தமிழ் ஜோதிடம் ஜாதகம்

ஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், வாஸ்துசாஸ்திரம் மூலம் வருங்காலம் அறிய "ஸ்வாதி ஜோதிட ஆய்வகம்" உங்களை அன்புடன் வரவேற்கிறது.

எழுதியவை அனைத்தும்

#ஆடி_ஸ்பெஷல் !*

*ஆடி மாத சிறப்புகள் தொடர்பான 40 குறிப்புகள் வருமாறு:-*

1. ஆடி மாதம் பிறந்ததும் தட்சணாயனம் ஆரம்பமாகிறது. ஆடி முதல் மார்கழி வரை தட்சணாயன காலமாகும்.

2. இந்த புண்ணிய கால கட்டங்களில் புனித நதிகளில் நீராடுவது மிகவும் விஷேம்.

3. ஆடி மாதத்தைக் கணக்கிட்டுத்தான் பண்டிகைகளின் தொடக்கம் ஏற்படுகிறது.

4. ஆடி மாதம் முழுவதும் கிராமப்புறத்தில் காவல் தெய்வமாக விளங்கும் மாரியம்மன், அய்யனாரப்பன், மதுரை வீரன், மாடசாமி, கருப்பண்ணசாமி போன்ற கிராம தேவதைகளுக்கு பூஜைகளும், விழாக்களும் நடைபெறும்.

5. ஆடி மாதத்தில் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் பன்னிரண்டு நாட்கள் அம்மனின் ஆடி தபசு திருநாள் மிகக் கோலாகலமாக கொண்டாடப் படுகிறது. ஹரியும் சிவனும் ஒன்றே என்ற தத்துவத்தை உலகிற்கு உணர்த்த இந்த விழா நடத்தப்படுகிறது.

6. ஆறு, மக்களின் ஜீவ நாடியாதலால், அதில் ஆடி மாதம் புதுநீர் வருவதைக் கொண்டாடுவது பல நூற்றாண்டுகளாக தமிழர் மரபாக உள்ளது.

7. ஆடி மாதத்தில் சிவனின் சக்தியை விட பார்வதியின் சக்தி அதிகமாக இருக்கும் என்பது ஐதீகம்.

8. தமிழ் மாதங்களில் ஆடி மாதத்தில் தான் அதிகபட்ச அளவுக்கு அம்மன் கோவில்களில் திருவிழா நடக்கிறது. எனவே ஆடி மாதத்துக்கு அம்மன் பக்தர்களிடம் தனி மரியாதை உண்டு.

9. கேரளாவில் ஆடி மாதத்தை  இராமாயண மாத மாக அம்மாநில மக்கள் கருதுகிறார்கள்.

10. ஆடி அமாவாசை அன்று மறைந்த 
முன்னோர்களுக்கு பிதுர் கடமைகளை செய்தால், ஆண்டு முழுவதும் பித்ருக்களுக்கு கடன் கொடுத்த பலன் கிடைக்கும்.

11. ஆடி பவுர்ணமி தினத்தன்று தான் ஹயக்ரீவர் அவதாரம் நிகழ்ந்தது. எனவே ஆடி பவுர்ணமி தினத்தன்று வைணவ தலங்களில் சிறப்பு வழிபாட நடைபெறும்.

12. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் அம்மனுக்கு பல வித காய்கறிகளால் ஆன கதம்ப சாதத்தை படைப்பது ஐதீகமாக உள்ளது.

13. ஆடி மாதம் சுக்ல தசமியில் திக் தேவதா விரதம் இருக்க வேண்டும். அன்று திக் 
தேவதைகளை அந்தந்த திக்குகளில் வணங்கி பூஜித்தால் நினைத்தது நடக்கும்.

14. ஆடி மாதம் சுக்லபட்ச ஏகாதசி முதல் கார்த்திகை மாத சுக்லபட்ச ஏகாதசி வரை மாச உப வாசம் இருப்பது குடும்பத்தில் அமைதி ஏற்படுத்தும்.

15. ஆடி மாதம் கிராம தேவைதை கோவில்கள் உள்பட திறக்காத எல்லா கோவில்களும் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

16. ஆடி செவ்வாய்க்கிழமைகளில் கோவிலில் எலுமிச்சம் பழ விளக்கு ஏற்றினால் கூடுதல் பலன்கள் கிடைக்கும். ஆனால் எலுமிச்சம் பழ விளக்குகளை ஒரு போதும் வீட்டில் ஏற்றக் கூடாது.

17. ஆடி மாதம் வளர்பிறை துவாதசி நாளில் தொடங்கி கார்த்திகை மாதம் வளர்பிறை துவாதசி நாள் வரை பெண்கள் துளசி பூஜை செய்து வந்தால், நினைத்தது நடைபெறும். வீட்டில் சகல செல்வங்களும் குவியும்.

18. கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை என்ற ஊரில் முருகன் கோவில் உள்ளது. ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அங்குள்ள முருகனுக்கு கூடை, கூடையாக மலர்களை கொட்டி மலர் அபிஷேகம் செய்வார்கள். இதை அந்த பகுதி மக்கள் ஆடியில் மலர் முழுக்கு, அழகு வேல்முருகனுக்கு என்று சொல்வார்கள்.

19. ஆடிப்பெருக்கு திருவிழா ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் விமரிசையாக நடைபெறும். அப்போது பெருமாள் மண்டபத்துக்கு எழுந்தருள்வார்.

20. ஆடி மாதம் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் காமாட்சியை வணங்கினால் திருமண தடைகள் விலகி சுபம் உண்டாகும்.

21. ஆடி மாதம் முழுவதும் மீனாட்சியை வழிபட்டால் குடும்பத்தில் அமைதி ஏற்படும்.

22. ஆடி மாதம் முத்து மாரியம்மனை மனம் உருக வழிபட்டால் திருஷ்டிகள் விலகி விடும்.

23. ஆடி மாதம் சுக்ல துவாதசியில் மகா விஷ்ணுவை நினைத்து விரதம் இருந்தால் செல்வம் பெருகும்.

24. ஆடி மாதம் சுக்ல பட்ச ஏகாதசி தினத்தன்று அன்னதானம் செய்தால் சகல பாக்கியங்களும் கிடைக்கும்.

25. ஆடி மாதம் சுக்லபட்ச திரயோதசியில் பார்வதி தேவியை நினைத்து விரதம் இருந்தால் நினைத்தது நடக்கும்.

26. கஜேந்திரன் என்ற யானையை முதலை கவ்வியபோது அந்த யானை ஆதிமூலமே என்ற கதற உடனே திருமால் சக்ராயுதத்தை ஏவி யானையை காப்பாற்றினார். இதனை நினைவுப்படுத்தும் வகையில் ஆடி மாதம் எல்லா திருமால் தலங்களிலும் கஜேந்திர மோட்ச வைபவம் நடத்தப்படுகிறது.

27. ஆடி மாதம் ஏகாதசி, துவாதசி நாட்களில் அரச மரத்தை சுற்றி வந்து வழிப்டால் வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.

28. தஞ்சாவூரில் நிசும் சூதனி உக்கிர காளியம்மன் கோவில் உள்ளது. ஆடி பதினெட்டாம் பெருக்கு தினத்தன்று தஞ்சை மாவட்ட கிறிஸ்தவர்கள் அங்கு ரொட்டி, ஆட்டுக்கறி படையலிட்டு வழிபடுவதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

29. ஆடி மாத வெள்ளிக் கிழமைகளில் மகாலட்சுமியை வழிபட்டால் வீட்டில் செல்வம் சேரும்.

30. ஆடி மாதம் ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை அம்மனை ஆவாகனம் செய்து வீட்டுக்கு வரவழைத்து வழிபடுவது சிறப்பை தரும்.

31. ஆடி மாதம் குத்துவிளக்கை லட்சுமியாக பாவித்து அலங்கரித்து வழிபடுதல் வேண்டும்.

32. ஆடி மாதம் அம்மனுக்கு பால் பாயாசம், சர்க்கரைப் பொங்கல் வைத்து வணங்குதல் வேண்டும்.

33. அம்மனை வழிபடும் போது மறக்காமல் லலிதாசகஸ்ர நாமம் சொல்ல வேண்டும்.

34. ஆடி மாதம் வீட்டில் சிறப்பு பூஜைகள் செய்யும் போது சிறு பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து, உணவு கொடுத்து, ரவிக்கை, சீப்பு, குங்குமச்சிமிழ், கண்ணாடி, வளையல், தாம்பூலம் கொடுக்க வேண்டும்.

35. ஆடிப்பூரத்தன்று ஆண்டாள் பிறந்தாள் என்பது உங்களுக்குத் தெரிந்து இருக்கும். ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவிலில் ஆடிப்பூரத்தன்று ஆண்டாளை நந்தவனத்துக்கு எழுந்தருள செய்வார்கள். அப்போது திருப்பாவை, நாச்சியார் திருமொழி, திருப்பல்லாண்டு பாசுரங்கள் பாடப்படும். இதனால் ஆண்டாள் மனம் குளிர்ந்து இருப்பாள். அந்த சமயத்தில் ஆண்டாளை வழிபட்டால், உங்களது எல்லா பிரார்த்தனைகளும் நிறைவேறும்.

36. ஆடி மாதம் அம்மனுக்கு சாற்றப்படும் வளையல் களைப் பெண்கள் அணிந்து கொண்டால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், சகல நலன்களையும், நீங்காத செல்வத்தை பெறலாம் என்பது ஐதீகம்.

37. ஆடி மாத வெள்ளிக் கிழமைகளில் அதிகாலையில் எழுந்து குளித்து, தூய ஆடை அணிந்து, சாணத்தைப் பிள்ளையாராகப் பிடித்து, செவ்வரளி, செம்பருத்தி, அறுகு கொண்டு சூர்யோதயத்திற்கு முன்னர் விநாயகரை பூஜிக்க வேண்டும். வாழையிலை மீது நெல்லைப்பரப்பி அதன் மீது கொழுக்கட்டை வைத்து விநாயகரை வழிபட செல்வம் கொழிக்கும்.

38. ஆடி மாதத்தை “பீடை மாதம்” என்று ஒதுக்குவது, அறியாமையால் வந்த பழக்கம். உண்மையில், “பீட மாதம்” என்றுதான் பெயர். அதாவது மனமாகிய பீடத்தில் இறைவனை வைத்து வழிபடவேண்டிய மாதம் என்பதே சரியானது.

39. ஆடி பவுர்ணமியன்று சிவபெருமானுக்கு திரட்டுப்பால் அபிஷேகம் செய்து, கருப்புப் பட்டாடை, நூறு முத்துக்கள் கோர்த்த மணிமாலை, கருஊமத்தம் பூமாலை அணிவித்து, மூங்கில் அரிசிப் பாயாசம் படைத்து வழிபட்டால் எப்பேர்ப்பட்ட பகையும் விலகும்.

40. பொதுவாகவே வெள்ளிக் கிழமைகள் அம்பாளுக்குரிய சிறந்த நாட்களாகும். இதனோடு அயனத்துக்குரிய சிறப்பும் சேருவதால் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக் கிழமைகள் அம்பாளுக்குத் தனிச்சிறப்பு கொண்டவையாகக் கருதப்படுகின்றன.

ஓம் சக்தி ! பராசக்தி !

கிரகண கால தற்பண விபரம்

ஶ்ரீசார்வரிவருஷ ஆனி மாதத்தில் வரும் சூர்யக்ரஹண புண்யகால தர்ப்பணம்.
21-06-2020 ( ஞாயிற்றுக்கிழமை) அன்றுகாலை(10.40க்கு மேல் 1.00மணிக்குள்)
ஸ்னானம் செய்து விட்டு மடி உடுத்தி தர்பணம் செய்யவும். முதலில் ஆசமனம்.
அச்யுதாய நமஹ அனந்தாய நமஹ கோவிந்தாய நமஹ கேசவ ,நாராயண மாதவ, கோவிந்த, விஷ்ணு
மதுஸூதன த்ரிவிக்ரம, வாமனா ஶ்ரீதரா ஹ்ரிஷீகேச.பத்மநாபா தாமோதரா. பவித்ரம்
(மூண்று புல்)வலது கை பவித்ர விரலில் போட்டு கொள்ளவும்.

இரன்டு கட்டை தர்பம் காலுக்கு அடியில் போட்டு கொள்ளவும். ஜலத்தால் கை
அலம்பவும்.மூன்று கட்டை தர்பம் பவித்ரத்துடன் வைத்து கொள்ளவும்.
சுக்லாம்பரதரம் விஷ்ணும் சஸீவர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் சர்வ
விக்ண உபசாந்தயே.

ஒம்பூஹு ஓம்புவஹ ஓம் சுவஹ;ஓம் மஹஹ ஓம் தபஹ ஓகும் சத்யம் ஓம் தத் ஸ
விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோனஹ ப்ரசோதயாத்.ஓமாபோ ஜோதீ ரஸோ
அம்ருதம் ப்ர்மஹ ஓம் பூர்புவசுவரோம்.

மமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத் துவாரா ஶ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்தம்

அபவித்ர பவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபிவா யஸ்மரேத் புன்டரீகாக்ஷம் சபாஹ்யா
அப்யந்தரஹ சுசிஹி மானசம் வாசிகம் பாபம் கர்மனா ஸமுபார்ஜிதம் ஶ்ரீ
ராம ஸ்மரணே னைவ வ்யபோஹதிஹி ந ஸம்சயஹ ஸ்ரீ ராம ராமராம திதிர்
விஷ்ணு ததா வார: நக்ஷத்ரம் விஷ்ணுரேவச

யோகஸ்ச கரணஞ்சைவ சர்வம் விஷ்ணு மயம் ஜகத் ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த அத்ய
ஸ்ரீ பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோராஞ்யயா ப்ரவர்தமானஸ்ய ஆத்ய ப்ரம்மண: த்வதீய
பரார்தே ஷ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டா விம்சதீ தமே கலியுகே ப்ரதமே
பாதே

ஜம்பூத்வீபே பாரத வருஷே பரதஹ் கண்டே மேரோ: தக்ஷினே பார்ஸ்வே ஷகாப்தே அஸ்மின்
வர்தமானே வ்யவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே சார்வரி நாம
ஸம்வத்ஸரே உத்தராயணே க்ரீஷ்ம ருதெள மிதுன மாஸே…க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம்
புண்ய திதெள பானு வாஸர யுக்தாயாம் ம்ருகசிரா நக்ஷத்ர யுக்தாயாம் விஷ்ணு யோக
விஷ்ணு கரண ஏவங்குண விஷேஷன விஷிஷ்டாயாம் அஸ்யாம் வர்தமானாயாம் அமாவாஸ்யாயாம்
புண்ய திதெள

(பூணல் இடம்) ப்ராசீணாவீதி ………….கோத்ராணாம் வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம்
அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் (தாயார் இல்லாதவருக்கு மட்டும்)

வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் மாத்ரு பிதாமஹீ ப்ரபிதாமஹீனாம் ( பின்
வரும் மந்திரத்தை தாயார் இருப்பவர் சொல்லவும்)
வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பிதாமஹீ, பிதுர் பிதாமஹீ
பிது:ப்ரபிதாமஹீனாம் தாயார் பிறந்த கோத்ரம்

சொல்லவும் …………கோத்ராணாம்…………. வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் சபத்னீக
மாதா மஹ மாது:பிதாமஹ: மாது:ப்ரபிதாமஹானாம் உபய வம்ஸ பித்ரூணாம்ச அக்ஷய
த்ருப்த்யர்தம் சூர்யோபராக புண்யகாலே சூர்யோபராக புண்ய கால ஸ்ராத்தம் தில
தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே
.
கையில் பவித்ரதுடன் இருக்கும் கட்டை பில்லை மட்டும் கீழே போடவும்.பூணல் வலம்
போட்டு கொள்ளவும். கையை ஜலத்தால் துடைத்து கொள்ளவும

பூணல் இடம்: தர்பை கூர்ச்சம் தெற்கு நுனியாய் ஸம்ப்ரதாயப்படி போட்டு ஆள்
காட்டி விரல் தவிர மற்ற விரல்களால் கருப்பு எள் எடுத்துகொண்டு ஆவாஹனம்
செய்யவும் .. “ஆயாத பிதரஸ் ஸோம்யா கம்பீரை:பதிபிஹி பூர்வைஹி ப்ரஜாம் அஸ்மப்யம்
தததோ ரயிஞ்ச தீர்காயுத்வஞ்ச ஸதஸாரதஞ்ச”

அஸ்மின் கூர்சே வர்க்க த்வய பித்ரூன் த்யாயாமி ஆவாஹயாமி சொல்லி எள்ளு
போட்டு ஆவாஹனம் செய்யவும்
.
ஆஸன மந்த்ரம்: ஸக்ருதாச் சின்னம் பர்ஹிஹி ஊர்னாம்ருது ஸ்யோனம் பித்ருப்யஸ்த்வா
பராம்யஹம் அஸ்மின் ஸீதந்துமே பிதரஸ் ஸோம்யா: பிதாமஹா: ப்ரபிதாமஹா:ச அனுகை ஸஹ.

என்று சொல்லி வர்க்க த்வய பித்ரூனாம் இதமாஸனம் என்று சொல்லவும்மூன்று
தர்ப்பத்தை கூர்ச்சம் பக்கத்தில் வைக்கவும்.

வர்கத்வய பித்ருப்யோ நமஹ என்று சொல்லி கருப்பு எள்ளு எடுத்து ஸகல ஆராதனைஹி
ஸ்வர்சிதமென்று சொல்லி கூர்ச்சத்தில் போடவும். ப்ராசீனாவீதியாய் தர்பணம்
செய்யவும்.

1.1: உதீரதாம் அவர உத்பராஸ: உன்மத்யமாஹா பிதரஹ ஸோம்யாஸஹ அசூம்ய ஈயுஹு அவ்ருகா
ரிதக்ஞா ஸ்தேனோ வந்து பிதரோ ஹவேஷூ…………கோத்ரான் ……..ஷர்மனஹ வசுரூபான் பித்ரூன்
ஸ்வதா நமஸ் தர்பயாமி.

1.2: அங்கிரஸோன: பிதரோ நவக்வா அதர்வானோ ப்ருகவஸ் ஸோம்யாஸஹ தேஷாம் வயம் ஸுமதெள
யக்ஞியானா மபி பத்ரே ஸெளமனஸே ஸ்யாம ……….கோத்ரான்……சர்மனஹ வசுரூபான் பித்ரூன்
ஸ்வதா நமஸ் தர்பயாமி.

1.3: ஆயந்துன: பிதர: ஸோம்யாஸ: அக்னிஷ் வாத்தா:பதிபிர் தேவயானை: அஸ்மின் யக்ஞே
ஸ்வதயா மதந்து அதி ப்ருவந்து தே அவந்து அஸ்மான் ………….கோத்ரான்……….ஸர்மணஹ
வசுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

2.1: ஊர்ஜம் வஹந்தீ ரம்ருதம் க்ருதம் பயஹ கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த
தர்பயதமே பித்ரூன். ………….கோத்ரான் ………..சர்மணஹ ருத்ரரூபான் பிதாமஹான் ஸ்வதா
நமஸ் தர்பயாமி
2.2.: பித்ருப்யஸ் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நமஹ பிதா மஹேப்யஸ் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா
நமஹ ப்ரபிதா மஹேப்யச் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நமஹ …………கோத்ரான்……….ஸர்மனஹ ருத்ர
ரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

2.3: யே சே ஹ பிதரோ யே ச நேஹ யாகும்ச்ச வித்ம யாகும் உசன ப்ரவித்ம அக்னே தான்
வேத்த யதிதே ஜாத வேத ஸ்தயா ப்ரதக்குஸ் ஸ்வதயா மதந்தி. ………….கோத்ரான்……….ஸர்மணஹ
ருத்ர ரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

3.1: மது வாதா ரிதாயதே மது க்ஷரந்தி ஸிந்தவ:மாத்வீர் நஸ்ஸந்த் வோஷதீ
……………கோத்ரான்…………..ஸர்மணஹ ஆதித்ய ரூபான் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

3.2: மது நக்த முதோஷஸீ மது மத் பார்த்திவகும் ரஜ; மது த்யெள ரஸ்து ந:பிதா
………கோத்ரான்……….சர்மணஹ ஆதித்ய ரூபான் ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
.
3.3.: மது மான் நோ வனஸ்பதிர் மது மாகும் அஸ்து சூர்யஹ மாத்வீர் காவோபவந்து
ந:………..கோத்ரான் ………….ஸர்மனஹ ஆதித்ய ரூபான் ப்ரபிதா
மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி \

மாத்ரூ வர்க்கம்: …………….கோத்ராஹா……….தாஹா வஸு ரூபாஹா மாத்ரூ:ஸ்வதா நமஸ்
தர்பயாமி…….மூன்று முறை

கோத்ராஹா………….தாஹா ருத்ர ரூபாஹா பிதாமஹி ஸ்வதா நமஸ். தர்பயாமி மூன்று முறை;

கோத்ராஹா……….தாஹா ஆதித்ய ரூபாஹா ப்ரபிதாமஹி ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை.

மாதா மஹ வர்க்கம் தர்பணம்:

1.1…கோத்ரான்………ஸர்மனஹ வசு ரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

1.2 கோத்ரான் ………..சர்மனஹ வசு ரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

1.3…கோத்ரான்………ஸர்மனஹ வசு ரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

2.1கோத்ரான்………ஸர்மனஹ ருத்ர ரூபான் மாதுஹு பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

2.2 …கோத்ரான்……..ஸர்மனஹ ருத்ர ரூபான் மாது: பிதாமஹான் ஸ்வதா நமஸ்
தர்பயாமி.2.3கோத்ரான்…..ஸர்மனஹ ருத்ர ரூபான் மாது: பிதாமஹான் ஸ்வதா நமஸ்
தர்பயாமி.

3.1 கோத்ரான்…….ஸர்மனஹ ஆதித்ய ரூபான் மாது: ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
3.2..கோத்ரான்……..ஸர்மனஹ ஆதித்ய ரூபான் மாது: ப்ரபிதா மஹான்.. ஸ்வதா நமஸ்
தர்பயாமி

3.3…கோத்ரான்………..ஸர்மனஹ ஆதித்ய ரூபான் மாது:ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ்
தர்பயாமி.

…………..கோத்ராஹா………….தாஹா வசு ரூபாஹா மாதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை

……………கோத்ராஹா…………..தாஹா ருத்ர ரூபாஹா மாதுஹு பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி
மூன்று முறை
 …………கோத்ராஹா…………..தாஹா ருத்ர ரூபாஹா மாதுஹு பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி
மூன்று முறை

……….கோத்ராஹா……..தாஹா ஆதித்ய ரூபாஹா மாதுஹு ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி
மூன்று முறை.

ஞாத அஞ்ஞாத வர்க த்வய பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை

ஊர்ஜம்







*ஜோதிடம்:*

*சூரிய கிரஹணத்தைப் பற்றி  3 செய்திகள்*
இப்போது உங்களுக்கு தலைக்கு மேலே எவ்வளவு வேலை இருந்தாலும் அதை ஒதுக்கி வைத்து விட்டு இதைப் படியுங்கள்... மூன்று நிமிடங்கள்! மூன்று விஷயம்!.!
கொரோனாவுக்கு விடிவு காலம் வந்து விட்டது,

சென்னையில் வசிக்கும் நான்  உலகளவில் அனுபவம் மிக்க ஒருஅணு விஞ்ஞானி. பல நாடுகளில் அணு உலைகளை ஆய்வு செய்திருக்கிறேன். செர்னோபில் உட்பட கிட்டத்தட்ட 750 அணு உலைகளை நான் பார்த்திருக்கிறேன். இபோதும் சில நாடுகளுக்கு நான்  கன்சல்டன்டாக இருக்கிறேன்.

*கொரோனா* பற்றிய ஒரு முக்கியமான செய்தி என்னவென்றால் பாதிப் பேர் பயத்திலேயே பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். என்னைப்  பொறுத்த அளவில் *பொதுவாக ஒழுக்கமான வாழ்க்கை வாழ்பவர்களை இந்த நோய் தாக்குவதில்லை.*

கொரோனா  பூமியின் காற்று மணடலத்தில் உலகெங்கும் பெருகி வளரும் ஒரு வைரஸ்.  இது உலகளாவிய செயல்பாடு.

உங்களுக்கு நினைவிருக்கும்,
டிசம்பர் 2019ல் பல கோள்கள் ஒரே நேர்க் கோட்டில் வந்த விஷயம்.  அதனுடைய தாக்கம்தான் இது.

அப்போது நாம் இதுபற்றிப் பெரிதாக எதுவும் அலட்டிக் கொள்ளவில்லை.  இது எப்படி நடைபெறுகிறது என்றால் இது ஒரு விதமான நியுட்ரான்கள் மூலம் ஏற்படும் வைரஸ்.  இது காற்றுமண்டலத்தில் லட்சம் கோடிகளில் பெருகி பயோ ப்ரோடீன் கூறுகளில் நுழைந்து பூமியின் மேற்பரப்பில் பல மடங்கு விரிவடைந்து காற்றில் வருகிறது. இதை எந்த மருந்தாலும் சரி செய்ய முடியாது.

*வரும் ஜூன் 21 அன்று சூரிய கிரகணம் ஏற்பட்டு அதனுடைய நிழல் பூமியின் மீது விழுந்து பூமியை மறைக்கும் போது இந்தக் கொடிய வைரஸ் தானாகவே மறையக்  கூடிய தன்மை வாய்ந்தது.*

அந்த கிரஹணம் முடிந்து பூமியின் மீது விழும் சூரியனின் புத்தொளி இந்த வைரஸை செயலிழக்க வைக்கும்.  ஜூன் 21க்குப் பிறகு சுத்தமாக மறைந்து விடும்.  இது நடக்கும் என்று நிச்சயம் நான் நம்புகிறேன்.  இதையேதான் நாசாவில் விஞ்ஞானியாக  வேலை செய்யும் அனுபவம் மிக்க என்னுடைய நண்பரும் உறுதியாக நம்புகிறார். அதற்குப் பிறகு எல்லோரும் நிம்மதிப் பெருமூச்சு விடலாம்.  *கொரோனாவால் பல பாதிப்புகள் ஏற்பட்டாலும் பல நல்ல விஷயங்களும் நடந்துள்ளது.*
இது விஷயமாக ஏதாவது டிவி சேனல்கள் என்னுடன் பேச விரும்பினால் நான் தயாராக இருக்கிறேன்.

*Dr. கே.எல்.சுந்தர் கிரிஷ்ணா,* சென்னை

-----------------------------------------------
2
*சூரிய கிரஹணம்...!!!*

*ஜோதிடப்படி*

டிசம்பா் 26 அன்று நடந்த சூா்ய கிரஹணத்தன்று சூா்யன், சந்திரன், குரு, புதன் ஆகிய நான்கு கிரஹங்களும் மூலம் நக்ஷத்திரத்திலும், சனி., கேது பூராட நக்ஷத்திரத்திலும் தனுா் ராசியில் சஞ்சரித்தன.

