தமிழ் ஜோதிடம் ஜாதகம்

ஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், வாஸ்துசாஸ்திரம் மூலம் வருங்காலம் அறிய "ஸ்வாதி ஜோதிட ஆய்வகம்" உங்களை அன்புடன் வரவேற்கிறது.

எழுதியவை அனைத்தும்

 

தை அமாவாசை.

பிலவ வருடம் தைமாதம் 18ம் நாள் திங்கட்கிழமை 31.01.2022 உத்திராடம் திருவோணம் நடசத்திரம் கூடிய தினத்தில் தைஅமாவாசை அமைகிறது இத்தினம் முன்னோர்களுக்கு  வணங்க வேண்டும். தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

மறைந்த நம் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதன் அவசியத்தை  நமது முன்னோர்களின் பழக்க வழக்கங்களை சொல்லிக்கொடுக்க கிராமங்களில் இப்போது சாத்திரங்களை அறிந்தவர்கள் அநேகமாக இல்லை. நமது முன்னோர்களின் பழக்க வழக்கங்கள் ஒவ்வொன்றும் அர்த்தம் மிக்கவை  அறிவியல் பூர்வமானவை. உதாரணமாக, நட்சத்திரம் என்றால் என்ன என்று மேலை நாட்டுக்காரர்களுக்கு தெரியும். ஆனால் 'திதி' என்றால் என்ன என்று அவர்களுக்கு இன்னும் தெரியாது. ஆனால், திதியின் முக்கியத்துவத்தை நமது முன்னோர்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே கண்டறிந்து கூறிவிட்டனர்.

 பித்ருகளுக்கு தர்ப்பணம் பூஜை செய்யாதவர்கள் முன்னோர்களின் சாபத்திற்கு ஆளாகின்றனர். அப்படி சாபம் பெற்றவர்களின் வீடுகளில் தான் ஊனமுற்ற குழந்தைகள் பிறக்கிறது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. நம்முடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க சிறந்த நாளான தை அமாவாசைதிங்கள்கிழமைஜனவரி 31ஆம் தேதி வருகிறது. இந்த நாள் முன்னோர்களை நினைத்து வணங்கி அவர்களுக்கு திதி கொடுக்கலாம். இதன்மூலம் நமது முன்னோர்களின் ஆசி கிடைக்கும்.

தை மாதம்18ம் தேதி பகல் 2மணி முதல் அடுத்த நாள் பகல் 12 மணி வரை மணி வரை அமாவாசை திதி உள்ளது. என நம்முடைய முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்கவும், அவர்களை வழிபடவும் மிகச்சிறந்த நாளாகும். ராகு காலம் எமகண்டம், குளிகை நேரம் தவிர பிற நேரங்களில் திதி கொடுக்கலாம்.

மாதுர்காரகனாகிய சந்திரனும், பிதுர்காரகனாகிய சூரியனும் ஒன்றாக இணையும் காலமே அமாவாசை. அந்த தினத்தில் மறைந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்து உணவு படையலிட்டு அவர்களின் ஆசி பெறும் போது, நமது பாக்ய ஸ்தானம் வலிமை பெறும். இதன் மூலம் திருமணத்தடை, குழந்தை பிறப்பு தாமதம், வறுமை, நீடித்த நோய், கடன் தொல்லை போன்ற பிரச்சினைகளை நீக்கி கர்மவினைகளுக்குப் பரிகாரம் தேடிக் கொள்ளலாம்.

 

பித்ரு லோகத்தில் உள்ள நமது முன்னோர்கள் தட்சிணாயாண புண்ணிய காலமான ஆடி அமாவாசை நாளில் பூவுலகத்திற்கு வந்து புரட்டாசி மாதத்தில் மகாளாய பட்ச காலத்தில் நம்முடனே இருந்து உத்தராயாண புண்ணிய காலமான தை மாதத்தில் வரும் அமாவாசை நாளில் நம்மை ஆசிர்வதித்து மீண்டும் பிதுர் லோகத்திற்கு திரும்பி செல்வதாக ஐதீகம். வியாழக்கிழமை தை அமாவாசை தினத்தில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால், அவர்களின் அருளாசியால் எண்ணற்ற நன்மைகள் ஏற்படும்.

 முன்னோர்களை வழிபட்டால் என்ன நன்மை

இப்பூமியில் உள்ள உயிர்களிலேயே உயர்ந்த பிறவியாக கருதப்படுவது மனிதப் பிறவி. மனித வாழ்வில் ஏற்படும் அனைத்து நிகழ்வுகளும் 9ஆம் பாவம் எனப்படும் பாக்ய ஸ்தானத்தினால்தான் தீர்மானம் செய்யப்படுகிறது. அந்த ஸ்தானம் வலிமை பெற்றவர்கள் சாதிக்க பிறந்தவர்கள். பாக்ய ஸ்தானத்தை வலிமைப்படுத்த பிரபஞ்சம் வழங்கிய மாபெரும் கொடைகள் இரண்டு. ஒன்று பித்ருக்கள் பூஜை, மற்றொன்று குலதெய்வ வழிபாடு.

 தர்ப்பணம் செய்யலாம்

தை அமாவாசையில் முன்னோருக்கு உணவு, புத்தாடை படைத்து வழிபட்டு விட்டு, அவற்றை ஏழை எளியவர்களுக்கு தானமாக வழங்கினால் நன்மைகள் பல வந்து சேரும். இல்லத்தில் தடைபட்ட சுபகாரியங்கள் நடைபெறும். நீண்டநாளாக வருத்தி வந்த நோய் அகலும். மனக்கலக்கம் விலகும், மனதில் மகிழ்ச்சி பொங்கும்.

பித்ரு லோகத்தை அடையும் தர்ப்பணம்

அமாவாசை அன்று முன்னோர்கள் ஆத்ம சாந்திக்காக செய்யப்படும் திதி, தர்ப்பண பூஜையானது, நம்முடைய வம்சாவழியினருக்கு பெரிதும் நலம் தரும். தர்ப்பணம் என்பது எள்ளும், நீரும் கொண்டு தரப்படுவதாகும். இந்த தர்ப்பண நீரின் சக்தியானது, பூமியின் ஆகர்ஷன சக்தியை மீறி, மேல்நோக்கி எழும்பிச் சென்று, பல கோடி மைல்களுக்கு தொலைவில் உள்ள பித்ரு லோகத்தை அடையும். தை அமாவாசையன்று, இந்த சக்தியானது மிகவும் அபரிமிதமாக பெருகுகிறது.

 சூரியன் மூலம் தர்ப்பணம் சேரும்

அமாவாசை நாட்களில் தீர்த்தக்கரைகளில் நீராடும் போது, பிதுர்காரகராகிய சூரியனுக்கு இரு கைகளாலும் நீர் விடும் அர்க்கியம் செய்வது மிகுந்த நன்மை தரும். கடல் அல்லது புண்ணிய நதிகளில் நீராடியவுடன் முழங்கால் அளவு நீரில் நின்றுகொண்டு, சூரியனை நோக்கி மூன்று முறை அர்க்கியம் செய்வதன் மூலம் சூரியனின் அருளையும் பூரணமாக பெறலாம். முன்னோர்களுக்கு மூன்று கை தண்ணீர் என்று சொல்வார்கள். அவர்களுக்கு செய்யும் தர்ப்பண பலன்களை நம்மிடம் இருந்து பெற்று பிதுர் தேவதைகளிடம் சூரியன் வழங்குகிறார். அந்த தேவதைகள் மறைந்த முன்னோரிடம் பலன்களை சேர்க்கின்றன என்பது ஐதீகம்.

எள் தர்ப்பணம்

இறைவன் மகாவிஷ்ணு ராமபிரானாக மனித அவதாரம் எடுத்த போது தனது தந்தைக்கு பித்ரு கடன் நிறைவேற்றியுள்ளார். பித்ரு கடனை நிறைவேற்றினால் நன்மைகள் வளரும் என்று சிவபெருமான் ராமபிரானிடம் கூறியதன் அடிப்படையில் ராமர், தசரதருக்கும், ஜடாயுவுக்கும் எள் தர்ப்பணம் செய்து பிதுர் பூஜை செய்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. திருப்புல்லாணி, ராமேஸ்வரம், கோடியக்கரை, பூம்புகார், திருவெண்காடு, திருச்சி அம்மா மண்டபம், திருச்செந்தூர், முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி, பவானி கூடுதுறை போன்ற தலங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிக்கலாம்.

 திதி கொடுக்க நல்ல நேரம்

ஜனவரி 31.பகல் 2 மணி  முதல் அடுத்த நாள் 12. மணி வரை அமாவாசை திதி உள்ளது. எனவே  நம்முடைய முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்கவும், அவர்களை வழிபடவும் மிகச்சிறந்த நாளாகும். ராகு காலம் எமகண்டம், குளிகை நேரம் தவிர பிற நேரங்களில் திதி கொடுக்கலாம். இதன் மூலம் நமக்கு ஏற்பட்டு வந்த தடைகள் நீங்கும் சுப காரியங்கள் நடைபெறும்.

தை அமாவாசை 2022: உங்க ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருக்கா... இந்த பரிகாரங்களை செய்யுங்க

ஒருவருடைய ஜாதகத்தில் என்ன தான் ஒன்பது கிரகங்களும் உச்சம் பெற்று பலமாக அமர்ந்திருந்தாலும், பித்ரு தோஷம் மட்டும் இருந்தால் அவ்வளவு தான், அவர் என்னதான் பகீரத பிரயத்தனம் செய்தாலும் வாழ்வில் முன்னேற்றம் காண முடியாது. எடுக்கும் அனைத்து காரியங்களும் தோல்வியில் தான் முடியும். ஜான் ஏறினால் முழம் சறுக்கும். அவர் மானசீகமாக கும்பிடும் தெய்வம் கூட அவருக்கு துணைக்கு வராமால் ஓரமாக ஓதுங்கி நின்று கை கட்டி வேடிக்கை தான் பார்க்கும்.

 

இதற்கு காரணம் பித்ருக்களின் சாபம் தான். பித்ருக்களின் சாபத்தை போக்க வேண்டுமென்றால், முதலில் பித்ருக்களை சாந்தப்படுத்த வேண்டும். பித்ருக்களை சாந்தப்படுத்த வேண்டுமென்றால், பித்ரு தோஷத்தை போக்க வேண்டும். பித்ரு தோஷத்தை போக்கிய பின்பே, ஒருவரது ஜாதகமே தன்னுடைய ஆட்டத்தை ஆரம்பிக்கும்.

ஒவ்வொரு ஆண்டும் மஹாளய பட்சம் என்று ஒரு காலம் வரும். புரட்டாசி மாதத்தில் வரும் தேய்பிறை பிரதமை திதியில் இருந்து அமாவாசை திதி வரை உள்ள 14 நாட்கள் தான் அந்த மஹாளய பட்ச காலமாகும். இந்த மஹாளய பட்ச காலத்தில் தான் நமது முன்னோர்கள் இந்த பூமிக்கு வந்து தன்னுடைய சந்ததிகளின் இல்லத்தில் உள்ள நீர் நிலைகளில் தங்கியிருப்பார்கள். அந்த 15 நாட்களில் நாம் பித்ரு தர்ப்பணம் செய்தால், அந்த தர்ப்பணத்தை நமது பித்ருக்கள் நேரடியாகவே ஏற்றுக்கொண்டு நமக்கு ஆசி வழங்குவார்கள். அதோடு நம்முடைய பித்ரு தோஷமும் நீங்கும் என்பது ஐதீகம். மகாளய பட்ச காலத்தில் செய்த மறந்தவர்கள் தை அமாவாசை நாளில் பித்ருக்களை மறக்காமல் தர்ப்பணம் கொடுப்பது அவசியமாகும்.

 ஜாதகம் சொல்வதென்ன

ஒருவருடைய ஜாதகம் பித்ரு தோஷம் உள்ள ஜாதகம் என்பதை எப்படி கணக்கிடுவது. ஒருவரது ஜாதகத்தில் பாவ கிரகம் எனப்படும் பாம்பு கிரகங்களான ராகுவும், கேதுவும் 1,3,5,7,9,11 ஆகிய இடங்களில் அஸ்திவாரம் போட்டு உட்கார்ந்திருந்தாலும் சரி, சூரிய சந்திர கிரகங்களோடு சேர்ந்து உட்கார்ந்திருந்தாலும் சரி, அந்த ஜாதகம் பித்ரு தோஷம் உள்ள ஜாதகமாகும்.

 ராகு கேது

ராகுவும் கேதுவும் தான் முன்வினைகளை பிரதிபலிக்கும் கிரகங்களாகும். ராகு நமது தந்தை வழி முன்னோர்களையும், கேது தாய் வழி முன்னோர்களையும் குறிக்கும் கிரகங்களாகும். சாயா கிரகங்களான ராகுவும், கேதுவும் நம்முடைய முன்னோர்கள் செய்த பாவ-புண்ணிய கணக்கை தெளிவாக காட்டுவதோடு மட்டுமில்லாமல், அந்த பாவங்களை தீர்க்க முடியுமா, முடியாதா? என்பதையும் படம் பிடித்து காட்டும் கிரகங்களாகும்.

