தமிழ் ஜோதிடம் ஜாதகம்

ஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், வாஸ்துசாஸ்திரம் மூலம் வருங்காலம் அறிய "ஸ்வாதி ஜோதிட ஆய்வகம்" உங்களை அன்புடன் வரவேற்கிறது.

எழுதியவை அனைத்தும்

சுவஸ்தி ஸ்ரீ 1195 விகாரி வருடம் பங்குனி மாதம் 20 ஆம் நாள் (02-04-2020) வியாழக்கிழமை ஸ்ரீராமநவமி..

”ஸ்ரீராமநவமி மகிமை”

மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ராமாவதாரம். சித்திரை மாதத்தில் வளர்பிறை நவமியன்று இவர் அவதரித்தார்.

சில ஆண்டுகளில் இந்த விழா, பங்குனி மாதத்திலும் வரும். தசரதரின் மகனாகப் பிறந்த ராமன், தந்தையின் சொல் கேட்டு அவர் சொன்ன ஒரு வார்த்தைக்காக, காட்டிற்குச் சென்றார்.

14 ஆண்டுகள் வனவாசம் இருந்தார். இவ்வேளை யில் சீதையையும் பிரிந்தார். ஏகபத்தினி விரதனாக இருந்த ராமபிரானின் வாழ்க்கை, மனிதர்களுக்கு பல அரிய வாழ்க்கை முறைகளை போதிக்கிறது. ராமன் காட்டிய அயணம் (பாதை) என்பதால்தான், இவரது வரலாற்று நூல் ராமாயணம் எனப் பெயர் பெற்றது.

வழிபடும் முறை: ராமநவமி நாளில் ராமர் கோயில்க ளுக்குச் சென்று, அவருக்கு துளசி அர்ச்சனை செய்து வழிபடலாம். பெருமாள் கோயி ல்களுக்கும் சென்று, சுவாமியை வணங்கி வரலாம். அன்று முழுதும் ராமபிரானை எண்ணிக்கொண்ட ஸ்ரீராமஜெயம் என்னும் ராம மந்திரம் உச்சரிக்கலாம்.

பலன்: ராமபிரானை வழிபடுவதால் துன்பத்தில் கலங்காத மனநிலையும், எடுத்த செயல்களில் வெற்றியும் கிடைக்கும்.

மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்களுள் ராம அவதாரமே போற்றிப் புகழப்படுகிறது. தாரக மந்திரத்தினை தனதாகக் கொண்ட அவதாரம் அது. இறைவன் தனது அத்தனை வல்லமையையும் துறந்து சாதாரண மானிடனாக, பெற்றோருக்கு மகனாக வாழ்ந்து காட்டிய அவதாரம் ராமாவதாரம்.

பகவான் மானிடராக அவதரித்தது மொத்தம் மூன்று முறை. வாமனம், ராமர் மற்றும் கிருஷ்ணர். 
இவற்றில் ராமாவதாரம் தவிர மற்ற இரு அவதாரங்க ளிலும் தனது கடவுள் தன்மையை வெளிப்படுத்தி இருக்கிறார் பகவான்.

ஆனால், ராமாவதாரத்தில் மட்டுமே அடுத்து என்ன நடக்கும் என்று அறியாதவ ரைப் போல் எளிய வாழ்வு வாழ்ந்து காட்டினார். அதனாலேயேதான் ராமாவதாரம் சிறப்புப் பெற்றதாக ஆகிறது.

ஏன் நவமியில் அவதரித்தார்?

ஒருசமயம் அஷ்டமி, நவமி திதிகளின் தேவதைகள் கவலையில் ஆழ்ந்திருந்தன. பதினாறு திதிகளில் தங்களை மட்டுமே விலக்கி வைத்து எந்தக் காரியத்துக்கும் தங்களை எவரும் தேர்ந்தெடுக்காம லிருந்த ஏக்கம் அவைகளைப் பீடித்திருந்தது, பெருமாளிடமே சென்று முறையிட்டன. திதிகளின் ஏக்கம் தீர்க்க எண்ணிய தீனதயாளன்,

இனி வரும் எனது இரு அவதாரங்களும் நவமியிலும், அஷ்டமியிலுமே நிகழும். அதனால் உங்கள் இருவரை யும் மக்கள் போற்றித் துதித்து மகிழ்வார்கள் என்று வரமளித்தார். அதனால்தான் ராம அவதாரம் நவமியிலும் கிருஷ்ண அவதாரம் அஷ்டமியிலும் நிகழ்ந்தன.
ராம நாம மகிமை:
ராமபிரானாலேயே சிறந்த பக்தன் என்று போற்ற ப்பட்ட அனுமனுக்கு வாக்கு, வன்மை, வீரம், சாதுரியம் என அனைத்துமே ராமநாமத்தின் மகிமையால்தான் வந்தது என்று கூறலாம். கடல்தாண்டிச் சென்ற அனுமனை சிம்ஹிகை எனும் அரக்கி வழிமறித்த போது, சிறிய உரு எடுத்து அவள் வாய்க்குள் புகுந்து வெளியேறிச் செல்ல அனுமனுக்கு உதவியது ராமநாமம்தான்.

