தமிழ் ஜோதிடம் ஜாதகம்

ஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், வாஸ்துசாஸ்திரம் மூலம் வருங்காலம் அறிய "ஸ்வாதி ஜோதிட ஆய்வகம்" உங்களை அன்புடன் வரவேற்கிறது.

எழுதியவை அனைத்தும்

புரட்டாசி அமாவாசை
நல்ல தருணம் எது! நம் வாழ்க்கை சிறக்க கைக்கொள்ளும் மேன்மையான காரியம் எது! நமக்கு எத்தனை முறை சொல்வதனாலும் – அப்படி சொல்லிக் கொடுத்த பெற்றோர்களுக்கே நாம் உணவளிக்க தக்க வாய்ப்பாம் அமாவாசை திதி நாளாகும். அதுவும் புரட்டாசி மாதம் வரும் திதி மகாளய அமாவாசை நாளாகும்.
என்ன செய்ய வேண்டும்..

பித்ரு லோகம் – பூமியில் அவதரித்து, ஆயுள் முடிந்து மேலுலகம் செல்வதாக சொல்வோமே.. அந்த பித்ரு லோகத்திலிருந்து நம் முன்னோர்கள் நம்மைக் காண வருகின்ற (அந்த 15 தினங்கள் அதாவது புரட்டாசி மாதம் பௌவுர்ணமி தொடங்கி 15 தினங்கள் அமாவாசை வரை மஹாளய பட்சமெனும் நாட்களில்), பெற்றோர்கள் இல்லம் நாடி வந்து நம்மை மகிழ்ச்சிப் படுத்தவும், அவர்கள் மகிழ்ச்சியுறவும் தக்க தருணம் தான் அக்காலம்.  எனவே நம்மை நாடி வரும் பெற்றோரை சிறப்பாக உபசரிக்க வேண்டியது நம் தலையாய கடமையாகும்.  எனவே நாம் தானம் செய்வதும், எள்ளும் தண்ணீரும் கலந்த தர்ப்பணம் செய்வதும் மிகவும் முக்கியமானதாகும்.  இதனால் திருப்தியடைந்து பெற்றோர் நமக்கு அருளாசி வழங்குவார்கள். நோயற்ற வாழ்க்கையும், வளங்கள் நிறைந்த மகிழ்ச்சியான வாழ்க்கையும் அவர்களின் ஆசியினாலாயே தான் நமக்கு வழங்க முடியும். குறிப்பாக வருடந்தோறும் தாய் தந்தையர் இறந்த பகுள, சுத்த மாத திதிநாளில் சிரார்த்தம் கொடுக்க இயலாவிட்டாலும் இந்த மஹாளய அமாவாசையில் தர்ப்பணம் செய்து மகிழ்வுற வேண்டும்.  இவ்வாண்டு சனிக்கிழமை அமாவாசை கடந்த 20 வருடங்களுக்குப் பிறகு அமைந்துள்ளது.  ஏழை மக்களுக்கு உதவிட்டால் சனி பகவானின் அருட்காட்சம் அளவிலாமால் நாம் கிடைக்கப பெறுவோம். முன்னோர்களுக்கு படையல் – அதாவது சைவ உணவுகளை ஆக்கிப் படைத்து மகிழ்வித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவோமாக. 

பாண்டிச்சேரி ராயல் பார்க் -கில் 27-08-2019 அன்று நடைபெற்ற வண்ண மய விழாவில்..
குளோபல் அச்சீவர்ஸ் கவுன்சில் தேர்வு செய்தவாறு, பாளையங்கோட்டை ஜோதிடத் தம்பதி நாராயணய்யர் ரெங்கன் உஷா ரெங்கன் தம்பதியர்க்கு சிகரம் தொட்ட ஜோதிடதம்பதி“ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.  இதில் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி  திரு கே.சாமிதுரை, திரு மோகன்தாஸ் ஜெர்மனி கவுன்சில் அட்வைசர் திரு ஜான் பீட்டர் ஒஸ்போர்ன், டாக்டர் ராயல் பிரசன்ட், 













திரைத்துறையிலிருந்து, பாகுபலிபுகழ் திருமதி ரம்யாகிருஷ்ணன், சரண்யா பொன்வண்ணன், டாக்டர் சின்னி ஜெயந்த், டைரக்டர் சுந்தர்ராஜன், பிலிம் ஆக்டர் டாக்டர் அருள்மணி குளோபல் சேர்மன் திரு செல்வன் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஜோதிடத் தம்பதியைப் பாராட்டினர். 