அது மிகவும் மோசமான நிலைப்பாடு.  *அந்த கிரஹணத்துக்கு பின்தான் கொரோனாவின் தாக்கம் ஏற்பட்டது.*

*ஒரு மோசமான கிரஹணத்துக்கு பின் ஏற்படும் விளைவுகளை அடுத்த கிரஹணம் வந்துதான் சரி செய்யும்.*
 இரண்டு கிரஹணங்களுக்கு இடையில்தான் மஹாபாரத யுத்தம் நடந்ததாக சொல்கிறார்கள்.

அப்படிப் பார்க்கும் போது *அடுத்த கிரஹணம் ஜூன் 21 அன்று வருகிறது.*  இதில் சூா்யன், சந்திரன், ராகு மூன்றும்  மிருகசீாீிக்ஷ நக்ஷத்திரத்திலும் புதன் புனா்பூச நக்ஷத்திரத்திலும் சஞ்சரிக்கின்றன.

*முதலாவது  கேது தொடர்பானது.*

*இரண்டாவது ராகு தொடர்பானது.*

*ராகு கேது இரண்டில் கேது மிகவும் விஷத்தன்மை வாய்ந்தது.*

எனவே, *ஜூன் 21க்கு பின் கொரோனாவின் தாக்கம் குறைந்து*

*செப்டம்பா் 24ல் ராகு ரிஷபத்திற்கு மாறி நீச்சமடையும் போது., கேது விருச்சிகத்தில் உச்சமடையும்போது முற்றிலும் நீங்கலாம்.*

இந்த வரும் கிரஹணத்தின் போது ரோஹிணி, மிருகசீாீிக்ஷம், திருவாதிரை, சித்திரை, அவிட்டம் நக்ஷத்திரக்காரர்கள் கிரஹண சாந்தி செய்ய வேண்டும். இது அவரவர் நன்மைக்கும் உலக நன்மைக்கும் வழி வகுக்கும்.

கிரஹணங்களின் போது சூா்யன், சந்திரனிடமிருந்து
வரும் அல்ட்ரா வயலட் கதிர்கள் தடைப்படுவதால் நம் உடலின் எதிர்ப்பு சக்தி, ஜீரண சக்தி குறைவாக இருக்கும். அதனால்தான் அந்த நேரத்தில் எதுவும் உண்ணக் கூடாது என சொல்வது.

அதை மீறி உண்ணும் போராட்டம் நடத்துவது அவரவர் விருப்பம். அதன் பாதிப்பு அவர்களையே சேரும்.

இது விஞ்ஞானம் கலந்த ஆன்மீகம்...

முன்னோர்கள் நம்மை விட சிறந்த அறிவாளிகள், ஞானிகள். எல்லாவற்றுக்கும் ஏன், எதற்கு என கேள்வி கேட்காமல் அவர்கள் சொல்லை கடைப்பிடிப்பது நமக்கு நன்மையே தரும்.

*ஜூன் 21 கிரஹணத்தை பக்தியுடன் வரவேற்போம்.*
உலக நன்மைக்காக வேண்டுவோம்.

*எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும் யானறியேன் பராபரமே.*

-----------------------------------------------
3
*சூரிய கிரகணம் ஆரம்பம் மற்றும் பரிகார விவரங்கள்.*

வருகிற சார்வாரி ஆண்டு ஆனி மாதம் (07) 21.06.2020. ஞாயிற்றுக்கிழமை. காலை மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் சூரிய கிரகணம் ஆரம்பம். *தமிழ்நாட்டில்  காலை 10.22 to மதியம் 1.50 வரை உள்ளது.*

பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரக்காரர்கள்:

1. மிருகசீரிடம்,
2. சித்திரை
3. அவிட்டம்.
4. திருவாதிரை.
5. ரோஹிணி.

மேற்கண்ட நட்சத்திரக்காரர்கள் மற்றும் இதர நட்சத்திரக்காரர்கள் கிரகணம் ஆரம்பிக்கும் பொழுது என்ன செய்ய வேண்டும் ?

1. வீட்டில் உள்ள பூஜை அறையில் விளக்கு ஏற்றி நமசிவாய என்கிற மந்திரத்தை கிரகணம் முடியும் வரையில் ஜபித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

2. தீட்சை பெற்றவர்கள் இந்த கிரஹணத்தின்  பொழுது அனுட்டான நியமனங்களை செய்ய வேண்டும்.

3. வீட்டில் இருக்கும் பயன்படுத்துகின்ற பொருட்களின் மீது தர்ப்பை புல்லை  போட வேண்டும்.

4. கர்ப்பிணி பெண்கள் எக்காரணத்தைக் கொண்டும் வெளியே வரக்கூடாது.

5. கிரகணம் ஆரம்பம் முதல் முடிவு வரை எதுவும் சாப்பிடக்கூடாது. தண்ணீர் கூட அருந்தாமல் இருப்பது உத்தமம்..

6. முடிந்தால் நாக பிரதிஷ்டை செய்து (பஞ்சலோகம்,  அல்லது ஏதாவது கல் சிலையில் இருந்தால் கூட பரவாயில்லை) அதற்கு அபிஷேகம் பூஜை செய்ய வேண்டும் என்று குறிக்கப்படுகிறது.

இதனால் ராகு , கேது தோஷம் நிவர்த்தியாகும்..

7. சிவ பூஜை செய்பவர்களும் இத்தருணத்தில் பூஜை செய்வது உத்தமம்.

சிவபூஜை செய்பவர்கள் அதிகாலையில் தாங்கள் சிவ பூஜை செய்திருப்பினும் கூட மறுபடியும் சூரிய கிரகணத்தின் பொழுது செய்ய வேண்டும் என்று நியமம்  உள்ளது.

8. அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் பிராமணர்களை கொண்டு சாந்தி செய்து கொள்ள வேண்டும்..

9. கிரகணம் முடிந்த பிறகு தங்கள் இல்லத்தை கழுவி மீண்டும் சுவாமி படத்திற்கு விளக்கு ஏற்றி வழிபாடு செய்யுமாறு வேண்டுகிறேன்.

10. கோயிலில் யாகங்கள் நடைபெற்றால் கலந்து கொண்டு இறையருள் பெறுமாறு வேண்டுகிறேன்..

இத்தகவலை மற்றவர்களுக்கு அனுப்பி புண்ணியத்தை பெறுமாறு வேண்டுகிறேன்..

*தெரிந்தால் தெரியாததுபோல் பேசுவான் அறிவாளி.*
*தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் உளரிக்கொட்டுவான் முட்டாள்.*

மரங்கள் காற்றைச் சுத்தம் செய்கின்றன
நம்பிக்கை மனசை சுத்தம் செய்கிறது......!!!!

வாழ்க வளமுடன் நலமுடன்



சார்வரி தமிழ் சித்திரை விசு புண்ணிய காலம் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
பஞ்சாங்கம்-பஞ்ச அங்கங்கள் அதாவது
திதி
வாரம்
நட்சத்திரம்
யோகம்
காரணம்
போன்ற பஞ்சாங்க குறிப்புகளுடன் புத்தாண்டு நாளில் நாம் அனுசரிக்க வேண்டிய தெரிந்துகொள்ள வேண்டிய பல்வேறு அம்சங்கள் விரிவாகவும் விளக்கமாகவும் காண்போமா! இதோ!
சார்வரி தமிழ்ப் புத்தாண்டு 14-04-2020 செவ்வாய்க்கிழமை

 தமிழ் புத்தாண்டு முக்கியத்துவம்

மங்களகரமான சித்திரை சார்வரி வருடம் சிசிர ருதுவுடன் உத்தராயனப்   நிறைந்த திங்கள்கிழமை 13.04.2020 இரவு 7.20 -மணிக்கு துலா லக்கினத்தில் புதன் ஹோரையில் கிருஷ்ணபட்சத்தில் 10.20 வரைசஷ்டி திதி, பின்பு சப்தமி. மூலம் 12.30 வரை பின்பு பூராடம்'சார்வரி' சித்திரை அசுவினி 1 மேஷ சூரியன்  17.35 புண்ணிய காலம் சுப தமிழ்ப் புத்தாண்டு 2020 பிறக்கிறது. இந்த 2020 ஆம் வருடம், ஏப்ரல் 14 ஆம் தேதி  செவ்வாய்க்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. 

தமிழ்ப் புத்தாண்டு தமிழர் புதிய ஆண்டு பிறப்பதைக் கொண்டாடும் விழாவாகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், பிற நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர்.

ஒரு தமிழ் ஆண்டு என்பது வானியல் ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் அளவிடப்பட்ட காலத்தைக் கொண்ட காலப்பகுதியாகும். பூமி சூரியனை ஒரு தடவை சுற்றிவர 365 நாட்கள், 6 மணி, 11 நிமிடம், 48 நொடிகள் ஆகின்றது. இதுவே தமிழ் வருடத்தினதும் கால அளவாகும். சூரிய மேஷ இராசியில் பிரவேசிக்கும்போது தொடங்கும் ஆண்டு, மீன இராசியிலிருந்து வெளியேறும்போது முடிவடைகின்றது. ஆகவே தமிழ் வருடத்தின் கால அளவு எப்போதும் சீரானதாகவே இருக்கிறது. இதன் அடிப்படையிலேயே தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் நாள், நேரம் கணிக்கப்படுகிறது. ஆங்கில நாட்காட்டியில் பெரும்பாலும் ஏப்ரல் 14 தொடங்கும் தமிழ் ஆண்டு சில ஆண்டுகளில் ஏப்ரல் 13 அல்லது 15 நாட்களில் தொடங்கும். இதற்குக் காரணம் ஆங்கில (கிரகோரியன்) நாட்காட்டி ஒரே சீரானதாக இல்லை என்பதே.

நடைமுறைக்கு ஏற்றதாக சித்திரை தமிழ்ப் புத்தாண்டு ஒரு குறிப்பிட்ட நாளில் கொண்டாடப்பட்டாலும், தமிழ்ப் பஞ்சாங்கங்களில் அந்த நாளில் ஆண்டு பிறக்கும் சரியான நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். அதன் அடிப்படையிலேயே ஆண்டுக்காலம் கணிக்கப்படுகிறது.

சித்திரை தமிழ்ப் புத்தாண்டு - அறிமுகம்

தமிழ் மாதமாகிய சித்திரை மாதப் பிறப்பு என்பது, ஆண்டு தோறும், புது வருடப் பிறப்பாகக் கருதப்படுகிறது. பொதுவாக இது, ஏப்ரல் மாதத்தின் மத்தியில் வருகிறது. மங்களகரமான சித்திரை சார்வரி வருடம் சிசிர ருதுவுடன் உத்தராயனப்   நிறைந்த திங்கள்கிழமை 13.04.2020 இரவு 7.20 -மணிக்கு துலா லக்கினத்தில் புதன் ஹோரையில் கிருஷ்ணபட்சத்தில் 10.20 வரைசஷ்டி திதி, பின்பு சப்தமி. மூலம் 12.30 வரை பின்பு பூராடம்'சார்வரி' சித்திரை அசுவினி 1 மேஷ சூரியன்  17.35 புண்ணிய காலம் சுப தமிழ்ப் புத்தாண்டு 2020 பிறக்கிறது. இந்த 2020 ஆம் வருடம், ஏப்ரல் 14 ஆம் தேதி  செவ்வாய்க்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. 

சார்வரி வருஷத்திய  வெண்பா பலன்

சாருவரி ஆண்டதனிற் சாதிபதினெட்டுமே

தீரமறு நோயால் திரிவார்கள், மாரியில்லை

பூமி விளை வில்லாமற் புத்திரரும் மற்றவரும்

ஏமமன்றிச் சாவார் இயம்பு.

அதாவது சார்வரி ஆண்டில், தீராத நோயால் அவதிப்படுவர், மழை குறைவாக இருக்கும் என்பதால், பூமியில் விளைச்சல் குறையும் சோகம் உண்டு. மக்கள் மற்றும் கால்நடைகள் கடுமையாக  பாதிக்க நேரிடும்
 
உலகின் பண்டைய கலாசாரங்கள் அனைத்தும், நாள், வாரம், மாதம், வருடம் போன்றவற்றைக் கொண்ட ‘பஞ்சாங்கம்’ எனப்படும் நாள்காட்டிகளைப் பயன்படுத்தி வந்துள்ளன. இது ‘ஆல்மனாக்’ அல்லது ‘காலண்டர்’ எனப்படும். தமிழர்களின் பழம் பெரும் கலாசாரமும் இதற்கு விதி விலக்கல்ல. பொதுவாக, மாதங்களும், வருடங்களும் சூரியனின் போக்கை அடிப்படையாகக் கொண்டே கணக்கிடப்பட்டுள்ளன.

தமிழ்ப் பாரம்பரியமும் இந்த முறையையே பின்பற்றுகிறது. சூரியன் தனது வான்வெளிப் பயணத்தின் பொழுது 12 ராசிகளின் வழியாகச் செல்கிறார். அவர் ஒவ்வொரு ராசியிலும் தங்கியிருக்கும் காலம், ஒரு குறிப்பிட்ட மாதமாகக் கணக்கிடப்படுகிறது. இவ்வாறு, முதல் ராசியான மேஷ ராசியில் அவர் தங்கி இருக்கும் காலம், சித்திரை மாதமாகக் கருதப்படுகிறது. அவர் மேஷ ராசியில் பிரவேசிக்கும் நாளான, சித்திரை முதல் நாள், ஒரு புதிய தமிழ் வருடத்தின் துவக்கமாகவும், தமிழ்ப் புத்தாண்டாகவும் கொண்டாடப்படுகிறது. இது சித்திரை வருடப் பிறப்பு என்றும், ஆங்கிலத்தில் தமிழ் நியூ இயர் என்றும் கூட வழங்கப்படுகிறது.
 