 முன்னோர்களின் பாவங்கள்

ஒருவருடைய ஜாதகத்தில் ராகுவும் கேதுவும் அமைந்திருக்கும் இடத்தை பொறுத்து தான் அவரின் படிப்பு முதல் எதிர்கால வாழ்க்கையும் அமையும். மேற்குறிப்பிட்டவாரு, ஒருவரின் ஜாதகத்தில் 1,3,5,7,9,11 ஆகிய இடங்களில் ராகுவும் கேதுவும் பலமாக உட்கார்ந்துவிட்டால், படிப்பு, வேலை, மண வாழ்க்கை என அத்தனையுமே கேள்விக்குறி தான். அதற்கு காரணம், அவர் முற்பிறவியில் செய்த பாவங்களும், முன்னோர்கள் செய்த பாவங்களும் தான்.

 பாவ புண்ணியங்கள்

ஒருவர் முற்பிறவியில் செய்த பாவங்களே, இப்பிறவியில் அப்படியே தோஷங்களாக மாறி அவரின் ஜாதக கட்டத்தில் அஸ்திவாரம் போட்டு அமர்ந்துகொள்கின்றன. அதுவே முற்பிறவியில் புண்ணியம் செய்திருந்தால், இப்பிறவியில யோக கட்டங்களாக அமைந்துவிடுகின்றன. கூடவே, நமது முன்னோர்களிடம் இருந்து தான் நாம் உடல், பொருள், ஜீவன் என அனைத்தையும் பெறுகிறோம். எனவே, முன்னோர்களின் பாவ-புண்ணியத்தில் ஒரு பகுதியை இந்தப் பிறவியில் நாமும் அனுபவிக்கவேண்டும் என்பது தான் நமது தலைவிதியாகும். புண்ணியம் செய்திருந்தால் அந்த புண்ணியத்தையும் சேர்த்தே அனுபவிக்க வேண்டும்.

 புராணங்கள்

நமது முன்னோர்களின் பாவமும், நாம் முற்பிறவியில் செய்த பாவமும் பார்ட்னர்ஷிப் போட்டுக்கொண்டு, இந்தப் பிறவியிலும், நமக்கு பின்பு நமது சந்ததிகள் என தலைமுறை, தலைமுறையாக நிழல் போல் பின்தொடர்ந்து வரும் என புராணங்களிலும், ஜோதிடத்திலும் கூறப்பட்டுள்ளன. ஆகவே தான், நாம் ஒவ்வொருவரும் நமது பாவத்தையும், நமது முன்னோர்களின் பாவத்தையும் சேர்த்து அழித்து, முன்னோர்களின் ஆன்மாக்களையும், நமது ஆன்மாக்களையும் நற்கதி அடைய வழிவகை செய்ய வேண்டும்.

 மஹாளய பட்சம்

நம்முடைய முன்னோர்களான பித்ருக்களின் ஆன்மா நற்கதி அடையத்தக்க முறையான பரிகாரங்களையும் நாம் மேற்கொள்ள வேண்டும். அப்படி செய்தால் தான் பித்ரு தோஷம் நிவர்த்தியாகும். பித்ரு தோஷத்தை எவ்வாறு நிவர்த்தி செய்வது?. ஒவ்வொரு ஆண்டும் மஹாளய பட்சம் என்று ஒரு காலம் வரும். அதாவது, தமிழ் வருடத்தின் புரட்டாசி மாதத்தில் வரும் தேய்பிறை பிரதமை திதியில் இருந்து அமாவாசை திதி வரை உள்ள 14 நாட்கள் தான் அந்த மஹாளய பட்ச காலமாகும்.

 பித்ரு தர்ப்பணம்

இந்த மஹாளய பட்ச காலத்தில் தான் நமது முன்னோர்கள் இந்த பூமிக்கு வந்து தன்னுடைய சந்ததிகளின் இல்லத்தில் உள்ள நீர் நிலைகளில் தங்கியிருப்பார்கள். அந்த 15 நாட்களில் நாம் பித்ரு தர்ப்பணம் செய்தால், அந்த தர்ப்பணத்தை நமது பித்ருக்கள் நேரடியாகவே ஏற்றுக்கொண்டு நமக்கு ஆசி வழங்குவார்கள். ஒரு வேளை, மஹாளய பட்ச காலத்தில் தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள், மகாபரணி நட்சத்திர நாளிலும், அமாவாசை திதியிலும் செய்தால் கூட போதும்.

 தை அமாவாசை

குறிப்பாக ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை நாட்களிலும் நாம் பித்ருக்களுக்கு செய்யும் தர்ப்பணம் மற்றும் தானம் நம்முடைய அனைத்து தோஷங்களையும், நீக்கும். மிகக்கடுமையான பித்ரு தோஷம் உள்ளவர்கள், ராமேஸ்வரம் சென்று திலஹோமம் செய்வது அவசியமாகும். மேலும் இந்துக்கள் அனைவரும், வாழ்வில் ஒரு முறையாவது ராமேஸ்வரம், காசி, கயா ஆகிய புண்ணிய தலங்களுக்கு சென்று பிதுர் தர்ப்பணம் செய்தால் வாழ்வு வளமாகும் என்பது ஐதீகம். பித்ருக்களை சாந்தப்படுத்தி அவர்களின் ஆசி பெறாமல் நாம் செய்யும் எந்த காரியமும் வெற்றி பெறாது என்பது குறிப்பிடத்தக்கது.

தை அமாவாசை  தில ஹோமம் செய்து கொடுக்கும் பிண்டங்களை முன்னோர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா?

ஒருவர் தன்னுடைய முற்பிறவியில், தனது சகோதர சகோரிகளை கொடுமைப்படுத்தி, அவர்களை ஏமாற்றி அவர்களுக்கு முறையாக சேரவேண்டிய சொத்துக்களை அபகரித்திருந்தால், மறுபிறவியில், அந்த பாவம் நம்மை பற்றிக்கொண்டு, உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலமாக கொடுமைக்கு ஆளாக நேரிடும். ஒருவர் தனது முற்பிறவியில், தெரிந்தோ தெரியாமலோ கருச்சிதைவு செய்திருந்தாலும் சரி, இப்பிறவியில் என்னதான் கோவில் குளம் என்று சுற்றி வந்தாலும் கூட சந்ததி விருத்தி ஏற்படாமல், தான் ஆண்டு அனுபவிக்கும் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்று முது மொழியும், பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தானே வரும் என்ற திருக்குறளும் எடுத்துரைக்கின்றன. இதில் முற்பகல் என்பது நம்முடைய இந்த பிறவி மட்டுமல்லாது, முற்பிறவியில் நாம் செய்த நற்செயல்களும், பாவச் செயல்களும் நம்மை நிழல் போல் தொடர்ந்து வந்து கொண்டே தான் இருக்கும்.

இப்பிறவியில் நாம் உயிரோடு இருக்கும் வரையிலும் கூடுமானவரை, நல்ல செயல்களையே செய்ய வேண்டும் என்று சான்றோர்கள் கூறியிருக்கிறார்கள். அப்படி இல்லாவிட்டால், நாம் செய்த பாவங்கள் அனைத்தும், நம்முடைய வாழ்க்கைக்கு பின்பு, நமது சந்ததிகளுக்கு பித்ரு தோஷமாக மாறி அவர்களின் வாழ்க்கையை அலைக்கழிக்கக் கூடும். அதனால் தான், நாம் முற்பிறவியில் செய்த பாவங்களாலும், நமது முன்னோர்கள் செய்த பாவச் செயல்களாலும் பித்ரு தோஷம் ஏற்படுகிறது என்று புராணங்கள் கூறுகின்றன. ஒருவர் எவ்வாறான பாவச் செயல்களை செய்தால் பித்ரு தோஷமாக மாறும் என்பதையும் புராணங்கள் தெளிவாக விளக்கியுள்ளன.

 இப்பிறவியிலும் தொடரும் பாவம் - பெற்றவர்களின் சாபம்

ஒரு ஆண் மகன், முற்பிறவியில் தன்னை பெற்ற தாய் தந்தையரை சரிவர கவனிக்காமல், கட்டிய மனைவியின் பேச்சைக் கேட்டு அவர்களை வெளியில் துரத்திவிட்டால், அவ்வளவு தான், அவர்கள் கோபம் சாபமாக மாறி, மறுபிறவியில் பித்ரு தோஷமாக நம்மை அலைக்கழிக்கும். அதனால் தான், யாருடைய சாபத்திற்கு ஆளானாலும் பெற்றவர்களின் சாபத்திற்கு மட்டும் ஆளாக கூடாது என்று முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

இவ்வாறான பித்ரு தோஷங்கள் தன்னையும், தன்னை நம்பி இருக்கும் ரத்த சம்பந்தம் உள்ளவர்களையும் சேர்த்தே பாதிக்கும். தீராத நோய்கள், தேவையற்ற வீண் வம்புகள், குடும்பத்திற்குள் சண்டை, சச்சரவுகள் என பிரச்சனைகளை தூண்டிவிட்டுக்கொண்ட இருக்கும். இதைத்தான் கர்மா என்றும், அந்த கர்மா உங்களுக்கு எதிராக எந்த செயலையும் செய்யவில்லை. நீங்கள் முற்பிறவியில் செய்த வினைகளை ஒரு சிசிடிவி போல் படம் பிடித்து, கால புருஷனிடம் கொடுத்து, நீங்கள் முற்பிறவியில் செய்த வினைக்கு தான் எதிர்வினை ஆற்ற சிறிதும் தவறுவதில்லை என்றும் வேதங்களும் சொல்கின்றன

 மூன்று தலைமுறைக்கு பாதிப்பு தான்

பித்ரு தோஷங்கள் குறைந்தது மூன்ற தலைமுறைகளுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் வலிமை கொண்டதாகும். பித்ரு தோஷங்களை போக்க வேண்டுமானால், அமாவாசை நாட்களில் கடல், ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளுக்கு பித்ருக்களுக்கு தர்ப்பணம் மற்றும் தான தர்மங்களை செய்தால், பித்ரு தோஷங்கள் அனைத்தும் நீரில் பிண்டம் கரைவது போல் கரைந்து விடும். மற்ற அமாவாசை நாளில் தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள், தை அமாவாசை நாளிலாவது பித்ரு தர்ப்பணம் செய்வது அவசியமாகும்.

 தில ஹோமம்

மிகக் கடுமையான பித்ரு தோஷம் உடையவர்கள், ராமேஸ்வரம் சென்று திலா ஹோமம் செய்தால் பித்ரு தோஷம் நீங்கும். திலா ஹோமம் வேதங்கள் நன்கு கற்றறிந்த வேத பண்டிதர்களால் மட்டுமே செய்ய முடியும். திலா ஹோமம் என்பது நெல்லும் எள்ளும் கலந்து செய்யப்படும் ஹோமம் ஆகும். திலம் என்றால் எள் என்று அர்த்தமாகும். திலா ஹோமம் செய்பவர்கள் அன்றிரவு ராமேஸ்வரத்தில் தங்கியிருக்க வேண்டும். ஹோமம் முடிந்த உடனேயே நேராக வீட்டுக்கு செல்லக்கூடாது.

 மஹாவிஷ்ணுவின் அருளாசி

தில ஹோமம் செய்து முடித்து பிண்டங்களை கடல் நீரில் கரைக்கும் சமயத்தில், அதற்கு நேர் மேலே வானில் கருட பகவான் வட்டமிடவேண்டும். அப்படி நடந்தால் தான், பித்ருக்கள் நம்முடைய தர்ப்பணத்தை ஏற்றுக்கொள்வதோடு, மஹாவிஷ்ணுவும் நம்மை ஆசீர்வதிப்பதாக அர்த்தம். வைணவ மார்க்கத்தை கடைபிடிப்பவர்கள், ராமேஸ்வரம் அருகில் உள்ள திருப்புல்லாணி கரையில் தில ஹோமம் செய்த பித்ருக்களின் ஆசீர்வாதத்தையும், மஹாவிஷ்ணுவின் அருளையும் பெறலாம். பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்யாமல் நாம் செய்யும் எந்த விதமான பூஜையோ, தான தர்மமோ பலனளிக்காது. அது கடலில் கரைத்த பெருங்காயம் தான் என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும். எனவே இந்த தை அமாவாசை நாளில் தாய் தந்தையை இழந்த அனைவரும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து அவர்களின் நல்லாசியை பெறுவது அவசியம்.

தை அமாவாசை பித்ருக்களின் சாபம் எத்தனை வலிமையானது தெரியுமா

அமாவாசை திதியன்று நாம் முறையாக பித்ருக்களை வழிபட்டு அவர்களின் பசியை போக்கவேண்டும். இல்லாவிட்டால், நமது பித்ருக்கள் மிகுந்த வருத்தத்துடன் பிதுர் லோகம் சென்றுவிடுவார்கள். அப்படி வருத்தத்துடன் பிதுர்லோகம் செல்லும் நமது முன்னோர்கள் கோபம் கொண்டு, நமக்கு சாபமும் அளித்துவிடுவார்கள். இந்த சாபமானது தெய்வத்தின் அருளையும் கூட தடை செய்யும் சக்தி பெற்றது. முறையாக பித்ரு கடன்களை செலுத்தாவிட்டால், நம்மை படைத்த கடவுளால் கூட நமக்கு கருணை காட்ட முடியாது. அவ்வளவு வலிமையானவர்கள் நம்முடைய பித்ருக்கள் தான்.