பாளையங்கோட்டையிலிருந்து கொண்டே பன்னாட்டு வாடிக்கையாளர் களுடன் கடந்த 40 ஆண்டுகளாக ஜோதிடத்துறையில் தம்பதியராக, மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மற்றும் தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் ஜோதிடவியிலில் பட்டம் மற்றும் பட்டயம் பெற்று பல்வேறு விருதுகளைப் பெற்று தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்து வருவதுடன், முப்பதாண்டுகாலம் தமிழாசியராகவும், ஜூனியர் ரெட்கிராஸ் கவுன்சிலின் மாநில கருத்தாளர் பயிற்சியுடன், நுகர்வோர் மன்ற விருதுகள் பலவும் பெற்றதும் குறிப்பிடத்க்கது.

தை 2 கணு உற்சவ மகிமை..

அன்பர்களே
குடும்ப ஒற்றுமை
குடும்ப குதூகலம்
குடும்ப ஷேமம்
குடும்ப உறவுமுறை
பிணியிலா பேரூவகை
எப்படி நடைமுறையில்.. இதோ..
 ஒவ்வொருவருடமும் வானமாமலை தாயார் தைமாதம் இரண்டாம் நாள் தன் பிறந்தவீட்டிற்க்கு மாப்பிள்ளையுடன் வந்து கனு உற்சவம் கொண்டாடுவார் அவ்வமயம் பெருமாள்தாயாருக்கு சகலமரியாதையுடன் விசேஷதிருமஞ்சனமும் சாற்றுமுறையும் ஶ்ரீவைஸ்ணவ கோஷ்டியுடன் மகரகண்டிசேவை வைபமும் நடக்கும்.

ஒவ்வொரு வருடம் மூன்றுமுறை நடக்கும் மகரகண்டிசேவையில் இந்த "தை" கனு உற்சவமும் ஒன்று.

இவ்வருடம் இன்று 16/ 01/2019 புதன் கிழமை கனுப்பொங்கல் கனுப்பொடி உற்சவம் நடைபெறுகிறது

கனுப்பொடி என்பது யாருக்காக

பெண்கள் தங்கள் உடன்பிறந்தவர்களை தங்களது பிறந்த இல்லத்திற்க்கு வந்து கண்டு பேசி ஆனந்தித்து அவர்கள் இன்னும் சிறப்பாக வாழ வேண்டி இறைவனிடம் பிரார்த்தனைகள் செய்து அவர்களின் ஆசிகளை பெற்று மகிழும் நாள்

பொதுவாக சுமங்கலிப் மற்றும் கன்னிப் பெண்கள் கன்யா பெண்கள் தைமாதம் இரண்டாம் நாள் கனுப்பொங்கல் அன்று  வீட்டில் தெருவில் உள்ள தம்மை விடவயதில் மூத்த சுமங்கலிகள் மற்றும் கன்யா பெண்களை நமஸ்கரித்து அவர்களிடம் நெற்றியில் மஞ்சள்  கீறி விடச்சொல்லி தங்கள் கையில்  கொண்டு போகும் பசு மஞ்சளை  அவர்களிடம் கொடுப்பர் அவர்களிடம் மஞ்சள் கீறிக்கொண்டு

பின்னர் சகோதரர்களிடம் மஞ்சள் கீறிக்கொள்வர் அவ்வமயம் கனுப்பொடி என தங்கைகள் அக்காக்கள் ஆகியோருக்கு தங்களால் இயன்ற கனுபொடியை(பணம் நகை என ஏதோ ஒரு பொருளை எதா சௌகரியமாக) தனக்காக தன்குடும்பத்திற்காக வேண்டிக் கொள்ளும் சகோதரிகளுக்குக் கொடுப்பர்.

கனு அன்று தங்களிடம் மஞ்சள் கீறிக்கொள்ள வரும் பெண்களுக்கு பெரிய சுமங்களிகள் நல்ல வார்த்தைகளை ஆசீர்வாதமாக கூறிக்கொண்டே பசு மஞ்சளை நெற்றில் கீற்றி விடுவார்கள்

அந்த ஆசிர்வாத வார்ததைகள் என்ன தெரியுமா?