தமிழர்கள் காலத்தைக் கணக்கிடும் முறைப்படி, வசந்த காலம் என்பது சித்திரை மாதத்திலேயே பிறக்கிறது; எனவே, இந்த மாதப் பிறப்பு புத்தாண்டுப் பிறப்பாகக் கொண்டாடப்படுகிறது என்ற கருத்தும், சிலரிடையே நிலவுகிறது.   

பல்வேறு மொழி பேசும், கலாசாரத்தைப் பின்பற்றும் மக்கள் இது போன்ற புத்தாண்டுப் பிறப்பை, பலவகைப் பெயர்களில், பல்வேறு விதமாகக் கொண்டாடுகிறார்கள். உதாரணமாக தெலுங்கு வருடப் பிறப்பு உகாதி என்றும், மலையாள வருடப் பிறப்பு விஷூ என்றும் அழைக்கப்படுகிறது.  இவ்வாறு புதிய தமிழ் வருடம் பிறக்கும் நாள், தமிழ்ப் புத்தாண்டு என்று அழைக்கப்பட்டாலும், ஒவ்வொறு தமிழ் வருடத்திற்கும் ஒரு தனிப் பெயர் உள்ளது. 

 
ஆண்டு அல்லது வருடம் என்பது, வடமொழி எனப்படும் சமஸ்கிருதத்தில் ‘சம்வத்ஸரம்’ என்று அழைக்கப்படுகிறது. இது போன்ற, குறிப்பிட்ட 60 ஆண்டுகள் அல்லது சம்வத்ஸரங்கள், ஒரு தொகுதியாகக் கருதப்படுகின்றன. இந்த 60 ஆண்டுக் காலப் பொழுதில் இருக்கும் 60 வருடங்களுக்கும் தனித் தனிப் பெயர்கள் உள்ளன. இந்த 60 ஆண்டுத் தொகுதி அல்லது காலகட்டம், சுழன்று, சுழன்று மீண்டும், மீண்டும் வருவதாகக் கணக்கிடப்படுகிறது. இதனால், இந்த 60 வருடத் தொகுதியில் உள்ள ஒவ்வொரு வருடமும், 60 வருடங்களுக்கு ஒருமுறை, மீண்டும் மீண்டும் திரும்பி வருகிறது. வருடங்களின் இந்த சுழற்சி என்பது, ‘சம்வத்ஸர சுழற்சி’ என்று அழைக்கப்படுகிறது.

சார்வரி என்ற சொல்லுக்கு ‘ஒளி’ அல்லது ‘அந்தி வேளை ஒளி’ என்று பொருள். இந்த சார்வரி ஆண்டு, 2020 ஏப்ரல் 13 ஆம் தேதி, திங்கட்கிழமை இரவு 07.20 மணிக்குப் (இந்திய நேரம்) பிறக்கிறது. இருப்பினும், இந்த சார்வரி வருடப் பிறப்பு, தமிழ்ப் புத்தாண்டு 2020 ஆக, அதற்கு மறுநாள், ஏப்ரல் 14 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது.

ஜனவரி மாத மத்தியிலிருந்து ஜூலை மாத மத்தியப் பகுதி  வரையிலான காலம், சூரியனின் வடதிசைப் பயணத்தைக் குறிக்கும், புனிதமான உத்தராயணம் ஆகும். எனவே ஒவ்வொரு வருடத்தைப் போலவே, இந்தத் தமிழ்ப் புத்தாண்டும், உத்தராயண புண்ணிய காலத்தில் பிறக்கிறது.
 
புத்தாண்டுக் கொண்டாட்டம்

தமிழர்களின் புத்தாண்டுத் தொடக்க மாதமான மிகச் சிறப்பு வாய்ந்த இந்த சித்திரை மாதப் பிறப்பின் போது நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம் தமிழ் புத்தாண்டு தினமான சித்திரை மாதம் முதல் நாள் அன்று அதிகாலையிலேயே துயில் எழுவது மிகவும் நல்லது. மற்ற தினங்களைப் போல அல்லாமல் இந்த சித்திரை மாதம் முதல் தினத்தன்று புத்தாண்டு பிறக்கும் புண்ணிய காலத்தில் உடல் வெப்பம் குறைந்து நோய்கள் தீரவும் தோஷ நிவர்த்திக்காகவும்  பல மூலிகைகள் சேர்ந்த மருத்துநீரை தலையிலும் உடம்பிலும் தடவி முதலில் நீராடுவது வழக்கம்.மருத்து நீரில் அனைவரும் குளியலை மேற்கொள்ள வேண்டும். மருத்து நீர் என்பது நமது முன்னோர்களால் தமிழ் வருடப் பிறப்பு அன்று குளிக்கும் போது பயன்படுத்தப்பட்ட ஒரு நீராகும். தற்கால தமிழர்கள் அதிகம் இதை பற்றி அறியாமல் இருக்க காரணம் இந்த மருத்து நீரை தயாரிக்க தேவையான பொருட்கள் அனைவருக்கும் எளிதில் கிடைக்காததும், இதை தயாரிக்கும் முறை பற்றி அறியாததே ஆகும். எனினும் இந்த மருத்து நீரை தயாரிக்க நினைப்பவர்கள் ஒரு பாத்திரத்தில் சுத்தமான நீரை ஊற்றி அதில் தாழம்பூ, தாமரைப்பூ, மாதுளம் பூ, துளசி, விஷ்ணுகிராந்தி, சீதேவியால் செங்கழு நீர், வில்வம், அறுகு, பீர்க்கு, பால், கோசலம், கோமயம், கோரோசனை, மஞ்சள், மிளகு, திப்பிலி, சுக்கு ஆகியவற்றில் சிறிதளவை போட்டு நன்கு காய்ச்சி நீரை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். வீட்டிலேயே இந்த மருத்து நீரை தயாரிக்க தெரியாதவர்கள், இப்புனித மருத்து நீரை, கோயில்களில் சேவை புரியும் அந்தணப் பெரியோர்களிடம் தயாரித்து தரும்படி கேட்டு பெற்று கொண்டு குளிக்க வேண்டும்.

குளிக்கும் போது தலையில் கொன்றை இலையையும், காலில் புங்கம் இலையையும் வைத்து குளிக்க வேண்டும். இப்படி செய்வதால் பிறந்திருக்கும் தமிழ் வருடத்திற்குரிய தோஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் தோஷங்கள் நீங்க பெறும். மற்ற நட்சத்திரக்காரர்களும் இப்படி குளிப்பதால் அவர்களின் அனைத்து தோஷங்களும் நீங்கி, புதிதாக பிறந்திருக்கும் புத்தாண்டில் அதிர்ஷ்டங்கள் பெருகும். மஞ்சள் நிறம் என்பது வளமை, தெய்வீகம் மற்றும் நன்மையை குறிக்கும் ஒரு நிறமாக நமது கலாச்சாரத்தில் போற்றப்படுகிறது. எனவே புத்தாண்டு தினத்தில் மேற்கண்ட முறையில் குளியலை முடித்த பின்பு , மஞ்சள் நிறப் பட்டாடை அல்லது மஞ்சள் கரை வைத்த வெள்ளை நிற புதிய ஆடைகளை அணிந்து கொள்வதால் பிறக்கின்ற புத்தாண்டு உங்கள் குடும்பத்தில் வளமையை கொடுக்கும் என்பது ஐதீகம்.

 மஞ்சள் நிற ஆடை இல்லாவிட்டாலும் புதிய ஆடையில் ஒரு சிறு பகுதிலாவது மஞ்சள் அரைத்துப் பெற்ற கலவையை பூசி விட்டு அணிந்து கொள்வது நன்மை தரும். பின்னர் உங்கள் வீட்டின் பூஜையறையில் பூரண கும்பம், கண்ணாடி, தீபம், போன்றவற்றை வைத்து, இஷ்ட தெய்வம் மற்றும் குல தெய்வ படங்களையும் தரிசித்து வணங்க வேண்டும். பிறகு உங்கள் வீட்டில் இருக்கும் வயதில் மூத்தோரான தாத்தா, பாட்டி, தாய், தந்தை மற்றும் இன்ன பிற பெரியோர்களை வணங்கி, அவர்களின் நல்லாசிகளைப் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும். பிறகு அருகிலுள்ள கோயிலுக்கு சென்று இறைவனை வழிபட வேண்டும்.

அறுசுவை உணவு உண்டு பலவிதமான பட்சணங்களுடன் விருந்தினர்களை உபசரித்தல் புத்தாடை அணிதல், பெரியோரை வணங்கி ஆசி பெறுதல், பொங்கல் பொங்குதல் ஆகியன இரு மக்களிடையேயும் ஒரே மாதிரியாக கைக்கொள்ளப்பட்டு வருகின்றன.பௌத்த மக்களும் இந்துத் தெய்வ நம்பிக்கையுடன் வாழ்கின்றார்கள்.

புத்தாண்டு பல நன்மைகளைத் தர வேண்டும் என்ற நோக்கத்தோடு மருத்துநீர் வைத்து நீராடி, புத்தாடை அணிந்து கோவிலுக்குச் சென்று வழிபடுதல் வேண்டும்.கண்கண்ட தெய்வமாகவும் உலக இயக்க நாயகனாகவும் விளங்கும் சூரியனை அடுத்து வழிபடுதல் வேண்டும்.இல்லங்களில் சூரிய உதயத்தில் பொங்கல் பொங்கிப் படைத்து உண்பது வழக்கம். இதேநேரம் பாடசாலைகள், வியாபார ஸ்தலங்கள் போன்ற இடங்களிலும் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள் இடம் பெறுவதுண்டு. வழிபாடுகள் முடிவடைந்ததும் உற்றார் உறவினர் நண்பர்கள் வீடுகளுக்குச் சென்று புதுவருட பலகாரங்கள் உண்டு மகிழ்வர்.புதுவருடத்தை மகிழ்ச்சியோடு வரவேற்கும் பொழுது பழைய கடன்கள் ஏதும் இருந்தால் அவற்றைத் தீர்த்துக் கொள்வர்.நல்ல சுபவேளையில் கைராசியுள்ளவர்களிடம் ஏனையவர்கள் கைவிஷேடம் பெற்றுக் கொள்வது ஒரு நல்ல பண்பாகும்.மேலும் சுபவேளையில் வியாபார ஸ்தலங்களில் பிள்ளையார் சுழிபோட்டு புதுக்கணக்கைத் தொடங்குவார்கள்.இதேநேரம் வங்கிகளிலும் புதுக்கணக்கை ஆரம்பிக்கும் போது பரிசுகளையும் வழங்குவார்கள்.பிள்ளைகள் சுபவேளை பார்த்து பாடத்தைப் படிக்கத் தொடங்குவார்கள்.

மங்களகரமான தமிழ் புத்தாண்டு தினத்தில் மனதில் மகிழ்ச்சி ஏற்படும் வண்ணம் நடந்து கொள்வதால் இந்த வருடம் முழுநாளும் மனங்கள் மகிழ்வு பெறும் என்பது எம்மவரின் ஐதீகமாகும்.தமிழ் புத்தாண்டு தினத்தில் மேற்கண்டவற்றை செய்பவர்களுக்கு துரதிர்ஷ்டங்கள், தோஷங்கள் போன்றவை நீங்கி அதிர்ஷ்டம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலை இருக்கும். கொடிய நோய்கள் ஏதும் குடும்பத்தில் உள்ள எவரையும் பாதிக்காது. வறுமை நிலை, தொழில் வியாபார நஷ்டங்கள் ஏற்படாமல் காக்கும்.

நமது முன்னோர் இரு கணிப்பு முறைகள் மூலம் வருடத்தை வகுத்தனர்.ஒன்று சௌரமானம்.சௌரம் என்றால் சூரியன்.சூரியன் மேட ராசியிலிருந்து மீனராசி வரையுள்ள பன்னிரு இராசிகளிலும் சஞ்சரிக்கும் காலங்கள் சௌர மாதங்கள் எனப்பட்டன.சூரியன் மேட ராசிக்குள் பிரவேசிக்கும் சித்திரை முதலாம் நாள் தமிழ் வருடப் பிறப்பன்று தொடங்கி மீண்டும் சூரியன் மேட ராசியில் பிரவேசிக்கும் காலம் முழுவதும் ஒரு சௌர வருடம் ஆகும்.இந்த வருடப் பிறப்பை இந்துக்களும் பௌத்தர்களும் கொண்டாடி வருகின்றனர். மற்றையது சந்திரன் பூமியை வலம் வருவதை அடிப்படையாகக் கொண்டு வரும் மாதங்களும் வருடமும் சாந்திரமானம் எனப்படும்.ஒரு பூர்வ பக்கப் பிரதமை முதல் அடுத்து வரும் அமாவாசை வரையுள்ள 30திதிகள் கொண்ட காலப் பகுதி சாந்திர மாதம் ஆகும்.இவ்வாறு ஒரு வருடத்தில் 12அமாவாசைகள் வருகின்றன. சூரியன் மேட ராசியில் சஞ்சரித்து வடக்கே செல்லும் காலம் உத்தராயணம் எனப்படும்.இதை வசந்தகாலம் என அழைப்பர்.

