தமிழ் ஜோதிடம் ஜாதகம்

ஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், வாஸ்துசாஸ்திரம் மூலம் வருங்காலம் அறிய "ஸ்வாதி ஜோதிட ஆய்வகம்" உங்களை அன்புடன் வரவேற்கிறது.

எழுதியவை அனைத்தும்

 #கார்த்திகை_தீபம்_ஸ்பெஷல்


1196 சார்வரி வருடம் கார்த்திகை மாதம் 14ஆம் நாள் 29 11 2020 ஞாயிற்றுக்கிழமை திருக்கார்த்திகை

தீபத்திருநாளம் கார்த்திகைத் திருநாள் வாழ்த்துக்கள்..

திருக்கார்த்திகை தீபத் திருநாள் 29-11-2020. ஞாயிற்றுக்கிழமை..

ஒவ்வொரு வருடமும், கார்த்திகை மாதத்தில், பரணி நட்சத்திர நாளில்  பகலில் மட்டும் ஒருபொழுது சைவம் உண்டு கார்த்திகையன்று அதிகாலையில் நீராடி இறைவனை வழிபட்டு நீர் மட்டும் அருந்தி இரவு கோயிலுக்குச் சென்று தரிசனம் பெறுவர். மறுநாட்காலையில் காலைக்கடன்களை முடித்து  நீராடி பாரணை அருந்தி விரதத்தை நிறைவு செய்வர். பன்னிரண்டு ஆண்டுகள் இவ்விரதம் இருப்பவர்கள் வேண்டும் வரங்களைப் பெறலாம் என்பது ஐதீகம்.

பௌர்ணமி நிலவு கிழக்கு வானில் தென்படும் வேளையில் வீட்டு வாசலில்  வாழைக்  குற்றி   நாட்டி  வைத்து  அதன் மேல் தீப பந்தம் ஏற்றியும் வீடுகளுக்குள்ளும் வெளியிலும்  சிட்டி விளக்குகளில்  தீபமேற்றி நேர்த்தியாக அலங்கரித்து வீடுகளை தீபங்களால் அழகுபடுத்தி வழிபடுவர்.

கார்த்திகை நட்சத்திரத்தன்று பூரணை கூடுகின்ற மாதம் கார்த்திகை ஆகும்.இதனால் இக்கார்த்திகை நாள் திருக்கார்த்திகை எனப்படுகிறது. கார்த்திகை நட்சத்திரம் ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களைக் கொண்டிருந்த போதிலும் அதிலுள்ள ஏழு நட்சத்திரங்கள் பிரகாசமானவை. இதிலுள்ள மிகப்பிரகாசமான ஆறு நட்சத்திரங்களே கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் (Pleiades) எனப்படுகிறது.  

திருவண்ணாமலையில், காலையில் பரணி தீபம் ஏற்றியவுடன், மாலை மலையில் இத்தீபம் ஏற்றப்படும். இத்தீபம் சிவன் அக்னி பிழம்பாக,நெருப்பு மலையாகநின்றார் என்ற ஐதிகப்படி மலையில் தீபம் ஏற்றப்படுகிறது. இத்தீபம் ஏற்றும் மலையானது 2668 அடி உயரம் கொண்டது. இம்மலை மீது தீபம் ஏற்ற செம்பு,இரும்பு கொப்பரை கொண்டு தயாரிக்கப்பட்ட கொப்பரையில் தீபம் ஏற்றுவர்.

இக்கொப்பரையை 1668-ல் பிரதானிவேங்கடபதி ஐயர் என்பவர் வெண்கல கொப்பரை செய்து கொடுத்தார்.பின்பு 1991-ல் இரும்பினால் உருவாக்கப்பட்ட கொப்பரை தற்போது உள்ளது. இது பக்தர்களின் உபயம் ஆகும். இக்கொப்பரையை மலை மீது வைக்கும் உரிமை பெற்றவர் பர்வத ராஜகுலத்தினர் ஆவர். இத்தீபம் ஏற்ற சுமார் 3000 கிலோ மேற்பட்ட நெய்யும்,10O0 மீட்டர் காட துணியும் கொண்டு ஏற்றப்படுகிறது. 2020 இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தொடர்ந்து கொரோனவைரஸ் தாண்டவமாடியது. எனவே அனைத்து வழிபாடு தலங்களும் சுமார் 7 மாதங்களுக்கு பின்பு தற்போது தான் வழிபாடுகள் பொதுமக்கள் இன்றி நடத்தப்பட்டு வருகிறது. இறையருளால் நவம்பர் 25 பின்பு வரும் தெய்வீகம் ராக்கர்ஸ் முன்புபோல் சிறப்பாக நடைபெற நாம் பிரார்த்திப்போம்

நல்லதோர் நாளில் நாமும் விரதம் அனுஷ்டித்து, கைமேல் பலன் கிடைத்திட ஆர்வத்துடன் பிரார்த்தனைகள் மேற்கொள்வோம்.. இவற்றுள், முக்கியமாக, ஒரு இல்லத்தில் ஐந்து அல்லது நான்கு பேர் அதாவது தாய், தந்தை, மகன் மகள் என இருப்பினும் அன்னை மட்டுமே ஆன்மீக வழிபாடுகளில் சிரத்தை கொள்வதும், ஏனையோர் வழிபாடு பிரார்த்தனைகளில் சிரத்தையின்றி இருப்பதும் காண முடிகிறது.  

