நான்குநேரி ஸ்ரீவானமாமலை பெருமாள் திருக்கோவில் குடமுழுக்கு 29 ஜூன் 2018
JOTHIDA KALAIMAMANI USHA RENGAN
0
மறுமொழிகள்
அன்புடையீர்,
திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரியில் ஸ்ரீவானமாமலை பெருமாள் ஆலயம் நாம் வழிபட்டு சகல வளங்களும் பெறுவதற்கான சிறப்பானதொரு கண்கண்ட விஷ்ணு ஆலயம். 108 வைணவத்திருத்தலங்களில் ஒன்று. இவ்வலாயத்தில் உள்ள எண்ணெய் மிகச் சிறப்பு வாய்ந்தது. பல்வேறு நோய்களைக் குணமாக்கக் கூடிய அபூர்வ சக்தி வாய்ந்தது.
இவ்வாலய குடமுழுக்கு 29-06-2018 காலை மணி 09-00க்கு மேல் 09-30க்குள் நடைபெறுகிறது. குடமுழுக்கு விழாவில் கலந்து கொள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து வேத விற்பன்னர்கள் மடாதிபதிகள் என முக்கியத்துவம் வாய்ந்த ஆன்மீக அன்பர்கள் இந்தியாவெங்கிலிருந்தும் வருகைதர உள்ளார்கள். அத்தகு விழாவில் அன்பர்கள் ஆன்மீக ஆர்வலர்கள் கலந்து கொள்ள வேண்டுகிறோம். நன்றி. அன்புடன் ரெங்கன் உஷா ஜோதிடதம்பதி. (அடியேன் இத்திருத்தலம் அமைந்துள்ள ஊரில் உள்ள நான்குநேரி திரு சங்கர் ரெட்டியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1992 முதல் 2006 வரை ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறேன்.)
TAMIL NEW YEAR.. VILAMBI - விளம்பி வருட - புது வருட வாழ்த்துக்கள்
JOTHIDA KALAIMAMANI USHA RENGAN
1 மறுமொழிகள்
Tamil Astrology யின் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்...
அன்புடையீர்,
வணக்கம். அனைவருக்கும் இனிய தமிழ் முதல் மாதத் துவக்க நாள் வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி.
14-04-2018 விஷூ புண்ணியகாலம் ...
கொல்லம் ஆண்டு 1193 விளம்பி நாம வருடம் சித்திரை மாதம் (மேஷ ரவி) முதல் நாள். சனிக்கிழமை. கிருஷ்ணபட்ச திரயோதசி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் காலை உதயாதி நாழிகை 02.17க்கு மேஷ ரவி உதயம்.. அதாவது பகல் மணி 06-55க்கு-திருநெல்வேலியில் உதயம்)
விளம்பி வருடம் விளைவு கொஞ்சமாரி
அளந்த பொழியு மரசர் - களங்கமுடன்
நோவான் மெலிவரே நோக்கரிதாகுங் கொடுமை
ஆவா புகலவரி தாம்.
பொருள்.. விளம்பி வருடம் பயிர்களின் விளைச்சல் குறைந்து காணப்படும். மழை வளம் போதுமானதாக அமையும். ஆளும் அமைப்பில் உள்ளோர் சிலருக்கும் அப்பட்டமான தேவையில்லாத எண்ணங்களின் மூலம் சிறு சிறு விரயங்கள் முதல் பற்றாக்குறை காரணம் ஒரு புறம் இருந்தாலும், மகிழ்ச்சி நிலவும். சுபம்.
ஆயனராய் அவதரித்து
ஆண்டியாய் உருத்தரித்து
அபலைகளுக்கருளிய கோணார் பெருமானே!
ஓடுகின்ற நவக்கிரகங்களை
கோடு போட்டு படுக்கவைத்த
பரந்தாமனின் அவதாரமே!