அவ்வளவு ஏன், ராமரே அருகில் இருந்தபோதும், அவரது திருநாமத்தின் மகிமையால்தானே பெரும்பாறைகளையும் கடலில் மிதக்கச் செய்து பாலம் அமைத்தார்கள் வானர வீரர்கள்!

ராமநவமி, பங்குனி அல்லது சித்திரை மாதம் வளர்பிறை நவமி திதியில் அமைகிறது. ராமபிரானின் ஜனன காலத்தில் ஐந்து கிரகங்கள் உச்சம் பெற்று விளங்கின. அதனால் ராமசந்திரனின் ஜாதகத்தை வீட்டில் வைத்து பூஜித்தால் நன்மை பயக்கும் என்பது ஐதீகம்.

ஸ்ரீராமநவமி உற்சவம் இருவிதமாகக் கொண்டாடப்படுகிறது. ஒன்று, ஜனன உற்சவம் மற்றொன்று கர்ப்ப உற்சவம்.

கர்ப்ப உற்சவம்:

ராமநவமிக்கு ஒன்பது நாட்களுக்கு முன்னாலேயே இந்த உற்சவம் தொடங்கப்படும். தினமும் ராமர் படத்துக்கு அர்ச்சனை செய்து, ராம நாமத்தை ஜபித்து, விரதமிருந்தும் வழிபடுவார்கள். சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, வெண்பொங்க ல் போன்ற பிரசாதங்களை நிவேதனம் செய்து பக்தர்களுக்கு விநியோகிப்பார்கள்.

ஸ்ரீராமநவமி அன்று பானகமும் நீர்மோரும் கட்டாயம் நிவேதனம் செய்வார்கள். காரணம், கானகத்தில் விஸ்வாமித்திர முனிவரோடு வாழ்ந்த போது அவர்கள் தாகத்துக்கு நீர்மோரும் பானகமும் பருகினார்கள்.

அதையொட்டியே இவை நிவேதனம் செய்யப்படுகி ன்றன. அன்று முழுவதும் ராமநாமத்தை ஜபித்து உபவாசம் இருந்தால் வாழ்க்கையில் சகல சம்பத்து களோடு வெற்றியும் நிம்மதியும் உண்டாகும் என்பது நிச்சயம்.

ஜனன உற்சவம்:

இந்த உற்சவம் ஸ்ரீராமநவமி அன்று தொடங்கி பத்து நாட்கள் நடத்தப்படும். பத்தாம் நாள் சீதா கல்யாண மும் பட்டாபிஷேகமும் மிகச் சிறப்பாக நடைபெறும். இந்தப் பத்துநாட்களிலும் பஜனை, ராமாயண பிரவச னம் என கோலாகலமாகக் கொண்டாடுவார்கள் பக்தர்கள்.

பானகம் நீர்மோரோடு ஆரம்பிக்கும் நிவேதனம் பத்தாம் நாள் கல்யாண ஆராதனையாக நிறைவு பெறும். மானிடத் திருமணத்துக்குச் செய்வது போலவே பலவகையான பதார்த்தங்கள் செய்து அன்னதானமும் நடைபெறும். இந்தக் கல்யாண விருந்தை உண்டால் மனச்சோர்வு, கவலை ஆகியவை நீங்கும்.

ஆரோக்யம் உண்டாகும் என்பர். உற்சவத்தின் கடைசி தினத்தன்று அதிகாலை முதல் பொழுது சாயும் நேரம் வரை பக்தர்கள் ராமநாமத்தை உச்சரித்தபடி இருப்பர்.

இதை அகண்ட நாம பஜனை என்று சொல்வார்கள். தீராத கவலை, துக்கம், வறுமை, மனப்பிணி போன்றவை யாவும் அகண்ட நாமத்தில் கலந்துகொ ண்டு ராமநாமத்தை உச்சரித்தால் சூரியனைக் கண்ட பனிபோல் மறைந்து விடும்.

ராம நவமி விரதம் இருக்கும்முறை:

மனதில் இன்ன காரணத்துக்காக விரதம் இருக்கிறே ன். அதனை நல்லபடியாக முடித்துக் கொடு ராமா! என்று வேண்டிக்கொண்டு இந்த விரதத்தை ஆரம்பிக்கவேண்டும்.

அவரவர் வசதிப்படி கர்ப்பக்கால விரதம் அல்லது ஜனனகால விரதம் இரண்டில் ஒன்றை எடுத்துக் கொள்ளலாம். எதை தேர்ந்தெடுத்தாலும் ஒன்பது நாட்கள் தொடர்ந்து அனுசரிப்பதே சிறந்தது. கர்ப்பக்கால விரதம் எடுப்பவர்கள்.

ராமநவமி வருவதற்கு முந்தைய அமாவாசை அன்றிலிருந்து விரதத்தைத் தொடங்க வேண்டும். நீராடி ராமர் படத்துக்குப் பூவும் பொட்டு வைத்து வணங்கவேண்டும்.