கடவுளால் இந்த பூமியில் படைக்கப்பட்ட எந்த ஒரு ஆன்மாவுக்கும் அழிவு என்பதே கிடையாது. கடவுளின் அருளால் உருவாக்கப்பட்ட ஜீவராசிகளின் உடம்புக்குள் ஆன்மாவாக நுழைந்து, அந்த ஜீவராசியின் ஆயுள் முடிந்த உடன், வந்த வேலை முடிந்தது என்று நினைத்து, பிறகு வேறு ஒரு ஜீவராசியின் உடம்புக்குள் புகுந்து அந்த ஜீவராசியின் பாவ புண்ணியத்துக்கு ஏற்ப ஆட்டம் காட்டும். அது மண்புழுவாக இருந்தாலும் சரி அல்லது ஆறறிவு படைத்த மனிதனாக இருந்தாலும் சரி ஒரே அளவு கோல் தான்.

மற்ற ஜீவராசிகளைப் பற்றி மனிதனுக்கு எந்தவிதமான கவலையும் கிடையாது. ஆனால், மனிதனாக பிறந்த ஒவ்வொரும், தான் முற்பிறப்பில் செய்த பாவ புண்ணியத்துக்கு ஏற்றவாறே மீண்டும், மீண்டும் மறபிறவி எடுத்து, முற்பிறவியில் செய்த பாவ புண்ணியத்துக்கு ஏற்ப பலா பலன்களை அனுபவித்து வாழ்ந்து மடிந்தது கடைசியில் இறைவனோடு கலந்து விடுகிறான்.

பித்ரு லோகம்

ஒரு ஆன்மா மனிதனாக பிறவி எடுத்து, பாவ புண்ணியத்துக்கு ஏற்ப பலா பலன்களை அனுபவித்துவிட்டு இறந்து போனால், இறந்த உடனேயே மீண்டும் ஒரு மனிதப் பிறவி எடுப்பது கிடையாது. இறந்த பின்பு ஆன்மாக்களின் உலகம் எனப்படும் பித்ரு லோகத்திற்கு சென்று, அங்கேயே தங்கியிருந்து, தனக்காக தன்னுடைய வாரிசுகள் செய்யும் பித்ரு கடன் எனப்படும் தர்ப்பணத்தை பெற்றுக்கொள்ளும் வரை ஆன்மாவாகவே சுற்றித் திரியும்.

 ரத்தத்தின் ரத்தங்கள்

பித்ரு என்பது, இறந்துபோன நமது தந்தை, தாய், உள்ளிட்ட முன்னோர்களைக் குறிக்கும். தந்தை வழி மற்றும் தாய் வழி சொந்தம் என இறந்துபோன நம்முடைய அனைத்து முன்னோர்களுமே நமது பித்ருக்கள் தான். நமது தந்தை வழியில் இருந்து போன முன்னோர்கள் அனைவரும் நமது பிதுர் வழி பித்ருக்கள் என்றும், தாய் வழியில் இறந்த முன்னோர்கள் அனைவரும் மாத்ரு வழி பித்ருக்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். சுருக்கமாக சொல்வதென்றால், நமது ரத்த சொந்தத்தில் இறந்து முன்னோர்கள் அனைவருமே பித்ருக்கள் தான்.

 

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது

நாம் அழகாக பேணி காக்கும் நம்முடைய உடல், பொருள், ஆன்மா அனைத்துமே, நம்முடைய பித்ருக்கள் நமக்கு அளிதத பிச்சை தான். அவர்கள் போட்ட பிச்சையில் தான் நாம் இவற்றை சுகபோகமாக அனுபவித்து வருகிறோம். அப்படி நாம் அனுபவிக்கும் போது, அந்த பித்ருக்கள் செய்த பாவ புண்ணியத்தையும் சேர்த்தே தான் நாம் அனுபவித்து வருகிறோம். அப்படி எல்லாம் முடியாது, அவர்கள் செய்த புண்ணியத்தை மட்டுமே நான் அனுபவிப்பேன் என்று ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது. பாவ புண்ணியம் என இரண்டையும் சேர்த்து தான் அனுபவிக்க வேண்டும்.

 ஆன்மாவை சாந்தப்படுத்தனும்

நம்மோடு வாழ்ந்து மறைந்துவிட்ட நமது முன்னோர்களான பித்ருக்கள் அனைவருமே, நாமும் நம்முடைய சந்ததிகளும் நலமுடன் வாழவேண்டும் என்று தான் விரும்புவார்கள். எனவே தான், அவர்கள் உயிரோடு இருந்தபோது, அவர்களை முறையாக பேணி காத்து அவர்களின் பசியை போக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டாலும் கூட, அவர்கள் இறந்த பிறகாவது அவர்களின் பசியை போக்கி அவர்களின் ஆன்மாவை சாந்தப்படுத்த வேண்டும். இது தான் பிதுர்க்கடன் என கூறப்படுகிறது.

 தமிழர்களின் ஆவி வழிபாடு

நமது பித்ருக்களுக்கு நாம் செய்யும் பித்ரு கடன் வழிபாடு என்பது ஆவி வழிபாடு எனப்படும். ஆவி வழிபாடு என்பது பழந்தமிழர்களின் மூதாதையர் வழிபாட்டு முறையாகும். இந்த வழிபாடு தற்போது மறைந்து வருகிறது. ஆனால், கிராமங்களில் இன்றும் இந்த மூதாதையர் வழிபாடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆவி வழிபாடு என்பதால் பயப்பட வேண்டிய அவசியம் கிடையாது. காரணம், நம்முடைய முன்னோர்களின் ஆவியானது, மறுபிறப்பு எடுக்கும் வரையிலும் நம்முடைய நலனில் பெரிதும் அக்கரை கொண்டவையாகவே இருக்கும்.

 ஆவி ரூபத்தில் பித்ருக்கள்

நமது பித்ருக்கள் தான், நமக்கும் இறைவனுக்கும் நடுவில் இருந்து இறைவின் அருளாசியை நமக்கு பெற்றுத் தருவதோடு, நமது வேண்டுதல்களையும் இறைவனிடம் கொண்டு சேர்த்து வேண்டுதல்களையும் நிறைவேற்றித் தருவார்கள். இப்படி, ஆவிகள் ரூபத்தில் உலவிடும் நமது முன்னோர்களுக்கு நாம் முறையாக செய்யும் வழிபாடு தான் பித்ருகடன் அல்லது தர்ப்பணம் என கூறப்படுகிறது.

நீர் நிலைகளில் தங்கும் பித்ருக்கள்

நம் மீதும் நம்முடைய சந்ததிகள் மீதும் அதிக அக்கறை கொண்ட நமது பித்ருக்களை நாம் வழிபாடு செய்து அவரிகளின் பசியைப் போக்க வேண்டியது நமது கடமையாகும். அப்படி இல்லாமல் பித்ருக்களின் பசியை போக்காமல், அவர்கள் இறந்த பிறகு அவர்களுக்கு நாம் ஏன் மரியாதை செலுத்த வேண்டும் என்று உதாசீனப்படுத்தினால், நமது பித்ருக்கள் பசியால் வாடுவர். அப்படி பசியால் வாடும் பித்ருக்கள் ஒவ்வொரு அமாவாசை திதியிலும் நமது வீட்டிலுள்ள நீர் நிலைகளில் வந்து தங்குவார்கள்.

பித்ருக்களின் சாபம்

அமாவாசை திதியன்று நாம் முறையாக பித்ருக்களை வழிபட்டு அவர்களின் பசியை போக்கவேண்டும். இல்லாவிட்டால், நமது பித்ருக்கள் மிகுந்த வருத்தத்துடன் பிதுர் லோகம் சென்றுவிடுவார்கள். அப்படி வருத்தத்துடன் பிதுர்லோகம் செல்லும் நமது முன்னோர்கள் கோபம் கொண்டு, நமக்கு சாபமும் அளித்துவிடுவார்கள். இந்த சாபமானது தெய்வத்தின் அருளையும் கூட தடை செய்யும் சக்தி பெற்றது. முறையாக பித்ரு கடன்களை செலுத்தாவிட்டால், நம்மை படைத்த கடவுளால் கூட நமக்கு கருணை காட்ட முடியாது. அவ்வளவு வலிமையானவர்கள் நம்முடைய பித்ருக்கள் தான்.

ஜாதகத்தில் பித்ரு தோஷம்

எனவே தான், நாம் பித்ருக்களின் கோபத்திற்கு ஆளாகாமல் தப்பிக்க வேண்டுமானால், அவர்களுக்கு நாம் முறையாக பித்ரு கடன் செய்து அவர்களின் பசியை போக்கி அவர்களை சாந்தப்படுத்த வேண்டும். ஒருவருடைய ஜாதகத்தில் உள்ள தோஷத்திலேயே மிகக் கடுமையான தோஷமே பித்ரு தோஷம் தான். பித்ரு தோஷம் உள்ளவர்களின் வாழ்க்கையில் படிப்பு முதல், வேலை, தாம்பத்ய வாழ்க்கை, குழந்தை என இவற்றில் ஏதாவது ஒன்றில் தீராத பிரச்சனையும் சிக்கலும் இருந்து வரும்.

பித்ரு தோஷம் என்ன செய்யும்

பிதுர் தோஷத்தை நிவர்த்தி செய்யாமல் நாம் செய்யும் எந்த ஒரு பூஜையோ பரிகாரமும் வேலைக்கு உதவாது, பலனும் தராது. ஆகவே தான், நாம் முதலில் பிதுர் தோஷத்தை போக்கிட வேண்டியது அவசியமாகும். பிதுர் தோஷம் உள்ளவர்களின் ஜாதகமே, பிதுர் தோஷத்தை நிவர்த்தி செய்த பின்பு தான் தன்னுடைய வேலையை தொடங்கும். இல்லாவிட்டால் ஒருவருக்கு ஒன்பது ராசிகளும் உச்சம் பெற்று முதல்வராக ஆகும் ஜாதகமாக இருந்தாலும் கூட, அனைத்து ராசிகளும் சைலண்ட் மோடிலேயே இருக்கும். எனவே, பிதுர் தோஷம் உள்ளவர்கள் முதலில் அந்த தோஷத்தை போக்க வேண்டியது அவசியமாகும்.

பிதுர் வழிபாட்டுக்கு உகந்த அமாவாசை

ஒரு வருடத்தை இரண்டு பருவங்களாக நம் முன்னோர்கள் பிரித்து வைத்துள்ளனர். ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை உள்ள காலத்தை தட்சிணாயன காலம் என்றும், தை முதல் ஆனி மதம் வரை உள்ள காலம் உத்தராயண காலம் என்றும் பிரித்து வைத்துள்ளனர். இதன் காரணமாகவே, உத்தராயண காலத்தின் தொடக்க மாதமான தை மாத அமாவாசை திதியையும், தட்சிணாயன கால தொடக்க மாதமான ஆடி மாத அமாவாசை திதியை பிதுர் வழிபாட்டிற்கு மிக உகந்த தினம் என சாஸ்திர நூல்கள் தெளிவாக கூறியுள்ளன.

 முன்னோர்களுக்கு தர்ப்பணம்

அதிலும், சூரியன் தன்னுடைய வடதிசை பயணம் துவக்கும் உத்தராயண மாதமான தை மாதத்தில் வரும் அமாவாசை திதி மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. காரணம், அந்த நாளில் தான் நம்முடைய முன்னோர்கள் நாம் செய்யும் தர்ப்பணத்தை பெற்றுக்கொண்டு மீண்டும் பித்ரு லோகம் செல்லும் நாளாகும். தை அமாவாசை நாளில், கடற்கரை, ஆறு போன்ற நீர் நிலைகளுக்கு சென்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வணங்குவது, இந்துக்களாக பிறந்த ஒவ்வொருவரின் மிக முக்கிய ஆன்மீகக் கடமையாகும்.

 பிதுர் காரகன், மாத்ரு காரகன்

சூரியனை பூமியும், அதன் துணைக் கோளான சந்திரனும் சுற்றி வருகின்றன என்பது அனைவரும் அறிந்த அறிவியல் உண்மை. தை மாத தொடக்கத்தில் மகர ராசியில் நுழையும் சூரியனும், பூமி மற்றும் சந்திரனும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் தினமே தை அமாவாசை நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது. சூரியன், ஆண்மை, ஆற்றல், வீரம் ஆகியவற்றை தரக்கூடியவர். சந்திரன் நம்முடைய மனதுக்கு அதிபதியானவர். மகிழ்ச்சி, தெளிவான தெளிந்த அறிவு, இன்பம் ஆகியவற்றை தரக்கூடியவர். இதனால் தான் சூரியனை பிதுர்காரகன் என்றும், சந்திரனை மாத்ரு காரகன் என்றும் ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன.

 

பித்ருக்களின் நல்லாசி

சூரியனையும், சந்திரனையும் தந்தை தாயாக மதித்து வழிபடும் தெய்வங்களாக கருதி வழிபடுகின்றனர். இத்தனை பெருமைகளை உடைய சூரியன் மற்றும் சந்திரனை, தாய் தந்தையை இழந்த அனைவருமே, அமாவாசை திதியில் வழிபடுவது பண்டைய காலம் தொட்டு பின்பற்றப்பட்டு வரும் ஒரு வழக்கமாகும். தை மாதத்தில் அம்பாளையும், முருகனையும் போற்றி வழிபடும் மாதமாக இருந்தாலும், தை அமாவாசை தினத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்தால், அவர்களின் நல்லாசியால் அளவற்ற நன்மைகள் உண்டாகும்.