மாதா, பிதா, குரு ஆகியவர்களை விழுந்து கும்பிட்டு ஆசிபெறுதல் மற்றொரு சிறந்த பண்பாகும்.சித்திரை மாதம் சிறுமாரி என மழை பெய்யத் தொடங்கும்.மலர்கள் பூத்துச் சொரியும்.பயிர்கள் செழிக்கும்.வசந்த ருதுவென சோழகக் காற்று வீசத் தொடங்கும்.வேப்பம்பூ சொரியும்.தேசிய விளையாட்டுகளில் போர்த் தேங்காய் அடித்தல் சிறுவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் ஒரு விளையாட்டாகும்.இன்றைய காலகட்டத்தில் இவ்விளையாட்டு அருகி விட்டது.தற்போது வழுக்குமரம் ஏறுதல், கிளித்தட்டு, தயிர்முட்டி அடித்தல், மாட்டுவண்டிச் சவாரி,மஞ்சுவிரட்டுதல், தலையனை அடித்தல, கயிறு இழுத்தல் போன்றவை தேசிய விளையாட்டுக்களாக கொண்டாடப்பட்டு வருகின்றன.

ஆண்டாண்டு காலமாக, மக்கள், தமிழ்ப் புத்தாண்டை பெரும் உற்சாகத்துடன் கொண்டாடி வருகிறார்கள். பாரம்பரியப் பழக்க வழக்கங்களைப் பின்பற்றியும், வழிபாடுகளை நடத்தியும், இந்த நாளை அனுசரிக்கும் அவர்கள், அதே நேரம், பல சுவைகளும் கலந்த விருந்து உண்டும், நண்பர்கள், உறவினர்களுடன் நேரத்தை இனிமையாகச் செலவிட்டும், இந்த நாளைக் கொண்டாடுகிறார்கள்.

இளவேனிற் காலமாகிய சித்திரையையும், புத்தாண்டையும் ஒரு சேர வரவேற்கும் விதமாக, மக்கள் அதிகாலையிலேயே எழுந்து நீராடுகிறார்கள். இந்த நாளில், மருந்து நீர் எனப்படும் விசேஷமான மூலிகை நீரில் குளிப்பது, ஒரு பாரம்பரிய வழக்கமாக உள்ளது. மஞ்சள், மிளகு, துளசி இலை, வில்வ இலை போன்றவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்தத் தண்ணிரில் நீராடுவது, உடல் நலத்துக்கு நன்மை விளைவிக்கும். அத்துடன் கூட, அந்த வருடம் யாருக்காவது, ஏதாவது நட்சத்திர தோஷம் ஏற்பட்டால், இந்தக் குளியல் அந்த தோஷ விளைவுகளை நீக்கும் அல்லது குறைக்கும், என்பது நம்பிக்கை.

நீராடிய பிறகு, சிலர் புத்தாடை அணிகிறார்கள். ஒரு சிலர் சிவப்பு அல்லது சிவப்பும், வெள்ளையும் கலந்த உடை அணிகிறார்கள். தூய ஆடை அணிந்த பிறகு, கடவுளை வணங்கி இறை வழிபாடு செய்கிறார்கள். பின்னர் வீட்டில் உள்ள பெரியவர்களை வணங்கி அவர்களது ஆசிகளைப் பெறுகிறார்கள். பின்னர் நண்பர்களையும், உறவினர்களையும் சந்தித்தோ, தொடர்பு கொண்டோ, அவர்களுடன் சித்திரை வருடப் பிறப்பு, தமிழ்ப் புத்தாண்டு, தமிழ் நியூ இயர் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்கிறார்கள்.

 
சுகம், துக்கம், சிரிப்பு, சோகம் என பலதரப்பட்ட அனுபவங்களும் நிறைந்தது தான் வாழ்க்கை. இதைக் குறிக்கும் வகையில், அனைத்து வகை சுவைகளும் இந்தப் புத்தாண்டு தினத்தின் சிறப்பு விருந்தில் இடம் பெறுகின்றன. இந்தக் கால கட்டத்தில் எங்கும் நிறைந்திருக்கும் மாந்தளிருடன் கூட, கசப்பு சுவையுடைய வேப்பம் பூவையும், இனிமையான வெல்லத்தையும் கலந்து, செய்யப்படும் விசேஷமான பச்சடி உணவு, இவ்வாறு புளிப்பு, துவர்ப்பு, கசப்பு, இனிப்பு எனப் பல சுவைகளையும், இந்தப் புத்தாண்டு நாளில் தருகிறது. இத்துடன் கூட பல வீடுகளில், வெப்பத்தைத் தணிக்கும் நீர்மோர், இனிப்பைக் கூட்டும் பானகம் ஆகியவையும் அருந்தப்படுகின்றன. பின்னர் பருப்பு, வடை பாயசம் இவற்றுடன் கூடிய பெரிய விருந்து ஒன்றை, இந்த நாளில், மக்கள், குடும்பத்தினர் மற்றும் உற்றார் உறவினருட உண்டு மகிழ்கிறார்கள்.  இவ்வாறு நம்பிக்கையுடனும், மகிழ்ச்சியுடனும் புதிய வருடத்தை மக்கள் துவக்குகிறார்கள்.

மரபுகள்

புத்தாண்டுக்கு முந்தைய நாட்களை வீடு வாசலை சுத்தம் செய்வதிலும், அலங்கரிப்பதிலும் தமிழர் செலவழிப்பர். மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள், வெற்றிலை, பாக்கு, நகைகள், நெல் முதலான மங்கலப்பொருட்கள் வைத்த தட்டை வழிபாட்டறையில் வைத்து, அதை புத்தாண்டு அதிகாலையில் காண்பது புனிதமாகக் கருதப்படுகின்றது. புத்தாண்டன்று அதிகாலையில் நீராடி கோலமிட்டு, புத்தாடை அணிந்து, கோயிலுக்குச் சென்று வழிபடுவர். மாலை வேளையில் உறவினர் வீடுகளுக்குச் செல்வதும், பலகாரங்களை பகிர்ந்துண்பதும் நிகழும்.வாழ்க்கை என்றாலே கசப்பும் இனிப்பும் கலந்தது தான். இப்புத்தாண்டிலும் கசப்பும் இனிப்பும் இருக்கும் என்பதன் அடையாளமாக வேப்பம்பூப்பச்சடி, மாங்காய்ப்பச்சடி என்பவற்றை உண்பது குறிப்பிடத்தக்க மரபாகும்.

சோதிடம்:

சூழலியலும், ஒருவரின் பிறப்பும் வாழ்க்கையும், வானிலுள்ள கோள்கள், நட்சத்திரங்கள் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன என்ற கருதுகோளுடன், அதற்கான சூத்திரங்களை உருவாக்கி, அதன் பலன்களை முன்மொழியும் துறையே சோதிடம்.

தமிழரின் காலக்கணிப்பு

நாம் தமிழரின் வானியல் பற்றிய சான்றுகளைச் சேகரிக்கும் அதே சமகாலத்திலேயே, வட இந்தியாவிலும், கிரேக்கம், சீனம் போன்ற பகுதிகளிலும் வானியல், காலக்கணிப்பு பற்றிய குறிப்புகள் கிடைக்க ஆரம்பிக்கின்றன.

இந்திய வானியல்:

இந்தியாவிலேயே மிகப்பழைய இலக்கியங்களான வேதங்களில் கிரகங்கள், கிரகணங்கள் பற்றிய குறிப்புகள் வருகின்றன.  பொ.மு 12 – 6ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்டதாக வரையறுக்கப்படும் “வேதாங்க ஜ்யோதிஷம்” இந்தியாவின் மிகப்பழைய வானியல் நூலாகும். எனினும் இந்திய வானியல், பொ.பி 5ஆம் நூற்றாண்டுக்குப் பிறகே மிகச்சிறப்பான வளர்ச்சியைக் காண்பித்திருக்கிறது. ஆரியபட்டரின் (பொ.பி 476 - 550) “ஆர்யபட்டீயம்”, வராகமிகிரரின் “சூரிய சித்தாந்தம்” (பொ.பி 6ஆம் நூற்.), பராசர ஓரைசாத்திரம், சாராவளி (பொ.பி 8ஆம் நூற்.) என்பன இக்காலத்தில் முகிழ்த்த முக்கியமான நூல்கள்.

தமிழ் வானியல்:

சங்க இலக்கியங்கள் (பொதுவாக பொ.மு 3 - பொ.பி 2ஆம் நூற்.) தமிழர் மத்தியில் மிகச்சிறப்பான வானியல் அறிவு விளங்கியதற்கான ஆதாரங்களாக விளங்குகின்றன.  நட்சத்திரங்களும் கோள்களும் தனித்தனியே நாண்மீன், கோள்மீன் என்று பிரித்துச் சொல்லப்படுவதால், அவற்றுக்கிடையிலான வேறுபாடுகளை சங்க காலத்தமிழர் தெளிவாகவே அறிந்திருந்தனர் எனலாம்.

ஆதிமனிதன் காலம் கணிப்பதற்கு சூரியன், சந்திரன் ஆகிய இரண்டையும் பயன்படுத்தினான். அவற்றின் நகர்வைக் கணிப்பதன் அடிப்படையில் முறையே கதிர் நாட்காட்டி (Solar Calendar), மதி நாட்காட்டி (Lunar Calendar) என்பன பயன்பாட்டில் இருந்தன. சூரியன் - சந்திரனின் இயக்கத்தோடு, சிலவேளைகளில் நட்சத்திரங்களின் சார்புநிலையும் கருத்திலெடுக்கப்பட்டது.

ஒரு இராசியை சூரியன் கடக்க எடுக்கும் காலத்தையே ஒரு மாதமாகக் கணிக்கிறோம். ஆனால் நாளொன்றைக் கணிப்பதற்கு சந்திரனின் இயக்கத்தையே கருத்தில் கொள்கிறோம். சமயரீதியில் புனிதமான நாட்களெல்லாம் சந்திரனின் அமைவை வைத்தே (விஜய”தசமி”, விநாயக “சதுர்த்தி”, சித்திரா”பௌர்ணமி”) கணிக்கப்படுவதை நாம் காணலாம். பிறப்பைக் கணிக்கப் பயன்படும் நட்சத்திரங்கள் (நீங்கள் ஒவ்வொருவரும் இந்த இராசி, இந்த நட்சத்திரம், என்று சொல்லியிருப்பார்களே, அதுதான்!முன்னோர் வழிபாட்டில் பயன்படும் “திதி”கள் முதலானவையும் மதிவழிக் கணிப்பீடுகளே.

சூரியன் ஒவ்வொரு இராசியிலும் புகும் நாள் அந்தந்த மாதங்களுக்கு உரிய மாதப் பிறப்பு எனப்படும். சூரியன் மேட இராசியுட் புகும்போது பிறக்கும் சித்திரை மாதமே தமிழ் முறைப்படி ஆண்டின் முதல் மாதம் என்பதால், இந் நிகழ்வே புத்தாண்டுப் பிறப்பும் ஆகும்.

அறுபது ஆண்டுகள்

இந்தியாவின் மிகப்பழைய வானியல் நூலான வேதாங்க சோதிடத்தில் அறுபது ஆண்டுகளின் பட்டியலைக் பிரபவ முதல் அட்சய வரை காணமுடிகின்றது. வடமொழி நூல்களில் அறுபது ஆண்டுகளும் அறுபது சம்வத்சரங்கள் என்று அழைக்கப்படுகின்றன

01.  பிரபவ   02.  விபவ    03.  சுக்ல     04.  பிரமோதூத
05.  பிரசோற்பத்தி    06.  ஆங்கீரச      07.  ஸ்ரீமுக
08.  பவ     09.  யுவ    10.  தாது       11.  ஈஸ்வர
12.  வெகுதானிய      13.  பிரமாதி       14.  விக்கிரம
15.  விஷு     16.  சித்திரபானு   17. சுபானு 18.  தாரண
19.  பார்த்திப  20. விய  21. சர்வசித்து 22.  சர்வதாரி
23.  விரோதி  24. விக்ருதி 25.  கர   26.  நந்தன
27.  விஜய  28.  ஜய  29.  மன்மத   30.  துன்முகி
31.  ஹேவிளம்பி  32.  விளம்பி  33.  விகாரி
34.  சார்வரி  35. பிலவ  36. சுபகிருது 37. சோபகிருது
38.  குரோதி  39.  விசுவாசுவ 40. பரபாவ                       
 41.  பிலவங்க  42. கீலக 43.சௌமிய 44.  சாதாரண
45.  விரோதகிருது 46.  பரிதாபி 47.  பிரமாதீச
48.  ஆனந்த 49.  ராட்சச 50.  நள 51.  பிங்கள
52.  காளயுக்தி 53.  சித்தார்த்தி 54.  ரௌத்திரி
55.  துன்மதி 56.  துந்துபி 57.  ருத்ரோத்காரி
58.  ரக்தாட்சி 59.  குரோதன  60.  அட்சய

மாதங்கள்

1     சித்திரை 
2     வைகாசி 
3     ஆனி 
4     ஆடி 
5     ஆவணி 
6     புரட்டாசி 
7     ஐப்பசி 
8     கார்த்திகை 
9     மார்கழி
10    தை 
11    மாசி 
12    பங்குனி 

தமிழர் காலக்கணிப்பு முறையின்படி ஒரு ஆண்டுக்குரிய பன்னிரெண்டு மாதங்களில் சித்திரை முதலாவது மாதமாகும். தமிழ் மாதங்கள் பூமிக்குச் சார்பாகத் தோற்றுகின்ற சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாக கொண்ட சூரியமானத்தின் படி இம் மாதங்கள் கணிக்கப்படுகின்றன. இதனால் இவை சூரிய மாதங்கள் எனப்படுகின்றன.

இராசிச் சக்கரத்தில் மேட இராசிக்குள் சூரியன் நுழைவதிலிருந்து அந்த இராசியை விட்டு வெளியேறும் வரையில் உள்ள காலம் சித்திரை மாதமாகும். சித்திரை மாதம் 31 நாட்களைக் கொண்டது. ஆங்கில நாட்காட்டியில் ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் முதல் மே மாதம் 14 ஆம் நாள் வரை தமிழ் சித்திரை மாதமாகும்.