குறைந்தது 108 முறை ஸ்ரீராமஜெயராம ஜெய ஜெய ராம என்று மனதார உச்சரிக்கவேண்டும். பின்னர், வழக்கமாகன பணிகளுக்குச் செல்லலாம். பகலில் ஒரே ஒரு முறை மட்டும் சைவ உணவை உண்ணலாம். மற்ற நேரங்களில் பால், பழம், மோர் அருந்தலாம். புகையிலை, வெற்றிலை பாக்கு போன்றவற்றைக் கட்டாயமாக விலக்கவேண்டும்.

ஸ்ரீராமநவமி அன்று ராமர் படத்தை அலங்கரித்து மஞ்சள் வஸ்திரம் சாத்தி வழிபடவேண்டும். பின்னர் மனதை ஒரு நிலைப்படுத்தி ஸ்ரீராமஜெயம் என்று 108,1008 என அவரவர் வசதிப்படி எழுதலாம்.

நீர் மோர் பானகம் ஆகியவற்றோடு சிறப்பான விருந்து சமையலும் செய்து ராமருக்குப் படைக்க வேண்டும். நிறைவாக வடையையும், வெற்றிலையை யும் அனுமனுக்குப் படைக்க வேண்டும்.

பின்னர் விரதத்தை நிறைவு செய்துவிட்டேன். நல்லவை யாவும் அருளிக் காப்பாயாக! என்று வேண்டிக்கொண்டு உணவு அருந்தலாம். அன்றைய தினம் கட்டாயம் நீர் மோரும், பானகமும் பருக வேண்டும். அன்று இரவு லேசான உணவாக எடுத்துக்கொள்ளுதல் நலம்.

இப்படி ஸ்ரீராமநவமி விரதத்தை கடைப்பிடித்து வந்தால் மனநிம்மிதி, வெற்றி, செல்வம் ஆகியவை பெருகும். இதே விரதத்தை ஜனனகால விரதமாக (இதனை கல்யாண விரதம் எனவும் சொல்வதுண்டு) அனுஷ்டிக்க நினைப்பவர்கள் ஸ்ரீராமநவமியிலிருந்து தொடங்கி ஒன்பது நாட்கள் மேற்சொன்னபடி விரதம் இருக்கவேண்டும்.

பத்தாம் நாளன்று காலை ராமருக்கு வழிபாடுகள் செய்து கல்யாண சமையல்போல விருந்துணவு செய்து படைக்க வேண்டும். நிறைவில் வடையும் வெற்றிலையும் அனுமனுக்கு சமர்ப்பணம் செய்து விரதத்தை முடிக்க வேண்டும்.

இந்த வகையில் விரதத்தைக் கடைப்பிடித்தால் திருமணத் தடைகள் நீங்கும். தம்பதியரிடையே ஒற்றுமை ஏற்படும். மனக்குழப்பங்கள் தீர்ந்து வாழ்வில் இன்பம் பெருகும்.

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே

இம்மையே ராமவென் றிரண்டெழுத்தினால்! !

ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !

பயமோ.. பதட்டமோ.. வேண்டாம்.. நம்பிக்கை கொள்வோம்.. அசூரன் கொரோனோ அழிந்தொழுவான்.. இதோ.. 
27-03-2020  ல் குருபகவான்  தனுசு இராசியில் இருந்து மகர இராசிக்கு அதிசாரம் ஆகி இருக்கிறார்..  இந்த அதிசார குரு பகவான் உச்ச செவ்வாயின் சேர்க்கையினால் நீச்ச பங்க இராஜ யோகத்தை அடைந்து பூமியை விரைவில் ரக்ஷிக்க உத்திரவாதம் தருகிறார். மிதுன இராகுவின் அயன சயன விரயபாவமான  கடகத்திற்கு  இதனால் குருமங்கள  திருஷ்டி  உண்டாகிறது.                                                                                       காலபுருஷ பாவத்தில் இது உலகுக்கு நன்மை தரும்.  இது நமக்கு நல்லதே. இந்த குரு + செவ்வாய் கூட்டணி என்பது நமக்கு தெம்பு தருவது.  இந்த  நீச்ச பங்க இராஜ யோக குருவின் அருள் ,  கெட்ட காலத்தை சக்தி இழக்கவைக்கும்.  பூமி முழுவதும் விஷவீரியம் உள்ள இந்த நேரத்தில் குருவின் பொற்கதிர்கள்  அவை அனைத்தையும் தூசென விரட்டிவிடும். 

குருபகவானை தொழுவதோடு, குரு பகவானின் அருள் பெற்றிட 
மஞசள் வண்ணத்திலான அனைத்து வித உபாயங்களைக் கொள்ளலாமே..  


வீட்டுக்குள் மற்றும் வீட்டு வாசலில்  நன்றாக மஞ்சள் நீர் தெளிக்கலாம். 

மஞ்சள் மற்றும் சிவப்பு நிற ஆடைகள் அணிவதால் நமக்கு மங்கலமும் பலமும் உண்டாகும். 

வீட்டில் மூலைக்கு மூலை கர்ப்பூரத்தை சற்று தூள் செய்து போடுங்கள்.  கற்பூர மணத்தை நன்கு நுகருங்கள்.   இது ஆக்சிஜனை அதிகம் தரும்.  கற்பூர ஆரத்தியை உள்ளங்கைகளால் தொட்டு இரண்டு கண்களிலும்,  உச்சந்தலையிலும்,  தொண்டையிலும் ஒற்றிக்கொண்டு தடவிவிடுங்கள்.  இதன் பாதுகாப்பு என்பது காலம்காலமாக நாம் நமது பாரம்பரியத்தில் செய்து வந்ததுதான். 