 ஸ்ரீராமருக்கு சிவபெருமானின் அறிவுரை

நீத்தார் கடனை சரியாக முறையாக செய்தால் பல்வேறு நன்மைகள் உண்டாகும். பித்ருக்களுக்கு திதி தருவது பிண்டம் வைத்து வழிபடுவது போன்ற கடன்கள் முறையாக நிறைவேற்றப்பட வேண்டும் என சாஸ்திரங்களும் ஜோதிட நூல்களும் தெரிவிக்கின்றன. இவ்வாறான கடன்களை முறையாக நிறைவேற்றி விட்டாலே போதும், நம்முடைய சந்ததிகளின் வாழ்க்கை வளம்பெற்று மென்மேலும் சிறக்கும். பித்ரு கடன்களை நிறைவேற்றினால் நன்மைகள் பெருகும் என்று சிவபெருமானே ஸ்ரீராமபிரானிடம் கூறியிருக்கிறார். சிவபெருமான் கூறியதைக் கேட்ட பின்பே, ஸ்ரீராமர் தன்னுடைய தந்தை தசரத சக்ரவர்த்திக்கும், ஜடாயுவுக்கும் எள்ளால் தர்ப்பணம் செய்து பிதுர் பூஜை செய்தார்.

 பித்ருக்கள் பூலோகம் செல்ல அனுமதி

ஸ்ரீராமபிரான் பித்ரு கடனை பூர்த்தி செய்த உடனே, சிவபெருமான் ஸ்ரீராமபிரான் முன்பு தோன்றி, முன்னோருக்கு தர்ப்பணம் செய்ததால், அனைத்து பாவங்களும் நீங்கப்பெற்று, அனைத்து நன்மைகளும் தேடி வரும் என புராணங்கள் தெரிவிக்கின்றன. ஆடி அமாவாசை திதியன்று, நமது பித்ருக்களை பூலோகம் செல்ல எமதர்மன் அனுமதி தருவார். எம தூதர்கள் பித்ருக்களை சூரியனின் வாகனத்தில் பூலோகத்திற்கு அழைத்து வருவார்கள். பித்ருக்களும் அவரவர் சந்ததியினர்களின் இல்லத்திற்கு செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

 மனம் குளிரும் பித்ருக்கள்

அப்போது, பித்ருக்கள் தங்களின் வாரிசுகளையும் உறவினர்களையும் பார்க்க மிகுந்த பாசத்துடனும், பசியுடனும் வருவார்கள். அதனால் தான் அமாவாசை நாளில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டியது அவசியமாகும். அதிலும் தை அமாவாசை நாளில் தர்ப்பணம் செய்து வழிபட்டால், அவர்களின் மனம் குளிர்ந்து, நம்முடைய குடும்பத்தில் கெட்ட சம்பவங்கள் எதுவும் நிகழாமல் காப்பாற்றுவார்கள். தை அமாவாசை நாளில் நாம் பித்ருக்களை வழிபட்டு அவர்களின் பசியை போக்காமல் விட்டுவிட்டால், நமது பித்ருக்கள் மிகுந்த வருத்தத்துடன் பித்ரு லோகம் செல்வார்கள்.

தினமும் தர்ப்பணம் செய்ய ஏற்ற தலம் திருவாரூர் மாவட்டத்திலுள்ள செதலபதி எனப்படும் திலதர்ப்பணபுரி முக்தீஸ்வரர் கோவில். முக்தீஸ்வரரை சூரியன், சந்திரன் இருவரும் ஒரே நேரத்தில் வணங்கியுள்ளனர்.

எனவே, இவர்கள் இருவரும் அருகருகே இருக்கின்றனர். சூரியன், சந்திரன் சந்திக்கும் நாளே அமாவாசை. இங்கே தினமும் இருவரும் இணைந்திருப்பதால், இதை நித்ய அமாவாசை தலம் என்பர். இக்கோவிலில் முன்னோர்களுக்கு பிதுர் தர்ப்பணம் செய்ய அமாவாசை, திதி, நட்சத்திரம் என பார்க்கத் தேவையில்லை. எந்த நாளிலும் சிரார்த்தம், தர்ப்பணம் செய்துகொள்ளலாம்.

ராமபிரான் இத்தலத்துக்கு வந்து, தன் தந்தை தசரதருக்காக பிண்டம் வைத்து சிரார்த்தம் செய்துள்ளார். இந்த பிண்டங்கள், பிதுர் லிங்கங்களாக மாறியதாக தல வரலாறு கூறுகிறது. திருவாரூரிலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் 22 கிலோமீட்டர் தூரத்தில் பூந்தோட்டம் கிராமம் உள்ளது. இங்கிருந்து நான்கு கிலோமீட்டர் தூரத்திலுள்ள கூத்தனூர் சென்று, அருகிலுள்ள செதலபதியை அடையலாம். கூத்தனூரில் புகழ்பெற்ற சரஸ்வதி கோவிலும், அங்கிருந்து சற்று தூரத்தில் சிவபார்வதி திருமணத்தலமான திருவீழிமிழலை மாப்பிள்ளை சுவாமி கோவிலும் உள்ளன. ஆடி அமாவாசையன்று, நம் இதயத்தில் இருக்கும் முன்னோரை வழிபடுவதுடன், தீர்த்த தலங்களுக்கும் சென்றுவரலாம்.

அறம்வளர்த்த நாயகியோடு ஐயாறப்பர் அருள்புரியும் திருத்தலம் திருவையாறு. நால்வராலும் பாடப்பெற்ற புண்ணியத்தலம். நாவுக்கரசர் இக்கோவிலைப்பற்றி மட்டும் 126 பாடல்கள் பாடியுள்ளார். கயிலை தரிசனம் பெறுவதற்காக வடதிசை நோக்கிச் சென்ற நாவுக்கரசரை, அங்குள்ள நீர்நிலையில் மூழ்கும்படி சிவன் கட்டளையிட்டார். மூழ்கிய அவர், திருவையாறில் உள்ள திருக்குளத்தில் எழுந்தார். இக்குளத்திற்கு உப்பங்கோட்டை பிள்ளையார் குளம் என்றும் சமுத்திர தீர்த்தம் என்றும் பெயருண்டு. அங்கே அம்மையப்பர் ரிஷப வாகனத்தில் காட்சியளித்தார். இவ்விழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசையன்று இரவில் நடக்கும். இதை அப்பர் கயிலாயக் காட்சி என்பர். நாவுக்கரசருக்கு அப்பர் என்றும் பெயருண்டு. கயிலாயக் காட்சியின்போது நாவுக்கரசர் பாடிய "மாதர்பிறைக் கண்ணியானை' என்று தொடங்கும் பதிகத்தை பக்தர்கள் பாடுவர். இப்பதிகத்தைப் பாடுவோர் கயிலைநாதனை தரிசிக்கும் பேறுபெறுவர் என்பது ஐதீகம். "ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே' என்ற நாவுக்கரசரின் வாக்கை நிரூபிக்கும்விதத்தில், இங்கு கோவில் பிராகாரத்தில் "ஐயாறப்பா' என்று ஒருமுறை அழைத்தால் ஏழுமுறை எதிரொலிப்பதைக் கேட்கலாம்.

சந்திரனுடைய தேர் மூன்று சக்கரங்களைக் கொண்டது. அதில் முல்லைப்பூ நிறத்திலான பத்துக் குதிரைகள் பூட்டப்பட்டிருக்கும். அந்த தேரினைச் செலுத்தும்போது சந்திரனிடமுள்ள அமுதத்தினை தினமும் தேவர்கள் அருந்துவதால் சந்திரன் படிப்படியாகத் தேய்ந்து ஒரு கலையோடு காட்சிதரும் நிலையில் இருப்பான். அந்தக் குறையை ஒரு நாளைக்கு ஒரு கலையாக சூரியன் நிறைவு செய்கிறான். இதுவே வளர்பிறைக் காலமாகும். பௌர்ணமிக்குப் பிறகு 15 நாட்களில் சந்திரனின் உடலிலிருந்து அமுதத்தை முப்பத்து முக்கோடி தேவர்களும் மறுபடியும் ஈர்த்துக்கொள்கின்றனர். அதனால் தேய்ந்து ஒளியிழந்த சந்திரன் "அமை' என்ற ஒற்றைக் கிரணத்தில் வாசம் செய்வதால், அந்த நாள் அமாவாசை என வழங்கப்படுகிறது.

அமாவாசையன்று முன்னோர்களுக்குரிய வழிபாட்டினைப் பற்றி முதன்முதலில் பராசர முனிவர், மைத்ரேய மகரிஷிக்கு விளக்கிச் சொன்னதாகப் புராணங்கள் கூறுகின்றன. ஒருசமயம் கவுசிக முனிவர் மற்ற ரிஷிகளுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது, "இப்பிறவியில் ஒரே நாளில் யாரும் பதின்மூன்று புனித கங்கைகளில் நீராட முடியாது. அது தேவர்களால் மட்டுமே முடியும்' என்று ரிஷிகள் கூறினார்கள். ஆனால் கவுசிக முனிவர், "என்னால் பதின்மூன்று கங்கைகளில் நீராட முடியும்' என்று கூறி, ரிஷிகளின் கூற்றினைப் பொய்யாக்கும்விதத்தில் பல திருத்தலங்களுக்குச் சென்று தவம் புரிந்தார். பல வருடங்கள் தவம்புரிந்தும் இறைவன் காட்சி தரவில்லை. இறுதியில் திருப்பூந்துருத்தி என்னும் திருத்தலம் வந்து பல வருடங்கள் தவம் மேற்கொண்டார். கவுசிக முனிவரின் உறுதியான தவத்தினைப் போற்றிய இறைவன் ஓர் ஆடி அமாவாசை நாளில் அன்னை விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதராகக் காட்சி தந்தருளினார்.

முனிவரின் வேண்டுகோளின்படி காசி உட்பட பதின்மூன்று புனிதத்தலங்களில் பாயும் கங்கைகளும் அங்கு ஒரே சமயத்தில் பதின்மூன்று இடங்களில் பீறிட்டு வந்தன. உடனே கவுசிக முனிவர், பதின்மூன்று கங்கைகளின் தீர்த்தத்தையும் எடுத்து இறைவனுக்கும் இறைவிக்கும் அபிஷேகம் செய்து தானும் நீராடி இறைவனுடன் கலந்தார்.

 

அமாவாசையில் இறைவன் இத்தலத்தில் தோன்றியதால், அந்தப் புனித நாளில் திருப்பூந்துருத்தி தலத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. அன்று அங்குள்ள தீர்த்தங்களில் நீராடி இறைவனுக்கும் இறைவிக்கும் செய்யப்படும் அபிஷேக, ஆராதனைகளில் கலந்துகொண்டு, முன்னோர்களுக்கான பூஜையும் அன்னதானமும் செய்தால், நம் பக்தியை இறைவன் ஏற்றுக்கொண்டு அருள்புரிவதாக ஐதீகம்.

 இத்தலம் தஞ்சையிலிருந்து திருக்காட்டுப்பள்ளிக்குச் செல்லும் வழியில்- திருக்கண்டியூரிலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

அமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்🌹

⚫தமிழகத்தின் தெற்கு பகுதியில் அமாவாசையை நல்ல நாளாக பலரும் கருதுவது கிடையாது காரணம் அன்று முன்னோர்களுக்காக தர்ப்பணம் கொடுக்கிறோம் தர்ப்பணம் கொடுக்கும் நாளில் சுபகாரியங்களை செய்யக்கூடாது என்பது அவர்களது எண்ணம்.

⚫ஆனால் வடக்கு பகுதியில் இப்படி யாரும் கருதுவது கிடையாது. நிறைந்த அமாவாசையில் கடை திறந்திருக்கிறேன், புதிய வண்டி வாங்கி இருக்கிறேன், நிலம் பத்திரம் செய்திருக்கிறேன் என்று கூறுபவர்களை நிறைய பார்க்கலாம்.

⚫ஆனால் பொதுவாக அமாவாசையை நல்ல நாள் என்று பலரும் ஏற்றுக்கொள்வதில்லை.

சரி அமாவாசை விஷேஸம் என்ன,

அமாவாசை தினத்தில் சூரியனும், சந்திரனும் நேர்கோட்டில் வருகிறது அதாவது ஒன்றையொன்று சந்தித்துக்கொள்கிறது அன்று முன்னோர்கள் புண்ணியலோகத்திலிருந்து பூமிக்கு வருகிறார்கள். தங்களது தலைமுறைகளை சூட்சமமான முறையில் கண்காணிக்கிறார்கள் அவர்களது வாரிசுகளான நாம் துவங்கும் காரியங்களை கரிசனத்தோடு பார்க்கிறார்கள், ஆசிர்வதிக்கவும் செய்கிறார்கள்.

எனவே பிதுர் தேவதைகள் என்ற முன்னோர்களை வழிபட்டு அவர்களுக்கு மரியாதை செய்து அமாவாசை தினத்தில் புதிய காரியங்களை துவங்கினால் நிச்சயம் நல்லதே நடக்கும் அன்று நற்காரியங்களை செய்வதனால் தீங்கு ஏற்படாது. முன்னோர்கள் பூமிக்கு வரும் தினம் என்பதனால் அது நல்லநாளே.

இந்துக்களில் தை அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி,மாசி அமாவாசை மிகவும் சிறப்புடையது.

