், அவர் மட்டும் ஆகார ஆசார நியமத்துடன் இருந்தால் போதுமே, நமக்கு என்ன என்று நினைத்து அலுவலகம் செல்லும் பெண்கள் ஆசாரமின்றி இருக்கக் கூடாது, சாஸ்திரங்களில் கர்த்ருத்வம் என்பது தனி ஒருவரிடம் மட்டுமில்லை. கணவன் மனைவி ஆகிய இருவரிடமும் பரவி இருக்கும் வ்யாஸஜ்ய வ்ருத்தித்வம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே பார்வண / ஹிரண்ய சிராத்தம் / பித்ருதர்ப்பணம் செய்யும் கணவனுக்கு என்ன நியமமோ அதே நியமம் அவரது மனைவிக்கும் உண்டு. அப்போதுதான் ஸம்பூர்ண பலன் கிட்டும்.


மஹாளய பக்ஷம் போன்ற பித்ரு பக்ஷ நாட்களில் பலரையும் அழைத்து பலதரப்பட்ட உணவளித்து நடத்தப்படும் திருமணம் போன்ற மங்கள நிகழ்ச்சிகளையும் தவிர்க்க வேண்டும். குறிப்பாக மஹாளய பக்ஷத்தில் எந்த ஜாதிக்காரரும் எந்தச் சூழ்நிலையிலும் திருமணத்தை நடத்த சாஸ்திரம் அனுமதிக்கவேயில்லை.


ஆகவே மறைந்த நம் முன்னோர்கள் மூலம் நமக்குத் தேவையான மன நிம்மதி, குழந்தைச்செல்வம், கடனின்மை மற்றும் வியாதியின்மை, ஆயுர், ஆரோக்யம் போன்ற பற்பல ஸுகங்களை ஸுலபமாகப் பெறக்கூடிய மஹாளயபக்ஷம் 16 நாட்களிலும் முன் கூறப்பட்ட சில அதம பஷ ஆகார ஆசார நியமங்களை அனுஷ்டித்து பித்ருக்களுக்கு பார்வண / ஹிரண்ய சிராத்தம் / பித்ருதர்ப்பண கர்மாக்கள் செய்து போஜன தாம்பூலம் அளித்து பித்ருக்களை ஸந்தோஷிக்கச் செய்து மன நிம்மதியுடனும் ஆரோக்யத்துடனும் நலமாக வாழ, பித்ருக்கள் ஆசீர்வாதம் பெற அனைவரும் மஹாளய பக்ஷம் அனுஷ்டிக்க வேண்டும்.

ஒரு வருடத்தில் பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்ய வேண்டிய நாட்கள் மொத்தம் தொன்னூற்று ஆறு நாட்கள். இவைகளில் 

மன்வாதி நாட்கள்               14, 

யுகாதி நாட்கள்                     4, 

மாதப்பிறப்பு நாட்கள்         12, 

அமாவாசை                         12, 

மகாளய பட்சம்                   16, 

வ்யதீபாதம்                         13, 

வைத்ருதி                            13, 

அஷ்டகா                               4, 

அன்வஷ்டகா                        4, 

பூர்வேத்யு                              4  ஆக 96 நாட்கள். 


இந்த நாட்களில் செய்யப்பெறும் தர்ப்பணத்தால் பித்ருக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.   அந்தக் காலத்தில் தீ மூட்டி சிரார்த்தமாக நடந்தவை பின்னர் காலத்தின் கோலத்தினால் நீர்க்கடனாக மாறியது.    


6. ஒருவன் தனது தாய் தந்தைக்கு சிரார்த்தம் செய்யாமல் எனக்குச் செய்யும் பூஜைகளை நான் ஏற்றுக் கொள்வதில்லை என விஷ்ணுவும் சிவனும் கூறியுள்ளனர்.


7. நமது பித்ருக்களிடத்தில் சிரார்த்தத்தை சிரத்தையுடன் செய்வதாகவும், நல்ல உயர்ந்த ஆடை, தீர்த்த பாத்திரம் சிரார்த்தத்தில் வாங்கித் தருவதாகவும், பிரார்த்தனை செய்து கொண்டு அவ்வாறே சிரார்த்தத்தை நடத்தினால் நிச்சயம் உங்கள் விருப்பம் நிறைவேறும். விரும்பிய பலன் கைகூடும்.