மிக சக்திவாய்ந்த அருள் அலைகளை ஏற்படுத்தக்கூடிய கந்த சஷ்டி கவசத்தை வீட்டில்  பாராயணம் செய்யுங்கள். கந்தம் என்றால் ஒருங்கிணைத்தல் என்று பொருள்.   இந்த கந்த சஷ்டி கவசமானது உலகத்தின் நேர்மறை காந்த சக்தியை  ஒருங்கிணைத்து வலு கூட்டி   எதிர்ப்பு சக்தியையும் ஆரோக்கியத்தையும் அதிகப்படுத்தும். 

மாயமாக நின்று போர்  புரிந்த சூரபத்மன் என்னும் அசுரனை அழித்து  மக்களை எல்லாம் காத்து ,  விஸ்வரூபம் காட்டி அருளிய முருகப்பெருமானின் அருள்...  இப்போதும் கண்ணுக்குத் தெரியாத மாயக்  கிருமியாக இருந்துகொண்டு நம்மை எல்லாம்  துன்புறுத்திக்கொண்டு இருக்கும் இந்தக்  கொரோனா வைரஸையும்  அழித்து  மறுபடியும் அருள் செய்யும்.  வெற்றிவேல் இப்போதும் நம்மைக் காத்து அருளும்.  அவனையே சரணடைவோமாக. 


  

உலக மகளிர் தின விழா 2020
மகளிர் நல ஜோதிடம் மங்கை
2020 விருது..
 08-03-2020 அன்று சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் வைப்போம் நடைபெற்ற நவீன் பைன் ஆர்ட்ஸ் மற்றும் கோவலன் கலை மன்றம் ஏற்பாடு செய்த உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு விருது வழங்கும் விழா தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர் சங்க தலைவர் திரு முனைவர் க. குமார் அவர்கள் தலைமையில் திருவ டில்லி குமார் திரு ரமேஷ் அவர்கள் முன்னிலையில்திரு வி பி துரைசாமி திருப்பி சேகர்பாபு திரு டாக்டர் சின்னி ஜெயந்த் திரு பூவிலங்கு மோகன் ஆகியோர் விருது வழங்க ஜோதிட தம்பதி திருமதி உஷா ரெங்கன் ரங்கன் ஆகியோருக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது நிகழ்ச்சியின் புகைப்படங்கள் இதோ!


வைரஸ்களுக்கு மருந்து உண்டோ?
பக்தியும் பிரார்த்தனையுமே!

மருந்தில்லா 'கொரொனாவுக்கு' தெய்வமே மருந்து  என
அறிவியல் உச்சத்தில் ஆடும் எல்லா தேசங்களும், மருந்தில்லா நோய்க்கு 'தெய்வமே துணை' என சரணடையும் நேரம் வந்துவிட்டது...

இந்நிலையில் தமிழர்கள் ஒரு காட்சியினை நினைத்து பார்க்கலாம்.

அவர் பெயர் பால தேவராயர், தீரா நோயுற்றிருந்தார். நோய் என்றால் கடும் நோய் எந்த மருந்துக்கும் அடங்கா கொடும் நோய். மருந்தில்லா நோய்க்கு மரணமே தீர்வென கிளம்பினார் தேவராயர்.

கடைசியாக திருச்செந்தூர் முருகனிடம் வேண்டி விட்டு சாகலாம் என முடிவெடுத்து, ஆலயம் சென்றவருக்கு முருகப்பெருமான் காட்சிஅளித்து ஒரு பதிகம் இயற்றுமாறும் அது அவர் நோயினை மட்டுமல்ல உலக நோயினை எல்லாம் நீக்கும் பாடல் என்றும், யாரெல்லாம் படிக்கின்றார்களோ அவர்கள் நோயும் அவர்கள் வேண்டுவோரின் நோயும் தீரும் என சொல்கின்றான்.

அந்த இடத்தில் இருந்து பாடத் தொடங்குகின்றார் பால தேவராயர். அவர் பாடி முடிக்கவும் அவரின் கொடும்நோய் அகன்றது. அந்த மகிழ்ச்சியில் அறுபடை வீடெல்லாம் சென்று அந்த பாடலை தொகுத்து முடிக்கின்றார். அதுதான் கந்த சஷ்டி கவசம்.

சஷ்டி என்றால் ஆறு, கவசம் என்றால் பாதுகாப்பு.

நோய், பில்லி சூன்யம், வறுமை, வம்ச விருத்தி சிக்கல், மனநலம், தீரா கவலை உட்பட 6 வகையான கொடும் பிணிகளில் இருந்து கந்தன் மக்களை காக்கும் பாடலாக அது கொள்ளப்பட்டது.

அக்காலத்தில், நோய்கள் பரவும் காலத்தில் இல்லம் தோறும், ஆலயம் தோறும் அதை பாடுவார்களாம். ஆம் அப்படியும் ஒரு காலம் இருந்தது குறிப்பில் இருக்கின்றது.