மண் சிறக்க விண்சிறக்க
கடைக்கண் திறந்து காப்பீர்
இடைக்காடர் ஸ்வாமியே!
அன்புடையீர்,
வணக்கம். அனைவருக்கும் இனிய தமிழ் முதல் மாதத் துவக்க நாள் வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி.
14-04-2018 விஷூ புண்ணியகாலம் ...
கொல்லம் ஆண்டு 1193 விளம்பி நாம வருடம் சித்திரை மாதம் (மேஷ ரவி) முதல் நாள். சனிக்கிழமை. கிருஷ்ணபட்ச திரயோதசி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் காலை உதயாதி நாழிகை 02.17க்கு மேஷ ரவி உதயம்.. அதாவது பகல் மணி 06-55க்கு-திருநெல்வேலியில் உதயம்)
நினைத்தது நடக்கும்... விளம்பி வருடம்..
கடந்த ஹேவிளம்பி பயம், பதட்டம், சோர்வு ஆகியவற்றை பொருளாதார தொழில், அரசியல், கலை மற்றும் சினிமா மற்றும் குடும்ப நிர்வாகம் ஆகியவற்றில் நிறைந்திருந்ததைக் கண்கூடாகப் பார்க்க முடிந்தது... பொதுவாகவே, நவக்கிரகங்களில் சனியும், செவ்வாயும் சேர்க்கை என்பது கடந்த இரண்டரை ஆண்டுகளாக, ஒவ்வொருவரின் அசைவுகளும் வேகமாக முன்னேறுவது போலும், சிறப்பாக உள்ளது போலும் வெற்று நடிப்பாக அமைந்ததோடு, கீர்த்தி கிடைக்க வேண்டிய அம்சங்களில் பலவற்றில் அபகீர்த்தியாக அமைந்து விட்டது.
ஆனால், இந்த விளம்பி வருடம், நினைத்தது நடக்கும் என்ற அறிகுறியுடன் துவங்குகிறது.. ஆம். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் துவங்கு ஆண்டு, பசுவின் - கோமாதாவின் மூலம் நாம் அறிந்து வைத்துள்ள முப்பத்து முக்கோடி தேவர்களின் அருளாசியும், செவ்வாய் ராசிநாதன், லக்னாதிபதி 9மிடத்தில் அமைந்து பூமிக்கு வளம் தரப் போகிறதைத் தெரிவிக்கின்றதே... ஆம்.. அண்டை நாடுகளின் இணக்கமாக உறவுகளால், அமைதிப் புறாக்களின் அணிவகுப்பு இந்த ஆண்டு முழுவதும் சிறப்பாக இருக்கும். இல்லங்களில் பொருளாதார முன்னேற்றங்களுடன் மங்கள நிகழ்ச்சிகளின் மகிழ்ச்சிகளின் வருகை - வரவேற்று உள்ளவர்களுககு சாதாகமாக அமையும்..
மேலும் 30-04-2018 முதல் 27-10-2018 வரை உச்சம் பெற்ற செவ்வாய் பத்தாமிடத்தில் இருப்பதால், ஐ.டி. கம்பெனிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, புதிய கம்பெனியில் மகிழ்வான பணிகள் கிடைக்கும். சென்ற ஆண்டில் பணிவாய்ப்பு பற்றி பயமும், பணி இழந்தவர்களுக்கும் இந்த ஆண்டு பணி வாய்ப்பு கூடிவரும்.
மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் இனிய விளம்பி வருட புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
அன்புடன்
நாராயண அய்யர் ரெங்கன்
உஷா ரெங்கன்.
ஜோதிடத் தம்பதி..
tamiljoshier@gmail.com
இவ்வாண்டின் இடைக்காடார் பாட்டு
விளம்பி வருடம் விளைவு கொஞ்சமாரி
அளந்த பொழியு மரசர் - களங்கமுடன்
நோவான் மெலிவரே நோக்கரிதாகுங் கொடுமை
ஆவா புகலவரி தாம்.