அவ்வாறின்றி எந்த நட்சத்திரம், எந்த ராசி மற்றும் லக்னம் என்ற அமைப்பில் ஜாதகத்தில் இருந்தாலும்,  பொதுவாக ஆன்மீக ஈடுபாடுகளைத் தூண்டக்கூடிய குருபகவான், புத பகவான், வளர்பிறை சந்திரபகவான் மற்றும் கேது பகவான் ஆகியோரது ஜாதகத்தில் அமர்வு அடிப்படையில், இன்னாருக்கு பிரார்த்தனையில் அக்கரை இருக்கும், இன்னாருக்கு இருக்காது என அறிதல் உண்டு.  அப்படி அறிந்து கொண்டபின் ஆன்மீக ஈடுபாடு குறைவாகவோ, அறவே இன்றி உள்ளவர்களுக்கும் ஆன்மீக ஈடுபாடு தூண்டவும், அதன் பயனை உணர்ந்து எதிர்காலத்தில் நமக்கு பிரார்த்தனையுடன் கூடிய வழிபாடுகளினால் தோஷங்களாக உள்ளவற்றையும், யோகங்களாக மாற்றிட இயலும் என்ற நம்பிக்கை ஏற்பட வேண்டும். 

மேலும் விசேஷ காரிய சித்தி வழிபாடுகளினால், தொழில், வியாபாரம், கல்வி, ஆரோக்கியம், வெளிநாடு பயணம் ஆகிய அனைத்து வகை உயர்வினையும் ஜாதக அமைப்பில் உள்ள கட்டங்களின் மூலம் எதிர்கால பலனை அறியவும், கெடுதல்களை முன்கூட்டியே அறிந்து கொண்டு, தவிர்ப்பதற்குரிய எளிய வழிபாடுகளையும் மேற்கொள்ள வேண்டும். சுபம்.

ஜோதிட தம்பதி நாராயணஐயர் ரெங்கன் உஷா. கைபேசி. 9443423897

7904779435

04622906300

மேலும் திருக்கார்த்திகை தகவல்கள் அறிவோமா!


மட்டைத் தேங்காயைத் தானமாகக் கொடுங்கள் கார்த்திகை தீபம் அன்று.

காஞ்சி மகாபெரியவர் காலத்தில், காஞ்சிபுரம் திருமடத்தில் கார்த்திகை திருவிழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படும். இரண்டு நாட்கள் முன்னதாகவே மடத்தைச் சுத்தப்படுத்தும் பணி துவங்கி விடும். வாழை மரங்கள், தோரணங்கள் கட்டி அலங்காரம் செய்வார்கள். 


திருக்கார்த்திகையன்று அதிகாலை மகாபெரியவர் ஆத்ம ஸ்நானம் செய்து, பூஜைகள் செய்வார். மடத்திலுள்ள சந்திர மவுலீஸ்வரருக்கு அன்று சிறப்பு பூஜை நடத்தப்படும். பெரிய, சிறிய அகல் விளக்குகள் ஏராளமாக மடத்துக்கு கொண்டு வரப்படும். விளக்கேற்றும் நேரத்துக்கு முன்னதாகவே, அதில் திரியிட்டு இலுப்ப எண்ணெய் ஊற்றி தயார் நிலையில் வைக்கப்படும்.


மாலையில், பெரியவர் ஸ்நானம் செய்வார். பின் ஆத்மபூஜை செய்வார். அதன் பின் ஒரு தீப்பந்தத்தில் "குங்குளயம்' என்னும் தீபம் ஏற்றப்படும். அவ்வாறு ஏற்றும் போது மந்திரங்கள் ஒலிக்கும். சிவ சகஸ்ரநாமம், லிங்காஷ்டகம், சிவ அஷ்டோத்ர பாராயணம் ஆகியவை செய்யப்பட்டவுடன், அவல், நெல் பொரி போன்றவற்றுடன் வெல்லம் கலந்து உருண்டைகளாகச் செய்து சுவாமிக்கு நைவேத்யம் செய்வார்கள். பிறகு தீபங்கள் வரிசையாக ஏற்றப்படும். 


அப்போது ஏராளமான பெண்கள் மடத்திற்கு வருவார்கள். அவர்கள் அனைவருக்கும் மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, மட்டைத் தேங்காய் ஆகியவற்றைப் பலரும் தானமாகக் கொடுக்கும் படி மகாசுவாமிகள் சொல்வார். 