சூரியன் மேட இராசிக்குள் நுழைவது சித்திரை மாதப் பிறப்பு ஆகும். அத்துடன் சித்திரை முதல் மாதம் என்பதால் இதுவே புதிய ஆண்டின் தொடக்கமும் ஆகும். இதனால் சித்திரை மாதம் முதல் நாளைத் தமிழர் புத்தாண்டாகக் கொண்டாடுவர்.

பஞ்சாங்கம்

பஞ்சாங்கம் (Panchangam) அல்லது ஐந்திறன் என்பது இந்துக் காலக் கணிப்பு முறையின் படி, கணிக்கப்படுகின்ற கால அட்டவணை எனலாம். இக் காலத்தில் பஞ்சாங்கம் சமய சம்பந்தமான விடயங்களுக்கும், சோதிடக் கணிப்புகளுக்குமே பெரிதும் பயன்படுகின்றது.

பஞ்சாங்கம் என்பது கிரக சுழற்சிகளைப் பற்றிய வானியலைக் காட்டும் குறிப்புகள் அடங்கிய புத்தகம் என்றும் வானியல் நூல் என்றும் குறிப்பிடப்படுகின்றது. நவீன காலக் கருவிகள் இல்லாத பண்டைய காலத்திலேயே மகரிஷிகள் தங்கள் ஞானத்தால் சூர்ய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்களைத் துல்லியமாக கணித்து அளித்ததே பஞ்சாங்கம் என்றும் குறிப்பிடப்படுகின்றது.

பஞ்சாங்கத்தின் முக்கிய உறுப்புகள்

1  வாரம்
2  திதி
3  கரணம்
4  நட்சத்திரம்
5  யோகம்

என்பனவாகும்.

வாரம் என்பது ஏழு கிழமைகள் ஆகும். இவை:

1. ஞாயிற்றுக்கிழமை
2. திங்கட்கிழமை
3. செவ்வாய்க்கிழமை
4. புதன்கிழமை
5. வியாழக்கிழமை
6. வெள்ளிக்கிழமை
7. சனிக்கிழமை

என்னும் ஏழுமாகும்.

திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம். அமாவாசை அன்று சூரியனும் சந்திரனும் சேர்ந்திருப்பார்கள். அதன் பின் சந்திரன் சூரியனிடம் இருந்து விலகி செல்வார். திதி எனப்படுவது பஞ்சாங்கத்தின் ஒரு முக்கிய பகுதியாகும்.

இந்துக்களின் தமிழ் நாட்காட்டியின்படி ஒவ்வொரு மாதமும் 30 திதிகள் கடைபிடிக்கப்படுகின்றன. இதில் இரண்டு பட்சங்கள் உள்ளன. அவை கிருஷ்ண பட்சம் அல்லது தேய்பிறை மற்றும் சுக்கில பட்சம் அல்லது வளர்பிறை ஆகும்.

சந்திரனின் பூமியைச் சுற்றியுள்ள சுற்றுப் பாதையின் 30 சம கோணப் பிரிவுகள் ஒவ்வொன்றையும் சந்திரன் கடக்க எடுக்கும் காலத்தைக் குறிக்கும். அமாவாசையில் இருந்து வரையான வளர்பிறைக் காலத்தில் 15 திதிகளும், பூரணை தொடக்கம் மீண்டும் அமாவாசை வரும் வரையான காலத்தில் இன்னும் 15 திதிகளும் வருகின்றன. முதற் தொகுதி சுக்கில பட்சத் திதிகள் எனவும், இரண்டாம் தொகுதி கிருஷ்ண பட்சத் திதிகள் எனவும் அழைக்கப்படும். அதன் 30 பெயர்களும் வருமாறு:

1. அமாவாசை          16. பூரணை
2. பிரதமை                 17. பிரதமை
3. துதியை                   18. துதியை
4. திருதியை               19. திருதியை
5. சதுர்த்தி                   20. சதுர்த்தி
6. பஞ்சமி                     21. பஞ்சமி
7. சஷ்டி                        22. சஷ்டி
8. சப்தமி                      23. சப்தமி
9. அட்டமி                      24. அட்டமி
10. நவமி                      25. நவமி
11. தசமி                       26. தசமி
12. ஏகாதசி                  27. ஏகாதசி
13. துவாதசி                 28. துவாதசி
14. திரயோதசி            29. திரயோதசி
15. சதுர்த்தசி               30. சதுர்த்தசி

கரணம்

ஒரு திதியின் முற்காலம், பிற்காலம் ஆகியவை கரணம் எனப்படுகின்றது. கரணம் என்பது திதியின் அரைப்பங்கு ஆகும். திதியை இரண்டாகப் பிரித்து முற்காலத்துக்கு ஒரு கரணமும், பிற்காலத்துக்கு ஒரு கரணமும் இருக்கும். அதாவது 30 திதிகளுக்கும் மொத்தமாக 60 கரணங்கள் உண்டு. ஏழு கரணங்கள் சுழல் முறையிலும், நான்கு கரணங்கள் சிறப்பான முறையிலும், மொத்தம் 11 கரணங்களின் பெயர்களை ஏற்படுத்தி, இவற்றை வைத்து ஓர் ஒழுங்கு முறையில் மொத்தமுள்ள 60 கரணங்களுக்கும் பெயர் கொடுத்துள்ளனர்.

11 கரணப் பெயர்களும் வருமாறு:
1. பவம்
2. பாலவம்
3. கௌலவம்
4. சைதுளை
5. கரசை
6. வனசை
7. பத்திரை
8. சகுனி
9. சதுஷ்பாதம்
10. நாகவம்
11. கிமிஸ்துக்கினம்

நட்சத்திரம்

நட்சத்திரங்கள் என்பது ராசிச் சக்கரத்தை ஒவ்வொன்றும் 13.33 பாகை அளவு கொண்ட 27 பகுதிகளைக் குறிக்கும். சந்திரன் பூமியைச் சுற்றிவரும் போது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எந்தப் பிரிவில் இருக்கிறதோ அந்தப் பிரிவுக்குரிய நட்சத்திரம் அந்த நேரத்தில் நடப்பதாகச் சொல்லப்படுகிறது. 27 நட்சத்திரங்களும் பின்வருமாறு:

1. அச்சுவினி 10. மகம் 19. மூலம்
2. பரணி 11. பூரம் 20. பூராடம்
3. கார்த்திகை 12. உத்தரம் 21. உத்திராடம்
4. ரோகிணி 13. அத்தம் 22. திருவோணம்
5. மிருகசீரிடம் 14. சித்திரை 23. அவிட்டம்
6. திருவாதிரை 15. சுவாதி 24. சதயம்
7. புனர்பூசம் 16. விசாகம் 25. பூரட்டாதி
8. பூசம் 17. அனுஷம் 26. உத்திரட்டாதி
9. ஆயிலியம் 18. கேட்டை 27. ரேவதி

யோகம்

சந்திரன் ஒவ்வொரு நட்சத்திரத்தையும் கடக்க எடுக்கும் காலப்பகுதி யோகம் எனப்படும். எனவே 27 நட்சத்திரங்களையும் கடக்கும் காலப்பதிகளுக்கு 27 பெயர்களைக் கொடுத்துள்ளனர். இவற்றை யோகம் என்பர்.

யோகம் என்பது, சூரியன், சந்திரன் என்பவற்றின் இருப்பிடங்களின் கூட்டுத்தொகை 13° 20' அளவால் அதிகரிப்பதற்கான காலப் பகுதியைக் குறிக்கும். எனவே ஒரு முழுச் சுற்றான 360° யில் 13° 20' அளவு கொண்ட 27 யோகங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் தனித்தனியான பெயர்களையும் பெற்றுள்ளன. இந்த யோகத்தைத் "தின யோகம்", "நித்திய யோகம்", "சூரிய சித்தாந்த யோகம்" போன்ற பெயர்களாலும் அழைப்பது உண்டு. ஒருவர் பிறக்கும் நேரத்தில் உள்ள யோகம் அவரது பிறந்த யோகம் ஆகும். ஒருவருடைய பிறந்த யோகம் அவருடைய உள்ளார்ந்த பண்புகளை அறிவதற்கு உதவும் என்கிறது இந்திய சோதிடம்.

1. விஷ்கம்பம்,2. பிரீதி, 3. ஆயுஷ்மான், 4. சௌபாக்கியம், 5. சோபனம், 6. அதிகண்டம், 7. சுகர்மம்,  8. திருதி, 9. சூலம், 10. கண்டம்,11. விருதி,12. துருவம்,  13. வியாகதம், 14. அரிசணம்,
15. வச்சிரம், 16. சித்தி, 17. வியாதிபாதம்,18. வரியான், 19. பரிகம்,  20. சிவம் 21. சித்தம்  22. சாத்தீயம்  23. சுபம்   24. சுப்பிரம்  25. பிராமியம்  26. ஐந்திரம்  27. வைதிருதி 

யோகத்தின் வரைவிலக்கணத்துக்கு அமைய, ஒரு குறித்த நேரத்தில் என்ன யோகம் என்பதைக் கணிப்பதற்குப் பின்வரும் சூத்திரம் பயன்படுகிறது:
(சூரியனின்_இருப்பிடம் + சந்திரனின்_இருப்பிடம்) / 13° 20' இதில் கிடைக்கும் ஈவு, விஷ்கம்பத்தின் தொடக்கத்தில் இருந்து கடந்து போன யோகங்களின் எண்ணிக்கையைக் குறிக்கும். எனவே அடுத்த யோகமே குறித்த நேரத்தில் இருக்கும் யோகம் ஆகும். மீதம் அடுத்த யோகத்தில் கடந்த கோண அளவைக் குறிக்கும்.

நடைமுறையில், ஆண்டு தோறும் அச்சில் வெளிவருகின்ற பஞ்சாங்கங்கள் ஒவ்வொரு நாளும் எந்த நேரத்தில் ஒரு யோகம் தொடங்கி எந்த நேரத்தில் முடிவடையும் என்பது போன்ற தகவல்களைத் தருகின்றன. இதனால், கணிப்பு எதுவும் இல்லாமலே ஒருவர் குறித்த நேரத்தில் எந்த யோகம் உள்ளது என்பதை இலகுவாக அறிந்துகொள்ள முடியும்.

இராசி

1. மேடம் (மேஷம்)
2. இடபம் (ரிஷபம்)
3. மிதுனம்
4. கர்க்கடகம் (கடகம்)
5. சிங்கம் (சிம்மம்)
6. கன்னி
7. துலாம்
8. விருச்சிகம்
9. தனு (தனுசு)
10. மகரம்
11. கும்பம்
12. மீனம்

கோள்கள்

1. சூரியன் (ஞாயிறு Sun)
2. சந்திரன் (திங்கள் Moon)
3. செவ்வாய் (Mars)
4. புதன் (அறிவன் Mercury)
5. குரு (வியாழன் Jupiter)
6. சுக்கிரன் (வெள்ளி Venus)
7. சனி (காரி Saturn)
8. இராகு (நிழற்கோள்)
9. கேது (நிழற்கோள்)

பஞ்சாங்கத்தில் இரு வகைகள் உள்ளன. 1. திருக்கணித பஞ்சாங்கம் 2. வாக்கிய பஞ்சாங்கம். வாக்கிய பஞ்சாங்கத்திற்கும் திருக்கணித பஞ்சாங்கத்திற்கும் அதிகபட்சமாக 17 நாழிகை வரை வேறுபாடு ஏற்படுவதுண்டு. அதாவது 6 மணி 48 நிமிசம் வரை இந்த வேறுபாடு ஏற்படும். அமாவாசை, பெளர்ணமி தினங்களில் இந்த வேறுபாடு மிகக்குறைவாக இருக்கும். அஷ்டமி, நவமி தினங்களில் இந்த வேறுபாடு அதிகமாக இருக்கும். தமிழக அரசு கோவில்களில் வாக்கிய பஞ்சாங்கமே பயன்படுத்தப்படுகிறது.

நாழிகை

நட்சத்திரம் / திதி  நாழிகை இருப்பு

நாழிகை என்பது பண்டைய கால நேர அளவாகும்.
தமிழர் இந்தக் கால அளவை முறையைப் பயன்படுத்தினர்.தற்பொழுது, பெரும்பாலும் சோதிடம், பஞ்சாங்கம் முதலியவற்றில் பயன்படுத்தும் 24 நிமிடங்கள் கொண்ட ஒரு கால அளவு. பகல் முப்பது நாழிகை; இரவு முப்பது நாழிகை. எனவே, ஒரு நாளில் (பகல் + இரவு சேர்ந்து) அறுபது நாழிகைகள் உள்ளன.

ஒரு நாழிகை என்பது 24 நிமையங்கள் கொண்ட கால அளவு. பகல் 30 நாழிகைகளையும், இரவு 30 நாழிகைகளையும் கொண்டது ஓரு நாள் எனப்பட்டது.

நாம் பஞ்சாங்கத்தில் ஒரு நட்சத்திரம் அல்லது திதி ஒரு யோகம் இத்தனை நாழிகை இன்று இருக்கும் என்று ஏதாவது எண்ணை குறிப்பிட்டு இருக்கும்   ஒரு நாழிகை என்பது எவ்வளவு நேரத்தை குறிக்கும்


24 நிமிடம் = ஒரு நாழிகை
60 நாழிகை = ஒரு நாள்
60 நிமிடம் = ஒரு மணி
24 மணி ஒரு நாள்

தமிழ் தேதி: சூரிய உதயம் முதல் மறுநாள் சூரிய உதயம் வரையும் உள்ள காலமாகும்.