பொருள்.. விளம்பி வருடம் பயிர்களின் விளைச்சல் குறைந்து காணப்படும். மழை வளம் போதுமானதாக அமையும். ஆளும் அமைப்பில் உள்ளோர் சிலருக்கும் அப்பட்டமான தேவையில்லாத எண்ணங்களின் மூலம் சிறு சிறு விரயங்கள் முதல் பற்றாக்குறை காரணம் ஒரு புறம் இருந்தாலும், மகிழ்ச்சி நிலவும். சுபம்.
இடைக்காட்டுச் சித்தர் தமிழ்நாட்டுச் சித்தர்களில் ஒருவர். இவர் இடைக்காடு என்றவூரில் வாழ்ந்தவர். இடையர் குடியிலே பிறந்தவர். இதனால் இடைக்காடுச் சித்தர் எனப் பெயர் பெற்றார். இடைக்காடு - முல்லை நிலம். இங்கு ஆடு மாடு மேய்ப்பவர் - இடையர் - கோனார் எனப்படுவர். இக்கோனாரையும் ஆடுமாடுகளையும், முன்னிறுத்தி பாடியதால் இப்பெயர் பெற்றார் என்பர். பதினெண் சித்தர் வகைக்குள் இவரும் அடங்குவார்.
இவரது வரலாறு துணியப்படவில்லை. இவர் கொங்கணர் என்பாரின் சீடர் என்றும் சித்தர்கள் காலம் எனப்படும் கிபி 10-15 ஆம் நூற்றாண்டினர் என்றும் கூறுகின்றனர். சங்க காலத்தினர் என்ற கருத்தும் நிலவுகிறது. இவரது பாடல்கள் இடைக்காட்டுச் சித்தர் பாடல் என்ற நூலிலே இடம்பெறுகின்றன. இடைக்காடரின் ஞானசூத்திரம் 70 என்ற நூல் மிகவும் சிறப்புடையது. இவர் திருவண்ணாமலையில் சமாதியடைந்தார். ஜனன சாகரத்தில் சமாதியடைந்தார் என்று போகர் கூறுகிறார்.
இடைக்காடர் பற்றிய கதைகள்
இவர் ஆடுமாடுகள் மேய்த்துக் கொண்டிருக்கும் போது இவரிடம் சித்தர் ஒருவர் வந்து பால் கேட்க, இவர் பால் கறந்து கொடுக்கப், பருகிய சித்தர் மனமகிழ்ந்து, இவர் அனைத்து சித்துக்களும் அடையும்படி செய்து சென்றதனால் இவர் சித்தர் ஆனார் என்பர்.
ஒருமுறை நாட்டில் தனது சோதிடத்திறமையால் இன்னும் சிறிது காலத்தில் பனிரெண்டு வருடங்கள் பெரும் பஞ்சம் வரப்போகும் நிலையை அறிந்தார் என்றும் கொடிய பஞ்சம் ஏற்பட்டபோது இவர் உணவின்றித் தவித்த ஆடுமாடுகளைக் காப்பாற்றியதோடு, மழை பெய்வித்துப் பஞ்சத்ததைப் போக்கினார் என்றும் கதை வழங்குகிறது. மேலும் முன்னெச்சரிக்கையாக எக்காலத்திலும் கிடைக்கக் கூடிய எருக்கிலை போன்றவற்றை தன் ஆடுகளுக்கு தின்னப் பழக்கினார். கெடாமல் இருக்கக் கூடிய குறுவரகு தானியத்தை சேற்றோடு கலந்து குடிசைக்கு சுவர் எழுப்பினார். இடைக்காடர் எதிர்பார்த்த படியே பஞ்சம் வந்தது. உயிரினங்களும் புல், பூண்டுகளும் அழிந்தன. எருக்கிலை போன்ற அழியாத தாவரங்களை ஆடுகள் தின்று உயிர் வாழ்ந்தன. எருக்கிலை தின்றதால் ஏற்பட்ட