பலரும் அவ்வாறு தானம் செய்வர். அப்போது பக்தர்களிடம் பெரியவர், ""மட்டைத் தேங்காயைத் தானமாகக் கொடுப்பதால் பூர்ண பலன் ஏற்படும். தேக ஆரோக்கியம் நிலைக்கும். நீண்டநாள் கோரிக்கை நிறைவேறும் (இஷ்ட காம்யாத்த பூர்த்தி)'' என்று அறிவுரை சொல்வார். 


அது மட்டுமல்ல, "உங்கள் உடன்பிறந்த சகோதரிகளுக்கு பூ, பழம், வெற்றிலை பாக்கு, மட்டைத் தேங்காய் ஆகியவற்றை கார்த்திகை அன்று அவசியம் கொடுங்கள். இதைக் கொடுத்த சகோதரர்களும், பெற்றுக் கொண்ட சகோதரிகளும் ஆயுள்விருத்தியுடன் திகழ்வர். அவர்களிடையே உறவு பலப்படும். கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் எல்லாரும் மடத்தின் அருகிலுள்ள ஸ்ரீகச்சபேஸ்வரர் கோயிலுக்குச் செல்லுங்கள். அங்கு கொடி மரம் அருகிலுள்ள சூரியனை வணங்குங்கள். அத்துடன், கார்த்திகை பவுர்ணமிஅன்று தோன்றும் சந்திரனையும் வணங்க வேண்டும். இதனால் வாழ்வே பிரகாசிக்கும்,'' என்றும் பெரியவர் சொல்வார்.


கார்த்திகை விளக்கேற்றுவதற்கு மடத்தில் இலுப்ப எண்ணெய் பயன்படுத்துவதற்குரிய காரணத்தையும் பெரியவர் சொல்லியுள்ளார். வீடுகளிலும் கார்த்திகையன்று இலுப்ப எண்ணெய் ஊற்றி விளக்கேற்றுங்கள். காரணம், இந்த எண்ணெய் முருகப்பெருமானுக்கு விருப்பமானது. மேலும், எதிரிகளின் தொல்லை, கடன் தீர்தல், ஆயுள்விருத்தி, சகோதர உறவு வலுப்படுதல் ஆகிய நற்பலன்கள் கிடைக்கும் என்று அருளாசி வழங்குவார். மொத்தத்தில், கார்த்திகை தீபம் என்பதே சகோதர பாசத்தை வளர்க்கும் திருவிழா என்பார் பெரியவர். 


எல்லாருக்கும் கார்த்திகை அப்பம் உள்ளிட்ட பிரசாதம் வழங்கப்படும். ஆனால், பெரியவர் மட்டும் அரை பழம், சிறிது பால் பிட்சையாக ஏற்றுஉண்பார். சகோதர பாசத்தை வளர்க்கும் கார்த்திகைத் திருவிழாவில் மகாபெரியவரின் அருளாசி நம் எல்லாருக்கும் கிடைக்கட்டும்.


ஹர ஹர சங்கர ! ஜெய ஜெய சங்கர !

0 மறுமொழிகள்

Post a Comment

You can contact us for consultation உங்களுக்கு ஆலோசனைகள் தேவைப்பட்டால் எங்களை தொடர்பு கொள்ளவும்.
எங்கள் முகவரி Address
ஜோதிட கலைமாமணி - ஜோதிட தம்பதி உஷா ரங்கன்
27 A (மேல்மாடி) சிவன் மேற்கு ரத வீதி
பாளையம்கோட்டை - 627002
திருநெல்வேலி மாவட்டம்.
தமிழ்நாடு. இந்தியா
Tmt. A. UshaRengan D.Astro.,
Consultant Astrologer,
Swathi Jothidha Aivagam,
27 A, Sivan Koil West Car Street,
Palayamkottai - 627 002
Tirunelveli District.
Tamil Nadu India.
தொலைபேசி: 94434 23897, 94425 86300, 0462 2586300
மின்னஞ்சல்:
tamiljoshier@gmail.com
joshier_urrao@yahoo.com
usharengan@hotmail.com
joshier_usharengan@dataone.in

For Consultation, please visit us or contact us through letter, phone or e mail only. Do not post your questions in the comment.

ஜாதக ஆலோசனை பெற எங்களை நேரில் சந்திக்கலாம். அல்லது கடிதம், தொலைபேசி, மின்னஞ்சலை மூலம் தொடர்பு கொள்ளவும். உங்கள் கேள்விகளை மறுமொழியில் அனுப்ப வேண்டாம் என்று கேட்டு கொள்கிறோம்

தளத்தை செய்தியோடை மூலம் வாசிப்பவர்கள்

வாசகர்கள்

எங்களின் முதன்மை வலைத்தளம். Our Main Web Site

விருந்தினர் வருகை

சமீபத்தில் வந்தவர்கள்

இதை படித்தவர்கள் படித்தது

அதிகம் படிக்கப்பட்டவை