 

முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் சிறந்த நாள் அமாவாசை! இது அனைத்து மதத்திற்கும் பொருந்தும்.

அமாவாசையன்று உலகை இயக்கும் சூரியனும் சந்திரனும் ஒன்று சோ்வதால் ஒரு காந்த சக்தி ஏற்படுகிறது.

அமாவாசையன்று மாமிச ஆகாரம் தவிர்ப்பது பெரும் ஜீவகாருண்யமாகும்.

அமாவாசையன்று பிறக்கும் குழந்தைகளின் மூளை பிற்காலத்தில் அதீதமாக வேலை செய்யும் என்று விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

அமாவாசையன்று விபத்துகள் கூடுதலாக ஏற்படுவதாக ரஷ்ய விஞ்ஞானிகள் கூறுகின்றனா்.

ஜோதிட ரீதியாக அமாவாசை நிறைந்த நாள். அனேகமானவர்கள் அமாவாசையில் மோதிரம் செய்து போடுகின்றனா்.

சூரிய கலையும், சந்திர கலையும் சேருவதால் சுழுமுனை என்னும் நெற்றிக்கண் பலப்படுகிறது. அதனால் அமாவாசையில் சாஸ்திரிகள் மந்திர ஜெபம் ஆரம்பிக்கின்றனா். கடலில் நீராடி தங்களுக்கு ஏற்பட்ட தோஷத்தைப் போக்குகின்றனா்.

அமாவாசையன்று ஜீவ சமாதிகள் புதிய உத்வேகத்தைப் பெறுகின்றன. அனேக குரு பூஜைகள் அதிஷ்டான பூஜைகள் அமாவாசையன்று நடத்துகின்றனா்.

சாதாரணமாக இறந்த ஆவிகள் சந்திரனின் ஒளிக்கற்றையில் உள்ள அமிர்தத்தைப் புசிக்கும். அதுதான் அதற்கு உணவு.

அமாவாசையன்று சந்திரனின் ஒளிக்கற்றை ஆவிகளுக்குக் கிடைக்காது. அதனால் ஆவிகள் உணவுக்குத் திண்டாடும். பசி தாங்க முடியாமல் இரத்த சம்பந்தமுடைய வீடுகளுக்கு வரும்.அப்போழுது நம்மை யாராவது எண்ணுகிறார்களா ,நமக்குத் தா்ப்பணம், படையல் செய்கிறார்களா என்று பார்க்கும்.

வீடு வாசல் இல்லாத ஏழைகளுக்கு அமாவாசையன்று அன்னதானம் செய்ய வேண்டும். ஒவ்வொரு அமாவாசையன்றும் தங்களால் இயன்ற அளவு உணவை அன்னதானம் செய்யலாம். பசு, காகம், நாய், பூனை மற்றும் இதர ஜீவராசிகளுக்கும் அன்று அன்னம் அளிக்கலாம்.

 

அமாவாசை பிதுா் தா்ப்பணம் மற்றும் அன்னதானம் ஆகியவற்றைக் குல தெய்வம் இருக்கும் இடத்தில் செய்வது நல்லது. முடியாதவா்கள் தங்கள் இஷ்ட தெய்வம் இருக்கும் இடத்தில் செய்யலாம். வீட்டிலும் செய்யலாம்.

அமாவாசையன்று தலையில் எண்ணெய் தடவக் கூடாது. புண்ணியத் தலங்களில் கடலில் நீராடலாம். அல்லது நதியில் நீராடலாம். அமாவாசையன்று காலை சூரிய உதயத்தின் போது கடலில் எடுக்கப்பட்ட நீரை வீட்டுக்குக் கொண்டுவந்து தீா்த்மாகத் தெளிக்கலாம். அதனால் வீட்டிலுள்ள தோஷங்கள் நீங்கும்.

உற்றார், உறவினா் தொடா்பு இல்லாத ஆவிகள் மரம், செடி கொடிகளில் அமாவாசையன்று மட்டும் தங்கி, அவற்றின் சாரத்தைச் சாப்பிடும். அதனால் அமாவாசையன்று மட்டும் மரம், செடி, கொடிகளையோ காய்கறிகளையோ புல் பூண்டுகளையோ தொடக்கூடாது. பறிக்கக் கூடாது.

ஒவ்வொரு மாதம் அமாவாசை அன்னதானம் செய்ய முடியாதவா்கள் தை, ஆடி, புரட்டாசி அமாவாசையில் அன்னதானம் செய்ய வேண்டும். புரட்டாசி அமாவாசையில் செய்தால் 12 ஆண்டுகளாக அன்னதானம் தா்ப்பணம் செய்யாத தோஷம் நீங்கும்.நமக்கு அன்னம் இடுபவள் அன்னபூரணி! ஆவிகளுக்கு அன்னம் இடுபவள் ஸ்வதா தேவி! நாம் ஆவிகளை நினைத்துக் கொடுக்கும் அன்னத்தை மற்றும் யாகத்தில் போடும் ஆவுதிகளை ஸ்வதா தேவிதான் சம்பந்தப்பட்ட ஆவிகளிடம் சோ்ப்பிக்கிறாள்.

நகரங்களில் வசிப்பவா்கள் அமாவாசையன்று ஏழைக் குழந்தைகளுக்கு அல்லது ஆதரவற்றவா்களுக்கு முன்னோர்களை நினைத்து அன்னதானம் செய்ய வேண்டும். இதர தானங்கள் தருவது அவரவா் வசதியைப் பொறுத்தது.

அன்னதானம் கஞ்சியாகவோ, சாதமாகவோ, இட்லியாகவோ இருக்கலாம். ஆனால் எள்ளு சட்னி அல்லது எள் உருண்டை கண்டிப்பாக இருக்க வேண்டும்.

எதுவும் செய்ய முடியாமல் இருப்பவா்கள் ஒரு பசு மாட்டிற்கு ஒன்பது வாழைப்பழங்கள் அமாவாசை அன்று கொடுக்க வேண்டும். இதற்குச் சாதி, மதம், இனம் என்ற வேறுபாடு இல்லை.

முன்னோர்கள் ஆத்மா சாந்தியடைய ஒவ்வொருவரும் இதைச் செய்ய வேண்டும்

 மகாலட்சுமி பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறாள். அந்த ஒவ்வொரு பெயருக்கும் ஒரு அர்த்தம் உள்ளது. அதன் விவரம் வருமாறு:-


ஹரிணி:பசுமையான மேனி அழகைப் பெற்றவள்.


சூர்யா:கதிரவனுக்கு நிகரான ஒளிமயமானவள்.


ஹிரண்மயி:பொன்னி.


ஈஸ்வரி:எல்லா உயிரிலும் உறைபவள்.


ஹிரண்ச வர்ணா:பொன்னிற மேனியாள்.


சந்திரா:நிலவுக்கு நிகரான முகமுடையாள்.


அனபகா முனிம்:நிலை தவறாதவள்.


ஆர்த்திரா: நீரில் தோன்றியவள்.


பத்மஸ்திதா:தாமரையில் வாசம் செய்பவள்.


பத்ம வர்ணா: தாமரை வர்ணத்தாள்.


ஆதித்ய வர்ணா:சூரியகாந்தி உடையவள்.


வருஷோபில்வ: கூவளத்தில் தோன்றியவள்.


கரிஷிணி:பெருகும் பசுச்செல்வமுடையவள்.


புஷ்ஷிணி:யானைகளால்வணங்கப்படுகிறவள்.


பிங்கள: செம்மை நிறம் கொண்டவள்.


யக்கரிணி: தர்ம தேவதை


===16 வகை லட்சுமி===


1. ஸ்ரீதனலட்சுமி:-நாம் எல்லா உயிர்களிடத்திலும் அன்புடன் இருக்க வேண்டும், போதும் என்ற மனதோடு நேர்மையுடன் வாழ்ந்தால் தனலட்சுமியின் அருளை பரிபூரணமாகப் பெறலாம்.


2. ஸ்ரீவித்யாலட்சுமி:-எல்லா உயிரினங்களிலும் தேவியானவள் புத்தி உருவில் இருப்பதால் நாம் நம் புத்தியை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். அன்பாகவும், இனிமையாகவும் பேச வேண்டும். யார் மனதையும் புண்படுத்தாமல் நடந்து கொண்டால் ஸ்ரீவித்யாலட்சுமியின் அருளைப் பெறலாம்.


3. ஸ்ரீதான்யலட்சுமி:- ஸ்ரீதேவியானவள் பசி நீக்கும் தான்ய உருவில் இருப்பதால் பசியோடு, நம் வீட்டிற்கு வருபவர்களுக்கு உணவளித்து உபசரித்தல் வேண்டும். தானத்தில் சிறந்த அன்னதானத்தைச் செய்து ஸ்ரீ தான்ய லட்சுமியின் அருளை நிச்சயம் பெறலாம்.


4. ஸ்ரீவரலட்சுமி:- உடல் பலம் மட்டும் வீரமாகாது மனதில் உறுதி வேண்டும், ஒவ்வொருவரும் தாங்கள் செய்த தவறுகளையும் பாவங்களையும் தைரியமாக ஒப்புக் கொள்ள வேண்டும், நம்மால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், செய்த பாவங்களுக்காக மனம் வருந்தி, இனி தவறு செய்ய மாட்டேன் என்ற மன உறுதியுடன் ஸ்ரீவரலட்சுமியை வேண்டினால் நன்மை உண்டாகும்.


5. ஸ்ரீசவுபாக்யலட்சுமி:- ஸ்ரீதேவி எங்கும் எதிலும் மகிழ்ச்சி உருவில் இருக்கின்றாள். நாம் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருந்து கொண்டு மறற்றவர்களின் மகிழ்ச்சிக்கும் காரணமாக இருக்க வேண்டும். பிறர் மனது நோகாமல் நடந்தால் சவுபாக்கிய லட்சுமியின் அருளைப் பெற்று மகிழலாம்.


6. ஸ்ரீசந்தானலட்சுமி:- எல்லா குழந்தைகளையும் தன் குழந்தையாக பாவிக்கும் தாய்மை உணர்வு எல்லோருக்கும் வேண் டும். தாயன்புடன் ஸ்ரீசந்தான லட்சுமியை துதித்தால் நிச்சயம் பலன் உண்டு.


7. ஸ்ரீகாருண்யலட்சுமி:- எல்லா உயிர்களிடமும் கருணையோடு பழக வேண்டும், உயிர்வதை கூடாது, உயிர்களை அழிக்க நமக்கு உரிமை இல்லை, ஜீவ காருண்ய ஒழுக்கத்தை கடை பிடித்தால் ஸ்ரீ காருண்ய லட்சுமியின் அருளைப் பெறலாம்.


8. ஸ்ரீமகாலட்சுமி:- நாம் நம்மால் முடிந்ததை மற்றவர் களுக்கு கொடுக்க வேண்டும் என்றுமே நம் உள்ளத் தில் உதவ வேண்டும் என்ற எண்ணம் உறுதியாக இருந்தால் நமக்கு ஒரு குறையும் வராது. மேலும் ஸ்ரீ மகாலட்சுமி நம்மை பிறருக்கு கொடுத்து உதவும் படியாக நிறைந்த செல்வங்களை வழங்குவாள்.


9. ஸ்ரீசக்திலட்சுமி:- எந்த வேலையும் என்னால் முடி யாது என்ற சொல்லாமல் எதையும் சிந்தித்து நம்மால் முடியும் என்ற நம்பிக்கையுடன் செய்தால் ஸ்ரீசக்தி லட்சுமி நமக்கு என்றும் சக்தியைக் கொடுப்பாள்.


10. ஸ்ரீசாந்திலட்சுமி:- நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் வரும் இன்ப துன்பங்களை சமமாக பாவித்து வாழ பழக வேண்டும். நிம்மதி என்பது வெளியில் இல்லை. நம் மனதை இருக்குமிடத்திலேயே நாம் சாந்தப்படுத்த முடியும். ஸ்ரீசாந்தி லட்சுமியை நினைத்து பக்தி seidhaale எப்பொழுதும் நிம்மதியாக வாழலாம்.


11. ஸ்ரீசாயாலட்சுமி:- நாம் சம்சார பந்தத்திலிருந்தாலும் தாமரை இலை தண்ணீர் போல கடமையை செய்து பலனை எதிர்பாராமல் மனதை பக்தி மார்க்கத்தில் சாய்ந்து ஸ்ரீசாயாலட்சுமியை பக்தி செலுத்தி அருளைப் பெற வேண்டும்.


12. ஸ்ரீத்ருஷ்ணாலட்சுமி:- எப்போதும் நாம் பக்தி வேட்கையுடன் இருக்க வேண்டும், பிறருக்கு உதவ வேண்டும், ஞானம் பெற வேண்டும், பிறவிப் பிணித் தீர வேண்டும் என்ற வேட்கையுடன் ஸ்ரீத்ருஷ்ணாலட்சுமியைத் துதித்து நலம் அடையலாம்.


13. ஸ்ரீசாந்தலட்சுமி:- பொறுமை கடலினும் பெரிது. பொறுத்தார் பூமியை ஆள்வார். பொறுமையுடனிருந்தால் சாந்தலட்சுமியின் அருள் கிடைக்கும்.