தினவைப் போக்க ஆடுகள் சுவரில் முதுகைத் தேய்க்கும். அப்பொழுது உதிரும் குறுவரகை ஆட்டுப்பாலில் காய்ச்சி உண்டு இடைக்காடர் உயிர்வாழ்ந்தார். பெரும் பஞ்சத்தால் உயிர்களெல்லாம் அழிந்தொழிய இடைக்காடரும் அவரது ஆடுகளும் உயிருடனிருப்பதைப் பார்த்து வியந்த நவக்கிரகங்கள் இடைக்காடரைக் காண வந்தனர். இடைக்காடர் மிகவும் மகிழ்ந்து விண்ணுலக வாசிகளான நீங்கள் என் குடிசைக்கு வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி என்று ஆட்டுப்பாலையும் வரகு சாதத்தையும் அவர்களுக்கு வழங்கினார். பாலில் சமைத்த சாதத்தை உண்டு அந்த மயக்கத்தில் அப்படியே உறங்கி விட்டனர். நவக்கிரகங்கள் மயங்கி கிடப்பதைக் கண்ட இடைக்காடர், மாறுபட்டு உலகத்தை வருத்திய கோள்களை மழை பெய்வதற்கு ஏற்றவாறு மாற்றிப் படுக்க வைத்தார். உடனே வானம் இருண்டது. நல்ல மழை பொழிந்தது. ஆறுகளும் ஏரிகளும் நிரம்பின. பூமி குளிர்ந்தது. மழையின் குளுமை உணர்ந்து நவக்கிரகங்கள் விழித்துப் பார்த்தனர். நாட்டின் பஞ்சத்தை நீக்கிய சித்தரின் அறிவுத்திறனை கண்டு வியந்து பாராட்டினார்கள். அவருக்கு வேண்டிய பல வரங்களைத் தந்து ஆசீர்வதித்து சென்றார்கள். இடைக்காடர் நெடுங்காலம் வாழ்ந்து வருடாதி நூல்கள், மருத்துவ நூல்கள் போன்றவற்றை எழுதினார். மேலும் இவர் தத்துவப் பாடல்களளயும் இயற்றினார். மிகவும் செருக்குடன் இருந்த ஏக சந்தக் கிராகி, துவி கந்தக் கிராகி போன்றவர்களை “ஊசி முறி” என்ற சங்கப்பாடல் மூலம் அடக்கினார் என்றும் கதைகளில் குறிப்பிடப்படுகிறது.
தியானச் செய்யுள்
ஆயனராய் அவதரித்து
ஆண்டியாய் உருத்தரித்து
அபலைகளுக்கருளிய கோணார் பெருமானே!
ஓடுகின்ற நவக்கிரகங்களை
கோடு போட்டு படுக்கவைத்த
பரந்தாமனின் அவதாரமே!
மண் சிறக்க விண்சிறக்க
கடைக்கண் திறந்து காப்பீர்
இடைக்காடர் ஸ்வாமியே!
ஜாதகத்தில் புதன் கிரகத்தால் ஏற்பட்ட அணைத்து
தோஷங்களும் நீங்க இடைக்காடு சித்தரை வழி படுவோம்
ஓம் இடைக்காடு சித்தரே போற்றி
ஸ்ரீ ராமநவமி.. 25-03-2018 ஞாயிறு
JOTHIDA KALAIMAMANI USHA RENGAN
0
மறுமொழிகள்
மாசி மகம் - மகத்தான சுகம்
JOTHIDA KALAIMAMANI USHA RENGAN
0
மறுமொழிகள்
பஞ்சாங்கம் பயன்படுத்துதல் பாருக்கு நலமே!
JOTHIDA KALAIMAMANI USHA RENGAN
0
மறுமொழிகள்
புயல் , மழை வெள்ளம், சூறாவளி, சுனாமி போன்றவை அறிய விஞஞான விளக்கங்களுடன் பஞ்சாங்கம் பயன்படுத்துதல் பாருக்கு நலமே!