ஆழந்த அர்த்தமிக்க பாடல் அது. ஒவ்வொரு வரியாக பாருங்கள் ஒவ்வொரு உறுப்பையும் அதன் இயக்கத்தையும் காத்தருள ஒப்புவிக்கும் பாடல் அது.

பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேலிரண்டும் கண்ணினைக் காக்க
விதிசெவியிரண்டும் வேலவர் காக்க
நாசிகளிரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பத்திருபல் முனைவேல் காக்க,
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க
கன்னமிரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங்கழுத்தை இனியவேல் காக்க
மார்பை ரத்தின வடிவேல் காக்க....,

ஒவ்வொரு உறுப்புக்கும் ஒவ்வொரு வேல் பெயரை சொல்லி காவல்தேடும் பாடல் அது.

இதில் அறிவியலும் ஒளிந்திருக்கின்றது.

ஆம். ஆழ்ந்த பக்தி மனநிலையில் ஒவ்வொரு உறுப்பாக சொல்லும் பொழுது, அதில் கவனத்தை வைத்தால் உடல் தானாக அதை சரி செய்கின்றது என்கின்றது அறிவியல்.

உளவியல் கொடுக்கும் உடல்நலம் இது. நிரூபிக்கபட்ட ஒன்று. இதைத்தான் கந்த சஷ்டி கவசமும் சொல்கின்றது.

உச்சி முதல் பாதம் வரை ஒவ்வொன்றாக தியானித்து முருகனிடம் நலம்பெற சொல்லும் மருத்துவ தியானப் பாடல் இது.

தொடரும் பாடலில் அர்த்தமில்லா சிலவரிகள் வருவதாக தோன்றும், உண்மையில் அந்த வார்த்தைகள் அர்த்ததிற்கு அல்ல, மாறாக சில அதிர்வுகளை கொடுப்பதற்காக‌...

இப்பாடலில் சில இடங்களில் தமிழ் மொழியின் சில எழுத்துக்கள் மட்டும் இரட்டைப்படை மற்றும் ஒற்றைப்படை எண்களின் வரிசையில் அமைந்துள்ளது.

அக்கால புலவர்கள் ஞானமிக்கவர்கள். சித்தர்கள் சொன்ன நல்ல அதிர்வு, அதாவது தெய்வீக மற்றும் நேர்மறை சிந்தனையினை கொடுக்கும் சமஸ்கிருத வார்த்தைகளுக்கு நிகரான‌ சரியான தமிழ் வார்த்தைகளை வைத்து பாடியிருப்பார்கள்.

தேவராயரும் அதை மிக சரியாக செய்து நல் அதிர்வுகளை கொடுக்கும் வார்த்தைகளை இப்பாடலில் புகுத்தியிருக்கின்றார்.

ஆம். சில வார்த்தைகளை தகுந்த உச்சரிப்புடன் உச்சரிக்கும்பொழுது அது சில அதிர்வுகளை செய்கின்றது. அது உடலில் நல் விளைவுகளை ஏற்படுத்துகின்றது.

உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் , சிலருக்கு மெல்லிய மின்சார அதிர்வு கொடுப்பார்கள். அந்த அதிர்வினை சில வார்த்தைகளை முறையாக உச்சரித்தாலே உடல் பெறும்.

'ஓம்' எனும் வார்த்தையினை ஓங்காரமாக சில நாழிகை இழுத்து ம்ம்ம்ம்ம்ம்.... என்பதை அழுத்தி சில நாழிகை இழுத்தாலே சில அதிர்வுகளை உணரமுடியும் என்பார்கள்.

ஆலய வழிபாட்டின் பொழுது, வெண்கல மணி கொடுக்கும் அதிர்வும் அத்தகையதே.

அப்படியான வார்த்தைகள் பல கந்தசஷ்டி கவசத்தில் உண்டு. இதனால்தான் முருகன் ஆலயங்களில் அதை படிக்க வேண்டும் என்றார்கள்.

முருகன் ஆலயம் பொதுவாக மலைமேல் அமர்ந்திருக்கும் அல்லது அமைக்கப்பட்டிருக்கும் ஏன்?

விஷயம் ஒன்றுமில்லை, மலைமேல் இருக்கும் அந்த சூழல் மன அமைதியினை கொடுக்கின்றது. நோயில் இருந்து பாதி விடுதலையினை அதுவே கொடுத்துவிடும்.

மலைமேல் ஏறிச் செல்வதும், அங்கிருக்கும் சுத்தமான காற்றினை சுவாசிப்பதும் மாபெரும் ஆரோக்கிய வழி.

குகைகளில் முருகன் ஆலயம் வைப்பதும் ஒரு அறிவியல். பொதுவாக, கற்கள் சூழ்ந்த இடம் நல்ல சூழலை கொடுக்கும். நோய்கள் நெருங்கா. செங்கல் இருந்தும், மன்னர்கள் கருங்கற்களால் ஆலயம் கட்டிய தத்துவம் அதுவேதான்.

முருகன் ஆலயம் என்பது உடல் நலம் பெற வேண்டிய இடம் என்பது எக்காலமுமான நம்பிக்கை. அதனால் சூழலும் அப்படி இருக்குமாறு பார்த்துப் பார்த்து கட்டினார்கள்.