14. ஸ்ரீகிருத்திலட்சுமி:- நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும், மனதை ஒரு நிலைப்படுத்தி நேர்த்தியுடன் செய்தால், புகழ் தானாக வரும். மேலும் ஸ்ரீகீர்த்தி லட்சுமியின் அருள் நிச்சயம் கிடைக்கும்.


15. ஸ்ரீவிஜயலட்சுமி:- விடாத முயற்சியும் உழைப்பும், நம்பிக்கையும் இருந்தால் நமக்கு எல்லா காரியங்களிலும் வெற்றி தான். ஸ்ரீவிஜயலட்சுமி எப்பொழுதும் நம்முடன் இருப்பாள்.


16. ஸ்ரீஆரோக்கிய லட்சுமி:- நாம் நம் உடல் ஆரோக்கியத்தை கவனித்தால் மட்டும் போதாது, உள்ளமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும், கோபம், பொறுமை, காமம், பேராசை போன்ற நோய்க் கிருமிகள் நம் மனதில் புகுந்து விடாமல் இருக்க ஸ்ரீஆரோக்கிய லட்சுமியை வணங்க வேண்டும்!


ஸ்ரீ மகாலக்ஷ்மி தாயார் திருவடிகளே சரணம்

 *🌷🌷திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி ஸ்வாமி ஆலயம் சிறப்பம்சங்கள்*


சென்னையில் உள்ள வைணவத் தலங்களில் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய மிகப் பழமையான தலம் திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிஸ்வாமி  ஆலயம். 


லக்ஷக்கணக்கான திவ்யதேசங்களில் ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக சென்னை நகருக்குள் முக்கியத் தலம் இந்த ப்ருந்தாரண்ய க்ஷேத்ரம்.


பிருந்தாரண்ய க்ஷேத்ரம் எனப்படும் இத்தலம் ஏராளமான சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது.


ஸ்ரீ வேத வியாசரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இத்தலத்தில் பெருமாளைச் சுற்றி உள்ள ஆலயத்தை திருப்பணி செய்து  பல்லவ மன்னன் முதலாம் நரசிம்மவர்மன் அழகான ஆலயத்தை 8-ம் நூற்றாண்டில் புனரமைத்தார்.


இத்தல வரலாறு சுமதி மன்னன் என்பவருடன் தொடர்புடையது. இவர் திருப்பதி ஏழுமலையானின் தீவிர பக்தர்.


இவருக்கு ஒரு தடவை மஹாபாரதப் போரின்போது கிருஷ்ணர் எடுத்த வடிவத்தைக் காண வேண்டும் என்ற நல்விருப்பம் ஏற்பட்டது.

அதாவது மகாபாரதப் போர் நடந்த போது பாண்டவர்களுக்கு ஆதரவாக கிருஷ்ணர் களம் இறங்கினார். போரில் கிருஷ்ணர் எந்த ஆயுதமும் ஏந்தக் கூடாது என்று கௌரவர்கள் கேட்டுக் கொண்டதால் அவர் தேரோட்டியாக மாறினார்.

பார்த்தனுக்கு (அர்ஜுனன்), கிருஷ்ணர் தேரோட்டி (சாரதி)யாக இருந்தார். 

இதனால்தான் நாம் கிருஷ்ண பரமாத்மாவை பார்த்த சாரதி'' என்கிறோம்.

இந்த தேரோட்டி வடிவை காணவே சுமதி மன்னன் ஆசை கொண்டார். அவர் விருப்பத்தை பூர்த்தி செய்ய திருப்பதி பெருமாள் இங்கே  திருவல்லிக்கேணியில்  பார்த்தசாரதியாகக் காட்சி அளிப்பதாக அருளினார். . அதன் அடிப்படையில் இங்கு மூலவரான ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி வேங்கடகிருஷ்ணனாக ஸேவிக்கப்படுகிறார். 


இந்த பெருமாளை இமயமலையில் இருந்த வ்யாஸரிடம் பெற்று இங்கே  ஆத்ரேய மாமுனிவர் பிரதிஷ்டை செய்ததாக அறியப்படுகிறது.


உத்ஸவராக பார்த்தஸாரதி ஸ்வாமி தன் திருமுகம் எல்லாம் மஹாபாரத யுத்தத்தில் பீஷ்மாசார்யரின் அம்பு பட்ட வடுக்களுடன் உள்ளார். 


கோபுரங்களும், மண்டபங்களும் நுட்பமான திராவிட சிற்பக் கலை சிறப்பை வெளிப்படுத்துகின்றன. கருவறையில் மூலவர் ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி எனும் ஸ்ரீவேங்கட கிருஷ்ணன்,  தாயார் ருக்மிணித்தாயார், அண்ணன் பலராமர், தம்பி ஸாத்யகி, புத்திரன் பிரத்யும்னன், பேரன் அநிருத்தன், என குடும்ப ஸஹிதமாக உள்ளார். பலராமர் வரதமுத்திரை காட்டி கலப்பை ஏந்தியுள்ளார்.  தம்பி ஸாத்யகி அவருக்கே உரிய கத்தி ஏந்தியும் பிள்ளையும் பேரனும் உலக்கை எனும் தோமரங்கள் ஏந்தியும் பக்தர்களுக்கு காக்ஷி அளிக்கின்றனர்.


கிருஷ்ணர் தம் மூன்று தலைமுறையுடன் வீற்றிருக்கும் ஒரே தலம் இதுதான்.


அதுபோல கிருஷ்ணர் உலகில் வேறு எங்கும் இல்லாதபடி இங்கு மட்டுமே முறுக்கு மீசையுடன் காணப்படுகிறார்

. 9 அடி உயரத்தில் திருமுகத்தில் புன்னகை ததும்ப அருள்பாலிக்கும் அவரை நாளெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம். 


பகல் பத்து, கடைசி 5  நாட்களில் மட்டும்  மீசை இல்லாத மூலவரை தரிசிக்கலாம்.


மகாபாரதப் போர் நடந்த போது பீஷ்மர் விட்ட அம்புகள் பட்ட காயத்தால் கிருஷ்ணர் முகத்தில் வடுக்கள் ஏற்பட்டன. உத்ஸவரின் முகத்தில் அந்த வடுக்களை இன்றும் காணலாம். உத்ஸவர் கதாயுதம் ஏந்தாமல் செங்கோலுடன் உள்ளார். 


இது பகவான் கிருஷ்ணர் ஆயர் குலத்தில் பிறந்ததை பிரதிபலிக்க தரித்ததாகச் சொல்கிறார்கள். 


மூலவர் மற்ற தலங்களில் உள்ளது போல இங்கு சக்கராயுதம் ஏந்தவில்லை. இடையில் வாள் தாங்கி . திருக்கையில் பாஞ்சஜன்யம் எனும் சங்கை ஏந்தியுள்ளார்.


இந்த கிருஷ்ணரை ஏன் வேங்கட கிருஷ்ணர் என்று செல்கிறார்கள் தெரியுமா? சுமதி மன்னன் திருப்பதி ஏழுமலையானின் தீவிர பக்தன் என்பதை படித்து இருப்பீர்கள். அந்த வேங்கடவனே இங்கு வந்து சேவை சாதித்ததால்  காட்சியுடன் சேர்த்து வேங்கட கிருஷ்ணர் என்றழைக்கப்படுகிறார்.


பேயாழ்வார் ஒரு பாசுரம், திருமழிசை ஆழ்வார் ஒரு பாசுரம், திருமங்கை ஆழ்வார் 10 பாசுரம் பாடி மங்களாசனம் செய்துள்ளனர். இத்தலத்தில் ஸ்ரீரங்கம், திருப்பதி, காஞ்சீபுரம், அஹோபிலம், அயோத்தி ஆகிய 5 திவ்ய சேதப் பெருமாள்களை தனித்தனி சன்னதிகளில் தரிசனம் செய்யலாம். 

இதன் காரணமாக இத்தலம் 5 மூலவர்கள் கொண்ட தலமாகவும், பஞ்ச வீரத் தலமாகவும் அழைக்கப்படுகிறது.


முதல் சன்னிதியில் மூலவர் வேங்கடகிருஷ்ணன் இருப்பது போல இரண்டாவது ஸன்னிதியில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஶயனக் கோலத்தில் உள்ளார். இவரை மன்னாதன் - தமிழில் என்னையாளுடையப்பன் என்றும் அழைக்கிறார்கள்.


தாயார் பெயர் வேதவல்லித்தாயார். வைகுண்டத்தில் இருந்து பூலோகம் வந்த திருமகள், இத்தலம் துளசிச் செடி வனமாக இருப்பது கண்டு, அங்குள்ள ஒரு மரத்தடியில் குழந்தை வடிவமாக தோன்றினார்.

அவரை பிருகு முனிவர் எடுத்து வளர்த்தார். 

திருமால் இளவரசன் வேடத்தில் வந்து தாயார் வேதவல்லியை திருமணம் செய்து, இத்தலத்திலேயே தங்கி விட்டதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. 


மூன்றாவது ஸன்னிதியில் கருடன் மீது அமர்ந்தபடி காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கிழக்கு நோக்கியபடி உள்ளார். இவரை பக்தர்கள் தேவப் பெருமாள் என்றும் அழைக்கிறார்கள். 

இவர் ஸப்தரோமா முனிவருக்கு கஜேந்திர வரதராக கருட வாகனத்தில் காட்சியளித்தார்.


நான்காவது சன்னிதியில் மேற்கு நோக்கியப்படி அஹோபிலம் நரசிம்மர் திருமார்பில் லட்சுமியுடன் யோகாஸநத்தில் வீற்றிருக்கிறார். நோய்கள் தீர இவர் ஸந்நிதி பின்புறம்  உப்பு, மிளகை காணிக்கையாக சமர்ப்பிக்கிறார்கள். அத்ரி முனிவருக்கு  தெள்ளிய சிங்கராக இவர் காட்சியளித்தார். 

இவரை வழிபட, கல்வியில் மேன்மை பெறலாம். இவர் சன்னதியில் மணிஓசை கூட எழுப்பப்படுவதில்லை.


ஐந்தாவது சன்னிதியில் அயோத்தி ராமர் தெற்கு நோக்கி உள்ளார். அவருடன் சீதாப்பிராட்டி, பரதன், லக்ஷ்மணன், சத்ருக்னன், மற்றும் எதிரே அனுமனும் சேவை சாதிக்கிறார்கள். 


மதுமான் முனிவருக்கு ராமர் தன் பட்டாபிஷேக கோலத்தை இத்தலத்தில் காட்சி அருளியதாக வரலாறு உள்ளது.


ஸ்ரீபார்த்தசாரதிஸ்வாமிக்கும், ஸ்ரீநரசிம்ம ஸ்வாமிக்கும் தனி, தனி கொடி மரம், வாசல்கள் உள்ளன.


இப்படி 5 சன்னிதிகளிலும் பெருமாள் அளவு கடந்த திரு அருள் ஆற்றலுடன் எழுந்தளும் உள்ளார். 

5 சன்னிதிகளிலும் மூலவர்கள் மங்களாசாஸனம் செய்யப்பட்டுள்ளதால், திருவல்லிக்கேணியை பஞ்சமூர்த்தி தலம்'' என்கிறார்கள்.


இத்தலத்தின் குளமான கைரவிணியில் ஒரு காலத்தில் அல்லி மலர்கள் அதிகமாக இருந்தன. இதனால்தான் அல்லிக்கேணி என்பது திரு சேர்த்து திருவல்லிக்கேணி என்ற பெயர் உண்டாயிற்று.


இந்த குளத்தில் இந்திர, கோம, மீன, அக்னி, விஷ்ணு ஆகிய 5 புண்ணிய தீர்த்தங்களும் கலந்து இருப்பதாக கூறப்படுகிறது. மீன் வசிக்காத இக்குளக்கரையில் நடக்கும் கஜேந்திர மோக்ஷம் கருடசேவை நிகழ்வு மிகவும் பிரசித்தம்.


திருவல்லிக்கேணி கோவிலில் முதலில் முன் மண்டபம் உள்ளது. அடுத்து மகா மண்டப நுழைவாயில் உள்ளது. 

அதன் மீதுதான் 5 நிலைகளும், 7 கலசங்களும் கொண்ட ராஜகோபுரம் கட்டப்பட்டுள்ளது.


கோவில் உள்ளே 5 மூலவர் சன்னிதி மீதுள்ள விமானங்கள், ஆனந்த விமானம், பிரணவ விமானம், புஷ்பக விமானம், சேஷ விமானம், தைவிக விமானம் என்று அழைக்கப்படுகிறது.


இத்தலம் இரண்டு பிராகாரங்களைக் கொண்டது. 


கிழக்கு கோபுரம் சுமதி தொண்டைமான் மன்னனால் கட்டப் பட்டது.


பிருகு, அத்ரி, மாரீஷி, மார்க்கண்டேயர், சுமதி, ஜபாலி, சப்தரோமா ஆகிய 7 ரிஷிகளும் இங்கு தவம் இருந்துள்ளனர். இதனால் சப்த ரிஷி ஸ்தலம் என்ற சிறப்புப் பெயரும் இத்தலத்துக்கு உண்டு.


ராமானுஜரின் பெற்றோர் குழந்தை செல்வம் வேண்டி இத்தலத்து பெருமாளிடம் மனம் உருக வழிபட்டார்களாம். இதனால் ஸ்ரீ பார்த்தசாரதியே அவர்கள் புத்ரனாக  ராமானுஜராக அவதரித்ததாக சொல்கிறார்கள்.