ஆங்கிலத் தேதி: இரவு 12 மணி தொடக்கம் மறுநாள் இரவு 12 மணி வரையும் உள்ள 24 மணிகளைக் குறிக்கும்.

ஒரே மாதத்தில் இரண்டு பவுர்ணமி வந்தால் மலமாதம் என்றும், இரண்டு அமாவாசை வந்தால் விஷ மாதம் என்றும் சொல்வர். இந்த இரண்டிலுமே சுபநிகழ்ச்சி செய்வது கூடாது

வாக்கிய பஞ்சாங்கம்

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ரிசிகள் ஒன்று கூடி அருளி செய்த சுலோகங்களில் உள்ள கணித முறையை அப்படியே ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் எழுதப்படும் பஞ்சாங்கமாகும். திருத்தப்படாத பஞ்சாங்கமாக வாக்கிய பஞ்சாங்கம் வெளிவருகிறது. வாக்கியம் என்பது கணிதத்தில் மாறுதல் செய்யாமல் பழமையை அப்படியே பிரதிபலிப்பதாகும். தமிழ் நாட்டில் வாக்கியப் பஞ்சாங்கம் அதிகமாக பின்பற்றப்படுகிறது.

தமிழ் நாட்டில பற்பல வாக்கியப் பஞ்சாங்கங்கள் வெளியிடப்படுகின்றன: ஆற்காடு ஸ்ரீ சீதாராமையர் சர்வ முகூர்த்த பஞ்சாங்கம், திருநெல்வேலி வாக்ய பஞ்சாங்கம், ராமநாதபுரம் வாக்கியப் பஞ்சாங்கம், மஞ்சள் நிற 28-ஆம் நம்பர் பாம்புப் பஞ்சாங்கம், ஸ்ரீ காஞ்சி ஸ்ரீ ஆச்சாரியார் மடத்து பஞ்சாங்கம், சிருங்கேரி மடம் பஞ்சாங்கம், ஸ்ரீரங்கம் வாக்கிய பஞ்சாங்கம், ஸ்ரீப்ரசன்ன வெங்கடேச பெருமாள் தேவஸ்தான வாக்கியப் பஞ்சாங்கம், திருக்கோயில் அனுஷ்டான பஞ்சாங்கம் என்பவை புகழ்பெற்ற வாக்கியப் பஞ்சாங்க புத்தகங்களாகும்.

பிற மாநிலங்களில் திருக்கணிதப் பஞ்சாங்கம் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது.

அனைவருக்கும் மங்களகரமான சார்வரி வருடம்  தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
அன்புடன்
தமிழ் ஜோதிட தம்பதி
நாராயண ஐயர் ரங்கன்
உஷா ரங்கன்.

*ஏகாதசி ஸ்பெஷல் ! 4.4.20 !

கிருஷ்ணனுக்கு உகந்த ஏகாதசி....

"காயத்ரிக்கு நிகரான மந்திரமில்லை!
தாய்க்குச் சமமான தெய்வமில்லை!
காசியை மிஞ்சிய தீர்த்தமில்லை!
ஏகாதசிக்கு ஈடான விரதமில்லை!'
என்பது ஆன்றோரின் அருள்வாக்கு.

*ஏகாதசி விரதம் இருப்பது எப்படி ?*

ஏகாதசி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு பிரியமான நாளாகும்.ஏகாதசி அன்று விரதம் இருப்பதன் மூலம் நாமும், நமது குடும்பத்தினரும் பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் திருவருளை பெறலாம்.
மருத்துவரீதியாக,மாதம் இருமுறை வரும் ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பது நல்ல உடல் ஆரோக்கியத்திற்கும், மன நலத்திற்கும் உதவும்.

ஏகாதசி விரதம் இருப்பதை எல்லா சாஸ்திரங்களும் வலியுறுத்துகின்றன. ஏகாதசி விரதம் இருப்பதால் மற்றெல்லா விரதங்களின் பலனையும் அடையலாம். ஆனால் மற்றெல்லா விரதங்களை கடைபிடித்தாலும் ஏகாதசி விரதத்தின் பலனை அடைய இயலாது. மேலும் ஏகாதசி விரதத்தினை கடைபிடிக்காமல் தானிய உணவினை உண்பது, பாவங்கள் செய்த கர்மத்தை உண்டாக்கும். எனவே தான் ஏகாதசி அன்று குறிப்பாக தானிய உணவு வகைகள் தவிர்க்கப்படுகின்றன.

ஏகாதசி என்றால் என்ன?

சமஸ்கிருதத்தில் ஏகாதசி என்பது தமிழில் பதினொன்று என்று பொருள். இங்கு ஏகாதசி என்பது அமாவாசை யிலிருந்து 11வது நாளையும், பௌர்ணமியிலிருந்து 11வது நாளையும் குறிக்கும். இந்த இரண்டு நாள்களிலும் ஏகாதசி விரதத்தை கடைபிடிக்க வேண்டும்.

ஏகாதசி விரதம் இருப்பது  எவ்வாறு?

ஏகாதசி விரதத்தின் மிக முக்கியமான அங்கம் தானியங்களால் ஆன உணவை எவ்வகையிலும் உண்ணாமல் இருப்பதேயாகும்.

குறிப்பாக அரிசி, சாதம் மட்டுமல்லாமல் இட்லி, தோசை, சப்பாத்தி, உப்புமா போன்ற தானிய வகைகளால் செய்யப்பட்ட பலகாரங்களை உண்பதும் ஏகாதசி விரதத்தை முறிக்கும்.

நவ தானியங்களால் செய்யப்பட்ட உணவுகளும், பருப்பு வகைகளும், பயறு வகைகளும் (கடுகு உளுந்தம் பருப்பு தாளித்துக் கொட்டுதல் உட்பட) ஏகாதசி அன்று முற்றிலும் விலக்கப்பட வேண்டும்.

காய்கறிகளில் மொச்சை, பீன்ஸ், அவரை போன்ற பயறு வகைகளைச் சேர்ந்த காய்களும் விலக்கப்பட வேண்டும்.

சமையல் எண்ணெய் வகையில் சுத்தமான பசு நெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் தவிர மற்றெல்லா எண்ணெய் வகைகளும் விலக்கப்பட வேண்டும். இத்தனை கவனம் தேவைப்படுவதால் முதல் தர பக்தர்கள் தண்ணீர் கூட அருந்தாமல் (நிர்ஜல ஏகாதசி) ஏகாதசி விரதம் கடைபிடிப்பார்கள். அது முடியாதவர்கள் துளசி தீர்த்தம் மட்டும் உட்கொண்டு விரதம் இருப்பர். அதுவும் முடியாதவர்கள் பசும்பால், தயிர், பழங்கள் மட்டும் உட்கொண்டு விரதம் இருப்பர். அதுவும் முடியாதவர்கள் சமைத்த காய்கறிகளைச் சேர்த்துக் கொள்வர்.

ஏகாதசி விரதம் ஆரம்பிப்பதும், முடிப்பதும் எவ்வாறு?

ஏகாதசிக்கு முந்தைய நாளான தசமி அன்று கடைசி உணவை  சூரிய அஸ்தமனத்திற்குள்  உட்கொண்டு விரதம் ஆரம்பிக்கலாம் ஏகாதசிக்கு முந்தைய நாளான தசமி அன்று கடைசி உணவை  சூரிய அஸ்தமனத்திற்குள்  உட்கொண்டு விரதம் ஆரம்பிக்கலாம்.

அதே போல் ஏகாதசிக்கு மறுநாளான துவாதசி அன்று வைஷ்ணவ நாட்காட்டிகளில் காட்டியபடி குறிப்பிட்ட நேரத்தில் ஏகாதசி விரதத்தை முடிக்க வேண்டும். விரதத்தை முடிப்பது என்பது நீர் கூட அருந்தாதவர்கள் துளசி தீர்த்தம் உட்கொண்டும், மற்றவர்கள் பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு நைவேத்தியமாக செய்யப்பட்ட தானிய உணவை உட்கொள்வதுமாகும்.

ஏகாதசி விரதத்தைக் கடைபிடிப்பது எந்த அளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் அடுத்த நாள் துவாதசி அன்று குறிப்பிட்ட நேரத்தில் விரதத்தை முடிப்பதாகும்.

ஒவ்வொரு மாதமும் வரும் ஏகாதசி நாள் மற்றும்  விரதம் முடிக்க வேண்டிய நேரம் குறித்த காலண்டர் இஸ்கான்   கோயில்களில் கிடைக்கும்.

ஏகாதசி அன்று செய்ய வேண்டியதும்,
செய்யக் கூடாததும் என்ன?
ஏகாதசி முழுவதும் பகவானின் நாமம் சொல்வது, அதிலும் குறிப்பாக கலியுக தாரக மந்திரமான ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண; கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே; ஹரே ராம ஹரே ராம; ராம ராம ஹரே ஹரே” எனும் மஹாமந்திரத்தைத் தொடர்ந்து உச்சரிப்பது மிகவும் சிறந்தது. ஏகாதசி அன்று அவசியம் கோயிலுக்குச் சென்று ஸ்ரீகிருஷ்ணரை தரிசிக்க வேண்டும். ஸ்ரீமத்பாகவதம், பகவத் கீதை  நூல்களை படிப்பதும், கேட்பதும் மிகவும் நல்லது.

ஏகாதசி அன்று சினிமா செல்வதோ, பரமபதம் ஆடுவதோ, வீண் பேச்சுக்களில் காலத்தை விரயம் செய்வதோ அல்லது வீணாகப்படுத்துத் தூங்குவதோ விரதத்திற்கு சற்றும் உதவாது. தவிர, திருமணம் போன்ற உலக காரியங்களை ஏகாதசி அன்று தவிர்ப்பது நல்லது.

பாவங்களை நீக்கும்

முறைப்படி இருக்கும் ஏகாதசி விரதம் ஒருவரை பாவங்களிலிருந்து  விடுவிப்பதுடன் விரதம் இருப்பவர்களின் மூதாதையர்களையும்  நற்கதி அடையச் செய்யும்.

ஏகாதசியும், கீதையும்

ஏகாதசி அன்று பகவத்கீதையை பாராயணம் செய்வது, கீதை உரையை கேட்பது இவை மிகவும் சிறந்தது. தவிர பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு நெய் தீப ஆரத்தி காட்டுவதும், ஹரே கிருஷ்ண மஹாமந்திர ஜபம் செய்வதும் நல்லது.

ஓம் நமோ நாராயணாய !

சுவஸ்தி ஸ்ரீ 1195 விகாரி வருடம் பங்குனி மாதம் 20 ஆம் நாள் (02-04-2020) வியாழக்கிழமை ஸ்ரீராமநவமி..

”ஸ்ரீராமநவமி மகிமை”

மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ராமாவதாரம். சித்திரை மாதத்தில் வளர்பிறை நவமியன்று இவர் அவதரித்தார்.

சில ஆண்டுகளில் இந்த விழா, பங்குனி மாதத்திலும் வரும். தசரதரின் மகனாகப் பிறந்த ராமன், தந்தையின் சொல் கேட்டு அவர் சொன்ன ஒரு வார்த்தைக்காக, காட்டிற்குச் சென்றார்.

14 ஆண்டுகள் வனவாசம் இருந்தார். இவ்வேளை யில் சீதையையும் பிரிந்தார். ஏகபத்தினி விரதனாக இருந்த ராமபிரானின் வாழ்க்கை, மனிதர்களுக்கு பல அரிய வாழ்க்கை முறைகளை போதிக்கிறது. ராமன் காட்டிய அயணம் (பாதை) என்பதால்தான், இவரது வரலாற்று நூல் ராமாயணம் எனப் பெயர் பெற்றது.

வழிபடும் முறை: ராமநவமி நாளில் ராமர் கோயில்க ளுக்குச் சென்று, அவருக்கு துளசி அர்ச்சனை செய்து வழிபடலாம். பெருமாள் கோயி ல்களுக்கும் சென்று, சுவாமியை வணங்கி வரலாம். அன்று முழுதும் ராமபிரானை எண்ணிக்கொண்ட ஸ்ரீராமஜெயம் என்னும் ராம மந்திரம் உச்சரிக்கலாம்.

பலன்: ராமபிரானை வழிபடுவதால் துன்பத்தில் கலங்காத மனநிலையும், எடுத்த செயல்களில் வெற்றியும் கிடைக்கும்.

மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்களுள் ராம அவதாரமே போற்றிப் புகழப்படுகிறது. தாரக மந்திரத்தினை தனதாகக் கொண்ட அவதாரம் அது. இறைவன் தனது அத்தனை வல்லமையையும் துறந்து சாதாரண மானிடனாக, பெற்றோருக்கு மகனாக வாழ்ந்து காட்டிய அவதாரம் ராமாவதாரம்.

பகவான் மானிடராக அவதரித்தது மொத்தம் மூன்று முறை. வாமனம், ராமர் மற்றும் கிருஷ்ணர். 
இவற்றில் ராமாவதாரம் தவிர மற்ற இரு அவதாரங்க ளிலும் தனது கடவுள் தன்மையை வெளிப்படுத்தி இருக்கிறார் பகவான்.

ஆனால், ராமாவதாரத்தில் மட்டுமே அடுத்து என்ன நடக்கும் என்று அறியாதவ ரைப் போல் எளிய வாழ்வு வாழ்ந்து காட்டினார். அதனாலேயேதான் ராமாவதாரம் சிறப்புப் பெற்றதாக ஆகிறது.

ஏன் நவமியில் அவதரித்தார்?