முருகனை வேண்டினால், உடல் நலம் பெறலாம் என்பதை எல்லா ஞானிகளும், மகான்களும் முருகன் அடியார்களும் சொல்லி வைத்தார்கள்.

வரலாற்றில் அது உண்மை. முருகனை தொழுதோர் பலர் நீண்ட நெடிய வாழ்வு வாழ்ந்தவர்களே. இதற்கு கண்முன்னே சாட்சிகள் ஏராளம்.

நலம் பெற்றோர் ஏராளம். ஆசியாவினையே புரட்டி போட்ட, சுனாமி திருச்செந்தூர் பக்கம் வாலை சுருட்டி இருந்தது என்பதும் நாம் கண்டதே.

இதைத்தான் பாடலாக சொன்னார்கள்.

"முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு
முற்றிய வினை தீருமே!
உடல் பற்றிய பிணி ஆறுமே!
வாழ்க்கை முற்றிலுமே நலம் பெற்று இனிதுற
மெத்த இன்பம் சேருமே.."

கொரோனா உலகை மிரட்டும் நேரமிது.
எல்லோரும் அவர்களின் தெய்வத்தை அழைத்து வேண்டுகின்றார்கள்.

தமிழர்கள் தங்கள் தனிப்பெரும் கடவுளை, அவன் கொடுத்த பாடல் வழி தேடட்டும். தமிழருக்காய் அல்ல உலக மக்களுக்காய் முறையிடட்டும்.

எந்த பாடலை பாடினால் உலக மக்களெல்லாம் நோயிலிருந்து விடுபடுவார்கள் என முருகனே சொன்னாரோ, அந்த பாடல் பாடப்படட்டும்....

ஆலயத்திலும் வீடுகளிலும் கந்த சஷ்டி கவசம் ஒலிக்கட்டும். தீபங்கள் எரிய, நறுமணம் கமழ அது உருக்கமாகப் பாடப்படட்டும்...

அதில் தமிழினம் பாதுகாக்கப்படும். மானிட இனம் கொரோனாவில் இருந்து மீண்டெழும்.

உலகெல்லாம் பிரார்த்தனைகள் ஓங்கி ஒலிக்கும் நேரம், தமிழரிடம் அவர்களின் மூலக்கடவுள் பாடலும் ஒலிக்கட்டும்....


காக்கும் கந்தன் எல்லோரையும் காக்கட்டும்...ஓம். முருகா! திருச்சீரலைவாய் அலைகடல் திருமுருகன் அருள் கிடைக்கடும். ஓம்முருகா! ஓம்முருகா!! ஓம்முருகா!!

!

புரட்டாசி அமாவாசை
நல்ல தருணம் எது! நம் வாழ்க்கை சிறக்க கைக்கொள்ளும் மேன்மையான காரியம் எது! நமக்கு எத்தனை முறை சொல்வதனாலும் – அப்படி சொல்லிக் கொடுத்த பெற்றோர்களுக்கே நாம் உணவளிக்க தக்க வாய்ப்பாம் அமாவாசை திதி நாளாகும். அதுவும் புரட்டாசி மாதம் வரும் திதி மகாளய அமாவாசை நாளாகும்.
என்ன செய்ய வேண்டும்..

பித்ரு லோகம் – பூமியில் அவதரித்து, ஆயுள் முடிந்து மேலுலகம் செல்வதாக சொல்வோமே.. அந்த பித்ரு லோகத்திலிருந்து நம் முன்னோர்கள் நம்மைக் காண வருகின்ற (அந்த 15 தினங்கள் அதாவது புரட்டாசி மாதம் பௌவுர்ணமி தொடங்கி 15 தினங்கள் அமாவாசை வரை மஹாளய பட்சமெனும் நாட்களில்), பெற்றோர்கள் இல்லம் நாடி வந்து நம்மை மகிழ்ச்சிப் படுத்தவும், அவர்கள் மகிழ்ச்சியுறவும் தக்க தருணம் தான் அக்காலம்.  எனவே நம்மை நாடி வரும் பெற்றோரை சிறப்பாக உபசரிக்க வேண்டியது நம் தலையாய கடமையாகும்.  எனவே நாம் தானம் செய்வதும், எள்ளும் தண்ணீரும் கலந்த தர்ப்பணம் செய்வதும் மிகவும் முக்கியமானதாகும்.  இதனால் திருப்தியடைந்து பெற்றோர் நமக்கு அருளாசி வழங்குவார்கள். நோயற்ற வாழ்க்கையும், வளங்கள் நிறைந்த மகிழ்ச்சியான வாழ்க்கையும் அவர்களின் ஆசியினாலாயே தான் நமக்கு வழங்க முடியும். குறிப்பாக வருடந்தோறும் தாய் தந்தையர் இறந்த பகுள, சுத்த மாத திதிநாளில் சிரார்த்தம் கொடுக்க இயலாவிட்டாலும் இந்த மஹாளய அமாவாசையில் தர்ப்பணம் செய்து மகிழ்வுற வேண்டும்.  இவ்வாண்டு சனிக்கிழமை அமாவாசை கடந்த 20 வருடங்களுக்குப் பிறகு அமைந்துள்ளது.  ஏழை மக்களுக்கு உதவிட்டால் சனி பகவானின் அருட்காட்சம் அளவிலாமால் நாம் கிடைக்கப பெறுவோம். முன்னோர்களுக்கு படையல் – அதாவது சைவ உணவுகளை ஆக்கிப் படைத்து மகிழ்வித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவோமாக. 