ஜோதிட பஞ்சாங்க கணித சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறதான கோள்களின் தன்மைகளின் அடிப்படையில் இயற்கையை நிர்ணயிக்கும் முறை காலம் காலமாக அனுசரிக்கப்பட்டு, அதன் விளக்கங்கள் பஞ்சாங்க குறிப்புகளில் ஆண்டுதோறும் குறிக்கப்பட்டு வருகின்றன. நாம் அனைவரும் தினமும் காலையில் எழுந்தவுடன் அன்றைய தினத்தின் பஞ்சாங்க வாசகமெனும், ஐந்து அங்கங்களான, திதி, வாரம், நட்சத்திரம், யோகம் மற்றும் கரணம் ஆகியவற்றினை அறிந்து கொள்வதும் அதன் அமைப்பின் பலன்களைத் தெரிந்து அதன்படி, எந்தெந்த வாரம், திதி மற்றும் நட்சத்திரங்கள் எந்தெந்த காரியங்களுக்கு உகந்தது என்றும் அன்றைய நாளில் நாம் மேற்கொள்ளவுள்ள பணிகளின் முக்கியத்துவத்தையும் உணர்ந்து, இணைத்துப் பார்த்து, ஒரு ஒழுங்கான முடிவுக்கு வருவது சிறந்தது என்பதை எல்லோரும் உணர்ந்து கொள்வது நல்லது. நம்முடைய வீடுகளில் பஞ்சாங்கம் இல்லையெனினும், எல்லா தினசரி காலண்டர்களிலும், அத்தகைய விளக்கங்கள் தரப்படுகின்றன... இது போக, தற்போதைய சூழலில் வானிலையில் ஏற்படும் மாற்றங்களும் நாம் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லதே.. உதாரணமாக வரும் 20-11-2017 முதல்
1) அந்தமான் காற்றழுத்த தாழ்வு மண்டலம் 1510 கிமீ. எனவும்,
2) புயல் வீசும், குண்டாறு அணை பாதிப்பு எனவும் குறிக்கப்பட்டுள்ளது.
மேலும்,
நவம்பர் 28ல், (2017) கடல் கொந்தளிப்பு, காற்றழுத்த தாழ்வு கடலூர் 1550 கிமீ. எனவும், ராமேஸ்வரம் பாதிப்பு எனவும் குறிக்கப்பட்டுள்ளது.
அதே போல், டிசம்பர் 4, 2017 வடநாடு பாதி, மஹாராஷ்ட்ரா பாதிப்பு கடும் குளிர் எனவும், சென்னை மிதக்கும் எனவும் குறிக்கப்பட்டுள்து.
மேலும் டிசம்பர் 15ல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் எனவும், பாண்டி 1625 கிமீ எனவும், திரிகோணமலை பாதிப்பு எனவும் குறிக்கப்பட்டுள்ளது.. இவ்வாறான தகவல்கள் அவ்வப்போது நாம் அறிந்து கொள்வதும், அதன் நிலைமைகளை நன்றாக ஆய்வு செய்து, நினைவில் நிறுத்தி நமக்கும் பொதுவாக அந்தந்த பகுதி மக்களுக்கும் எடுத்தியம்பி, உரிய முன்னெச்சரிக்கை குறிப்புகளை தயார் நிலையில் வைத்துக் கொள்வதும் சாலச் சிறந்ததாகும்..
குறிப்பாக, நாம் அவ்வப்போது அனுபவிக்கும், பல்வேறு செயல்பாடுகளைச் சரியான பின் கோப்பு என்னும் பேக் பைல் மூலம் சரிபார்க்கப்படுதலும், ஆராய்ச்சி முறையில் குறிப்பெடுத்துக் கொள்வதும் வருங்கால சந்ததியர்க்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் தானே..! நன்றி...