ஒருசமயம் அஷ்டமி, நவமி திதிகளின் தேவதைகள் கவலையில் ஆழ்ந்திருந்தன. பதினாறு திதிகளில் தங்களை மட்டுமே விலக்கி வைத்து எந்தக் காரியத்துக்கும் தங்களை எவரும் தேர்ந்தெடுக்காம லிருந்த ஏக்கம் அவைகளைப் பீடித்திருந்தது, பெருமாளிடமே சென்று முறையிட்டன. திதிகளின் ஏக்கம் தீர்க்க எண்ணிய தீனதயாளன்,

இனி வரும் எனது இரு அவதாரங்களும் நவமியிலும், அஷ்டமியிலுமே நிகழும். அதனால் உங்கள் இருவரை யும் மக்கள் போற்றித் துதித்து மகிழ்வார்கள் என்று வரமளித்தார். அதனால்தான் ராம அவதாரம் நவமியிலும் கிருஷ்ண அவதாரம் அஷ்டமியிலும் நிகழ்ந்தன.
ராம நாம மகிமை:
ராமபிரானாலேயே சிறந்த பக்தன் என்று போற்ற ப்பட்ட அனுமனுக்கு வாக்கு, வன்மை, வீரம், சாதுரியம் என அனைத்துமே ராமநாமத்தின் மகிமையால்தான் வந்தது என்று கூறலாம். கடல்தாண்டிச் சென்ற அனுமனை சிம்ஹிகை எனும் அரக்கி வழிமறித்த போது, சிறிய உரு எடுத்து அவள் வாய்க்குள் புகுந்து வெளியேறிச் செல்ல அனுமனுக்கு உதவியது ராமநாமம்தான்.

அவ்வளவு ஏன், ராமரே அருகில் இருந்தபோதும், அவரது திருநாமத்தின் மகிமையால்தானே பெரும்பாறைகளையும் கடலில் மிதக்கச் செய்து பாலம் அமைத்தார்கள் வானர வீரர்கள்!

ராமநவமி, பங்குனி அல்லது சித்திரை மாதம் வளர்பிறை நவமி திதியில் அமைகிறது. ராமபிரானின் ஜனன காலத்தில் ஐந்து கிரகங்கள் உச்சம் பெற்று விளங்கின. அதனால் ராமசந்திரனின் ஜாதகத்தை வீட்டில் வைத்து பூஜித்தால் நன்மை பயக்கும் என்பது ஐதீகம்.

ஸ்ரீராமநவமி உற்சவம் இருவிதமாகக் கொண்டாடப்படுகிறது. ஒன்று, ஜனன உற்சவம் மற்றொன்று கர்ப்ப உற்சவம்.

கர்ப்ப உற்சவம்:

ராமநவமிக்கு ஒன்பது நாட்களுக்கு முன்னாலேயே இந்த உற்சவம் தொடங்கப்படும். தினமும் ராமர் படத்துக்கு அர்ச்சனை செய்து, ராம நாமத்தை ஜபித்து, விரதமிருந்தும் வழிபடுவார்கள். சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, வெண்பொங்க ல் போன்ற பிரசாதங்களை நிவேதனம் செய்து பக்தர்களுக்கு விநியோகிப்பார்கள்.

ஸ்ரீராமநவமி அன்று பானகமும் நீர்மோரும் கட்டாயம் நிவேதனம் செய்வார்கள். காரணம், கானகத்தில் விஸ்வாமித்திர முனிவரோடு வாழ்ந்த போது அவர்கள் தாகத்துக்கு நீர்மோரும் பானகமும் பருகினார்கள்.

அதையொட்டியே இவை நிவேதனம் செய்யப்படுகி ன்றன. அன்று முழுவதும் ராமநாமத்தை ஜபித்து உபவாசம் இருந்தால் வாழ்க்கையில் சகல சம்பத்து களோடு வெற்றியும் நிம்மதியும் உண்டாகும் என்பது நிச்சயம்.

ஜனன உற்சவம்:

இந்த உற்சவம் ஸ்ரீராமநவமி அன்று தொடங்கி பத்து நாட்கள் நடத்தப்படும். பத்தாம் நாள் சீதா கல்யாண மும் பட்டாபிஷேகமும் மிகச் சிறப்பாக நடைபெறும். இந்தப் பத்துநாட்களிலும் பஜனை, ராமாயண பிரவச னம் என கோலாகலமாகக் கொண்டாடுவார்கள் பக்தர்கள்.

பானகம் நீர்மோரோடு ஆரம்பிக்கும் நிவேதனம் பத்தாம் நாள் கல்யாண ஆராதனையாக நிறைவு பெறும். மானிடத் திருமணத்துக்குச் செய்வது போலவே பலவகையான பதார்த்தங்கள் செய்து அன்னதானமும் நடைபெறும். இந்தக் கல்யாண விருந்தை உண்டால் மனச்சோர்வு, கவலை ஆகியவை நீங்கும்.

ஆரோக்யம் உண்டாகும் என்பர். உற்சவத்தின் கடைசி தினத்தன்று அதிகாலை முதல் பொழுது சாயும் நேரம் வரை பக்தர்கள் ராமநாமத்தை உச்சரித்தபடி இருப்பர்.

இதை அகண்ட நாம பஜனை என்று சொல்வார்கள். தீராத கவலை, துக்கம், வறுமை, மனப்பிணி போன்றவை யாவும் அகண்ட நாமத்தில் கலந்துகொ ண்டு ராமநாமத்தை உச்சரித்தால் சூரியனைக் கண்ட பனிபோல் மறைந்து விடும்.

ராம நவமி விரதம் இருக்கும்முறை:

மனதில் இன்ன காரணத்துக்காக விரதம் இருக்கிறே ன். அதனை நல்லபடியாக முடித்துக் கொடு ராமா! என்று வேண்டிக்கொண்டு இந்த விரதத்தை ஆரம்பிக்கவேண்டும்.

அவரவர் வசதிப்படி கர்ப்பக்கால விரதம் அல்லது ஜனனகால விரதம் இரண்டில் ஒன்றை எடுத்துக் கொள்ளலாம். எதை தேர்ந்தெடுத்தாலும் ஒன்பது நாட்கள் தொடர்ந்து அனுசரிப்பதே சிறந்தது. கர்ப்பக்கால விரதம் எடுப்பவர்கள்.

ராமநவமி வருவதற்கு முந்தைய அமாவாசை அன்றிலிருந்து விரதத்தைத் தொடங்க வேண்டும். நீராடி ராமர் படத்துக்குப் பூவும் பொட்டு வைத்து வணங்கவேண்டும்.

குறைந்தது 108 முறை ஸ்ரீராமஜெயராம ஜெய ஜெய ராம என்று மனதார உச்சரிக்கவேண்டும். பின்னர், வழக்கமாகன பணிகளுக்குச் செல்லலாம். பகலில் ஒரே ஒரு முறை மட்டும் சைவ உணவை உண்ணலாம். மற்ற நேரங்களில் பால், பழம், மோர் அருந்தலாம். புகையிலை, வெற்றிலை பாக்கு போன்றவற்றைக் கட்டாயமாக விலக்கவேண்டும்.

ஸ்ரீராமநவமி அன்று ராமர் படத்தை அலங்கரித்து மஞ்சள் வஸ்திரம் சாத்தி வழிபடவேண்டும். பின்னர் மனதை ஒரு நிலைப்படுத்தி ஸ்ரீராமஜெயம் என்று 108,1008 என அவரவர் வசதிப்படி எழுதலாம்.

நீர் மோர் பானகம் ஆகியவற்றோடு சிறப்பான விருந்து சமையலும் செய்து ராமருக்குப் படைக்க வேண்டும். நிறைவாக வடையையும், வெற்றிலையை யும் அனுமனுக்குப் படைக்க வேண்டும்.

பின்னர் விரதத்தை நிறைவு செய்துவிட்டேன். நல்லவை யாவும் அருளிக் காப்பாயாக! என்று வேண்டிக்கொண்டு உணவு அருந்தலாம். அன்றைய தினம் கட்டாயம் நீர் மோரும், பானகமும் பருக வேண்டும். அன்று இரவு லேசான உணவாக எடுத்துக்கொள்ளுதல் நலம்.

இப்படி ஸ்ரீராமநவமி விரதத்தை கடைப்பிடித்து வந்தால் மனநிம்மிதி, வெற்றி, செல்வம் ஆகியவை பெருகும். இதே விரதத்தை ஜனனகால விரதமாக (இதனை கல்யாண விரதம் எனவும் சொல்வதுண்டு) அனுஷ்டிக்க நினைப்பவர்கள் ஸ்ரீராமநவமியிலிருந்து தொடங்கி ஒன்பது நாட்கள் மேற்சொன்னபடி விரதம் இருக்கவேண்டும்.

பத்தாம் நாளன்று காலை ராமருக்கு வழிபாடுகள் செய்து கல்யாண சமையல்போல விருந்துணவு செய்து படைக்க வேண்டும். நிறைவில் வடையும் வெற்றிலையும் அனுமனுக்கு சமர்ப்பணம் செய்து விரதத்தை முடிக்க வேண்டும்.

இந்த வகையில் விரதத்தைக் கடைப்பிடித்தால் திருமணத் தடைகள் நீங்கும். தம்பதியரிடையே ஒற்றுமை ஏற்படும். மனக்குழப்பங்கள் தீர்ந்து வாழ்வில் இன்பம் பெருகும்.

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே

இம்மையே ராமவென் றிரண்டெழுத்தினால்! !

ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !

பயமோ.. பதட்டமோ.. வேண்டாம்.. நம்பிக்கை கொள்வோம்.. அசூரன் கொரோனோ அழிந்தொழுவான்.. இதோ.. 
27-03-2020  ல் குருபகவான்  தனுசு இராசியில் இருந்து மகர இராசிக்கு அதிசாரம் ஆகி இருக்கிறார்..  இந்த அதிசார குரு பகவான் உச்ச செவ்வாயின் சேர்க்கையினால் நீச்ச பங்க இராஜ யோகத்தை அடைந்து பூமியை விரைவில் ரக்ஷிக்க உத்திரவாதம் தருகிறார். மிதுன இராகுவின் அயன சயன விரயபாவமான  கடகத்திற்கு  இதனால் குருமங்கள  திருஷ்டி  உண்டாகிறது.                                                                                       காலபுருஷ பாவத்தில் இது உலகுக்கு நன்மை தரும்.  இது நமக்கு நல்லதே. இந்த குரு + செவ்வாய் கூட்டணி என்பது நமக்கு தெம்பு தருவது.  இந்த  நீச்ச பங்க இராஜ யோக குருவின் அருள் ,  கெட்ட காலத்தை சக்தி இழக்கவைக்கும்.  பூமி முழுவதும் விஷவீரியம் உள்ள இந்த நேரத்தில் குருவின் பொற்கதிர்கள்  அவை அனைத்தையும் தூசென விரட்டிவிடும். 

குருபகவானை தொழுவதோடு, குரு பகவானின் அருள் பெற்றிட 
மஞசள் வண்ணத்திலான அனைத்து வித உபாயங்களைக் கொள்ளலாமே..  


வீட்டுக்குள் மற்றும் வீட்டு வாசலில்  நன்றாக மஞ்சள் நீர் தெளிக்கலாம். 

மஞ்சள் மற்றும் சிவப்பு நிற ஆடைகள் அணிவதால் நமக்கு மங்கலமும் பலமும் உண்டாகும். 

வீட்டில் மூலைக்கு மூலை கர்ப்பூரத்தை சற்று தூள் செய்து போடுங்கள்.  கற்பூர மணத்தை நன்கு நுகருங்கள்.   இது ஆக்சிஜனை அதிகம் தரும்.  கற்பூர ஆரத்தியை உள்ளங்கைகளால் தொட்டு இரண்டு கண்களிலும்,  உச்சந்தலையிலும்,  தொண்டையிலும் ஒற்றிக்கொண்டு தடவிவிடுங்கள்.  இதன் பாதுகாப்பு என்பது காலம்காலமாக நாம் நமது பாரம்பரியத்தில் செய்து வந்ததுதான். 

மிக சக்திவாய்ந்த அருள் அலைகளை ஏற்படுத்தக்கூடிய கந்த சஷ்டி கவசத்தை வீட்டில்  பாராயணம் செய்யுங்கள். கந்தம் என்றால் ஒருங்கிணைத்தல் என்று பொருள்.   இந்த கந்த சஷ்டி கவசமானது உலகத்தின் நேர்மறை காந்த சக்தியை  ஒருங்கிணைத்து வலு கூட்டி   எதிர்ப்பு சக்தியையும் ஆரோக்கியத்தையும் அதிகப்படுத்தும். 

மாயமாக நின்று போர்  புரிந்த சூரபத்மன் என்னும் அசுரனை அழித்து  மக்களை எல்லாம் காத்து ,  விஸ்வரூபம் காட்டி அருளிய முருகப்பெருமானின் அருள்...  இப்போதும் கண்ணுக்குத் தெரியாத மாயக்  கிருமியாக இருந்துகொண்டு நம்மை எல்லாம்  துன்புறுத்திக்கொண்டு இருக்கும் இந்தக்  கொரோனா வைரஸையும்  அழித்து  மறுபடியும் அருள் செய்யும்.  வெற்றிவேல் இப்போதும் நம்மைக் காத்து அருளும்.  அவனையே சரணடைவோமாக. 


  

தளத்தை செய்தியோடை மூலம் வாசிப்பவர்கள்

வாசகர்கள்

எங்களின் முதன்மை வலைத்தளம். Our Main Web Site

விருந்தினர் வருகை

சமீபத்தில் வந்தவர்கள்

இதை படித்தவர்கள் படித்தது

அதிகம் படிக்கப்பட்டவை