மஞ்சள் கீறிக்கொள்ளும் பெண்னே நீ தாயோடும் தந்தையோடும் சீரோடும் சிறப்போடும் பேரோடும் புகழோடும் பெருமையோடும் கீர்த்தியோடும் உரிய வயதில் தாலிகட்டி மணப்பெண்ணாக பெரியவளாகி பிள்ளைகள் பெற்று உன்னை கொண்டவன் மனம் மகிழத் தையல்நாயகி  போலத்தொங்க தொங்க தாலி கட்டித் தொட்டிலும் பிள்ளையுமாக மாமியார் மாமனார்  மெச்ச நாத்தியும் மாமியும்  போற்ற பிறந்தகத்தோர் பெருமை விளங்கப் பெற்ற பிள்ளைகள் ஆயுள் ஓங்க உற்றார் உறவினரோட புத்தாடை புது மலர் சூடி புது மாப்பிள்ளை மருமகளோடு புது புது  சந்தோஷம் பெருகி ஆல்போல் தழைத்து அருகு போல் ஏரோடி என்றென்றும் இனிமையாக வாழனும் எப்போதும் சிரித்த முகத்தோடு இருக்கனும்

என்று சொல்லி வாழ்த்துவர்

பின்பு வீட்டிற்கு வந்து காக்காய்க்கு மஞ்சள்செடி இலையில் பலவகை சாத்ததை கலந்துபரிமாரி அத்துடன் வெற்றிலை பாக்கு பழம் கரும்பு துண்டு என காக்காபொடி வைத்து அதை ஜலம் தெளித்து சுத்தி செய்து எறும்புகள் வராவண்ணம் நீர் சுற்றி கற்பூர ஹாரத்தி காண்பித்து உடன்பிறந்த சகோதரர்கள் அவர்கள் குடும்பம் தனது கணவன் அவரது சுற்றங்கள் தன்குடும்பம் குழந்தைகள் நலனுக்காக மனமுறுகி பிரார்த்திப்பர்

எப்படி

காக்காய் பொடி வைத்தேன் கனுப்பொடி வைத்தேன் எங்கள் குடும்ப நன்மைக்காக காக்காய்க்கு எல்லாம் கல்யாணம் காக்காய் கூட்டம் பிரிந்தாலும் எங்கள் கூட்டம் பிரியாது இருக்கணும் என்று கூறி நமஸ்காரம் பண்ணிவிட்டு

பின்பு தலைகுளித்து அன்று புதிதாக பலவித கலந்த சாதங்கள் (சிதராண்ணம்) செய்து வீட்டில் திருவாராதன ஸவாமிக்கு கண்டருளபண்னி அதையும் காக்காய்க்கு வைத்தபின்  தான் ஸ்வீகரிப்பர்

காக்காய்க்கு ஏன் சாதம் வைக்கிறோம் என்றால்

காக்காய் கூட்டம் அவ்வளவு சீக்கிரம் தனியாக பிரியவே பிரியாது அதுபோல் நம் குடும்பமும் பிரியாது  வளரனும் என்பதை அந்த பெண்கள் விரும்புவார்களாம் அதனாலதான்  காகத்தை நம் முன்னோர்களாக  பிதுர்களாக எண்ணிப் தினமும் பாவிக்கிறோம் ஆகாரமிடுகிறோம்

இந்த கனுப்பொடி உற்சவத்திற்காக வானமாமலை தாயார் இந்த மாதம் 16/01/2018 அன்று  தன் தகப்பனாரான ஜீயர் மடத்திற்க்கு எழுந்தருளி கனுவைப்பதுடன் மகரகண்டி சேவையும் நடக்கும்

நாம் வானமாமலை திவ்யதேசம் செல்ல முடியவில்லை என்றாலும் வீட்டில் இருந்தவாறே கனுவைத்து வானமாமலை தாயாரையும் தெய்வநாயக பெருமாளையும் நமக்காக நம் சகோதரர் மற்றும் நம் கணவன் அவர்களது உற்றார் உறவினர்களுக்காகவும் நலம் வேண்டி அந்த திவ்ய தம்பதிகளை பிரார்ததிப்போம்

ஜெய் ஶ்ரீராமா!