8. ஒரே நாளில் ஏராளமான பித்ருக்களுக்குத் தனித்தனியாக பல பேர் சிராத்தம் செய்யும்போது சிரார்த்த உணவு அவரவர்களின் பித்ருக்களுக்கு எவ்வாறு சரியான முறையில் சென்றடைகிறது என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படும். இதை கருத்தில் கொண்டுதான் மறைந்த முன்னோர்களின் கோத்ரத்தையும் பெயரையும் தர்ப்பணம் செய்யும்போது சொல்கிறார்கள். இதனால் ஒருவர் கொடுக்கும் தர்ப்பணம் அவரவர்களுக்குச் சரியாகச் சென்றடையும்.


9. மகாளயபட்சம் 15 நாட்களும் பித்ருகளுக்குத் தாகமும், பசியும் மிக அதிகமாக இருக்கும். அதனால் அவர்கள் அருளைப் பெற வேண்டும். அந்த 15 நாட்களில் உறவினர்கள் இறந்து விட்டால் நாம் சிரார்த்தம் செய்ய வேண்டாம் என்று சாஸ்திரம் கூறுகிறது. ஆனால் பிறகு கட்டாயமாகச் செய்ய வேண்டும்.


10. பித்ரு வர்க்கம், மாத்ரு வர்க்கம் பித்ரு காருணீக வர்க்கம் என்று பித்ருக்கள் மூன்று வகைப்படுத்தப்பட்டுள்ளார்கள். அதாவது அப்பா வகையை சார்ந்த பித்ருக்கள் பித்ருவர்க்கம் எனப்படுவார்கள். அம்மா வகையை சார்ந்த பித்ருக்கள் மாத்ருவர்க்கம் எனப்படுவார்கள். சித்தப்பா, மாமா, குரு, நண்பர்கள் காருணீகவர்க்கம் எனப்படுவார்கள். இவர்களை நினைவு கூறித் தர்ப்பணங்களை செய்ய வேண்டும்.


11. நமக்காக எத்தனையோ கஷ்டங்களைத் தாங்கிய நம் பித்ருக்களுக்கு, மகாளபட்சம், அமாவாசை போன்ற நாட்களில் வெங்காயம், பூண்டு, வாசனைத் திரவியங்கள் போன்றவை வேண்டாம்.


12. சாஸ்திரப்படி, சிரார்த்த காரியங்கள் செய்பவர் திருமணம் உள்ளிட்ட விழாக்களிலும் மற்றவர் வீடுகளில் உணவு, உண்ணக்கூடாது.


13. துவாதசி பன்னிரெண்டாம் நாளன்று பித்ரு பூஜை செய்பவன் சொர்ண லாபம் பெறுவான்.

14. தாய், தந்தையின் இறந்த திதிகளை மட்டும் நினைவு கொண்டு தர்ப்பண காரியங்கள் செய்தால் போதும் எனும் பழக்கம் இன்று பலரிடத்தில் ஏற்பட்டுள்ளது. குடும்பத்தில் இறந்த முன்னோர்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து தர்ப்பணக் காரியங்கள் செய்ய வேண்டும். அதுதான் சிறப்பானது. முழுப் பலன்களையும் தரவல்லது.


15. குடும்பத்தில் சன்னியாசம் வாங்கிச் சென்றவர்களுக்கு துவாதசி அன்று மகாளய சிரார்த்தம் செய்வது மிக முக்கியம்.


16. கோவில்கள், குளங்கள், கடல் போன்ற இடங்களில் செய்யப்பெறும் தர்ப்பணங்களுக்கு மிக அதிகமான சக்தி உண்டு.


17. திருவாலங்காடு, திருவள்ளூர், இராமேஸ்வரம், திருமயம் அடுத்து வரும் அரண்மனைப்பட்டி, திருவண்ணாமலை, திருவிடைமருதூர், காசி, திருநள்ளாறு ஆகிய இடங்களில் தர்ப்பணம் செய்வது மிகச் சிறந்தது.


18. திலதர்ப்பணபுரி எனும் ஊரில் (திருவாரூர் பூந்தோட்டம் இடையில் உள்ளது) தர்ப்பணம் செய்வது மிக, மிக விசேஷமாக கருதப்பெறுகிறது. இங்கு ஸ்ரீராமரும் லட்சுமணரும் தம் தந்தையான தசரத மகாராஜாவிற்குத்  தர்ப்பணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


19. மகாளய அமாவாசையில் பித்ருக்களை வழிபடாவிட்டால் திருமணத் தடை, குழந்தை பாக்கியம் இல்லாமை, நோய், வறுமை போன்றவை ஏற்படக்கூடும் என்று கருடபுராணம் கூறியுள்ளது.


20. பூசணிக்காய்க்குள் அசுரன் இருப்பதாக ஐதீகம் உள்ளது. எனவே பித்ரு பூஜை செய்யும்போது பூசணிக்காயைத் தானமாகக் கொடுத்தால், அசுரன் நம்மை விட்டுப் போய் விடுவான் என்று கருதப்பெறுகிறது.