பாண்டிச்சேரி ராயல் பார்க் -கில் 27-08-2019 அன்று நடைபெற்ற வண்ண மய விழாவில்..
குளோபல் அச்சீவர்ஸ் கவுன்சில் தேர்வு செய்தவாறு, பாளையங்கோட்டை ஜோதிடத் தம்பதி நாராயணய்யர் ரெங்கன் உஷா ரெங்கன் தம்பதியர்க்கு ”சிகரம் தொட்ட ஜோதிடதம்பதி“ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.  இதில் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி  திரு கே.சாமிதுரை, திரு மோகன்தாஸ் ஜெர்மனி கவுன்சில் அட்வைசர் திரு ஜான் பீட்டர் ஒஸ்போர்ன், டாக்டர் ராயல் பிரசன்ட், 













திரைத்துறையிலிருந்து, பாகுபலிபுகழ் திருமதி ரம்யாகிருஷ்ணன், சரண்யா பொன்வண்ணன், டாக்டர் சின்னி ஜெயந்த், டைரக்டர் சுந்தர்ராஜன், பிலிம் ஆக்டர் டாக்டர் அருள்மணி குளோபல் சேர்மன் திரு செல்வன் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஜோதிடத் தம்பதியைப் பாராட்டினர். 

பாளையங்கோட்டையிலிருந்து கொண்டே பன்னாட்டு வாடிக்கையாளர் களுடன் கடந்த 40 ஆண்டுகளாக ஜோதிடத்துறையில் தம்பதியராக, மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மற்றும் தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் ஜோதிடவியிலில் பட்டம் மற்றும் பட்டயம் பெற்று பல்வேறு விருதுகளைப் பெற்று தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்து வருவதுடன், முப்பதாண்டுகாலம் தமிழாசியராகவும், ஜூனியர் ரெட்கிராஸ் கவுன்சிலின் மாநில கருத்தாளர் பயிற்சியுடன், நுகர்வோர் மன்ற விருதுகள் பலவும் பெற்றதும் குறிப்பிடத்க்கது.

தை 2 கணு உற்சவ மகிமை..

அன்பர்களே
குடும்ப ஒற்றுமை
குடும்ப குதூகலம்
குடும்ப ஷேமம்
குடும்ப உறவுமுறை
பிணியிலா பேரூவகை
எப்படி நடைமுறையில்.. இதோ..
 ஒவ்வொருவருடமும் வானமாமலை தாயார் தைமாதம் இரண்டாம் நாள் தன் பிறந்தவீட்டிற்க்கு மாப்பிள்ளையுடன் வந்து கனு உற்சவம் கொண்டாடுவார் அவ்வமயம் பெருமாள்தாயாருக்கு சகலமரியாதையுடன் விசேஷதிருமஞ்சனமும் சாற்றுமுறையும் ஶ்ரீவைஸ்ணவ கோஷ்டியுடன் மகரகண்டிசேவை வைபமும் நடக்கும்.

ஒவ்வொரு வருடம் மூன்றுமுறை நடக்கும் மகரகண்டிசேவையில் இந்த "தை" கனு உற்சவமும் ஒன்று.

இவ்வருடம் இன்று 16/ 01/2019 புதன் கிழமை கனுப்பொங்கல் கனுப்பொடி உற்சவம் நடைபெறுகிறது

கனுப்பொடி என்பது யாருக்காக

பெண்கள் தங்கள் உடன்பிறந்தவர்களை தங்களது பிறந்த இல்லத்திற்க்கு வந்து கண்டு பேசி ஆனந்தித்து அவர்கள் இன்னும் சிறப்பாக வாழ வேண்டி இறைவனிடம் பிரார்த்தனைகள் செய்து அவர்களின் ஆசிகளை பெற்று மகிழும் நாள்

பொதுவாக சுமங்கலிப் மற்றும் கன்னிப் பெண்கள் கன்யா பெண்கள் தைமாதம் இரண்டாம் நாள் கனுப்பொங்கல் அன்று  வீட்டில் தெருவில் உள்ள தம்மை விடவயதில் மூத்த சுமங்கலிகள் மற்றும் கன்யா பெண்களை நமஸ்கரித்து அவர்களிடம் நெற்றியில் மஞ்சள்  கீறி விடச்சொல்லி தங்கள் கையில்  கொண்டு போகும் பசு மஞ்சளை  அவர்களிடம் கொடுப்பர் அவர்களிடம் மஞ்சள் கீறிக்கொண்டு

பின்னர் சகோதரர்களிடம் மஞ்சள் கீறிக்கொள்வர் அவ்வமயம் கனுப்பொடி என தங்கைகள் அக்காக்கள் ஆகியோருக்கு தங்களால் இயன்ற கனுபொடியை(பணம் நகை என ஏதோ ஒரு பொருளை எதா சௌகரியமாக) தனக்காக தன்குடும்பத்திற்காக வேண்டிக் கொள்ளும் சகோதரிகளுக்குக் கொடுப்பர்.