வைகுண்ட ஏகாதசி மகிமை.
நாராயண ஐயர் ரெங்கன் – உஷா ரெங்கன் ஜோதிட தம்பதி, பாளை. 9443423897
18-12-2018 செவ்வாய்க் கிழமை  விளம்பி வருடம் மார்கழி மாதம் 03 ம்நாள் வைகுண்ட ஏகாதசி!!

இனிய நந்நாளம் ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி அன்று பெருமாள் அனந்த சயனத்தில் காட்சியளிக்கும் நந்நாள். “ ஏகாதசியை விஞ்சிய வேறு விரதம் இல்லை என்பது பழமொழி. வடமொழியில் ஏகாதசி என்பதை தமிழாக்கம் செய்தால் அதன் அர்த்தம் பதினொன்று ஆகும். அதாவது வளர்பிறை ஆரம்பித்த நாள் முதல் (பிரதமை திதி) 11வது நாளாகும். ஆன்மீக விதிமுறைகள் அனைத்திலும் 11வது நாள் அல்லது 11வது முறை என்பது முக்கிய குறிக்கோளாகக் கொள்ளப்பட்ட எத்தனையோ உதாரணங்கள் உண்டு.
ஏகாதசி விரதத்தில் கைக் கொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகள் வருமாறு
கர்ம இந்திரியங்கள் - ஞானேந்திரியங்கள் -5இதனுடன் மனம்கூடினால் - 11 ஆக இந்த 11இந்திரியங்களால் தெரிந்தோ தெரியாமலோ செய்யப்படும் தீவினைகள் எல்லாம் இந்த 11வது திதி நாளில் விரதம் இருந்தால்அழிந்து விடுவது உறுதி என்பது நம்பிக்கை. ஏகாதசியன்று பகல் உறக்கமோஇருவேளையும் சாப்பிடுதல்தாம்பத்ய சேர்க்கை ஆகியவை அறவே ஆகாது. எனவே ஏகாதசியன்று இந்து சமயத்தவர் திருமண நிகழ்வுகளை தவிர்த்து வருவதும் உண்டு.