இங்கு 5 மூலவர் சன்னிதி தவிர ஸ்ரீவேதவல்லி தாயார் சன்னிதி தனியாக உள்ளது. இவருக்கு வெள்ளி தோறும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.


மேலும் ஸ்ரீ ஆண்டாள்,  ஸ்ரீராமானுஜர், ஆழ்வார்கள், ஆசார்யர்கள் , ஸ்ரீ ஆஞ்ஜநேயர்,ஆகியோரும் உள்ளனர்.


இக்கோவிலில் தொன்றுதொட்டு  ஸ்ரீவைகாநஸ பகவத் சாஸ்த்ர ஆகம முறையும் தென்கலை வைணவ பாரம்பரியமும் கடை பிடிக்கப்படுகிறது. சித்திரை மாதம் ஸ்ரீபார்த்தசாரதிக்கும், ஆனி மாதம் ஸ்ரீ அழகிய சிங்கருக்கும் பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது. 


இவை தவிர ஏராளமான உற்சவங்கள் நடக்கின்றன. ஐப்பசி மாதம் கைத்தல சேவை, ஆவணி மாதம்  உரியடி திருவிழா மற்றும் புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு உத்ஸவம்  நடக்கிறது. எப்போதும் தினமும் இத்தலம் திருவிழா கோலமாக காட்சியளிக்கிறது.


விவேகானந்தர், தியாகராஜ சுவாமிகள், முத்துசாமி தீட்சிதர், ராமானுஜர், பாரதியார் ஆகியோர் பார்த்தசாரதியை வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.


துலாபாரம் கொடுக்க இங்கு வசதி உள்ளது. 

அன்னதான திட்டமும் சிறப்பாக நடந்து வருகிறது.


இத்தலத்தில் திரு அத்யயநோத்ஸவம் அதன் அங்கமாக ஸ்ரீவைகுண்ட ஏகாதசி திருவிழா மிகச்சிறப்பாக நடத்தப்படுகிறது. அந்த சமயத்தில் பகல் பந்து, ராப்பத்து ஆழ்வார் அருளிச்செயல் சேவை பெருமாள் சிறந்த அலங்கார சாத்துபடி சேவை, மார்கழி மாத திருப்பாவை  கதா காலக்ஷேபங்கள் என்று கோவில் திருவிழாக் கோலமாக காட்சி அளிக்கும்.


வைகுண்ட ஏகாதசியின் 20 நாட்களில்  ஒரு நாள் இத்தல பெருமாள், திருப்பதி ஏழுமலையான் போல் முழுமையான அலங்காரம் கண்டருள்வார். 


ஸ்ரீபார்த்தசாரதிக்கு சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர் சாதம்,போன்றவை சிறந்த  பிரசாதமாக  செய்யப்படுகிறது. வெள்ளிக்கிழமை அல்லது திங்கட்கிழமை  தோறும் நடக்கும் திருமஞ்சனத்தின்போது, சர்க்கரை பொங்கல் அளித்து வழிபட்டால் நினைத்தது நடக்கும். 

குழந்தை பாக்கியமும், குடும்பத்தில் செல்வ செழிப்பும் உண்டாகும்.


பொதுவாக கிருஷ்ண பரமாத்மா, ஆபத்து காலங்களில் ஓடோடி வந்து நமக்கு உதவுபவர் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் உண்டு. அந்த பாக்கியத்தைப் பெற நாம் கிருஷ்ணனிடம் மனதை பறி கொடுக்க வேண்டும். பக்தி நெறியால் வழிபட வேண்டும். அந்த வழிபாட்டுக்கு ஏற்ற தலம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ஆலயம்தான்.  


லக்ஷ்மீ கடாக்ஷம் பெற்று வாழ்வில் செய்தற்கரியன சாதிப்பவர்களும்  மன அமைதி பெற விழைவோரும்,  பொதுவாழ்வில் சாதிக்கும் எண்ணம் உடையவர்களும் அவசியம் இத்தல பெருமாளை வழிபட வேண்டும். 


🌷🌷.

 நவராத்திரி ஒன்பது நாட்களும் கோவில்களிலும் வீடுகளிலும் கொலு வைத்து கொண்டாடும் பொழுது முதல் மூன்று நாட்கள்

 ஸ்ரீதுர்க்கை வடிவிலும் 

தொடர்ந்து மூன்று நாட்கள் ஸ்ரீமகாலட்சுமி வடிவிலும் 

மேலும் உள்ள மூன்று நாட்கள் ஸ்ரீசரஸ்வதி வடிவிலும் 

வணங்குவது மரபு..

கல்விக்கு அதிபதி சரஸ்வதி தேவி நம் தொழிலுக்கும் ஜீவனத்திற்கும் உதவி செய்யும் கருவிகளையும் பூஜை செய்து வணங்கும் நாள் இந்த சரஸ்வதிபூஜை நாளாகும் கூத்தனூர் வேதாரணியம் கண்டியூர் உத்திரமேரூர் காஞ்சிபுரம் மதுரை தஞ்சை போன்ற ஊர்களில் உள்ள சரஸ்வதிதேவி ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடப்பதுண்டு

மூலத்தில் பிடித்து அவிட்டத்தில் விடு என்பது அடை மொழி அதாவது நவராத்திரி காலத்தில் மூல நட்சத்திர நாளில் சரஸ்வதி தேவிக்கு உரிய பூஜையை தொடங்க வேண்டும் அப்போது ஆவாகனம் செய்யவேண்டும் அதாவது சரஸ்வதி படங்கள் விக்ரகங்களில் ஆவாகனம் செய்ய வேண்டும் மேலும் நம்முடைய புத்தகங்களை அடுக்கி வைத்து அவற்றின் மேல் சரஸ்வதி படத்தை வைத்து வழிபடலாம்.

கலைவாணி கல்விக்கரசி என பல பெயர்களில் போற்றப்படும் சரஸ்வதி தேவியின் மகிமையை தெரிந்து கொள்வோமா..

பிரம்மனின் துணைவியாக இருப்பவள் சரஸ்வதி!

 சரஸ் என்றால் நீர் மற்றும் ஒளி ஆகியவற்றை தடையின்றி வழங்குபவள் என்று பொருள் கல்வியை மற்றும் அதன் ஊற்றாகவும் ஞான வழியாகவும் அள்ளித் தருபவளே சரஸ்வதி.. சரஸ்வதி தேவியின் கையில் இருக்கும் வீணை பெயர் கச்சபி. சிவபெருமானால் உருவாக்கப்பட்ட வழங்கப்பட்டது வீணா தட்சிணாமூர்த்தியாக இருந்து நாரதர் முதலான அவர்களுக்கு இசை நுணுக்கங்களை உபதேசித்த பிறகு தனது சகோதரியான கலைவாணிக்கு அவர் அளித்ததாக ஐதீகம்

சரஸ்வதி மிக அழகு அமைதி பார்வையுடன் பிரகாசிப்பார் கல்வியின் தெய்வம் பிரம்ம பிரியை ஞானசக்தி என்றும் அழைக்கப்படுகிறாள் சரஸ்வதியை ஆற்றங்கரை சொற்கிழத்தி என்று தமிழ் நூல்கள் குறிப்பிடுகின்றன அறிவே ஞானமே மனிதனின் ஆயுதம் ஞானம் அறிவு இவற்றின் பொது வடிவம் சரஸ்வதி அறிவம் ஞானமும் உறுதியானது நம்முடனே வருவதும் அன்னத்தை வாகனமாகக் கொண்டும் சரஸ்வதியை நாம் பார்க்கிறோம் அன்னம் பாலினையும் நீரினையும் பிரித்து பாலை மட்டும் எடுத்துக் கொள்வது போல நாம் ஞானத்தினை எடுத்துக்கொண்டு அவலத்தை நீக்க வேண்டும் என்பது பொருள்..

முதல்நாள் சரஸ்வதி பூஜை செய்தவர்கள் மறுநாள் காலையில் சரஸ்வதி பூஜை செய்து வழிபட கல்வியும் ஞானமும் கிடைக்கும்..

வெள்ளைக் கலையுடுத்தி வெள்ளைப் பணிபூண்டு வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள் வெள்ளை அரியாசனத்தில் அரசரோடு என்னை சரியாசனம் வைத்த தாயே போற்றி போற்றி..



 புரட்டாசி அமாவாசை

இந்த வருடம் (06/10/2021) புதன்கிழமை புரட்டாசி மகாளய அமாவாசையன்று நீங்கள் தர்ப்பணம் கொடுத்துப்பாருங்கள். அடுத்த ஆண்டுக்குள் உங்கள் வாழ்க்கைத்தரத்தை நிச்சயம் உங்கள் முன்னோர்களான பித்ருக்கள் தெய்வீக சக்தி கொடுத்து உயர்த்தி இருப்பார்கள்....


மறைந்த நம் முன்னோர்களான பித்ருக்களை நினைத்து அவர்களுக்குரிய நன்றியுணர்வாக வழிபட வேண்டிய மிக முக்கியமான திருநாள். அதாவது அன்று நாம் அவர்கள் தாகத்தை தீர்த்து அமைதிப்படுத்த வேண்டும்.


அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.


தர்ப்பை புல்லை வைத்து, அதில் பித்ருக்களை ஆவாஹனம் செய்து எள்ளும் நீரும் தருவதை தர்ப்பணம் என்பார்கள். தர்ப்பணம் கொடுக்கும் போது காய்கறிகள் 5 வகை (பூசணி, வாழைத்தண்டு தவிர்க்கவும்) 

யை தானமாக கொடுக்க வேண்டும். பித்ருக்களுக்கு தர்ப்பணம், சிரார்த்தம் கொடுக்க வேண்டும் என்றதும், பெரும்பாலானவர்கள் அது என்னவோ, ஏதோ என்று நினைக்கிறார்கள். 


சிலருக்குத்தான்  அது சரிபட்டு வரும். நமக்கு இதெல்லாம் செய்வது வழக்கம் இல்லை என்கிறார்கள். சிலர் பித்ரு வழிபாட்டை எப்படி செய்வது என்ற குழப்பத்துடனே இன்னும் இருக்கிறார்கள். திதி, தர்ப்பணம், சிரார்த்தம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தும், அதை முறைப்படி செய்வதற்கு ஐதீகம் தெரிந்து இருக்க வேண்டுமே என்று நினைக்கிறார்கள். ஆனால் இதுபற்றியெல்லாம் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை.


தர்ப்பணம் செய்வது ரொம்ப, ரொம்ப எளிதானது. தர்ப்பணம் கொடுப்பதற்கு வேறு எதுவும் வேண்டாம். உங்கள் அப்பா, அம்மா பெயர், தாத்தா-பாட்டி பெயர் (தந்தை வழி) பூட்டன்-பூட்டி பெயர் (தந்தை வழி) அப்புறம் அம்மாவின் அப்பா அம்மாவின் தாத்தா, அம்மாவின் தாத்தாவுக்கு அப்பா, அம்மாவின் அம்மா, அம்மாவின் பாட்டி, அம்மாவின் பாட்டிக்கு அம்மா ஆகிய  பேர் மட்டும் தெரிந்தால் போதும்.


சிலருக்கு தாத்தாவின் பெற்றோர் பெயர் தெரியாமல் இருக்கலாம். அதற்கும் கவலைப்பட வேண்டாம். என் மூதாதையர்களுக்கு இந்த தர்ப்பணம் போய் சேரட்டும் என்று மனதார நினைத்து கையில் உள்ள எள் மீது தண்ணீர் ஊற்றி, அந்த நீரை தர்ப்பைகளின் மீது ஊற்றினால் போதும். அவ்வளவுதான். தர்ப்பண வழிபாடு முடிந்தது.


தை அமாவாசை தினத்தன்று கோவில் குளங்களிலும், பித்ரு வழிபாட்டுக்குரிய புனிதநீர் நிலைகளிலும், காவிரி கரையிலும் இந்த எளிய வழிபாட்டை செய்யலாம். மூதாதையர்களின் பெயரைச் சொல்லி எள் கலந்த நீரை தர்ப்பை புல்களின் மீது ஊற்றுவதில் என்ன கஷ்டம்? இதை கூட பெரும்பாலானவர்கள் மனப்பூர்வமாக செய்வதில்லை.


குறைந்தபட்சம் அது நம் கடமை என்று நினைத்தாவது செய்யக்கூடாதா? இந்த வருடம் நீங்கள் தர்ப்பணம் கொடுத்துப்பாருங்கள். அடுத்த ஆண்டுக்குள் உங்கள் வாழ்க்கைத்தரத்தை நிச்சயம் பித்ருக்கள் தெய்வீக சக்தி கொடுத்து உயர்த்தி இருப்பார்கள். இது பலரும் அனுபவித்து வரும் உண்மை. ஈடு, இணையற்ற அந்த பலன்களை பெற நீங்களும் நாளை தை அமாவாசையன்று பித்ரு வழிபாட்டை மறக்காமல் செய்யுங்கள்.


12 ஆண்டுகள் பலன் கிடைக்கும்.


மஹாளய அமாவாசை.  இந்த அமாவாசையன்று செய்யப்படும் பிதுர்தர்ப்பணம் பன்னிரெண்டு ஆண்டுகள் பிதுர்திருப்தி ஏற்படுத்தும்.


என்ன செய்ய வேண்டும்?