கனு அன்று தங்களிடம் மஞ்சள் கீறிக்கொள்ள வரும் பெண்களுக்கு பெரிய சுமங்களிகள் நல்ல வார்த்தைகளை ஆசீர்வாதமாக கூறிக்கொண்டே பசு மஞ்சளை நெற்றில் கீற்றி விடுவார்கள்

அந்த ஆசிர்வாத வார்ததைகள் என்ன தெரியுமா?

மஞ்சள் கீறிக்கொள்ளும் பெண்னே நீ தாயோடும் தந்தையோடும் சீரோடும் சிறப்போடும் பேரோடும் புகழோடும் பெருமையோடும் கீர்த்தியோடும் உரிய வயதில் தாலிகட்டி மணப்பெண்ணாக பெரியவளாகி பிள்ளைகள் பெற்று உன்னை கொண்டவன் மனம் மகிழத் தையல்நாயகி  போலத்தொங்க தொங்க தாலி கட்டித் தொட்டிலும் பிள்ளையுமாக மாமியார் மாமனார்  மெச்ச நாத்தியும் மாமியும்  போற்ற பிறந்தகத்தோர் பெருமை விளங்கப் பெற்ற பிள்ளைகள் ஆயுள் ஓங்க உற்றார் உறவினரோட புத்தாடை புது மலர் சூடி புது மாப்பிள்ளை மருமகளோடு புது புது  சந்தோஷம் பெருகி ஆல்போல் தழைத்து அருகு போல் ஏரோடி என்றென்றும் இனிமையாக வாழனும் எப்போதும் சிரித்த முகத்தோடு இருக்கனும்

என்று சொல்லி வாழ்த்துவர்

பின்பு வீட்டிற்கு வந்து காக்காய்க்கு மஞ்சள்செடி இலையில் பலவகை சாத்ததை கலந்துபரிமாரி அத்துடன் வெற்றிலை பாக்கு பழம் கரும்பு துண்டு என காக்காபொடி வைத்து அதை ஜலம் தெளித்து சுத்தி செய்து எறும்புகள் வராவண்ணம் நீர் சுற்றி கற்பூர ஹாரத்தி காண்பித்து உடன்பிறந்த சகோதரர்கள் அவர்கள் குடும்பம் தனது கணவன் அவரது சுற்றங்கள் தன்குடும்பம் குழந்தைகள் நலனுக்காக மனமுறுகி பிரார்த்திப்பர்

எப்படி

காக்காய் பொடி வைத்தேன் கனுப்பொடி வைத்தேன் எங்கள் குடும்ப நன்மைக்காக காக்காய்க்கு எல்லாம் கல்யாணம் காக்காய் கூட்டம் பிரிந்தாலும் எங்கள் கூட்டம் பிரியாது இருக்கணும் என்று கூறி நமஸ்காரம் பண்ணிவிட்டு

பின்பு தலைகுளித்து அன்று புதிதாக பலவித கலந்த சாதங்கள் (சிதராண்ணம்) செய்து வீட்டில் திருவாராதன ஸவாமிக்கு கண்டருளபண்னி அதையும் காக்காய்க்கு வைத்தபின்  தான் ஸ்வீகரிப்பர்

காக்காய்க்கு ஏன் சாதம் வைக்கிறோம் என்றால்

காக்காய் கூட்டம் அவ்வளவு சீக்கிரம் தனியாக பிரியவே பிரியாது அதுபோல் நம் குடும்பமும் பிரியாது  வளரனும் என்பதை அந்த பெண்கள் விரும்புவார்களாம் அதனாலதான்  காகத்தை நம் முன்னோர்களாக  பிதுர்களாக எண்ணிப் தினமும் பாவிக்கிறோம் ஆகாரமிடுகிறோம்

இந்த கனுப்பொடி உற்சவத்திற்காக வானமாமலை தாயார் இந்த மாதம் 16/01/2018 அன்று  தன் தகப்பனாரான ஜீயர் மடத்திற்க்கு எழுந்தருளி கனுவைப்பதுடன் மகரகண்டி சேவையும் நடக்கும்

நாம் வானமாமலை திவ்யதேசம் செல்ல முடியவில்லை என்றாலும் வீட்டில் இருந்தவாறே கனுவைத்து வானமாமலை தாயாரையும் தெய்வநாயக பெருமாளையும் நமக்காக நம் சகோதரர் மற்றும் நம் கணவன் அவர்களது உற்றார் உறவினர்களுக்காகவும் நலம் வேண்டி அந்த திவ்ய தம்பதிகளை பிரார்ததிப்போம்

ஜெய் ஶ்ரீராமா!

தளத்தை செய்தியோடை மூலம் வாசிப்பவர்கள்

வாசகர்கள்

எங்களின் முதன்மை வலைத்தளம். Our Main Web Site

விருந்தினர் வருகை

சமீபத்தில் வந்தவர்கள்

இதை படித்தவர்கள் படித்தது

அதிகம் படிக்கப்பட்டவை