ஏகாதசி விரத விவரங்கள்

1. முதல் நாள் தசமி அன்று பகலில் ஒரு வேணை மட்டும் உணவு சாப்பிடுதல்.
2. ஏகாதசியன்று அதிகாலையில் எழுந்துகுளித்து விட்டுபூஜை செய்து விரதம் துவங்க வேண்டும்.
3. ஏகாதசி திதி முழுவதும் உணவு உட்கொள்ளாமல் இருத்தல் நல்லது. ( தேங்காய்பால்தயிர் போன்றவற்றை பிரசாதமாக அருந்துவதில் தவறில்லை. மேலும் பழங்கள் சாப்பிடுவதில் தவறில்லை.
4.இரவு முழுவதும் கண் விழித்துபுராண புத்தகங்களைப் படிக்கலாம். பஜனை மூலம் பகவான் நாமங்கள் உச்சரிக்கலாம்.
5. ஏகாதசிக்கு மறுதினம் துவாதசி நாளாகும். அன்று உணவு அருந்துவதற்குப் பெயர் பரணை என்பர்.
6. துவாதசியன்றுஅதிகாலையில் உப்புபுளிப்பு முதலிய சுவையற்ற உணவாக சுண்டைக்காய்,நெல்லிக்கனிஅகத்திக் கீரைஇவைகளைச் செர்த்து பல்லில் படாமல் “ கோவிந்தா! கோவிந்தா!!” என்று மூன்று முறை உச்சரித்துஆல இலையில் உணவு பரிமாறிச் சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.
7. துவாதசி அன்று உரிய திதி நேரத்தினைக் கணக்கிட்டுஏகாதசி விரதத்தினை நிறைவு செய்ய வேண்டும்.
8. விரதத்தினை நிறைவு செய்வது என்பதுநீர் கூட அருந்தாதவர்கள் துளசி தீர்த்தத்யும்மற்றவர்கள் பகவான் கிருஷ்ணருக்கு தானிய உணவை படைத்து (பிரசாதமாக) உண்ணலாம். ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பது போலவே விரதத்தை முடிப்பது மிக மிக முக்கியம். இல்லை எனில்விரதத்தின் முழுப் பயனும் கிடைக்காமல் போ்ய்விடும்.
9. உணவு சாப்பிடுமுன் பெரியோர்கள் சாப்பிட்டச் சொல்லி உடன் சாப்பிட வேண்டும். அன்று பகலில் தூங்குவது நல்லதல்ல.
10. குழந்தைகளும்வயது முதிர்ந்தவர்களும் இயலாமையில் உள்ளவர்களும் விரதம் அனுஷ்டிக்கத் தேவையில்லை.
11. சாஸ்த்திர நூல்களில் கூறப்பட்டுள்ள மேற்காண் விரத முறைகள் அனுசரிப்பது உடலுக்கும் உள்ளத்திற்கும் நல்லது, சுபம்.
குறிப்பு.. ஆண்டிற்கொருமுறை த்த்தம் உடல், உள்ளம், சுற்றுப்புறம் சுத்தம் செய்யும் மார்கழி மாத்த்தினைத் தொடர்ந்து தை மாத்த்தில் தவறாமல் அவரவர் ஜாதகங்கள் மூலம் எதிர்காலம் எப்படி உள்ளது அறிந்து கொள்ள உகந்த காலமாக்க் கருதி தை மாத்த்தில் ஜாதக பலன் அறிந்து கொள்ள் உத்தமம்.
மேலும் விபரங்களுக்கு.. 38 ஆண்டுகளாக ஜோதிடத்துறையில் பல்கலைக்கழகப் பட்டங்களுடன் பாராட்டுகளும் பெற்றுள்ள - ஜோதிடத் தம்பதியாக இணைய தளம் மூலம் பல்வேறு வெளிநாட்டு வாழ் மக்களுக்கும் ஆலோசனை வழங்கிவரும் பாளையங்கோட்டை சிவன் மேலத்தெரு எண்.20 ல் உள்ள ஜோதிடத்தம்பதி நாராயண ஐயர் ரெங்கன், உஷா ரெங்கன் ஆகியோரை அணுகுக. கைபேசி. 9443423897, 9442586300. 0462 2586300 நன்றி.



அனைவருக்கும் தசரா 2018 நல்வாழ்த்துக்கள்..
அன்புடன்ோதிட தம்பதி



















அன்புடையீர்,
 திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரியில் ஸ்ரீவானமாமலை பெருமாள் ஆலயம் நாம் வழிபட்டு சகல வளங்களும் பெறுவதற்கான சிறப்பானதொரு கண்கண்ட விஷ்ணு ஆலயம்.  108 வைணவத்திருத்தலங்களில் ஒன்று.  இவ்வலாயத்தில் உள்ள எண்ணெய் மிகச் சிறப்பு வாய்ந்தது.  பல்வேறு நோய்களைக் குணமாக்கக் கூடிய அபூர்வ சக்தி வாய்ந்தது.  
இவ்வாலய குடமுழுக்கு 29-06-2018 காலை மணி 09-00க்கு மேல் 09-30க்குள் நடைபெறுகிறது.  குடமுழுக்கு விழாவில் கலந்து கொள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து வேத விற்பன்னர்கள் மடாதிபதிகள் என முக்கியத்துவம் வாய்ந்த ஆன்மீக அன்பர்கள் இந்தியாவெங்கிலிருந்தும் வருகைதர உள்ளார்கள்.  அத்தகு விழாவில் அன்பர்கள் ஆன்மீக ஆர்வலர்கள் கலந்து கொள்ள வேண்டுகிறோம். நன்றி.  அன்புடன் ரெங்கன் உஷா ஜோதிடதம்பதி. (அடியேன் இத்திருத்தலம் அமைந்துள்ள ஊரில் உள்ள நான்குநேரி திரு சங்கர் ரெட்டியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1992 முதல் 2006 வரை ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறேன்.)

















தளத்தை செய்தியோடை மூலம் வாசிப்பவர்கள்

வாசகர்கள்

எங்களின் முதன்மை வலைத்தளம். Our Main Web Site

விருந்தினர் வருகை

சமீபத்தில் வந்தவர்கள்

இதை படித்தவர்கள் படித்தது

அதிகம் படிக்கப்பட்டவை