அமாவாசை தினத்தன்று 4 முக்கிய செயல்களை செய்தல் வேண்டும்.


(1) புனித நதிகளில் நீராட வேண்டும்.

(2) பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும்.

(3) மந்திர ஜெபம் ஜெபிக்க வேண்டும்.

(4) தானங்கள் கொடுக்க வேண்டும்.


தர்ப்பணம் என்ற வடமொழி சொல்லுக்கு சந்தோஷமடைதல் என்று பொருள்.


தர்ப்பயாமி என்று சொல்லும்பொழுது சந்தோஷமடையுங்கள் என்று பொருள் கொள்ளலாம்.


ஜப்பான் நாட்டை சேர்ந்த இமொட்டோ என்ற ஆராய்ச்சியாளர் நீரில் நேர்மறை சொற்களை பிரயோகித்தபொழுது நீரில் உள்ள மூலக்கூறுகள் ஒரு முறைமையுடனும் ஒழுங்குடனும் வரிசைப்படுத்தப்படுவதை கண்டார்.


அதேசமயம், எதிர்மறைசொற்களை அந்த நீரில் பயன்படுத்தியபொழுது அந்த மூலக்கூறுகள் தாறுமாறாக அமைந்ததைகண்டார்.


இந்த ஆராய்ச்சிதான் இந்த கட்டுரையின் அடித்தளம்.....


தர்ப்பணம் செய்யும்பொழுது நீரை அதிகமாக விட்டு தர்ப்பணம் செய்யவேண்டும் என்று கூறுவார்கள்.


அவ்வாறு தர்ப்பயாமி என்று நமது முன்னோர்களை முன்னிட்டு கூறும்பொழுது அந்த சொற்கள் நீரின் மூலக்கூறுகளை சென்று அடைகின்றது.


நீர் ஆவியாக மாறி அந்த மூலக்கூறுகள் வளிமண்டலத்தில் கலக்கின்றன.


அதாவது, சந்தோஷமடையுங்கள் என்று நாம் கூறிய எண்ண அலைகள் ஆவியாக மாறிய நீரின் மூலக்கூறுகளுடன் வளி மண்டலத்தில் சஞ்சரிக்கின்றன.


அதீத உளவியல் (Para psychology) என்ற பிரிவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் மரணத்தின் பின் மனிதனின் நிலை பற்றி ஆராய்ந்து வருகிறார்கள்.


அந்த ஆராய்ச்சியில் மரணத்திற்கு பின் ஆழ்மன எண்ண அலைகள் அதிர்வுகளாக நிலை பெறுகின்றன என்று நம்புகிறார்கள்.


மேலே கூறிய இந்த நிகழ்வை மகாபாரதத்தில் அம்பை பீஷ்மரை கொல்வேன் என்று சபதம் செய்து நெருப்பில் வீழ்ந்து மடிந்து மீண்டும் சிகண்டியாக பிறந்து பீஷ்மரை கொன்றாள் என்று கூறும் நிகழ்விலிருந்து புரிந்து கொள்ளலாம்.


அதாவது மனம் மற்றும் எண்ண அலைகள் மறைவதில்லை என்று புரிந்துகொள்ளலாம்.


ஆத்மா சாவதில்லை என்ற கருத்து இந்த இடத்தில் நினைவு கூறத்தக்கது.


நாம் கொள்ளுகின்ற எண்ண அலைகளை பொறுத்து மறுபிறவி வாய்க்கின்றது என்பது நமது கோட்பாடு.


ஜடாபரதர் என்ற முனிவர் சித்தி அடையும் தருவாயில் ஒரு மான் படும் வேதனையை நினைத்தார் என்பதினால் அவர் ஒரு மானாக பிறந்தார் என்று யோகவாசிஷ்டம் கூறுகின்றது.


இதனால்தான் மனமிறக்க வாயேன் பராபரமே என்று பாடினார் தாயுமான சுவாமிகள்.


உடல் உகுத்தவர்கள் ஆழ்மன எண்ணங்கள் மறைவதில்லை என்றும் அவைகள் அதிர்வுகளாக சஞ்சரிக்கின்றன என்றும் அதீத உளவியல் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.


சில மகான்களின் சமாதி அருகிலோ அல்லது அவர்களின் ஆசிரமத்திற்கோ நாம் செல்லும்பொழுது நமது மனதில் ஏற்படும் ஒரு அமைதி மற்றும் பரவச உணர்சி அவர்களின் ஆன்மீக எண்ணங்கள் தரும் அதிர்வுகள் காரணமாக இருக்குமென்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.


தர்ப்பயாமி என்று கூறி நீரை விட்டு தர்ப்பணம் செய்யும்பொழுது சந்தோஷமடையுங்கள் என்று நாம் திரும்ப திரும்ப சொல்லும் எண்ண அலைகள் நீரின் மூலக்கூறுகளில் சென்றடைந்து நமது முன்னோர்களின் எண்ண அதிர்வுகளை சென்றடைகின்றது என்று நம்புவதற்கு இமொட்டோவின் ஆராய்ச்சி வழிவகுக்கின்றது.


சிரார்த்த காரியங்கள் செவ்வனே செய்தால் வம்ச விருத்தி அதாவது குலம் தழைக்கும் என்று தர்ம சாஸ்திரம் கூறுகின்றது.


சந்தோஷமடையுங்கள் என்று கூறி தர்ப்பணம் செய்வதால் நமது முன்னோர்கள் சந்தோஷமடைந்து நம்மை வாழ்த்துவதோடு மட்டுமல்லாமல் மீண்டும் நமது குடும்பத்தில் பிறக்கின்றார்கள் என்று நம்புவதற்கு இடமுண்டு.


நீரில் உள்ள மூலக்கூறுகள் நாம் சொல்லுகின்ற வார்த்தையினை உள்வாங்கிக்கொள்கின்றது என்பதினால்தான் நமது சடங்குகளில் நீர் ஒரு முக்கியமானதாக உள்ளது.


குறிப்பாக கும்பாபிஷேகம், சஷ்டி அப்த பூர்த்தி போன்றவை உதாரணமாக கொள்ளலாம்.


இந்த ஆராய்ச்சியின் முடிவை அன்றே நமது முனிவர்கள் தமது தவவலிமையினால்கண்டு தெளிந்து நமக்கு கூறியுள்ளார்கள் என்பதை கண்டு நாம் மெய்சிலிர்த்து போகின்றோம்.


சொல்லுக சொல்லைப் பிரிதோர்ச்சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் இன்மை யறிந்து.











 இந்தியாவில் தசரா திருவிழா..... 

(ஜோதிட தம்பதி  நா. ரெங்கன், உஷா 

சுவாதி ஜோதிட ஆலயம், வீரவநல்லூர் மற்றும்  பாளையங்கோட்டை - 9443423897).

அனைவருக்கும் 2021 தசரா நல்வாழ்த்துக்கள்..

இந்த 2021 ஆம் ஆண்டு, பிலவ வருட புரட்டாசி மாதம் 20ம் நாள் (06-10-2021) புதன் கிழமை துவங்குகிறது.  நவராத்திரி விழா மிகச் சிறப்பு வாய்ந்த பக்திநெறி கூட்டும் அம்மன் அருள் பெறும் அற்புத விழாவாகும்.  தென் இந்தியாவில் துர்கா, லட்சுமி, சரஸ்வதியின் பூஜை நடக்க, பொம்மைகள் கொலுப்படிகளில் அலங்கரிக்க, சுமங்கலிகளுக்கு மஞ்சள் குங்குமம் வழங்க விழா விஜய தசமியுடன் முடிகிறது. இப்போது வட நாட்டில் இதை எப்படிக் கொண்டாடுகிறார்கள் என்று பார்ப்போம். 
மராட்டியர்கள் சின்ன மண் கிண்ணங்களில் பாலிகை தெளித்து அதாவது மண் நிரப்பி, நவதான்யங்களை அதில் விதைத்துப் பின் தினமும் தண்ணீர் விடுகிறார்கள். அதன் பசுமையான வளர்ச்சியைப் பார்த்து தம் வாழ்க்கையையும் கணிக்க்கிறார்கள். பின் விஜயதசமி அன்று கடலில் கலக்கிறார்கள். அவர்களும் மும்பாதேவி கோவிலுக்கும், ஸ்ரீ மஹாலட்சுமி கோவிலுக்கும் தவறாது செல்கின்றனர். 
புரட்டாசி மாத வளர்பிறையில் நவராத்திரி விழா தொடங்குகிறது. இமயம் முதல் குமரிவரை நாடு முழுவதும் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இது தமிழ்நாட்டில் நவராத்திரி என்றும், கர்நாடகாவில் தசரா பண்டிகை என்றும், மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை என்றும் கொண்டாடப்படுகிறது. நவராத்திரி விழாவி்ல் 10 ஆவது நாள் விஜயதசமி என்று கொண்டாடப்படுகிறது. அம்பாளை ஆராதிக்கும் நவராத்திரியில் அம்பாளுக்கு 10 திருநாமங்கள். இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு சக்தியைத் தரக்கூடியவை.அன்னை பராசக்தி, நவராத்திரி தினங்களில் முறையே மகேஸ்வரி, கவுமாரி, வாராகி, சாமுண்டி என்ற நவஸ்வரூபங்களாக விளங்கி பக்தர்களுக்கு அருள் தருகிறாள்.மகிஷாசுரன் என்ற அசுரனை அழித்து, தேவர்களைக் காப்பாற்ற சக்தி அவதரித்து அவனை அழித்தாள். அதன் நினைவாகவே தேவியின் பாதங்களை வணங்கி வரம் கோருவதையே நவராத்திரி தினங்கள் குறிக்கின்றன.இந்த 9 நாட்களில் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என, தேவியை முதல் 3 நாட்கள் வெற்றியை வேண்டி அம்பாளை மகா துர்காவாகவும், அடுத்த 3 நாட்கள் செல்வம் வேண்டி மகாலட்சுமியாகவும், கடைசி 3 நாட்கள் கல்வியை வேண்டி மகா சரஸ்வதியாகவும் அம்பாளுக்கு அலங்காரம் செய்து  நவராத்திரி கொலு கொண்டாடப்படுகிறது .நவராத்திரி விழாவை யொட்டி வீடுகளில் பெண்கள் விதவிதமான பொம்மைகளை அடுக்கி வைத்து கொலு வைப்பார்கள். கொலு வைப்பது  என்பது இறைவியின் விசுவரூபத்தைக் குறிப்பதாகும்.நவராத்திரி கொண்டாடுமிடத்தில், கொலுவைக்கும் இடத்தில் கும்ப பூஜையும் நடத்தப்படுகிறது...  தற்போதைய காலகட்டத்தில் கோவிட்-19ன் தாக்கம் முழுவதும் இந்த உலகத்தை விட்டு ஒழிய இந்தவருட நவராத்திரி பூஜாபலன் கிடைத்திட அனைவரும் பிரார்த்திப்போம்.

 

குறிப்பு.. ஒவ்வொரு மாணவ மாணவியரின் பிறந்த ஜாதகத்திலும், கல்வி, உயர்கல்வி, சிறப்புக்கல்வி எனும் நவக்கிர ராசி சக்கரத்தில், முறையே 2.-4.- 9 மற்றும் வித்தைக்கு அதிபதி புதன், குரு, பணிவாய்ப்புக்கு அதிபதி சனி, செவ்வாய் மற்றும் நல்ல ஒழுக்கத்திற்கு அதிபதி குரு பகவான் ஆகிய அமைப்பின் இரகசியத்தை வீரவநல்லூர் – கஜேந்திர மோட்சம் அருளித்தந்த அத்தாளநல்லூர் ஸ்ரீஆதிமூலப் பெருமாள் ஆலயம் செல்லும் வழி துவக்கமாம் - மோர்மடம் ஊராட்சிப் பள்ளிக்கு அருகில் -   பல்கலைக்கழகத்தில் ஜோதிடம் பயின்று பட்டம் பெற்றுள்ள, 40 ஆண்டு அனுபவ ஜோதிடத் தம்பதி ரெங்கன் உஷா ஆகியோர் மிகச் சிறந்த முறையில் கணித்து, அவரவர் எதிர்கால கல்வி, ஆரோக்கியம், பணி, பதவி, திருமணம், வெளிநாடு பயணம் மற்றும் வியாபார லாப ஆதாய வழிவகைகள் செவ்வனே வழிகாட்டி வருகிறார்கள்.. வருக.. பயன் பெறுக.. சுபம்.


 வீரவநல்லூரில் பிறந்த ஊரில் 

ஜோதிட தம்பதி இல்லம்

RENGAN USHA ASTROLOGER COUPLE HOUSE

https://maps.app.goo.gl/cFbi84dEW84ehjuJ9


என்ற புதிய இல்லத்தை நிர்மாணித்து தற்போது அங்கு குடியேறி பிறந்த ஊர் காற்றை சுவாசித்து மகிழ்வு பெற வாய்ப்பளித்த இறைவனுக்கு நன்றி தெரிவித்து கிரகப்பிரவேசம் செய்துள்ளோம்










தளத்தை செய்தியோடை மூலம் வாசிப்பவர்கள்

வாசகர்கள்

எங்களின் முதன்மை வலைத்தளம். Our Main Web Site

விருந்தினர் வருகை

சமீபத்தில் வந்தவர்கள்

இதை படித்தவர்கள் படித்தது

அதிகம் படிக்கப்பட்டவை