21. தற்கொலை செய்பவர்களின் ஆத்மாக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கலாம். அவர்களுக்குரிய தர்ப்பணம் செய்யும்போது அந்த ஆத்மாக்கள் விஷ்ணுவின் ஆசியைப் பெற வழிவகை ஏற்படும்.


22. மகாளய அமாவாசை தினத்தன்று மறைந்த முன்னோர்களின் படங்களுக்குத் துளசி மாலை அணிவிப்பது நல்லது.


23. மகாளய அமாவாசை தினத்தன்று பசுவுக்குக் கீரை கொடுத்தால், அது மறைந்த உங்கள் தாத்தாவுக்கு தாத்தாவுக்கும் (அவர்கள் மறுபிறவி எடுத்திருந்தாலும்) போய் உரிய பலன்களைக் கொடுக்கும்.


24. மகாளய அமாவாசை நாட்களில் எக்காரணம் கொண்டும் மறைந்த முன்னோர்களைத் திட்டவோ, விமர்சனம் செய்யவோ கூடாது.


25. மகாளய அமாவாசை நாட்களில் மோட்சதீபம் ஏற்றி வழிபட்டால் பித்ருக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.


26. ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் மற்றும் ஜென்ம நட்சத்திரத்தில் தர்ப்பணம் செய்ய வேண்டியதிருந்தால் எள்ளுடன் அட்சதையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


27. தர்ப்பணத்தை எப்போதும் கிழக்கு முகமாக பார்த்தபடி தான் கொடுக்க வேண்டும்.


28. மகாளய பட்சத்தின் 15 நாட்களும் அன்னதானம், புதிய உடை தானம் செய்வது மிக, மிக நல்லது.


29. தர்ப்பணத்தில் பயன்படுத்தும் தர்பணப்புல் கேது கிரகத்துக்கு உரியதாகும். தர்ப்பைக்கு நாம் எந்த அளவுக்கு மரியாதை கொடுக்கிறோமோ, அந்த அளவுக்கு அது கேதுபகவான் மூலம் பலன்களை பெற்றுத்தரும். குறிப்பாகப் பெரியவர்களின் தொடர்பு கிடைக்கும்.


30. பசு மாடுகள் கட்டப்பட்ட தொழுவத்தில் இருந்தபடி சிரார்த்தம் செய்வது அளவற்ற பலன்களைத் தரும்.


31. தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் நடைபெறும் நாட்களில் அவை முடியும் வரையில் அதைச் செய்பவர் பால், காபி முதலிய எதையும் சாப்பிடக் கூடாது.


32. முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த நீரை மற்றவர் கால்களில் மிதிக்கும்படி கொட்டக் கூடாது.

0 மறுமொழிகள்

Post a Comment

You can contact us for consultation உங்களுக்கு ஆலோசனைகள் தேவைப்பட்டால் எங்களை தொடர்பு கொள்ளவும்.
எங்கள் முகவரி Address
ஜோதிட கலைமாமணி - ஜோதிட தம்பதி உஷா ரங்கன்
27 A (மேல்மாடி) சிவன் மேற்கு ரத வீதி
பாளையம்கோட்டை - 627002
திருநெல்வேலி மாவட்டம்.
தமிழ்நாடு. இந்தியா
Tmt. A. UshaRengan D.Astro.,
Consultant Astrologer,
Swathi Jothidha Aivagam,
27 A, Sivan Koil West Car Street,
Palayamkottai - 627 002
Tirunelveli District.
Tamil Nadu India.
தொலைபேசி: 94434 23897, 94425 86300, 0462 2586300
மின்னஞ்சல்:
tamiljoshier@gmail.com
joshier_urrao@yahoo.com
usharengan@hotmail.com
joshier_usharengan@dataone.in

For Consultation, please visit us or contact us through letter, phone or e mail only. Do not post your questions in the comment.

ஜாதக ஆலோசனை பெற எங்களை நேரில் சந்திக்கலாம். அல்லது கடிதம், தொலைபேசி, மின்னஞ்சலை மூலம் தொடர்பு கொள்ளவும். உங்கள் கேள்விகளை மறுமொழியில் அனுப்ப வேண்டாம் என்று கேட்டு கொள்கிறோம்

தளத்தை செய்தியோடை மூலம் வாசிப்பவர்கள்

வாசகர்கள்

எங்களின் முதன்மை வலைத்தளம். Our Main Web Site

விருந்தினர் வருகை

சமீபத்தில் வந்தவர்கள்

இதை படித்தவர்கள் படித்தது

அதிகம் படிக்கப்பட்டவை